மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4927 (page 439)

மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு

OUR RESPONSIBILITY TO ONE ANOTHER

“அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.” – (ரோமர் 15:1)

நம்முடைய ஆதார வசனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதான மாபெரும் கொள்கையானது, அன்பின் கொள்கையாகும், அதாவது தெய்வீக ஆவியின் சாரமாகும். தேவன் அன்பாகவே இருக்கிறார்; மற்றும் அன்பின் ஆவியானது, தேவனுடைய ஆவியாக இருக்கின்றது. தேவனுடைய ஜனங்கள் மத்தியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த ஆவியானது, அவர்களை ஒருவருக்கொருவர் அக்கறைகொள்ளச் செய்கின்றது. இது சுயநலத்தின் ஆவிக்கு எதிர்மாறானதாகும். இது தனது நலனுக்கடுத்தவைகளோடுகூட, மற்றவர்களுடைய நலனுக்கடுத்தவைகளை, அதிலும் விசேஷமாக விசுவாச வீட்டாரின் நலனுக்கடுத்தவைகளை நாடுகின்றது.

எல்லாச் சந்தர்ப்பங்களிலும், கூடுமானமட்டும் பலவீனருக்கும், உதவி அவசியப்படுபவர்களுக்கும் உதவிடுவது நம்முடைய மனநிலையாய்க் காணப்பட வேண்டும். பலவீனமாய் இருப்பவர்களை ஏளனமாய் அவமதித்து, “அவர்களுக்கு என்னுடைய அனுதாபம் காணப்படுகின்றது” என்று கூறிடுவது, உலகத்தாருடைய பொதுவான மனநிலையாய் இருக்கின்றது. ஆனால் உண்மையில் பெலவீனர்கள் அதிகமாய் அனுதாபங்களைப் பெற்றுக்கொள்வதில்லை. மிகவும் வெற்றிகர மானவர்களை, வல்லமை உள்ளவர்களை, ஐசுவரியவான்களை உலகமானது பாராட்டுகின்றது. ஆனால் தேவன் பெலவீனர்களுக்காகவும், எளியவர்களுக்காகவும் அனுதாபம்/இரக்கம் கொண்டிருப்பது போன்று, அனுதாபப்படுவதற்கான அவசியத்தில் இல்லாதவர்களைக் காட்டிலும், அனுதாபப்படுவதற்கான அவசியத்தில் இருப்பவர்களுக்கே நாம் அனுதாபம் காண்பிக்க வேண்டும். சபையில் அறிவில் பலமுள்ளவர்களாகச் சிலரும், அறிவில் பலவீனர்களாகச் சிலரும், சரீரத்தில் பலமுள்ளவர்களாகச் சிலரும், சரீரத்தில் பலவீனர்களாகச் சிலரும், ஆவிக்குரியவற்றில் பலமுள்ளவர்களாகச் சிலரும், ஆவிக்குரியவற்றில் பலவீனர்களாகச் சிலரும் காணப்படுகின்றனர்.

நாம் எந்தளவுக்குப் பலமுள்ளவர்களாகக் காணப்படுகின்றோமோ, அவ்வளவுக்கு மற்றவர்கள் தங்கள் பலவீனங்களை ஜெயங்கொள்வதற்கு நாம் உதவுவது மாத்திரமல்லாமல், அனைவருக்கும் உதவுகிறவர்களாகவும், ஊக்குவிப்பவர்களாகவும் மற்றும் எப்படி அவர்கள் தங்கள் குறைப்பாடுகளை ஜெயங்கொள்ளலாம் என்று சுட்டிக்காண்பிக்கிறவர்களாகவும் காணப்படவேண்டும். எனினும் இந்தச் சுட்டிக்காட்டுதல்களை நாம் மிகவும் வற்புறுத்திடக்கூடாது; ஏனெனில் அநேக ஜனங்கள் தங்கள் சொந்த பலவீனங்களை உணராதவர்களாய் இருக்கின்றனர்; இத்தகையவர்களது, கடினத்தைப் பலமுள்ளவர்கள் சகித்துக்கொள்வதோடுகூட, அவர்களது கண்மூடித்தனமான செயல்கள் சிலவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டும். யாராவது தன் சொந்த பலவீனத்தைக் கண்டு கொள்வானானால், அது பிரயாசம் எடுப்பதற்குரிய அருமையான தூண்டுதலாய் இருக்கும். ஆகையால் புண்படுத்தாமல் அல்லது இடறப்பண்ணாமல், மற்றவர்களுக்கு, அவர்களது பலவீனத்தைக்குறித்துக் கவனத்திற்குக் கொண்டுவருவதே பலமுள்ளவர்களுக்கான கடமையாக இருக்கும். ஒருவேளை பலவீனங்களானது தவறான விதத்தில் அவர்களது கவனத்திற்குக் கொண்டுவரப்படுமானால், அவர்கள் இடறிடுவதற்கு வாய்ப்புள்ளது; ஆனால் ஒருவேளை ஞானமான விதத்தில் கவனத்திற்குக் கொண்டுவரப்படுமானால், அவர்களுக்கு உதவியாயிருக்கும். இது ஜீவியத்தின் சிக்கல்கள் யாவற்றிற்கும் பொருத்தப்படலாம். நம்முடைய சொந்த பலவீனங்களைக் கண்டுகொள்வதற்கும், அதை ஜெயங்கொள்வதற்கும் நாம் எப்போதும் விழிப்புடன் காணப்பட வேண்டும் மற்றும் காரியங்களைச் சகோதரர்களின் கண்ணோட்டத்திலிருந்துப் பார்த்து, நமது உதவியினை அவர்களுக்கு அளித்து, இப்படியாகச் சகோதரருடைய நலனுக்கடுத்தவைகளில் நாம் ஈடுபடுவதற்கும் மற்றும் ஈடுபடுவதிலும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

