நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R1475 (page 358)

நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்

THOU PREPAREST A TABLE BEFORE ME

கர்த்தர் பந்தி ஒன்றினை ஆயத்தப்படுத்துகின்றார் என்றால், அதனை பற்றின பல காரியங்கள் குறித்து நமக்கு உறுதியே அதென்னவெனில்: முதலாவதாக, அது சுத்தமானதாக இருக்கும்; இரண்டாவதாக, அது நல்லதாக இருக்கும்; மூன்றாவதாக, அது முறையாயும், திரளாயும் மற்றும் அருமையாயும் இருக்கும். சத்தியமானது இவ்வளவு கவனம்செலுத்தி விசுவாச வீட்டாருக்கு அச்சு, பேனா அல்லது மேடை மூலம் முன்வைக்கப்படும் எங்கும், கர்த்தருடைய ஆவியானது கிரியைசெய்து, காரியத்தினை வழிநடத்தி, மேற்பார்வையிடுகின்றது என்பதில் நமக்கு உறுதியே. தீர்க்கத்தரிசியான ஏசாயா, “போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும், அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை” என்று கூறினபோது, இப்பொழுது பெயர்க்கிறிஸ்தவ ஜனங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள பிரபலமான இறையியல் பந்தியின் தற்போதைய நிலைமையைச் சித்தரித்து விவரித்துள்ளார் (ஏசாயா 28:8). கடந்த பல நூற்றாண்டுகளாக அவர்கள் மனித பாரம்பரியம் எனும் கவலைக்கிடமான உமியை உண்டுவந்திருக்கின்றனர்; இப்போது எதிர்விளைவானது ஏற்பட்டு, அவர்கள் தீட்டானவைகளை வாந்திப்பண்ணுகின்றனர் மற்றும் அவர்களது பந்திகளானது அசுத்தங்களினால் நிரம்பிக் காணப்படுகின்றது.

பழையதும், மாசுள்ளதுமான பந்திகளின் நிமித்தமான வெறுப்பினால், அவைகளினின்று திரும்பிடுபவர்கள் – புதிய பாரம்பரியங்கள் மற்றும் மனித ஊகங்களுடைய அநேகம் பந்திகளினிடத்திற்கு உடனடியாக வரவேற்கப்படு கின்றனர். இவைகள் அனைத்திலும், சபையினுடைய மாபெரும் எதிராளியானவன் – ஜனங்களைச் சென்றடைவதற்கான மிகவும் ஆற்றல்மிக்க இரண்டு பிரதிநிதியாகிய பத்திரிக்கை மற்றும் பிரசங்க மேடை ஆகியவற்றின் மாபெரும் செயல்விளைவினைப் பயன்படுத்தி, தனது கைத்தேர்ந்த சூழ்ச்சிகள் மற்றும் தந்திரங்கள் அனைத்துடன் கடுமையாகவும், உண்மையாயும் வேலை புரிந்துகொண்டிருக்கின்றான்.

இத்தகைய பத்திரிக்கைகளானது, தெய்வீக வெளிப்படுத்தல் சார்ந்த காரியங்கள் விஷயத்தில், மனித அபிப்பிராயங்களை வெளிப்படுத்திடுவதற்கான வழி / ஊடகம் மாத்திரமே என்றும், ஒவ்வொரு தனி மனிதனும் அவற்றிலிருந்து தான் உண்மை என்று பார்க்கக்கூடியதைப் பிரித்தெடுத்து, மற்றவைகளைப் புறந்தள்ளிட வேண்டும் என்றுமுள்ள – பிரபலமான கருத்தானது மதரீதியான இதழாசிரியர்கள் மத்தியில் பெருகிக்கொண்டு வருகின்றது. ஆனால் துல்லியமாய் இதைத்தான் வாசகர்களாலும் மற்றும் பெரும்பாலும் இத்தகைய பத்திரிக்கைகளினுடைய இதழாசிரியாகளாலும்கூடச் செய்யமுடியவில்லை மற்றும் மிகுந்த குருட்டுத்தன்மைக்கும், அடர்த்தியான இருளுக்கும் ஏதுவாய்ப் பரவலான குழப்பம் மாத்திரமே அதிகரித்துள்ளது மற்றும் இப்படியாக எதிராளியானவனுடைய நோக்கமானது நிறைவேறுகின்றது.

