சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5698 (page 166)

சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்

GENTLENESS A CHARACTERISTIC OF THE CHRIST

“கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல் எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதக சமர்த்தனும், எதிர் பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கிறவர்களுமாயிருக்க வேண்டும்.” – (2 தீமோத்தேயு 2:24,25)

இந்த நமது தலைப்பு வசனத்தை அப்போஸ்தலர் பவுல், சபையின் மூப்பர் தீமோத்தேயுவுக்கு எழுதினார். கிறிஸ்துவின் சரீரத்திற்குரியவர்களாகிய அனைத்து கர்த்தருடைய ஜனங்களும் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள். எனினும் அவர்களெல்லாம் ஊழியர்கள் – பந்தத்தில் கட்டப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் ஊழியர்கள். ஒவ்வொரு உண்மையான மகனும் நீதியான, அன்பான தனது பிதாவின் விருப்பத்தின்படி ஊழியம் செய்ய விரும்புவான். உண்மையுள்ள எந்த ஒரு ஊழியக்காரனும், தன்னுடைய எஜமானின் விருப்பத்திற்கிசைய அதுவும் விசேஷமாக ஒரு உயர்ந்த தகுதியுள்ள எஜமானனுக்கு ஊழியம் செய்ய விரும்புவான். பரமபிதாவுக்கு விசேஷித்த குமாரனாயிருந்த நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பிதாவின் விருப்பத்தின்படி அவரது சித்தத்தை நிறைவேற்றும்படி தம்மைத்தாமே எல்லாருக்கும் அடிமையாக்கினார்.

நமது வசனம் எந்தவொரு தேவனுடைய ஊழியக்காரனுக்கும் அவர் சபையில் பொறுப்புடையவராக இருந்தாலும் இல்லாதிருந்தாலும், எந்த ஒரு கிறிஸ்துவின் சபையின் அங்கத்தினருக்கும் பொருந்தும். இது சபையில் உள்ள எல்லாருக்கும் பொருந்தக்கூடிய ஒரு கட்டளையாக இருக்கிறது. ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட ஒவ்வொரு பிள்ளையும் வேத வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள பாலினம் முதலான எல்லைக்குட்பட்டு போதிக்கவேண்டும். “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும் அவர் என்னை அனுப்பினார்.” (ஏசாயா 61:1) தீர்க்கதரிசியின் இந்த வசனங்கள் தலை மற்றும் சரீரம் அடங்கிய கிறிஸ்துவின் ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் பொருந்தும்.

சத்தியத்தை கொடுக்கும் சரியான முறை

கர்த்தர் அறிவிக்கும்படி நமக்கு கொடுத்திருக்கிற நற்செய்தி ஜனங்கள் மேல் திணிக்கக்கூடிய ஒன்றல்ல. கர்த்தருடைய உண்மையான ஊழியர்களாக அவரது ஏற்பாடுகளுக்கு இசைவாக இருப்பதற்கு நாம் வாதிடவோ, சண்டையிடவோ, போட்டியிடவோ கூடாது. நாம் சாந்தத்துடன் போதிக்க வேண்டும். உயர்ந்த மனப்பான்மையுடனோ, நமக்கு அதிகமாக தெரியும் என்பதை காண்பிக்கும்படியாகவோ போதிக்கக்கூடாது. நமது செய்தி “கேட்க காதுள்ளவர்களுக்கு” மட்டுமே. அவர்களை கேட்கப் பண்ணுவதற்கு ஜனங்களிடம் நம்மை நாம் பலவந்தம் பண்ணவோ, அழைக்காமல் தலையிடவோ கூடாது. நமது விசுவாசத்தின் செய்தியை அறிவிக்க நாம் நமது நன்மைகளை விட்டுக்கொடுக்க, தயாராயிருந்தாலும், நாம் அதை செய்யும்போது நாம் சச்சரவு செய்பவர்களாகவோ, சண்டையிடுகிறவர்களாகவோ, வன்மம் உடையவர்களாகவோ இருக்கக்கூடாது.

