R3800 (page 196)
இந்தப் பெரோயா வேதாகம பாடங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது குறித்த நல்ல தகவல்களை நாம் கேள்விப்படுகின்றோம். ஒவ்வொரு சிறு கூட்டத்தாரும் இந்தப் பாடங்களுக்கென ஒரு விசேஷித்தக் கூட்டத்தைப் பெற்றிருக்கவும் மற்றும் ஒரு வழிநடத்துபவரைக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காகிலும் தெரிந்துகொள்ளவும் நாம் வலியுறுத்துகின்றோம்; அதாவது இவ்வாராய்ச்சிகளுடைய ஆவிக்குள்ளாகக் கடந்து செல்பவரும், சபையாரிடமிருந்து பதிலை எப்படி வரவழைப்பது என்பதைத் தெரிந்திருப்பவரும் மற்றும் பின்னர் ஒவ்வொரு கேள்வியின் முடிவிலும் சுருக்கமாய்க் கூற முடிகிறவருமான வழிநடத்துபவர் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். இந்த நடைமுறையினைப் பின்பற்றி அலிகெனியிலுள்ள சபையார் இந்த வகுப்புகளை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் பெற்றிருக்கின்றனர் மற்றும் இதிலுள்ள ஆர்வமானது, கடந்த எட்டு மாதங்களாகக் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ள உண்மையினால் வெளிப்படுகின்றது.
நன்கு வாசிப்பவர்கள் அநேகர் ஒரு சபையில் காணப்படுவார்களானால், ஒவ்வொருவருக்கும் ஒரு மேற்கோளானது வாசிக்கும்படி சொல்லப்படலாம்; ஒருவேளை சிலர்தான் இருப்பார்களானால், ஒருவரே அநேகம் மேற்கோள் பாகங்களை வாசிக்கும்படி சொல்லப்படலாம். (வாசிப்பது தெளிவாய் இருக்க வேண்டும் இல்லையேல் பிரயோஜனம் இராது). வேதவாக்கிய மேற்கோள் முதலாவதாகவும், பின்னர் டாண் (volumes) மேற்கோள் பாகங்களும் இடம் பெறுகின்றன் டாணின் ஆறு தொகுதிகளும் A, B, C, D, E, F என்ற ஆங்கில எழுத்துக்களினால் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது; T-என்பது “ஆசரிப்புக் கூடார நிழல்களை சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது மற்றும் S-என்பது “Spiritism”-ஐ சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; Z-என்ற எழுத்தானது வாட்ச் டவர் (ரீப்பிரிண்ட்ஸ்) கட்டுரைகளைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; “02-152 என்பது 1902-ஆம் வருடத்தின் 152-ஆம் பக்கத்திலுள்ள கட்டுரையைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. பத்தி நிரல்கள் (columns) மற்றும் பத்திகளானது (paragraphs) col. 2, par. 3 என்று சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது.
ஜூலை-1
1.அன்பு என்றால் என்ன? Z. “03-55 (2nd col. last par.); Z. ’03-58; (1st col. par. 2).
2.அப்போஸ்தலன் அன்பை எப்படி விவரிக்கின்றார்?
1 கொரிந்தியர் 13: 1, Z. ’03-56 (1st col. Par. 1).
1 கொரிந்தியர் 13: 2, Z. ’03-56 (1st col. par. 2).
1 கொரிந்தியர் 13: Z.’03-56 (1st col. par. 3; 2nd col. par. 1).
1 கொரிந்தியர் 13: Z.’03-56 (2nd col. par. 2, 3); Z.’03-57 (1st col. par. 1, 2);
Z.’97-247 (1st col. par. 1-4).
1 கொரிந்தியர் 13: 5, Z.’03-57 (1st col. par. 3 to 2nd col. par. 3); Z.’97-247 (1st
col. par. 5 and 2nd col).
1 கொரிந்தியர் 13: 6, Z.’03-57 (2nd col. par. 4); Z.’97-248 (1st col. 1 to 3).
1 கொரிந்தியர் 13: 7, Z.’03-58 (1st col. par. 1); Z.’97-248 (2nd col. par. 1 to 3).
1 கொரிந்தியர் 13: 8, Z.’03-58 (1st col. par. 3); Z.’97-248 (2nd col. par. 4).
1 கொரிநத் pயர் 13: 9-12, Z.’03-58 (2nd col. par. 1, 2); Z.’97-249 (1st col. par. 1 to 3).
1 கொரிந்தியர் 13: 13, Z.’97-249 (2nd col. par. 1).
3.———————————————————————————————————–
————————————————————————————————————
————————————————————————————————————
வாசிப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவனும் தனது வேதாகமத்தை அல்லது டாணை (volume) அல்லது டவரை (ரீப்பிரிண்ட்ஸ்) கைகளில் பெற்றிருக்க வேண்டும்; முன்னமே வாசித்திருக்க வேண்டும் மற்றும் வழிநடத்துபவர் சொல்கையில், தாமதியாமல் வாசிப்பதற்கு ஆயத்தமாய் இருக்க வேண்டும். அனைவருமே வேதாகமங்களையும், டாண்களையும் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பழைய டவர் கட்டுரைகளைச் (ரீப்பிரிண்ட்ஸ்) சபையில் யாரேனும் பெற்றிருப்பார்கள்; மற்றும் இவர்கள் சபையாரின் பிரயோஜனத்திற்காக, புத்தகங்களை இரவலுக்குக் கொடுத்திட மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள்.
மேற்கோள் பாகங்களானது வாசித்தப் பிற்பாடும் மற்றும் வழிநடத்துபவர் பதிலைச் சுருக்கமாய் இறுதியில் கூறி, அடுத்த கேள்வியை வாசிக்க முற்படுவதற்கு முன்பாகவும், ஒவ்வொரு கேள்வியைக் குறித்துக் கலந்தாய்வதற்கான வாய்ப்பானது கொடுக்கப்பட வேண்டும். அச்சடிக்கப்பட்டக் கேள்விகளானது, அவைகள் அனைத்தும் கலந்தாய்வுபண்ணப்படுவது வரையிலும் அச்சடிக்கப்பட்ட வரிசைஒழுங்கின் வண்ணமாகவே, கண்டிப்பாய்க் கடைப்பிடிக்கும்படிக்கு வலியுறுத்துகின்றோம். பொதுவாகவே பாடம் பற்றின அனைத்துக் கேள்விகளுமே கொடுக்கப்பட்டிருக்கும். இதை (வரிசை ஒழுங்கை) வலியுறுத்துவதற்கான காரணம் என்னவெனில், ஒருவேளை கடைசியில் இடம்பெறும் கேள்விகளானது முன்னமே கொண்டுவரப்படுமாயின், பின்வரும் பாடங்களானது சீர்க்குலைவிற்குள்ளாகிடும். வழிநடத்துபவர் அன்போடும், கனிவோடும், அதே நேரம் உறுதியோடும் சபையாரைக் கலந்தாராயப்படும் கேள்வியினின்று திசைமாறாதபடிக்கு வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் இதில் அவருக்கு, யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டத்தினை ஆராயும் விஷயத்தில், ஒழுங்கின் முக்கியத்துவத்தினை அடையாளம் கண்டுகொள்ளும் யாவரின் ஒத்துழைப்பும் தேவைப்படும்.