அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4008 (page 179)

அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி

ADMONITIONS FOR THE CONSECRATED

“தேவனுடைய வீட்டிலே நடக்க வேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.” – (1 தீமோத்தேயு 3:14,15)

கர்த்தருக்கென்றும், அவருடையவர்களாய் இருப்பதற்கென்றும் மற்றும் மரணப்பரியந்தம் அவருக்கு ஊழியம் புரிவதற்கென்றும் நம்மை அர்ப்பணம் பண்ணுவது என்பது ஒரு காரியமாகவும், அந்த ஊழியத்தினை ஜீவியத்தின் அனைத்துச் சிறுசிறு
காரியங்களிலும் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றுவது என்பது வேறு ஒரு காரியமாகவும் காணப்படுகின்றது. “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கின்றான் எனும் நமது கர்த்தருடைய வார்த்தைகளானது
பின்வரும் உண்மையினால் நன்கு விளக்கப்படுகின்றது – அதாவது நம்முடைய பலியை, தற்கொலைச் செய்துகொள்வதன் மூலமாகவோ அல்லது கழுமரத்தில் எரிக்கப்படுவதற்குச் செல்வதன் மூலமாகவோ முடித்திடுவது சுலபம்தான்; ஜீவியத்தின்
சிறுசிறு காரியங்கள் அனைத்திலும், ஒவ்வொரு நாளிலும் நம்முடைய பலியைப் பலிப்பீடத்தில் – சுயத்தை வெறுத்தலுடன், பொறுமையுடன், விடாமுயற்சியுடன், சகோதர சிநேகத்துடன், சாந்தத்துடன் தக்கவைத்திடுவதும் மற்றும் வையப்படுவதை
ஏற்றுக்கொண்டு, ஆனால் பதிலுக்கு வையாமல் இருப்பதும், மனதிலோ (அ) சரீரத்திலோ அடிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு, ஆனால் பதிலுக்குப் பழிவாங்காமல் இருப்பதும் மிகவும் கடினமான காரியமாகும்; மெல்ல மெல்ல சம்பவிக்கும் சிலுவை
மரணத்தைச் சகிப்பது மிகவும் கடினமான காரியமாகும். அர்ப்பணிப்பானது சரியான ஆவியை (அ) சிந்தையை (அ) நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்க, படிப்படியாக அர்ப்பணிப்பை நடந்தேற்றுவது என்பது நமது கர்த்தருக்கொத்த
குணலட்சணத்தை நம்மில் அதிகமதிகமாய் வளர்த்திடும் என்ற விதத்தில், கர்த்தருடைய திட்டமானது பெரிதும், நம்முடைய நன்மைக்கேதுவானதாகவே இருக்கின்றது என்பதை நம்மால் எளிதில் கண்டுகொள்ள முடிகின்றது. ஆகையால்தான்
உபத்திரவங்களை – நாம் சரியான இருதய நிலையில் ஏற்றுக்கொண்டு, அவைகள் போதிக்கும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள நாடுகையில், அவைகள் கர்த்தருடைய ஆவியின் பல்வேறு கனிகளையும், கிருபைகளையும் நம்மில்
உண்டுபண்ணிடும் என்று; அறிந்து, அவைகளிலும்கூடக் களிகூருவதற்கு நாம் கற்றுக்கொள்ளும்படிக்கு அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார்.

சபையில் நல்நடக்கை

நாம் அனைவருமே மாம்சத்தின்படி குறைவுபட்டவர்கள் என்றும், நம்மில் எவராலும் பூரணத்திற்கான திவ்விய தரத்தினை எட்டமுடியாது என்றும், நம்முடைய ஒரே பூரணம், இருதயத்தினுடையது, சித்தத்தினுடையது மாத்திரம்தான் என்றும்
அடையாளங்கண்டுகொண்டு – ஒவ்வொருவரின் சித்தமானது, விருப்பமானது, நோக்கமானது, அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவ வேண்டியதாகவும், கோபத்திற்கும், பகைமைக்கும், துர்க்கிரியைகளுக்கும் ஏவக்கூடாது
என்றதாகவும் இருந்தபோதிலும், அவ்வப்போது ஒருவர் இன்னொருவரிடமிருந்து சோதனைகளையும் மற்றும் பரீட்சைகளையும் மற்றும் கோபமூட்டுதல்களையும் பெற்றுக்கொள்கையில் நாம் ஆச்சரியப்படக்கூடாது (எபிரெயர் 10:24). நம் விஷயத்தில் தேவனுக்கொத்த சாயலை அடைய வேண்டியதே மிக உயர்ந்த நிலையென நாம் வைத்திருக்க வேண்டும் மற்றும் சரீரத்திலுள்ள மற்றவர்கள் விஷயத்தில் அவர்களுக்கான மற்றும் கர்த்தருக்கான நம்முடைய அன்பானது, நம்முன் தோன்றும் அவர்களின் திரளான குறைபாடுகளை / பிழைகளை மூடிட அனுமதிப்பதற்கு நாம் ஆயத்தமாய்க் காணப்பட வேண்டும். ஒருவள் (அ) ஒருவன் எந்தளவுக்கு இந்தப் போக்கைக்கொண்டிருப்பானோ, அந்தளவுக்கு அவன் கர்த்தருக்குப் பிரியமாயிருப்பான், இருதயத்தில் சுத்தமுள்ளவனாயிருப்பான் – தேவனுடைய பிரியமான குமாரனின் சாயலாயிருப்பான் மற்றும் மீட்பருடைய புண்ணியத்தின் வஸ்திரத்தினால் மூடப்பட்டிருக்கும் அவன், பூரணமற்ற அவனது மாம்சத்தின்படியாக
இல்லாமல், மாறாக அவனது பூரண நோக்கமுள்ள இருதயம் அல்லது சித்தத்தின்படியாக, தேவனால் பார்க்கப்படுகின்றான். துணைத்தலைப்பில் இடம்பெறும் “சபையில் என்ற வார்த்தையானது நமக்கு – கூடுகிற இடத்தில் என்று பொருள்படாமல், கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் என்று பொருள்படுகின்றதாய் இருக்கின்றது. நாம் ஒன்றுகூடியிருக்கும்போது என்று மாத்திரம் பொருள்படாமல், ஒவ்வொரு நாளும் மற்றும் எல்லா நேரங்களிலுமுள்ள அவர்களுடனான நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. மனுஷர் மத்தியிலான பரிசுத்த ஆவியின் வாசஸ்தலமாகிய கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபையின் அங்கத்தினர்கள் மத்தியிலான நம்முடைய நடக்கை எவ்வாறு காணப்பட வேண்டுமென்ற பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் வாஞ்சித்திட வேண்டும்.

