தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4417 (page 186)

தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை

St. Paul's Pastoral to Thessalonica

1 தெசலோனிக்கேயர் 5:12-24

கர்த்தருக்குள் உங்களை விசாரனை செய்து

R4418 : page 186

“அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து…” (1 தெசலோனிக்கேயர் 5:12)

கர்த்தருடைய ஜனங்கள் அனைவருக்குமான மனசாட்சியினுடைய சுயாதீனத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் விஷயத்தில் வேதவாக்கியங்களானது மிகவும் குறிப்பாய்க் காணப்பட்டப்போதிலும் மற்றும் கிறிஸ்துவில் ஆண் என்றோ பெண் என்றோ இல்லை, அடிமை என்றோ சுயாதீனன் என்றோ இல்லை, அவரது அர்ப்பணிக்கப்பட்டவர்கள் யாவரும் அவரில் ஒன்றாய் இருக்கின்றனர், அவரது அங்கமாய் இருக்கின்றனர் என்று வேதவாக்கியங்களானது நமக்கு உறுதியளித்திட்ட போதிலும், தேவனே அவரது ஜனங்களுக்கான காரியங்களைக் கவனித்துக் கொள்கின்றார் என்றும், அவர்கள் கர்த்தருடைய தலைமைத் துவத்தினையும், தேவனால் சரீரத்தில் வைக்கப்பட்டவர்களாகிய – அப்போஸ்தலர்கள், தீர்க்கத்தரிசிகள், மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் முதலானவர்களையும் அங்கீகரித்துக்கொள்ளுதலின் பலனாகவே அவர்களது வளமைக் காணப்படும் என்றுமுள்ள கருத்தினை வேதவாக்கியங்களானது மிகவும் தெளிவாய் நமக்கு முன்வைக்கின்றதாய் இருக்கின்றன. “கிறிஸ்து உண்டாக்கின சுயாதீன நிலைமையினை” உடையவர்களாகிய தேவனுடைய பிள்ளைகளெனக் கர்த்தருடைய ஜனங்கள் யாவரும் காணப்படுகின்றனர்; எனினும் பாவம் செய்வதற்கான சுயாதீனத்தையல்ல, மாறாக பாவத்திலிருந்தும் அதன் அடிமைத்தனத்திலிருந்தும், அதன் அழிவிலிருந்துமுள்ள ஒரு விடுதலையையே அவர் நமக்குக் கொடுத்திருக்கின்றார். இப்படி விடுதலைப் பண்ணப்பட்டவர்கள் விசுவாசத்தின் மற்றும் அர்ப்பபணிப்பின் வாயிலாகத் தேவனுடைய குடும்பத்திற்குள்ளாகக் கொண்டுவரப்பட்டுள்ளபடியால், இவர்கள் பிதாவின் வீடும், அதன் ஏற்பாடுகள் அனைத்துமே, பரலோகத்தின் முதல் சட்டமாகிய – ஒழுங்கின்கீழ்க் காணப்படுகின்றன என்பதை உணர்ந்துகொள்வது அவசியமாய் இருக்கின்றது. இந்த ஒழுங்கினை – இவர்கள் தாங்கள் திவ்விய அன்பிலும், தயவிலும் நிலைத்திருப்பதற்கும், குடும்ப ஆசீர்வாதத்தில் பங்கடைவதற்குமான நிபந்தனையென, அதற்கு விருப்பத்தோடும், மகிழ்ச்சியோடும் கீழ்ப்படிவதற்கு முதலாவது கற்றுக்கொள்ள வேண்டும். இதனை புறக்கணிக்கும்போது, இவர்களால் அந்த வீட்டாருக்கடுத்த ஆவிக்குரிய காரியங்களில் ஆழமாயும், அதிகமாயும் ஒருபோதும் வளர்ந்திட முடியாது; மாறாக இவர்கள் திறமையறற் குழந்தைகளெனவும், ஒழுங்கில்லாதவர்களெனவும், (nursery) குழந்தைகள் நிலையினைத் தாண்ட முடியாதவர்களாகக் காணப்படுவார்கள். [R4418 : page 187]

