இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4183 (page 172)

இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?

LOVEST THOU ME MORE THAN THESE?

நமது கர்த்தர் பேதுருவை ஏறெடுத்துப்பார்த்து, பேதுருவை பாறை என்று அழைக்காமல், சீமோன் என்று அழைத்து “இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா?” என்று கேட்டபோது, பரிதாபத்திற்குரிய பேதுரு கர்த்தரை தான் மறுதலித்த விஷயத்தில் ஏதேனும் பிராயச்சித்தம் செய்வதற்குரிய அநுகூலமான வாய்ப்புக் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன்தான் காணப்பட்டிருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இந்த வலைகள், படவுகள் மற்றும் இந்த மீன் பிடிக்கும் தொழிலைக் காட்டிலும் அதிகமாய் நீ என்னை அன்புகூருகிறாயா? என்ற அர்த்தத்தில் அவர் கேட்டிருக்கலாம் அல்லது மற்றச் சீஷர்களைக் காட்டிலும் அதிகமாய் நீ என்னை அன்புகூருகிறாயா? என்ற அர்த்தத்தில் அவர் கேட்டிருக்கலாம். பேதுரு கர்த்தரை மறுதலித்த அதே இரவில், கர்த்தருக்கான தனது அன்பைக் குறித்துத் தான் பெருமையாய்ப் பேசினவைகளை அவர் மனதின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கு ஏதுவான வாய்ப்பாக இத்தருணம் இருந்தது. “எல்லோரும் உம்மைவிட்டுப் போனாலும், நான் உம்மைவிட்டுப் போகிறதில்லை” என்று பேதுரு சொல்லியிருந்தார். பேதுரு தன்னை மற்றவர்களுடனோ அல்லது மீன்பிடிப்பதற்குரிய உபகரணங்களுடனோ ஒப்பிடாமல், “ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்று பதிலுரைத்தார். நமது கர்த்தர் அன்பிற்கு ‘agapao’ வார்த்தையினைப் பயன்படுத்தினார், ஆனால் பேதுருவோ உளங்கனிந்த, தனிப்பட்ட பாசம் / அன்பு எனும் அர்த்தம் கொடுக்கும் “phileo” எனும் வேறு வார்த்தையினைப் பயன்படுத்தினார். இதைக் கூறின மாத்திரத்தில், “என் ஆட்டுக்குட்டிகளை, என் சிறு ஆடுகளைப் பேணி வளர்ப்பாயாக” (திருவிவிலியம்) என்று நமது கர்த்தர் பதிலளித்தார். இதில் ஊழியத்தின் விஷயத்தில் பேதுரு பகுதியளவு சீர்ப்பொருத்தப்பட்டுள்ளார் எனும் கருத்து வெளிப்படுகின்றது. மூன்று வருடங்களுக்கு முன்னதாக பேதுருவின் படகிலிருந்து, நமது கர்த்தர் திரளான ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்; பிற்பாடு, வலை கிழிந்துபோகும் அளவுக்கு, திரளான மீன்களை அருளின அற்புதத்தினைச் சீஷர்களுக்குப் பண்ணினார். இந்த நிகழ்வினைத் தொடர்ந்து, நமது கர்த்தர் பேதுருவையும், யாக்கோபையும் மற்றும் யோவானையும் நோக்கி: “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” என்றார். இப்பொழுதும் அதே போன்றதொரு அற்புதத்தினை அவர் பண்ணினார் மற்றும் 153 – பெரிய மீன்கள் பிடிப்பட்டபோதிலும், வலைக் கிழியவில்லை மற்றும் இப்படி மீன் பிடித்தப் பிற்பாடு, [R4184 : page 172] நமது கர்த்தர் மறுபடியுமாக அப்போஸ்தலர்கள், பெந்தெகொஸ்தே நாளில், உன்னதத்திலிருந்து வரும் பெலத்தினால் தரிப்பிக்கப்பட்டது முதற்கொண்டு