பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R2079 (page 304)

பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

WORSHIP THE LORD IN THE BEAUTY OF HOLINESS.- NO. 2

யோவான் 4:23


சக தூதுவர்களைத் தொழுதுகொள்ளுதல்


தேவனுடைய ஜனங்கள் ஒருவரையொருவர் அன்புகூர வேண்டும் மற்றும் மேன்மையாய் எண்ணிட வேண்டும். அதுவும் ஒருவரிலொருவர் தேவனுடைய ஆவியை, கிறிஸ்துவின் ஆவியை, பரிசுத்தத்தின் மற்றும் சத்தியத்திற்கும், நீதிக்குமான அர்ப்பணிப்பின் ஆவியை அடையாளம் கண்டுகொள்வதற்கேற்ப இப்படியாகச் செயல்பட வேண்டும்; அதாவது உண்மையுள்ளவர்கள் “அவர்களுடைய கிரியையினிமித்தம், மிகவும் உயர்வாகக் கருதப்பட வேண்டும்” என்று அப்போஸ்தலன் கூறியுள்ளது போன்றதாகும் (1 தெசலோனிக்கேயர் 5:13; திருவிவிலியம்); “கனம் பண்ணப்பட வேண்டியவர்களைக் கனம் பண்ணிடுவதற்குச்” சிலர் தவறிப்போய்விடுவதற்கான அபாயம் இருப்பினும் (ரோமர் 13:7), சத்தியத்திற்கடுத்த ஊழியங்கள் தொடர்புடைய விஷயங்களில் தேவன் பயன்படுத்துவதற்குப் பிரியப்படுகின்றதான மனித கருவிகளுக்கு மிகவும் அதிகமான கனத்தைச் சிலர் சாற்றிடுவதற்கான அபாயமும் காணப்படும் என்பதில் ஐயமில்லை. ஆகையால் முந்தைய தருணங்களின்போது கவனத்திற்குக் கொண்டுவந்ததுபோல, இங்கும் மனிதனை தொழுதுகொள்ளும் அபாயம் குறித்துக் கவனத்திற்குக் கொண்டுவருவது ஏற்றதாயிருக்கும். இது மிகவும் ஆற்றல்மிக்க விதத்தில், வெளிப்படுத்தல் 22:9-ஆம் வசனத்தில், நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிப்படுத்தின விசேஷத்தின் யோவான் – சுவிசேஷயுகம் முழுவதும் ஜீவித்துக்கொண்டிருக்கும் பரிசுத்தவான்களுக்கு அடையாளமான யோவான், தெய்வீகத் திட்டத்தினுடைய பல்வேறு அம்சங்கள் திறக்கப்படுவதைப் பார்க்கச் சிலாக்கியம் பெற்றவர், இறுதியில் இவ்விஷயங்களைத் தனக்குக் காண்பித்த தூதனைத் தொழுதுகொள்ளும்படிக்குப் பணிந்து கொள்கின்றார். ஆகையால் பழையதும், புதியதுமானவைகளைச் சபையின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காகத் தேவனுடைய விசேஷித்த ஊழியக்காரர்களென அவ்வப்போது பயன்படுத்தப்பட்ட தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு அல்லது மனமாற்றத்திற்குக் காரணமாயிருந்த அல்லது வேறேதேனும் ஆவிக்குரிய பிரயோஜனத்திற்குக் காரணமாயிருந்த ஏதோ ஒரு குறிப்பிட்ட சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு, அதிகப்படியான அன்பையும், மரியாதையையும் மற்றும் கனத்தையும் கொடுத்துவிடுவது, அநேகருடைய மனோநிலையாக இருந்துள்ளது மற்றும் இருந்தும் வருகின்றது. இந்த மனப்பான்மையானது ஆதி திருச்சபையில் காணப்பட்டது; சிலர் ஏதோ ஓர் அப்போஸ்தலனை மேன்மையாய் வைத்திருந்தனர் மற்றும் சிலர் இன்னும் வேறொருவரை தங்களுக்குப் பிரதானமானவராகவும், போதகராகவும் வைத்திருந்து, அந்நபருடைய சீஷர் எனத் தங்களை அழைத்துக்கொண்டனர்; “நான் பவுலைச் சார்ந்தவன்” அல்லது “நான் அப்பொல்லோவைச் சார்ந்தவன்” அல்லது “நான் பேதுருவைச் சார்ந்தவன்” என்பது போன்றெல்லாம் கூறினார்கள். இம்மனப்பான்மையானது, மாம்ச சிந்தையை ஓரளவுக்கு சுட்டிக்காட்டுகின்றது என்று அவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் உறுதிப்படுத்தினார் மற்றும் பவுல், அப்பல்லோ மற்றும் பேதுரு என்பவர்கள் யார் என்று வினவி, அவர்கள் உங்களைச் சத்தியத்தினால் ஆசீர்வதிப்பதற்குத் தேவன் அனுப்பிடுவதற்குப் பிரியப்பட்ட ஊழியக்காரர்கள் அல்லது பிரதிநிதிகள் மாத்திரம்தான் என்று கூறினார். “நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.” இப்படியாக ஆசீர்வாதங்களானது கடந்து வருகின்றதான பாத்திரங்களையல்ல, மாறாகக் கர்த்தரை – தங்கள் ஆசீர்வாதங்களுக்கான காரணரைத் தேவனுடைய ஜனங்கள் அங்கீகரித்திட வேண்டும் மற்றும் அவர்களுக்காக மரித்து, அவர்களை மீட்டுக்கொண்டவருடைய நாமத்தையே உண்மையாய்த் தரித்துக்கொள்ள வேண்டுமேயொழிய, வேறு நாமத்தையல்ல என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார்.

