மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5336 (page 318)

மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்

CHOOSING ELDERS AND DEACONS

சபையாருக்கான ஊழியக்காரர்களாகிய – மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் தேர்ந்தெடுத்தல் குறித்து ஆறாம் தொகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதான யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் சகோதரர்களில் சிலர் சிரமப்படுவதை நமக்கு வந்திட்டதான அநேகம் கேள்விகளானது சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.

தேர்ந்தெடுத்தல் காரியத்தில் மாற்ற முடியாத நிலையான விதிகளை / நியமங்களைக் கொடுத்திட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. வேதாகமம் அப்படியாக எதையும் கொடுக்கவில்லை மற்றும் அப்படியாக நியமங்களை ஏற்படுத்திடுவதற்கு எவருக்கும் உரிமையும் இல்லை. கூடுமானமட்டும் தேர்ந்தெடுத்தலானது ஏகமனதுடன் காணப்பட வேண்டும் என்பதும், ஒரு சகோதரனுக்குச் சபையாரில் 75 அல்லது இதற்கும் அதிகமான சதவீதமானவர்கள் ஆதரவு கொடுக்காத பட்சத்தில், அந்த ஊழியத்தினை – பணியினை அவர் ஏற்றுக்கொள்வது ஞானமற்றதாய் இருக்கும் என்பதும்தான் எங்களுடைய கருத்தாய் இருந்தது. இதினிமித்தம் 25 அல்லது 30 சதவீதமானவர்களாய்க் காணப்படும் சிறுபான்மையானவர்கள், சபையாருக்குத் தடங்கல் செய்யவும் மற்றும் தேர்ந்தெடுத்தலைத் தடைப்பண்ணவும் தைரியமூட்டப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் நாங்கள் சொல்கின்றோம் என்றாகாது.

சரியாகச் சொல்ல வேண்டுமெனில் அன்பானது, மற்றவர்களின் உணர்வுகளையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தும் தருணங்களைத் தவிர, மற்றபடி சபையில் – ஒரு vote / வாக்கில் பெரும்பான்மையானவர்களாய்க் காணப்படுபவர்களே எந்தக் காரியத்தையும் தீர்மானிக்கின்றவர்களாய் இருப்பார்கள். உதாரணத்திற்கு நூறு பேரைக் கொண்ட ஒரு சபையில், 51 பேர்கள் சபையின் ஊழியக்காரர்களாய் யார் இருக்க வேண்டும் என்பது தொடர்பான காரியத்தில் தீர்மானிப்பதற்கு உரிமை பெற்றவர்களாய்
இருக்கின்றனர் மற்றும் மீதமான 49 பேரும் தாங்கள் சிறுபான்மையானவர்களாய் மாத்திரம் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து மிகவும் அமைதலுடன், ஆட்சேபணையின்றி ஒத்துக்கொண்டு, பெரும்பான்மையானவர்களின் விருப்பத்திற்கு ஆதரவு வழங்கிட உண்மையாய் நாடிட வேண்டும்.

அன்பின் ஆவியும், சபையார் யாவருடைய சிறந்த நலனுக்கடுத்தக் காரியங்களும் மாத்திரந்தான் 51 சதவீதத்திற்கு அதிகமானதை யோசனையாகத் தெரிவிக்கின்றதாய் இருக்கும். அன்பானது ஏகமனதான வாக்கினைச் செலுத்திட நாடிட வேண்டும். ஆனால் இது எப்படி அடையப் பெறலாம்? நாங்கள் ஒரு யோசனையை முன்வைக்கின்றோம்:

ஒருவேளை ஒரு சபையில் நூறு நபர்கள் இருக்கின்றார்கள் என்றும், ஊழியத்திற்கு ஆறு மூப்பர்கள் தேவைப்படுவதாகக் கருதுகின்றார்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். A, B, C, D, E, F – ஆகியோர் ஏறக்குறைய திறமையுடைய சகோதரர்களாய் அங்குக் காணப்பட்டு, முன்மொழியப்பட்டிருக்கின்றார்கள். A- அவர்களுக்கு 100-வாக்குகளும்; B – அவர்களுக்கு 90-வாக்குகளும்; C – அவர்களுக்கு 80-வாக்குகளும்; D – அவர்களுக்கு 70-வாக்குகளும்; E – அவர்களுக்கு 60-வாக்குகளும்; F – அவர்களுக்கு 50-வாக்குகளும் கிடைத்துள்ளது. சிறந்தவர்கள் என்ற அடிப்படையிலான வாக்குகளின்படி தேர்ந்தெடுக்க வேண்டுமானால், 90 சதவீதம் எனும் அடிப்படையில், இருவர் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்படக்கூடும்; ஆனால் ஒருவேளை அந்த ஆறுபேரும் சபையார் பெற்றிருப்பதான நல்ல பாத்திரங்களெனச் சராசரியாகச் சபையாரின் மதிப்பீட்டில் காணப்படும் பட்சத்தில் மற்றும் அவர்களது நல்லொழுக்க குணலட்சணத்தில் குறைவற்றவர்களாக அறியப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்கள் ஆறு-பேருமே ஏகமனதுடன் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது நம்முடைய யோசனையாய் இருக்கின்றது.
பரிசுத்த பவுலடிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளதான தரநிலையானது, அப்படியே கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணுவது தவறாய் இருக்கும்; ஏனெனில் எவருமே இந்தத் தகுதி அனைத்திலும் முழுமையான நிலையில் காணப்படுவதில்லை. அப்போஸ்தலன் சிறந்த ஒரு மூப்பர் எப்படி இருப்பார் என்று தெரிவித்துள்ளார். கர்த்தருடைய சித்தத்தைக் குறித்துச் சிந்திக்கையில் வாக்களிப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த மாதிரியினை / கொள்கையினைத் தனது மனதிற்கு முன்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்; ஆனால் கடுமையான களங்கங்கள் / குறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் தவிர, மற்றப்படி சபையார் மூப்பர் அற்றவர்களாகக் காணப்படக்கூடாது.

நமது கர்த்தர் இதுபோலவே – அடைய வேண்டிய ஒரு பூரணமான நிலையினை, “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரணசற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்று கூறினபோது, நமக்கு முன்வைத்தவரானார் (மத்தேயு 5:48). தேவன் பூரண சற்குணராயிருப்பது போன்று, யார் பூரண சற்குணராயிருக்கின்றனர்? “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:10). நாம் நம்மைக் குறைவான அளவுகோலுடன் ஒப்பிட்டு மதிப்பிடாமல், மாறாக பூரண அளவுகோலுடன் ஒப்பிட்டு மதிப்பிட வேண்டும் எனும் அர்த்தத்திலே ஆண்டவர் கூறியுள்ளார்; மேலும் இதன் மூலம் நாம் நம்முடைய சொந்த ஜீவியங்கள் மற்றும் குணலட்சணங்கள் தொடர்புடைய விஷயத்திலும், மூப்பர்களாகவும், மந்தைக்கு மாதிரிகளாகவும் இருக்கும்படிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் விஷயத்திலும் நாம் உயர்வான கொள்கைகளைக் கொண்டிருக்க நமக்கே உதவி புரிகின்றவர்களாய் இருப்போம்.

முழுமையான அர்ப்பணம்பண்ணி, அதைத் தண்ணீர் முழுக்கு எனும் வழக்கமான அடையாளத்தின் மூலம் தெரிவித்துள்ளவர்கள் யாவரும் தவிர மற்றபடி எவரும் வாக்களிக்கக்கூடாது என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும். இப்படியாகத் தங்களது அர்ப்பணிப்பினை அடையாளத்தின் மூலமாகத் தெரிவித்திடாதவர்கள், சகோதரர்கள் அல்ல என்று புறக்கணிக்கப்படக்கூடாது, மாறாக சபையாருக்கு ஊழியம் புரிவதற்கு யார் தகுதியானவர்களாய் இருப்பார்கள் என்பதில் தங்களது எண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கு ஆற்றலற்றவர்களாய் இருப்பதினால் மிகவும் வளர்ச்சியற்றவர்களாய் இருப்பவர்களெனக் கருதப்பட வேண்டும் மற்றும் இவர்கள் ஊழியக்காரர்களாகுவதற்கும் தகுதியற்றவர்களாய் இருப்பார்கள்.