வேதாகமம் எங்கும் கர்த்தர் நம்முன் பூரண அன்பையே அடைய வேண்டிய நிலையாக/தரநிலையாக வைத்துள்ளார் மற்றும் கிறிஸ்துவுக்குள் குழந்தைகள் எனும் நிலையைக் கடந்துள்ளவர்களும், கர்த்தருடைய வார்த்தை மற்றும் ஆவி
மூலமாய் அவரைப் பற்றி ஓரளவான அறிவிற்குள்ளாகக் கடந்து வந்துள்ளவர்களுமானவர்கள் – அடைய வேண்டிய நிலையாகிய இந்த அன்பு குறித்து அடையாளங்கண்டுகொண்டு, அதற்கு ஒத்திருக்கத்தக்கதாக நாடுகின்றனர் என்று நாம்
எண்ணுகின்றோம். ஆகையால் இத்தகையவர்கள் மத்தியில் அவ்வப்போது எழும்புகின்றதான பிரச்சனைகள் என்பது, மாம்சத்தின் அபூரணம் காரணமாகவும், அன்பு எனும் நெறிமுறையைச் செயல்படுத்தும் விஷயத்தில் பூரணமற்ற அறிவு வளர்ச்சி மற்றும் அனுபவம் காரணமாகவும் எழும்புபவைகளாக இருக்கின்றன என்றே நாம் எண்ண வேண்டும். ஆகையால்தான் நாம் கிருபையிலும், அறிவிலும் வளர வேண்டும் என்றும், நாம் கர்த்தருடைய ஆவியினால், அன்பின் ஆவியினால், தெளிந்த புத்தியுள்ள ஆவியினால், சகோதர சிநேகத்தின் ஆவியினால், சாந்தத்தின் ஆவியினால், பொறுமையின் ஆவியினால் – பரிசுத்த ஆவியினால் அதிகமதிகமாய் நிரம்பிட வேண்டும் என்றும் வேதவாக்கியங்களின் புத்திமதி காணப்படுகின்றது.

வாதாடி போராடுதல் அவசியமா?

சிலசமயம் அவசியம், ஆனால் மிகவும் அடிக்கடியல்ல என்று நாம் பதிலளிக்கின்றோம். ஒரே ஒரு காரணத்திற்காகப் போராடுவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது குறித்து, “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட
விசுவாசத்திற்காக நீங்கள் [R4008 : page 180] தைரியமாய்ப் போராட வேண்டும் என்ற வார்த்தைகளில் நாம் பார்க்கின்றோம் (யூதா 3). ஆனால் எதிர்த்துப் போராடுகின்ற ஆவியானது வேதாகமம் எங்கும் கண்டிக்கப்பட்டுள்ளப்படியால்,

நம்முடைய விசுவாசம் பற்றியதான முக்கியமான காரியங்களுக்காக மாத்திரமே போராட வேண்டுமென்ற அர்த்தத்திலேயே அப்போஸ்தலன் குறிப்பிட்டுள்ளாரென நாம் புரிந்துகொள்ள வேண்டும். பரம பிதாவினுடைய ஆள்தத்துவத்தை
மறுதலிக்கின்றவருக்கும், தேவன் என்ற மாபெரியவர் எவரும் இல்லை, தேவன் என்பது நல்ல கொள்கை மாத்திரமே என்றும், இரும்பிலோ, மரத்திலோ, கல்லிலோ அல்லது வேறு ஏதாகிலும் பொருளிலோ பயனுள்ள விதத்தில் நன்மை
இருக்குமானால், அதில் கடவுள் இருக்கின்றார் என்றும் சபையில் போதிக்கக் கூடியவருக்கும் நாம் இடம் கொடுத்திடக்கூடாது. இம்மாதிரியான வீணான தத்துவங்களானது – பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட
விசுவாசத்திற்கு அந்நியமாய் மாத்திரமல்லாமல், அந்த விசுவாசத்திற்கு முற்றிலும் முரண்பாடாய் இருக்கின்றது என்று கவனமாய் எதிர்த்துப் போராடப்பட வேண்டும். நாம் மீட்கும் பொருளுக்காகவும் போராட வேண்டும்; ஏனெனில் இதுவே –
வேதவாக்கியங்களில் கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் மற்றும் நாம் நீதிமான்களாக்கப்படத்தக்கதாக அவர் உயிர்த்தெழுந்தார் என்பதே-பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளதான விசுவாசத்திற்கான
அஸ்திபாரமாக இருக்கின்றது. இது பின்வரும் பல்வேறு தவறான வலியுறுத்தல்களுக்கு எதிராக போராட வேண்டும்; அதாவது நமது கர்த்தர் மாம்சமாக்கப்படவில்லை என்றும், அவர் ஆவியின் ஜீவியாகவே தொடர்ந்து காணப்பட்டார் என்றும்,
அவருக்கு மரணம் வருவது என்பது சாத்தியமற்ற ஒன்று என்றும், அவர் கொஞ்சம் காலம் மனித சரீரத்தில் பாவனையாகத் தோற்றமளித்தார்; அது தாம்தான் என்பதுபோல காண்பித்துக்கொண்டிருந்தார் மற்றும் அந்தச் சரீரம் மரித்தபோது, தாம்
மரித்ததுபோல் காண்பித்துக்கொண்டிருந்தார் என்றுமுள்ள தவறான வலியுறுத்தல்களுக்கு எதிராக போராட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.

உலகத்திற்குள் வருவதற்கு முன்னதாகப் பிதாவோடு தமக்கிருந்த மகிமையை நமது கர்த்தர் துறந்தார் என்றும், அவர் தம்மைத்தாம் தாழ்த்தினார் மற்றும் மாம்சமாக்கப்பட்டார் என்றும், இதை அவர் மாதிரியாக இருக்கும்படிக்குச் செய்யாமல்,
மாறாக தேவனுடைய கிருபையினால் “ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்க்கும்படிக்கும், நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் மரிக்கும்படிக்கும் செய்தார் என்றும் – பரிசுத்தவான்களுக்கு
ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளதான விசுவாசத்தினை நாம் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். இது இன்னுமாக பின்வரும் காரியத்திற்கும் நாம் போராட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது; அவரது மரணம் அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக
நீதியுள்ளவராய் அவர் மரித்திட்டதான நிஜமான மரணமாகும், இல்லையேல் அவர் இரட்சகர் மற்றும் மீட்பர் என்று அவரிடத்திலுள்ள நமது விசுவாசம் இல்லாமல் போய்விடும். இன்னுமாக அவர் உண்மையாக மரித்தார் என்றும், தம்மையே
தகப்பனாகிய ஆதாமுக்கான சரிநிகர்சமான விலையாக உண்மையில் கொடுத்து, இப்படியாக ஆதாமையும், அவருடைய சந்ததியையும் விலைக்கு வாங்கிகொண்டார் என்றும் நாம் விசுவாசிக்கவில்லையெனில், மரித்தோரிலிருந்துள்ள அவரது
உயிர்த்தெழுதலை நாம் எப்படி விசுவாசிக்கக்கூடும்? மரணத்திற்குள்ளாகச் செல்லாத ஒருவரால், எப்படி மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்பட முடியும்? இந்தச் சுவிசேஷ யுகத்தில், கிறிஸ்துவின் மணவாட்டியை – முதற்பேறானவர்களின்
சபையைத் தெரிந்துகொள்ளுவது தேவனுடைய வேலையாக இருக்கின்றது என்றும், நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையின் போது இந்தத் தெரிந்துகொள்ளுதல் நிறைவு பெறவே, இவ்வேலையானது – சிறுமந்தையினர், தங்கள் இராஜரிக தலையும், பிரதான ஆசாரியனுமான கிறிஸ்துவின் கீழ் இராஜரிக ஆசாரியக்கூட்டத்தினரென, மற்றும் அவர்கள் “உன் சந்ததிக்குள் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் எனும் ஆபிரகாமின் உடன்ப்படிக்கையை

