R3004 (page 138)
நம்முடைய பாடத்தில் தீர்க்கத்தரிசிகள் மற்றும் போதகர்களுக்கு இடையில் வித்தியாசம் காட்டப்படுவதை நாம் பார்க்கின்றோம். “தீர்க்கத்தரிசி” என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதற்கான கிரேக்க வார்த்தை “முன்னறிவிப்பவர்” என்னும் அர்த்தத்தைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இது வரவிருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்பவரை அல்லது முன்னறிவிப்பவரை அல்லது தீர்க்கத்தரிசனமாய் உரைப்பவரைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படலாம்; ஆனால் புதிய ஏற்பாட்டில் இவ்வார்த்தைப் பொதுவாய்ப் பயன்படுத்தப்படுகையில் அது கர்த்தருடைய செய்தி கூறுவதை, அதாவது பிரகடனப்படுத்துவதை, பொதுவிடங்களில் போதிப்பதை அல்லது ஜனங்களுக்கு முன்பாக நின்று அறிவிப்பதைச் சுட்டிக்காட்டுவதாய்த் தெரிகின்றது. தீர்க்கத்தரிசிகள் மற்றும் போதகர்களுக்கு இடையிலான வித்தியாசம் என்னவெனில் – தீர்க்கத்தரிசி என்பவர் பொதுவிடங்களில், முறையான தூது கொடுக்கும் விதத்தில் சத்தியத்தைப் போதிப்பதற்கான தாலந்துகளையும், திறமைகளையும் இயல்பாகவே கொண்டிருக்கும் நபராவார்; ஆனால் போதகர்கள் என்பவர்கள் உபதேசிப்பதற்கெனத் தாலந்தையுடையவர்கள், ஆனால் வெளியிடங்களில் உபதேசிப்பவர் அல்ல அல்லது பிரசங்கம் / சொற்பொழிவு ஆற்றும் விதத்தில் உபதேசிப்பவர் அல்ல. இதே வித்தியாசமானது [R3005 : page 139] கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் இன்றும் உண்மையாகவே காணப்படுகின்றது; வெகுசிலரே பொதுவில் பேசிடுவதற்கு – கூட்டத்தாருக்கு உண்மையாய் உதவிகரமாய் இருக்கும் விதத்தில், முறையான விதத்தில் தூது கொடுப்பதற்கான தகுதிகளை உடையவர்களாய் இருக்கின்றனர். பொதுவில் தூதுகொடுப்பதற்கான திறமையில்லாத வேறு சிலர், பொதுவின் தன்மையில் இராத வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள் முதலானவைகளில் சத்தியத்தினை முன்வைத்திடுவதற்கான தாலந்துகளையுடையவர்களாய் இருக்கின்றனர்.
கர்த்தரே தாம் நலமானது என்று காண்கிறதற்கு ஏற்ப தாலந்துகளை அருளுவார் மற்றும் ஒவ்வொரு தனிநபரும் மற்றும் ஒட்டுமொத்தச் சபையும் தாங்கள் பெற்றிருப்பதாகக் கண்டுகொள்ளும் தாலந்துகளைப் பயன்படுத்திடுவது அவர்களுக்கான காரியமாய் இருக்கின்றது. கர்த்தருடைய ஜனங்கள் அடங்கிய சிறுசிறு கூட்டத்தார் தாங்கள் வெளியிடங்களில் பிரசங்கிக்கும் ஊழியத்தை நடத்த வேண்டுமென்று தீர்மானிக்கிறவர்களாகவும் மற்றும் அதை நடத்தியே ஆக வேண்டும், அதாவது அருமையாகவோ அல்லது மோசமாகவோ, எப்படியாக இருப்பினும், அதை நடத்தியாக வேண்டும் என்று முயற்சிக்கிறவர்களாகவும் இருக்கக் கூடாது. மாறாக இது விஷயத்தில் கர்த்தருடைய மனதை அறிந்துகொள்வதற்கும், கர்த்தருடைய வழிநடத்துதல்களானது தங்களுக்குச் சாத்தியமாக்கிடும், மற்றும் தங்களுக்குத் தகுதியானதாக்கிடும் அத்தகைய கூட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நாடிட வேண்டும். ஒருவேளை ஒரு சபையார் மத்தியில் ஒன்று அல்லது இரண்டு அல்லது அதிகமான சகோதரர்கள் போதிக்கும் திறமையுடையவர்களாக இருப்பார்களானால் – சபைக்கான ஆராதனைகளை நடத்திடவும், வேதாகம வகுப்பில் சகோதரர்களிடமிருந்து கேள்விகளையும், பதில்களையும் வரவழைக்க முடிகிறவர்களையும், வேதாகம ஆராய்ச்சியில் மற்றவர்களோடுகூடத் தன்னுடைய கருத்துக்களையும் கொடுக்கிறவர்களாகவும் இருப்பார்களானால், இத்தகைய சகோதரர்களைச் சபையானது பயன்படுத்திட நாடவேண்டும். மேலும் ஒருவேளை பொதுவில், சொற்பொழிவு விதத்திலான பிரசங்கங்களைக்கொடுப்பதற்கான தாலந்தையுடையவர்கள் ஒருவரோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்களோ காணப்படுவார்களானால், அத்தகையவர்கள் விரும்புவார்களானால் அவர்களையும் ஊழியத்தில் ஈடுபடுத்திடுங்கள். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொருவனுடைய ஆவிக்குரிய மற்றும் சுபாவத்தின்படியான திறமைகள் மற்றும் வளர்ச்சிக்கேற்ப சபையானது அதன் பல்வேறு அங்கத்தினர்கள் அனைவரையும் வளர்த்துவதும், பயன்படுத்துவதும், பயிற்றுவிப்பதும் சபையினுடைய நோக்கமாகக் காணப்பட வேண்டும்.