மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4984 (page 81)

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி

THE SCRIPTURAL RULE FOR ADJUSTING MISUNDERSTANDINGS

கர்த்தர் மத்தேயு 18:15-17 வரையிலான வசனங்களில் கொடுத்துள்ளவைகளைப் பார்க்கிலும் வேறொரு ஆலோசனையும், ஆறுதலும் சராசரியான அறிவுள்ள ஒரு சகோதரனுக்குத் தேவைப்படும் எந்த ஒரு சந்தர்ப்பத்தினை நம்மால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க இயலாது. ஒருவேளை சகோதரன் ஒருவன் வீண் அலுவற்காரனாய் இருக்கும் விதத்தில் அனுதாபத்தினைப் பெற்றிட நாடும் பழக்கமுடையவனாய் இருப்பானாகில், சீக்கிரத்தில் தனது போக்கானது தவறு என்று அறிந்துகொள்வான். அவன் வேதவாக்கியங்களில் பின்வருமாறு தெளிவான அறிவுரைகள் காணப்படும் விஷயத்தில், அறிவுரைகளுக்கு இசைவாக தனது மனதினைப் பயன்படுத்திட கற்றுக்கொள்ள வேண்டும்; தனது சகோதரனுக்கு எதிராக எதையேனும் பெற்றிருக்கும் யாவருக்கும் கர்த்தர் கூறுவதாவது: “அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; ஒருவேளை அக்காரியம் சகோதரனிடத்தில் கூறுமளவுக்கு பெரிய காரியம் இல்லையெனில், அது கருத்தில் எடுத்துக் கவனிக்குமளவுக்குப் பெரியக் காரியம் இல்லை மற்றும் அது மறக்கப்பட வேண்டும்.

மத்தேயு 18:15-17 வரையிலான வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளதான கட்டளையின் விஷயத்திற்கு எந்த விதிவிலக்குமில்லை எனினும் சில சந்தர்ப்பங்களில் அக்கட்டளைக்கு விளக்கம் கொடுக்கப்படலாம். உதாரணத்திற்கு அது குடும்பக் காரியமாக இருக்கும் பட்சத்தில், சூழ்நிலைகளின் நிமித்தம் குடும்பத்தின் தலைவரை அணுகுவது தகுதியானதாய்க் காணப்படும். ஒருவேளை காரியம், ஓர் அமைப்பில் காணப்படும் ஒரு நபர் பற்றினதாக இருக்கும் பட்சத்தில், அந்நபர் அக்கழகத்தினுடைய பிரதிநிதியாக மாத்திரம் காணப்படுகையில், கழகத்தினுடைய தலைவரை அணுகுவது தகுதியானதாய்க் காணப்படும். இப்படியாகச் செய்வது என்பது மத்தேயு 18:15-ஆம் வசனத்தினை நியாயமான பாணியில் பின்பற்றிடுவதாக இருக்கும். ஆனால் இவைகள் சிறு விஷயங்கள்தான்; இவைகள் தவிர்க்கவும்படலாம்; ஆனால் இவைகள் விஷயத்தில் இக்கட்டளைச் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ஞானம் பயன்படுத்தப்பட வேண்டும்.

உலகத்தில் பெரும்பான்மையானபிரச்சனைக்குக் காரணம் மனஸ்தாபம் / பிணக்கு என்பதில் ஐயமில்லை. ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் “பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்வதும் மற்றும் மற்றவர்கள் செய்கிற அநேகவற்றை மன்னித்துவிடுவதும் ஏற்புடையதாயிருக்கும் (கொலோசெயர் 3:14). எனினும் தனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்யப்பட்டுள்ளது என்று எண்ணுகிறவர், குற்றஞ்செய்துள்ள சகோதரனிடத்திற்குச் செல்வதும், மனஸ்தாபத்தைச் சரிச்செய்துகொள்வதும் சரியானதாகவே இருக்கும். இப்படியாகச் செய்வது என்பது அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நன்மையாகவே இருந்துள்ளது.

