நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3011 (page 152)

நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்

ENDURING HARDNESS AS GOOD SOLDIERS

அப்போஸ்தலர் 14:8-19

“நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.” (2 தீமோத்தேயு 2:3)

பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவைவிட்டு, ஏறத்தாழ 100 மைல்கள் தொலைவிலுள்ள இக்கோனியா பட்டணத்துக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சத்திய வசனத்தை விசுவாசத்தோடே போதித்தார்கள். அங்கேயும் எதிர்ப்புகள் வலுத்து, உபத்திரவங்கள் அச்சுறுத்தின. இவர்களைத் தாக்க புறஜாதியாரும், யூதரும் அவர்களது அதிகாரிகளோடு சேர்ந்து அவமானப்படுத்தவும் கல்லெறியவும் அமளி பண்ணினதால், இவர்கள் எச்சரிப்படைந்து லிஸ்தீராவுக்கு ஓடிப்போயினர். சுவிசேஷத்தை திடமனதோடும், தைரியத்தோடும் பிரசங்கிக்க பய தடைபண்ண அனுமதிக்கவில்லை. மேலும் அச்சுறுத்தலைக்கண்டு அவர்கள் பயப்படவுமில்லை. ஆனால் உபத்திரவப்படுவது ஊர்ஜிதமானதால், அவர்கள் தாமதியாமல் பக்கத்து நாடுகளுக்கு ஓடிப்போயினர். கர்த்தர் அவர்களை ஆச்சரியமாக விடுவிப்பார் என்று எதிர்பார்த்து, ஏன் அங்கேயே காத்திருந்திருக்கக்கூடாது? தேவவல்லமை அல்லது சாத்தானின் வல்லமை எது பலம் வாய்ந்தது என அவர்களது எதிர்ப்பாளிகளுக்கு ஏன் சவால்விட்டு காத்திருக்கவில்லை? ஏனெனில் அவர்கள் தெய்வீக சித்தம் குறித்து தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர் என்று நாம் பதிலளிக்கிறோம். கர்த்தரது அறிவுரைகளை அவர்கள் பின்பற்றி நடந்தனர். உபத்திரவங்களைக்கண்டு பயந்திருங்கள் உங்கள் பிரசங்கங்களை நிறுத்திக்கொண்டு, உங்கள் வெளிச்சத்தை மரக்காலின்கீழ் மூடிவையுங்கள் என்று அவர் அவர்களுக்கு கூறாமல், அதற்கு நேர்மாறாக அவரது செய்தி இருந்தது. அபாயம் இல்லாதவேளையில், பயத்தோடு ஓடிப்போங்கள் என்று அவர் கூறாமல், அவர்கள் உங்களை ஒருபட்டணத்தில் உபத்திரவத்துக்குள்ளாக்கினால் வேறு பட்டணத்துக்கு ஓடிப்போங்கள் என்று கூறினார்.

லிஸ்தீரா சென்றுசேர்ந்தவுடன் எதிர்ப்புக்கள் ஆரம்பத்தில் அங்கு இல்லாததால், தைரியத்தோடும் புத்துணர்ச்சியோடும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் துவங்கினர். கவனித்துக்கொண்டிருந்தவர்களில் முடமான ஒரு மனுஷனும் இருந்தான். அவன் ஒரு யூதனாகவோ அல்லது யூத மதக்கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவோ இருக்கலாம். அப்போஸ்தலரது வார்த்தையை அதிக ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்தான். இதைக் கண்ணுற்ற பவுல், அந்த மனிதனிடத்தில் விசுவாசம் உண்டென்று கண்டு, தன் பிரசங்கத்தை நிறுத்தி, அவனிடத்தில்சென்று, நீ எழுந்து காலூன்றி நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னார். அவன் உடனே எழுந்திருந்த சம்பவம் ஒருபோதும் முன்பு செய்திருக்கவில்லை. அவன் அப்போஸ்தலரது கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்குத் தேவையான விசுவாசத்தைப் பெற்றிருந்தான். இவ்வாறாக ஒரு அற்புதம் அங்கே அரங்கேழிறியது. இச்சம்பவம் முழு சபைக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. ஜனங்கள் மத்தியில் இதன் தாக்கம் அதிர்ச்சி அலையை உண்டாக்கியிருந்ததால், அவர்கள் தங்களது சொந்தபாஷையில், தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறர்கள் என்று சத்தமிட்டனர். லிஸ்திரா பட்டணம் புராண இலக்கிய காட்சிகளால் நிறைந்திருந்தது.

அவர்களது பாரம்பரியத்தின்படி, யூப்பித்தர் மற்றும் மெர்க்குரி இரண்டு புராண இலக்கியக் கடவுள்களாகவும், அவர்கள் ஒருமுறை அவர்களது பட்டணத்துக்கு மனித உருவெடுத்து வந்தார்கள் என்றும், அவர்கள் தங்குவதற்கு எங்கு தேடியும், யாரும் இடம் தராததால், இறுதியாக ஒரு தரித்திரன் தன் சக்திக்கேற்றாற்போல் அவர்களை வரவேற்று உபசரித்தான் என்றும் நம்புகின்றனர். அவர்கள் அந்த தரித்திரனுக்கு வெகுமதியாக, அவனது குடிசையை அழகும் ஆடம்பரமுமான ஆலயமாக மாற்றினர் என்றும், அந்த பட்டணத்திலிருந்த மற்ற அனைவரையும் ஜலப்பிரளயத்தால் அழித்தனர் என்றும் நம்புகின்றனர். இந்த பாரம்பரியங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை என்றாலும், அந்த பட்டணத்தின் பாதுகாவலராக யூப்பித்தர் சிலையை என்றென்றும் நிலைத்திருக்கும்படி பட்டணத்தின் வாயிலில் நிறுவியுள்ளனர்.