நிறைவேற்றத்தக்கதாக ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியாரென இராஜ்யத்தில் மகிமைக்கும், கனத்திற்கும் மற்றும் அழியாமைக்கும் உயிர்த்தெழும்போது இவ்வேலையானது – முழு நிறைவடைவதாயிருக்கும் என்றுமுள்ள மாபெரும்
உண்மையை நாம் பற்றிக் கொண்டும், அதற்காகப் போராடியும் நாம் காணப்பட வேண்டும். நம்முடைய மார்க்கத்தினுடைய இந்த அடிப்படைகள் அனைத்திற்காகவும், அதுவும் ஆதாமினுடைய மீறுதல் காரணமாகப் பாவம் உலகத்திற்குள்

பிரவேசித்தது என்றும், அவருடைய பாவம் மற்றும் அதற்கான தண்டனையை நாம் அனைவரும் சுதந்தரித்துக் கொண்டுள்ளோம் மற்றும் அனைவருக்கும் மீட்பு அவசியம் என்று முள்ளவைகளுக்காகவும்- விசுவாசத்தினுடைய இந்த முதலாம்
கொள்கைகள் அனைத்திற்காகவும் நாம் நிற்க வேண்டும் மற்றும் போராட வேண்டும். இவைகள் விஷயத்தில் அலட்சியமாய் இருத்தல் மற்றும் தப்பறையானது உள்ளே நுழைவதற்கும் மற்றும் பிரகடனப்படுத்துவதற்கும், சபையில்
போதிக்கப்படுவதற்கும் அனுமதித்தல் என்பது, கடுமையான பாவமாகும் மற்றும் சிலுவையின் போர்வீரர்களென, அதனை ஆதரிப்பவர்களென பாதுகாவலர்களென இருப்போமென்று வாக்களித்துள்ளவர்கள் சார்பிலான உண்மையின்மையை
வெளிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

ஆனால் இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்கள் தவிர மற்றப்படி தெளிவாய்த் தெரிவிக்கப்படாத ஏதேனும் உபதேசத்தின் கருத்துகள் விஷயத்தில் – வேதவாக்கியங்களிலேயே விவரிக்கப்படாத ஏதேனும் உவமையினுடைய அர்த்தம் தொடர்புடைய
விஷயத்தில் – கர்த்தருடைய ஜனங்கள் தங்கள் மத்தியில் மிகுந்த சாந்தத்தைக் கொண்டிருக்க வேண்டும். சகோதரர் ரசல் தொடர்பாகவோ அல்லது வேறு ஏதேனும் சகோதரன் தொடர்பாகவோ எந்தப் பிரிவினையோ அல்லது வாக்குவாதமோ
காணப்படக்கூடாது. தேவனுடைய வார்த்தைகளில் குறிப்பாய் / தெளிவாய்த் தெரிவிக்கப்படாத விஷயங்களைப் பொறுத்தமட்டில், ஒவ்வொருவனும் தன் சொந்த பகுத்தறிவைச் செயல்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். வேதவாக்கியங்களில்
குறிப்பாகவும் மற்றும் தெளிவாகவும் போதிக்கப்படாத எந்த ஒரு காரியத்தையோ அல்லது உபதேசத்தையோ பிரகடனப்படுத்த முற்படும் விஷயத்தில் ஒவ்வொருவனும் தயக்கம் அல்லது கவனம் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அனைத்திற்கும்
மேலாக ஓர் ஊகம் / சிந்தனை குறித்து அவனே முற்றிலுமாக நம்பிக்கை அடையாமல் இருக்கும் நிலையில், அந்த ஊகத்தை / சிந்தனையைப் போதிக்கவோ அல்லது போதிக்க முற்படவோ கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருக்க வேண்டும்.
தெளிவாய்ப் புரிந்துகொள்ளப்படவில்லை என்று ஒத்துக்கொண்டிருக்கும் காரியங்களை ஒருவர் ஒப்புவிக்கிறதினால் / விளக்க முற்ப்படுகிறதினால் ஏற்ப்படும் கூடுதல் சிரமங்கள் தவிர, மற்றபடி ஒவ்வொருவனுக்குமே அவனவனுடைய சொந்த
கணிப்பின் விஷயத்திலிருக்கும் குழப்பங்களோடும், வஞ்சனைகளோடும் எதிர்த்துப்போராடுவதற்கே போதுமான போராட்டங்கள் உள்ளன. நாம் பேசிடுவதற்கும், சிந்தித்திடுவதற்கும் ஊகங்கள் என்று தவிர்க்க முடியாத அளவுக்கும் தேவனுடைய வார்த்தைகளில் அநேகம் காரியங்கள் எளிமையாகவும், தெளிவாகவும் மற்றும் உறுதியாகவும் காணப்படுகின்றன. “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ நமக்கு
உரியவைகள் என்று வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன (உபாகமம் 29:29).

பொறுமையும், சகிப்புத்தன்மையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

ஏதேனும் ஓர் அன்பு சகோதரன் ஒரு விநோதமான கருத்தையோ (அ) வேலையையோ பெற்றிருந்து அதை அவன் சபையாருக்கு முன்வைப்பது வரையிலும் தனக்கு அமைதி வருவதில்லை என்று எண்ணுவானானால், அவனது இந்தக்
கற்பனைகளே சபையாருடைய பொதுவான கருத்தாயும் உள்ளது என்று சபைக்கு வருகை தந்திருப்பவர்கள் (Visitors) முடிவுசெய்துவிடாதபடிக்கு, அவன் அதைப் பொதுவில் பேசி சபையார் கேட்டறிந்துகொள்வது தகுதியாயிராது என்றாலும் –
அவன் அவற்றைச் சொல்லிடுவதற்குச் சில வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ஏதோ தருணங்கள் கொடுக்கப்பட்டு, அவன் பேசுவது கேட்கப்பட்டப் பிற்பாடு, மற்றும் அவனது கூற்றுகள் நியாயமற்றது என்றும், வேதவாக்கியங்கள் ஆதரிக்காதவைகள் என்றுமாகச் சபையினுடைய கணிப்புக் காணப்படுமானால், தனது கண்ணோட்டத்தை அவன் முன்வைத்ததில் அவன் திருப்தியடைந்துவிட வேண்டும்; ஆனால் அவன் திருப்தியடையாமல், மற்றவர்களுக்குத் தொந்தரவாகவும்,
ஆராதனையின் பொதுவான ஆவியையும், வேத ஆராய்ச்சியின் முன்னேற்றத்தைக் குறுக்கிடும் விதத்திலும் தனது கருத்தினை முன்னிறுத்துவதைத் தனது பொழுது போக்கு வேலையாகத் தொடர விரும்புவானானால், இது விஷயம் குறித்து
அவனது கவனத்திற்குக் கொண்டுவருவதும், அவன் பேசுவது கேட்கப்பட்டுள்ளது என்பதை நினைப்பூட்டுவதும், அவன் அக்காரியத்தை வலியுறுத்திக்கொண்டே இருப்பது, அடிப்படை சத்தியத்திற்காக இல்லாமல், ஒரு கருத்திற்காகச் சண்டையிடுவது போன்றிருக்கின்றது என்றும், இம்மாதிரியாகச் சண்டையிடுவது [R4009 : page 180] என்பது கர்த்தருடைய சித்தத்திற்கும், அவருடைய ஜனங்கள் மற்றும் அவனுக்கான நன்மைக்கும் எதிர்மாறானாது என வேதவாக்கியங்கள் எங்கும்
கண்டனம் பண்ணப்பட்டுள்ளது என்றும், இதை அவன் தொடர்வதற்குத் தங்களால் அனுமதிக்க முடியாது என்று தெரிவிப்பதும் மூப்பர்களுடைய கடமையாக இருக்கின்றது (தீத்து 3:9).

“சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர் களைக்குறித்து அப்போஸ்தலன் பேசுகின்றார் (ரோமர் 2:8). தாங்கள் ஏற்கெனவே அடையாளம் கண்டுகொண்டுள்ளதான சத்தியத்தின் ஆவிக்கேற்றப்படி ஜீவிக்காதவர்கள்
மத்தியிலேயே சண்டையிடுகிற / எதிர்த்துப்போராடுகிற ஆவி (அ) தன்மை பொதுவாய்க் காணப்படுகின்றது என்று சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்கள் கிருபையில் வளராமல் அன்பில், இரக்கத்தில், சாந்தத்தில், தயவில், பொறுமை

முதலானவைகளில் வளராமல் – அறிவில் வளர்வதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர் மற்றும் இருதயத்தில் சரியாய்க் காணப்படுபவர்கள், இதுவே தங்கள் பிரச்சனை என்று கண்டுகொள்வதற்கும் மற்றும் இதைச் சரிச்செய்துகொள்வதற்கும்
பிரியமாய் இருப்பார்கள்; காரணம் நம்முடைய கருத்துகளுக்காகச் சண்டையிட்டு, தேவனுடைய சபையில் குழப்பத்தை ஏற்படுத்தி, இறுதியில் கர்த்தரினால் கடிந்துகொள்ளப்படுவதினாலும் மற்றும் பூரண அன்பிற்கும், கிறிஸ்துவுக்கொத்த

சாயலுக்குமான பரீட்சையில் ஜெயமடைய முடியாமல், மணவாட்டி வகுப்பாரில் இடம்பெறுவதற்குப் பாத்திரமற்றவர்களாகக் கருதப்பட்டுப்போவதினாலும், [R4009 : page 181] நமக்கு என்ன இலாபம்! நிச்சயமாய் இத்தகைய
சண்டைகள் / போராடுதல்கள், கற்பனையான கருத்துக்களை உண்டுபண்ணுதல்களையே அப்போஸ்தலன் கடிந்துகொள்கின்றார் மற்றும் இந்தக் கடிந்து கொள்ளுதலானது நம் அனைவராலும் செவிசாய்க்கப்பட வேண்டும்.

இது தொடர்புடைய மற்றுமொரு கருத்தினை, “ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்யாமல் எனும் அப்போஸ்தலனுடைய புத்திமதியானது தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது, அதென்னவெனில்: சிலர் இயல்பாகவே
சண்டைப்பண்ணுகிறதின் ஆவியை உடையவர்களாய் இருப்பார்கள் மற்றும் இதனால் இது விஷயத்தில் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் ஜெயங்கொள்ள வேண்டியிருக்கும். தங்களையும் மற்றவர்களையும் பிரச்சனைக்குள்ளாக்கும் வீண்

பெருமையின் ஆவியை, அகந்தை மற்றும் பேராசையின் ஆவியைச் சிலர் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே சண்டைப் பண்ணுகிறவர்களாகவும் / எதிர்க்கிறவர்களாகவும், இயல்பாகவே பேராசைக் கொண்டவர்களாகவும் காணப்படுபவர்களை நாம் நிராகரிக்க வேண்டுமா? அவர்கள் சரீரத்தில் அங்கத்தினர்கள் இல்லை என்று அவர்களை விலக்கிட வேண்டுமா? இல்லவே இல்லை இப்படிப்பட்டவர்களுக்கும் மற்றும் நம்முடன் தொடர்புக்குள்

வரும் அனைவருக்கும் படிப்பினையைப் பதிய வைக்கத்தக்கதாக நம்முடைய நடத்தையில் சரியான நடக்கையினை மாதிரித்துவப்படுத்திட நாம் நாடிட வேண்டும். மற்றவரிடத்தில் நாம் தவறான ஆவியைப் பார்க்கும்போதெல்லாம், “அந்த
ஆவியில்/பண்பில் எதுவாகிலும் என்னிடத்தில் காணப்படுகின்றதா? என்பதே நம்முடைய முதலாவது எண்ணமாக இருக்க வேண்டும் மற்றும் நாம் முதலாவதாகத் திருத்தத்தை நம்முடைய சொந்த இருதயத்திலும், நடத்தையிலும் செய்ய
வேண்டும். இப்படியாக நம்முடைய சொந்த கண்களில் காணப்படும் உத்திரத்தை எடுத்துப்போடுகையில், நாம் நம்முடைய சகோதரனை இரக்கத்துடனும், சாந்தத்துடனும் அணுகிடுவதற்கு நன்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருப்போம் மற்றும் தன்
சிரமங்களிலிருந்து எழும்பிடுவதற்கு சகோதரனுக்கு உதவிடும் விஷயத்தில் தகாதமுறையில் நாம் செயல்படாமலும் இருக்கச் செய்யும்.