இதுபோலவே சபையானது, இருண்ட யுகங்களினுடைய காரிருளை, சீர்த்திருத்தவாதிகளாகிய லூத்தர், கல்வீன், சுவிங்கிலி மற்றும் இன்னும் பலருடைய உதவி மற்றும் அறிவுரையின் கீழ் அப்புறப்படுத்துவதற்குத் துவங்கினபோது, சீர்த்திருத்துதல் பணியில் கருவிகளாக இருப்பதற்குத் தேவனால் கனப்படுத்தப்பட்ட கருவிகள் மீது சபைக்கு, இயல்பாகவும், முறையாகவும் மிகுந்த மதிப்புக் காணப்பட்டது. ஆனால் மீண்டுமாக தெய்வீக ஆசிரியரைத் தொழுது கொள்ளுவதற்குப் பதிலாக, மனித பிரதிநிதிகளை, தூது கொடுப்பவர்களைத் “தொழுதுகொள்ளும்” மனப்பான்மை வெளிப்பட்டது மற்றும் இன்று பல்லாயிரக்கணக்கானோர் தங்களை லூத்தர், கல்வின், வெஸ்லி, கேப்பெல், இன்னும் பலரின் நாமங்களில் அழைத்துக்கொண்டு, தேவனுடைய வார்த்தைகளைக் காட்டிலும், இவர்களுடைய போதனைகளுக்கும், எழுத்துக்களுக்கும் அதிக மதிப்புக்கொடுப்பவராகிவிட்டனர் மற்றும் இதற்கேற்ப தங்களுக்குப் பாதகத்தையும் ஏற்படுத்திக்கொண்டனர்.

இதுபோலவே இன்றும், அதாவது முன்பு ஒருபோதும் இல்லாதளவுக்கு மிகவும் தெளிவாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதான தற்கால சத்தியத்தின் வெளிச்சத்திலும்கூடப் பார்க்கையில், கடந்த காலங்களில் மிகவும் தீங்கான தாக்கத்தினைக் கொண்டிருந்ததான மாம்ச ரீதியிலான இந்த மனப்பான்மைக்கு எதிராக, இன்றும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம் என்பதில் ஐயமில்லை.