மத்தேயு 18:15-17-வரையிலான வசனப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதான அறிவுரையானது சகோதர சகோதரிகளுக்கு மாத்திரமே, சபைக்கு மாத்திரமே உரியதாகும் மற்றும் இதன் காரணமாக, வெளியிலுள்ளவர்களுக்குச் செயல்படுத்தப்படக்கூடாது. எனினும் இந்த ஒரு பிரமாணத்தினைச் சகோதர சகோதரிகள் விஷயத்தில் செயல்படுத்திடுவதற்குக் கற்றுக்கொள்பவன், இதுவே ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் செயல்படுத்தப்படுவதற்குரிய ஞானமுள்ள நடவடிக்கையாக இருக்கும் என்று கணித்துக்கொள்வான். இப்படியாக அவன் இயல்பாகவே இதே கொள்கைகளை உலகத்தின் காரியங்கள் மற்றும் உலகப்பிரகாரமான ஜனங்கள் விஷயத்திலும் செயல்படுத்த முற்படுகின்றவனாய் இருப்பான். எனினும் உலக விஷயத்தைக் கையாளும் காரியத்தில், எது ஞானமுள்ள வழிமுறையாக இருக்கும் என்று சிந்திக்கிறதற்கு அவன் ஞானத்தைப் பயன்படுத்துகிறவனாய் இருக்க வேண்டும். சபைக்குரியதான சில ஆழமான மற்றும் விலையேறப்பெற்றக் காரியங்களானது, உலகத்திற்குச் சினமூட்டுகின்றதாயிருக்கும். ஆகவேதான், “உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள் என்று கர்த்தர் எச்சரிக்கின்றார்.

நாம் சகல மனுஷருக்கும் நன்மை செய்ய பிரயாசம் எடுக்கையில், சகோதர சகோதரிகளின் விஷயத்தில் இக்காரியம் தொடர்பாக எந்த வேற்றுமை காணுதலும் இருத்தல் கூடாது. எனினும் கர்த்தருடைய ஜனங்களில் சிலர், சில விஷயங்களில் சரியற்ற விதத்திலும், நியாயமற்ற விதத்திலும், எண்ணுகின்றனர் என்று நாம் சொல்லலாம். உதாரணத்திற்கு ஒரு சகோதரன், சத்தியத்திலுள்ள மற்றொரு சகோதரன் அவனது உணர்வுகளின் விஷயத்தில் வேற்றுமைகளைப் பெற்றிருப்பதையும், அவன் தன்னைக் காட்டிலும் இன்னொருவரை அதிகமாய் மதிக்கிறவராய் இருப்பதையும் உணருவாரானால், இதைக் குற்றமாய் எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர் தனக்குள்ளாகப் பின்வருமாறு கூறிட வேண்டும்: “குணலட்சணத்திலும், மனப்பாங்கிலும் வித்தியாசங்கள் உண்டு; மற்றும் மற்றவரைக் காட்டிலும் சகோதரன் ” B” அவர்களே, சகோதரன் ” A” அவர்களுக்கு உயர்வாய்த் தோன்றலாம். சகோதரன் ” A” அவர்கள் என்னை அன்புகூர்ந்திடவும், அவர் என்னைப் பகைக்காமல் இருப்பதையும், அவர் எனக்குப் பாதகம் பண்ணாமல் இருப்பதையும்தான் நான் எதிர்ப்பார்க்கின்றேன். சகோதர சகோதரிகள் அனைவருமே ஒன்றுபோல் எண்ணப்பட வேண்டும் என்று தேவனுடைய வார்த்தைகளில் எதுவும் சுட்டிக்காட்டுகிறதில்லை!

நமது கர்த்தர்கூடத் தம்முடைய அன்பில், இம்மாதிரியான வேற்றுமைகளைக் கொண்டிருந்தார். எனினும் பட்சப்பாதமில்லாமலும் மற்றும் மாய்மாலம் இல்லாமலும், இப்படியாகச் செய்தார். ஆனால் நம்முடைய விழுந்துபோன சுபாவத்திலுள்ள வேறுபாடுகள் காரணமாக, சகோதர சகோதரிகள் சிலர் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் நம்முடைய மனதிற்கு ஒத்துப்போகிறவர்களாய் இருப்பார்கள். ஆகையால் சகோதர சகோதரிகளுடைய அன்பைப் பெற்றுக்கொள்வதில் நாம் மனநிறைவு கொண்டிட வேண்டும் மற்றும் அதை அதிகமாய்ப் பெற்றுக் கொள்ளத்தக்கதாகப் பிரயாசம் எடுத்திட வேண்டும். நம்முடைய வார்த்தைகளும் மற்றும் நடத்தையும் சகோதர சகோதரிகளுக்கு நாம் மிகவும் பிரியமானவர்களாகத்தக்கதாகக் காணப்பட வேண்டும் மற்றும் இப்படியாக அவர்களது நன்மதிப்பை அதிகமாய்ப் பெற்றிட வேண்டும். மிகுதியான அளவில் நம்மை அன்புகூராதவர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்காமல், மாறாக முழுமையாய் அன்புகூரப்படுவதற்கு ஏதுவான குணலட்சணத்தினை வளர்த்திடுவதற்கு நாம் முயற்சித்திட வேண்டும்.