முடிப்பதற்காகப் போராடும் பெரோயா பட்டணத்தார்

அருமையான இருதயமும், தலைச்சிறந்த நோக்கமும் கொண்டுள்ள கர்த்தருடைய அன்பார்ந்த சகோதரர்களில் சிலர் (Berean Studies) பெரோயரின் ஆராய்ச்சி வகுப்புத் தொடர்புடைய விஷயத்தில் சரியற்ற கருத்துகளைக் கொண்டவர்களாகக்
காணப்படுகின்றனர். இவர்கள் தங்களுக்குள் கூறிக் கொள்வதாவது: “(பெரோயரின் ஆராய்ச்சியில்) கலந்தாராயப்படும் கேள்வித் தொடர்புடைய விஷயத்தில் ஒரே ஒரு சரியான கருத்துதான் இருக்க முடியும் மற்றும் அந்த ஒன்றுதான் சத்தியமுமாகும்; மற்றும் இங்குள்ள அனைவருக்கும் சத்தியம் வேண்டும் மற்றும் அக்கேள்விக் குறித்து நாம் போராடி வாக்குவாதம் பண்ண வேண்டும். அங்குக் கூடியுள்ளவர்களில் ஒருவன் தன் கருத்தைக் கைவிட்டு, தான் தவறாய்ச்
சொல்லியுள்ளான் என்று காணும்வரைத் தேவைப்படும்பட்சத்தில் இராமுழுவதும் கூடியிருந்து போராடியாக வேண்டும் என்பதே ஆகும். இது முற்றிலுமாகப் பொல்லாத சிந்தையாகும் மற்றும் இது பல்வேறு வகுப்புகளில் ஆவிக்குரிய தன்மைக்கு இடையூறையும், மகா அசௌகரியத்தையும், சாதகமின்மையையும் விளைவிக்கின்றதாய் இருக்கும். ஒரு பாடத்தின்/ஆராய்ச்சி செய்யும் தலைப்பின் விஷயத்தில், எவ்விதமான சிந்தனை செய்யாமலும் மற்றும் மற்றவர்களால்
முன்வைக்கப்படும் வார்த்தைகளை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்பவர்களாகவும் / விழுங்கிக்கொள்பவர்களாகவும் மாத்திரம் காணப்படுபவர்களைப்பார்க்கிலும், கொஞ்சம் சிந்தனை செய்பவர்களை நாம் மிகவும் மதித்திட வேண்டும். ஆனாலும் சரியான வரையறைக் கைக்கொள்ளப்பட வேண்டும், அதென்னவெனில்: நாம் மெதுவாய்க் கற்றுக்கொள்கிற விஷயத்தில் கர்த்தர் நம் அனைவரிடத்திலும் மிகுதியான பொறுமை கொண்டிருந்தார் மற்றும் நாமும் ஒருவர் இன்னொருவரிடத்தில் பொறுமையாய் இருக்க வேண்டும். அவர் கற்பனையின்மேல் கற்பனையையும், பிரமாணத்தின்மேல் பிரமாணத்தையும் வைக்கின்றார் மற்றும் நீடிய சாந்தமுடையவராகவும் / பொறுமையுடையவராகவும், மிகுந்த கிருபையுள்ளவராகவும் மற்றும் தம்முடைய சித்தம் செய்ய விரும்புவதற்க்கான சான்றுகளை வெளிப்படுத்துகின்றவர்கள் அனைவரிடத்திலும் மிகவும் பெருந்தன்மையுடையவராகவும் காணப்படுகின்றார்.

அவருடைய நாமத்திலும், அவருடைய பிரதிநிதிகளெனவும் நாம் மேற்கூறியவைகளுக்குக் குறைவாக எதையும் செய்திடுவதற்கு நமக்கு நிச்சயமாய் அதிகாரம் வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் நம்மிடத்தில் காணப்பட்டதான
வேகக்குறைவைக் குறித்த நம்முடைய உணர்ந்துகொள்ளுதலானது, பார்ப்பதில் மெதுவாகவும், கேட்பதில் மெதுவாகவும், புரிந்துகொள்வதில் மெதுவாகவும் காணப்படும் மற்றவர்களிடத்தில் நம்மை மிகவும் அனுதாபங்கொள்ளச் செய்யும்.
ஆகையால் எந்த ஒரு கேள்வித் தொடர்புடைய விஷயத்திலும், தன்னுடைய கண்ணோட்டம் குறித்து முன்வைப்பதற்கான நியாயமான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டால், அதில் ஒவ்வொருவனும் திருப்திக்கொள்ள வேண்டும் மற்றும் அதை
மற்றவர்களிடத்தில் வற்புறுத்தவும், திணிக்கவும் முயற்சிக்கக்கூடாது. ஒருவேளை இதழாசிரியர் (சகோ. ரசல்) ஒரு கேள்வியின் விஷயத்தில் தன்னுடைய கண்ணோட்டத்தைக் குறிப்பிட்டிருக்கிறாரெனில் மற்றும் ஒருவர் (அ) அதிகமானவர்கள்
அக்கேள்வியை இதழாசிரியரின் கண்ணோட்டத்தின்படியாகப் பார்க்கவில்லையெனில் மற்றும் அக்கேள்வியானது அடிப்படை கொள்கைகள் பற்றினது இல்லை எனும் பட்சத்தில், அக்காரியத்தின் விஷயத்தில் அமைதி காப்பதும், மாபெரும்
ஆசிரியராகிய கர்த்தர் தம்முடைய வழிநடத்துதல்கள் மூலம், நாம் முழுமையாய்க் கண்ணார காணத்தக்கதான நிலைக்கு நம்மைப் படிப்படியாகக் கொண்டுவந்திடுவதற்கு அவரை அனுமதிப்பதும் ஏற்றகாரியமாய் இருக்கும் என்று இதழாசிரியர்
கருதுவார். இதில் பொறுமைக்கான, சகிப்பிற்கான, சகோதர சிநேகத்திற்கான, சாந்தத்திற்கான, காருணியத்திற்கான, அன்பிற்கான படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை நாம் பெற்றுக்கொள்கின்றோம்.

ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக / ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து

சண்டைப்பண்ணுகிற மனநிலையை உடையவன் ஒருவன் சண்டைப் பண்ணுவானானால், அவன் மற்றவர்களிடத்தில் கோபத்தையும் மற்றும் துர்க்கிரியைகளையும் ஏவுவதில் எவ்வித சிரமமும் கொண்டிருப்பதில்லை ஆனால் அன்பின் பரிசுத்த
ஆவியை நம்முடைய இருதயங்களில் பெற்றிருப்பவர்களாகிய நாம் – “அன்புக்கும், நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்புவதற்குக் கருத்தாயிருப்போமாக” என்று அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார். அனுதாபத்தின்

கண்ணோட்டத்தில், சிரமங்களிலும், பெலவீனங்களிலும் ஒருவருக்கொருவர் உதவிட வேண்டுமெனும் கண்ணோட்டத்தில், நாம் ஒருவர் இன்னொருவருடைய இயல்பான பண்புகளைக் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இது எவ்வளவாய்ச்
செய்ய இயலுகின்ற விஷயமாய் இருக்கின்றது! அனுதாபத்துடனும், அன்புடனும், சாந்தத்துடனும் அன்பான வார்த்தைகள் பேசுவதன் மூலமாக ஏதோ ஓர் அருமையான சகோதரனோ அல்லது சகோதரியோ சீரான நிலையில் இருப்பதற்கு நாம் உதவிட முடியும் – ஒருவேளை வெளிப்பட்டால் அவனுக்கும், சபைக்கும் (அ) மற்றவர்களுக்கோ பாதகமாய்க் காணப்பட வாய்ப்புள்ள அவனது (அ) அவளது பெலவீனங்களை ஜெயம்கொள்ளச் செய்திட முடியும். இந்த உதவும் சிந்தையை நாம் அனைவருமே எவ்வளவாய்க் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அதை அன்பின் ஆவியென, கர்த்தருடைய ஆவியென அடையாளங்கண்டுகொள்ள வேண்டும்! அமைதியான / மெதுவான பதில், அன்பான, கனிவான வார்த்தையானது
உதவிகரமாயிருந்து, கோபத்தை மாற்றிப்போடும் என்றும், கடுஞ்சொற்களும், வாக்குவாதமான சொற்களும், குத்தும்விதமான சொற்களும், ஏளனமான சொற்களும் நிச்சயமாய்க் கோபத்தை எழச்செய்யும் என்றும் நாம் நினைவில்கொள்வோமாக (நீதிமொழிகள் 15:1). ஆகையால் அனைவரிடத்திலும் கனிவுடன் இருப்பதற்கும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், அன்புடனும் காணப்படுவதற்கும், தேவன் கிறிஸ்துவின் நிமித்தமாக நம்மை மன்னித்துள்ளதுபோல ஒருவரையொருவர் மன்னிக்கவும் அதிகமதிகமாய்க் கற்றுக்கொள்வோமாக (எபேசியர் 4:32).