கர்த்தரை அடையாளம் கண்டுகொள்ளுதலும் மற்றும் அவரது வார்த்தைகள் மற்றும் வாக்குத்தத்தங்கள் வாயிலான அவரது வழிகாட்டுதலுக்குக் கவனித்திருப்பதும், கர்த்தருக்குள் தங்களை விசாரணை செய்யும்படிக்குத் தங்கள் மீது அவரால் ஏற்படுத்தப்பட்டவர்களை, கர்த்தருடைய ஜனங்கள் கண்டுகொள்ள உதவிடும். ஆகையால் திவ்விய ஒழுங்கில் சபையானது அதன் ஊழியக்காரர்களை, மூப்பர்களை, உதவிக்காரர்களை, மேய்ப்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றாலும், ஒவ்வொரு அங்கத்தினனும் தன்னுடைய சொந்த பகுத்தறிதலுக்கு இசைவாய் மாத்திரமல்லாமல், திவ்விய சித்தம் குறித்த தன்னுடைய புரிந்துகொள்ளுதலுக்கு இசைவாக வாக்களிப்பதற்கென (vote) “தனது கையினை நீட்டிட” வேண்டும். ஒருவேளை கர்த்தருடைய வழிநடத்துதலில், இது விஷயமான நம்முடைய கருத்தானது உணர்ந்துகொள்ளப்படவில்லையெனில், ஒருவேளை நியாயமான புரிந்துகொள்ளுதல் மற்றும் வாக்களித்தலின் (vote) கீழ், தெய்வீகச் சித்தம் குறித்த நம்முடைய கருத்திற்கு எதிர்மாறாக, யாரோ ஒருவர் சபையை விசாரிக்கும்படிக்கு ஏற்படுத்தப்பட்டால், நாமும் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்து, நம்மால் முடிந்தமட்டும் அத்தகையவருக்கு ஒத்துழைப்புக்கொடுத்திட வேண்டும்; ஏனெனில் திவ்விய ஞானத்தையும், வல்லமையையும் அடையாளம் கண்டு கொண்டவர்களாக, அர்ப்பணிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் சித்தமானது தெய்வீகச் சித்தமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒருவேளை சிலசமயங்களில் சபையானவளின் மேலான நலன்களுக்கு எதிராக காரியங்கள் நடைபெறத்தக்கதாக கர்;த்தர் அனுமதிப்பதுபோன்று தோன்றிடலாம்; நாம் அச்சம்கொள்ளக்கூடாது, மாறாக அனைத்தையும் அவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு, நம்மைப்போன்று மற்றவர்கள் பார்க்கின்றார்களோ அல்லது இல்லையோ, கர்த்தருடைய சித்தம் குறித்த நம்முடைய பகுத்தறிதலை முழுமையாய் வெளிப்படுத்துவதில் திருப்தியடைந்திட வேண்டும்.

நம்முடைய இந்தப் பாடத்தில், தெசலோனிக்கேயா சபையானது ஒழுங்குமுறையின்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும், கர்த்தருடைய நாமத்தில் தங்கள் மத்தியிலிருந்து சிலரைத் தங்களை விசாரிக்கும்படிக்கு – வேலைக்கடுத்த நலன்கள் தொடர்புடைய விஷயத்தில் மேற்பார்வைப் பண்ணவும், கொஞ்சம் அதிகாரம் கொண்டிருக்கவும் நியமித்துள்ளனர் என்றும் அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றனர். இத்தகையவர்கள் தனிப்பட்ட விதத்தில் மாத்திரமல்ல, சபையின் ஊழியர்களெனவும் மற்றும் சபை மூலமான திவ்விய நியமித்தலின்படியானவர்களெனவும் மதிக்கப்படும்படிக்கு அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார். சபையார் இவர்களிடமிருந்து ஆலோசனைகளை எதிர்ப்பார்த்திட வேண்டும். இவர்கள் தாங்கள் உண்மையுள்ள ஊழியர்களாகக் காணப்பட்டு, சபையினுடைய நலனுக்கடுத்த காரியங்களைக் கவனிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர் என்று உணர்ந்துகொள்ள வேண்டும். கர்த்தரையும், சத்தியத்தையும் அன்புகூருகிற யாவரும், தங்களால் முடிந்தமட்டும் தங்கள் பாதையில் இடர்ப்பாடுகளைக் கொண்டுவராமல் இருப்பதற்கு நாடிட வேண்டும் மற்றும் தங்கள் புத்திமதிகளையும், தகுதியான செல்வாக்கினையும் நிலைநிற்கப்பண்ணத்தக்கதாக தங்களால் முடிந்த யாவற்றையும் செய்ய வேண்டும். இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களானவர்கள் சகோதரர்கள் மத்தியில் பிரயாசம் ஏறெடுப்பவர்களாகவும், அவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாகவும் இருப்பார்கள். சபைக்கான ஊழியம் என்பது, கனத்திற்குரியது மாத்திரமேயல்ல. “Minister” எனும் வார்த்தையின் அர்த்தம் பணிவிடைக்காரன் ஆகும் மற்றும் இது பொருத்தமான மற்றும் மிகவும் அர்த்தமுள்ள அர்த்தமாகவும் காணப்படுகின்றது – அநேகரால் கவனிக்கப்பட்டிருப்பதைக் காட்டிலும் மிகவும் அதிகமான அர்த்தம் கொண்டவையாகும்.