சபையிலுள்ள மூப்பர்கள், உண்மையில் மூத்தச் சகோதரர்களாக இருந்திட வேண்டும். குடும்பத்தில் மூத்த சகோதரன், தகப்பனுக்கு அடுத்தப்படியாக, மற்ற அங்கத்தினர்களுடைய நலனுக்கடுத்தவைகளுக்காக, உதவுகிறவராகவும், ஆதரிக்கிறவராகவும், தன்னையே தியாகம் பண்ணுபவராகவும் காணப்படுகின்றார். இப்படியாகவே சபையிலும் ஆகும். சத்தியத்தில் முதிர்ந்தவர்கள், சத்தியத்தில் மிகவும் வளர்ந்திருப்பவர்கள், இளையவர்களை ஊக்குவித்திட, ஆதரித்திட, தூக்கிவிட மற்றும் பாதுகாத்திட வேண்டும். இதை நாம் ஒவ்வொரு குடும்பத்திலும், பூமிக்குரிய ஜீவியத்தின் காரியங்களில் காண்கின்றோம். குடும்பத்தில் மூத்தவர்கள் என்பவர்கள், தங்கள் சொந்த சௌகரியங்களை, தங்கள் சொந்த விருப்பங்களைத் தியாகம்பண்ணி இளையவர்களை ஆதரித்து, குடும்பத்தில் உதவுபவர்களாக இருக்கின்றனர்;குடும்பத்திலுள்ள இளையவர்களுடைய நலனுக்கடுத்தவைகளுக்காக, அவர்களது சொந்த சந்தோஷங்களானது விட்டுக்கொடுக்கப்பட வேண்டியுள்ளது. பலமுள்ளவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் இருவருமே தங்களை ஆவிக்குரிய காரியங்களில் பயிற்றுவித்துக்கொள்வதன் வாயிலாகக் கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் வளர்ந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே அப்போஸ்தலனின் கருத்தாய் இருக்கின்றது.

