R4312 (page 19)
அலிகெனியிலுள்ள பிட்ஸ்பர்க் சபையிலுள்ள அருமையான நண்பர்கள், பைபிள் ஹவுஸ் குடும்பத்தின் (Bible House Family) புறப்படுதல், அண்மையில் உள்ளதைக்குறித்து வேதனையுடன் காணப்படுகின்றனர்; எனினும் கர்த்தர் எங்குமுள்ள தம்முடைய ஜனங்களின் நலனுக்கடுத்தவைகளைப் பார்த்துக் கொள்வதற்கு மிகவும் வல்லமையுள்ளவராக இருக்கின்றார் என்றும், இந்த அனுபவத்தின் வாயிலாக அவர் தங்களுக்கு விசேஷித்த ஆசீர்வாதத்தைக் கொடுத்து, ஆவிக்குரிய காரியங்களில் தங்கள் மீது அதிகம் பொறுப்பை வைத்துள்ளார் என்றும் எங்களோடுகூட அவர்களும் ஒத்துக்கொண்டுள்ளார்கள்.
கிறிஸ்மசுக்கு முன்னதாக புதன்கிழமை இரவன்று, எங்களுக்குத் தெரியாமல், அவர்கள் பைபிள் ஹவுஸ் சாப்பலில் ஒரு விசேஷித்த ஐக்கிய கூட்டத்தினை ஒழுங்குபண்ணியிருந்தனர் மற்றும் சகோதரர் ரசல் அவர்கள் வரவும், சில வார்த்தைகளைப் பேசவும் வேண்டிக்கொண்டனர். அவர் வந்தபோது, நியமிக்கப்பட்ட பேச்சாளர் ஒருவர், தங்களது பாஸ்டருக்கான சபையாரின் அன்பைத் தெரிவித்தார் மற்றும் தங்களது அன்பினை வெளிப்படையாய் வெளிப்படுத்த விரும்பி, அவர்கள் மென்மையான வெல்வெட் கம்பள விரிப்பு ஒன்றையும், கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட மேஜை ஒன்றையும், அழகான நாற்காலி ஒன்றையும், சிறு மேஜை மற்றும் கடிதம் வைக்கும் பெட்டியையும் தெரிந்தெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்கள். இந்த அன்பளிப்புகளைக் கொடுப்பதற்காக எதிர்ப்பார்க்கப்பட்ட தொகைக்கும் அதிகமாகவே காணிக்கை வந்ததால், மீதமிருந்த 138 டாலர்களும் சகோதரர் ரசல் அவர்களுடைய புதிய புரூக்கிளின் இல்லத்திலுள்ள அவரது அறைக்குப் பொருத்தமான எதையாகிலும் வாங்கிடுவதற்குப் பயன்படுத்தும்படிக்கு அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அன்பிற்கு அடையாளமான இவைகளை (சகோ ரசல்) நாம் இருதயப்பூர்வமான உணர்ந்துகொள்ளுதலுடன் ஏற்றுக்கொண்டோம் மற்றும் இந்த இடமாற்றமானது கர்த்தருடைய முன்னேற்பாடு என்றும், இது அவரது வேலையில் ஓரடி முன்னோக்கி வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றது என்றுமுள்ள எங்களது திடநம்பிக்கை மாத்திரமே சபையாரின் பாஸ்டராக முப்பது வருடங்களுக்கும் மேலாக நாம் ஐக்கியப்பட்டிருந்த அன்புக்குரியவர்கள் அநேகரை மகிழ்ச்சியோடு நாம் விட்டுப் பிரிந்துபோக செய்கின்றது என்று அருமையான நண்பர்களிடம் நாம் தெரிவித்தோம்.
