R1075 (page 6)
R1076 : page 7
புருஷனுடைய தலைமை ஸ்தானம் என்ற அதே கோட்பாட்டைக் கருத்தில் வைத்துக்கொண்டு பவுல் மேலும் இவ்வாறு கூறுகிறார். “உபதேசம் பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை அவள் அமைதலாயிருக்கவேண்டும் (1 தீமோத்தேயு 2:12). மிகப்பெரிய சந்தோஷத்திற்குரிய நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லாத படிக்கு ஸ்திரீயானவள் தன்னுடைய உதடுகளை எப்போதுமே மூடியே இருக்க வேண்டும் என்று பவுல் நிச்சயமாகச் சொல்லவில்லை. “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள் (கலாத்தியர் 3:28) என்று அதே அப்போஸ்தலன் சொல்லவில்லையா? அபிஷேகம்பண்ணப்பட்ட எல்லோரும் நற்செய்தியை அறிவிப்பதற்காகவே அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறார்கள் என்று தீர்க்கத்தரிசியான ஏசாயா கற்றுக் கொடுக்கவில்லையா? அப்படியானால், இதற்கு இசைவாகவே மேற்சொல்லப்பட்ட அப்போஸ்தலனுடைய வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, அவருடைய சிந்தனை என்னவென்றால், நாம் எடுத்துச்சொல்ல நியமிக்கப்பட்டச் சத்தியம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், புருஷன் மீது அதிகாரம் அல்லது தலைமை ஸ்தானம் என்னும் நிலைப்பாட்டை ஒரு ஸ்திரீ எந்தவிதத்திலும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே. எந்த இடத்திலும், எல்லா இடத்திலும், எவரிடத்திலும் அவளுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மகா சந்தோஷத்திற்குரிய ஆசீர்வாதமான நற்செய்தியை அவள் சொல்லி, சத்தியத்தினுடைய கோட்பாடுகளைக் கற்றுக்கொடுக்கலாம்; ஆனாலும், அவளது சொந்த தனித்துவம் புலப்படாமல் போகத்தக்கதாக, எப்பொழுதும் தன்னடக்கத்துடனும், சத்தியத்தை மிகத் தெளிவாகவும் சொல்ல வேண்டும். குணலட்சணத்தினுடைய இந்த இவ்வம்சமானது, இயற்கையாகவே ஸ்திரீகளுக்குரியது; ஆனால் பொதுப்படையான ஊழியங்களில் வேலை செய்ய முயற்சிக்கும் ஸ்திரீகளினால் இது பொதுவாக வெகு சீக்கிரத்தில் இழந்துபோகப்படுகின்றது. பெரும்பான்மையான ஸ்திரீகளின் வேலை, தனிப்பட்டதுமாய், அமைதியானதுமாய் இருக்கின்றது; ஆனால், குறைந்த ஆற்றலுள்ள வேலையல்ல. தெய்வீக ஏற்பாட்டினால் அவளுக்கு நியமிக்கப்பட்ட எல்லைக்குள்ளாகவே அவள் ஏறெடுக்கும் முயற்சியே அவளுடைய மிகப்பெரிய செல்வாக்காக இருக்கின்றது. ஒருவேளை பொது இடங்களில் பயன்படுவதற்கு ஏதுவாய் அவசியமும், வாய்ப்பும் மற்றும் திறமையும் காணப்படுமானால், அந்த அவசியமும், வாய்ப்பும் இருக்கும் வரையில் அவள் அதை நிறைவேற்றலாம்; அதுவும் அப்படிச் செய்யும்போது, தேவபக்தியுள்ளவளென்று சொல்லிக்கொள்ளும் ஸ்திரீயானவளுக்குரிய – கிரியையிலும், வார்த்தையிலும் மற்றும் உடையிலும் உள்ள தன்னடக்கத்தையும், அமைதியான அணுகுமுறையையும் அவள் கொண்டிருத்தல் வேண்டும். “அவசியம் என்று நாம் இங்கு வலியுறுத்தும்போது, நாம் சொல்ல வருவது என்னவென்றால், சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும் அவளுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தும் விஷயத்தில், அவள் அழையாமல் தலையிடாத மற்றும் பலனுக்கேதுவான விதத்தினை நாடுவதற்குப்பதிலாக, அவள் தனக்கு விளம்பரத்தைத் தேட ஒருபோதும் நாடக் கூடாது என்பதேயாகும். விளம்பரத்தை நாடுவாளானால் அது அதிகாரத்தையும், சர்வதிகாரத்தையும் எடுத்துக்கொள்வதைக் குறிக்கின்றதாய் இருக்கும்; இது தகுதியற்றக் காரியமாகும்.