பவுல் மற்றும் பர்னபா வடிவில் தங்களை மீண்டும் சந்திக்க வந்திருப்பதாக திடீரென்று ஜனங்கள் ஒரு முடிவை எடுத்தது, அவர்களது அறியாமையையும், மூடப் பழக்கவழக்கங்களையும் நாம் புரிந்துகொள்ளமுடிகிறது. பாரம்பரியங்களுக்கு அவர்கள் ஆட்பட்டிருந்தனர். அவர்கள் பவுலை மெர்க்குரி என்று அழைத்தனர். ஏனெனில் மெர்க்குரி மேடைப்பேச்சாளராக, சொற்பொழிவாளராக இருந்தார். மேலும், பர்னபாவை யூப்பித்தர் என்று அழைத்தனர். உடனடியாக பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி, எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட மனிதர்கள் வடிவில் தங்கள் மத்தியில் வந்திருக்கிற தேவர்கள் என்னப்படும் பவுல் மற்றும் பர்னபா அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.

இந்த ஊழியக்காரர்கள் பிரசங்கிக்கவும், ஆர்வமுடன் ஜனங்களிடம் அமைதலாகவும் விளக்கிக்கொண்டிருந்தனர். பட்டணத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியையும், அவர்கள் பலிகொடுக்க தயாராயிருப்பதையும் அறிந்தபொழுது, ஜனங்களது அறியாமையை தங்களுக்கு அனுகூலமாக்கி பெரிய மனிதர்களாகும்படி ஒருசனப்பொழுதுகூட எண்ணாதவர்களாயும், [R3011: Page 153] அல்லது தேவனே யூப்பித்தர், இயேசு மெர்க்குரி, நாங்களே அந்த இருவருக்கும் பிரதிநிதி என்று கூறி, சத்திய ஊழியத்தை திசைதிருப்ப முயற்சிக்காமலும் இருந்தனர். இதற்கு மாறாக, தாங்கள் ஒன்றுமில்லை என்றும், அவர்கள் எல்லாரையும் போலவே அபூரணர்கள் என்றும் விளக்கிக்கூறி, மிகவும் ஊக்கத்தோடும் கெஞ்சியும் கேட்டு ஜனங்களைத் தடுத்தனர். தாங்கள் செய்யும் ஊழியம் அவர்கள் யூகித்திருப்பதற்கு எதிர்மாறானது என்றும், யூப்பித்தரும் மெர்க்குரியும் அவர்களது கற்பனைகள், அறியாமை மற்றும் மூடப்பழக்கங்கள் மூலமாக உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் என்றும் பெருமூச்சுடன் கூறினர். ஜனங்கள் மனஎழுச்சியுற்று, இவர்கள் கூட்டத்திற்குள் ஓடி, உரத்த சத்தமாய், தாங்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்று போராடி, தங்களுக்கு பலிசெலுத்தி, கனப்படுத்தும் ஜனங்களது செய்கையை தடுத்தனர். நேர்மையுள்ளவர்களாக அவர்கள் இருந்து, கர்த்தரிடத்திலும் சத்தியத்திலும் தாங்கள் உண்மையாய் இருப்பதை வெளிப்படுத்தினர். தங்களை சத்தியத்தை பிரசங்கிக்கும் ஊழியம்செய்ய அனுப்பின தெய்வீக ஞானத்திற்கும், கர்த்தருக்கும் உண்மையுள்ளவர்கள்; நேர்மையுள்ளவர்கள் என்று வெளிப்படுத்தினர்.

