R5321 (page 295)
“உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். – (மத்தேயு 20:27)
சரியான விருப்பங்களானது, அதை உடையவருக்கும் மற்றும் அவர் தொடர்புக்குள் வருகிறவர்களுக்கும் மிகவும் பிரயோஜனமானதாகும். நம்முடைய கர்த்தர் விருப்பம் ஒன்றினைப் பெற்றிருந்தார். அவரைக் குறித்து, “அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்தார் என்று நாம் வாசிக்கின்றோம் (எபிரெயர் 12:2). தகுதியான தூண்டுதல்கள் என்பவைகள் இருக்கின்றன; இல்லையேல் பிதா இப்படியான ஒன்றைத் தம்முடைய குமாரனுக்கு முன்பாக வைத்திருக்க மாட்டார். இந்தத் தறகாலத்தினுடைய காரியங்களில் நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்தோமானால், கர்த்தர் நம்மை அநேகவற்றின் மீது அதிகாரியாக வைப்பார் என்ற சிந்தையே நம்மை ஊக்குவிக்கின்றதாய் இருக்க வேண்டும். தேவனை அன்பு கூருகிறவர்களுக்கெனத் தேவன் வைத்துள்ளதானவைகளை அடைவதற்கான தீவிரமான விருப்பம் என்பது நலமார்ந்ததேயாகும்; ஏனெனில் இவைகள் தேவனுடைய ஆசீர்வாதங்களாய்க் காணப்படுகின்றன.
ஒவ்வொரு புதுச்சிருஷ்டியும் உயர்வான விருப்பங்களைக் கொண்டிருக்கின்றனர். உண்மையைச் சொல்லப்போனால், ஒவ்வொருவனும் தான் நாடுகின்ற காரியத்திற்கு நேரான குறிக்கோள் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அதை அடைவதற்கான இவ்விருப்பத்தினைக் கொண்டிருப்பது என்பது, விருப்பத்திற்குப் பின்னாக ஒரு நோக்கம் காணப்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். மனதிற்கு முன்பாகச் செயல் தூண்டுதல்களைப் பெற்றிருப்பது சரியே மற்றும் எவைகள் நாம் பிரயாசங்கள் எடுப்பதற்குப் பாத்திரமானவைகள் என்று அறிந்துகொள்வதும் சரியே இல்லையேல் தவறானவைகள் நம்மைத் தவறான வழிக்கு வழிநடத்திவிடும். நம்முடைய ஆதார வசனத்தில் மிகவும் நலமார்ந்த விருப்பம் ஒன்று நம்முன் வைக்கப்படுகின்றது.
கிறிஸ்துவின் பிரதிநிதியாகக் காணப்படும் சபையானது, மாம்சத்தில் இருக்கும் நமது கர்த்தருடைய சபையாக இருக்கின்றது. விருப்பங்கள் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் பேசுகையில், தாங்கள் மந்தைக்குப் போதகர்களாக, அறிவுரை வழங்குபவர்களாக ஆகத்தக்கதான மிகவும் பிரயோஜனத்திற்கு ஏதுவான விருப்பங்களைக் கொண்டிருக்கும்படியாகச் சபைக்கு அறிவுரை கூறுகின்றார்; ஏனெனில் இது சபையில் மிகவும் பயனுள்ள ஊழியமாய்க் காணப்படுகின்றது. பரிசுத்த பவுல் அடிகளாரின் நாட்களில் காணப்பட்ட வரங்களில் ஒன்று, அந்நிய பாஷையில் பேசுதல் என்பது தெரிந்த விஷயமாகும். அது மிகவும் குறிப்பிடத்தக்க வரமாகும். ஆனாலும் சபையில் பிரயோஜனமுள்ளதாய்க் காணப்படும் வரங்களை நாடுகிறது போல், இந்த அந்நிய பாஷைபேசும் வரமானது அவ்வளவுக்கு நாடப்பட வேண்டாம் என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அற்புதகரமான வரங்களைத் தற்காலத்தில் நாம் பெற்றிருக்கிறதில்லை ஆனாலும் நாம் தேவவசனத்தையும் மற்றும் கர்த்தருடைய சத்தியத்தினை அறியப்பண்ணிடுவதற்கான விருப்பத்தையும் பெற்றிருக்கின்றோம். ஆகையால் பேச்சாற்றலுக்கான வரமானது இன்னும் விரும்பத்தக்கதாகவே காணப்படுகின்றது. மேலும் ஆவியின் கனிகளானது, நம்மேல் அடக்கியாளும் தாக்கத்தினைச் செலுத்தத்தக்கதாக, நாம் ஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள வாஞ்சித்திட வேண்டும் என்று அப்போஸ்தலன் அடுத்ததாகச் சுட்டிக்காட்ட முற்படுகின்றார்.
