R4597 (page 131)
“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” (யாக்கோபு 5:16)
நாம் குற்றம் புரிந்திருக்கையில், யாருக்கு விரோதமாய்ச் செய்யப்பட்டதோ, அவரிடம் குறிப்பாக உரிய வருத்தத்துடனும், முடிந்தமட்டிலுமான பிராயச்சித்தங்களுடனும் ஒப்புக்கொள்வதற்குரிய தாழ்மை மற்றும் விருப்பத்தின் – பொதுவான கொள்கையையே இவ்வசனம் குறிக்கின்றதாய் இருக்கின்றது. நாம் பூரணர் இல்லை என்று மனம் திறந்து ஒப்புக்கொள்வது என்பது முற்றிலும் சரியானதே மற்றும் யாரும் பூரணராக தங்களைக் காட்டிக்கொள்வதற்கு முற்படக்கூடாது; மாறாக “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை என்றும், நம்முடைய நோக்கங்கள் மற்றும் பிரயாசங்களில் நீதியாய் மாத்திரம் இருக்கின்றோம் என்றும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய புண்ணியத்தின் வாயிலாக, தேவனுடைய பார்வையில் முழுமையான மூடுதலுக்காய் நம்பியிருக்கின்றோம் என்றும் வேதவாக்கியங்கள் கூறுபவற்றையே நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மற்றவர்களுக்கு அனுகூலமாய்க் காணப்படத்தக்கதாகச் சிலசமயங்களில் குற்றங்களை வெளிப்படையாய் அறிக்கையிட வேண்டியிருக்கும் மற்றும் நம்முடைய சொந்த குறைபாடுகளைக் குறித்துக் கூறிடுவது என்பது மற்றவர்களுக்குப் பிரயோஜனமாய் இருக்கும் என்றால், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கண்ணோட்டத்தில், அதைச் சரியான விதத்தில் சொல்லிடுவதற்கு நாம் தயக்கம் காண்பிக்கக்கூடாது; பொதுவாக நம்முடைய அபூரணங்களை [R4598 : page 131] மறைக்க முயற்சிக்கின்றோம்; ஆனால் நம்முடைய குற்றங்களை முழுவதுமாய் ஒழித்திடுவது என்பது தினந்தோறுமான நம்முடைய பிரயாசமாய்க் காணப்பட வேண்டும் என்பதே நம்முடைய கருத்தாகும்.
எனினும் இந்த வசனப்பகுதியில், அப்போஸ்தலன் ஆழமான சிந்தை ஒன்றைக் கொண்டிருக்கின்றார்; இங்குத் தேவனிடத்திலிருந்து ஒருவனை அந்நியனாக்கின மற்றும் அவனுக்கும், தேவனுக்கும் இடையில் மேகம் வர அனுமதித்திட்ட பாவம் ஒன்றினைச் செய்த ஒருவரின் காரியம் பற்றி அப்போஸ்தலன் பேசிக்கொண்டிருக்கின்றார். அது பாவங்களைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருப்பதாகும். அவன் சரீரப்பிரகாரமாக வியாதிப்பட்டிருக்கின்றானோ, இல்லையோ, அவன் ஆவிக்குரியவற்றில் வியாதிப்பட்டிருக்கின்றான். அவனுக்காக ஜெபம்பண்ணும்படிக்கும், அவனுக்குக் கர்த்தருடைய நாமத்தினால் எண்ணெய்ப் பூசும்படிக்கும், சபையின் மூப்பர்களை அவன் வரவழைப்பதே அவனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (ஆவிக்குரிய பிணியாளி – என்று நாம் எண்ணுகின்றோம்) மற்றும் “அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். அச்சகோதரன் தனது சொந்த நிலையினைக் கர்த்தரிடத்தில் பேசுவதற்குரிய நிலைமையில் இல்லை மற்றும் இதனால் நாம் நம்முடைய சகோதரரிடத்தில் அனுதாபங்கொள்ளவும், அவருக்கு உதவிசெய்யப்போகவும், அவருக்காக வேண்டிக்கொள்ளவும் கர்த்தர் ஏற்பாடு பண்ணியுள்ளார். நம்முடைய வேண்டுதல்களானது பலனளிக்கும் என்றல்ல, நீதிக்கு முன்பாக, குற்றங்களுக்கும், அபூரணங்களுக்கும் நமது பரிந்துபேசுபவரின் வேண்டுதல்தான் பலனளிக்கும்; ஆனால் நம்முடைய பரிந்து பேசுபவர் இப்படியாக அவ்வப்போது தம்மை நிறுத்தி வைத்துக்கொள்கின்றார் – அதாவது தவறில் காணப்படும் ஒருவரின் நன்மைக்காகவும், விஷயத்தை அறிந்திருக்கும் சகோதரர்களின் அனுதாபத்தினைத் தூண்டிடுவதற்காகவும், இவர்கள் தாங்களும் சோதனைக்குள்ளாகாமல் இருக்க வேண்டும் என்றும், தங்கள் உறுதியினின்று தாங்கள் விழுந்துபோகாமல் இருக்க வேண்டும் என்றும் நினைவில் கொண்டு உதவி புரிந்திட நாடிடுவதற்கும் மற்றும் இப்படியாகச் சபையில் அனுதாபத்தின் ஆவியும், ஒருவருக்கொருவர் உதவி, ஏந்திடும் தன்மையும் ஊக்குவிக்கப்படுவதற்கும் என்று அவ்வப்போது நமக்கான பரிந்துபேசுபவர் தம்மைக்கட்டுப்படுத்தி வைத்துக்கொள்கின்றார்.