கர்த்தருடைய தூதர்களாக பிரதிநிதிகளாக சத்தியத்துக்கு போதகர்களாக இருக்கும் அவரது ஜனங்கள் அனைவருக்கும் உதவிகரமாக இந்த நிகழ்வு இருக்கும் என்ற பாடத்தை நாம் கற்கிறோம். விசேஷமாக, நம் நாளின் வெளிச்சத்திலுள்ளவர்களுக்கு சத்தியம் ஆச்சரியப் படுத்துவதாயும், அறிவுக்கூர்மையுள்ளதாயும், அந்த ஜனங்களிடம் அமைதலாகவும் விளக்கிக்கொண்டிருந்தனர். சத்தியத்தின் பிரதிநிதிகளாக அதை தாங்கிச் செல்பவர்களிடத்தில் அறிவுக்கூர்மை இயல்பாகவே வெளிப்படுவதையும், அதைக் காண்பவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போய், இந்த மனிதனுக்கு இந்த ஞானம் எங்கிருந்து வந்தது? என்று கேட்கின்றனர். ஒருசிலசமயங்களில், இது அளவுக்குமீறிய மரியாதை கொடுக்கும்படியும், அளவுக்கு மீறிய மேன்மையை தரக்காரணமாய் அமைந்துவிடும். அடிமை போன்றிருக்கவேண்டிய கர்த்தருடைய பிள்ளைகள் கனம் மேன்மை இவைகளை பெற்றுக்கொள்வது முறையானதல்ல. லிஸ்தீராவில் உள்ள ஜனங்கள் அவர்களை கனப்படுத்த முயன்றபோது, பவுனும் பர்னபாவும் அவைகளை முற்றிலும் ஏற்கமறுத்து, தங்களது விருப்பமின்மையை தெரிவித்தனர். உலகத்தின் நிலைப்பாட்டில் பார்க்கும்போது. இது ஞானமற்றசெயலாக இருக்கிறது. முகஸ்துதி, புகழ்ச்சி மற்றும் மேன்மைகளுக்கு அளவுக்குமிஞ்சி இடமளிப் பார்களானால் இந்த வழிமுறையில் விரோதியாகிய சாத்தானால் வளமையுள்ளோர்போல ஓரளவுக்கு தோற்றத்துக்கு வழிநடத்தக்கூடும். இப்படிப்பட்ட உலகத்தின் ஆவி, உலகின் அருஞ்செயல் வீரர்களையும், ஜூபிடர்களையும், எலியாக்களையும் வணங்குவது பொருத்தமானதே என்று விருப்பத்துடன் அவைகளை செய்யத்தூண்டும். ஜனங்கள் செய்த காரியங்களை ஒட்டுமொத்தமாக ஏற்கமறுத்து, இந்த ஊழியக்காரர்கள் நடந்துகொண்ட விதமே, இப்பாடத்தின்மூலம் கர்த்தரது ஊழியக்காரர்கள் பெறவேண்டிய ஒரே ஞானமான வழிமுறையாகும். மற்ற மனிதரைப்போலவே தாங்களும் பாடுள்ள மனுஷர் என்று அவர்கள் அறிக்கையிட்டு, தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தை உயர்த்திப்பிடித்து, அந்த வெளிச்சத்தின்கீழ் தங்களை முழுமையாக புறம்பாக்கி மறைத்துக்கொண்டனர். உலகிலிருந்து தம்மோடு சேர்த்துக்கொண்டுவரும் உண்மை தேவனுடைய பிள்ளைகளை கண்டறியவும். அவர்கள் வளர்ச்சியடையவும் இது ஆதாயமளிப்பதோடு, கர்த்தருடைய தூதுவர்களுக்கும் இது ஆதாயமளிக்கும். இந்த வழியில்தான் கர்த்தருடைய கிருபையிலும், அவருக்கு ஒப்பாகவும் வளருவார்கள், இவ்வாறு வளர தாழ்மை ஒரு மிக முக்கிய குணாதிசயமாக இருக்கிறது. இவ்வாறாக அவர்கள் அவரது அன்பில் நிலைத்திருக்கவும், தற்கால நிலைமையின்கீழ் உண்மையோடும், பணிவோடும் உள்ள அவரது பிள்ளைகள் [R3012 : Page 153] அனைவருக்கும் தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ள, இன்னும் உன்னதத்துக்கு உயர்த்துதலை இறுதியில் அடைய ஏதுவாகும்.

அவர்களது கொள்கைகள், வீண்பெருமைகள் என்று லிஸ்தீராவினருக்கு அப்போஸ்தலர் சுட்டிக் காண்பித்தார். தம் பிரசங்கம் கேட்போர் இப்படிப்பட்ட கொள்கைகளை பின்பற்றுபவர்களாகில், எவ்வித தயவையும் அது கொண்டுவராது என்று நன்கு அறிந்திருந்தார். ஏனெனில் பாரம்பரியமான கட்டுக்கதைகள் பேசப்பட்டிருக்கும் போது, மனித சுபாவம் அவற்றை அங்கீகரிக்கக்கூடாது. அவர்களிடத்தில் நன் மதிப்பைப் பெறும்வழியில் பவுல் நடந்துகொள்ளவேண்டுமானால், அவர்கள் பெரிய ஞானிகள் என்றும், அவர்கள் பின்பற்றும் வழிமுறை முறையானதே என்றும் அவர்களிடத்தில் பொய் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். அவர் தாம் கபடற்றவராக அவர்கள் முன் காண்பிக்கமுயற்சிசெய்து, அவர்களது ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் துணிகரமாக சந்தித்தார். இதை எவ்வித ஐயப்பாடின்றி முன்கூட்டியே கூர்மையாய் அறிந்திருந்து, எவ்விதமான விளைவு ஏற்படும் என்றும் அறிந்திருந்தார். தேவனுடைய நாவாக இருந்து, தம்மைக்குறித்தும் தம் உயிரைக்குறித்தும் என்ன விளைவுகள்ஏற்பட்டாலும், அவற்றை பொருட்படுத்தாமல், முழு செய்தியையும் வெளிப்படுத்த தயங்கவில்லை. இங்கு கர்த்தருடைய பிள்ளைகள் அனைவருக்கும் கற்க நல்லபாடங்கள் இருக்கின்றன. விலையேறப்பெற்ற விசுவாசத்திலும், கீழ்ப்படிதலிலும் உள்ள சிலுவைவீரருக்கும், சத்தியத்துக்கு உண்மையாய் இருப்பவர்களுக்கும் இங்கே உற்சாகம் தேவையாய் உள்ளது. ஆனால் மனிதரை கனப்படுத்தும் முறையற்ற செயலை எதிர்த்துநிற்க மாபெரும் உற்சாகம் தேவைப்படுகிறது. ஆனால் இவ்வாறு எதிர்த்துநிற்பது, அவர்களது மேன்மை, நட்புறவு இவைகளுக்கு எதிர்த்து நிற்பதோடு நில்லாமல், அவர்களது பார்வையில் சிறுமையானவர்களாக காண்பித்து, பகைவராக அவர்களை மாற்றும்.