சபையில் ஊழியங்கள் தொடர்புடைய விஷயத்தில், தாம் அதை ஏற்படுத்துவார் என்று கர்த்தர் சுட்டிக்காட்டியுள்ளார். “தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார் (1 கொரிந்தியர் 12:18). சரீரத்தில் இப்படியாக தேவன் ஏற்படுத்தியுள்ளார்; உதாரணத்திற்றகுக் கண்ணினுடைய பணியினைப் பார்க்கலாம். கண் எனும் அவயம் மனித சரீரத்திற்கு உதவி செய்கின்றபடியால் சபையின், கண் அவயமென இருப்பவர்கள், கிறிஸ்துவின் சரீரத்திற்கு மிகவும் உதவியாய் இருப்பார்கள். காது எனும் அவயங்களும், கால் எனும் அவயங்களும், கைகள் எனும் அவயங்களும் மற்றும் நாவு எனும் அவயங்களும் இருக்கின்றனர். இந்த வெவ்வேறு அவயங்களானவர்கள் முழுச்சரீரத்திற்கான நலனுக்கடுத்த விஷயங்களில் வெவ்வேறான ஊழியங்களைப் புரிகின்றவர்களாய்க் காணப்படுகின்றனர். [R5322 : page 295] கையானது, காலை நோக்கி: நீ எனக்கு வேண்டுவதில்லை என்றோ அல்லது மாறி மாறி இப்படியாகச் சொல்லக் கூடாது (1 கொரிந்தியர் 12:14-31).
ஒருவேளை சரீரமானது கையைக்கொண்டு நடக்க முற்படுமானால், அது திவ்விய ஒழுங்காய் இராது. சரீரமானது காலினாலேயே நடக்க வேண்டும். இப்படியாகவே சபையாரிலும் இருத்தல் வேண்டும். ஆனால் ஒருவேளை சபையார் மிகுதியாய்க் கால் அவயங்களாய் இருப்பவர்கள் மீது சார்ந்து இருப்பார்களெனில், சபையார் கை அவயங்களாய் இருப்பவர்களின் பிரயோஜனத்தை இல்லாமலாக்கி விடுபவர்களாய் இருப்பார்கள். பல்வேறு அவயங்களானது, மிகுந்த பலனுக்கேதுவான ஊழியத்தினைச் செய்வதற்கு ஏதுவான ஊழியங்களில் காணப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ஒவ்வொரு நபர் செய்யத்தக்கதாக தேவன் ஆயத்தம் பண்ணியுள்ளதான ஊழியத்தினைக் குறித்து அறிந்துகொள்வதற்குச் சபையார் நாடிட வேண்டும். சரியான நபரை, சரியான இடத்தில் வைப்பதற்குத் தங்களது சிறந்த பகுத்துணர்தலைப் பயன்படுத்திடுவதற்கு அவர்கள் நாடிட வேண்டும்.