இப்படியான சூழ்நிலையானது மத்தேயு 18:15-ஆம் வசனத்தின்படி கையாளப்படவில்லையெனில், ஆலோசனையானது பின்வருமாறு கொடுக்கப்பட வேண்டும்: “அன்பான சகோதரனே, சகோதரன் ‘A’ -அவர்கள் உங்களிடத்தில் வேறு எதையுமல்ல அன்பின் உணர்வையே கொண்டிருக்கின்றார். ஆனால் ஒருவேளை சகோதரன் ‘B’ -அவர்கள்: “சகோதரன் ‘C’ -அவர்கள், ‘A’ -அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதுபோல், சகோதரன் ‘A’ அவர்களின் அன்பும், தோழமையும் எனக்குக் கிடைக்கவில்லையென்று சொல்வாரானால், இவரிடம்: “என் அன்பு சகோதரரே, நாம் ஒருவருக்குப் பாதகம் செய்யாத நிலையில், இன்னொருவருடன் விசேஷித்த ஐக்கியம் கொண்டிருப்பதற்கான உரிமையினைப் பெற்றிருக்கிறோமல்லவா? உரிமைப்பெற்றிருக்கின்றோம் என்றும், இந்த விஷயத்திற்கு கர்த்தருடைய உதாரணத்தையும் பெற்றிருக்கின்றோம் என்றும் நாம் எண்ணுகின்றோம். இது நான் உங்களை அன்பற்ற விதத்தில் நடத்திட வேண்டுமென்று குறிப்பதாகாது. ஒரு சகோதரன் விருப்பு வெறுப்புகள் பெற்றிருப்பதில், அதுவும் இந்த விருப்பு வெறுப்புகளை அவர் இன்னொருவரை வேண்டுமென்றே தாக்குவதற்கு எனப் பயன்படுத்தாமல் இருக்கையில் – இத்தகைய விருப்பு வெறுப்புகளைப் பெற்றிருப்பதில் தவறில்லை என்று ஒருவர் பதில் கொடுத்திடலாம்.

அன்பின் பல்வேறு அளவுகள்

அன்பு என்பது நீதியல்ல. அன்பு கட்டளையிடப்பட முடியாது; அது தூண்டப்பட வேண்டும்; மற்றும் அன்பிற்கு ஒரு காரணமும் இருத்தல் வேண்டும். ஒருவேளை தேவன் அன்புகூரத்தக்கவராய் இல்லாமல் இருப்பாரானால் அவரை நாம் அன்புகூர வேண்டுமென்று ஒருவர் நம்மிடம் கூறுவது என்பது முறையற்ற ஒன்றாய் இருக்கும். அதுபோலவே அன்புகூரத்தகாத ஏதேனும் ஒரு சிருஷ்டியினை நம்மால் எப்படி அன்புகூர இயலும்? நாம் சகோதர சகோதரிகளை அன்புகூருவதற்கான காரணம், நாம் அவர்களது நல்நோக்கங்களிலும் மற்றும் அவர்கள் தங்கள் இருதயங்களைக் கர்த்தருக்குக் கொடுத்துள்ளார்கள் எனும் உண்மையிலும், தேவசாயலுக்கொத்த ஏதோ சிலவற்றைக் காண்பதினாலேயே ஆகும்.

அதிகமாய் விழுந்துபோன நிலையிலுள்ள மாம்சத்தை உடைய சகோதரன் விஷயத்தில், அன்புடன்கூடிய பாசம் கொள்வதற்குப் பதிலாக, இரக்கத்துடன்கூடிய அன்பையே நாம் அதிகமாய்ப் பெற்றிருப்போம்; ஏனெனில் கிறிஸ்துவுக்கு ஒத்த குணலட்சணத்தின் சாயலை நாம் காணுமளவுக்குத்தக்கதாக மாத்திரமே, நம்மால் அவரது பின்னடியார்களை உண்மையாய் அன்புகூர்ந்திட முடியும். மேலும் நன்மைச் செய்வதற்கான உண்மையான வாஞ்சையுடனே நாம் ஒவ்வொரு சகோதரன் மற்றும் சகோதரியையும் கவனித்திட வேண்டும்; மற்றும் அதே அன்பானது, கிடைக்கும் சமயத்துக்குத் தக்கதாகப் பொதுவாயுள்ள உலகத்தாருக்கும் செலுத்தப்பட வேண்டும்.

