நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5346 (page 339)

நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்

BECAUSE WE LOVE THE BRETHREN

“நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்.” – (1 யோவான் 3:14)

நம்முடைய வாசகர்களில் பெரும்பான்மையானவர்களாகக் காணப்படும் வேதமாணவர்கள், கடந்த சில வருடங்களாகக் கிருபையில் வளர்ந்து வருகின்றார்கள் என்று நம்பிக்கைக்கொள்வதற்கு அநேகம் காரணங்கள் இருக்கின்றன என்பதைத் தனிப்பட்ட விதத்திலும், கடிதங்கள் வாயிலாகவும் அறிந்திருக்கின்றோம் என்பதைச் சாட்சியாகக் கூறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். தற்போதுள்ள நிலைமையை மூன்று அல்லது ஆறு அல்லது பத்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையுடன் வேறுபடுத்திப் பார்க்கும்போது, ஆவிக்குரிய விஷயத்தில் – கர்த்தருடைய ஆவியில் – அன்பின் பரிசுத்த ஆவியில் மகா அபிவிருத்தியை நாங்கள் காண்கின்றோம்.

இது சத்தியத்திற்கடுத்த ஊழியங்களிலுள்ள நடவடிக்கைகளில் மாத்திரம் வெளிப்படாமல், ஒருவருக்கொருவர் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவருக்காகவும் மற்றும் தவிக்கும் சர்வ சிருஷ்டிக்காகவும் கொண்டுள்ளதான பரந்த அளவிலான அனுதாபங்களிலும்கூட வெளிப்படுகின்றதாய் இருக்கின்றது. மேலும் “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” என்பதினால், ஏற்ற குணலட்சணத்தினுடைய வளர்ச்சிக்கு அவசியமான அடிகள் மற்றும் சிட்சைகளின் விளைவாக, எந்த ஒரு குறைவான ஆசீர்வாதத்தை ஒருவன் பெற்றவனாக இருந்தாலும், இராஜ்யத்தில் பங்கிருக்காது என்பதை நினைவில் கொண்டு, கிறிஸ்துவுக்கொத்த சாயலில் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு வாரமும் வளர்ச்சியடைய வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் குணலட்சணத்தின் விஷயத்தில், தனித்தனியாக நமது கர்த்தருக்கு ஒத்திருக்க வேண்டும் என்பதே சபை தொடர்புடைய விஷயத்திலுள்ள திவ்விய முன்தீர்மானம் காணப்படுகின்றது என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளையுங்கூட நாம் நினைவுகூருகின்றோம் (ரோமர் 8 : 29). நமது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திடுவதற்கான நிபந்தனைகள் மற்றும் தெய்வீகச் சித்தம் குறித்த இத்தகைய தெளிவான வார்த்தைகளானது, நிச்சயமாகவே நம்மை ஊக்குவிக்கிறதாக இருக்கும்.

இப்படியான வளர்ச்சிகள் எல்லாம் இருக்கின்றபோதிலும், சிறு எண்ணிக்கையிலுள்ள சபைகள் அநேகவற்றில் உராய்வுகள் / பிணக்குகள் ஏற்பட்டு, இதனால் ஏறத்தாழ கவலையையும், மகிழ்ச்சியின்மையையும் உண்டாக்குகின்றது. சத்தியம் நம்மை விடுதலைப்பண்ணி, நம்முடைய புரிந்துகொள்ளுதலின் கண்களைத் திறப்பதினால், அது நம்முடைய சொந்த அபூரணங்களையும், சகோதர சகோதரிகளுடைய அபூரணங்களையும் மற்றும் உலகத்தாருடைய அபூரணங்களையும் முன்பில்லாதளவுக்கு மிகவும் தெளிவாய் நாம் காண உதவுகின்றது. அதிகமாய் அன்பில்லாவிடில், இப்படி அபூரணங்களைக் காணும் காரியமானது, குற்றம் கண்டுபிடிப்பதற்கும், குறைகூறுவதற்கும் உரிய தன்மைக்கு ஏதுவாகிவிடும்.

இப்படி நம்முடைய சொந்த குணலட்சணங்களை நாம் கையாளும் விஷயத்தில் அதிகப்படியான சுதந்தரத்தை நாம் அனுமதிப்பது பாதுகாப்பானதே. நன்மைக்கேதுவாய் நாம் நம்மிடத்தில் குற்றங்கண்டுபிடிக்கலாம் மற்றும் நம்முடைய குறைகளை நாமே நமக்குச் சுட்டிக்காண்பித்திடலாம். எனினும் நம்முடைய அபூரணமான கிரியைகளின்படியாக இல்லாமல், நம்முடைய இருதய நோக்கத்தின்படியே கர்த்தர் நம்மை நியாயந்தீர்ப்பார் எனும் அவருடைய கிருபையுள்ள வாக்குத்தத்தத்தை நாம் மறந்துபோகுமளவுக்கு, அளவுக்குமீறியும் நம்மில் நாம் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது. அநேகமாக நம்முடைய சொந்த குறைவுகள் குறித்தும் மற்றும் அவைகள் வேண்டுமென்றே செய்யப்படாதவைகள் என்றும் நம்மால் நன்கு உணர்ந்துகொள்ள முடிகின்றது; ஆனால் குறைவுகள் மற்றவர்களுடையதாயிருக்க, அவை நம்முடைய அன்பு, பொறுமை, சகோதர சிநேகம், சாந்தம், நற்பண்புகள் / நிதானம் முதலானவற்றைப் பரீட்சிக்கின்றதாய் இருக்கின்றது. எனினும் இம்மாதிரியான பரீட்சைகள் மிகவும் நன்மைக் கேதுவானதாகும். பரிசுத்த ஆவியின் கிருபைகளில் வளர்வதற்குக் கர்த்தர் நமக்கு உதவும்படிக்கு நாம் கர்த்தரிடத்தில் ஜெபம் ஏறெடுக்கின்றோம். இவ்விஷயங்களில் தேவன் பரீட்சைகள் கொடுப்பதே, நமக்கு உதவுவதற்கான ஒரே வழியாகக் காணப்படுகின்றது என்பதை நாம் நினைவில் கொள்வோமாக. நாம் எந்தளவுக்குச் சரியான ஆவியில் இந்தப் பரீட்சைகளை ஏற்றுக்கொள்கின்றோமோ, அவ்வளவாய் நமது குணலட்சணத்தினுடைய பெலமும், இந்த ஆவியின் கிருபைகளிலுள்ள நம்முடைய வளர்ச்சியும் காணப்படும்.