கால்களைக்கொண்டு இல்லாமல், கைகளைக்கொண்டு நடக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் சபையார்களை நாம் அவ்வப்போது காண்கின்றோம். அந்தச் சபையார் தெய்வீக வழிநடத்துதலினால் ஒவ்வொரு அங்கத்தினனும் விசேஷமாய்த் தகுதிப்படுத்தப்பட்டுள்ள ஸ்தானத்தில், ஒவ்வொரு அங்கத்தினனையும் வைத்திடுவதற்குத் தவறியுள்ளனர். இப்படியாகச் செய்வது சபையாருடைய கடமையாக இருக்கின்றது. எனினும் ஒருவேளை சபையார் சரீரத்தைக் கால்களைக் கொண்டு நடப்பதற்குப் பதிலாக, கைகளைக்கொண்டு நடக்கப்பண்ணுவதற்கு முயற்சிப்பார்களானால், காலப்போக்கில் கைகளை அதற்குரிய இடத்தில் வைத்திடுவதற்கும் மற்றும் கால்களை அதற்குரிய இடத்தில் வைத்திடுவதற்கும் சபையார் கற்றுக்கொள்வார்கள் மற்றும் இறுதியில் ஒவ்வொரு அங்கத்தினனும் தான் எப்பணிக்குப் பொருத்தமானவனோ, அப்பணியினைச் செய்திடுவான்.
அங்கத்தினர்கள் தவறான ஸ்தானங்களில் காணப்படுவது மாத்திரம் சபையாருக்குப் பாதகமாய்க் காணப்படுவதில்லை தாங்கள் செய்ய வேண்டிய ஊழியங்களை விட்டு மற்ற ஊழியங்களைச் செய்திட அங்கத்தினர்கள் முயற்சிப்பதும் தவறான காரியமாகும். நாம் எதைச் செய்ய முடிகிற சுபாவமுடையவர்களாய் இருக்கிறோமோ, அதிலிருந்து நம்மையே மாற்றிக் கொள்வது நம்முடைய அதிகாரத்திற்குட்பட்டதல்ல. சரீரத்தில் இன்னொரு பாகத்தில் ஊழியம் புரிவதற்குத் தெய்வீக வல்லமை மாத்திரமே நம்மை ஆயத்தப்படுத்த முடியும். கிறிஸ்துவின் சரீரத்திற்கு உண்மையில் ஊழியம் புரிய வேண்டும், கர்த்தருக்கு ஊழியம் புரிய வேண்டும் என்பதே நம்முடைய சரியான மனப்பான்மையாகக் காணப்பட வேண்டும். நம்மால் செய்ய முடிகின்றதான ஊழியம் எங்கெல்லாம் காணப்படுகின்றதோ, அதை நாம் கவனித்திட வேண்டும். “உங்கள் கைக்கு அகப்படுவதெதுவோ, அதை முழுப்பெலத்தோடு செய்யுங்கள்.”