துவங்கும் சுவிசேஷயுகத்தின் கீழ் அவர்கள் மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாக்குவதற்கு விரும்பிட்டார். நமது கர்த்தர் பேதுருவை நேரடியாகக் கண்டிக்கவில்லை. அவரது தவற்றின் மற்றும் அவரது மறுதலிப்பின் மோசமான நிலையினை அவர் மனதில் பதியப்பண்ணினார் மற்றும் அச்செய்கையினால் அப்போஸ்தலர்களில் ஒருவர் என்றுள்ள பேதுருவின் ஸ்தானத்தை அவர் இழந்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார். பேதுரு மந்தையினுடைய ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடலாம் என்பதான இந்தப் புதிய கடமையானது, பேதுரு ஆடுகள் மத்தியில் முழுமையான மேய்ப்பனாக இருப்பதில்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஆனால் நமது கர்த்தர் மீண்டுமாக அதே கேள்வியினை, அதே வார்த்தைகளைக் கொண்டே கேட்டார் மற்றும் பேதுருவும் அதே வார்த்தைகளைக் கொண்டே பதிலளித்தார். பின்னர் இயேசு பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டதான கடமையினை, “என் ஆடுகளை மேய்ப்பாயாக” (திருவிவிலியம்) ஆடுகளைப் பராமரித்துக்கொள், ஆடுகளுக்கு ஊழியம் புரிவாயாக என்று கூறி விரிவாக்கினார். இந்த இரண்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ட விஷயத்தில் ஆட்டுக்குட்டிகளைப் பேணிவளர்ப்பதற்கு அதிகாரம் பெற்றுக்கொண்டவராகவும், ஆடுகளை மேய்க்க மாத்திரம் அதிகாரம் கொண்டவராகவும், மேய்ப்பனுக்குரிய சுயாதீனங்கள் முழுவதையும் இன்னும் பெற்றுக்கொள்ளாதவராகவும் பேதுரு காணப்பட்டார். பேதுரு மூன்று தரம் கர்த்தரை மறுதலித்துள்ளப்படியால், நமது கர்த்தரும் அவரை மூன்றாம் முறை கேள்விகேட்டார்; எனினும் இம்முறை phileo எனும் வார்த்தையை அன்பிற்குப் பயன்படுத்திக் கேட்டார். இதை அநேகமாக பேதுரு அடையாளங்கண்டு கொண்டிருக்க வேண்டும்; எப்படி இருப்பினும் தன்னுடைய அன்பு குறித்த இந்த மூன்றாம் கேள்வியினிமித்தமும் மற்றும் இம்முறை நமது கர்த்தர் phileo – வார்த்தைப் பயன்படுத்தினதினிமித்தமும், அவர் மிகுந்த ஆழ்ந்த துயரமடைந்தார். “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர், என்ற பேதுருவின் பதிலானது பரிதாபகரமானதாகும். இந்த மூன்றாம் ஒப்புக்கொள்ளுதலுக்குப் பிற்பாடு, நமது கர்த்தர் “என் ஆடுகளைப் பேணிவளர்ப்பாயாக” என்று கூறி, அவரைக் கண்காணியாக (அ) மேய்ப்பனாக முழுமையாகச் சீர்ப்பொருத்தினார். அவர் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்ப்பதற்கும், ஆடுகளை மேய்ப்பதற்கும் மாத்திரம் அதிகாரம் வழங்கப்படாமல், இறுதியில் ஆடுகளைப் பேணிவளர்ப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டார். [R4184 : page 173] பேதுருவுக்காக நாம் சந்தோஷப்படுகின்றோம் மற்றும் கண்டிக்கும் விஷயத்தில் இத்தகைய சாதுரியமான வழிமுறையைக் கையாண்டதையும், மிகவும் கடுமையாய்க் கண்டிக்காததிலுள்ள நமது கர்த்தரின் பெருந்தன்மையையும் நாம் கண்டு வியக்கின்றோம். இந்த மாபெரும் மாதிரியானவரிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்வோமாக! நமது கர்த்தருடைய வார்த்தைகளிலிருந்து