சகோதரர் மீண்டும் மேய்ப்பராக / பாஸ்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் – SUB HEADING
இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்னதாக, 1908 – ஆம் வருஷத்தினுடைய கடைசி இரவன்று, ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், அதில் வரவிருக்கின்றதான வருடத்திற்குச் சபையாருக்கு யார் ஊழியம் புரிந்திடுவார்கள் என்பதைச் சபையார் தேர்ந்தெடுப்பார்களென எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்றும் அறிவிப்புக் கொடுக்கப்பட்டது. முழுமையான அர்ப்பணம் பண்ணியுள்ளவர்கள் மாத்திரமே வரவேற்கப்பட்டுள்ளனர் என்று தெளிவாய்த் தெரிவித்திருந்தப் போதிலும், பைபிள் ஹவுஸ் சாப்பலில் கூட்டம் குவிந்திருந்தது. முப்பது வருடங்களுக்கும் மேலாக சபையாரை, தான் மேய்த்திட்ட விஷயங்கள் தொடர்பான நிகழ்வுகள் சிலவற்றைச் சகோதரர் ரசல் அவர்கள் சுருக்கமாய் எடுத்துரைத்தப்போது கூட்டத்தில் நிசப்தம் நிலவினது. அந்தக் காலங்கள் அனைத்திலும் சத்தியத்திற்கு உண்மையுள்ள ஆதரவாளர்களாய் அங்கிருந்த சிலரின் பெயர்களை அவர் குறிப்பிட்டார். இருபது வருடங்களாக, பதினைந்து வருடங்களாக, பத்து வருடங்களாக, ஐந்து வருடங்களாக, ஒரு வருடமாக சத்தியத்திற்கு அறிமுகமாகியிருந்த அநேகர் அங்கிருந்தனர். தான் செய்யும்படிக்கு விரும்பிட்ட அனைத்தையும் தான் அவர்கள் அனைவருக்காகவும் அல்லது தனிப்பட்ட விதத்திலும் செய்திடவில்லை என்றும், ஆனால் தன்னால் முடிந்தமட்டும் அவர்களுடைய நலனுக்கடுத்தவைகளில் தான் ஊழியம் புரிந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். தான் அறிந்திருக்கிற வரையிலும் மற்றும் நம்புகிற வரையிலும், வார்த்தையிலோ அல்லது சிந்தையிலோ அவர்களில் யாருக்கும் தீங்கு செய்யவில்லை என்றும் தெரிவித்தார். காரியங்கள் இப்படியாக இருந்ததினால், அவர் மேடையை விட்டு இறங்குகையில், மிகுந்த திருப்திக்கொண்டிருந்தார். முடிவில் ஏதேனும் சமயத்திலோ அல்லது இடத்திலோ தான் யாருக்கேனும் ஏதேனும் விதத்திலோ, அளவிலோ, வார்த்தையிலோ அல்லது கிரியையிலோ தீங்கு செய்துள்ளதாக யாரேனும் எண்ணுவார்களானால், தான் அதை அறிந்து கொள்ளத்தக்கதாகவும் மற்றும் மன்னிப்புக் கேட்பதற்குரிய வாய்ப்பினை தான் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவும், அத்தகையவர்கள் பேசிடும்படிக்கு தான் எதிர்ப்பார்ப்பதாக வேண்டிக்கொண்டார். இந்த வேண்டுகோளுக்கு எந்தப் பதிலும் வராததால், தான் அவர்களுக்கு வார்த்தையிலோ அல்லது கிரியையிலோ தீங்கிழைக்காமல் இருந்தது மாத்திரமல்லாமல், தன்னுடைய சிந்தையில் அவர்கள் பேணப்பட்டார்கள், அன்புகூரப்பட்டார்கள் என்றும், அவர்களுக்காக தான் மனதுருக்கம் கொண்டிருந்தார் மற்றும் ஜெபம்பண்ணினார் என்றும் அவர்களுக்கு உறுதியளித்தார்.
