சபை நிர்வாகம்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R536 (Page 6)

சபை நிர்வாகம்

CHURCH GOVERNMENT

“எக்ளீஷியா என்ற தலைப்பில் டவர் வெளியீட்டில் வந்திட்டதான கட்டுரையின் காரியங்களானது, கிறிஸ்துவின் சபை என்றால் என்ன என்றும், சத்தியம் மற்றும் அன்பின் ஆவியானது யுகம் முழுவதிலுமுள்ள பரிசுத்தவான்களைக் கட்டி இணைக்கின்றது என்றும் நம்மைப் புரிந்துகொள்ளச் செய்தது. ஆனால் சபை பிரிவுணர்ச்சியினின்று, ஆதியிலிருந்ததும் மற்றும் ஈடுபலியில் விசுவாசமுள்ள பரிசுத்தமாக்கப்பட்ட விசுவாசிகள் யாவரையும் உள்ளடக்கும் உண்மையானதுமான ஒரே சபையினிடத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருக்கின்றதான அநேகம் ஊழியக்காரர்களிடமிருந்தும் மற்றும் இன்னும் பலரிடமிருந்தும், கேள்விகள் நமக்கு வருகின்றன் ஒவ்வொரு பட்டணங்களிலும் மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் பெற்றிருக்கும் உள்ளூர் அமைப்புகளை அப்போஸ்தலர்கள் நிறுவினதை நாங்கள் அங்கீகரிக்கின்றோமா? ஒருவேளை நாங்கள் அப்படியாகப் பெற்றிருக்கவில்லை என்றால், ஏன்? அப்போஸ்தலர்களுடைய நாட்களில் காணப்பட்டிருந்த organization /அமைப்பானது, இப்பொழுது பெற்றிருப்பது சரியாய் இராதா? இப்படியாக எந்த அமைப்புகளும் இல்லையெனில் சுவிசேஷ ஊழியமும், போதித்தல்களும் எப்படி வெற்றிகரமாக நடத்தப்படுகின்றது? என்றும் நம்மிடம் கேட்கின்றார்கள்.

நம்முடைய நாட்களின் சூழ்நிலைகளிலிருந்து, அப்போஸ்தலருடைய நாட்களின் சூழ்நிலைகள் வேறுபட்டிருக்கின்றது என்று நாங்கள் பதிலளிக்கின்றோம்; எப்படியெனில் அவர்களது வேலையானது அப்போதுதான் துவங்குகின்றதான யுகத்தின் வேலைக்கு ஒழுங்குப்படுத்துவதாகவும், அஸ்திபாரம் போடுவதாகவும் அதிகம் காணப்பட்டது; ஆனால் நம்முடைய வேலையோ இதற்கு நேர்மாறானதாகும்; இப்பொழுது இந்த யுகத்தின் முடிவாக அல்லது அறுவடைகாலமாக இருக்கின்றது; அப்போதும், இப்போதுமுள்ள வழிமுறைகளானது, விவசாயி விதை விதைப்பதற்கும் மற்றும் அறுவடையை அறுப்பதற்கும் பயன்படுத்தும் வழிமுறைகளும், கருவிகளும் வேறுபடுவது போன்று, வேறுபடுகின்றது.