புதுச்சிருஷ்டிகள் என்ற உறவிற்கான நிரூபணம்

சகோதர சகோதரிகளுக்கான அன்பு என்பது, கிறிஸ்தவனுடைய மிக அருமையான அனுபவங்களில் ஒன்றாயிருக்கின்றது என்று நமது ஆதார வசனம் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. யார் ஒருவன் தன்னிடத்தில் சகோதர சகோதரிகளுக்கான அன்பும், அவர்களுக்கான அனுதாபமும் முழுக்கக் காணப்படுகின்றது என்று காண்கின்றானோ, அவன் – புதுச்சிருஷ்டியாக இருக்கின்றான் என்பதற்கும், தான் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்பதற்கும் வேதவாக்கியத்தின்படியான பலமான நிரூபணத்தை விசேஷமாகப் பெற்றிருக்கிறான். யாரொருவன் சகோதரர் எவரிடத்திலாகிலும் அன்பிற்குப் பதிலாக வேறேதேனும் உணர்வுகளைப் பெற்றிருப்பானாகில், அவன் தேவனுடன் தனக்குப் புதுச்சிருஷ்டி எனும் விதத்தில் இருக்கும் தனது உறவிற்கான நிரூபணத்தில் குறைவுப்பட்டவனாய் நிச்சயம் இருப்பான்.

இதை எப்போதும் நாம் மனதில் கொண்டிருப்போமானால், இதன் உதவி நமக்கு எத்துணை விலையேறப்பெற்றதாகக் காணப்படும்! கர்த்தருடைய தயவு குறித்தும், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கும் புதுச்சிருஷ்டிகளென அவருடனான நம்முடைய உறவு தொடர்ந்து கொண்டிருப்பதைக்குறித்தும் நாம் மறுபடியும் உறுதிப்பெற்றிடுவதற்கு அடிக்கடி நாம் விரும்புகின்றோமல்லவா? நாம் விரும்புவோமானால், ஆதார வசனம் இதோ நமக்குள்ளது மற்றும் நாம் சரியான நிலைமையில் காணப்படும் பட்சத்தில், ஆதார வசனத்தின் காரியமானது, சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டுவருகின்றதாய் இருக்கும். ஒருவேளை நாம் சரியான நிலைமையில் காணப்படவில்லையெனில், ஆதார வசனத்தின் காரியமானது புதுச்சிருஷ்டிகளென நம்முடைய சொந்த பாதுகாப்பிற்கான அபாய அறிவிப்பைக் கொடுக்கிறதாய் இருக்கும்.

அநேகம் சபைகளில் ஊராய்வுகள் / பிணக்குகள் ஏற்படும் காரியங்களில் ஒன்று சபையாருக்கும், அதன் ஊழியக்காரர்களுக்கும் இடையிலான உறவின் விஷயமாகும். நம்மால் நிதானிக்க முடிந்தவரையிலும் தவறானது சிலசமயம் (இவர்கள் இருவரில்) ஒருவரிடத்திலும் மற்றும் சில சமயம் மற்றவரிடத்திலும் காணப்படுகின்றது. மூப்பர்களுடைய கடமைகள் குறித்தும், சபையாருடைய பொறுப்பு முதலானவைகள் குறித்தும் கேள்விகள் நம்மிடத்தில் அடிக்கடி கேட்கப்படுகின்றது. இத்தகைய கேள்விகள் அனைத்திற்கும், வேதாகம பாடங்களினுடைய ஆறாம் தொகுதியிலுள்ள, இவ்விஷயம் குறித்ததான நம்முடைய முழுமையான ஆய்வுரையையே பரிந்துரைப்பதற்கு நாம் பொதுவாய் விரும்புகின்றோம். ஆறாம் தொகுதியில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களை இன்னும் அபிவிருத்தி செய்வது எப்படி என்பது நமக்குத் தெரியவில்லை.

அத்தொகுதியில் எங்களால் எழுதியுள்ள காரியங்கள் முழுவதுமாய் ஆராயப்படுமாயின், அதில் கொடுக்கப்பட்டுள்ளதான அறிவுரைகளானது, ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் போதுமானதாய்க் காணப்படும் என்று நாம் நம்புகின்றோம்.