தெய்வீகத் திட்டத்தினுடைய வியக்கத்தக்கக் காரியங்களைத் தனக்குக் காண்பித்திட்டதான தேவதூதனைத் தொழுதுகொள்ளும்படிக்கு யோவான் பாதத்தில் விழுந்தபோது, மரியாதையினை ஏற்றுக்கொள்வதற்குத் தேவதூதன் மறுத்தக் காரியமானது, தேவனுடைய ஊழியக்காரர்கள் (வேலைக்காரர்கள் [R2080 : page 305] – செய்தியாளர்கள்) யாவருக்கும் ஒரு படிப்பினையாகக் காணப்பட வேண்டும். “நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; (உன் கர்த்தரும், ஆண்டவருமானவருடன்கூட
அல்ல, மாறாக) உனக்கும், தீர்க்கத்தரிசிகளாகிய உன் சகோதரருக்கும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்கள் யாவருக்கும் நான் உடன் ஊழியக்காரனே; (இந்த ஆசீர்வாதங்கள் மற்றும் இந்த வெளிச்சம் யாவும் கடந்துவரும் ஆதாரமாகிய) தேவனைத் தொழுதுகொள்” என்று தேவதூதன் சொன்னார். தேவனுடைய ஊழியக்காரர்கள் அனைவரும், அவர்களது ஊழியத்தின் அளவு அல்லது காலப்பகுதி என்னவாக இருப்பினும், அவர்கள் உடன் ஊழியக்காரர்களே ஆவார்கள் (வெளிப்படுத்தல் 22:9).

கொலோசெயருக்கு எழுதின நிருபத்தில் மனிதனைத் தொழுதுகொள்ளும் இம்மனப்பான்மையினை, “மாயமான தாழ்மையிலும், (செய்தியாளர்களுக்கு) தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்ச சிந்தையினாலே வீணாய் இறுமாப்புக் கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்” என்று கூறி அப்போஸ்தலன் கவனத்திற்குக் கொண்டுவருகின்றார் (கொலோசெயர் 2:18,19). இச்சோதனையானது வணங்கிடுங்கள் என்ற வெளிப்படையான / நாணமற்ற கோரிக்கையின் விதத்தில் வராமல், மாறாக இரகசியமான, தந்திரமான விதத்தில் வருகிறதாக இருக்கும் என்று சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான பக்தி அல்லது தொழுதுகொள்ளுதல்களே, பெயர்ச்சபை ஊழியங்களில் [R2080 : page 306] பொதுவாய்க் காணப்படுகின்றதாய் இருக்கின்றது. மிகவும் சாந்தமானவர்களாகவும், தங்களை வணங்கிடும்படிக்கு அல்லது தொழுதுகொள்ளும்படிக்கு கேட்கவேண்டுமென்று எண்ணிடாதவர்களுமான ஊழியக்காரர்கள் அநேகர், தங்கள் மந்தையினர் மனமார அளிக்கும் ரெவரண்ட் / Reverend என்னும் பட்டத்தினை ஏற்றுக்கொள்கின்றவர்களாய் இருக்கின்றனர்; மற்றும் அப்படித் தங்களை அழைப்பதையும் ஊக்குவிக்கின்றனர் மற்றும் இவ்வகையான வணக்கமோ அல்லது தொழுதுகொள்ளுதலோ தங்களுக்குச் செலுத்தப்படவில்லையெனில், இதனால் சினமும் அடைகின்றனர். ஆவிக்குரிய விஷயங்களில், ஊழியக்காரனுடைய வார்த்தை மற்றும் கணிப்பின்மீது அதிகப்படியான நம்பிக்கை வைப்பது என்பது விசுவாச வீட்டாருக்குப் பாதகமான தாக்கத்தினையே ஏற்படுத்தியுள்ளது மற்றும் ஏற்படுத்தியும் வருகின்றது; இதனால் அநேகர் தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் தங்கள் விசுவாசத்தினை உறுதிப்படுத்திடுவதற்கும் மற்றும் அதன் நம்பகத்தன்மையை முழுமையாய் நம்பிடுவதற்கும் தவறிவிடுகின்றனர்.