கணவன் மற்றும் மனைவியின் இந்த உறவில், கிறிஸ்து இயேசுவுக்கும் சபைக்கும் இடையேயுள்ள அருமையான உறவானது, சித்தரிக்கப்பட்டுள்ளது என்று மீண்டுமாகப் பார்க்கிறோம். நிழலில் இருப்பதுபோல நிஜத்திலும், சபை – கிறிஸ்துவின் மணவாட்டி, அவருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்; எல்லா நேரத்திலும் அவருடைய சித்தத்தை அறியவும், பின்பு அதைச் செய்வதில் மகிழ்ச்சியடையவும் ஆர்வத்தோடு நாட வேண்டும். ஒரு ஸ்திரீ எப்படி, தன் கணவனிடத்தில் அதிகாரம் செலுத்த எண்ணி அவரை வழிநடத்தக்கூடாதோ, அதுபோலவே சபையும் கர்த்தருடைய வேலையில் அதிகாரம் செலுத்த எண்ணி, அதை வழிநடத்துவதற்கு நாடக்கூடாது. ஆனால், “அமைதியாக இருந்து அவருடைய திட்டங்களையும், முறைகளையும் விடாமுயற்சியுடன்தேடி, பின்பு அதை உண்மையாகப் பெருமுயற்சியுடன் செயல்படுத்த நாட வேண்டும்.
தேவனுடைய திட்டம் முழுமையாகச் செயல்பாட்டில் கொண்டுவரப்படும் பொழுது, அன்பான அதிகாரமும், சந்தோஷம் நிறைந்த கீழ்ப்படிதலும் இந்த முழுப்பிரபஞ்சத்தை ஓர் ஆசீர்வாதமான சமாதானத்திலும், நித்தியமான மகிழ்ச்சியினாலும் நிரப்புவதை நாம் காணலாம். மேலும், “தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பார் – எல்லாருக்கும் தலையாகவும் இருப்பார் – அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படும் (1 கொரிந்தியர் 15:28). தேவனுடைய திட்டம் இதுதான் என்பதை நாம் பார்க்கும்போது, இப்பொழுது அந்த நோக்கத்தை நம்முடைய ஆற்றலுக்கேற்ப நடந்தேற்றுவதும், அதை விளக்கிக்காண்பிப்பதும்தான் நம்முடைய பிரயாசமாகக் காணப்பட வேண்டும். இது – கர்த்தரோடு இணைந்திருப்பவர்களால் மாத்திரமே முழுமையாக விளக்கிக்காட்ட முடியும். ஸ்திரீகள் தலைக்கு முக்காடிட்டுக் கொள்வது (1 கொரிந்தியர் 11:10) அதிகாரத்திற்குக் கீழ்படிவதைக் குறிக்கிறது; தேவனுடைய ஒழுங்கில் இருக்கும் தலைமைத்துவத்தினை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. அது சபைக்கும், அவளுடைய தலையாய் இருக்கும் கிறிஸ்து இயேசுவுக்கும் இடையே உள்ள உறவை அடையாளப்படுத்துகிறது. இதே விஷயம் ஆசாரியனுடைய உடையில்கூட விளக்கப்பட்டிருக்கிறது: பிரதான ஆசாரியன் பாகை அல்லது கிரீடத்தை அணிந்திருந்தான், மேலும் உடன் ஆசாரியர்கள் (மணவாட்டி, சபையைக் குறிப்பவர்கள்) தாங்கள் தலை அல்லவென்றும், ஆனால் பிரதான ஆசாரியனின் அதிகாரத்திற்குக் கீழிருப்பவர்கள் என்றும் குறிப்பிடும் விதத்தில் குல்லாக்களை அல்லது தலைக்கு மூடலை அணிந்திருந்தார்கள்.
தங்கள் மத்தியிலிருந்த அநேக உண்மையுள்ள உடன் ஊழியக்காரிகளையும் மற்றும் உதவி செய்த ஸ்திரீகளையும் அப்போஸ்தலன் குறிப்பிட்டிருப்பதிலிருந்து, ஸ்திரீகளுக்காகவும், ஸ்திரீகள் செய்திட்ட வேலைகளுக்காகவும் அவர் கொண்டிருந்த உயர்வான மரியாதை தெரியவருகிறது (ரோமர் 16:1-6,13 மற்றும் பிலிப்பியர் 4:3 பார்க்கவும்). “அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக் கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடே கூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது . மேலும் “அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு , ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்” (அப்பொஸ்தலர் 1:14). மேலும், “ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது (உபதேசிக்கிறபோதாவது), தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே (1 கொரிந்தியர் 11:5).