உபதேச ரீதியான விஷயங்களில் தனிப்பட்ட விதத்தில் நாம் கடிதம் எழுதுவதை விரும்பவில்லை ஏனெனில் எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நபர்கள், ஒன்றில் காரியங்களைத் தவறாய்ப் புரிந்துகொண்டவர்களாகவோ அல்லது காரியங்களை விவாதிக்கையில் கடிதங்களில் உள்ளவைகளின் பகுதியை மாத்திரமே மற்றவர்களுக்குத் தெரிவிப்பவர்களாகவோ காணப்பட்டிருந்த சம்பவங்கள் சிலவற்றை நாங்கள் அறிந்திருக்கின்றோம். இன்னுமாக சிலர்: “சகோ. ரசல் அவர்கள் இன்னென்ன விதமாய் [R5347 : page 340] வேதாகம பாடங்களினுடைய தொகுதியில் எழுதியிருக்கின்றார்; ஆனால் எங்களிடம் அவர் பிற்காலங்களில் எழுதியுள்ள கடிதம் ஒன்றுள்ளது மற்றும் அக்கடிதமானது அவர் வேறு கருத்துக் கொண்டிருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது” என்று கூறியிருக்கின்றனர். ஏதேனும் முக்கியமான சத்தியங்கள் குறித்த எங்களுடைய கண்ணோட்டம் மாறும் பட்சத்தில், அந்த மாற்றத்தை முடிந்தமட்டும் விரைவாக நாம் வாட்ச் டவர் இதழின் வாசகர்கள் அனைவரின் முன்பாகவும் முன்வைத்திடுவோம் என்று அருமையான நண்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நாம் விரும்புகின்றோம். வாட்ச் டவர் வெளியீட்டில் / இதழில் இம்மாதிரியான மாற்றங்கள் குறித்துக் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் காணாதது வரையிலும், எதையும் பொருட்படுத்திட வேண்டாம்; வேதாகம பாடங்களினுடைய தொகுதிகளிலுள்ள வார்த்தைகளை, ஏதோ அவைகள் நேற்றைய தினம்தான், உங்களுக்கே நேரடியாய் எழுதப்பட்டு உங்களுக்கு வந்ததுபோன்று மதித்திடுங்கள்.

சபை நிர்வாக முறைக்கான கொள்கைகள்

கிறிஸ்துவின் சபையை நிர்வகிக்கும் கொள்கைகளைச் சுருக்கமாய்ப் பார்க்கையில், சபை நிர்வாகம் குறித்த விஷயத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இரண்டு கண்ணோட்டங்கள் நிலவி வருகின்றன; அவை பின்வருமாறு:

(1) கிறிஸ்தவ சபை சார்ந்த கண்காணிகளின் ஆட்சிகொள்கை எனும் (Episcopal View) கண்ணோட்டத்தின்படி, சபையானது கண்காணிகளால் நிர்வகிக்கப்பட மற்றும் நடத்தப்பட வேண்டும்; ஏனெனில், இந்தக் கண்காணிகள் அப்போஸ்தல கண்காணிகள் என்று வலியுறுத்தப்படுகின்றது; அதாவது இவர்கள் அப்போஸ்தலர்களின் வாரிசுகள் என்றும், சபை மற்றும் அதன் காரியங்களை ஒழுங்குப்படுத்துவதற்கென அப்போஸ்தல ஞானமும், ஏவுதலும் மற்றும் அதிகாரமும் வழங்கப்பெற்றவர்கள் என்றும் வலியுறுத்தப்படுகின்றது. இந்தக் கண்ணோட்டத்தை ரோம கத்தோலிக்கர்களும், கிரேக்க கத்தோலிக்கர்களும் மற்றும் எபிஸ்கோப்பல் திருச்சபையினரும் உடையவர்களாய் இருக்கின்றனர்.

(2) மற்றுமொரு கண்ணோட்டம் (Congregationalist) சபையார் ஆட்சி கொள்கையாகும் மற்றும் இது – கர்த்தருடைய ஜனங்கள் அடங்கிய ஒவ்வொரு சபைகூட்டமும் ஒரு குழு என்றும், அது அதனை நிர்வகிப்பதற்கும் மற்றும் தெய்வீக வழிநடத்துதலின் கீழ் அதன் நலனுக்கடுத்தக் காரியங்களுக்காக ஒழுங்குகள் பண்ணிடுவதற்கும் உரிமை கொண்டிருக்கின்றது என்றும் வலியுறுத்துகின்றது. காங்கிரிகேஷனலிஸ்ட், பேப்டிஸ்ட் மற்றும் இன்னும் சில பிரிவினர்கள் இக்கண்ணோட்டத்தின்படி தாங்கள் நிர்வகிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். இன்னுமாக ஏறக்குறைய குழப்பத்திலும் மற்றும் உறுதியற்ற நிலையிலும் காணப்படும் சில சபை பிரிவினர், நிர்வகிக்கும் அதிகாரத்தினை ஊழியர்கள் மற்றும் சபை அங்கத்தினர்களுக்கிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்.