பொறுமையும், கவனமும் மிகவும் அவசியப்படும் மற்றுமொரு விஷயம், வழிநடத்துபவர்களைத் தெரிந்து கொள்ளும் விஷயத்திலாகும். அர்ப்பணிப்புமிக்க சில சகோதர சகோதரிகள் – அனைத்துக் காரியங்களிலுமே தங்களால் அங்கீகரிக்க முடியாத ஒருவரை மூப்பராகத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இருந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். எவ்விதமான பரிவை முன்னிட்டும், எந்த ஓர் ஒழுங்கீனமானவனும் மூப்பராய்த்
தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. மூப்பர் ஒருவர் நல்லொழுக்கம் அற்றவராய்க் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் பொறுப்பினின்று விலகும்படிக்கு உடனடியாகக் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் பொதுவாய் இது வேறுபட்ட கருத்துகள் வருவதற்குக்
காரணமாய் இருப்பதில்லை ஏனெனில் நல்லொழுக்கமற்ற ஒருவனைக் கர்த்தருடைய ஜனங்கள் ஆவிக்குரிய விஷயங்களில் வழிநடத்துபவரென அல்லது நீதிநெறிகளைத் தாங்கிச் சுமப்பவரென வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கமாட்டார்கள்.

ஒருவேளை சபையில் பெரும்பான்மையானவர்களால் – மற்றவர்கள் அனைவரையும் காட்டிலும் ஒரு நபர், தங்கள் மூப்பர் (அ) வழிநடத்துபவர் ஆகுவதற்கு எல்லாவிதத்திலும் மிகவும் மேம்பட்டவராகவும், நன்கு தகுதியுடையவராகவும்
இருக்கின்றார் என்று கருதப்படுகின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் சபையில் ஒரு சிறுபான்மையானவர்கள் இன்னொரு சகோதரனுடைய அறிமுகத்தை அல்லது இவரது நடத்தை அல்லது இன்னும் வேறு சில விஷயங்கள்

மீது விருப்பம் கொண்டுள்ளவர்களாக இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் இன்னுமொரு சிறுபான்மையானவர்கள் வேறொரு சகோதரனுக்காக விருப்பம் கொண்டவர்களாக அல்லது கர்த்தருடைய மகிமைக்காகப்
பயன்படக்கூடிய தாலந்துகளை அச்சகோதரன் பெற்றிருக்கின்றான் என்ற நம்பிக்கையில், அவன் சபைக்கான பொது ஊழியங்களில் கொண்டுவரப்படுவதைப் பார்ப்பதற்கான விருப்பம் கொண்டிருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு குழுவினரும் என்ன செய்ய வேண்டும்? – கட்சி மனப்பான்மையின் அடிப்படையில் போராடி, எங்களிடம் வல்லமை இருக்கின்றது, ஆகையால் நாங்கள் விரும்பும் மனுஷனைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் எங்களுடையதாகும் மற்றும் ஒன்றில் நீங்கள் இதில் இணைந்திட வேண்டும் அல்லது சபையைவிட்டுப் பிரிந்துபோய்விட வேண்டும் என்று சொல்லலாமா? இல்லவேயில்லை!

இது உலகத்தின் பார்வையில் “நல்ல அரசியலாக இருக்கும்; ஆனால் இது சபையில் ஆள வேண்டியதான அன்பின் ஆவிக்கு முற்றிலும் இசைவற்றதாகும். இப்படிப்பட்டதான (அரசியல்) வெற்றியை அடைவோமானால், அதில் நாம் கர்த்தருடைய
சகோதர சகோதரிகளில் ஒருவரையோ அல்லது அநேகரையோ காயப்படுத்துபவர்களாக இருப்போம்; நமது [R4009 : page 182] கர்த்தரைக் கோபமூட்டுகிறவர்களாக இருப்போம்; மாபெரும் பரிசிற்கான நம்முடைய ஓட்டத்தின் விஷயத்தில்
நமக்கே கணக்கிடவே முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றவர்களாய் இருப்போம். இப்படிப்பட்டதான “வெற்றி என்பது, நம்முடைய உண்மையான நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் விஷயத்தில் தோல்வியையும்,
நம்முடைய மாபெரும் எதிராளியானவனுடைய வெற்றியையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். நாம் ஒருவரையொருவர் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாமோ? அவனவன் தன்னுடைய சொந்த விருப்பங்களையல்ல, ஒருவரையொருவர்
மகா பரிசுத்தமான விசுவாசத்தில் கட்டியெழுப்பிடுவதற்கு நோக்க வேண்டாமோ? ஆகையால் அன்பின் ஆவியானது, இம்மாதிரியான சூழ்நிலைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட மூப்பர்களை தேர்ந்தெடுக்க ஏவிடும் – கர்த்தருடைய வார்த்தைகளிலுள்ள பொதுவான கட்டளைகளை மீறாத நிலையில், சபையாரின் விருப்பங்களை நியாயமாய்க் கிரகித்து, இரண்டுபேரை அல்லது மூன்றுபேரை அல்லது அதிகமானவர்களைத் தேர்ந்தெடுக்க ஏவிடும். சகோதரரின் எண்ணிக்கைக்குத்தக்கதான ஒரு நியாயமான மற்றும் திருப்திகரமான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். சிலர் விசேஷமாக ஒருவகையான கூட்டத்தினை நடத்துவதற்குப் பொருத்தமாய்க் காணப்படுவார்கள் மற்றும் மற்றவர்கள் வேறுவகையான தொன்றை நடத்துவதற்குப்
பொருத்தமானவர்களாய்க் காணப்படுவார்கள் மற்றும் சரீரத்தின் ஒவ்வொரு அவயவத்தினுடைய அவசியம் நமக்கிருப்பதினால், கண்ணானது கையையோ அல்லது பாதத்தைப் பார்த்து, நீ எனக்கு தேவையில்லை என்று சொல்ல முடியாதென
அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். கர்த்தருடைய ஜனங்கள் அனைவருக்கும் ஊழியஞ்செய்வதற்குத் திரளான வாய்ப்புகள் உள்ளன எனும் கருத்தினை நாம் மனதில்கொண்டிருக்க வேண்டும்.

