R3517 (page 72)
கொஞ்சக்காலங்களுக்கு முன்னதாக , எப்படிக் கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின சிறு சிறு கூட்டத்தார், தங்களது ஞாயிற்றுக்கிழமைக் கூடுகைகளுக்கான நேரத்தினை மிகவும் பிரயோஜனமான விதத்தில் பயன்படுத்திடலாம் என்று விசாரிக்கும் கடிதங்களை நாம் பெற்றுக்கொண்டிருந்தோம் .இந்தக் கடிதங்களில் சில, மூப்பர்களாக அல்லது வழிநடத்துனர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரரிடமிருந்து வந்துள்ளது; இவர்கள் தாங்கள் நல்ல ” பிரசங்கம் ” ஒன்றைக் கொடுத்திடுவதற்குத் திறனற்றவர்களாய் இருக்கின்றனர் என்றும், கவரும் விதத்திலும், ஆர்வமூட்டும் விதத்திலும் தங்களால் வேதாகம ஆராய்ச்சி ஒன்றை ஆயத்தம் செய்யக்கூட முடியவில்லை என்றும், இப்படி இருப்பினும் அருமையான சகோதரர்கள் சத்தியத்திற்கான அன்பினை முழுமையாய்க் கொண்டவர்களாகக் குறைக்கூறாமல், தங்களை ஊக்குவிக்கவே செய்கின்றனர் என்றும் தெரிவிக்கின்றனர்.
வேறு கடிதங்களானது சபைக்கடுத்த எந்த ஊழியங்களிலும் இல்லாதவர்களிடமிருந்து வந்ததாய் இருந்தது; இவர்கள் தங்களது கூட்டத்தை வழிநடத்துபவர்கள், பெயர்ச்சபையில் சத்தியம் வழங்குபவர்கள் போன்று, சத்தியம் வழங்கிடுவதற்கு ஏறெடுக்கும் பிரயாசங்களின் மீது பரிவு கொண்டிருக்கும் அதேவேளையில், அனைவருக்கும் பிரயோஜனமானதாக, கூடுகைகளை மாற்றிடுவதற்குரிய உதவிக்கான ஏதேனும் கதவுகள் திறக்கப்படுவதற்கு விருப்பம் கொண்டவர்களாகவும், ஜெபம்பண்ணுகிறவர்களாகவும் காணப்படுகின்றனர்.
கர்த்தருடைய ஜனங்களுடைய இந்தக் கூக்குரலுக்குப் பிரதியுத்தரமாகவே நாம் வாட்ச் டவர் வேதாகமத்தை ஆயத்தப்படுத்தினோம், இந்த வேதாகமத்தின் ஓரங்களில் (margin) வேதாகம சுட்டுக் குறிப்புகளோடுகூட, டாண் (volume) மற்றும் டவர் (ரீப்பிரிண்ட்ஸ்) [R3518 : page 72] குறிப்பிலக்கங்களையும் சேர்த்திருந்தோம். இந்த வேதாகமத்தின் முன்பகுதியில் ” பெரோயா வேதாகம ஆராய்ச்சிக்கான ” சில யோசனைகளைக் கொடுத்திருக்கின்றோம் மற்றும் பின்பகுதியில் விரிவான சுட்டுக் குறிப்புகளும், தலைப்புவாரியான அட்டவணையையும் கொடுத்திருக்கின்றோம். இவைகள் தேவைகளைப் பூர்த்திச் செய்திடும் என்பது எங்களது நம்பிக்கையாக இருக்கின்றது; ஆனால் இவை போதுமானதாய் இல்லை. கர்த்தருடைய உண்மையுள்ளவர்களில் அநேகர் தங்களுக்கு ஆவிக்குரிய போஷாக்கென அளிக்கப்படும் எதையும் “விழுங்கிவிடும்” பழக்கத்தினை நீண்டகாலம் உடையவர்களாய்க் காணப்படுவதினால், அவர்கள் பிதாவின் போஜனப்பந்தியிலிருந்து எப்படித் தங்களைப் போஷித்துக்கொள்வது என்பதை ஒருபோதும் கற்றுக்கொள்ளாதவர்களாகக் காணப்படுகின்றனர். உணவை எப்படிச் சரியாய்ப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்கும் மற்றவர்களோ, தங்கள் நேரங்களைத் தங்களது நியாயமான தேவைகளைச் சம்பாதித்துக்கொள்ளும் தொழிலுக்கென்று மிகவும் செலவிட வேண்டியிருக்கிறபடியால், தலைப்புவாரியான அட்டவணையில் சத்தியம் முறைப்படுத்தி வழங்கப்பட்ட பிற்பாடும்கூடத் தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ பிரயோஜனமான விதத்தில் பாடங்களை ஆயத்தம்பண்ணிடுவதற்கு நேரத்தைக் குறைவாகவே பெற்றிருக்கின்றனர்.