எபிஸ்கோப்பல் மற்றும் காங்கிரிகேஷனல் எனும் இரண்டு கொள்கைகளையும் இணைந்து ஒருசேர கொண்டிருப்பதே வேதாகம ஏற்பாடு என்று நாம் வலியுறுத்துகின்றோம். பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கண்காணிகளாக இருந்தார்கள் – இவர்கள் மட்டுமே தெய்வீக ஏவுதலின் பேரிலான மற்றும் அதிகாரமுடைய அப்போஸ்தல கண்காணிகளாக இருந்தார்கள் மற்றும் இன்னும் தொடர்ந்து இப்படியாகக் காணப்படுகின்றனர் என்று வேதவாக்கியங்கள் போதிக்கின்றதாய் இருக்கின்றது. இவர்களால் பூமியில் கட்டப்படும் எதுவும், கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் கட்டப்பட்டதாக இருக்கும். இவர்களால் கட்டவிழ்க்கப்பட்டதாக அறிவிக்கப்படும் எதுவும், பரலோகத்தின் முன்னிலையில் சபையாரின் மீது கட்டாயமாக்கப்படுவதில்லை. இந்தக் கண்ணோட்டத்தின்படி, அப்போஸ்தல கண்காணிகளென அழைக்கப்பட்டு வரும் மற்றவர்கள் அனைவர் குறித்ததான இயேசுவின் வார்த்தைகள் மிகவும் திட்டவட்டமாய்க் காணப்படுகின்றது. அப்படிப்பட்டவர்கள் “கள்ள அப்போஸ்தலர்கள் மற்றும் பொய்யரென்று” அவர் குறிப்பிடுகின்றார்; அவர்கள் எந்த விதத்திலும் அப்போஸ்தலர்களல்ல (வெளிப்படுத்தல் 2:2; 2 கொரிந்தியர் 11:13). ஆகையால் தங்களுக்கு அப்போஸ்தல வல்லமை இருக்கின்றது என்றும், தாங்கள் அப்போஸ்தலர்களின் வாரிசுகள் என்றும் எண்ணிக்கொள்ளத்தக்கதாகச் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டுள்ளவர்களாகிய இந்தக் கண்காணிகளுடைய வலியுறுத்தல்களுக்கு நாம் செவிச்சாய்க்கவும் கூடாது மற்றும் இவர்களின் வலியுறுத்தல்களை எவ்விதத்திலும் அங்கீகரிக்கவும் கூடாது.

தேவனுடைய ஜனங்கள் அதிகாரத்திற்கும், வழிகாட்டுவதற்குமென்று, உண்மையான கண்காணிகளாகிய, ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களைப் பெற்றிருப்பதினால், அவர்கள் இப்படியாக ஆயர் நிர்வாகத்தின் அல்லது அப்போஸ்தல கண்காணிகளினுடைய நிர்வாகத்தின் கீழ்க் காணப்பட்டாலும் – உண்மையில் அவர்களது நிர்வாகம் சபையார் சார்ந்ததேயாகும். கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் அடங்கின ஒவ்வொரு கூட்டத்தாரும் முற்றிலுமாகச் சுதந்தரமானவர்களாய் இருக்கின்றனர் மற்றும் வேதத்திலும், அதிலுள்ள விலையேறப்பெற்ற சகல சத்தியத்திலும் சொந்தமாய் விசுவாசத்தைப் பெற்றிருக்க வேண்டும். எந்தச் சபையாரும் மற்றும் எந்தத் தனி நபரும், வேறொரு சபையாரின் அல்லது வேறொரு தனி நபரின் VOWS /வாக்குறுதிகளினால் கட்டப்பட முடியாது.

ஒன்றாய்ச் செயல்படுவதற்கும், ஒன்றுகூடித் தொழுதுகொள்வதற்கும், தேவக் காரணங்களுக்கு / நோக்கங்களுக்கு ஊழியம் புரிவதற்கும் என்று ஒன்றுகூடி வரும் சபையார், பிரித்தெடுக்கப்பட்டவர்கள், சபை இப்படியாகவே செயல்பட வேண்டும்; காரணம் தெய்வீகக் குணலட்சணம் மற்றும் திட்டம் குறித்ததான அவர்களது பரஸ்பர புரிந்துகொள்ளுதலாகும். வேதாகம கண்காணி நிர்வாகமாகிய, அப்போஸ்தலரின் போதனைகளின் கீழ்த் தவிர மற்றப்படி, சபையாருடைய நிர்வாகத்தின் கீழூம் காணப்படுவதில்லை. ஒவ்வொரு சபையிலுமுள்ள மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் அந்தந்தச் சபையாரால் வேதாகமத்தின் அறிவுரைகளுக்கேற்ப, தங்கள் மத்தியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட வேண்டும். தெய்வீக நியமனத்தின்படியான பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய அறிவுரைகள் விஷயத்திலும் மற்றும் அப்போஸ்தலரின் அறிவுரைகளுக்கு இசைவாகக் கூடிடுவதற்கு உடன்பட்டுள்ள கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின கூட்டத்தார்கள் விஷயத்திலும் தலையிடுவதற்கு, எந்தப் பூமிக்குரிய வல்லமைக்கும் உரிமையில்லை. இக்கருத்தானது, போப்மார்க்கத்தின் சகல அதிகாரங்களையும் மற்றும் அப்போஸ்தல கண்காணிகளெனப் போலியாய் அழைக்கப்படுபவர்களுடைய சகல அதிகாரங்களையும் ஒரேயடியாக ஒழித்துவிடுகின்றது.