மூப்பருக்கான தகுதிகளை அப்போஸ்தலன் நமக்குச் சுட்டிக்காட்டுகையில், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவைப்போன்று இருக்கக்கடவீர்கள் என்று கூறி, நாம் அனைவரும் அடைய வேண்டிய நிலையை நமது கர்த்தர்
குறிப்பிட்டதுபோலவே, அப்போஸ்தலனும் அடைய வேண்டிய நிலையைக் குறிப்பிட்டுள்ளார். நாம் பரம பிதாவைப்போன்று முற்றும் முழுமையாக இருக்க முடியாது; எனினும் நாம் அடைவதற்கு நாடுகின்றதான நமக்கான மாதிரியாக அல்லது
அடைய வேண்டிய நிலையாக / தரமாக அவரை நாம் வைத்திருக்கலாம். இதுபோலவே சில மூப்பர்களால் மாத்திரமே அப்போஸ்தலனால் குறிப்பிடப்பட்டுள்ளதான தகுதியின் நிலையினை எட்டிட முடியும்; ஆனாலும் இவ்விஷயத்தில்
கர்த்தருடைய தேர்வாக இருக்குமெனத் தாங்கள் நம்புவதை வெளிப்படுத்து கையில், இத்தகுதிகளானது யார் ஒருவராலும் மறக்கப்படக்கூடாது. “அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். ஒருவருக்கொருவர்
தாங்கிக்கொள்வதும், ஒருவருக்கொருவர் விருப்பங்களை, கண்ணோட்டங்களை, ரசனைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதும் எவ்வளவாய் நம் அனைவரையும் மகிமையின் கர்த்தர் போன்று அதிகமதிகமாய் இருக்கச் செய்திடும்! மற்றும் எவ்வளவாய்ச் சிரமங்கள் மற்றும் சுருக்கங்கள் அநேகவற்றை அகற்றி, கர்த்தருடைய ஜனங்களுள்ள ஒவ்வொரு சிறுசிறு கூட்டத்தார் மத்தியிலும் சமாதானம் கொண்டுவந்திடும்! கல்லறையிலோ அல்லது நித்திரை அறையிலோ நிலவுவதுபோன்ற சமாதானம் மற்றும் அமைதி வகையினை நாடுவதற்காக நாம் எண்ணம்கொள்ளவில்லை, மாறாக விழித்திருப்பவர்கள் மற்றும் ஜீவனுள்ளவர்கள் மற்றும் முற்றிலுமாக அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மற்றும் தலைமீதான

தங்கள் அன்பின் காரணமாகவும் மற்றும் அவரது அடிச்சுவடுகளில் நடக்க நாடுபவர்கள் அனைவர்மீதான அன்பின் காரணமாகவும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்பவர்கள் மற்றும் தாங்கிக் கொள்பவர்கள் மத்தியில் கர்த்தர் அங்கீகரிக்கக்
கூடியதான சமாதானம் மற்றும் அமைதியின் வகையையே நாடிடுவதற்கு நாம் எண்ணம் கொண்டவர்களாய் இருக்கின்றோம். [R4010 : page 182]

அன்பானது தன்னலம் நாடாது

தன்னலம் நாடும் ஆவியைக்குறித்தும், பண்பைக்குறித்தும் அதிகமதிகமாய் வெட்கம் அடைகிறவர்களாகவும் மற்றும் தன்னலம் கருதாமல், மற்றவருடைய அதிலும் விசேஷமாக விசுவாச வீட்டாருடைய நலனுக்காகச் சிந்திக்கின்றதான அன்பின்
ஆவியை அதிகமதிகமாய் உணர்ந்துகொள்பவர்களாகவும், கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் படிப்படியாக வந்தாக வேண்டும். ஒரு சகோதரன் சபையில் கர்த்தருடைய ஊழியத்தில் பயன்படுத்துவதற்குப் பிரியம்கொண்டிடும் சில தாலந்துகளை,

தான் பெற்றிருப்பதாக எண்ணுவானானால், அவைகளைப் பயன்படுத்திடுவதற்கான வாய்ப்புகளுக்கு அவன் விழிப்பாய் இருப்பது ஏற்றகாரியமாகும்; அதேசமயம் தன்னையோ அல்லது தன்னுடைய ஊழியங்களையோ சபைமீது கட்டாயப்படுத்துவதை
அவன் தவிர்த்துக்கொள்வதும் அவனுக்கு ஏற்றதாயிருக்கும். பணம் வாங்காமல் சபைக்கு இலவசமாய் ஊழியஞ்செய்வதில் அவன் மகிழ்ச்சிக்கொள்பவனாக இருப்பினும், சத்தியத்தின் ஊழியத்திற்காக நேரத்தையும், பலத்தையும், சக்தியையும்

மற்றும் அனைத்துத் தாலந்துகளையும் கொடுப்பதில் அவன் மகிழ்ச்சிக்கொள்பவனாக இருப்பினும், சாந்தத்தின் ஆவியும் மற்றும் ஞானத்தின் ஆவியும் – சபையாரால் புரிந்துகொள்ளப்படும் அளவுக்கு மிஞ்சி சபையின்மீது அவனது ஊழியங்களை
அவன் குவிப்பதிலிருந்தும் – அவனைத் தவிர்த்திட வேண்டும். நிதானத்துடன் செல்வதும், யார் சபைக்கு ஊழியம் புரியலாம் மற்றும் எந்தளவுக்கு மற்றும் எவ்வளவு காலம் அவர்கள் ஊழியம் புரியலாம் எனும் விஷயத்தில் கர்த்தர் வழிகாட்டி,
இறுதியில் சுட்டிக்காண்பிப்பார் என்று அவரை விசுவாசிப்பதும் நல்லது. இதுவே கர்த்தருடைய வழியாகும்; வேத வாக்கியங்களின் அடிப்படையிலான வழியாகும் மற்றும் ஞானமுள்ள வழியாகும் – மற்ற எந்த வழிகளும் சீக்கிரமாகவோ,
தாமதமாகவோ, அதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருக்கும் பிரச்சனைகளைக் கொண்டுவருகின்றதாய் இருக்கும்.

குமாரன் எவனை விடுதலையாக்குவாரோ…

நம்முடைய தனிப்பட்ட சுயாதீனங்கள் தொடர்புடைய விஷயத்தில் சமநிலையில் காணப்படுவதில் நம்மில் அநேகருக்குச் சிரமங்கள் காணப்படுகின்றன. நம்மைச் சுற்றியிருக்கும் வழக்கங்களினாலும், நடைமுறை பழக்கங்களினாலும் நாம் பெரிதும்
தாக்கத்திற்குள்ளாகுகின்றோம் மற்றும் கர்த்தருடைய வார்த்தைகளிலுள்ள அவருடைய குரலுக்கு நாம் தொடர்ச்சியாய்ச் செவிசாய்ப்பது அவசியமாகும். பாபிலோனில் எதுவுமே நியமனம் இல்லாமல் செய்யப்படக் கூடாது எனும் வழக்கம்

