R4770 (page 62)
எபேசியர் 4:29
கெட்ட வார்த்தை என்பது நற்கீர்த்திக்குப் பதிலாக துர்க்கீர்த்தியினை அல்லது துர்ச்செய்தியினைப் பரப்புவதாகும். நம்முடைய ஆதார வசனமானது, சாதாரண உரையாடல் சம்பந்தப்பட்ட கெட்ட வார்த்தையினைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படலாம். நம்முடைய மனங்களானது, அவைகளை நாம் கட்டுப்படுத்தவில்லையெனில் மற்றும் குறிப்பிட்ட எல்லைக்குள்ளாக வைக்கவில்லையெனில், அவை நம்மிலும், மற்றவர்களிடத்திலும், சகலவிதமான பிரச்சனைக்குள் நம்மை உள்ளாக்கிடும்; ஆனால் நம்முடைய நாவுகளானது, நம்முடைய மனங்களைக்காட்டிலும் அதிகமான பாதகத்தைச் செய்திடும். நாம் சிந்திக்கிற விஷயங்கள் நம்மை மாத்திரமே பாதிக்கின்றதாய் இருக்கும்; ஆனால் நம்முடைய நாவுகளானது காரியத்திற்குள் நுழையும்போது நம்முடைய மனங்கள் அசுசிப்படுவதோடு மாத்திரமல்லாமல், தொற்றுநோய் ஏற்படுகின்றது, நச்சுத்தன்மை ஏற்படுகின்றது; ஏனெனில் நாவானது காரியத்தினைச் சுற்றிலும் பரப்பிவிடுகின்றது. விஷயம் உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருப்பினும், அதன் தாக்கம் சீரழிவாகவும், இழிவுப்படுத்துவதாகவும், சிலசமயம் நல்லொழுக்கமற்றுப் போவதற்கு ஏதுவானதாகவும் இருக்கும்.
உலகத்தார் மத்தியில் மாத்திரமல்லாமல், கர்த்தருடைய ஜனங்கள் மத்தியிலும் சிறுசிறு சம்பவங்களை விவரிக்கும் அல்லது குற்றங்கள் எடுத்துரைக்கும் மனப்பான்மைக் காணப்படுகின்றது; இவைகள் எப்போதும் பாவகரமானவைகளாக இல்லாமல் இருந்தாலும், தீமையின் முளைகள் முளைத்தெழுப்பப் பண்ணிடுவதற்கு ஏதுவானவைகளாக இருக்கின்றது. இதன் அடிப்படையில்தான், கெட்ட வார்த்தைகள் ஒன்றும் நம் வாயிலிருந்து புறப்படாமல் இருப்பதாக என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். ஒருவேளை ஏதேனும் சீரழிக்கும் தகவல் நம் கவனத்திற்குத் துரதிருஷ்டமாக வந்திருக்குமானால், அது மேலும் பரவாதபடிக்கு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்குக் கேடு உண்டுபண்ணும் விதத்தில் நாவைப் பயன்படுத்துவது என்பது சுபாவ மனதினுடைய தன்மையா அல்லது இதற்கும், தீய ஆவிகளுக்கும் சம்பந்தம் உள்ளதாவென நாங்கள் சிலநேரம் சிந்தித்துப்பார்ப்பதுண்டு.
அப்போஸ்தலன் கட்டளையிட்டது போன்று, நாம் ஆகாத சம்பாஷணைகளை விட்டுவிடுவோமாக; அவைகளைத் தவிர்த்திடுவோமாக; மற்றும் பக்திவிருத்திக்கு ஏதுவானவற்றை மாத்திரம் பற்றிக்கொள்வோமாக; “பக்தி விருத்தி எனும் வார்த்தையானது, ஒருவரையொருவர் கட்டியெழுப்புதல் எனும் அர்த்தத்தினை உடையதாய் இருக்கின்றது.