நாம் கற்கத்தக்கதாக, வேறு பாடங்கள் உள்ளனவா? கர்த்தருக்காக உள்ளங்கனிந்த, ஆழமான, உண்மையான அன்புகொண்டிருக்கின்றோமா அல்லது இல்லையா? அல்லது நமது அன்பு பொதுவான ஓர் அன்பாகவும், பாசமாகவும் மாத்திரம் காணப்படுகின்றதா? என்று நாம் ஒவ்வொருவரும் நம்நம் சொந்த இருதயங்களிடத்தில் கேட்டுக்கொள்வது நலமாய் இருக்குமல்லவா? இந்தக் கேள்விகளுக்கு நாம் உறுதியாய்ப் பதில் கூறமுடிகிறவர்களாகவும் மற்றும் நிலங்கள் அல்லது வீடுகள், படவுகள் அல்லது வலைகள், பெற்றோர்கள் அல்லது பிள்ளைகள், கணவன் அல்லது மனைவி அல்லது நம்மைக்காட்டிலும், நாம் அவரையே அதிகமாய் அன்புகூருகின்றோம் என்று அவருக்கு உறுதியளிக்கமுடிகிறவர்களாகவும் இருப்பதற்கு உதவுகிற ஆண்டவருடனான அத்தகையதோர் தனிப்பட்ட ஐக்கியத்தினைப் பேணி வளர்த்திட நாம் நாடிட வேண்டும். நமது பரம மணவாளன், நாம் அன்புகூருவதற்குப் பாத்திரமாய்க் காணப்படுவதினால் மற்றும் இத்தகைய அன்பினை நாம் அவரிடத்தில் கொண்டிருக்க முடியவில்லையெனில், நாம் இராஜ்யத்திற்குப் பாத்திரவான்களாய் இருப்பதில்லை, மணவாட்டியின் அங்கத்தினர்களாகுவதற்கு, ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகுவதற்கு நாம் பாத்திரவான்களாய் இருப்பதில்லை. கர்த்தருக்கான நம்முடைய அன்பின் அளவு தொடர்புடைய விஷயத்தில், அதை நாம் எப்படி அறிந்துகொள்ளலாம், எப்படி நம்முடைய சொந்த இருதயத்தினை இது தொடர்புடைய விஷயத்தில் பரிசோதித்திடலாம்? சோதனைகள், பிரச்சனைகள், எதிர்ப்புகள் முதலானவைகள் நம்மை மேலோங்க அனுமதிப்பதின் மூலமேயல்லாமல், வேறு எப்படிக் கர்த்தர் நம்மைப் பரீட்சித்துப்பார்ப்பார். நமது கர்த்தர் தம்மை அப்போஸ்தலர்களிடமிருந்து மூன்று வாரங்கள் மறைத்துக்கொண்டதுபோன்று, எனினும் அவர்கள் சமீபமாய்க் காணப்பட்டு, அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்து, தேவையான பாடங்களைப் புகட்டிடுவதற்கான மிகுந்த சாதகமான தருணத்தினைப் பயன்படுத்திடுவதற்கு ஆயத்தமாய்க் காணப்பட்டதுபோன்று – தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் நமக்குக் கொடுக்கத்தக்கதாக, நம்முடைய நலனுக்கடுத்த தேவைகளை அவர் கவனிக்கிறார் என்று நாம் உறுதியடையலாம்; ஒருவேளை சிலசமயங்களில், அவர் தமது முகத்தினைக் கடுமையான சூழ்நிலைகளுக்குப் பின்பாக மறைத்து வைத்திருக்கிறாரெனில், அது சிங்காசனத்தின் ஒரு ஸ்தானத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்தும் விஷயத்தில் நமக்கு உதவியாயிருக்கும் சில விலையேறப்பெற்றப் படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும், நம்மைப் பலப்படுத்த, ஆசீர்வதிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தின் காரணத்தினாலேயே ஆகும். ஆகையால் உபத்திரவங்கள் என்ன உண்டுபண்ணுகின்றது என்று அறிந்து, உபத்திரவத்தில் களிகூருவோமாக மற்றும் அம்மாதிரியான உபத்திரவத்தில், நான் கர்த்தரைப் பிரதானமாய் அன்புகூருகின்றேன் என்பதை நான் எப்படிக் காண்பிக்கின்றேன்? என்று நாம் நம்மிடமே கேள்விக் கேட்டுக்கொள்வோமாக.