உண்மை சிலுவைப் போர் வீரர்களுக்கு தற்போதும்கூட அதேவிதமான உபத்திரவம் உண்டு. அதேவிதமான கடினமான சூழ்நிலைகள் தேவையாயிருக்கிறது. கர்த்தருடைய ஊழியத்தில் கடினமான திட்டமிட்ட நடவடிக்கையின் அனுபவங்களை சந்தித்து, சகித்து, கர்த்தருக்குள் மகிழ்ச்சியோடு வெளிவரவேண்டும். பலவீனமானோர், சோதிக்கப்படாதோர், குணாதிசயங்களில் வளர்ச்சிபெறும் பரீட்சை மற்றும் அனுபவங்களை கடந்துபோகாதவர்கள் கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாக கருதப்படுகிறார்கள். இவர்கள் கடின அனுபவங்களுக்குள் செல்லவில்லை. அப்படிப்பட்ட அனுபவங்களை சந்திக்கும் மனப்பக்குவமில்லாதவர்கள். இதன்காரணமாக, சபையில் புதிதாக பயிற்சிபெறுபவர்களை ஆராதனைக்கூட்டங்களில் முறையாக உயர்த்தி, ஊக்குவித்தல்கூடாது. அவர் இறுமாப்படைந்து தனக்குத்தானே இடையூறு வருவித்துக்கொள்வதோடு, பிறருக்கும் காயத்தை ஏற்படுத்துவார் (1 தீமோ 3:6). சகோதரர்கள் தரும் மரியாதை மற்றும் கௌரவத்தை முறையாக ஏற்றுக்கொள்ளவோ அதன் மதிப்பை உணர்ந்துகொள்ளவோ சிலகாலம் மற்றும் செயல்செய்ய தக்கதருணம் தேவைப்படுகிறது. அவ்வாறில்லாவிடில் நமக்கு கிடைக்கும் மரியாதை மற்றும் கௌரவத்தை முறையற்ற விதத்தில் அணுகுவதன்மூலம், நம்மை சரிவடையச்செய்துவிடும்.

கடந்தகாலங்களில் எல்லா தேசங்களும் தங்கள் சொந்த வழிகளில் நடக்க தேவன் அனுமதித்து வந்திருந்தார் என்று அப்போஸ்தலர் குறிப்பிட்டுக் காண்பிக்கிறார். அவர் குறிப்பாக, இஸ்ரயேல் தேசத்தின் விவகாரங்களில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தார், மற்ற எல்லா தேசங்களும் தெய்வீகத் திட்டத்தின் சில அம்சங்களில் மட்டும் எல்லை மீறாதபடி தவிர்த்து, மற்றபடி தங்கள் சொந்த வழிமுறையை பின்பற்ற அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறாக தீர்க்கதரிசி இஸ்ரயேலருக்கு செய்தி உரைத்ததாவது:-
“பூமியிலுள்ள எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்” (ஆமோஸ் 3:2). கடந்த காலங்களில் என்று குறிப்பிடப்பட்டது, யுகமாற்றத்தை குறித்துக்கூறுவதாகவும், இயேசுவின் மரணம் மற்றும் இதளால் யூதர் பெற்றிருந்த விசேஷதயவு அறுபட்டுப்போனதோடு தொடர்புடையதாயும், கேட்கச் செவியுள்ளோர்க்கு சுவிசேஷ அழைப்பு யூதருக்கு முதலாவதாகவும், கிரேக்கருக்கும் திறந்து வைக்கப்பட்டிருப்பதையும் கூறுகிறது. தற்போது, தேவன் அறிவுரையின் செய்தியை எல்லா தேசங்களுக்கும் அனுப்பிவந்தார். அவர்கள் தங்கள் கர்வத்திலிருந்து மனம் மாறி, ஜீவனுள்ள ஒன்றான மெய்தேவனையும், உலகை மீட்டெடுத்த அவரது குமாரனையும் ஏற்றுக்கொண்டு, அவரே ஏற்றவேளையில் ராஜாவாகவும் ஆட்சிபுரிபவராகவும் பிதாவினால் நியமிக்கப்பட்டிருப்பதையும், அவரே பாவத்தையும் மரணத்தையும் பரிகரித்து, அவரது நீதியின் ஆளுகையில் பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பார் என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை செய்தியை தேவன் எல்லா தேசங்களுக்கும் கொடுத்துவந்தார். தேவன் புறஜாதி தேசங்களுக்கு தீர்க்கதரிசனத்தின் உடன்படிக்கைகளை தம் நியாயப்பிரமாணத்தின் அறிவுரைகளைத் தராமல் இருந்தபோதிலும், அவர்கள்மேல் தாம் அக்கறை வைத்திருப்பதற்கு அடையாளமாக அவர்களுக்கு அத்தியாவசியமான சில ஏற்பாடுகளை செய்திருப்பதை வெளிப்படுத்தினார் – சூரியன் மற்றும் மழையை நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் நல்லோர்மேலும் தீயோர்மேலும் பொழியப்பண்ணுகிறார்.

அப்போஸ்தலர் கொடுத்த விளக்கத்தினாலும், சத்தியத்தை எளிமையாக முன்வைத்ததன் விளைவாகவும், அங்கே கூடியிருந்த விஸ்தீராவினர் திடீர் மாற்றத்திற்குள்ளாகி, மிகவும் மாறுபட்ட பார்வையோடு ஊழியக்காரர்களைப் பார்த்தனர். தங்களைப்போலவே அவர்களும் சாதாரண மனிதர்களே என்று தங்களைக்குறித்து தற்போது பறைசாற்றினர். அவர்களது மூடப் பழக்கவழக்கத்தைக் குறித்து வருத்தப்பட்டிருப்பார்கள் என்று எண்ணுவதற்கும் இங்கு இடமுண்டு. ஊழியர்கள் அதை எதிர்த்து, தாங்கள் அதற்கு தகுதியற்றவர்கள் என்று ஏற்க மறுத்தாலும், தங்களது மூடப்பழக்கவழக்கம் அவர்களை உசுப்பிவிட்டிருந்தது. சில யூதர்கள் அந்தியோகியா மற்றும் இக்கோனியாவிலிருந்து வந்திருந்து, வஞ்சிக்கிற ஊழியக்காரர்கள் என்றும் [R3012 : page 154] ஜனங்களை எளிதில் ஏமாற்றுகிறார்கள் என்றும், இறையியல் கோட்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பி, உலகத்தை கலக்குகிறார்கள் என்றும், ஜனங்களது மன அமைதீயை கெடுக்கிறார்கள் என்றும் பொது ஜனங்களில் சிலர் தேவ ஊழியர்க்கு எதிரான ஆவியை கொண்டிருந்து, ஜனங்களுக்கு விளக்கினார்கள். இந்த மனிதர்கள் உண்மையாகவே யூப்பித்தர் மற்றும் மெர்க்குரி அல்லர் என்றும், அவர்கள் பாசாங்கு செய்பவர்கள் மற்றும் பொய்யர்கள் என்றும், ஜனங்களை வஞ்சித்ததால் அவர்களை மரணத்துக்கு கையளிக்கவேண்டுமென்றும், இவ்வாறு பொது ஜனங்கள் எதிர்மாறான வழிமுறையில் நடத்தப்பட்டனர். இதன் விளைவாக, பவுல் கல்லெறியப்பட்டு, மரித்துப்போனாரென்று எண்ணி, பட்டணத்துக்கு வெளியே இழுத்துச்செல்லப்பட்டார்.