அப்போஸ்தலர்களுடைய நாட்களில், அவர்களாலும், கர்த்தராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட வேலைகளை ஸ்திரீகள் செய்தார்கள் என்று இந்த வேதவாக்கியங்கள் நமக்குக் காட்டுகிறது. எனினும் சிறியக் கூடுகைகளில் மாத்திரமே பொதுவாக ஸ்திரீகள் பேசினார்கள். மேலும், “சபைகளில் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள் என்று பவுல் சொன்னபோது, ஏறக்குறைய விவாதம் (debating) செய்யும் வழக்கம் இருக்கும் பொதுவான கூடுகைகளைத்தான் அநேகமாக அவர் குறிப்பிட்டிருக்கலாம். இப்படிப்பட்டப் பொதுவான [R1076 : page 8] விவாதங்களில் (public debating) ஸ்திரீகள் பேசுவது ஏற்றதாக இருக்காது என்று பவுல் நினைத்திருந்தார் மற்றும் சிந்தனை செய்கின்ற அநேக ஆண்கள் மற்றும் பெண்களின் கூற்றும் இன்றைக்கு இதுவாகத்தான் காணப்படுகின்றது. ஆனாலும் அநேகர் இதை அளவிற்கு மீறி கொண்டுபோய் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும், தனிமறைவான (private) கிறிஸ்தவ கூட்டங்களிலும்கூட ஸ்திரீகள் ஜெபிக்கவோ, உபதேசிக்கவோ கூடாது என்று தடை செய்கிறார்கள்; இது நிச்சயமாகத் தவறான ஒன்றாகும்.
சபைகளில் ஸ்திரீகள் பேசாமல் இருக்கக்கடவர்கள் என்றும், அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷனிடத்தில் விசாரிக்கக்கடவர்கள் என்று பவுல் வலியுறுத்துகிறபோது, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு கோட்பாடு கைக்கொள்ளப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார் என்றும் – ஒருவேளை அப்போதிருந்த சபையில் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்திரீகளின் தன்மையில்லாத சில ஸ்திரீகளைத் தடைசெய்வதற்காக அவர் சொல்லியிருக்கலாம் என்றும் நாம் அவரைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கோட்பாட்டினைக் கடுமையாய்ச் செயல்முறைப்படுத்துவது என்பது, பவுலின் உபதேசத்திலுள்ள பொதுவான ஆவியை அவமதிப்பதாக இருக்கும். கிறிஸ்துவின் ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு – அந்த விடுதலை, இயற்கையிலும், வெளிப்படுத்தப்பட்டவைகளிலும் வெளிப்படும் தேவனுடைய பிரமாணத்தையும், ஒழுங்கையும் அவமதிப்பதற்குரிய சுயாதீனமாய் இராமல், மாறாக தேவன் நிறுவின ஒழுங்கு மற்றும் பிரமாணத்தினுடைய கட்டுப்பாட்டின் கீழ், கிருபையிலும், ஞானத்திலும் வளர்ந்து முன்னேறுவதற்கான சுயாதீனமாக இருக்கிறது.
கிறிஸ்துவையும், அவருடைய மணவாட்டியாக இருக்கிற சபையையும் அடையாளப்படுத்தும்படியாக, புருஷனையும், ஸ்திரீயையும் தேவன் ஏற்படுத்தியிருக்கிறபடியால், இது – புருஷனுக்கு எப்போதும் அதிகப் பிரயாசங்கள் ஏறெடுக்கும் மற்றும் பொது இடங்களில் ஏறெடுக்கும் ஊழியங்கள் கொடுக்கப்பட்டு மற்றும் தேவனால் சரிசமமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விதத்தில் ஸ்திரீகளுக்குத் தனிப்பட்ட விதத்தில் சந்தித்துப் போதித்தல் மற்றும் உதவி செய்தல் போன்ற ஊழியங்கள் கொடுக்கப்படுவது, ஒருவேளை ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் கிறிஸ்துவே தேவனுடைய திட்டங்களை நடத்தேற்றிடும் பிரதிநிதியாக இருக்கின்றார். அவரே எல்லாவற்றிலும் மேலான ஊழியக்காரனாய் இருக்கின்றார். மேலும் நாம் அவருடைய சபையாயிருப்பதினால் அவருடைய பயன்பாட்டிற்காக உதவி செய்யும்படிக்கு நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம், அதாவது மிக எளிமையான பாகத்தையே செய்வதறகாக அனுமதிக்கப்பட்டிருக்கிறோம், எனினும் அது தேவனுக்குப் பிரியமும், அவர் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமாக இருக்கின்றது.