சகோதர சகோதரிகளுடைய வாக்குகள் (Votes) மூலமாக உதவிக்காரர்களும்,மூப்பர்களும்,மேய்ப்பர்களும்,போதகர்களும் ஊழியம் மற்றும் கனமிக்க ஸ்தானத்திற்கு உயர்த்தப்படுகிறதினால், இது சபையாரையே, அதன் ஊழியக்காரர்களைக் காட்டிலும் மிகுந்த அதிகாரமுடைய நிலைமையில் வைக்கின்றதாய் இருக்கின்றது. ஆனால் அதற்கென்று சபையார் தங்கள் விருப்பங்களைத் திணிப்பதற்கு முற்படாமல், மாறாக வேதாகமத்தில் அப்போஸ்தலர்களால் கொடுக்கப்பட்டதான தெய்வீக வழிகாட்டுதலுக்கு இசைவாக உண்மையாய்ச் செயல்படுகிறவர்களாக மாத்திரம் காணப்பட வேண்டும்.
இப்படியாகப் பார்க்கும்போது இவ்விஷயம் குறித்த தெய்வீக நிலைப்பாட்டின்படியான சத்தியமானது, பல நூற்றாண்டுகள் காலமாகப் பெருமளவில் கவனிக்கப்படாமல் போய்விட்டப்படியால், சபைக்கு அனுகூலமற்ற நிலைமையே நிலவுகின்றது – சிலர் சத்தியத்தின் ஒரு பாகத்தை உள்வாங்கியும் மற்றும் வேறுசிலர் வேறு பாகத்தை உள்வாங்கியுமுள்ளனர்; முழுமையாய்ச் சத்தியத்தை உள்வாங்கியுள்ளவர்கள் சிலராகிலும் காணப்படுகின்றார்களா என்பதில் ஐயமே. ஆம், உண்மைதான், இந்நிலைமையே கிட்டத்தட்ட ஒவ்வொரு உபதேசத்தின் விஷயத்திலும் காணப்படுவதாக நாம் காண்கின்றோம்.

விவரங்கள், வேதாகம பாடங்களினுடைய ஆறாம் தொகுதியில் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், நாம் மேலே சொல்லியுள்ளவைகளிலேயே கொள்கைகள் காணப்படுகின்றன. கொள்கைகளை முற்றும் முழுமையாகக் கிரகித்துத்துக்கொள்ள முடிகிறவர்களால், விவரங்களையும் புரிந்துகொள்ள முடியும். ஆகையால் வேதவாக்கியங்களுக்கு இசைவாக எந்த ஒரு சிறு சபையாரின் காரியங்கள் குறித்த விவரங்கள் அனைத்தின் விஷயத்திலும் தெளிவாகுவதற்கு – சிந்தித்தலும், பொறுமையுடன்கூடிய நிதானமான ஆராய்தலும் தான் காரியமாயுள்ளது. இப்படியாகச் சபையின் மூப்பர்களாக இருக்கும்படிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கரங்களில் சபையானது சில அதிகாரத்தையும், ஊழியத்தையும் கொடுத்து, மூப்பர்களுக்கு வேலையில் உதவியாய் இருக்கத்தக்கதாக மற்றச் சிலரை உதவிக்காரர்களாகச் சபையானது நியமித்திட்டாலும், மூப்பர்களும், உதவிக்காரர்களுமாகிய இருவரும் சபையாருக்கு – பிரித்தெடுக்கப்பட்ட சபைக்கு எதிலும் பதில் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர்.

சபையார் தங்கள் ஊழியக்காரர்களிலும் மேம்பட்டவர்கள்

ஏதேனும் தர்க்கத்தின் சந்தர்ப்பங்களில், சபையாரின் கணிப்பே (அ) தீர்மானமே அப்போதைக்குச் சரியானதென்று காணப்பட வேண்டும். ஆனால் பிற்பாடு அத்தீர்மானம் ஞானமற்றதாகக் காணப்படும் பட்சத்தில், கணிப்பிலுள்ள தவற்றை நன்மைக்கு ஏதுவாய் – அதாவது அறிவுரையாகக் காணப்படும் விதத்தில் கர்த்தரால் மாற்றிவிட முடியும். உதாரணத்திற்கு: மூப்பர் அல்லது மூப்பர்களுடைய கணிப்பிலிருந்து எப்போதேனும் சபையாருடைய கணிப்பு வேறுபடும் பட்சத்தில், மேல் அதிகாரமாகக் காணப்படும் சபையாருக்கு, சபைக்கு, பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்கள் அடங்கிய கூட்டத்திற்கு (Ecclesia) மூப்பர்கள் இணங்கிடுவதே சரியான காரியமாய் இருக்கும்; நியமிக்கிறவன் நியமிக்கப்படுகிறவனுக்கு மேலானவனாகக் காணப்படுவதினால், சபையாரே மேல் அதிகாரம் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். சபையாருக்கு அல்லது Ecclesias / பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்கள் அடங்கின கூட்டங்களுக்கான நமது கர்த்தருடைய ஏற்பாடானது: “இரணடு; பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்பதேயாகும். கர்த்தர் சபையாரோடு இருப்பதாக வாக்களித்துள்ளார். அவர் பின்வருமாறு: “எங்கே மூப்பர் இருக்கின்றாரோ, அங்கே நான் இருப்பேன் மற்றும் மூப்பரிடத்திற்குச் சபையார் கூடிக்கொள்ளுங்கள்” என்று கூறவில்லை. மாறாக அவர் பின்வருமாறே: “எங்கே சபையார் இருக்கின்றார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்;; மற்றும் அவர்கள் மூப்பரை நியமித்திடலாம்; மூப்பர் எவ்வளவாய் அந்தச் சபையாரை ஆசீர்வதிப்பதில் என்னுடைய ஊழியக்காரனாய் இருப்பதற்குரிய பொருத்தமான பாத்திரமாயிருப்பதற்கு முயற்சிக்கின்றாரோ, அவ்வளவாய் அவரைச் சபைக்கும், அதன் நலன்களுக்குமான பிரதிநிதியென நான் அங்கீகரித்து, ஆசீர்வதிப்பேன்” என்று கூறியுள்ளார்.