ரெவரண்ட் / Reverend எனும் பட்டத்தினைப் பயன்படுத்திடாதவர்கள் மத்தியிலும்கூட ஓர் அபாயம் காணப்படுகின்றது. (நவம்பர், 15,95-ஆம் வருடத்தினுடைய நம்முடைய வெளியீட்டில் ஏற்கெனவே சுட்டிக்காண்பிக்கப் பட்டுள்ளது போன்று) அதிகாரம் சபையாரிடத்திலேயே காணப்படுகின்றதே ஒழிய, கொஞ்சம் பேருக்கோ அல்லது பல்லாயிரம் பேருக்கோ ஊழியம் புரிவதற்கெனத் தங்களைத் தாங்களே வழிநடத்துபவர்களாக நியமித்துக் கொள்பவர்களிடத்தில் இல்லை என்பது எப்போதும் நினைவில்கொள்ளப்பட வேண்டும். கிறிஸ்துவினுடைய சபைகள், தங்கள் தலையானவரின் வழிநடத்துதலை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும் மற்றும் தங்களை வழி நடத்துபவர்கள், அவருடைய விருப்பத்தின் படியானவர்களே என்று அறிவார்கள் (எபிரெயர் 13:7,17, 24-ஆம் வசனங்களைப் பார்க்கவும்); எனினும் சபையாருடைய விசேஷித்த வேண்டுகோள் இல்லாமல், வழி நடத்துபவர்களின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், சபையாருடைய உரிமைகளைத் தகாத வழியில் கைப்பற்றிடுவற்கான அல்லது அந்த உரிமைகளைப் புறக்கணித்திடுவதற்கான மனநிலையை உடையயார் குறித்தும் சபையார் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்; கர்த்தருடைய விருப்பம் அறிவது தொடர்புடைய விஷயத்தில் சபையாருக்காக, பகுத்தறிவதற்கும் மற்றும் முடிவெடுப்பதற்கும் வழிநடத்துபவரே ஆற்றல் மிக்கவராய் இருக்கின்றார் என்று சபையார் எண்ணிக்கொள்ளத்தக்கதாக, அவர்கள் ஏமாற்றப்படுகையில், பகுத்தறிவில் சாந்தமுள்ளவர்களாகக் காணப்படும் அனைவரும் தம்முடைய சபையாக – “தம்முடைய சரீரமாக” இருப்பதினால், அவர்களை வழிநடத்திடுவதற்கு விருப்பமும், வல்லமையும் உள்ளவராகிய உண்மையான ஒரே போதகரெனத் தலையானவரைப் (கிறிஸ்துவை) பற்றிக்கொள்வதற்குத் தவறப்படுகின்றது.

ஒரே மேய்ப்பனிடமிருந்து, ஒரு சக ஆட்டினிடத்திற்கு மந்தையினுடைய கவனத்தை இப்படியாக திசைத்திருப்புவது என்பது எப்போதும் “வழிநடத்துபவர்களின்” தவறாக மாத்திரம் காணப்படுவதில்லை உண்மையான, தாழ்மையான ஆட்டினுடைய சுபாவம் உடைய அனைவருக்கும், ஒருவரையொருவர் பின்பற்றிடுவதற்கான தன்மை பொதுவாகவே காணப்படுகின்றது. ஆகையால் பிரதான மேய்ப்பன் (கிறிஸ்து) மற்றும் உடன் மேய்ப்பர்களின் (அப்போஸ்தலர்களின்) ஆவிக்கும், சத்தத்திற்கும் முழு இசைவுடன் காணப்படுபவர்களை மாத்திரம் ஒவ்வொரு ஆடுகளும், வழிநடத்துபவர்களாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்றும், மேய்ப்பனால் கட்டளையிட்டப்படியான “சுத்தமான தண்ணீரை” மாத்திரம்தான் மற்றும் “சுத்தமான உணவினை” மாத்திரந்தான் புசிக்கிறானா என்று ஒவ்வொரு ஆடும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுமுள்ள படிப்பினைகள், அனைவரும் கற்க வேண்டியவைகளாகும் (எசேக்கியேல் 34:17-19-ஆம் வசனங்களைப் பார்க்கவும்); இது உபதேசம் மற்றும் நடைமுறை விஷயங்களில் கிறிஸ்துவினுடைய மந்தையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனும், தன்தன் மனச்சாட்சியினைச் செயல்படுத்திட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது மற்றும் இது ஒவ்வொரு ஆட்டையும் குறித்து அறிந்தவராகவும் மற்றும் “தம்முடைய ஆடுகளைப் பேர்ச்சொல்லிக் கூப்பிடுகிறவராகவுமுள்ள” மேய்ப்பனுடன், ஒவ்வொருவனும் நெருக்கமும், ஐக்கியமும் கொண்டிருக்கச் செய்திடும். கர்த்தருடன் தனித்தனி கிறிஸ்தவனுக்கான இதே நெருக்கமான உறவானது, தலை மற்றும் அவரது சரீரத்தின் அங்கத்தினர்களாகிய சபை உள்ளடங்கும் கிறிஸ்து எனும் உருவகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 12:12-27; எபேசியர் 4:15,16).