சுபாவ சிந்தை அறியாமையிலும் மூடப்பழக்க வழக்கங்களின் நிலைமையில் சீரற்றதாயிருந்து, யூப்பித்தரின் ஆசாரியர் தேவ மனிதராகும்படி தவறான வழிமுறையில், அறியாமையிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் எந்தளவு நடத்திச்செல்லமுடிகிறது? பின்பு எதிரான வழிமுறையில் அவரால் எப்படி தவறான வழிமுறையில் நடத்தமுடிகிறது? எல்லா அப்போஸ்தலரைக் காட்டிலும் உயர்ந்தவரும், உலகம் ஒருபோதும் அறிந்திராத மிகச்சிறந்த பிரசங்கியும், தர்க்கசாஸ்திரியுமாக இருந்தவர், அவர்கள் மத்தியிலிருந்து, தேவனுக்கு கீழ்ப்படியும்படி, சத்தியத்திலும் நீதியின் சரியானபாதையிலும் அவரால் நடத்தமுடியும் என்ற நிலைமையில் இருந்தவரை, எத்தனைபேர் உணர்ந்திருந்தனர்? விக்கிரக ஆராதனைக்கு வழிநடத்தும் அஞ்ஞான இருளின் துயரங்களை, நாகரீகமும் பொது அறிவுக்கூர்மையும் குறிப்பிடத்தக்க அளவு நீக்கியிருந்தபோதிலும், அப்போதிருந்த உலகத்தின் அநேக அம்சங்கள் இன்றைய நாளின் உலகத்திலும் இருக்கிறது. உலகத்தில் இஸ்லாமிய மதம், கன்பியூசிஸ மதம் மற்றும் சபைகளிலும் சில குறிப்பிட்ட வகை கிறிஸ்தவ மதக்கொள்கைகளும் வெளித்தோற்றத்துக்கு பகுத்தறிவு மற்றும் உயிரூட்டமுள்ளதாக பகட்டான தோற்றத்தைக்காண்பித்து கண்ணியமுடையவைகளாக மதிக்கப்பட்டாலும் இந்த பகட்டான மதக்கொள்கைகளுக்குள் இருக்கிற திரளான ஜனங்கள். இன்னும் தாங்கள் வஞ்சிக்கப்படும் நிலையிலுள்ளதாக அதிருப்தியிலேயே இருக்கின்றனர். தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புபவர்களையும், உயர்ந்தவர்களாக பாசாங்கு செய்பவர்களையும் இக்கொள்கைகள் பாராட்டுவதாக தோற்றமளிக்கிறது. தொழுகை செய்ய வலியுறுத்தும் நேரத்தில் தகுதியற்ற விதத்தில் தொழுகை செய்வதுபோல மாயை உண்டாக்குகிறது. தேவனையும் அவரது திட்டத்தையும் தவறாக சித்தரித்துக் காண்பிக்கிறதோடு, தேவனின் அன்பின் அகலம் ஆழம் உயரம் நீளம் இவற்றின் ஆச்சரியத்தை உணராமல், சாத்தானின் நிலைப் பாட்டிலிருந்து இவைகளை யோசிக்க வழிவகுக்கிறது. பூமியைக்காட்டிலும் வானம் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ, அவ்வாறே மனிதனுடைய வழிகளைக் காட்டிலும் தேவனுடைய வழிகளும், தேவதிட்டங்கள் மனிதனது கருத்துக்களைக்காட்டிலும் உயர்ந்திருக்கின்றன. தேவனது அக்கறையற்ற நிலையினால் அவர் கல்லெறியப்படவில்லை, அல்லது தம் ஊழியக்காரனைப் பாதுகாக்குமளவு தேவனுக்கு வல்லமை குறைவுபட்டிருக்கவில்லை. ஆனால் தேவன் அப்போஸ்தலர் பவுனுடன் முழுதும் இருக்கவில்லை என்பதேயாகும்.

அதற்கு மாறாக, அப்போஸ்தலருக்கும். சபைக்குமான சில மாபெரும் மதிப்புமிக்க பாடங்களை அநேகமாக அவருக்கு கர்த்தர் போதித்திருக்கக்கூடும். சபையாருக்காக அவர் இன்றைக்கும்கூட இந்த அனுபவங்களைக்கொண்டு ஊழியம்செய்துவருகிறார். அப்போஸ்தலர் கல்லெறியப்படும்போது ஸ்தேவானின் மரணத்தை புத்துணர்வோடு நினைவுகூர்ந்திருக்கலாம், அதற்கு பவுலும் சம்மதித்திருந்தார். இதன் காரணமாக தாம் கர்த்தருடைய பிரதிநிதியாகவும், அவரது சத்தியத்தின் பிரதிநிதியாகவும் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நிலைமைக்கு தான் தகுதியானவன் அல்ல என்றும். கர்த்தருக்கு முன்பாக தம் இருதயத்தைத் தாழ்த்தி, பாடத்தை கற்றுக்கொண்டதே முடிவாக நடந்தது.