பொதுவாக போதகராகும் ஒவ்வொரு மனுஷனும் அவன் உணருகின்றானோ, இல்லையோ, அவன் தேவனிடத்தில் ஆழமான பொறுப்பைக் கொண்டவனாகுகின்றான். “ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்” (மத்தேயு 5:19).

தம்முடைய வார்த்தைகளில் வழிக்காட்டுதல்களைக் கொடுத்துள்ளதான வீட்டின் மாபெரும் தலையானவருக்குக் கீழ்ப்படிதலுள்ள கைகளினால் மற்றும் முழுக்க ஒப்புக்கொடுக்கப்பட்ட கைகளினால் மற்றும் ஜாக்கிரதையுள்ள கைகளினால் – பரிமாறப்படாத எந்தப் பந்தியும், விசுவாச வீட்டார் வரவேற்கப்படுவதற்குப் பொருத்தமானதல்ல. வீட்டாருக்கு ஊழியம் புரிந்திடுவதற்குத் தேவனால் அருளப்பட்டிருப்பவர்களுக்கும், தாங்கள் எதைத் தெரிவிக்கும்படிக்கு அவர் விரும்புகின்றார் என்று அறியும்படிக்கு (அவரது வார்த்தைகளை ஆராய்பவர்களுமானவர்களுக்கும்) காவலிலே தரித்திருப்பவர்களுமானவர்களுக்கும் (ஆபகூக் 2:1) தேவன் கூறுவதாவது: “நீ தரிசனத்தை (திவ்விய சத்தியத்திலிருந்து நீங்கள் கண்டிருப்பவைகளை) எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படி பலகைகளிலே தீர்க்கமாக வரை” (ஆபகூக் 2:2); அதாவது “கடந்தோடுகிறவன்” – பரிசிற்காக ஓடுகிறவன் – “வாசிக்கும்படி,” அதை முறையாக, ஒழுங்காக முன்வைத்தலாகும். அனைத்து மனிதர்களும் வந்து, சத்தியத்தைத் தீர்க்கமாக / தெளிவாக வைத்திடுவதற்கு அழைக்கப்படவில்லை என்பதையும், இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் வகுப்பாரில் சிலர், மீதமானவர்கள் யாவருடைய நன்மைக்காக அதைச் செய்யும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் கவனியுங்கள். வேதவாக்கியங்களில் அனைவராலும் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் முடிகின்ற நிலையிலுள்ள அநேகம் மேற்பரப்புச் சத்தியங்கள் காணப்படுகின்றன; மேலும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டும், தெளிவற்ற நிலையில் வெளிப்படுத்தப்பட்டும் காணப்படும் அநேகவற்றை உள்ளடக்கின தெய்வீகத் திட்டத்தினை முறைப்படி ஒழுங்குப்படுத்தி, அதன் ஆச்சரியமான விவரங்களை வெளிக்கொண்டுவருவது, நியமிக்கப்பட்டுள்ள காலத்திற்கென்று வைக்கப்பட்டுள்ளது. அந்த நியமிக்கப்பட்ட காலம் வருகையில், திவ்விய சத்தியத்தினுடைய முறைப்படியான இசைவினைக் காணத்தக்கதாக, உண்மையாய்க் கவனிப்பவர்கள் வழிநடத்தப்படுகின்றனர் – அதைக்குறித்து அனுமானம் பண்ணுவதற்கோ அல்லது அதைக்குறித்து ஊகம்பண்ணுவதற்கோ அல்ல, மாறாக தெளிவாய்க் காணத்தக்கதாக வழிநடத்தப்படுகின்றான் மற்றும் இதனால் அவன் மற்றவர்களுக்குத் தெளிவாயும், காரணகாரியத்திற்கு உட்பட்ட நிலையிலும், வேதவாக்கியங்களின் அடிப்படையிலும் விளக்க முடிகிறவனாகுகிறான்; பின்னர் இப்படியாகக் காண்கின்றவன், தனக்குக் கர்த்தரால் [R 1475 : page 359] தெளிவுப்படுத்தப்பட்டவற்றை மற்றவர்களுக்குத் தெளிவுப்படுத்துவதற்குரிய சிலாக்கியமுடையவனாகுகிறான். இப்படிப்பட்டவன் இது விஷயத்தில் தனக்கிருக்கும் திறமையையும் மற்றும் இன்னுமாக தேவனைப் பற்றின முழுமையான அறிவினால் பரிசுத்தவான்களை ஆசீர்வதிப்பதற்கும் மற்றும் அவர்கள் மிகுந்த உண்மையுடன் காணப்படத்தக்கதாக, அவர்களை ஊக்குவிப்பதற்கும் மற்றும் புத்திசொல்லுவதற்கும் ஏங்குகின்றதான வல்லமையுள்ள அன்பையும் மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளையும் – சத்தியத்தைத் தெளிவாய் முன்வைப்பதற்குரிய, தனக்கான கர்த்தருடைய அழைப்பாய் இருக்கின்றது என்று கருதிடலாம்.