மனஸ்தாபம் ஏற்பட்டுள்ள அநேக சந்தர்ப்பங்களில் காணப்படும் பெரிய பிரச்சனை – கர்த்தருடைய ஆலோசனையானது அப்படியே கடைப்பிடிக்கப்படாமல் காணப்படுவதேயாகும். நல்ல மற்றும் கனம்பொருந்திய சகோதரர்கள், சரியானவற்றைச் செய்ய விரும்புபவர்கள், மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுப்பதில் திறமிக்கவர்களாய் இருப்பவர்கள் – தங்களுடைய சூழ்நிலையானது வேறுபட்ட சூழ்நிலை என்று எண்ணுகின்றவர்களாய் இருக்கின்றனர் – சரியாய்ப் பகுத்தறியாதவர்களாய் இருக்கின்றனர். இத்தகையவர் குறிப்பிட்ட சகோதரனிடத்திற்குப் போய்ப் பின்வருமாறு சொல்வதற்குப் பதிலாக, அதாவது “மத்தேயு 18:15-ஆம் வசனத்தினுடைய ஆலோசனையைப் பின்பற்றினவனாக, ஒரு சிறு காரியம் தொடர்பாக, சகோதரனே உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்” என்று சொல்வதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சகோதரனைச் சந்தித்து, “சகோதரா, நீங்கள் இன்னின்ன விதமாய்ச் செய்திருக்கின்றீர்கள்” [R4985 : page 82] என்று சொல்லுகின்றார். இவர் ஒப்புரவாகுவதற்கெனச் சகோதரனிடத்தில் செல்லாமல், மாறாக ஏதோ தவறு நடந்துள்ளது என்று சகோதரனுக்குக் காண்பிக்கத்தக்கதாகச் சர்வாதிகாரி போன்று செல்கின்றார். இது சரியான வழிமுறையல்ல. நீதியானது, தேவனுடைய சிங்காசனத்திற்கு ஆதாரமாய் இருக்கின்றபடியால், மேற்கூறிய சரியற்ற வழிமுறையின்படி நடந்துகொள்பவர்கள் நீதியின் கொள்கைளைப் பின்பற்றிடுவதற்குத் தவறுகின்றவர்களாய் இருப்பார்கள்; கர்த்தருடைய குணலட்சணத்தை வளர்க்க தவறுகின்றவர்களாய் இருந்து, பரிசை வெல்ல தவறிப்போய்விடுவார்கள்.

கர்த்தருடைய கட்டளையின் ஆவியானது, சகோதரனுக்கு உதவி செய்வதையே சுட்டிக்காட்டுகின்றதேயொழிய, மாறாக சகோதரனை ஏளனம் செய்வதையோ, சகோதரனைக் கோபம் மூட்டுவதையோ, அவரைக் கேலி செய்வதையோ சுட்டிக்காட்டவில்லை அவர் சொல்லிடுவதற்கு நோக்கம் கொள்ளாதவைகளை அவரைச் சொல்லவைத்து அவரைச் சிக்கிவைப்பதையோ, அவர் சொல்லியுள்ள வார்த்தைகளின் அர்த்தத்தினைத் திரித்துக்கூறிடுவதையோ சுட்டிக்காட்டவில்லை. இது சரியான ஆவியல்ல. எந்தச் சகோதரனையும், இப்படியான விதத்தில் அணுகிடக்கூடாது. மாறாக காரியமானது மிகவும் இரக்கமான விதத்தில் கையாளப்பட வேண்டும்; மற்றும் ஒருவேளை ஒருவரால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்து முடித்தப் பிற்பாடு தவறானது தொடர்கின்றது என்றால், நமக்குச் சொல்வதற்கு எதுவுமில்லை. சிலர் “அவர் மன்னிப்புக் கேட்கவில்லை என்று சொல்லலாம். சகோதரன் மன்னிப்புக் கேட்பது குறித்து எதுவும் கர்த்தர் கூறிடவில்லை. ஆனால் ஒருவேளை சகோதரன் தனது தவறினை உணர்ந்தும், மன்னிப்புக் கேட்க தவறுவானாகில், அவன் தனக்கே பாதிப்பு உண்டுபண்ணுகிறவனாய் இருப்பான்.