மூப்பருக்கும், சபையாருக்கும் இடையிலான இந்த உண்மையான உறவைப் பற்றின இந்தப் புரிந்துகொள்ளுதலானது, பரிசுத்த பவுலடிகளால் பரிசுத்த ஆவியின் கனிகள் மற்றும் கிருபைகள் என்று விவரிக்கப்படும் சாந்தத்தை, பொறுமையை, சகோதர சிநேகத்தை, நீடிய பொறுமை, நற்குணம், அன்பு முதலானவைகளைத் தங்களுக்குள் அபிவிருத்திச் செய்திடுவதற்கு, மூப்பர்களுக்கு உதவுகிறதாய் இருக்கும். ஆனால் இன்னொரு பக்கத்தில் தங்களுக்கு மூத்த ஒரு சகோதரனாக இருந்து ஊழியம் புரிந்திடுவதற்கும் மற்றும் தங்களுடைய நலனுக்கடுத்தவைகளைக் கவனித்துக் கொள்வதற்குமென்று, தங்கள் மத்தியிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்துள்ள சபையார், தாங்கள் கர்த்தருடைய வார்த்தைகள் மற்றும் ஏற்பாடுகளுக்கு இசைவாக ஞானமாய்த் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும். இப்படியாக நம்பிக்கைக் கொண்டிருக்கையில், அவர்கள் எந்தளவுக்குத் தங்கள் மூப்பர் கர்த்தரின் சித்தத்தை அறிவதற்கும் மற்றும் அதைச் செய்திடுவதற்கும் மற்றும் தனது நேரத்தையும், தாலந்துகளையும் சபையாருக்கான ஊழியங்களில் உண்மையாய்ப் பயன்படுத்திடுவதற்கும் நாடிடுவதைக் காண்கின்றார்களோ, அவ்வளவாய் மூப்பருக்கு ஆதரவையும், உற்சாகத்தையும் கொடுப்பதற்கு ஆயத்தத்துடன் காணப்பட வேண்டும். ஆனால் பிற்பாடோ மூப்பரின் தேர்ந்தெடுத்தல் தொடர்புடையதான அப்போஸ்தலனின் அறிவுரைகளைத் தாங்கள் முழுமையாய்ப் புரிந்துகொள்ளவில்லை மற்றும் பின்பற்றிடவில்லை என்று அறிந்து கொள்வார்களானால், இப்படியாக இருப்பினும், அவரைத் தேர்ந்தெடுத்ததிலுள்ள தவறு தங்களுடையது என்றும், தவறு அடுத்த தேர்தலிலேயே சரிப்பண்ணப்பட முடியும் என்றும் நினைவுகூர்ந்து, அடுத்த தேர்தலில் கர்த்தருடைய சித்தத்தைத் தாங்கள் அதிகமாய் அறிந்துகொள்வார்கள் மற்றும் தேர்தலில் ஞானமாய் இருப்பார்கள் என்று நம்பிக்கொண்டும், [R5347 : page 341] ஜெபம் பண்ணியும், அந்த மூப்பரிடத்தில் – இரக்கத்துடனும், கனிவுடனும் / சாந்தத்துடனும் சபையார் காணப்பட வேண்டும்.

சபையாரின் கடமைகள்

இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, எத்தனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும், எங்கு அவைகள் நடத்தப்பட வேண்டும், யாரால் நடத்தப்பட வேண்டும், எவ்வகையான பாடங்கள் (அ) ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் முதலானவைகள் தொடர் புடையதான அனைத்தையுமே சபையாரே உறுதிப்படுத்திட வேண்டும். சபையின் அங்கத்தினர்களில் ஒருவராக, சக அங்கத்தினர்களுக்குக் காணப்படுவது போன்று, மேற்கூறிய விஷயங்களில் தனது கருத்துகளை மூப்பர் சொல்லிடுவதற்கு உரிமை கொண்டிருந்தபோதிலும் –
இவைகள் மூப்பரானவர் தீர்மானம்பண்ணுவதற்கடுத்த காரியங்கள் அல்ல. எந்தளவுக்கு அவர் உயர்வாய் மதிக்கப்படுகின்றாரோ, அவ்வளவுக்கு அவரது கருத்துகளுக்குச் சபையாரிடத்தில் (அ) சபையிடத்தில் (அ) பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்களடங்கிய கூட்டத்தில் (Ecclesia) மதிப்புக் காணப்படும்; எனினும் எவ்வளவுதான் மூப்பர் உயர்வாய் மதிக்கப்படுபவராக இருப்பினும், அவர் தங்களது வழிகாட்டியல்ல என்கிற விஷயத்தை, சபையார் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. பரிசுத்தமான வேதவாக்கியங்களினுடைய போதனைகளை இந்த மூப்பர்களும், மற்றவர்களும் ஞானமாய்க் கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளப்படுவதற்கேற்ப, அவர்களுக்குச் செவிசாய்க்கப்பட வேண்டும்.