யூதயுக அறுவடையின் போதான இயேசுவின் வழிமுறைகளானது, தற்போதைய வேலைக்கு நல்லதொரு வழிக்காட்டியாய் இருக்கின்றது. அவருக்கு எப்படியோ, அப்படியே நமக்குமாகும். அவரது ஊழியம் சமாதானம் கொண்டுவருவதாய் இராமல், பட்டயத்தை – பிரிவினையைக்கொண்டு வருவதாய் இருந்தது (மத்தேயு 10:34). சிலவிதங்களில் பிரிப்பதும், இடிப்பதுமாகிய வேலைகள் கட்டியெழுப்பும் வேலை போன்று மனதுக்குகந்த வேலையாய் இருப்பதில்லை ஆனால் நாம் எஜமானுடைய சித்தத்தைச் செய்திடுவதற்கு ஆவலுள்ளவர்களாய்
இருப்போமானால், இது தவிர நமக்கு வேறு எந்த விருப்பமும் இராது மற்றும் அதிலும் விசேஷமாகப் பரிசுத்தவான்களை மகிமைப்படுத்துவதற்கும் மற்றும் அவர்கள் வாயிலாகப் பொதுவாயிருக்கும் மனுக்குலத்திற்கென ஆசீர்வாதத்தின் யுகத்தினைக் கொண்டுவருவதற்கும் பிரித்தல் அவசியம் என்று அவர் நமக்குக் காண்பித்திருப்பாரெனில், இது தவிர, நமக்கு வேறு எந்த விருப்பமும் இராது. இப்படிப் பார்க்கையில் அறுவடையானது, திராட்சத்தோட்டத்தில் மிகுந்த மகிழ்ச்சிகரமான வேலையாகிடும்.

இயேசு யூத அறுவடையின் போது சீஷர்களோடு காணப்படுகையில், அவர் சபைகளை ஏற்படுத்தவில்லை என்பதினால், நாமும் அப்போஸ்தலர்களினால் நிறுவப்பட்டதான எளிமையான மற்றும் பிரிவற்ற அமைப்புகள் அவசியம் என்றோ அல்லது விரும்பத்தக்கது என்றோ நாம் கருதுகிறதில்லை. நமது கர்த்தர் மறுபடியுமாக வந்திருக்கின்றார்; “அடிமையின் ரூபத்தில் அல்ல, மாம்சத்தில் அல்ல, மாறாக ஆவிக்குரிய ஜீவியாக வந்திருக்கின்றார்; அவர் வந்து காணப்படுகின்றபடியால், அவர் அனைத்திலும் ஒவ்வொரு ஊழியக்காரனுக்கு வழிகாட்டியாகவும், வழிநடத்துபவராகவும் காணப்படுகின்றார்.

ஆனால் எந்தப் பூமிக்குரிய அமைப்பும் உருவாக்கப்பட முற்படவில்லை என்றாலும், நாம் அனைவரும் ஒன்றாய் ஒரே தலையானவருடன் இணைக்கப்பட்டிருக்கின்றோம் மற்றும் அவரது வசனம் மற்றும் ஆவியின் வழிநடத்துதல்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றோம். நம்மில் எவரேனும் வழிவிலகுவதையும், “சத்தியத்தை விட்டுவிலகி மோசம் போகுவதையும் நாம் காண்கையில், ஒவ்வொரு அங்கத்தினனும், இப்படியாக விலகிப்போகிறவனைச் சத்தியத்திற்குள்ளாகச் சீர்ப்பொருந்தப் பண்ணுவதற்குத் தன்னால் முடிந்தவற்றைச் செய்திடுவதற்கான அன்பின் கடமையினை உணர்கின்றவனாய் இருப்பான்; எனினும் சீர்ப்படுத்துதல் முதலியவைகளிலுள்ள மேலான பொறுப்பானது, வந்திருக்கும் நமது ஆண்டவருடையது என்றும், அவர் இதைச் செய்யவும் செய்வார் என்றும் நாம் உணர்வோம். அவர் சித்தம் செய்ய நாம் செயல்பட்டு, பலனை அவரிடம் விட்டுவிடுவோம்.

நம்முடைய ஊழியக்காரர்கள் ஒருவேளை கூடிவந்திருந்தால் – எப்படி இயேசுவின் பின்னடியார்கள் முதலாம் வந்திருத்தலின்போது பரிசேயர், வேதபாரகர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்பட்டார்களோ, அதுபோலவே இவர்கள், “பெயர்ச்சபையை சேர்ந்தவர்களிடமிருந்து பலமாய் வேறுபட்டுக் காணப்படுவார்கள்.