ஆனாலும் இப்படிப்பட்டவன் – சத்தியத்தினை தெளிவற்றதாக்குவதற்கு இல்லை, மாறாக அதைத் தெளிவாய் முன்வைத்திடுவதே பணியாக இருக்கின்றது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஒரு மனுஷனிடத்தில் தெளிவாய் முன்வைத்திடுவதற்குச் சத்தியம் இல்லாமல், இன்னுமாக சத்தியத்திற்காக தேடிக்கொண்டு மாத்திரம் அவன் இருப்பானானால், மற்ற மனங்களைக் குழப்பிடுவதற்கு ஏதுவான தனது முரண்பாடான மற்றும் திருத்தம் பெறாத கருத்துக்களை அவன் வெளிக்கொணர முயற்சிப்பது என்பது, அவன் மாபெரும் தவறைச் செய்வதாகவே இருக்கும். இத்தகையவன் காரியங்களைத் தெளிவாய்ப் பார்த்து மற்றும் இப்படியாய் மற்றவர்களுக்குப் போதிக்க தகுதியுள்ளவனாகுவது வரையிலும், சீஷனுக்குரிய, கற்றுக்கொள்பவனுக்குரிய சரியான நிலையினைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவன் உண்மையுள்ள மாணவனாகவும், தேவனுக்கு முன்பாக தன்னை உத்தமனாக நிறுத்தும்படிக்கு முயற்சிக்கிறவ னாகவும்/கற்கிறவனாகவும் இருப்பானானால், விரைவில் ஏதோ ஒரு வழியில் மற்றவர்களுக்குச் சத்தியத்தினை அறிவிக்கக்கூடிய சிலாக்கியத்தினை அனுபவிப்பவனாகவும், அப்படிச் செய்வதினால் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டவனாகவும் இருப்பான்.

திருத்தம் பெறாத, சரியாக விவரிக்க முடியாத கருத்துக்களை அர்ப்பணிக்கப்பட்டவர்களில் எவரும் அச்சடிக்கத் துரிதப்பட்டு, மற்றவர்களுடைய பாதையில் தடுக்கலின் கற்களாகாதிருப்பார்களாக. நீங்கள் பெற்றுக்கொண்டதும் மற்றும் உங்களுக்குத் திருப்திகரமாகக் காணப்படுவதுமான சத்தியத்தினை, பசியோடு இருக்கும் மற்றப் பரிசுத்தவான்களுக்கு முன்வைத்திட நாடுங்கள்; பந்தியைச் சுத்தமாய் வைத்துக்கொள்ளுங்கள்; வீணான ஊகங்களைத் திரளாய்ப் பரப்பிடுவதன் மூலம், உங்களது குறைவான அறிவிற்கு ஈடுசெய்யாதீர்கள். வேறே நிலைமையிலுள்ள திரளானவைகளைப் பார்க்கிலும், சுத்தமான பந்தியிலிருந்துள்ள சிறு துண்டுகள் சிறந்ததாய் இருக்கும். போகப் போக இந்தச் சிறு துண்டுடன், வேறு துண்டுகள் கொடுக்கப்படும் மற்றும் ஏற்றகாலத்தில் தெய்வீகத் தயாளத்தின் ஐசுவரியம் உணர்ந்துகொள்ளப்படும்.