அந்நியக் காரியங்களில் தலையிடுவது குறித்து எச்சரிக்கையாயிருப்போமாக

ஒருவேளை மத்தேயு 18:15-17 – வரையிலான வசனங்களில் இடம்பெறுகின்றதான இரண்டாம் படியானது அவசியப்படுமாயின், அது – கர்த்தருடைய சித்தத்தைத்தான் செய்கின்றோமா என்பதை உறுதிப்படுத்து வதற்கான விருப்பத்துடன், மிகவும் ஆழமாய் ஆராய்ந்து, ஜெபம்பண்ணின பிற்பாடு செய்யப்பட வேண்டும். முதலாவதாக – சகோதரர்களைத் தன்னோடுகூடக் கூட்டிக்கொண்டு போவதற்குக் கேட்குமளவுக்குக் காரியம் முக்கியமானதா என்றும், காரியம் வேறொருவருக்கு எதிரானதாய் இராமல், நமக்கு எதிரான ஒன்றாய் இருக்கின்றதா என்றும், காரியமானது அந்நியக் காரியங்களில் தலையிடுதலாக இல்லையென்றும், (கடந்த காலத்தில் இல்லாமல்) இப்பொழுது செய்யப்பட்டுள்ள ஒரு காரியமாக இருக்கின்றதா என்றும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படியாகக் காரியம் இருக்குமாயின், இரண்டு பேரை அழைத்துச் செல்லுங்கள். “என்னோடுகூட வரும்படிக்கு நான் உங்களிடத்தில் கேட்பதால், என் பக்கமாய்க் காணப்படும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறாதீர்கள். சிலசமயம் நாமே தவறுசெய்தவர்களாய் இருப்போம் மற்றும் இப்படியிருக்கும் பட்சத்தில் மற்றச் சகோதரன் சரியாக வேண்டுமென்பதற்குப் பதிலாக நாம் சரியாகுவதற்கே நாம் மிகவும் ஆவல் கொள்வோமாக.

ஒருவேளை காரியம் முக்கியமானது என்று நாம் உறுதிப்படுத்திக் கொள்வோமானால், நமக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற சகோதரனுக்கு நண்பர்களாய் இருப்பவர்கள் – நியாயமானவர்களாகவும், சபையில் கனமிக்கவர்களாகவும் இருப்பவர்கள் – என்று நாம் கருதுகின்ற இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் இருவரோடுகூட நமக்கெதிராய்க் குற்றம்புரிந்த சகோதரன் சந்திக்கப்பட்டு, விஷயத்தை கலந்தாலோசனை பண்ணின பிற்பாடு, இந்தச் சகோதரர்கள் அறிவுரை வழங்குவது தகுதியானதாய் இருக்கும். ஒருவேளை அறிவுரையானது, நாம் பின்பற்ற முடிகின்றதாய் இருக்குமானால், நாம் அப்படியாகவே செய்து, சமாதானத்தையும், இணக்கத்தையும் கொண்டுவர வேண்டும்.

ஆனால் ஒருவேளை இப்படியாகச் செய்தும், பிரயோஜனம் ஏற்படாமல், பாதகச் செயல்கள் தொடருமானால், அப்பொழுது காரியத்தினைச் சபையாரின் கவனத்திற்கு நாம் கொண்டுவருவது தகுதியானதாய் இருக்கும். தீங்கு செய்கிறவன், தனது செய்கையினைச் சரிச்செய்துகொள்ளத்தக்கதாக அவனை இணங்கவைக்க முடியவில்லையென்று நம்மோடுகூடத் தீர்மானித்தவர்களாகிய – நம்மோடுகூட வந்த இரு சகோதரர்களும், சபையின் மூப்பரிடத்தில், விசாரிக்கப்படுவதற்குரிய வழக்கு ஒன்றினைத் தாங்கள் பெற்றிருப்பதாகக் கூறவேண்டும்; ஆனால் அவர்கள் குற்றஞ்சாட்டிடக்கூடாது. குற்றச்சாட்டிற்கு உண்மையான காரணம் ஏதேனும் உள்ளதா என்று காணத்தக்கதாகச் சபையார் காரியத்தைச் செவிகொடுத்துக் கேட்கின்றவர்களாக மாத்திரம் காணப்பட வேண்டும். இந்த ஒரு கட்டத்தில், சபையார் விசாரிப்பதற்கு ஒரு வழக்கு இருக்கின்றது என்று மாத்திரமே அறிந்து கொண்டவர்களாகக் காணப்பட வேண்டும். பின்னர் மூப்பர்கள் இந்த நோக்கத்திற்காக விசேஷமாய்க் கூடி, சபையாருக்கு முன்பாக ஒரு வழக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், காரியத்தினைக் கேட்பதற்கு எந்த நேரம் அவர்களுக்குச் சௌகரியமாய் இருக்கும் என்றும் சபையாரிடம் கேட்டிட வேண்டும். பின்னர் வழக்கினை விசாரிக்கத்தக்கதாக எப்போது கூடிடலாம் என்று தீர்மானித்திடவேண்டும்.