சத்தியத்தை சர்ச்சைக்குரியதாக அளிக்கிறவர்களை நாம் கிறிஸ்துவின் சபையின் அங்கங்கள் அல்ல என்று நாம் கூறவேண்டாம். ஆனால் அவர்கள் சரியானபடி கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. அவர்கள் அன்பு என்கிற குணத்தை தேவையான அளவுக்கு அபிவிருத்தி செய்யவில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் பரம ஞானத்தில் குறைவுபடுகிறார்கள். ஒரு சமயத்தில் நமது ஆண்டவரின் சீஷர்களில் இருவர் சமாரியா பட்டணத்திலிருந்து திரும்பி வந்து ஆண்டவரிடம் அந்த பட்டணத்தார் தங்களுக்கு உணவு (விலைக்கு ) தரவில்லை, ஆகையால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிடலாமா என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “நீங்கள் இன்ன ஆவி உடையவர்கள் என்பதை அறியீர்கள்; மனுஷ குமாரன் மனுஷனுடைய ஜீவனை அழிப்பதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்” என்றார். (லூக்கா 9:55,56) இன்றைக்கும் கூட சிலர் ஒவ்வொரு [R5699 : page 166] சந்தர்ப்பத்திலும் சச்சரவு பண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். எனினும் இந்த சுபாவம் அவர்களை தேவனுடைய பிள்ளைகள் இல்லை என்று நிரூபிக்காது. அவர்கள் சரியான மனோபாவம் உள்ளவர்கள் அல்ல என்பதையும் இதில் முன்னேற்றம் தேவை என்பதையும் நிரூபிக்கிறது.

தேவனை சந்தோஷிப்பிக்கும் காரியங்கள் வேதத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளன. கர்த்தரின் சீடர்கள் எல்லாரிடமும் சாந்தமாய் இருக்கவேண்டும். சபையில் உள்ள சகோதரர்களிடம் மாத்திரமல்ல, மற்ற எல்லாரிடமும் சாந்தமாய் இருக்கவேண்டும். அவர்கள் சச்சரவு பண்ணுகிறவர்களாயும், வாக்குவாதம் பண்ணுகிறவர்களாயும் இல்லாமல் நீடிய பொறுமையுடன் மற்றவர்களது கருத்துக்களை கவனித்து முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவனுக்கு விளக்கமளித்து தன்னை தற்காத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதற்கான நேரங்கள் இருக்கும். தனது கருத்து சரியானது என்று வாதம் செய்ய நியாயமான ஒரு வழி உண்டு. இதற்கு முற்றிலும் மாறானது சச்சரவும் வலுச்சண்டைக்கு முனைகிறதும் ஆகும்.

சத்தியத்தை மற்றவர்களிடம் எடுத்துச் செல்ல முயற்சிக்கும்போது ஒவ்வொருவரிடமும் நமது விசுவாசத்தை சொல்ல வேண்டியதில்லை என்பதை நாம் நினைவு கூறவேண்டும். “உங்கள் முத்துக்களை பன்றிகள் முன் போடாதேயுங்கள்.” உங்கள் முத்துக்களை அவர்கள் மதிக்கமாட்டார்கள். அவைகளை மதிக்காததால், உங்களுக்கு தீங்கு செய்ய விரும்புவார்கள். ஆனால் சச்சரவு பண்ணாமல் இருக்கும்போது ஜீவ வார்த்தைகளை பற்றிக்கொள்ள நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சத்தியம் தாக்கப்பட்டு, ஆத்துமா ஆபத்தில் இருக்கும்போது, [R5699 : page 167] அப்போஸ்தலர் கட்டளையிட்டதுபோல, நாம் “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய் போராட வேண்டும்.” (யூதா 3) அதற்காக நாம் சண்டையிடுகிறவர்களாகவோ சர்ச்சைக்குரியவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதல்ல. நாம் தகுதியான சமயத்தில் சத்தியத்தை நிதானமாகவும் சாந்தத்தோடும் தாழ்மையோடும் அறிவிக்க தயாராயிருக்கவேண்டும். மிகுந்த ஆர்வத்துடனும் வைராக்கியத்துடனும் செய்யவேண்டும். ஏனெனில் இது நமது கடமையாய் இருக்கிறது. சத்திய செய்தியை யாருக்கு அளிக்கிறோமோ, அவர்கள் சரியான மனோபாவத்தில் இருந்தால் அவர்கள் அதை விரும்புவார்கள். ஆகையால் சத்தியத்திற்காகவும் அதன் நன்மைக்காகவும் நமது ஜீவனை கொடுக்கவும் தயாராயிருப்பது சரியானதாக இருக்கிறது.