தொடர்ந்து, “அவர்கள் பணியின்பொருட்டு, அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள்” என்று அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார் (1 தெசலோனிக்கேயர் 5:13; திருவிவிலியம்). உங்கள் சொந்த இருதயத்திற்குள்ளாக வருவதற்கும், மற்றவர்களில் கசப்பின் வேர்களாகக் காணப்படுவதற்கும் ஏதுவாக, போட்டிமனப்பான்மையின் ஆவி எதையும் அனுமதித்திடாதீர்கள். சபையினுடைய எந்த ஓர் ஊழியக்காரனுக்கும் எதிராக குறைக்கூறும் அன்பற்ற வார்த்தைகள் எதுவும் உங்கள் உதடுகளினின்று புறப்படுவதற்கு அனுமதித்திடாதீர்கள். மாறாக அவர்களது ஸ்தானங்களில் ஒருவிதத்தில் அவர்கள் கர்த்தரைப் பிரதிநிதித்துவம் பண்ணுகிறதால், அவர்களை உயர்வாய் எண்ணிடுங்கள், அவர்களைக் கனப்படுத்திடுங்கள். சபையில் அவர்களது அன்பின் பிரயாசங்களானது பாராட்டப்படுவதற்கு ஏதுவாய்க் காணப்படுமளவுக்குத்தக்கதாக அவர்களைக் கனப்படுத்திடுங்கள். கிறிஸ்துவுக்கொத்த சாயலை அதிகமாய்ப் பெற்றிருப்பவர்கள், அதிகமாய் அன்புகூரப்பட வேண்டும்.

இன்னுமாக, “உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்” என்று பரிசுத்த பவுலடிகளார் புத்திமதி கூறுகின்றார். ஏன்? உலகத்தை விட்டு வந்தவர்களாகவும், கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக் கொண்டவர்களாகவும் மற்றும் சமாதானத்தின் பிரபுவினுடைய பின்னடியார்களென ஒன்று கூடியுள்ளவர்களாகவும் காணப்படுபவர்கள் மத்தியில் சமாதானம், இணக்கம் காணப்பட வேண்டும் என்று புத்திமதி கூறப்படுவதற்குரிய அவசியமென்ன? இவர்களது சமாதானத்தை எது குலைத்துப்போடும்? நிச்சயமாகவே இவர்களில் ஒவ்வொருவரும் உலகத்தினுடைய சண்டைச் சச்சரவுகளைக்குறித்து அனுபவம் வாயிலாக அறிந்திருப்பார்கள். செம்மறியாடுகளென இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம் ஓநாய்களினால் தொல்லைக்கொடுக்கப்பட்டிருப்பர் அல்லது பயமுறுத்தவாகிலும்பட்டிருப்பர். ஆனால் தொல்லைக்குட்படுத்தப்பட்டதான இந்தச் செம்மறியாடுகளானது, ஒன்றுகூடி வந்திருக்கையில், இவர்கள் மாபெரும் மேய்ப்பனுடைய குமாரனின் மற்றும் அவரால் நியமிக்கப்பட்டுள்ள அவர்களுக்கான உடன்மேய்ப்பர்களின்கீழ் ஆறுதலையும், சமாதானத்தையும், இளைப்பாறுதலையும், சந்தோஷத்தையும் கொண்டிருக்க வேண்டுமல்லவா? இதுவே அடைய வேண்டிய சமாதானம், அன்பு, இணக்கமாகும். எதை விலைக்கொடுத்தேனும் வரும் சமாதானமல்ல, எதை விலைக்கொடுத்தேனும் வரும் இணக்கமல்ல, மாறாக கிறிஸ்துவின் சரீரத்தில் திவ்விய நிலைப்பாடானது / தரநிலைகளானது நன்கு ஆதரிக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் மற்றும் மூப்பர்கள், உதவிக்காரர்கள் முதலானவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் ஆண்டவருடைய சத்தத்திற்குச் செவிக்கொடுத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் மற்றும் கர்த்தரையும், அவரது சித்தத்தையும், அவரால் சபையாரை விசாரிக்கும்படிக்கு அவரால் ஏற்படுத்தப்பட்டவர்களை மதிக்கிறதற்கு அனைவரும் நாடிக்கொண்டிருக்கும் காரணத்தினால் மற்றும் அனைவராலும் மேய்ப்பனுடைய சத்தத்திற்குச் செவிக்கொடுக்கப்பட்டு வார்த்தையிலும், கிரியையிலும் சுயநல நாட்டத்தின் ஆவிக்கு எதிராய்ப் போராடப்படும் காரணத்தினால் உண்டாகும் சமாதானம் மற்றும் இணக்கமேயாகும்.

ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள்

“மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்ன வென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:14). இந்த வார்த்தைகளை அப்போஸ்தலன் முழுச்சபையாருக்கும் கூறுகின்றார் என்றும், இந்தப் புத்திமதியினுடைய சில அம்சங்கள் சபையினுடைய தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய – மூப்பர்களுக்கு விசேஷமாய் உரியது என்றும் நாம் எண்ணிட வேண்டும். கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள எந்த ஓர் அங்கத்தினனும், எந்த ஒரு சகோதரனுக்கும் முறையாய்ப் புத்திமதிக் கூறிடலாம் என்பதும், திடனற்றவர்களைத் தேற்றலாம் என்பதும், பலவீனரைத் தாங்கிடலாம் என்பதும், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாய் இருப்பது என்பதும் சரியானதாக இருப்பினும், இந்தக் கடமைகளில் சில, தெரிந்தெடுக்கப்பட்ட மூப்பர்களுக்கு விசேஷமாய் உரியதாகும்; இவர்கள் அறிவிலும், குணலட்சணத்திலும் மிகவும் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றதான “மூத்த” சகோதரர்கள் என்ற உண்மையின் கண்ணோட்டத்தில் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். இளைய சகோதரர்கள், அதாவது சபையால் “மூப்பர்” என்று விசேஷமாக நியமிக்கப்படாதவர்கள் அக்கறையும், கவனமும் கொண்டிருக்க வேண்டும்; ஆனாலும் ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்தி சொல்லிடும் விஷயத்தில், சபையார் மூப்பராகிய சகோதரர்களெனச் சிலரை விசேஷமாய் நியமித்துள்ளனர் என்றும், இவர்களுக்கு இத்தகையவைகளைச் செய்வதற்கான கடமை விசேஷமாய்க் காணப்படுகின்றது என்றும் இளைய சகோதரர்கள் உணர்ந்து மிகுந்த ஜாக்கிரதைக் கொண்டிருக்க வேண்டும். ஒழுங்கில்லாதவர்கள் சரிப்படுத்தப்பட வேண்டியதாய் இருப்பினும், அது மிகவும் ஞானமாய்ச் செய்யப்பட வேண்டும், இல்லையேல் நன்மையுண்டாவதற்குப் பதிலாக மிகுந்த பாதகமே உண்டாகிவிடும். இப்பாடத்தினைக் கற்றுக்கொள்வதும் மற்றும் ஒரு காரியத்தினைக் கவனித்துக் கொள்ளத்தக்கதாக, திவ்விய ஏற்பாட்டின் கீழ் இன்னொருவர் நியமிக்கப்பட்டிருக்க, தாங்கள் அக்காரியத்தைக் கவனிக்க முற்பட்டு, ஒழுங்கில்லாதவர்களாகிப்போய்விடாமல் காணப்படத்தக்கதாக, தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதைக் கற்றுக்கொள்வதும், கர்த்தருடைய அருமையான ஜனங்கள் அநேகருக்கு அவசியமானதாய் இருக்கின்றது.