இவ்வாறாக, பலிசெலுத்தும் சம்பவம், சில பரீட்சிக்கும் அனுபவங்களாக நிகழ்ந்திருக்கவில்லையா? ஒருவரை பலமாக மேன்மைப்படுத்தும்போது அப்போஸ்தலர் சிறிதளவாவது தன்னை உயர்ந்தவராக கருதியிருக்க கூடுமல்லவா? அவ்வாறு உயர்த்திக்கொள்வது மனித இயல்பு என்றாலும், அவர் தாமாக முன்வந்து அவற்றை ஏற்க மறுத்தார். அவர் தம் பலம்வாய்ந்த குணாதிசயத்தின் மூலம் மகிமையை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவரது அனுபவமோ, நேரெதிரான வழியில் நடத்திச்சென்றது. அவர்தாமே தம்மைக்குறித்து பின்னர் எழுதினதாவது; “நான் உபத்திரவத்தின் மூலம் பூமியைக்காட்டிலும் வானம் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ, அவ்வாறே மனிதனுடைய வழிகளைக்காட்டிலும் மகிமைப்படுவேன்.” இங்கு கர்த்தருடைய உண்மை ஜனங்கள் அனைவரும் நல்ல பாடங்களை கற்கமுடியும். தங்களது அன்றாட நடவடிக்கைகள் அனைத்திலும் கர்த்தரது வழிநடத்துதல்பேரில் நம்பிக்கையாயிருக்க கற்கமுடியும். அவர்களுக்கு தயவுநிறைந்தவைகளாய்த் தோன்றுகிறவைகளில் மட்டுமல்ல, மாறாக தயவற்றதும், பேரழிவு ஏற்படுத்தும் சம்பவங்களிலும் கர்த்தரையே நம்பியிருக்க கற்கமுடியும். தம் ஊழியத்திற்காக தாம்தெரிந்துகொண்ட பாத்திரம் என்று பவுலைக்குறித்து கர்த்தர், “என் நாமத்தினிமித்தம் அவர் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டும் என்பதை அவனுக்கு காண்பிப்பேன்” என்றார். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் அவரது நிமித்தமாக பாடுபட அனுமதிக்கப்படும்பொழுது (தவறு செய்ததற்காகவோ, கோபம், வெறுப்பு, பொறாமை, கலகம், தீயனபேசுதல் போன்றவற்றிற்காக அல்ல, மாறாக அவர் நிமித்தமாக) அவரது பலியை அங்கீகரிக்கும் வண்ணமாக கர்த்தருடைய தயவு அவற்றோடு இணைக்கப்படும். ஆபேலின்பலி நெருப்பினால் அங்கீகரிக்கப்பட்டது இதற்கு அடையாளமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

முகங்குப்புற தரையில் விழுந்துகிடந்த பவுலைப் பார்த்த அப்போஸ்தலர்கள், அவர் இறந்துவிட்டதாக மற்றவர்கள் எண்ணினதுபோலவே எண்ணினர். பவுலை சூழ்ந்து நிற்கையில், அவர் எழுந்து பட்டணத்துக்கு திரும்பினார். பட்டணத்தார் அனைவரும் கூட்டத்தாரோடு சேர்ந்து அவரை கல்லால் எறிந்தனர் என்று நாம் யூகிக்க வில்லை. அந்தக் கூட்டத்திலிருந்த பெரும்பான்மையானோர் பொதுவாக பவுலின்பேரில் இரக்கம் காண்பித்தனர் என்று யூகிக்க இடமுண்டு, அவ்வாறில்லாவிடில் அப்படிப்பட்ட வன்முறை நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை. ஆகவே அப்போஸ்தலர் மீண்டும் பட்டணத்திற்குள் வந்தது மிக அமைதலான விதத்தில் நடந்ததால், ஜனக்கும்பல் தகாதவகையில் மீண்டும் எழும்பி கலகமுண்டாக்கவில்லை. இந்த கிறிஸ்தவ ஊழியர்களின் விஷயத்தில் சில ஜனங்களை துணிச்சலின் ஆவி இயக்கி, ஒன்றுசேர்க்காதிருந்தது. கர்த்தர் அங்கீகரிக்கும் வகையில் உண்மையான திடமனதுடையோராய், நல்ல போர்ச்சேவகர்களாக தீங்கனுபவித்தும் நடந்தனர். அவர்கள் ஜனங்களை ஒருபோதும் ஆர்வத்தைக்காட்டி மோசம்போக்குகிற விதமாக உயர்த்தும் வார்த்தைகளைப் பேசவில்லை அல்லது நடந்துகொள்ளவும் இல்லை. அப்படிப்பட்ட விஷயங்களில் தெய்வீக சித்தத்தை தவறாக விளக்கும் மற்றவர்களது எதிரான வழிமுறையை பின்பற்றாமல் அப்போஸ்தலரது வழிமுறையே நமது மாதிரிகையாக நமது எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.

லிஸ்தீராவில் அவர்களது வெளியரங்கமான பிரசங்கம் முடிவுக்குவந்தது. அடுத்தநாள். இந்த கிறிஸ்துவின் ஊழியர்கள் 35 மைல்கள் தொலைவுலுள்ள தெர்பைக்கு சென்றனர். பவுலுக்குள் ஓர் ஆச்சரியமான அற்புதத்தை கர்த்தர் நிகழ்த்தியிருப்பதை இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, மரணத்தருவாயிலிருந்த பவுல், அடுத்தநாள் பிரயாணத்தைத் தொடர முடிந்திருப்பது ஒரு அற்புதமே. இச்சம்பவத்தில் நடந்தது போல கர்த்தர் தம் பிள்ளைகளிடத்தில் சிலசமயங்களில் திகைப்புக்குள்ளாக்குகிற காரியங்களை நிகழ்த்துகிறார். மற்ற சமயங்களில் மற்ற மனிதர்களுக்கு நிகழ்வதுபோலவே பொதுவான நிலைமாற்றம் ஏற்படும்படி விட்டுவிடுகிறார்.