பேதுரு தன்னுடைய அன்பினை அறிக்கைப்பண்ணினதால், அவர் ஆட்டுக்குட்டிகளைப் பேணிவளர்த்து, ஆடுகளை மேய்த்து, பேணிவளர்த்திட வேண்டும் என்று நமது கர்த்தர் கூறினதுபோலவே, அவரது பின்னடியார்கள் யாவரிடமும் அவர் கூறுகின்றார். கர்த்தருடைய பிரியமான மந்தை தொடர்புடைய விஷயத்தில், நம்மால் அப்போஸ்தலருக்குரிய கனமிக்க ஸ்தானத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறவில்லை, மாறாக நாம் ஒவ்வொருவருமே தேவனுடைய மந்தையினை மேய்ப்பதற்கு / பராமரிப்பதற்கு மற்றும் உதவுவதற்கு, போஷிப்பிப்பதற்கு வாய்ப்புகளைக் கண்டடையலாம், அதிலும் விசேஷமாகக் கர்த்தருடைய ஏற்பாட்டின்பேரில் சபையில் மூப்பர்களாக ஏற்படுத்தப்பட்டுள்ள யாவரும் கண்டடையலாம் என்று அவர் கூறினார்; ஆகையால்தான் பரிசுத்த ஆவியால் மேற்பார்வையாளர்களாக, கண்காணிகளாக, மேய்ப்பர்களாக வைக்கப்பட்டவர்கள், தேவனுடைய மந்தையை மேய்க்கும்படிக்கு அப்போஸ்தலனாகிய பவுல், எபேசு பட்டணத்தின் மூப்பர்களிடம் கூறினார் (அப்போஸ்தலர் 20:28). எனினும் ஒவ்வொருவனும் தன் விஷயத்தில், பூலோகக் கடமைகள் விஷயத்தில் எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடிட வேண்டும்; ஒவ்வொரு உடன் மேய்ப்பனும், தன்னுடைய சொந்த ஆவிக்குரிய போஷிப்பு மற்றும் புத்துணர்வு அடைதல் விஷயத்தில் கவனம் செலுத்துவது அவசியமானதாகவும் மற்றும் ஏற்றதாகவும் காணப்படுகின்றது; எனினும் மந்தை தொடர்பாக ஆண்டவரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதான பணியானது நம் இருதயங்களில் முதன்மையான இடத்தைப் பெற்றிருப்பதும் மற்றும் கர்த்தருடைய நாமத்தில் அவருடைய பின்னடியார்களைப் போஷிப்பது, மேய்ப்பது மற்றும் முடிந்தமட்டும் ஆண்டவருடைய சுயத்தை வெறுத்தலின், சுயத்தைப் பலிச்செலுத்துதலின் ஆவியில், அன்பின் ஊழியத்தில், அவர் செய்ததுபோன்று, ஆடுகளுக்காக நம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுப்பது மாபெரும் சிலாக்கியமென நாம் சரியாய் மதிப்பதும் மிகவும் முக்கியமான காரியமாகும். ஆடுகள் மீது கவனமற்ற ஒருவர், எந்த விதத்திலும் மூப்பராகவோ, வழிநடத்துபவராகவோ அங்கீகரிக்கப்படக்கூடாது மற்றும் சுயநலமான அல்லது உலகப்பிரகாரமான காரணங்களுக்காக இல்லாமல், மாறாக மாபெரும் மேய்ப்பனுக்கடுத்த நோக்கங்களிடத்திலும், மந்தையினிடத்திலுமுள்ள அன்புடன்கூடிய பக்திவைராக்கியம் மற்றும் அர்ப்பணிப்பிற்குச் சான்று பகிர்ந்துள்ள காரணத்திற்காகவே, ஒருவர் அவரது சகோதர சகோதரிகளால் மதிக்கப்பட வேண்டும் மற்றும் ஊழியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சபையில் மூப்பருக்கான, உடன் மேய்ப்பனுக்கான முதன்மையான தகுதி, கர்த்தருக்காகக் கொண்டிருக்கும் அன்பாகத்தான் கண்டிப்பாய் இருத்தல் வேண்டும். கிரியை