இக்காலக்கட்டத்தில் யாருக்கு எதிராய்க் குற்றச்சாட்டானது சாட்டப்பட்டுள்ளாதோ, அவர் மூப்பர்களிடத்தில் பின்வருமாறு கூறிடலாம்: “அந்தச் சகோதரனாலும், பிற்பாடு அவரோடுக்கூட வந்திட்டதான அந்த இரண்டு சகோதரர்களினாலும் எனக்கு எதிராய்க் குற்றச்சாட்டுகள் சொல்வது உண்மைதான். ஆனால் சகோதரரே அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல. அக்காரியம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாய் இருக்கின்றது; மற்றவர்களுக்கு அதில் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று கூற விரும்புகின்றேன் அல்லது அவர் கூற விரும்பும் எதையும் சொல்லிடலாம். பின்னர் அவ்விஷயமானது சபையாருக்கு முன்பாகக் கொண்டுவருமளவுக்குரிய விஷயந்தான் என்பதற்கும், அது அந்நியக் காரியங்களில் தலையிடும் விஷயமல்ல என்பதற்கும் சான்றுகள் பகரப்பட வேண்டும்; ஏனெனில் அந்நியக் காரியங்களில் தலையிடுவதற்குச் சபையார் ஒன்றுகூடிடக் கூடாது.

அந்த மனுஷனுடைய காரியத்தில் சபையாரின் தலையிடுதல் அந்நிய காரியத்தினுடைய தலையிடுதலாக இருக்குமா அல்லது இல்லையா என்று தீர்மானிக்கத்தக்கதாக – அக்காரியமானது சபையாருக்கு முன்பாகக் கொண்டுவரப்படத்தக்கதான காரியமாய் இருக்கின்றதா எனத் தாங்கள் புரிந்துகொள்வதற்கு மாத்திரம் – காரியத்தினைக் குறித்துத் தெரிந்துகொள்வது மூப்பர்களுக்குத் தகுதியானதாய் இருக்கும். ஒருவேளை சபையாருக்கு முன்பாகக் கொண்டுவரப்படுவதற்குரிய காரியமாக அது இல்லையென்று மூப்பர்கள் கருதுவார்களானால், அவர்கள் குற்றஞ்சாட்டும் சகோதரனை நோக்கி: “இந்தச் சகோதரன் உங்களுக்குத் தீங்குச் செய்யவில்லை என்று சொல்லிட வேண்டும். ஆனால் ஒருவேளை இரு சாராரில் எவரேனும், வழக்கானது சபையாருக்கு முன்பாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இக்கட்டம் வரையிலும் மத்தேயு 18:15-17 வரையிலான ஆலோசனையானது முடிந்தமட்டும் கைக்கொள்ளப் பட்டுள்ளது என்றும் இன்னமும் எண்ணுவார்களானால் – ஒருவேளை அச்சபையாருக்கான மூப்பர்கள் காரியத்தினைச் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவருவதற்கு விருப்பமற்று இருப்பார்களானால், அப்போது வழக்கினைத் தாங்கள் விசாரிக்க வேண்டுமா அல்லது இல்லையா என்று சபையார் முடிவெடுப்பது தகுதியானதாய் இருக்கும் மற்றும் அவர்களது விசாரித்தலே இறுதியானதாகக் காணப்பட வேண்டும்.

சபையார் எப்படி விசாரித்திட வேண்டும்

சபையார் முன்னிலையில் விசாரிக்கப்படும் எந்தக் காரியத்தின் விஷயத்திலும், வழக்கில் தனதுபக்கத்தின் விளக்கத்தினை முன்வைப்பதற்கு விரும்புகின்ற ஒவ்வொருவருக்கும் வாய்ப்பானது அளிக்கப்பட வேண்டும் – ஒருவர் தனது பிரச்சனையைக்கூற, மற்றவர் அதற்குப் பதிலளிக்க வேண்டும். நடவடிக்கையின் எந்த ஒரு கட்டத்திலும், அன்பற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது. இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்திடுவதற்கு முற்படுபவர், இதினிமித்தம் கண்டனத்திற்குரியவராகவும் மற்றும் அவரது நடத்தையானது, தவறாய் உள்ளது என்று தீர்க்கப்படுவதற்கு ஏதுவானதாகவும் கருதப்பட வேண்டும். இம்முறைமையே பின்பற்றப்படுவதற்குக் கர்த்தர் நோக்கம் கொண்டுள்ளார் என்பதில் உறுதியே. மனதில் எப்போதும் கொண்டிருக்க வேண்டிய கருத்தென்னவெனில்: ஜனங்கள் மற்ற மனுஷருடைய காரியங்களில் உண்மையில் தலையிடுகின்றார்களா என்பதேயாகும் – இம்மாதிரியான நடக்கையானது சபையாரால் அல்லது மூப்பரால் ஆதரிக்கப்படக்கூடாது. பொன்னான பிரமாணத்திற்கும் மற்றும் மத்தேயு 18:15-ஆம் வசனத்தின் காரியத்திற்கும் நேர்மாறான விதத்தில் பொல்லாத ஆலோசனைகளில் ஜனங்கள் அதிகளவிலான நேரத்தினை வீணடிக்கின்றவர்களாய் இருக்கின்றனர்.