இந்தக் கொள்கையானது கண்டுகொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு மற்றும் இவைகளே எதிர்ப்பார்க்கப்பட்டால், சபைகளில் உராய்வுகள்/பிணக்குகள் குறைந்துவரும் என்று நாம் நம்புகின்றோம். தங்களுக்குரியதான எல்லையில் காணப்பட்டு மற்றும் அவ்வெல்லைக்கு இசைவாகவே மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு ஊழியம்புரிவதற்கு நாடுகின்றதான மூப்பர்கள் – சபை அங்கத்தினர்கள் மத்தியில் பிரச்சனைகளை ஏறப்படுத்திடுவதற்கு ஏதுவானதும், தங்கள் எல்லைக்குட்படாததுமான அநேகக் காரியங்களைச் செய்வதிலிருந்தும், பேசுவதிலிருந்தும் கட்டுப் படுத்தப்படுவார்கள்.

கருத்துவேறுபாடுகள் அனைத்திற்குமான பெரிய காரணி

சபையாரின் கருத்துவேறுபாடுகள் அனைத்திற்கும் பெருமையே பெரிய காரணியாகக் காணப்படுகின்றது என்று நாம் நம்புகின்றோம். மூப்பர் தங்களுக்குச் செய்ய வேண்டுமென்று சபையார் விரும்புகிறதற்கு அதிகமாகவும், மூப்பருக்குச் சபையாரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கு அதிகமாகவும், சபையாருக்குச் செய்திடுவதற்கெனச் சில சமயங்களில் மூப்பர் முற்படுகின்றார். அல்லது கிறிஸ்தவ மண்டலம் எங்கும் நிலவும் கருத்துகளினால் தவறாய் வழிகாட்டப்பட்டவராகி, தனது மூப்பர்த்துவத்தை, சபை மீதான அதிகாரத்தின் ஸ்தானம் என்று எண்ணி விடுகிறவராகவும், அது கனமிக்க ஊழியம் என்றும், அதிகாரம் சபையாரிடத்தில் உள்ளது என்றும் எண்ணாதவராகவும் காணப்படுகின்றார். சில சமயங்களில் பிரச்சனை சபையாரிடத்திலுள்ள ஓர் அங்கத்தினனிடத்தில் காணப்படுகின்றது; இந்த அங்கத்தினன் சபையாருடைய உரிமைகளையும், அதிகாரத்தையும் தக்கவைப்பதற்கென நாடுகையில், மிதமிஞ்சி போய், தேவையில்லாமல் மூப்பருக்குத் தொல்லைக் கொடுத்து, மூப்பர் சரியான காரியத்தைச் செய்திருந்தபோதிலும், மூப்பர் எப்படியாகச் செய்திருக்க வேண்டுமென்று இந்த நல் நோக்கமுள்ள சகோதரன் எண்ணுகின்றானோ அவ்விதத்தில் மூப்பர் செய்யவில்லை என்பதினால், மூப்பரை விமர்சித்துக்கொண்டிருப்பான்.

அன்பானது பொன்னான சட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும். நாம் ஒருவேளை மூப்பருடைய இடத்தில் காணப்பட்டால், நாம் செயல்படுத்துவதற்காக அனுபவிக்க விரும்பும் நியாயமான சுயாதீனத்தை – தேவ வார்த்தைகளுக்கு முழு இசைவுடன் காணப்படும் அந்த நியாயமான சுயாதீனத்தை ஊழியத்தில் காணப்படும் மூப்பருக்கும் கொடுத்திடுவதற்கு நாம் விருப்பமுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். இன்னுமாக மூப்பர் அந்தந்த சபைகூட்டத்தார் யாவருக்கும் ஊழியக்காரனாய் இருக்கிறாரே ஒழிய, சபையில் விசேஷமாய் ஏதோ ஓர் அங்கத்தினனுடைய ஊழியக்காரன் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால் மூப்பருடைய நடத்தைக்குறித்த எந்த விமர்சனமும் சபையாரிடமிருந்து வரவேண்டும் [R5348 : page 341] மற்றும் சபையாரிலுள்ள தனிப்பட்ட அங்கத்தினரிடமிருந்து மாத்திரம் வரக்கூடாது. ஒருவேளை ஒரு தனிப்பட்ட அங்கத்தினன் ஏதேனும் முக்கியமான கருத்தைக் கொண்டிருந்து, அதை மூப்பர் பொருட்படுத்தவில்லையெனில், இவ்விஷயம் தொடர்பாக தனக்கு அறிவுரையாகக் காணப்படுவதற்கு ஏதுவாகவும் மற்றும் மூப்பருக்கு அறிவுரையாகக் காணப்படுவதற்கு ஏதுவாகவும், இது விஷயம் குறித்த சபையாருடைய கணிப்பைக் கேட்பதற்கு அந்த அங்கத்தினன் உரிமை உடையவனாய் இருக்கின்றான்; ஆனால் எந்தத் தனிப்பட்ட அங்கத்தினனும் மூப்பரைக்குறித்து விமர்சிப்பதற்கோ அல்லது அவரது வழிமுறைகளில் குற்றம் கண்டுபிடிப்பதற்கோ முற்படக்கூடாது.