நாம் ஏற்கெனவே சுட்டிக்காண்பித்துள்ளது போன்று, “மூப்பர்” என்ற வார்த்தையானது, வயதைக் குறிப்பதாய் இராமல், மாறாக ஆவிக்குரிய வளர்ச்சியினைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. உதாரணத்திற்கு இளைஞனாகக் காணப்பட்ட தீமோத்தேயு, சபையில் மூப்பராகக் காணப்பட்டார். ஆகையால் தெசலோனிக்கேயாவிலுள்ள இந்தப் புதியதாய் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சபையிலும், அவர்களில் யாருமே நீண்டகாலமாய்ச் சத்தியத்தில் காணப்பட்டவர்களாய் இல்லாமல் இருந்தபோதிலும், “கிறிஸ்துவின் மந்தையைப் போஷிக்கும் மேற்பார்வையாளர்களாக” மற்றவர்களுக்கு ஊழியம்புரியத்தக்கதாக, சிலர் தகுதியுள்ளவர்களாகக் காணப்பட்டனர்.

அப்போஸ்தலன் வாயிலான கர்த்தருடைய அறிவுரையிலுள்ள ஞானத்தினைக் கவனியுங்கள். இது சமாதானம் காணப்படுவதற்கேயாகும்; ஆனாலும் விலைக்கொடுத்து சமாதானத்தை அடைவதற்காக அல்ல. ஒழுங்கில்லாதவர்களுக்கு, குழப்பம் ஏற்படுத்துகிறவர்களுக்குப் புத்திமதி வழங்கப்பட வேண்டும். திடனற்றவர்கள் தேற்றப்பட வேண்டும். பலவீனமானவர்கள் தாங்கப்பட வேண்டும். சரீரத்தினுடைய ஒவ்வொரு அங்கத்தினனும், மற்ற அங்கத்தினனிடம் சாந்தமாயும், பொறுமையாயும், நீடியபொறுமையாயும் காணப்படுவதற்கு முயற்சித்திடவேண்டும். இக்காட்சி எத்துணை அருமையானதாய்க் காணப்படுகின்றது! அப்போஸ்தல கண்ணோட்டத்திலிருந்தும், திவ்விய கண்ணோட்டத்திலிருந்தும், நம்முடைய கண்ணோட்டத்திலிருந்தும் பார்க்கப்படுகையில் சபை அடைய வேண்டிய நிலை எத்துணைப் பிரம்மாண்டமானதாய்க் காணப்படுகின்றது.
இவைகளுக்கு நேராக நாம் ஒவ்வொருவரும் அதிகமதிகமாய்ப் பிரயாசம் எடுப்போமாக. நம்மைக் கர்த்தர் தனிப்பட்ட விதத்திலும் கையாளுகின்றார் மற்றும் நம்மை ஒட்டுமொத்தத்திலும் கையாளுகின்றார் என்பதை நினைவில் கொள்வோமாக. நம் ஒவ்வொருவரிடத்திலும் தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்துவுக்கு ஒத்த சாயலில் வளர்ச்சியும், வனைதலும், மெருகூட்டுதலும் காணப்பட வேண்டும் என்றபோதிலும், இதே கருத்தானது ஒட்டுமொத்த சபை தொடர்பாகவும் காணப்பட வேண்டும். எந்த மனுஷனும் தனக்காக ஜீவிக்கிறதில்லை, தனக்காக மரிக்கிறதில்லை மற்றும் கிறிஸ்துவினுடைய சபையிலுள்ள எந்த ஓர் அங்கத்தினனுக்கும், கிறிஸ்துவினுடைய சரீரத்திலுள்ள சக அங்கத்தினனைப் புறக்கணிக்க உரிமையில்லை. இதுவே இப்பாடத்திலுள்ள அப்போஸ்தலனுடைய நிலைப்பாடாய் இருக்கின்றது.

ஒருவனும் தீமைக்கு தீமைசெய்யாதபடி பாருங்கள்

ஆம் ஒவ்வொருவனும், தான் மற்றவர்களுக்குத் தீமைக்குத் தீமை செய்யாதபடி முதலாவதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்; மேலும் இரண்டாவ தாகச் சபையானது, ஐக்கியத்தில் காணப்படும் அதன் அங்கத்தினர்களில் யாரேனும் இப்படிச் செய்யாதபடிக்குப் புத்திமதிக் கூறிப்பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் ஏற்கெனவே பார்த்துள்ளபடி, இது விசேஷமாய் “மூப்பர்களுடைய” கடமையாய் இருக்கின்றது – அதாவது மந்தையினுடைய நலனுக்கடுத்தவைகள் யாவற்றையும் மற்றும் சபைக்கும், மற்றவர்களுக்கும் இடையிலான உறவையும் பார்த்துக்கொள்வது, இவர்களது கடமையாய் இருக்கின்றது. சபை கர்த்தருடைய குடும்பமாக இருக்கின்றது மற்றும் நீதிக்கும், அன்பிற்கும் எதிராய் எந்தவொரு காரியத்தினையும் செய்திடும் இக்குடும்பத்திலுள்ள அங்கத்தினன் ஒருவன், அங்கத்தினர்கள் யாவருக்கும் மற்றும் விசேஷமாக வீட்டின் தலையாகிய நமது அருமை மீட்பருக்கும் நிந்தையை அல்லது கனவீனத்தைக்கொண்டு வருகின்றவனாய் இருப்பான்.