வேறு யாரோ செய்துகொண்டிருப்பவைகளை, அதாவது தங்களால் மற்றவர்களிடத்தில் பாராட்டப்படுகின்றவைகளைத் தாங்கள் செய்திடுவதற்கு விருப்பங்கொள்வதே, சபையில் அநேகருடைய பிரச்சனையாக இருக்கின்றது. சமயம் வாய்க்கும் போது சகல மனுஷருக்கும், அதிலும் விசேஷமாக விசுவாச வீட்டாருக்கு – தங்களால் எப்போதும் செய்ய முடிகிறவைகளைச் செய்திடுவதற்கு இவர்கள் கவனித்திருப்பதில்லை. இவர்கள் சீஷத்துவத்தின் சரியான ஆவியினைப் பெற்றிருக்கவில்லை. ஆகையால் நம்முடைய ஆதார வசனத்தினுடைய கட்டளையானது, அவர்களைத் தங்களுக்குள்ளாகப் பின்வருமாறு சொல்லிட வழிநடத்திட வேண்டும்: “கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் ஊழியம் செய்வதே என்னுடைய உயர்ந்த குறிக்கோளாய் இருக்க வேண்டும் மற்றும் நான் எவ்விடத்தில் / எந்த ஸ்தானத்தில் ஊழியம் புரியலாம் என்பதை அவரே பார்த்துக்கொள்ளட்டும். இங்கு ஒரு சிறு இடம் இருக்கின்றது, ஒரு சிறு மூலை (Corner) இருக்கின்றது; இங்கிருந்து என்னுடைய ஸ்தானத்தில் அவசியமாய்ச் செய்ய வேண்டியதாய்க் காணப்படுவதை நான் செய்திடுவேன். ஒருவேளை கர்த்தர் வழியைத் திறந்து, மிகவும் முக்கியமானதாய்த் தோன்றும் எதையேனும் எனக்குக் காண்பிப்பாரானால், அதை நான் கையில் எடுத்துக்கொள்வேன். நான் செய்யக் கடமைப்பட்டுள்ளதானவைகளை – அது துடைப்பத்தால் பெருக்குவதாகவோ அல்லது கூட்டத்திற்காக அறையை ஒழுங்குப்படுத்துவதாகவோ காணப்பட்டாலும், அதை என் முழுப்பலத்தோடு செய்திடுவேன். எந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திட்டாலும், அதை நான் செய்திடுவேன் என்பதேயாகும்.
இது நாம் விருப்பங்களைக் கொண்டிருக்கக்கூடாது என்பதைக் குறிப்பதாகாது. சபைக்கு ஊழியம் புரிய வேண்டும் என்பதே நம்மைக் கட்டுப்படுத்தி ஆளும் தூண்டுதலாகக் காணப்பட வேண்டும். இங்கு நாம் நலமார்ந்த நோக்கத்தினை, தகுதியான விருப்பத்தினைப் பெற்றிருக்கின்றோம். ஆனால் சிலர் முதன்மையானவர்கள் ஆகிடுவதற்கான குறிக்கோளை உடையவர்களாய் இருக்கின்றனர். முதன்மையான இடத்தை விரும்புகின்றவனை, அவன் நாடிடும் இடத்தினை அடைவதற்கு உதவிடக் கூடாது என்பது நம்முடைய குறிக்கோளாய் இருத்தல் வேண்டும் (மற்றும் இது கர்த்தருடைய சிந்தையாக இருக்கும் என்றும் நாம் நம்புகின்றோம்). அவனது இத்தகைய நடவடிக்கையில் அவனுக்கு உதவுதல் என்பது, அவனுக்கும் மற்றும் கர்த்தருடைய நோக்கத்திற்கும் ஊறு விளைவிக்கின்றதாய் இருக்கும். ஆனால் தன் கைக்கு அகப்படுவது எதுவோ, அதைத் தன் முழுப்பலத்தோடு செய்ய நாடுகின்ற யாரையேனும் நாம் காண்போமானால், அது கர்த்தரினால் அங்கீகரிக்கப்படும் என்று நாம் உறுதிக்கொள்ளலாம் [R5322 : page 296] மற்றும் தமக்கு உண்மையாய் ஊழியம் புரிந்துள்ளதைக் கர்த்தர் அங்கீகரித்தவராக, பிற்பாடு அவனுக்கு ஏதேனும் சில மிக முக்கியமான ஊழியங்களை அநேகமாகக் கொடுத்திடுவார்.
கர்த்தரால் தனக்குத் தரப்படுபவைகளில் ஒவ்வொருவரும் திருப்தியடைந்திருக்க வேண்டும். அவன் தன்னல நாட்டம் உடையவனாய் இருத்தல் கூடாது. “தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் (லூக்கா 18:14). தன்னை உயர்த்துகிறவனெவனும் சபையால் உயர்த்தப்படக்கூடாது; ஏனெனில் அவன் கர்த்தரால் உயர்த்தப்படுகிறதில்லை. தன்னைத் தாழ்த்துகிறவன் சபையாருடைய வாக்கினாலோ (Vote) அல்லது கர்த்தருடைய சித்தத்தினாலோ உயர்த்தப்படுவான்.