ஒருவேளை இதுவிஷயத்தில் சபையார் மூப்பரை அங்கீகரிப்பார்களானால், மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கும் அந்தத் தனிப்பட்ட அங்கத்தினர்கள், தொடர்ந்து தாங்கள் விரும்புகிறபடியே எண்ணிக் கொண்டு காணப்படுவதற்கான சுயாதீனமுடையவர்களாய் இருக்கின்றனர், எனினும் அவர்கள் பெரும்பான்மையானவர்களுடைய கருத்திற்கு விட்டுக்கொடுத்திட வேண்டும். வேறுவார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் சபையார் மத்தியில், சமாதானம், ஒழுங்கு என்பவைகளை வளர்த்திக்கொள்வது என்பது, வேதாகம ஆராய்ச்சிகளின் விஷயத்தில் மிகவும் விலையேறப்பெற்ற காரியங்களாய்க் காணப்படுகின்றன. ஒரு காரியம் தொடர்புடைய விஷயத்தில் உண்மையிலேயே தவறு இருந்தால், அது வேதவாக்கியங்களுக்கு முரண்பாடாய் இருந்தால் ஒழிய, மற்றப்படி சமாதானத்தையும், ஒழுங்கையும் குலைத்துப் போடும் எதுவும் செய்யப்படக்கூடாது. வேதவாக்கியங்களுக்கு முரண்பட்டதென, தான் கருதும் காரியங்களைக் கவனத்திற்குக் கொண்டுவரும் சகோதரனோ அல்லது சகோதரியோ, தனது சொந்த கருத்தைக் குறித்து அதிகமாய்ச் சொல்லாமல், மீறப்பட்டுள்ளதாக, தான் நம்புகின்றதான வேதவாக்கியங்களின் கட்டளைகளையே பிரதானமாய்க் கையாண்டிட வேண்டும்.

சகோதர சிநேகம் நிலைத்திருக்கடவது

இந்தப் பத்திரிக்கைக் கடந்துபோகும் இடங்களிலெல்லாம், இந்த யோசனைகளானது, கர்த்தருடைய சகோதர சகோதரிகள் மத்தியில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே ஆவியினால், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் சரியானவைகளை – தேவனுக்குப் பிரியமாயும், அவரால் அங்கீகரிக்கப்படுகிறதாயும் மற்றும் அவரது நோக்கங்களுக்கடுத்தவைகளாயும் உள்ளவைகளை – அறிந்திடுவதற்கும் மற்றும் செய்திடுவதற்கும் விரும்புகின்றார்கள் என்ற நம்பிக்கையை நாம் கொண்டிருக்கின்றோம். “ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு இருக்கின்றோம்.” “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.” நாம் அனைவருமே கர்த்தருடன் ஒன்றுபட்டுள்ளதால் – ஒரே இருதயம், ஒரே சித்தம் உடையவர்களாகியுள்ளதால் – நம்முடைய சிரமம் / பிரச்சனை முழுக்க நம்முடைய தலைகளிலேயே – திவ்விய ஏற்பாடுகளை நிர்வகிக்கும் கொள்கைகள் சிலவற்றை நாம் தவறாய்ப் புரிந்துகொண்டுள்ளதிலேயே காணப்படுகின்றது என்பது நம்முடைய கருத்தாய் இருக்கின்றது. இந்தக் கொள்கைகளானது, பூரணமானவைகள், சரியானவைகள் என்பதில் நமக்கு நிச்சயமே. எந்தளவுக்கு நம்மால் இந்தக் கொள்கைகளுக்கு இசைவாய் வரமுடிகின்றதோ, அவ்வளவாய் நாம் ஒருவரோடு ஒருவர் சமாதானமாய்க் காணப்பட முடியும் மற்றும் நமது கர்த்தரோடுகூட நாம் பங்கடையப் போகின்றதான இராஜ்யத்திற்கு நேராக ஒருவரையொருவர் சந்தோஷத்துடன் வழிநடத்திடுவதில் உதவிட முடியும்.

சகோதர சகோதரிகள் யாவரிடத்திலுமான அன்பானது, நாம் புதுச்சிருஷ்டிகளென அன்புகூருகின்றோம் என்பதற்கான நிச்சயமான அறிகுறியாக இருக்கின்றது என்பதை எப்போதும் நினைவில் கொள்வோமாக. சகோதர சகோதரிகளுக்கான அன்பு என்பது, நாம் அவர்களுக்கு எந்தத் தீமையையும் செய்யாமல் இருப்பதை, கண்டிப்பான அவசியம் ஏற்படும் கட்டம் தவிர மற்றப்படி எந்தத் தீமையையும் பேசாமல் இருப்பதை மற்றும் இறுதியாக அவர்களது வார்த்தைகள் மற்றும் கிரியைகள் குறித்து எவ்விதமான தீமையான சம்சயங்கள் / ஊகங்கள்கூட நாம் பண்ணாமல் இருப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும். “அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.” “அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் (தமது ஆவியின் மூலம்) நிலைத்திருக்கிறார்.” நமக்கு உண்டான யாவற்றையும் நாம் அன்னதானம் பண்ணினாலும், நீதியின் நலனுக்கடுத்த விஷயங்களுக்காக நம்முடைய சரீரங்களைப் பலியாக நாம் சுட்டெரிக்கக்கொடுத்தாலும், அன்பு – அன்பின் ஆவி நமக்கிராவிட்டால், நாம் தேவனுடைய பார்வையில் ஒன்றுமில்லாதவர்களாய் இருப்போம் (ரோமர் 13:10; 1 யோவான் 4:16; 1 கொரிந்தியர் 13:3).