R4472 (page 277)
சபையினுடைய சுயாதீனங்களையும், அதிகாரத்தையும் குறித்தும் மற்றும் மேய்ப்பர்கள், மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் என்பவர்கள் சபையினுடைய வேலைக்காரர்களே ஒழிய, அவளை ஆளுகிறவர்களல்ல என்பது குறித்தும் சுட்டிக்காட்டியதில் சபைக்கு நாங்கள் கொண்டிருந்த எங்களது உண்மைதான், மூப்பர்கள் மற்றும் வழிநடத்துபவர்களில் சிலர் வேதாகமப் பாடங்களினுடைய 6-ஆம் தொகுதியை எதிர்ப்பதற்குக் காரணமாக இருக்குமோ என்று நாங்கள் எண்ணினதுண்டு. சபையினுடைய சுயாதீனங்கள் வழிநடத்துபவர்களால் பறிக்கப்பட்ட மற்றும் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கென இத்தகைய வழிநடத்துபவர்கள் “வாட்ச் டவர்” வெளியீட்டுகளின் வாயிலாக – கர்த்தருடைய மந்தைக்குரிய சரியான பாதையை மந்தைக்குத் தெரிவித்திடும் மேய்ப்பனின் சத்தத்தை மந்தைக் கேட்காதப்படிக்குத் தடைப்பண்ணிட முற்பட்டுள்ள சில சந்தர்ப்பங்களானது எங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யாரையும் நியாயந்தீர்ப்பது எங்கள் காரியமல்ல. “கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார்.” அனைவரும் எந்தளவுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளின் போதனைக்குத் தனிப்பட்ட விதத்திலும் மற்றும் சபையாராகவும், சபைகளாகவும் நெருக்கமாய்த் துல்லியமான இசைவிற்குள்ளாக வருவார்களோ, அவ்வளவுக்கு நம்மீது காணப்படுகின்றதான கடுமையான சோதனைகளில் நிற்பதற்கு ஆயத்தமாகவும், நிற்பதற்கு முடிகிறவர்களாகவும் காணப்படுவார்கள் என்று எங்கள் செல்வாக்கிற்கு உட்ப்பட்டவர்கள் யாவருக்கும் முன்னெச்சரிக்கை வழங்குவதே எங்கள் காரியமாய் இருக்கின்றது.
இந்தச் “சோதனைகாலத்தின்” விசேஷித்த சோதனைகளானது, வழிநடத்துபவர்களுடன் துவங்கி, இருளினின்று தேவனுடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டவர்கள் மத்தியில் அதிகமதிகமாய்ப் பெருகிடும்
என்பது எங்களுடைய புரிந்துகொள்ளுதலாய் இருக்கின்றது என்று நாம் சொல்ல விரும்புகின்றோம். பிற்பாடு அந்தச் சோதனையானது, பெயர்ச் சபைகளில் குருமார்கள் மீதும் மற்றும் சாதாரண வகுப்பார் மீதும் மற்றும் இறுதியில் ஜனக்கூட்டத்தார்
மீதும் கடந்துவரும். “நான் மூன்று வருஷக்காலமாய் இரவும், பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டு வந்ததை நினைத்துக் கொள்ளுங்கள்” எனும் அப்போஸ்தலனின் வார்த்தைகளானது, எங்களது
செல்வாக்கு காணப்படுகின்ற யாவரிடத்திலுமான எங்களது மனவுணர்வுகளை நன்கு பிரதிபலிக்கின்றதாய் இருக்கின்றது (அப்போஸ்தலர் 20:31).