மேடையை விட்டு இறங்குகையில் பயண ஊழியர் சகோதரர் ரூதர்போர்ட் அவர்கள் வந்திருக்கின்றார்கள் என்றும், 1909-ஆம் வருடத்திற்குரிய சபையினுடைய ஊழியக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும்படிக்கு ஆயத்தம் பண்ணப்பட்டதான அலுவல் கூட்டத்திற்குச் சிறந்த கூட்டத் தலைவராய் (chairman)இருப்பார் என்றும் சகோதரர் ரசல் அவர்கள் குறிப்பிட்டார். மறுப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லையெனில், அக்கூட்டத்திற்காகக் கூட்டத்தலைவராகச் சகோதரர் ரூதர்போர்ட் அவர்கள் ஏகமனதுடன் அங்கீகரிக்கப்படுவதாகக் கருதப்படும் என்று தெரிவித்தார். அமைதியானது ஒப்புதலைத் தெரிவித்தப்படியால், சகோதரர் ரூதர்போர்ட் அவர்கள் மேடைக்கு ஏறினார் மற்றும் சகோதரர் ரசல் அவர்கள் கீழே இறங்கி, நண்பர்களுடன் தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். R4312 : page 20
அந்த வருடம் ஊழியம் புரிந்திட்டதான பாஸ்டர் மற்றும் மூப்பர்களுக்கு நன்றியுரை அளிக்கப்படலாமா என்று மும்வைக்கப்பட்டு, அதற்கு வழிமொழியப்பட்டு, ஏகமனதுடன் ஒப்புக்கொள்ளப்பட்டது. கூட்டத் தலைவரினால் கூட்டத்தின் நோக்கம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது மற்றும் அனைத்தும் ஒழுங்கின்படியுள்ளது என்பதற்கு ஒரு சைகைக் கொடுக்கப்பட்டது. உடனடியாகச் சகோதரர் டாக்டர் ஸ்பில் அவர்கள் எழுந்து, 1909-ஆம் வருடத்திற்காகச் சபையாரின் பாஸ்டராக சகோதரர் ரசல் மீண்டுமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் சகோதரர் ரசல் அவர்கள் எப்போதாவதுதான் சபையாருடன் காணப்பட்டாலும்கூட, அவர் பாஸ்டராக / மேய்ப்பனாகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது, சபைக்கு இன்னும் அதிகமான பராமரிப்பை உறுதி செய்கிறதாயும், அதன் காரியங்கள் மற்றும் நலனுக்கடுத்த விஷயங்களுக்கு இன்னும் அதிகமாய் மனம் திறந்து ஆலோசனைகளை அவர் வழங்கும்படி செய்கிறதாயும் இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். அநேகம் சபையார் இப்படியாகச் சகோதரர் ரசல் அவர்களைப் பாஸ்டராக தேர்ந்தெடுக்கும் வழக்கத்தில் [R4313 : page 20] இருக்கின்றனர் என்றும், இதை அவர்கள் தங்களது அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதற்கு மாத்திரமல்லாமல், தங்கள் நலனுக்கடுத்த காரியங்களில் அவரது விசேஷித்த மேற்பார்வையைப் பெற்றிடுவதற்கான தங்களது விருப்பத்தை அவருக்கு உறுதிப்படுத்துவதற்குமே மற்றும் எப்போதாவது, அவர் தங்கள் மத்தியில் காணப்படுகையில், அவர் தங்கள் மத்தியில் சகஜமாய் உணர வைக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்திலுமே செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். அநேக சகோதரர்கள் இந்தக் கருத்திற்கு வழிமொழிந்தனர். சகோதரர் ரசல் அவர்கள் எழுந்துநின்று முன்மொழிந்தவருக்கும், வழிமொழிந்தவருக்கும் நன்றி தெரிவித்தார் மற்றும் தான் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், அவர்கள் தனது அன்பையும், பிராத்தனைகளையும், எல்லாவிதத்திலுமான ஆதரித்தலையும் எப்போதும் பெற்றிருப்பார்கள் என்று அருமையான நண்பர்களுக்கு உறுதிப்படுத்தினார். எதிர்க்காலத்தில் தன்னால் அடிக்கடி அவர்களோடு காணப்பட முடியாது என்று அவர்கள் புரிந்துகொள்ளும்படிக்கு அவர் விரும்புவதாகக் கூறினார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக, அவரால் மாதத்திற்கு ஒருமுறை மாத்திரம் அல்லது அவ்வப்போதுதான் அவர்களைச் சந்திக்க முடிந்த காரியத்திற்காகவும்கூடத் தான் மகிழ்வதாகவும்; ஏனெனில் இதுவே அனைவரையும் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பிரிந்து செல்லுதலைச் சுலபமாய்ச் சந்திக்க உதவினதாகவும் தெரிவித்தார். இப்படித் தேர்ந்தெடுக்கும் காரியமானது, தன்னை அடிக்கடி பிட்ஸ்பர்கிற்கு வரவழைத்திடும் என்ற எண்ணத்தில் எவரும் தனக்கு வாக்களித்திட (vote) தான் விரும்பவில்லை, காரணம் பொதுவான ஊழியங்களுக்கடுத்தக் காரியங்களில் தான் ஈடுபட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். அதுவும் ஏகமனதுடன் இல்லாததுவரையிலும், தன்னால் இத்தகைய தேர்ந்தெடுத்தல்களை ஏற்றுக்கொள்வதற்குச் சிந்திக்க முடியாது என்றும்கூட அவர் குறிப்பிட்டார். வாக்கு எடுக்கப்பட்டது மற்றும் அது ஏகமனதுடன் நடைமுறைப்படுத்தும்படியாகத் தெரிவிக்கப்பட்டது.