தேவைகளை உணர்ந்தவர்களாக, நாம் “பயண ஊழியக்காரர்கள்” போய்ச் சந்தித்திடும் பல்வேறு இடங்களில் இந்தப் பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளுக்கான மாதிரியைக் காண்பித்துக்கொடுக்கும்படிக்கு, “பயண ஊழியர்கள்” சிலரிடம் வேண்டிக்கொண்டோம். இதுவும்கூடப் பிரயோஜனப்படவில்லை; காரணம் முற்காலங்களிலுள்ள அப்போஸ்தலர்களைப் போன்று “பயண ஊழியர்களின்” சந்திப்பும் சொற்பமாகக் காணப்பட்டப்படியால், ஒரே ஒரு வகுப்பு நடத்திக் கொடுக்கப்பட்டதின் நிமித்தம் நண்பர்கள் அதிருப்தியே அடைந்தனர், ஏனெனில்பெரோயா வகை வகுப்புகளின் முக்கியத்துவத்தினை விவரிப்பதற்கும், முறையான ஆர்வத்தை உருவாக்கிடுவதற்கும் அநேகம் பெரோயா வகுப்புகள் நடத்தப்படுவது அவசியமாயிருக்கும்.
ஆகையால் இந்தத் தேவைகள் அனைத்தையும் சந்திக்கும் வண்ணமாக, இந்த வருஷத்தின் மார்ச் மாதம் துவங்கி, ஒவ்வொரு மாதத்திற்கான பாடத்திட்டத்தினை நாம் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கின்றோம் . இந்தப் பாடத்தின் தனித்தன்மை என்னவெனில், இவைகள் போதிப்பதில்லை, மாறாக கேள்வி மாத்திரமே கேட்டு மாணவனுக்கு அதுசம்பந்தப்பட்ட வேதவாக்கியங்களையும், வாட்ச் டவர் கட்டுரைகளையும் குறிப்பிட மாத்திரமே செய்கின்றது . இப்படியாகச் சிந்தனை தூண்டப்படுகின்றது மற்றும் சத்தியமும் மிகத் தெளிவாக மனதில் பதிகின்றது .
கீழே இடம்பெறும் மார்ச் மாத பாடங்களுக்கான 30 கேள்விகளானது, முப்பது ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் போதுமானதாயிருக்கும்; எனினும் மிகவும் நல்ல உணவாய்க் காணப்படுகின்றபடியால் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் நாம் அநேகம் கேள்விகளைக் கையாளலாம். எத்தனை கேள்விகள் என்பது, கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையையும் மற்றும் அவர்கள் எவ்வளவுக்கு ஆராய்ச்சிப் பாடத்திற்குப் பழக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும், எவ்வளவுக்குக் கூட்டத்தை வழிநடத்துபவரின் திறமை காணப்படுகின்றது என்பதையும் சார்ந்திருக்கும். இதை நடத்துவதில் மிகவும் திறமிக்கவர்களாய் இருப்பவர்கள் யார் என்று கண்டுகொள்ளத்தக்கதாக திறமிக்க சகோதரர்களாய்த் தென்படுபவர்கள் அநேகரைச் சுழற்சியில் வழிநடத்திடுவதற்குச் சபையார் நியமித்திடுவது நலமாயிருக்கும். இப்படியானவர்கள் அநேகமாக உங்களால் மூப்பர்களாக ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்தியில் கண்டுபிடிக்கப்படலாம்.
ஒருவேளை சபையார் சிறிய எண்ணிக்கை உடையவர்களாய் இருப்பார்களானால், உதாரணத்திற்கு ஏழுபேர் காணப்படுவார்களானால், ஒவ்வொருவருக்கும் பின்வருகிற ஞாயிற்றுக்கிழமைக்கென ஒரு கேள்வியினைப் பிரித்துக்கொடுப்பது நலமாயிருக்கும். வாக்கு (vote) மூலம் மூப்பர்கள் கேள்விகளை இப்படிப் பிரித்திடுவதற்கு வேண்டிக்கொள்ளப்படலாம். ஒரு கேள்விக்கு ஒரு வாரக்காலம் படிப்பதற்குக் காணப்படுகின்றபடியால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருகையில் ஒவ்வொருவராலும் உதவிகரமாகவும், சுவாரசியமாகவும், அனைவருக்கும் பிரயோஜனமாகவும் காணப்படும் விதத்தில் கருத்துகளையும், வசனங்களையும், வாட்ச் டவர் (ரீப்பிரிண்ட்ஸ்) மற்றும் டாண் (volume) மேற்கோள்களையும் முன்வைத்திட முடியும். அனைவருமே வாட்ச் டவர் வாசகர்களாக இருப்பதினால், எண்களினால் கேள்விகள் பங்காகக் கொடுக்கப்படலாம், அதாவது சகோதரர் A- அவர்களுக்கு கேள்வி எண். 4; சகோதரி H- அவர்களுக்குக் கேள்வி எண். 5 என்பது போலாகும் .