முக்கியமான, உறுதியான, தெளிவான குற்றச்சாட்டுகளைப் பொறுமையாய்ச் சபையார் கேட்டப் பிற்பாடும் மற்றும் இந்தப் பல்வேறு முயற்சிகளுக்குப் பிற்பாடும், குற்றஞ்சாட்டப்படும் சகோதரன் உண்மையில் தவறு செய்தவராய் இருக்கின்றார் என்றும், அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார் என்றும் கண்டு கொள்வார்களானால், குற்றஞ்சாட்டப்பட்டபடியே, அவர் குற்றம் புரிந்தவராய் இருக்கின்றார் என்ற தீர்மானத்திற்குள் வர வேண்டும். சபையாருடைய வாக்கானது (vote) ஏகமனதானதாக இருக்க வேண்டும்; கூடுமான மட்டும் பட்சபாதங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட வேண்டும். சபையார் யாரையும் நித்திய சித்திரவதைக்குள்ளாகத் தீர்க்காதபடியினாலும், எந்த விதத்திலும் சகோதரனை நியாயந்தீர்க்காதபடியினாலும், அவர்களது அறிவுரையில் எந்தத் தண்டனையும் இணைந்து காணப்படக் கூடாது. அச்சகோதரனுடைய நடத்தையானது, வேதவாக்கியங்களுக்கு எதிராய் இருக்கின்றது என்றும், அவர் தனது நடத்தையினை மாற்றிக்கொள்ளவில்லையெனில், அவரைக் கர்த்தருடைய ஜனங்களில் ஒருவராக தங்களால் இனிக் கையாள முடியாது என்றும் அச்சகோதரனுக்கு அறிவுரை மாத்திரம் வழங்குகின்றனர்.

சகோதரனை ஐக்கியத்தினின்று ஒதுக்கிவைக்கையில், அவர்கள் சகோதரனைத் துன்பப்படுத்திட / இழிவுப்படுத்திடக் கூடாது; ஏனெனில் நாம் இப்படியாக ஆயக்காரர்களையும், பாவிகளையும் இழிவுப்படுத்துவதில்லை. மூப்பராகவோ அல்லது உதவிக்காரராகவோ அல்லது வேறு ஏதேனும் விதத்திலோ ஊழியம் புரியும்படிக்கு நாம் பாவிகளிடத்திலோ, ஆயக்காரர்களிடத்திலோ வேண்டிக்கொள்வதில்லை இதுபோலவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சகோதரனும், ஜெபம் ஏறெடுக்க கேட்டுக்கொள்ளப்படக்கூடாது அல்லது வெளியாட்களிடம் செய்யும்படிக்குக் கேட்டுக்கொள்ளப்படாத எதுவும், அச்சகோதரன் செய்யும்படிக்குக் கேட்டுக்கொள்ளப்படக்கூடாது. இப்படியாகச் சபையார் தங்கள் ஐக்கியத்தினை ஒதுக்கி வைத்துகொள்வார்கள். அவர் இன்னமும் சகோதரன்தான், ஆனால் நல்ல உறவு நிலைமையில் இல்லாமல் காணப்படுகின்றார்; ஏனெனில் கர்த்தர் வழிக்காட்டியுள்ள விதத்தில், அவர் சகோதரருடைய சத்தத்திற்குச் செவிக்கொடுக்க மறுத்தவராய் இருக்கின்றார்.