அப்போஸ்தலர் தாம் சீர்பொருந்தும்படி விசேஷித்த ஜெபம் ஏறெடுத்ததாக நமக்கு அறிவுறுத்தப்படவில்லை. ஆனால் லிஸ்தீராவில் மனமாற்றத்துக்குள்ளானோரில் ஒருவரான தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டும்படி பின்னாளில் நிருபம் எழுதினார். அதில் அவருக்கு இருந்த வயிற்று உபாதை மற்றும் அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களினிமித்தம் அற்புதங்களைச்செய்யும் குறுக்கீடுகளை பரிந்துரைக்காமல், சில இயற்கை உணவுகளை சேர்த்துக்கொள்ளும்படி [R3013 : page 154] அறிவுறுத்துகிறார். விசேஷ வேண்டுகோளின்றி, தாமாக முன்வந்து மற்ற எதைக்கொடுக்க கர்த்தர் விரும்புகிறாரோ அதுவே நம்மில் நடந்தேறவேண்டும். தெய்வீக வல்லமையை அலட்சியப்படுத்தாமலும், நாம் நம் உடல் ஆரோக்கியத்தை இயற்கையான முறையில் புத்தியறிவோடு பேணிக் காக்கவேண்டும். நோய்வாய்ப்படும் வேளைகளில், அதிலிருந்து குணம்பெற அவ்வாறே செய்யவேண்டும். ஆனால் தெய்வீக பராமரிப்பு நம் எல்லா நடவடிக்கைகளிலும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். நம் உடல் ஆரோக்கியமும், பலமும், ஊழியத்துக்கான வாய்ப்புகளும் நமக்காக ஆயத்தமாக்கப்பட்டிருப்பதை எண்ணி, ஒருவேளை பாதிக்கப்பட்டு துன்புறுவார்களேயானாலும், கர்த்தருடைய பராமரிப்பில் இருக்கும்போது களிகூறக்கடவோம். விசேஷமாக, சத்திய ஊழியத்தினிமித்தம் பாதிப்பு ஏற்பட்டிருக்குமானால், தேவசித்தம் அப்படியிருக்கும் பட்சத்தில், நாம் சீக்கிரமாயும் அற்புதமாகவும் குணப்படுத்தப்படுவோமானால் சந்தோஷப்படக்கடவோம். அடிக்கடி நேரிடுகிற நம் பலவீனங்களைத் தணிக்க, தீமோத்தேயுவின் விஷயத்தில் அப்போஸ்தலர் அறிவுரை கூறியவாறு. இயற்கையாகவே நாம் பலப்பட தேவைப்படுகிறவைகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். தேவனுடைய பிள்ளை தன் எல்லா நடவடிக்கைகளும் கர்த்தரது கரத்தில் உள்ளதையும், அவரது [ R3013 : page 155 ] வழிநடத்துதலின்கீழ் உள்ளதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதேவேளையில், தன் சிறந்த நிதானிப்பில், தெளிந்தபுத்தியின் ஆவியின்படி, தனது ஒவ்வொரு தாலந்து மற்றும் வாய்ப்பை உபயோகிக்கத் தேடவேண்டும். நாம் தரிசித்து நடவாதிருக்க கற்கவேண்டும் என்பதே நம்மைக் குறித்த கர்த்தரது சித்தம் என்பதை நினைவில்கொண்டு, நாம் கண்டடைகிற தயவுள்ள காரியங்களை மட்டுமே செய்யாமல், விசுவாசித்து நடக்க நாம் கற்கவேண்டும். சிலசமயங்களில் தயவற்ற நிலைமையில் காரியங்கள் நடந்தாலும், விசேஷ தெய்வீக பாதுகாப்பையோ விடுதலையையோ வெளியரங்கமாகத் தேடக்கூடாது என்பதை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

தெர்பையில் நடைபெற்ற சத்திய ஊழியங்கள் குறித்து எந்த குறிப்புகளும் கொடுக்கப்படவில்லை. அங்கு விசேஷ சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று நாம் அனுமானிக்கமுடியும். இவ்வளவு தொலைதூரம் சென்றபிறகு, தங்கள் இல்லம்திரும்பவும், பவுலின் சொந்தஊராகிய தர்சூஸ் செல்லவும் குறுகிய தொலைவிலுள்ள வழியைத்தெரிந்தெடுக்காமல், தேவ ஊழியக்காரர்கள் தங்களது பிரயாண திட்டத்தை மாற்றி அமைக்கத் தீர்மானித்தனர். இவ்வாறு அவர்கள் தீர்மானித்ததற்குக் காரணம், லிஸ்தீரா, இக்கோனியா மற்றும் பிசிதியாவிலுள்ள அந்தியோகியா ஆகிய இடங்களிலிருந்த சிறு குழுக்களாகிய விசுவாசிகளுக்கு மூர்க்கத்தனமான எதிர்ப்பு வலுத்து, உபத்திரவப்படுத்துதலும், வாதங்களும் சம்பவித்தன. இதில் புதிதாக மனமாற்றத்திற்குட்பட்டோர் இவற்றிற்குத் தீர்வுகாண தேவையான ஆற்றல் மற்றும் திறனை பெற்றிருக்காததால், அந்த நேரத்தில் அவர்களை உற்சாகப்படுத்தவும், சத்தியத்தில் பலப்பபடுத்தவும் அவசியமேற்பட்டது.