விசேஷமாய் வேண்டிக்கொள்ளப்படாமலேயே, சபையிலுள்ள மூப்பராகிய சகோதரர், கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள சக அங்கத்தினர்களில் ஒருவருக்காக ஜெபம்பண்ணிடுவதற்கோ அல்லது சபையின் அங்கத்தினர் ஒருவர் இன்னொருவருக்காக பொதுவாய் ஜெபம்பண்ணிடுவதற்கோ எதிராய்ச் சொல்லப்படுவதற்கு எதுவுமில்லை. இது முற்றிலும் சரியே. ஒரு சகோதரன் தவறான பாதையில் செல்வதை ஒருவர் காண்பாரானால், அவருக்காக இவர் ஜெபம் மாத்திரம்பண்ணிடாமல், தன்னால் முடிந்தமட்டிலுமான ஞானமான விதத்தில் அவர் ஏறெடுத்துள்ளதான தவறான போக்கினை அவரது கவனத்திற்குக் கொண்டுவருவதன் மூலம், அவரைச் சீர்ப்பொருந்தப்பண்ணுவதற்கு இவர் தாழ்மையான ஆவியில் நாடிட வேண்டும்; ஆகிலும் ஐயத்திற்கிடமின்றி இம்மாதிரியான முயற்சிகள் என்பது, மேலே சொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் – அதாவது தனது தேவையினை உணர்ந்து, தனக்காக ஜெபம்பண்ணும்படிக்கு மூப்பர்களைப் பிணியாளி அழைத்திடாதது வரையிலும் ஏறெடுக்கப்பட முடியாது.
தவறான வழியில் போகிறதாக தாங்கள் காண்கின்றவர்களுக்காக மூப்பர்கள் மாத்திரம் ஜெபம் பண்ணிடக்கூடாது; வாய்ப்பிற்கும், திறமைக்கும் ஏற்ப சபையின் சகல மற்ற அங்கத்தினர்களின் நலன்களைக் கவனிப்பதற்கான விசேஷித்தப் பொறுப்பினைக் கர்த்தர் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினன் – சபையின் ஒவ்வொரு அங்கத்தினன் மீதும் வைத்துள்ளார்; எனினும் முதிர்வயதுள்ள சகோதரனைச் சரிப்படுத்துவதற்கும், கடிந்துகொள்வதற்கும், அறிவுறுத்துவதற்கும் முற்படும் விஷயத்தில் சபையிலுள்ள இளவயதுள்ள சகோதரனிடத்தில் அதே அளவிலான பொறுப்போ அல்லது ஏற்புடைமையோ இருக்கமுடியாது. “முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போல் பாவி என்று தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் கூறுகின்றார்; இப்படியாகக் கர்த்தருடைய குடும்பத்தில் காணப்படும் இளவயதுள்ள சகோதரன் ஒருவர், சரியான நடத்தையினின்று விலகுதலாய் ஒரு காரியம் இருக்கின்றது என்று தான் உணரும் எதையேனும் காண்கையில், அவர் என்ன செய்திடலாம் என்று நாம் பார்க்கின்றோம். அவர் இக்காரியத்தினை அணுகுவதற்குத் தயக்கம் கொண்டிருக்க வேண்டும் மற்றும் தான் ஒருவேளை மிகவும் அனுபவம் மிக்கவராய் இருந்திருந்து அணுகுகையில் அடையப்பெறும் நற்பலன்களைப் போன்று, தன்னால் நற்பலன்களை அடையமுடியாது என்றும், தன்னுடைய அணுகுதல் பாதிப்பையே உண்டுபண்ணும் என்றும் எண்ணிட வேண்டும். ஆகையால் அவர் அந்நபருக்கு ஆலோசனை வழங்க முற்படுவதற்குப் பதிலாக, கொஞ்சக்காலம் அந்நபருக்காக இரகசியமாய் ஜெபம்பண்ணிடுவது ஞானமான காரியமாய் இருக்கும். ஆனால் ஒருவேளை இறுதியாக, அவசியம் என்று அவர் கருதுவாராகில், சபையின் மூப்பர்கள் சிலரிடத்தில் பேசி, அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்டுக்கொள்வது அல்லது அவர்கள் வாயிலாக அச்சகோதரனிடத்தில் பேசிடுவது நலமாய் இருக்குமென மூப்பர்கள் எண்ணுவார்களா என்று கேட்டுக்கொள்வது, அவருக்கு ஞானமாய் அநேகமாக இருக்கும். அவர் அந்நபரைக்குறித்துத் தீமையாய் ஊகிக்கின்றார் – அதாவது “தீமை பேசுகின்றார் என்று நாங்கள் அனுமானிக்கவில்லை மாறாக தவறான பண்புகளின் தன்மைகள், தவறான ஜீவப்பாதைக் குறித்த சிலவற்றை, தவறு என்று அவர் அறிந்திருக்கும் ஏதோ சிலவற்றை, வெளிப்படையாய்த் தென்படுகின்ற ஏதோ சிலவற்றை, கற்பனை பண்ணிடாத ஏதோ சிலவற்றைப் பற்றி முழுமையாய்க் கொஞ்சம் அறிந்திருக்கின்றார் என்று நாம் எண்ணுகின்றோம். தீமை பேசுதல் முதலானவைகளில் உள்ளடங்குபவைகளில் அநேகமானவைகள் முற்றிலும் கற்பனையானவைகளாக, அதாவது “அவர் இன்னவிதமாய்ச் செய்யப்போகின்றார் என்று நான் எண்ணினேன் மற்றும் “அவள் இன்னவிதமாய் செய்து கொண்டிருக்கின்றாள் என்று நான் எண்ணினேன் அல்லது “இன்னென்ன விதமாய்ச் செய்திடுவதற்கு அவள் நோக்கம் கொண்டிருந்தாள் என்று நான் எண்ணினேன் என்பதாகவே காணப்படுகின்றது. இவைகள் [R4598 : page 132] தீமை பேசுதலாக வகுக்கப்படலாம். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஒரு சகோதரன், தான் மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடவில்லை என்றும், மிகவும் முக்கியமற்ற காரியங்களில் நியாயந்தீர்க்க தான் முற்படவில்லை என்றும், மற்றச் சகோதரனுக்கு விபரீதமான, கவலைக்கிடமான மற்றும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான புதுச்சிருஷ்டியென அச்சகோதரனுக்கு ஆபத்தான ஏதோ விஷயம் உண்மையிலேயே இருக்கின்றது என்றும் அறியத்தக்கதாக, அக்காரியத்தினை ஜெபத்தில் வைத்திட வேண்டும்.
பொதுவான நடைமுறை, நமது கர்த்தர் மத்தேயு 18:15-ஆம் வசனத்தில் உபதேசித்துள்ளது போன்று, சம்பந்தப்பட்ட நபரிடத்தில் தனிமையில் செல்வதேயாகும்; மூப்பரிடத்தில் செல்வது என்பது, சம்பந்தப்பட்ட நபர் காரியத்தினைச் சரிப்படுத்துவதற்குத் தனது சொந்த ஆற்றல் முற்றிலும் போதாது என்று உணரும் சில மிகக் கவலைக்கிடமான காரியத்தில் மாத்திரமேயாகும். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் மிகவும் சொற்பமாகவே காணப்படும் என்பது எங்களுடைய நம்பிக்கையாய் இருக்கின்றது. ஒருவேளை காரியம் தனக்கு விரோதமாய்ச் செய்யப்பட்டதாய் இருக்குமானால், அந்நபரிடத்தில் தனிமையில் செல்வது அவரது கடமையாக இருக்கும்; ஒருவேளை காரியம் சபைக்கு விரோதமானதாகவோ அல்லது வெளியரங்கமான ஒழுக்கக்கேடாகவோ, தவறாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நீதியின்கொள்கை எதையேனும் மீறியுள்ள காரியமாகவோ இருக்குமாயின், இது சற்று வேறுபட்ட நிலையிலுள்ள காரியமாய் இருப்பதினால், அதிகமாய் அதிகாரமுடைய ஒருவரை அழைத்திட வேண்டும்; காரணம் தனிப்பட்ட நபரின் உரிமைகளல்ல, மாறாக சபையினுடைய அல்லது சத்தியத்தினுடைய அல்லது கர்த்தருடைய காரணங்களுடைய நலனுக்கடுத்தவைகளுக்கு விரோதமாகவே குற்றஞ்செய்யப்பட்டுள்ளது; இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் மூப்பர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி காரியத்தைக்குறித்து நன்கு பகுத்துணர முடிகின்றவர்களாகவும், காரியத்தை அணுகுவது எப்படி என்பதையும் நன்கு அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.