சபையார் அனைவருமே ஒரு காரியத்தில் தங்களது கணிப்பில் தவறிப்போவதற்கும், சரியாய்ச் செயல்பட்டுள்ள சகோதரனுக்கு எதிராய்த் தீர்மானிப்பதற்கும் வாய்ப்புள்ளது. அத்தகைய சகோதரன் பின்வருமாறு கூறிடலாம்: “என்னுடைய அருமையான சகோதர சகோதரிகளே, இக்காரியத்தின் மீதான உங்களது கண்ணோட்டத்தினை நான் மதிக்கின்றேன்; மற்றும் என்னுடைய நடத்தையில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு ஏதுவாய் எதுவாகிலும் இருக்குமாயின், அதற்காக நான் மனம் வருந்துகின்றேன். என்னால் முடிந்தமட்டும் காரியத்தினை மாற்றிக்கொள்வேன் என்று நான் உங்களுக்கு வாக்களிக்கின்றேன். எனக்கே நான் நீதியாய் நடந்துகொள்ள வேண்டுமெனில், என்னால் என்னுடைய கண்ணோட்டத்தினை மாற்றிக்கொள்ள முடியாது; எனினும் உங்களுடைய ஒருமித்தக் குரலை மதித்து, சரியென்று நான் எண்ணுகின்ற என்னுடைய பகுத்துணர்வின்படி, இக்காரியத்தில் நடந்துகொள்வதில்லை. ஆகையால் நான் அநியாயத்திற்கு ஆளாகுவேனானால், இதைக் கர்த்தர் அவரது சரீரமாகிய சபைக்கான பலி என்ற விதத்தில் எடுத்துக்கொள்வார். ஆகவே அன்பு சகோதர சகோதரிகளே, உங்களுடைய அன்பான உணர்வுகளின் நிமித்தமாக, உங்களுக்கு நன்றி ஏறெடுக்கும் [R4985 : page 83] அதேவேளையில், இதனால் எனக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்று நீங்கள் அறிய விரும்புகின்றேன். ஒருவேளை எப்போதேனும் இக்காரியங்களில் உங்கள் மனம் மாறுமாகில், அதை நீங்கள் எனக்குத் தெரியப்படுத்துவீர்கள் என்று நான் எண்ணுகின்றேன்.

ஒருவேளை அச்சகோதரன் உண்மையிலேயே தவறு செய்திருந்திருப் பாரானால், அவர் “சரி – என்னை வெளியே தள்ளுங்கள்! என்று சொல்லக்கூடும். சபையார் பின்வருமாறு கூறிடலாம்: “நாங்கள் உம்மை வெளியே தள்ளவில்லை. எங்களிடமிருந்து உம்மை ஒதுக்கிக்கொள்வதாகக் கூறிட வேண்டாம். உம்முடைய வார்த்தைகளை, உம்முடைய பதில் என்று நாங்கள் எடுத்துக்கொள்வதில்லை. எங்களுடைய செயல்பாடுகளானது, மிகவும் இரக்கமானவைகள், சகோதரத்துவமானவைகள் என்றும், சபையாரின் நிலைப்பாட்டிற்கு இசைந்திடுவது இப்பொழுது நமக்கான கடமையின் பாகமாக இருக்கின்றது என்றும் நீர் கண்டுகொள்ள கர்த்தர் செய்திடுவார் என்று நாங்கள் நம்புகின்றோம். நாங்கள் தவறு செய்துள்ளோம் என்று கர்த்தர் ஒருவேளை எங்களுக்குக் காண்பிப்பாரானால், அதை ஒப்புக்கொள்வதற்கு நாங்கள் மிகவும் மகிழ்வுறுவோம். ஆனால் அதற்கிடையில் அன்பான சகோதரனே, உம்மைக் குற்றஞ்சாட்டிட விரும்பவில்லை, மாறாகக் கர்த்தருக்கும், அவரது வார்த்தைகளுக்கும் எங்களது கடமையைச் செய்திட மாத்திரம் விரும்புகின்றோம்.

இப்படிச் செய்வது தகுதியானதாய் இருக்கும்; நாம் சகோதரருக்குள் தடை அரண்களை எழுப்பிடக்கூடாது. “நல்லது, நீர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நீர் திரும்ப எடுத்துக்கொள்வது வரையிலும் உம் முகத்தை எங்களுக்குக் காண்பியாதேயும் என்று சொல்லி, அச்சகோதரனுக்குப் பாதகம் பண்ணிடுவது சுலபம். பெரும்பான்மையான ஜனங்கள் தங்களைப் பற்றி மிகவும் உயர்வாய் எண்ணுவதினால், இத்தகைய வார்த்தைகளைக் கேட்ட பிற்பாடு திரும்பிட முடியாதவர்களாய் இருப்பார்கள்; எனினும் கர்த்தருடைய ஆவியும், அன்பின் ஆவியும், நீதியும் வெளிப்படும் பட்சத்தில் திரும்புகிறவர்களாய் இருப்பார்கள்.