பெயர்ச்சபை ஊழியக்காரர்கள் பிரபலத்திற்காக நாடி, அதைப் பெற்றுக்கொள்கின்றனர்; மற்றும் அவர்களது ஊழியங்களுக்குத் திரளாய் ஆதரிக்கப்பட்டு, கனப்படுத்தப்படுவதன் வாயிலாகப் பலன் கிடைக்கின்றது. தாலந்துள்ள ஒரு வாலிபனுக்குப் பெயர்ச்சபை ஊழியத்திற்குள்ளாகப் பிரவேசிப்பதைக் காட்டிலும், வேறெதுவும் கனங்களுக்கும், சுகங்களுக்கும் மற்றும் சௌகரியமான ஜீவியங்களுக்கும் நேரான சுலபமான அல்லது நேர் வழியாய் இருக்காது. ஆனால் சத்தியத்தின் மீதான அன்பின் காரணமாகவும், தேவனுக்கு மகிமை சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் மனிதர்கள் கேட்கின்றார்களோ இல்லையோ, அவர்களுக்குத் தேவனுடைய ஆலோசனை வழங்குவதற்குச் செல்பவர்களின் விஷயம் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவர்களுக்கு எந்த விதத்திலும் தேவனுடைய சுதந்தரத்தின் மீதான இறுமாப்பான ஆளுகையானது சம்பளமாக வழங்கப்படுகிறதில்லை மாறாக இவர்கள் தங்களது ஆண்டவரைப் போன்று, மனுஷரால் வெறுத்து, புறக்கணிக்கப்படுகின்றனர்; ஆனால் இவர்கள் தேவனுடைய மகிமை வெளிப்படுவதற்காக சந்தோஷத்தோடு எதிர்நோக்கி, தற்காலத்தின் துன்புறுத்தல்கள், கஷ்டங்கள் மற்றும் சோதனைகள் எனும் கூலியினைப் பெற்றுக்கொள்வதைச் சிலாக்கியமெனக் கருதுகின்றனர். இவர்கள் எந்தத் தாலந்துகளைப் பெற்றிருந்தாலும், அவைகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பினும், அதை நன்மைக்கேதுவாய்ப் பயன்படுத்துகின்றனர். “டவர் வெளியீட்டுனுடைய பக்கங்கள் வாயிலாக [R 537 : Page 2] சிலர் தங்களுக்குள் பெற்றிருக்கும் வரங்களைத் தட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர் மற்றும் சிலருக்கு வாய்ப்பு இருப்பதற்கேற்ப ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பிரயாணம்பண்ணி வார்த்தைகள் மூலமாகவும், அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் மூலமாகவும் பிரசங்கிக்கின்றனர்; அவ்வளவுக்குப் பரந்த வாய்ப்புகளற்ற வேறு சிலர் தங்கள் சொந்த இடங்களில் ஊழியத்தில் ஈடுபட்டுக் காணப்படுகின்றனர். சிலருக்குத் தங்களுடைய முழு நேரத்தையும் நேரடியாக சுவிசேஷபணிக்குக் கொடுத்துவிட முடிகின்றது; பெரும்பான்மையானவர்கள், “எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுவதற்கென சொந்த கைகளினால் உழைத்திடக் கடமைப்பட்டிருக்கின்றனர்.