புரிவதற்கு முக்கிய தூண்டுதலாயுள்ள மாபெரும் மேய்ப்பனுக்கான அன்பைத் தவிர மற்றப்படியுள்ள பேச்சுத்திறமை யாவும் மற்றும் பக்திவைராக்கியம் யாவும் மந்தையினுடைய நலனுக்கடுத்த விஷயங்களுக்கு இடையூறாகவும், பாதகமாகவுமே காணப்படும். யார் கர்த்தருக்காக அன்புகொண்டிருக்கின்றார்கள் என்றும், அதன் அளவு என்ன என்றும் நாம் எப்படி அறிந்துகொள்வது? நாம் காண்கின்ற சகோதர சகோதரிகளை அன்புகூரவில்லையெனில், காணமுடியாத தேவனை அன்புகூருவதாக நாம் கூறிக்கொள்ளும் விஷயத்தில் நாம் நம்மையே வஞ்சிக்கின்றவர்களாய் இருப்போம் என்று அப்போஸ்தலன் மூலமாக நமது கர்த்தர் நமக்குக் கூறுகின்றார். ஆகையால் கர்த்தருக்கான அன்பானது, அதனை சகோதர சகோதரிகளுக்கான அன்பில் வெளிப்படுத்திடுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது மற்றும் பிரியமான மந்தைக்காக மிகுந்த அன்பினையும், பரிவையும், பரந்த மனப்பான்மையையும், பொறுமையையும், சாந்தத்தையும், சகோதர சிநேகத்தையும் வெளிப்படுத்துகிறவர்கள் மாத்திரமே உண்மையுள்ள மேய்ப்பர்களென அல்லது மூப்பராயிருப்பதற்குத் தகுதியானவர்களெனக் கருதப்படவேண்டும். சுயத்திற்கான நாட்டம்கொண்டவர்களையும், பேராசைக்கொண்டவர்களையும் குறித்து அச்சம் கொள்ளப்பட வேண்டும் மற்றும் இத்தகையவர்கள் ஊக்குவிக்கப்படக்கூடாது.

இவன் காரியம் என்ன?

நமது கர்த்தர் அப்போஸ்தலனாகிய பேதுருவிடம் கேள்வி கேட்டதைத் தொடர்ந்து, பேதுரு வயதான மனுஷனாகும் வரை ஜீவிப்பார் என்றும், வயதாகும்போது பேதுரு தன் இஷ்டபடி செய்ய முடியாமல் இருப்பார் என்றும், அவரைக் குறித்துத் தீர்க்கத்தரிசனம் ஒன்றினைக் கூறினார். இது பேதுருவின் எதிர்க்காலம் மிகவும் பிரகாசமானதாக இருக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டது; இது அவரது உண்மை குறித்துள்ள இன்னும் அதிகமான பரீட்சையைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருந்தது. அப்போஸ்தலன் சோர்ந்துபோய்விடவில்லை என்றும், அவர் மரணம் வரை உண்மையுள்ளவராய் இருந்தார் என்றும் நாம் அறிந்து மகிழ்கின்றோம். இந்தத் தீர்க்கத்தரிசனமானது – பேதுருவுக்கும், அங்குக் காணப்பட்டதான மற்ற அப்போஸ்தலர்களுக்கும், தாங்கள் புதிதாக ஈடுபடப்போகின்றதான பணியில், தாங்கள் இராஜ்யத்தின் கனங்களையும், ஆசீர்வாதங்களையும் எதிர்ப்பார்க்கக்கூடாது என்றும், “ஊழியக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல எனவும், மனுஷர்கள் எஜமானை நிந்தித்ததையே தவிர மற்றப்படி, வேறு எதையும் ஊழியக்காரன் எதிர்ப்பார்க்கக்கூடாது எனவும்” முன்னொரு தருணத்தில் கர்த்தர் உரைத்திட்டவைகளையே தாங்கள் நினைவுகூர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினதாய் இருந்தது. இந்தத் தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரங்கள், தங்கள் மீது