காணப்படுவதினால், இதற்கொத்த எண்ணங்கள் கிருபையிலும், சத்தியத்திலும் குறைவான வளர்ச்சியுள்ளவர்கள் மத்தியில் சிலசமயம் மெதுவாய் உள்ளே வருகின்றது; உதாரணத்திற்குச் சபையாரால் நியமிக்கப்படும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட
மூப்பர்களில் ஒருவரால் நடத்தப்படும் கூடுகைகளே ஒழிய மற்றப்படி எந்தக் கூட்டங்களும் நடத்தப்படக்கூடாது என்ற எண்ணங்களாகும். சபையாருடைய ஒருமைப்பாடானது அடையாளங்கண்டு கொள்ளப்படுவதினாலும் மற்றும் எங்கு, எப்போது

கூட்டங்கள் நடத்தப்பட்டால் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூட்டங்களை நியமிப்பதினாலும் மற்றும் மேலான தகுதிகள் பெற்றுள்ளவர்கள் என்று மதிக்கப்படுபவர்களால் அக்கூட்டங்கள் நடத்தப்படுவதினாலும் நன்மைகள் இருக்கின்றன.
எனினும் கர்த்தரும் சரி, அப்போஸ்தலர்களும் சரி தனிப்பட்ட நபர்களுடைய சுயாதீனங்களின் விஷயத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் வைக்கவில்லை மற்றும் இதனால் நாமும் வைக்கக்கூடாது என்ற விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது.

“இரண்டுபேராவது, மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்ற நமது கர்த்தருடைய வார்த்தைகளைக் கவனியுங்கள் (மத்தேயு 18:20). இந்த வாக்குத்தத்தமானது அன்றுபோல்
இன்றும் உண்மையாகவே இருக்கின்றது மற்றும் இது கர்த்தருடைய ஜனங்களில் எவர்மேலும், எவ்விதமான கட்டுப்பாட்டையும் வைக்கிறதில்லை.

சபையால் ஏற்கெனவே ஏற்பாடுபண்ணப்பட்டதான ஏற்பாடுகளானது தங்களது சிறந்த ஆவிக்குரிய நலன்களைச் சந்திக்கவில்லை என்று கர்த்தருடைய மந்தையில் யாராகிலும் உணர்வார்களானால், அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக
இருக்கும் கூட்டத்தை – வேதவாக்கியங்களின் ஏற்பாடுகளுக்கு முரண்படாத வகை கூட்டத்தை ஆரம்பிப்பதற்கான முழுச்சுயாதீனத்தை உடையவர்களாய் இருக்கின்றார்கள். இப்படியான தேவை எவருக்கேனும் இருக்குமானால், இவர்கள்
பொதுவான சபையாரால் முன்னமே நியமிக்கப்பட்டுள்ள கூட்டத்திற்கு இடையூறற்ற விதத்திலுள்ள நேரத்திலும், இடத்திலும் இத்தகைய கூட்டங்களை நியமிக்கும்படிக்கு நாம் அறிவுரை கூறுகின்றோம். சபை இப்படிப்பட்டதான காரியங்களைப்
பொதுவாய் மேற்பார்வையிட வேண்டும் மற்றும் சபை அதன் பொறுப்பினை உணர்ந்துகொண்டு, போதுமான கூட்டங்களையும் மற்றும் விரும்பப்பட்ட வகையிலான கூட்டங்களையும் மற்றும் அன்பார்ந்த ஜனங்களின் தேவைகளைச் சந்திக்கக்கூடிய

வழிநடத்துபவரின் கீழ் – அனைவரும் போஷிக்கப்படத்தக்கதாகவும், அனைவரும் பலப்படுத்தப்படத்தக்கதாகவும், அனைவரும் வளரத்தக்கதாகவும் மற்றும் அனைவரும் இருதய ஒருமைப்பாட்டிலும், அன்பிலும், ஐக்கியத்திலும், ஒத்துழைப்பிலும்
காத்துக்கொள்ளப்படத்தக்கதாகவும் – கூட்டங்களை ஏற்படுத்திக்கொடுத்திட/நியமித்திட வேண்டும்.

டாண் ஆராய்ச்சி தொகுதி – VI-இல் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளவற்றை மறுபடியும் இங்குக் குறிப்பிடுவதற்கு இது பொருத்தமான தருணமாகும்; அதாவது கர்த்தருடைய எந்த மந்தைகளினுடைய கூடுகைகளில், சாட்சிக்கூட்டங்களுக்கும்,
பெரோயா வகுப்புகளுக்கும் மற்றும் டாண் ஆராய்ச்சிகளுக்கும் முக்கியமான இடமளிக்கப்படுகின்றதோ, அந்த அருமையான [R4010 : page 183] மந்தையினர் கிருபையிலும், பலத்திலும் அதிகமாய் வளருகின்றவர்களாய் இருப்பார்கள்
என்பது நம் அபிப்பிராயமாக இருக்கின்றது. இம்மாதிரியான உரையாடல் கூடுகைகளில், அதிலும் விசேஷமாகச் சாட்சிக்கும், ஜெபத்திற்கும், துதி ஏறெடுத்த்லுக்குமான கூட்டங்களில், அன்பான நண்பர்கள் ஒருவருக்கொருவர் அனுதாபத்துடன்கூடிய
தொடர்புக்குள்ளாக வருவதற்கான வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்; இது மிகவும் உதவிகரமானதாகும் மற்றும் இது அவர்களை மற்றக் கூட்டங்களைக் காட்டிலும் கிறிஸ்தவ அன்பிற்கான கட்டுகளில் ஒன்றாய்ப் பிணைக்கின்றதாய் இருக்கின்றது. அலிகெனியிலுள்ள சபையில் இந்தக் கூட்டங்களானது ஒவ்வொரு புதன்கிழமை மாலையிலும் நடைபெறுகின்றது மற்றும் பிட்ஸ்பர்க்கிலும் (Pittsburg) புறநகர்களிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் எட்டு இடங்களில்
நடைபெறுகின்றது. இந்த இடங்களில் 150 பேருக்குமேல் கலந்துகொள்கின்றனர் மற்றும் இந்தக் கூடுகைகளினின்று கடந்துவரும் தாக்கமானது, மிகச் சிறந்ததாய் இருக்கின்றது என்றும் நாம் நம்புகின்றோம். முடிகின்ற அன்புக்குரியவர்கள்
அனைவரும் கலந்து கொண்டு, அக்கூட்டங்களினுடைய புத்துயிரளிக்கும் தாக்கங்களில் பங்கெடுப்பார்களானால், நாம் எவ்வளவாய் மகிழ்வோம். ஒருவகைக் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும் கடமைக்குள்ளானால், அநேகர் சாட்சிக்
கூட்டத்திற்கே வாக்குகள் அளிப்பார்கள் அல்லது சாட்சி எனும் இவ்வம்சமானது ஒரு கூட்டத்தின் முக்கியமான பாகமாக ஆக்கப்படும் என்பதில் நமக்கு நிச்சயமே. இந்தக் கூட்டமே, “நீங்கள் கூடிவந்திருக்கிறபோது என்று ஆதி
திருச்சபையாரைக்குறித்து அப்போஸ்தலனால் விவரிக்கப்பட்டுள்ளதான கூடுகை வகைப் போன்றதாகும் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக (1 கொரிந்தியர் 14:26).