சுவிசேஷத்தின் ஊழியத்தில், தேவனுடைய கிருபையினால் நாங்கள் கொஞ்சம் பயன்படுத்தப்பட்டுள்ளப்படியால், நாம் தனிப்பட்ட விதத்தில் அடிக்கடி கூறிவந்தவைகளையும் மற்றும் இதே இதழின் கடந்தகால வெளியீடுகளில் கூறிவந்தவைகளையும், இங்குக் குறிப்பிடுவது ஏற்புடையதாகவே இருக்கும் – அதாவது நாங்கள் (சகோ. ரசல்) சக ஊழியக்காரர்களுடைய மற்றும் முழு விசுவாச வீட்டாருடைய அன்பையும், அனுதாபத்தையும், நம்பிக்கையையும் மற்றும் ஐக்கியத்தையும் மதித்திட்டாலும், எங்களுக்கோ அல்லது எங்கள் எழுத்துக்களுக்கோ பாராட்டும், வணங்குதலும் வேண்டாம்; ரெவரண்ட் / Reverend அல்லது ரபி என்று அழைக்கப்படுவதற்கும் நாங்கள் விரும்பவில்லை. எங்களுடைய பெயரினால் யாரேனும் தங்களை அழைத்துக்கொள்வதையும் நாங்கள் விரும்பவில்லை. அனைவருக்குமாக மரித்தவரின் நாமம் – கிறிஸ்தவன் எனும் பெயர் தேவனுடைய ஆவிக்குரிய புத்திரர்களை, கிறிஸ்துவினுடைய உண்மையான சகோதர சகோதரிகளை அழைத்திடுவதற்குப் போதுமானதாய் இருக்கின்றது; மற்றும் இதற்கு மிஞ்சினது/அப்பாற்பட்ட எதுவும் பொல்லாப்பினால், மாம்சத்தினால் வருகிறதாகவும் காணப்படும் மற்றும் இவைகளுக்கு ஏதுவானதாகவே காணப்படும். எங்களுடைய (சகோ. ரசல்) எழுத்துகள் / படைப்புகள் தலை வணங்கப்படுவதற்கோ அல்லது பிழையற்றவை என்று கருதப்படுவதற்கோ அல்லது பரிசுத்த வேதவாக்கியங்களுக்குச் சரிசமமாகப் பார்க்கப்படுவதற்கோ நாங்கள் விரும்பிடவில்லை. எங்களுடைய போதனைகள் என்று எங்களால் வலியுறுத்தப்படுபவைகள் அல்லது வலியுறுத்தப்பட்டவைகள் தெய்வீக வார்த்தைகளுக்குரிய முரண்பாடற்ற மற்றும் சத்தியத்தின் ஆவிக்கு இசைவாயுள்ள விளக்கங்களேயாகும். முன்புபோல், இன்னமும் நாங்கள் வலியுறுத்துவதாவது – வேதவாக்கியங்களின் வெளிச்சத்தில் ஒவ்வொரு வாசகனும், நாங்கள் வைக்கின்றதான பாடங்களை ஆராய்ந்துபார்த்து, அனைத்தையும் வேதவாக்கியங்களினால் சோதித்தறிந்து, நலமானதைப் பற்றிக்கொண்டு, மற்றவைகளை மறுத்துவிடுவானாக. வேதத்தின் மாணவனானவன், பாடத்தினைத் தெய்வீக ஏவுதலின் பேரிலான வேதாகம பதிவில் அடையாளம் கண்டுபிடிக்கத்தக்கதாக, விசுவாசம் கட்டியெழுப்பப்பட வேண்டியதான அந்த வேதவாக்கியங்களுடைய மேற்கோள்களையும் மற்றும் மேற்கோள் காட்டுதல்களையும் தாராளமாய் அளித்துள்ளோம்.