வைக்கப்பட்டதான பல்வேறு பரீட்சைகளையும், நிபந்தனைகளையும் எத்துணைக் கம்பீரமாய் எதிர்க்கொண்டவர்களானார்கள்! இது தொடர்புடைய விஷயத்தில் நமக்கும் ஒரு படிப்பினை உள்ளது, அதாவது நம் ஆண்டவருக்கு நாம் கொண்டிருக்கும் உண்மை என்பது ஏதோ ஒருவகையான உபத்திரவங்களை நமக்குக் கொண்டு வரும் என்பதேயாகும். ஆகையால் நாம் நமது சொந்த சித்தங்களை அல்லது நம் சொந்த வழிகளை நாடாமல், மாறாக நம்முடைய நலனுக்கடுத்த விஷயங்களில் கர்த்தருடைய தெய்வீக வழிநடத்துதலுக்காக எதிர்ப்பார்த்திட வேண்டும் மற்றும் அதையே ஏற்றுக்கொண்டிட வேண்டும் மற்றும் இதற்கே, அதாவது புதுச்சிருஷ்டிகளென நம்முடைய நன்மைக்கு ஏதுவாய்ச் சகலத்தையும் அவர் மாற்ற வல்லவர் என்பதை அறிந்து, இதற்கே முன்னுரிமை கொடுத்திட வேண்டும். பேதுரு கொடுமையானதொரு மரணம் அடைவார் என்று நமது கர்த்தருடைய வார்த்தைகள் குறிப்பதாகவும், இறுதியில் “என்னைப் பின்பற்றிவா,” என் மாதிரியினைக் கவனித்து, அதைப் பின்பற்றிவா என்று இயேசு கூறினதாகவும் யோவான் நமக்குத் தெரிவிக்கின்றார்.

உரையாடல் தன்னைப் பற்றியே அதிகமாய்க் காணப்படுகின்றது என்று பேதுரு உணர்ந்துகொண்டார் மற்றும் கொஞ்சம் உரையாடலை மாற்றிட நாடினவராக, கர்த்தருடைய அபிமான சீஷன் என்று தான் அறிந்திருந்த யோவானைக்குறித்து, “ஆண்டவரே, இவன் காரியம் என்ன?” யோவானைக் குறித்த உம்முடைய தீர்க்கத்தரிசனமென்ன மற்றும் அவர் விஷயத்தில் உம்முடைய ஏற்பாடென்ன? என்ற விதத்தில் கேட்டார். நமது கர்த்தருடைய பதிலானது கிட்டத்தட்டச் சுருக்கென்றும், வெடுக்கென்றும் காணப்பட்டது; “உன் சொந்தக் காரியத்தினைப் பார்; நீ செய்ய வேண்டியது அநேகம் உள்ளது” என்று சொல்வதற்குச் சமமாக, ஆனால் மிகுந்த மரியாதையான விதத்தில் காணப்பட்டது. அதற்கு இயேசு கூறினதாவது: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால்…

உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா

இது கர்த்தருடைய பின்னடியார்கள் கற்றுக்கொள்வதற்கு இருப்பதிலேயே கடினமான பாடமாகவும், அதே சமயம் மிகவும் முக்கியமான பாடமாகவும் காணப்படுகின்றது. நாம் சுற்றிப்பார்க்கவும், நமக்குத் கர்த்தரால் அனுமதிக்கப்படுகின்றதான அதே அளவிலான சிட்சைகள் அல்லது சோதனைகள் அல்லது பிரச்சனைகள் அல்லது பாரங்கள் ஏன் சகசீஷன் ஒருவருக்கு அனுமதிக்கப்படவில்லை என்று சிந்திக்கவும் முற்படுவோமானால் மற்றும் கர்த்தர் குறித்தும், அவரது ஞானம் குறித்தும், அவரது செய்கைகள் குறித்துமுள்ள விஷயத்தில் நியாயந்தீர்க்கிறவர்களாகுவதற்கு நாம் நம்மை அனுமதிப்போமானால், விளைவு நமக்கே பாதகமாய்க் காணப்படும். இது நம்முடைய சமாதானத்தை அழித்துப்போடும் மற்றும் நம்முடைய