இதுமந்தைகளை மேய்க்கும் ஆயர்களுக்கான வேலையாயிருந்தது. கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தாயகம் திரும்பும் வழியில், வேறு சத்திய ஊழியங்களை செய்ததற்கான எந்த குறிப்பும் இடம் பெற்றிருக்கவில்லை. அவர்கள் தேவதிட்டத்தை நன்கு புரிந்திருந்ததால், இந்த பட்டணங்களிலிருந்த எல்லா ஜனங்களையும் மனந்திருப்பவேண்டுமென்ற எவ்வித எதிர்பார்ப்பும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. ஆனால் நவீன பெயர்கிறிஸ்தவ ஊழியர்கள் அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர். சுவிசேஷம் பரப்பப்படுவதன் நோக்கம், உலகை மனமாற்றத்திற்குள்ளாக்க அல்ல என்றும், உலகிலிருந்து ஒரு விசேஷித்த வகுப்பாரை தெரிந்தெடுக்கவே என்றும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் (அப் 15:14). அவர்கள் இந்த ஜனங்களிடத்தில் சத்தியத்திற்கு சாட்சி பகர்ந்ததோடு, கர்த்தர் அவர்களோடிருக்கிறார் என்ற நம்பிக்கையும் பெற்றிருந்தனர். அப்படிப்பட்டவர்களே கேட்கும் காதுகளையும், புரிந்துகொள்ளும் இருதயத்தையும் அடைந்திருந்தனர் (இவர்கள் மட்டுமே சத்தியத்தைப்பெற தகுதியுள்ளோர்). இவ்வாறு ஏற்கனவே வெளிச்சம் பெற்றிருந்தவர்கள் மூலம் அவர்களுக்கு சென்றடைந்தது. இவர்கள், சிறுமந்தை வகுப்பாரை வளர்ச்சியடையச் செய்வதில் நிறைவடைந்து, அவர்கள் தங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படிக்கும், வரவிருக்கும் யுகத்தில் தேவனது ஏற்றவேளையில், ஆயிரமாண்டு ராஜ்யத்தில் அவர்கள் இடம்பெறவும், மகிமைப்படுத்தப்பட்டு அதிகாரம்பெற்று, உலகத்தை மனந்திரும்பச்செய்து உயர்த்தி, உலக ஜனங்களை ஆசீர்வதிக்க கர்த்தரால் உபயோகப்படுத்தப்படும்படிக்கு உற்சாகப்படுத்துவார்கள்.

இந்த பல்வேறு இடங்களிலுமிருந்த சகோதரர்கள், சுவிசேஷம் தேவனுடையதாயிருந்தால் அதன் ஊழியக்காரரும் பணிவிடைக்காரரும் தீமையின் ஆதிக்கத்திலிருந்து இரக்கம் பெறுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கொண்டிராததால், ஆச்சரியமடைந்தனர். ஏனெனில் தேவன் தம் ஊழியக்காரரை பாதுகாப்பார் என்பது இயல்பாகவே எழும் எதிர்பார்ப்பாயிருந்ததால், அவர்களது நம்பிக்கை குறிப்பிடத்தக்க அளவு அசைத்தது.

பரிசுத்தவானை பூரணப்படுத்துவதற்கும் விசுவாசத்தை பரீட்சிப்பதற்கும், ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு உடன்சுதந்திரராகப்போவோரை சோதித்து தயார்ப்படுத்தவும் உபத்திரவம் அத்தியாவசியமானது என்று அப்போஸ்தலர் விளக்குகிறார். இந்த சுவிசேஷயுகத்தின்போது தீமையை அனுமதித்து, உலகத்தாரிடமிருந்து சிறுமந்தையை காத்து, அவர்களை மெருகேற்றி, அவர்களை ராஜ்யத்துக் குரியவர்களாக சுத்திகரிக்கும் நோக்கத்துடன், தான் அனுமதிக்கப்பட்ட நோககத்தை அது நிறைவேற்றி முடிக்கிறது. அதன்பிறகு, சாத்தான் கட்டப்படுவான், அப்பொழுது நீதிமான்கள் இனி உபத்திரவத்துக்குள்ளாகாமல், கிறிஸ்துவின் ராஜ்யத்தில் உடன் சுதந்திரர்களாக ஆளுகைபுரிவர்.

அப்போஸ்தலர்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்ட இந்த பட்டணங்களுக்கு மீண்டும் திரும்பிவந்ததைக்குறித்து ஒரு ஆற்றல்மிக்க எழுத்தாளர் பரிந்துரைப்பதாவது:- தங்களை காத்துக்கொள்ளுதலுக்கு சிறுமைப்படுதல் அவசியமென அவர்கள் சந்தோஷமாய் எதிர்கொண்டனர். பட்டணத்திற்குள் நுழையும்போது ஒருவேளை தங்களை மூடி மறைத்துக்கொள்ளவோ, ஒருவேளை இரவு வேளையிலோ அல்லது அதிகாலை விடிவெள்ளியிலோ – இரகசியமாக சந்தித்தலையும், இரவுவேளைகளில் ஒன்றுகூடுவதும் தனித்து கவனித்து வருவதன்மூலமே அவர்களது எதிரிகளின் கடுங்கோபத்திலிருந்து நழுவிச்செல்லமுடியும். கிறிஸ்துவின் ஊழியர்கள் மற்ற எந்த அசம்பாவிதமின்றி திரும்பினர். சிரியாவிலுள்ள அந்தியோகியா சபையின் விசேஷப் பிரதிநிதிகளாக இந்தப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்ததால், அச்சபையில் தங்களது ஊழியத்தின் அறிக்கையை சமர்ப்பித்தனர்.