R3077 (page 282)
உபாகமம் 34:1-12
“நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 20:29-30)
R3078 : page 284
யோசுவா புதிய தலைவனானார்
யோசுவாவுக்கு அப்பொழுது 80-வயதாயிருந்தது மற்றும் இவர் மோசேக்குப் பின்வருபவராக, இஸ்ரயேலர்களால் முறுமுறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இஸ்ரயேலர்கள் சந்தேகத்திற்கிடமின்றி தங்களது வனாந்தரப் பயிற்சியின்போது சில விலையேறப்பெற்ற பாடங்களைக் கற்றுக்கொண்டனர். மோசே சீனாய் மலைக்குச் சென்று, அங்கு நியாயப்பிரமாணங்களைப் பெற்றுக்கொண்ட போது, யோசுவா காணப்பட்டார் என்ற ஞாபகம் நமக்கு இருக்கின்றது; உண்மையில் வனாந்தரப் பிரயாணம் முழுவதிலும், மற்றவர்கள் அனைவருக்கும் மேலாக, மோசேயால் இவர்மேலேயே முழுமையாய் நம்பிக்கை வைக்க முடிந்தது. இவரும் காலேபுமாகிய இரண்டு வேவுக்காரர்கள் மாத்திரமே சாதகமான தகவல் அறிக்கையினைக் கொண்டுவந்து, கர்த்தருடைய உதவியினால், இஸ்ரயேல் முன்னேறிச் சென்று, நிச்சயமாய் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். தலைவர் மாற்றப்பட்டதில் இஸ்ரயேல் இன்னொரு மாபெரும் பாடத்தைக் கற்றுக்கொண்டனர்; அதாவது அவர்களது நம்பிக்கையும், விசுவாசமும் மனுஷனிடத்தில் காணப்படக்கூடாது; மற்றும் அவர்கள் கர்த்தரைத் தங்களது தலைவராக அங்கீகரித்துக் காணப்படுவது வரையிலும், அவர்கள் பாதுகாப்பும், நம்பிக்கையும் கொள்ளலாம்; ஏனெனில் மற்றவர்கள் கடந்து போய்விட்டாலும்கூட, கர்த்தர் எப்போதும் உண்மையுள்ள வராகக் காணப்படுவார் மற்றும் தம்மால் நலமானவர்கள் என்று கண்டு கொள்ளப்படும் தலைவர்களை எப்போது வேண்டுமானாலும் எழுப்ப வல்லவராய் இருக்கின்றார் என்பதாகும்.
இதில் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கும் ஒரு பாடம் உள்ளது. வழிநடத்துபவர்கள் மீது நாம் நம்பிக்கையை வைக்காமல், கர்த்தரில் நம்பிக்கை வைக்க வேண்டும். இது நாம் வழிநடத்துபவர்களை நம்பவே கூடாது என்றும், வழிநடத்துபவர்களை அங்கீகரித்திடக் கூடாது என்றும் அர்த்தப்படுகிறதில்லை ஏனெனில் நிழலான மற்றும் நிஜமான தம்முடைய ஜனங்களுடனான கர்த்தருடைய கையாளுதலின் சரித்திரமானது, மேலான கிருபையிலிருந்து கிருபைக்கும், அறிவிலிருந்து மேலான அறிவிற்கும் தம்முடைய ஜனங்களை வழிநடத்துவதிலும், போதிப்பதிலும், அவர் தம்முடைய பிரதிநிதிகளென மனித கருவிகளைப் பயன்படுத்துவதற்குச் சித்தம் கொண்டிருந்திருக்கின்றார் என்று நமக்குக் காண்பித்துத் தருகின்றதாய் இருக்கின்றது. தம்முடைய வேலை நிர்வகிப்பதற்குக் கர்த்தர் முழுத்திறமையுடையவராக இருக்கின்றார் என்பதும், மனித கருவிகள் வாயிலாக அவரது வழிநடத்துதல்களுக்காக நாம் ஏறெடுத்துப் பார்த்திட்டாலும், நம்முடைய நம்பிக்கையானது, அவர்களிலோ, அவர்களது ஞானத்திலோ, அவர்களது பெலத்திலோ காணப்படாமல், மாறாக அவர்களை வழிநடத்துகிறதும், அவர்கள் வாயிலாக நம்மை வழிநடத்துகிறதுமான கர்த்தருடைய ஞானத்திலும், பெலத்திலுமே காணப்பட வேண்டும் என்பதும் கற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாடங்களாய் இருக்கின்றன.