விசுவாசத்தினை வலுவற்றதாக்கிவிடும் மற்றும் இராஜ்யத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திடுவதற்கு அவசியமான படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்குத் தடையாகக் காணப்படும். தெய்வீக வழிநடத்துதல்கள் / செய்கைகள் குறித்து இத்தகைய விமர்சனங்கள்/குறைக் கூறுதல்கள் நம்முடைய மனங்களில் தோன்றுமானால், பேதுருவிடத்தில் நமது கர்த்தர் கூறின பதிலைப்போலவே நாமும் நம்மிடம், “உனக்கென்ன, நீ பின்பற்றிவா. இந்தக் காரியங்களை எல்லாம் ஒழுங்குப்படுத்துவதற்கு நீ திராணியற்றவன்; [R4184 : page 174] இன்னும் ஆண்டவர் தமது திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் அனைத்தையுமே உனக்கு விவரித்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை, அது தகுதியாயும் இராது. விசுவாசத்தையும், கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்தலையும் மற்றும் நம்பிக்கையையும் கற்றுக்கொள்வது உனக்கு நலமானதாய் இருக்கும்” என்று உடனடியாகக் கூறிட வேண்டும். நம்மில் எந்த இரண்டுபேரும் ஒரே மாம்ச சுபாவத்தினைக் கொண்டிருப்பவர்கள் அல்ல, ஆகையால் கர்த்தருடைய கரத்தினின்று ஒரே மாதிரியான பயிற்சியினை அவசியமாய்ப் பெற்றிருப்பவர்களாக எந்த இரண்டு பேரும் காணப்படுவதில்லை. நாம் அவரது ஞானம் மற்றும் அன்பின் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கின்றோம்; நமக்கான சோதனைகள் அதிகமாய் இருக்குமானால், அதற்கேற்ப நம்முடைய ஆசீர்வாதங்களும் அதிகமாய் இருக்கும் என்றும், “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று கர்த்தர் பவுல் அடிகளாரிடம் கூறினதுபோன்று, நம் ஒவ்வொருவரிடமும் கூறுவார் என்றும் உணர்ந்து, நமது நம்பிக்கையினை வெளிப்படுத்திடுவோமாக (2 கொரிந்தியர் 12:9). ஆகையால் நமது சோதனைகளுக்கேற்ப கர்த்தருடைய கிருபை காணப்படுமானால், நாம் அவரது கிருபையினை அதிகமாய்ப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, அவர் அனுப்பிடும் சோதனைகள் யாவற்றையும் களிகூர்ந்து ஏற்றுக்கொள்வோமாக! என்று அப்போஸ்தலனோடுகூட நாமும் கூறிடுவோமாக. மேய்ப்பனை அறிந்துகொள்வதும், அவரைப் பின்பற்றுவதும், முடிந்தமட்டும் தன் பாதங்களுக்கு வழியினைச் செம்மையாக்கிக்கொள்வதும், மந்தை மற்றும் அதன் தேவைகள் விஷயத்திலுள்ள பொதுவான கண்காணிப்பினை மேய்ப்பனிடத்தில் விட்டுவிடுவதும், மேய்க்கும் வேலையிலும் மற்றும் கர்த்தருடைய நாமத்தில் அவரது பிரியமான மந்தைக்கு ஆலோசனை வழங்குவதிலும் அல்லது உதவிபுரியும் விஷயத்திலும் உதவி செய்யத்தக்கதான வாய்ப்புகளைச் சகோதர சகோதரிகள் வாயிலாகக் கர்த்தர் அருளும் அளவுக்கு ஏற்ப, அவைகளில் கவனம் செலுத்திடுவதும் ஒவ்வொரு ஆட்டிற்கடுத்தக் காரியமாய் இருக்கின்றது.