R3906 (page 391)
இந்த வகை ஊழியங்களானது, மிகவும் பிரயோஜனமான ஒன்று என்றும், கடந்த காலங்களில் கர்த்தருடைய அருமையான மந்தைக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்துள்ள ஒன்று என்றும் நாம் நம்புகின்றோம். “பயண சகோதரர்கள்” / Pilgrims என்ற சகோதரர்கள் சத்தியத்தினைப் பற்றின தெளிவான அறிவுடையவர்களாய் மாத்திரம் இராமல், கூடவே சத்தியத்தினை முன்வைப்பதற்கு சராசரிக்கு மேலான திறமையை உடையவர்களாயும் இருப்பார்கள். சொசைட்டியினுடைய செலவில் இவர்கள் ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்குச் சென்று, ஒவ்வொரு முறையும் அருமையான நண்பர்களை வழக்கமாக இரண்டு நாட்கள் காலம் சந்திக்கின்றனர். இவர்களுக்குத் தகுந்த ஏற்பாடுகள் பண்ணப்படும்பட்சத்தில், இவர்கள் ஒருநாளில் இரண்டுமுறை பேசுவதற்கு ஆயத்தத்துடன் காணப்படுவார்கள். எந்த இடத்திலும் ஒழுங்குபண்ணப்படும் கூட்டங்களில் பாதிப் பொதுக்கூட்டத்திற்கு என்றும், மீதி பாதி விசேஷமாய்ச் சத்தியத்தின் மீதான ஆர்வமுள்ளவர்களுக்கு என்றும் செலவிடப்படுவதாக என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம் மற்றும் வரக்கூடிய வருஷத்தில் பயண ஊழியக்காரர்களுடைய வருகையின்போது, அவர்கள் பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளை எப்படிச் சிறப்பாய் நடத்துவது என்பதற்கு மாதிரிகளை விசேஷமாய்க் கொடுத்திடும்படிக்கு நாம் வலியுறுத்துகின்றோம்.
இந்தப் பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளை நாங்கள் நடத்தி வருகின்றோம்; காரணம் அவைகளைச் சரியாய் நடத்திடுவதற்குக் கற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆராய்ச்சி வகுப்புகளானது எத்தனை பிரயோஜனமானவைகளாக இருக்கும் என்பதையும், அவைகளின் உண்மையான ஆவியானது அதை வழிநடத்துபவராலும், சபையாராலும் புரிந்துகொள்ளப்படாத பட்சத்தில், அவை எவ்வளவு சுவாரஸ்யமற்று இருக்கும் என்பதையும் நாம் அறிவோம். எந்தச் சபைகளில் இந்த ஆராய்ச்சி வகுப்புகளானது மிகவும் கவனமாயும், கருத்தாயும் கையாளப்படுகின்றதோ மற்றும் எங்குத் திறமையான வழிநடத்துபவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்களோ – அதாவது வழிநடத்துபவரே பதிலைக் கொடுத்துக்கொண்டிருக்காமல், சபையாரிடமிருந்து கேள்விக்கான பதிலை வரவழைத்து மற்றும் இறுதியில் பதில்களைச் சுருக்கிக்கூறும் வழிநடத்துபவர் எங்குத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றாரோ – அங்குப் பலன்கள் மிகவும் சிறப்பாய்க் காணப்படும். அருமையான நண்பர்கள் யாவரும் இந்தப் பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளை நடத்துவார்கள் என்று நாம் நம்புகின்றோம். பெரும்பான்மையான ஜனங்கள் எப்படி ஆராய வேண்டுமென்றோ, எப்படிப் போதிக்க வேண்டுமென்றோ அறியாதிருப்பதினால், தாங்கள் கேட்பவற்றிலிருந்து, வாசிப்பவைகளிலிருந்து உண்மையான உணவை, போஷாக்கைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிடுகின்றனர். வருகிற வருஷத்தில் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவிடும்படிக்குப் “பயண ஊழியர்களை” அனுமதித்திடுங்கள்.திட்டவட்டமான வேண்டுகோள் நமக்கு விடுக்கப்படும்போது மாத்திரமே “பயண ஊழியர்களின்” சந்திப்புத் திட்டம் திட்டமிடப்படுகின்றது மற்றும் ஒவ்வொரு மே மாதமும் நாம் தகவல் அறிந்துகொள்வதற்கான கேள்விகளை வெளியிட்டு, “பயண ஊழியக்காராகளின்” வருகையினை விரும்புகிறவர்கள் பதிலளிக்கும்படிக்கு வேண்டிக்கொள்கின்றோம்; இதனால் பொது மற்றும் தனிப்பட்ட கூடுகைகளுக்கான அவசியம் மற்றும் சாத்தியக்கூறுகளை நன்கு எங்களால் பகுத்துணர முடிகின்றது. இவற்றை அருமையான நண்பர்கள் எவரிடமிருந்தும் நாம் பெற்றுக்கொள்வதற்கு எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கின்றோம் மற்றும் Tract – வைப்பு நிதிக்கான உங்களது நன்கொடைகள் நன்றியுடன் மதிக்கப்பட்டாலும், அவைகள் இக்காரியத்தில் அதிகாரம் செலுத்த அனுமதிக்கப்படுகிறதில்லை. தேவைப்படும் இடங்களிலெல்லாம் “பயண ஊழியர்களை” அனுப்பிவைக்க நாம் நாடுகின்றோம் மற்றும் இதற்கான செலவுகளுக்குரிய வழிவகைகளைப் பார்த்துக்கொள்ளும் காரியத்தினைக் கர்த்தரிடமே விட்டுவிடுகின்றோம். நீங்கள் மிகத் தொலைத்தூரத்தில் காணப்படுகிற காரியமானது, எங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலிருந்து உங்களைத் தடைப்பண்ணிட வேண்டாம் மற்றும் எங்களால் உங்களது வேண்டுகோளின்படி செய்யமுடிகிற அளவுக்குத்தக்கதாகவும், எங்கள் வசத்தில் சகோதரரும், செலவுகளும், பணங்களும் காணப்படும் அளவுக்குத்தக்கதாகவும், நாங்கள் இணங்கிடுவோம் என்றும் நீங்கள் உறுதிக்கொள்ளலாம். “பயண ஊழியக்காரர்” ஒருவர் உங்கள் வழியே வந்துகொண்டிருக்கிறதை கவனித்து, வேண்டுகோள் விடுப்பது என்பது மிகவும் தாமதமாய் வேண்டுகோள் விடுப்பதாய் இருக்கும்; ஏனெனில் அவர்களது பிரயாண பாதைகளானது முன்கூட்டியே பல மாதங்களுக்கு முன்னதாக திட்டமிடப்படுகின்றது மற்றும் அவர்கள் பொதுவாகவே தொடர்ச்சியாய்ப் பிரயாணம் பண்ணிடுவார்கள்; இதனால் பெருமளவில் பிரயாணத்தின் செலவுகள் மிச்சமாகுகின்றது.