நாம் நமக்கே பிரியமாய் நடவாமல்

“நாம் நமக்கே பிரியமாய் நடவாமல்” எனும் வசனத்தினுடைய பின்பாகமானது கொடுக்கும் கருத்தென்னவெனில்… நாம் கர்த்தருக்கு அர்ப்பணம்பண்ணியுள்ளபோதிலும், பாவங்களிலிருந்து நாம் திரும்பி இருக்கின்ற போதிலும், நாம் பாவஞ்செய்திடுவதற்கான மனநிலையை, மனப்பாங்கைப் பெற்றிருக்கின்றோம். புதுச்சிருஷ்டியினுடைய மனநிலையானது, பாவம் செய்யக்கூடாது மற்றும் சரி எதுவோ அதைச் செய்ய வேண்டும் என்றும், தன்னை “மகா பரிசுத்தமான விசுவாசத்தில்” கட்டியெழுப்ப வேண்டும் என்றும் காணப்படுகின்றது. எனினும் தன்னை “மகா பரிசுத்தமான விசுவாசத்தில்” கட்டியெழுப்ப நாடுகையில், அவன் தன் மனதில் தன்னலத்தின் சில விஷயங்கள் முதன்மையாய் நிற்பதற்கு அனுமதிக்கக்கூடும். தன்னுடைய நலனுக்கடுத்தவைகளை, தன்னுடைய சொந்த கட்டியெழுப்பப்படுதலை, தனது மனதில் அவன் முதன்மையாய்ப் பெற்றிருக்க வேண்டிய அதேவேளையில், கிறிஸ்துவின் ஓர் அங்கத்தினனாக, தான் பொறுப்பினைப் பெற்றிருப்பதினால், அவன் தன்னைத்தான் பிரியப்படுத்திடுவதற்கு மாத்திரம் நாடாமல், தான் மற்றவர்களுக்கு ஊழியம் புரியத்தக்கதாக, தகுதியான மற்றும் சரியான காரியங்களில் சிலவற்றை விட்டுக்கொடுப்பதற்கு விருப்பம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதையும் அவன் நினைவில் கொள்ள வேண்டும் மற்றும் இப்படியாக, கர்த்தருடைய செயலினால் படிப்பினை ஒன்றைப் பெற்றுக்கொள்கின்றான். உதாரணத்திற்கு ஊழியக்காரியங்களைப் பற்றி ஆலோசிக்கப்படுகையில், ஆவிக்குரியவற்றில் மிகவும் வளர்ச்சியடைந்திருப்பவர்கள் விட்டுக்கொடுக்கிறவர்களாக இருக்கலாம். மேலும் அவர்கள் தங்கள் [R4928 : page 439] சொந்த விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் பார்த்து, சகோதரருக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் விதத்தில் தங்கள் சொந்த காரியங்களை ஒழுங்குப்படுத்திக்கொள்ள நாடிட வேண்டும் என்பது அப்போஸ்தலனுடைய புத்திமதியாகத் தெரிகின்றது.

கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின பல்வேறு சபையார் மத்தியில், வேதமாணவர்களின் சபைகளில், மிகவும் வளர்ச்சியடைந்திருப்பவர்கள் மத்தியில், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளும், மற்றவர்களிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளும் மனநிலைக் காணப்படுகின்றது. இந்த மனநிலைக்கு எதிராக போராடிடுவதற்கு நாங்கள் பிரயாசம் எடுத்திருக்கின்றோம். குறைவான அறிவுடையவர்கள் சிலர் காணப்படுவார்களானால், கற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்பினை அவர்கள் பெற்றுக்கொள்ளட்டும். அவர்கள் நல்லதும், கடினமானதுமான கேள்விகளை எழுப்புவார்களானால், அது மிகவும் நல்லது. கூட்டங்கள் நடத்தப்படும் நேரம் மற்றும் இடம் தொடர்புடைய விஷயத்தில், நாம் நமக்கு மாத்திரம் பிரியமாய் நடவாமல் இருப்போமாக. கடந்து வந்து கலந்துகொள்வதற்கு மிகவும் சிரமமான இடங்களில் கூட்டங்களை நடத்திட சிலர் விரும்பிடுவதை நாம் காணலாம்; ஆனால் நாம் சுயநலமாக [R4928 : page 440] அல்லது தன்னலத்தை நாடுகின்றவர்களாய் இராமல், மாறாக பெரும்பான்மையானவர்களின் நலனுக்கடுத்தவைகளில், அவர்களைப் பிரியப்படுத்திட நாடிட வேண்டும். ஒருவேளை இந்த ஆவியானது சபைகளில் காணப்படுமானால், அதிகமான வளர்ச்சிக் காணப்படும்; மற்றும் எல்லாக் கர்த்தருடைய ஜனங்களும் இந்தப் படிப்பினையைக் கற்று வருகின்றனர்.