நாம் எதிர்க்கப்படும்போது, மிகவும் சாந்தமாகவும், அமைதியாகவும் சுய கட்டுப்பாட்டுடனும் இருந்தோமானால், நாம் பெற்றிருக்கிற செய்தியை சிறப்பாக பாதுகாக்கவும் கொடுக்கவும் முடியும். எதிராளி உண்மையானவராகவும் நேர்மையானவராகவும் இருந்தால் நமது ஆவிக்கும் எதிராளியின் ஆவிக்கும் வித்தியாசம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு சத்தியத்திற்கான நமது வாதம் அதைக் கேட்கிறவர்களின் மனதில் பலமாக இருக்கும். ஒருவர் சுய கட்டுப்பாட்டை இழந்து வாக்குவாதம் பண்ணுகிறவராகவும், சண்டை பண்ணுகிறவராகவும் மாறினால், தன் காரணத்தினாலேயே தோல்வியடைவார். ஒருவர் தன் தலைமையானவரை இழக்கவே கூடாது. சொல்லாமல் விடப்பட்ட நல்ல காரியங்களையும், குரல் மற்றும் பேசும் தன்மை மூலமாக, தான் ஆண்டவரின் ஆவியின் மூலம் இயக்கப்படவில்லை என்பதையும் வெளிப்படுத்தி, உறுதியாக கூறுவார். இப்படிப்பட்ட தவறுகளினால் நன்மையைவிட தீமையே பயக்கும். நாம் எப்பொழுதும் செய்தியை கனிவுடனும், தயவுடனும் உறுதியுடனும் கொடுக்க வேண்டும். நமது கூற்று எப்பொழுதும் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். தனியாக பேசினாலும் பொது இடத்தில் பேசினாலும் நமது செய்தி கனிவுடன் இருக்க வேண்டும்.

ஒரு உண்மையான போதகரின் தகுதி

கர்த்தரின் ஊழியக்காரன் “போதக சமர்த்தனாக” இருக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். (1 தீமோ. 3:2; 2 தீமோ 2:24) பரிசுத்த பவுல் ஒரு சபையின் மூப்பரைக்குறித்து விசேஷமாக கூறுகிறார். போதக சமர்த்தனாக இருக்க வேண்டும் என்பது போதிக்கக் கூடிய திறமையை குறிக்கிறது. எல்லாரும் மற்றவர்களிடம் காரியங்களை தெளிவாக பேசும் வரத்தை உடையவர்களாக இல்லை. சிலர் அதிகமாக பேசி குறைவாக புரிய வைக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் இந்த நிலைமையில் இருப்பதாக கண்டுகொண்ட சிலர், அச்சிடப்பட்டவைகளை நன்கு படித்து, அதைப் பயன்படுத்தி மற்றவர்கள் மனதில் நன்கு பதியும்படி தெளிவாகவும், காரணகாரியத்துடனும் வழங்கவேண்டும். செய்தியை மற்றவர்களிடம் வழங்குவதற்கு பொறுமை மிகவும் அவசியம். நீங்கள் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்து, போதிக்கப்படுகிறவர்கள் மேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சத்தியம் தாக்கப்பட்டு, ஆத்துமா ஆபத்தில் இருக்கும்போது, அப்போஸ்தலர் கட்டளையிட்டதுபோல, நாம் “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய் போராட இரக்கம் வைத்து ஒரு குறிப்பிட்ட காரியத்தை மறுபடியும் மறுபடியும் பேச விருப்பங்கொள்ளவேண்டும்.