நம்முடைய ஆதார வசனத்தினைக் கர்த்தர் பின்வரும் அர்த்தத்திலேயே குறிப்பிட்டார் என்று நாம் எண்ணுகின்றோம்: உங்களில் சிலர் நிச்சயமாகவே முதன்மையானவர்களாக அடையாளம் கண்டு கொள்ளப்படுவீர்கள். பல்வேறு வகையான ஊழியங்கள் காணப்படுகின்றன மற்றும் ஒவ்வொரு சபையாருக்கான ஊழியங்கள் தொடர்பான விஷயத்தில் முதன்மையானவர்களைப் பெற்றிருப்பதும் அவசியமாய் இருக்கின்றது. இதைத் தேவன் தாமே அங்கீகரித்துள்ளார். தேவன் இயேசுவை முதன்மையானவராக்கினார். தன்னலத்தினை நாடினவராகிய சாத்தானைப் புறக்கணித்தார். அவர் இயேசுவைத் தெரிந்துகொண்டு, அவருக்குப் பாதையினை மிகவும் நெருக்கமானதாக்கினார்! ஆனால் இயேசு தம்முடைய தாழ்மையினை நிரூபித்தப் பிற்பாடு, பிதா அவரை உயர்வாய் உயர்த்தி, வாக்களித்த மாபெரும் பலனை அவருக்குக் கொடுத்திட்டார்.
கர்த்தர் இயேசு வெளிப்படுத்திட்டது போன்றதான தாழ்மையின் அதே ஆவியினை, ஊழியத்தின் அதே ஆவியினைப் பெற்றிருப்பவர்களை இப்பொழுது பிதா தேடிக்கொண்டிருக்கின்றார். அவரைக் கவனித்துப் பார்க்கையில், முதன்மையானவராகிடுவதற்கான நிலையினைப் பிதா முன்வைத்தபோது, ஊழியக்காரனாய் இருக்கும் நிபந்தனையை முன்வைத்ததையும்கூட நாம் காண்கின்றோம். இயேசு எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருந்தார் என்று பார்க்கின்றோம். ஆகையால் தேவன் அவரை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தினை அவருக்குத் தந்தருளினார்.
இப்படியாகவே சபையிலுள்ள ஒவ்வொரு சிறு சிறு சபையாரிடத்திலும் காணப்பட வேண்டும். சபையாரின் முதன்மையான ஊழியர்களாய்க் காணப்படும் அனைவரும், முதன்மையானவர்களாக அடையாளம் கண்டுகொள்ளப்படக்கூடாது என்பது கர்த்தருடைய சித்தமாய் இருக்கின்றது. சகோதரருக்காக ஒருவன் செய்துள்ள ஏதாகிலும் காரியத்தில், தன்னைத் தாழ்மையுள்ள மனம் உடையவனாக வெளிப்படுத்துபவனையே கர்த்தர் முதன்மையானவனாக அடையாளம் கண்டு கொள்வார், அப்படியானவர்கள் உங்கள் ஊழியக்காரர்களாய் இருப்பார்களாக. உங்கள் மத்தியில், கர்த்தருடைய சகோதரர் மத்தியில், ஊழியக்காரனாய் இருப்பதே பிரதானமான கனமாய்க் காணப்படுகின்றதென ஒவ்வொருவனும் கவனித்துக் கொள்வானாக. மிகவும் உண்மையுள்ளவனாய் இருப்பவனுக்கே, ஊழியம் புரிவதற்கான வாய்ப்பானது கொடுக்கப்பட வேண்டும். இவ்விதத்திலேயே அவன் உங்களுக்கு முதன்மையானவனாகக் காணப்படுவான்.