இதே கருத்தானது, சபையின் ஊழியக்காரர்களுக்கும் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. மூப்பர்கள் பின்வருமாறு: அதாவது நாம் ஒன்றுகூடி, நமக்குள்ளாக பல்வேறு காரியங்களைக்குறித்துக் கலந்தாலோசித்திடலாம் என்று கூறிடுவதற்கு ஏதுவான ஒரு மனநிலைக் காணப்படுகின்றது. இது தவறான நோக்கத்தின் பேரில் செய்யப்படுகிறதில்லை. இப்படியாக எப்போதாவது செய்வது ஞானமாய் இருக்கலாம். ஆனால் கர்த்தருடைய ஊழியத்தில் உதவிக்காரர்களும் இணைந்துகொள்ளத்தக்கதாக பொதுவாகவே மூப்பர்கள், உதவிக்காரர்களோடு கூடி, அவர்களை நம்பிக்கையோடு நடத்திட வேண்டும்; அனைவருமே ஒன்று கூடிடுவது நலமானதாய் இருக்கும் மற்றும் சபையிடமிருந்து இரகசியங்களை வைத்துக்கொள்வதற்குப் பதிலாக பெரும்பான்மையான காரியங்களில் சபையாருக்கு அனைத்தையும் தெரியப்படுத்திடுவது நலமாயிருக்கும். சில சமயங்களில் சில விஷயங்கள் வெளிப்படையாக அறிவித்திட முடியாதுதான்; எனினும் சபையில் நேரமும், ஆற்றலுமுள்ள யாவருக்கும் ஆதரவாய்க் காணப்படத்தக்கதாக மூப்பர்களும், உதவிக்காரர்களும் தங்கள் கூட்டங்களை ஒழுங்குப்படுத்திட நாடிட வேண்டும்; இதனால் எவ்விதமான வகுப்பினர்-பிரிவும் இல்லை என்று சபையார் எண்ணிடுவார்கள்.

நூற்றாண்டுகள் முன்னதாக, குருமார் வகுப்பார் என்பவர்கள் சபையில் ஒரு தனிப்பட்ட வகுப்பார் என்றும், மற்றவர்கள் சபையின் குழந்தைகளாக அல்லது பிள்ளைகளாக இருக்கின்றனர் என்றுமுள்ள கோட்பாடானது கத்தோலிக்க நண்பர்களால் துவக்கப்பட்டது. இந்தக் கோட்பாடானது பிற்பாடு புரோட்டஸ்டண்டினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படியாக குருமார்கள் தங்களைத் தாங்களே ஒரு தனிப்பட்ட வகுப்பாராக ஏற்படுத்தி வைத்துக் கொண்டார்கள் என்று நாம் பார்க்கின்றோம். கர்த்தர் சபையில் சிலரை மூப்பர்களாக ஏற்படுத்திவைத்துள்ள காரியமானது, அவர்களைப் பிரித்து வைக்கிறதில்லை. நாம் அனைவரும் ஒரே வகுப்பாரே. ஆகையால்தான் கண்ணானது, காலை நோக்கி: “நீ எனக்கு வேண்டுவதில்லை” என்று சொல்லிடமுடியாது என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். ஒவ்வொரு அவயவமும் கவனிக்கப்பட வேண்டும்; மற்றும் ஒருவரும், மற்றவர்கள் மீது ஆளும் ஒரு ஸ்தானத்தினை எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவர் மேலான ஊழியத்தினை ஒருவேளைப் பெற்றிருப்பாரானால், அதை அவர் மற்றவர்களுக்காகப் பயன்படுத்திட வேண்டும்; ஒருவேளை ஒருவர் முதன்மையற்ற ஊழியத்தினைப் பெற்றிருப்பாரானால், அதை அவர் பொதுவான நலனுக்காகப் பயன்படுத்திட வேண்டும். ஆகையால் நாம் அங்கத்தினர்களாகக் காணப்படும் அபிஷேகிக்கப்பட்டவரின் சரீரத்தினுடைய, முழுமையான வளர்ச்சியினை அனைவரும் அடைவது வரையிலும், சபையானவள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதற்காகவும் கொள்கைகளானது ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்படக்கூடாது; ஆனால் சுயாதீனங்களும், தனிப்பட்ட உரிமைகளும் அடிக்கடியும் மற்றும் தேவனைப் பிரியப்படுத்துவதற்காகவும், மற்றவர்களுடைய நலனுக்கடுத்த காரியங்களுக்காகவும் பொருட்படுத்தப்படாமல் இருக்கலாம். கொள்கையை ஆதரிக்க அப்போஸ்தலனாகிய பவுல் இயன்றமட்டும் போராடுவதற்கு ஆயத்தமாய் இருந்தார் (கலாத்தியர் 2:5-11). கிறிஸ்துவுக்காகவும், சபைக்காகவும் என்று பூமிக்குரிய உரிமைகளையும், சிலாக்கியங்களையும் பலிச் செலுத்திடும் விஷயத்தில், அப்போஸ்தலன் நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்கு அடுத்தப்படியாகக் காணப்பட்டார் மற்றும் முழுச்சபைக்கும் சிறந்த உதாரணமாய்த் திகழ்ந்தார்.

“தேவக்கட்டளைகள் எத்துணை ஞானமானவைகள்;
அவரது கற்பனைகள் எத்துணை மெய்யானவைகள்!”