கிறிஸ்துவின் இந்த ஊழியக்காரர்களில் (வேலைக்காரர்களில்) பெரும்பான்மையானவர்கள் பரிசுத்தவான்களைத் தேடுவதன் மூலம் தங்கள் வேலையைச் செய்கின்றனர்; இந்தப் பரிசுத்தவான்களுக்கே தற்கால சத்தியங்களானது ஏற்றகால சத்தியமாகக் காணப்படுகின்றது மற்றும் இப்பாடங்களைக்குறித்த உரையாடல் மூலமாகவும், குறிப்பிட்ட சில கட்டுரைகளுள்ள காகிதங்களை வாசிக்க இரவலாகக் கொடுப்பதன் மூலமாகவும், இவர்கள் அவர்களை மகா பரிசுத்தமான விசுவாசத்தில் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர்; வேதவசனத்தை அதிகப் பூரணமாய்ப் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றனர்; அதாவது ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் அப்பொல்லோவுக்குச் செய்ததுபோன்று செய்கின்றனர் (அப்போஸ்தலர் 18:26); மற்றும் ஒவ்வொருவனும் தன் கைக்கு அகப்படுவதை முழுப்பலத்தோடு செய்கின்றான்; தான் பெற்றிருக்கும் தாலந்துகள் எதையும் பயன்படுத்தி, இப்படியாக தேவனுடையதான தனது சரீரத்திலும், ஆவியிலும் தேவனை மகிமைப்படுத்த நாடுகின்றான். தேவபக்திக்கு ஏதுவான கைப்பிரதி அல்லது அச்சிடப்பட்டப் பக்கம் என்று உரிமைப் பாராட்டும் எதையும், பகுத்தறியாமல் விநியோகிக்கும்போது கர்த்தருடைய காரணங்களுக்காக ஊழியம் புரிந்துள்ளதாக எண்ணிக்கொள்வது அநேகம் கிறிஸ்தவர்களின் தவறாய்க் காணப்படுகின்றது மற்றும் இது குறித்து அனைவரும் ஜாக்கிரதையாயும் காணப்பட வேண்டும். இது விஷயத்திலும், தான் செய்திடும் எல்லாவற்றிலும் கவனமுள்ள ஊழியக்காரன் விவேகமாகவும், நல்லது, கெட்டதைப் பகுத்தறிந்து வேற்றுமை காண்கிறவனாகவும் காணப்படுவான் இதுவே பெரும்பான்மையானவர்களின் எளிமையான வழி முறைகளாகக் காணப்படுகின்றது மற்றும் இவர்களது வேலையானது, தேவனுடைய வழிக்காட்டுதலின் கீழ் அரண்களை நிர்மூலமாக்கக் கூடியதாய்க் காணப்படுகின்றது. இவர்களது சத்தியத்திற்கு முன்பாக, இங்குக் கொஞ்சமாகவும், அங்குக் கொஞ்சமாகவும் பாபிலோனும், அவளது தப்பறை எனும் மதில்களும் உடைந்துகொண்டிருக்கின்றது. இப்பாடம் சம்பந்தப்பட்ட வேறொரு கேள்வி:

ஊழியத்திற்கான அழைப்பு என்றால் என்ன? – SUB HEADING

அர்ப்பணிக்கப்பட்டவர்கள் யாவரும் (அவர்கள் பின்பற்றும் பட்சத்தில்) ஆவியினால், தேவனுடைய காருண்யம் மற்றும் அன்பான திட்டங்கள் குறித்த அதிகமதிகமான புரிந்துகொள்ளுதலுக்குள்ளாக வழிநடத்தப்படுவார்கள்; மற்றும் இவர்கள் அன்பின் ஆவியினால் நிரம்பி மற்றும் தாங்கள் இத்தனை இலவசமாய்த் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டதும், தங்களை இவ்வளவுக்கு ஆசீர்வதித்ததும், தங்களுக்கு உதவினதுமான விலையேறப்பெற்ற சத்தியத்தினை அறிவதற்குரிய அவசியமுடைய மற்றவர்களைக் காண்கையில் – இதுவே இவர்கள் தங்களது தாலந்துகளைப் பயன்படுத்தி மற்றும் பரலோகத்திலுள்ள தங்களது பிதாவுக்கு மகிமை உண்டாகத்தக்கதாக தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, சத்தியத்தினை அறிவித்திடுவதற்குரிய தேவனுடைய அழைப்பாகும்.

தலையைப் போன்றே, அபிஷேகிக்கப்பட்ட சரீரத்தினுடைய ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார் (ஏசாயா 61:1).