இங்கும் அங்குமாக எழும்பி தலையிடுகிறதான இன்னொரு கேள்வி, – நம்மில் அநேகர் மிகவும் உதவிகரமாக உள்ளது என்று கண்டுகொண்டுள்ளதும் மற்றும் அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட்டதுமான விசேஷித்த வாக்குறுதியை / vow எடுத்துக்கொள்ளாதவர்கள் சபைக்கான ஊழியக்காரராகத் தேர்ந்தெடுக்கப்படலாமா? என்பதேயாகும். கர்த்தர் தாமே விசேஷமாய் அதை இந்தக் காலக்கட்டத்தில் கொண்டு வந்துள்ளார் என்றும், அது ஓரளவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மத்தியில் பரீட்சையாக விளங்கும்படிக்கு நோக்கம் கொண்டுள்ளார் என்றும் நாம் நம்பினாலும், வாக்குறுதியைச் சகோதரத்துவத்திற்கான பரீட்சையாக நாம் ஆக்கிவிட முடியாது; அதைச் சகோதரத்துவத்திற்கான பரீட்சையாக்குவதற்கு வேதமும் நமக்கு அதிகாரம் வழங்கிடவில்லை. மூப்பர்களுக்கான தகுதிகளின் மத்தியில் குறிப்பிடப்படவில்லை என்கிறபோதிலும் முன்மொழியப்படும் சகோதரனுடைய விநோதமான பாணிகள் அல்லது சரியற்ற ஆங்கில மொழிப்பேச்சானது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதற்குப் பாத்திரமானவைகளாய் இருப்பதுபோன்று, வாக்குறுதியும் (vow) தெய்வீகக் கட்டளையின் காரியமாய் இராமல், மாறாக பகுத்துணரும் காரியமாய்க் காணப்படுகின்றது.

எங்குமுள்ள கர்த்தருடைய ஜனங்கள் மத்தியிலுள்ள அன்புக்குரிய மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் அனைவருமே – வாக்குறுதி நியாயமான ஒன்று என்றும், அது தெய்வீக வார்த்தைகளுடனும், நம்முடைய அர்ப்பணிப்பின் வாக்குறுதியுடனும் இசைவாய் இருப்பதையும் மற்றும் இவைகளை நிறைவுப்படுத்தும் இளநீல தொங்கல்களாக அது இருக்கின்றது என்றுமுள்ள ஒருமித்தக் கருத்தில் பார்க்கின்றார்கள் என்று நாம் அறிவோமானால், இதினிமித்தம் நாம் பெரிதும் களிகூருவோம். அந்த வாக்குறுதிக்குக் கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி என்ன மறுப்புத் தெரிவிக்கக்கூடும் என்று யோசிக்காமல் யாராலும் இருக்க முடியாது. அவர்களின் மறுப்பானது, அவர்களின் இருதயத்தினுடைய நோக்கங்களில் ஏதேனும் தவறு காணப்படக்கூடும் அல்லது அவர்களது புரிந்து கொள்ளுதலில் ஏதேனும் குறைபாடு இருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டுகின்றது என்று நம்மில் சிலருக்குத் தோன்றலாம். எனினும் மிகவும் நன்றாய் நியாயந்தீர்ப்பதற்கு நாம் வல்லவர்களல்ல. “மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்று ஆண்டவர் கூறியுள்ளார்.

வாக்குறுதியை எடுத்துக்கொண்டுள்ளவர்களுக்கும், அதுகுறித்த ஒருமித்த கருத்தினைக் கொண்டிருப்பவர்களுக்கும், மூப்பர்கள் அல்லது உதவிக்கார்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் முன்னுரிமைக் கொடுக்கப்படலாம் என்பது எங்களுடைய கருத்தாய் இருக்கின்றது. ஒருவேளைச் சபையாரை வழிநடத்துவதற்குத் திறமிக்கவர்களாய் [R5337 : page 319] இருக்கும் சகோதரர்கள், மற்ற அனைத்து விதங்களிலும் ஏற்கத்தகுந்தவர்களாகவும், வாக்குறுதியினை எதிர்க்காதவர்களாகவும் இருப்பார்களானால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். இப்படியாகவே – தங்களால் முடிந்தமட்டும், வாக்குறுதி உள்ளடக்கியுள்ள காரியங்கள் அனைத்திற்கும் இசைவாகத் தாங்கள் வாழ்வதாகக் கூறிக்கொண்டு, அந்த எளிமையான வாக்குறுதி மற்றவர்களுக்கு உதவியாக இருக்க, அந்த வாக்குறுதியைத் தாங்கள் எடுப்பது என்பது ஏதேனும் விதத்தில் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தினால், அதை எடுக்க மறுக்கிறவர்களாக மாத்திரம் காணப்படுபவர்களுக்கும் பொருந்தும். நம்மால் ஒருவேளை அவர்கள் இருதயங்களினுடைய எண்ணத்தினையே, அவர்களது மனதின் விவாதங்களையோ புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், எனினும் இம்மாதிரியான தருணங்களில் நம்மால் புரிந்துகொள்ள அல்லது உணர்ந்துகொள்ள முடியாதவைகளை விட்டுவிடலாம்.