-திருமதி C. T. R.
ஸ்திரீயின் ஊழியம்
ஸ்திரீயின் உரிமைகள் அவைகள் – யாவை?
வேலை செய்வதும், அன்புகூருவதும், ஜெபம் செய்வதும் – அவள் உரிமையாம்;
அழுவாரோடு அழுவதற்கானது அவள் உரிமையாம்;
மற்றவர்கள் தூங்குகையில் விழித்துக்கொள்வதும் அவள் உரிமையாம்.
வடியும் கண்ணீர்தனைத் துடைத்திடுவது – அவள் உரிமையாம்;
பதறவைக்கும் சூழ்நிலைதனைத் தணிப்பது அவள் உரிமையாம்;
கவலையுற்றுத் தவிக்கும் நெற்றிதனை வருடிவிடுவது அவள் உரிமையாம்;
சோர்வில் ஆறுதலின் வார்த்தைதனை மென்மையாய் பேசிடுவதும் அவள் உரிமையாம்.
பிரியும் இறுதி மூச்சுதனைக் கூடவேயிருந்து பார்ப்பது – அவள் உரிமையாம்;
மரணப்படுக்கையில் இருப்போரை ஆற்றி உற்சாகமூட்டுவது அவள் உரிமையாம்;
பூமிக்குரிய நம்பிக்கைகள் யாவும் தளர்ந்து போகையில்;
திரைக்கு இப்பக்கம் சிலவற்றைச் சுட்டிக்காட்டுவதும் அவள் உரிமையாம்.
வழிவிலகிப் போனவரை மீட்டெடுப்பது – அவள் உரிமையாம்;
அவமானத்தில் தொலைந்தவரை ஆதாயப்படுத்துவது அவள் உரிமையாம்;
விதவைகளையும், தகப்பனற்றவர்களையும்;
ஆற்றிடுவதற்கும், தேற்றிடுவதற்குமானதும் அவள் உரிமையாம்.
பிள்ளைகளை, நமக்காய் மரித்தவர் மீதான
எளிமையான விசுவாசந்தனில் வழிநடத்திடுவதற்கானது அவள் உரிமையாம்;
அவர்கள் வாலிப நாட்கள்தனை உள்ளார்ந்த அன்பினாலும்;
கனிவான பாராட்டுதலினாலும் ஆசீர்வதிப்பதும், உற்சாகமூட்டுவதும் அவள் உரிமையாம்.
பிள்ளைகளின் அறிவைப் பயிற்றுவிப்பது – மனதை
உயர்ந்த குறிக்கோளிடத்திற்கு நடத்திடுவது அவள் உரிமையாம்;
விளையாட்டுச் சாதனங்களுக்கு அப்பால் மனதை உயர்த்தக் கற்றுக்கொடுப்பது;
இருதயத்தைப் பரலோக சந்தோஷங்கள்மேல் வைத்திட உதவிடுவதும் அவள் உரிமையாம்.
ஸ்திரீயே! நீ அன்புகூரும் அவருக்காய், ஜீவிப்பது உந்தன் உரிமையாம்;
உந்தன் அன்பை நிரூபிக்க வேண்டியே, மரித்திடுவது உந்தன் உரிமையாம்;
பூமிக்குரிய இல்லங்கள்தனை இனிமையான புன்முறுவல்களினாலும்;
கனிவான பேச்சுத்தொனிகளினாலும் ஒளிமயமாக்குவதும் உந்தன் உரிமையாம்.
ஸ்திரீயே! உந்தன் உரிமைகள் அல்லவோ இவை – பிரயோஜனப்படுத்திடு;
இவைகளின் பரிசுத்த செல்வாக்கு ஆற்றல்மிக்கது;
இவைகள் உனதாயின் – ஏன் இன்னும் வேண்டுமெனக் கேட்கிறாய்?
போதுமான உரிமைகள் உனக்கும் இருக்கின்றதுவே!
ஸ்திரீயே! உந்தன் உரிமைகள் அல்லவோ இவை – அப்படியானால் முறுமுறுக்காதே;
ஸ்திரீகளின் ஊழியமானது, உந்தனின் பங்காய் இருக்கின்றதுவே;
தேவன் அருளியுள்ள தாலந்துகள்தனைப் பயன்படுத்திடு; நீ பூலோகக்
கடமைகளை முடிக்கவே, பரத்தில் உந்தன் இளைப்பாறுதலும் காணப்படுமே!
– Poems of Dawn.