R4968 (page 50)
சத்தியமே தரநிலையாகக் காணப்பட வேண்டும். மற்றவை அனைத்தும் திவ்விய சித்தத்திற்கு முற்றிலும் முரணானவைகளாக இருக்கின்றன; மற்றும் சத்தியத்தினைத் தனது அன்றாட ஜீவியத்தில் கடைப்பிடிக்க தவறுகின்ற நபர், தான் சரியான அளவில் கர்த்தருடைய ஆவியினைப் பெற்றிருக்கவில்லை என்பதை நிரூபிக்கின்றவராய் இருப்பார். ஆகையால் நம்மில் எவரேனும், நம்முடைய அன்றாட ஜீவியங்களில், நம்முடைய உதடுகளைக்கொண்டு நாம் போதித்தவைகளுக்கு இசைவாக நாம் ஜீவிக்கவில்லை என்பதைக் கண்டுகொள்வோமானால், அது கவலைக்கிடமான காரியமாயிருக்கும்; ஏனெனில் தன்னுடைய இருதயத்தில் கர்த்தருக்கு இசைவாக இல்லாதவர் எவரும், சீக்கிரத்தில் தன்னால் போதித்தவைக்கும் இசைவற்றுப் போய்விடுவார் என்பது நமக்குத் தெரியும்.
ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் அடங்கிய சபையார் மத்தியில் வெளிப்புறத்தில் போதகனுக்குரிய மிகுந்த திறமைப்பெற்றிருந்து, ஆனால் தனது அன்றாட ஜீவியத்தில் கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம்பண்ணியுள்ளதற்கும், மாம்சத்தின்படி இல்லாமல், ஆவியின்படி நடக்க நாடுவதற்கும் சான்று பகராதவராய் காணப்படும் ஒருவர், மூப்பராகவோ அல்லது உதவிக்காரராகவோ முன் மொழியப்பட்டிருப்பாரானால், அவர் மூப்பர் அல்லது உதவிக்காரர் எனும் உயர் ஊழியங்களுக்கு நியமிக்கப்படுவதற்கு மிக ஆபத்தான நபராக கருதப்பட வேண்டும். எவ்வளவுக்குச் சீக்கிரமாய் அவர் தனிமையில் விடப்படுகின்றாரோ, அவ்வளவுக்கு நலமாயிருக்கும். இப்படிப்பட்ட நபர்கள் அநேகர் ஊழியத்திற்கு முன்கொண்டுவரப்படும்போது, அது அவர்களுக்கும், அவர்கள் ஊழியம் புரியவேண்டியதான சபையாருக்கும் பாதகமாய் அமையும்.