சத்தியத்தை வழங்கும்போது, பொது இடமாக இருந்தாலும் தனிப்பட்ட இடமாக இருந்தாலும், உயர்ந்த மனப்பான்மையுடன் ஆணவத்தை வெளிப்படுத்தக்கூடாது. நீங்கள் எரிச்சல் உண்டாகி, “நீங்கள் ஒரு வருடத்தில் அறிந்து கொள்வதை நான் ஐந்தே நிமிடத்தில் அறிந்து கொள்வேன்” என்று பேச உங்களை அனுமதிக்கக்கூடாது. இதை உங்கள் முகபாவத்திலோ, பேசும் விதத்திலோ, குரலிலோ காண்பிக்கக்கூடாது. ஒரே சமயத்திலே இந்த நான்கு வெவ்வேறு வழிகள் மூலமாக உங்களை வெளிப்படுத்திக் காண்பிக்கலாம். ஆனால் இவைகளில் ஏதாவது ஒன்று இருந்தாலே உங்களுக்கும் சத்தியத்தில் ஆவலை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறவருக்கும் இருக்கும் தடையை நீக்க போதுமானதாக இருக்கும். நீங்கள், சாந்தம் உடையவர்களாகவும், மனத்தாழ்மை உடையவர்களாகவும் அடக்கம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

யாராவது ஒருவர் உங்களிடம் ஒரு வாதத்தையோ ஒரு வசனத்தை உங்கள் கருத்துக்கு மாறுபாடானதாக இருக்கிறது என்று வைத்தால், நீங்கள், “நல்லது, சகோதரரே, இது வேத போதனைக்கு ஒத்திருக்கிறதா என்று பார்க்கலாம். எல்லா வசனத்தையும் ஆராய்ந்து பார்த்து எல்லாம் இசைவாய் இருந்தால் மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அதை நிரூபிக்கலாம்” என்று கூறவேண்டும். அவர் கர்த்தருடைய உறுதியான வசனத்தைக் கொண்டு உங்களுக்கு போதிக்கக் கூடுமானால், மிக சாந்தத்துடன், போதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்து அதை ஏற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இப்படியாக எல்லா நியாயங்களுடன் அதை அவர் அகற்றிவிட்டு, நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை கேட்க மிகவும் ஆவலாய் இருப்பார்.

சந்தேகத்திற்கிடமில்லாமல் கர்த்தருடைய ஜனங்களை நமது தலைப்பு வசனத்தில் கூறப்பட்டுள்ள, “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாயிருக்க வேண்டும்” என்ற பாடத்தை மென்மேலும் கற்றுக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இது மூப்பர், உதவிக்காரர் மற்றும் சபையின் ஒவ்வொரு அங்கத்தினர் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது. நமது குணலட்சணத்தை அபிவிருத்தி செய்யவும், ஆண்டவருக்கு சிறப்பாக ஊழியம் செய்யவும் இது அவசியமாக இருக்கிறது. முதலில் நாம் சர்வாயுதத்தை தரித்து, ஆவியின் பட்டயத்தை எடுக்கும் போது, கொஞ்சம் வளர்ச்சியடைந்து ஒருவேளை அடிக்கடி நன்மையை விட தீமையை செய்தவர்களாக இருந்தோம். நம்மிடம் யாரும் விவாதிக்க இயலாது என்று நினைத்திருந்தோம். ஆனால் நாம் அதிகமான கனிவையும், அதிகமான ஞானத்தையும், அதிகமான அன்பையும் கற்றுக் கொள்கிறோம். இப்படியாக மற்றவர்களுக்கு போதிப்பதற்கு மிகவும் தகுதியுள்ளவர்களாகிறோம். நாம் சத்தியத்தை தவறாக வழங்கி எப்படி கர்த்தரினிமித்தம் தீங்கிழைக்கக் கூடும் என்பதையும் சரியாக வழங்குவதினால் எப்படி கர்த்தரின் ஊழியத்தை செம்மையாக செய்ய முடியும் என்பதையும் பார்த்தோம். பசிதாகமுடையவர்களை கண்டு ஊழியம் செய்வதன் மூலம் நாம் எல்லோரும் நேசிக்கிறவரும் ஊழியம் செய்ய விருப்பப்படுகிறவருமான மகா ராஜாவுக்கு அதிக சந்தோஷத்தையும் கொடுக்க முடியும்.