R3769
தீமை பேசுதல் மற்றும் பொல்லாத சம்சயங்கள்
பெரோயா வகுப்புகளின் கூட்டத்தலைவர்கள், ஒவ்வொரு கேள்வியையும் அதற்கே உரிய வரிசையின்படி கலந்தாராய்வதிலிருந்து மாறாமல் கலந்தாய்வைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் பிரயாசப்பட வேண்டும். இல்லையேல் பின்னர் இடம்பெறும் கேள்விகளானது பகுதி, கலந்தாராயப்பட்ட நிலையிலும், முற்றிலும் உள்வாங்கப்படாத நிலைமையிலும், திருப்தி ஏற்படாத நிலைமையிலும் விடப்பட்டிருக்கும். முடிந்தமட்டிலுமான பிரயோஜனம் காணப்பட வேண்டுமெனில், வழிநடத்துபவர் முழுப்பாடத்தையும் படித்திருக்க வேண்டும் மற்றும் சபையாரிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனும் அவனுக்கு அல்லது அவளுக்குக் கொடுக்கப்பட்ட பாகத்தினைப் படித்திருக்க வேண்டும். மேற்கோளிடப்பட்டிருக்கும் டாண்களும் (volume), புத்தகங்களும் மற்றும் டவர் கட்டுரைகளும் (ரீப்பிரிண்ட்ஸ்) கையில் காணப்பட வேண்டும்.