சகோதரர் ரசல் அவர்களுடைய யோசனையின்படி, பைபிள் ஹவுஸ் குடும்பத்தினர், இந்தத் தேர்ந்தெடுத்தலில் வாக்களிப்பதற்கு மறுத்தனர், காரணம் தாங்கள் அதிகக்காலம் இங்கு இருக்கப் போவதில்லை என்பதால், அவர்கள் ஒரு தெரிந்துகொள்ளுதலை வெளிப்படுத்துவது தகுதியாய் இராது. கூட்டத் தலைவராகிய ரூதர்போர்ட் இதைக்குறிப்பிட்டார் மற்றும் உள்ளூர் சபையார் ஏகமனதுடன் வாக்களித்துள்ளப்படியால், பைபிள் ஹவுஸ் குடும்பத்தினரையும் உள்ளடக்கி இன்னொரு வாக்குப் பதிவு செய்து, சகோதரர் ரசல் அவர்களுக்கான தங்களது அன்பை வெளிப்படுத்துவதற்கும் எந்த மறுப்பும் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். காரியம் முன்மொழியப்பட்டு, பைபிள் ஹவுஸ் குடும்பத்தினரின் வாக்களிப்பானது ஏகமனதுடன் நடைப்பெற்றது.
முந்தைய வருடங்களின் வழக்கத்தின்படியே, சகோதரர் ரசல் அவர்கள் மூப்பர்களாக, உதவிக்காரர்களாக, பெண் உதவிக்காரர்களாக – சபைக்கு உண்மையுள்ள ஊழியக்காரர்களாக இருப்பார்களென, தான் நம்பும் சிலரின் பெயர்களை யோசனையாக முன்வைத்தார். இவைகள் வெறும் யோசனைகள்தான் என்றும், பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் யார் ஒருவரும் அல்லது அனைவரும் நிராகரிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களை அவர் முன்மொழிவதுகூட இல்லை, மாறாக யோசனையாக மாத்திரம் முன்வைத்ததாகவும், சபையார் தங்கள் சொந்த முன்மொழிதல்களைப் பண்ணும்படிக்கு விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். சகோதரர் ரசல் அவர்களின் யோசனையின் படியானவர்கள் முன்மொழியப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டனர் – சபையாரால் ஏகமனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர் – அந்தக் கூட்டம் முழுவதுமே மகிழ்ச்சிகரமாய்க் காணப்பட்டது. தேர்ந்தெடுத்தலைத் தொடர்ந்து ஜெபம் மற்றும் துதிசெலுத்தும் கூட்டமும், சாட்சிக்கூட்டமும், நடு இரவையும் தாண்டி நீடித்தது. அருமையான நண்பர்களில் சிலர் இந்த இரவு கூட்டத்தினுடைய அபிஷேகத்தையும், உண்மையையும் குறித்தும் பிற்பாடு கருத்துத் தெரிவித்தனர்.