தீர்க்கத்தரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்

நாம் தீர்க்கத்தரிசனங்களை அற்பமாய் எண்ணிடக்கூடாது; மாறாக அவைகளை மதிக்க வேண்டும் மற்றும் அவைகளுக்குச் செவிக்கொடுத்திட வேண்டும். ஆனால் இதைக்குறித்து அப்போஸ்தலன் குறிப்பிடவில்லை. “தீர்க்கத்தரிசனம் உரைத்தல்” எனும் வார்த்தையானது, போதித்தலை, பொதுவில் போதித்தலைக் குறிக்கும் விதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். கிறிஸ்துவின் சபையில் தேவனுடைய பிள்ளையென யார் ஒருவரும் போதிக்கும் எதையும் அற்பமாய் எண்ணாதிருங்கள். மீட்பரிலும், அவரது பலியிலுமுள்ள விசுவாசத்தினைக் குறித்து இவர் அறிக்கைப்பண்ணுகிற காரியத்திலிருந்தும் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியத்தின் வாயிலாக கர்த்தரை இவர் அறிக்கைப்பண்ணுகிற காரியத்திலிருந்தும், போதிப்பவர் உண்மையான கிறிஸ்தவனாக இருக்கின்றார் என்பதை உங்களால் கிரகிக்க முடிந்தவரையிலும், இப்படியானவருக்குச் செவிக்கொடுக்க விருப்பமாய் இருங்கள். கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவரோடு வாதாடாதீர்கள்; மாறாக ஒருவேளை அஸ்திபாரத்திற்கு இசைவான எதையேனும் இவர் பெற்றிருப்பாரானால், மேலும் அது மற்றவர்களுக்கும், சபைக்கும் உதவிகரமாய் இருக்கும் என்று இவர் நம் புவாரானால், திவ்விய திட்டத்தின் சத்தியம் குறித்ததனது கண்ணோட்டத்தினை இவர் சொல்லிடும்படிக்கு அனுமதித்திடுங்கள். சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமெனில் சகோதரர்களுக்குச் செவிக்கொடுக்காதவர்களாய் இருந்துவிடாதீர்கள். எனினும் எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பற்றிக்கொள்ளுங்கள் – அதாவது பரீட்சையில் நிலை நிற்பவைகளைப் பற்றிக்கொள்ளுங்கள். ஒரு சகோதரன் உண்மையுள்ளவர், நேர்மையுள்ளவர் என்பதினால், வேதவாக்கியங்களுக்கான அவரது விளக்கங்கள் சரியானது என்பதாகாது. இத்தகையவர் சபையில் எந்தவொரு வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளாதபடிக்குத் தேவனால் தடைப்பண்ணிட முடியும். எனினும் இவர்களைத் தேவன் அனுமதித்துக்கொண்டிருப்பது என்பது சரியான இருதய நிலைமையில் காணப்படும் யாவருக்கும் ஓர் ஆசீர்வாதத்தை உருவாக்குவதாய் இருக்கும். உங்களால் இவரது கூற்றினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அப்பாடத்தினை ஆராய்வதும், அக்கூற்றினைச் சோதித்தறியத்தக்கதாக வேதவாக்கியங்களை ஆராய்வதும், உங்களுக்கு நிலையான பலனைக் கொண்டுவருகின்றதாய் இருக்கும் மற்றும் முன்பில்லாதளவுக்குச் சத்தியத்தில் – உங்களை உறுதிப்படுத்துகின்றதாய் இருக்கும். ஆனாலும் நலமானதைப் பற்றிக்கொள்வதில் நாம் கவனமாய் இருப்போமாக. இந்த ஆலோசனையானது கவனமாய்க் கைக்கொள்ளப்படாத சந்தHப்பங்களை நாம் அறிவோம். சில தீமையானது, நலமானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் விளைவு சொல்ல முடியாதளவுக்குரிய தீமையை உண்டாக்குகின்றது.