ஒருவேளை சபையார் அதிக எண்ணிக்கை உடையவர்களாய், அதாவது கொண்டவர்களாய் இருப்பார்களானால், கேள்விகளுக்கான பதிலை முன்வைத்திடுவதற்குச் சபையாரிலேயே மிகவும் திறமையுடைய அங்கத்தினர்களிலுள்ள ஏழு அல்லது எட்டு அங்கத்தினர்களுக்குக் கேள்வியைப் பிரித்துக்கொடுப்பது நலமாய் இருக்கும். எனினும் இதற்கென நியமிக்கப்பட்டவர்களால் கேள்விக்கான பதில் முறையாக [R3518 : page 73] முன்வைக்கப்பட்ட பிற்பாடு, ஒவ்வொரு காரியமும் அல்லது கேள்வியும் பொதுவான கலந்தாராய்தலுக்கு முன் வைக்கப்பட வேண்டும் .
இப்படியாகக் கீழே இடம்பெறும் முப்பது கேள்விகளும் பயன்படுத்தப்பட்டால், இவை பெரிய எண்ணிக்கையிலுள்ள சபையாருக்குக் கிட்டத்தட்ட ஒரு மாதக்காலம் பிரயோஜனமான ஆராய்ச்சி மேற்கொள்வதற்குரிய திரளான உணவாய்க் காணப்படும். இந்த யோசனைகளின் பலனாக நமது கர்த்தருக்குத் துதியும் , கனமும் உண்டாகத்தக்கதாகவும் மற்றும் அவரது ஜனங்களுக்குப் பலத்தையும் , ஜெயத்தையும் கொண்டுவரத்தக்கதாகவும், இந்த யோசனைகளோடு எங்களது ஜெபங்களும் உங்களுக்குக் காணப்படுகின்றது.
*********
[ஒவ்வொரு கேள்வியைத் தொடர்ந்து, வேதவாக்கியமானது பதிலாக வழங்கப்பட்டுள்ளது; பின்னர் விளக்கவுரைக் கொடுக்கும் டாண் (volume) மற்றும் வாட்ச் டவரின் (ரீப்பிரிண்ட்ஸ்) பக்கத்தினுடைய எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். டாண் தொகுதிகளானது ஆங்கில முதல் 6 எழுத்துக்களால் – A, B, C, D, E, F – சுட்டிக்காண்பிக்கப்பட்டிருக்கும் மற்றும் டவர்களானது (ரீப்பிரிண்ட்ஸ்) Z என்று எழுத்தினாலும், அதன் வருஷத்தோடு கொடுக்கப்பட்டிருக்கும் . விளக்கவுரையைப் பெற்றிருக்கும் பத்தி எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும்] .
(1) விசுவாசம் என்றால் என்ன ? எபிரெயர் 11:1;1 யோவான் 5:4; E.125, par.1;F.689 (முதல் வரி).
(2) விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன ? Z.’95-134.
(3) எதையும் போதுமான அளவு ஆதாரங்களின்றி எளிதில் நம்பக்கூடிய இயல்பிலிருந்து, விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது ? F.689,par.1.
(4) உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன? எபிரெயர் 11:6; F.315,693, par.1;Z.’94-329 (2nd col.par.1-3.
(5) விசுவாசத்திற்கும் , அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன ? ரோமர்:17; A.13, par.1;A.20,par.2;A.21,par.1;Z.’94-329(1st col.par.2);Z.’99-3 (2nd col.par.1).
(6) விசுவாசம், “தேவனுடைய ஈவாக” எவ்வாறு கருதப்படுகிறது? எபேசியர் 2:8; Z.’98-107 (1st col.par.2);Z.’01-156(1st col.par.2,3).
(7) இரட்சிப்படைய கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா? அப்போஸ்தலர் 4:10-12; யோவான் 3:16,36;A.102,par.3;7.’97-278.(See Topical Index, — ” விசுவாசம் “)
(8) இந்தச் சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாகக் கிடைக்கும் பலன் என்ன ? ரோமர் 5:1;A.231,par.4;Z.’00-188(1st col.par.3,and 2nd col.par.1,2).
(9) இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார் ? எபிரெயர் 12:2;7.’95-147 (1st col.par.1).
(10) விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா ? ரோமர் 10:10;Z.00 149,(2nd col.);Z.’00-180 (1st col.par.5); Z.’02-270 (1st col.par.1,2,3).
(11) “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா? Z.92-267.
(12) நீதிமானாக்கப்படுதலுக்கு அடிப்படையாய்க் காணப்படும் விசுவாசத்திற்கும் மற்றும் ஆவியின் கனிகளில் ஒன்றாகிய விசுவாசத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன ? F.688-692.
(13) “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன ? 1 தீமோத்தேயு 6:12;Z.’98 153,158,(2nd col.)
(14) நல்ல போராட்டத்தை நாம் எப்படிப் போராட வேண்டும் ? Z.195-201,202;7.98 158, (1st col.par.2);Z.’98-159 (2nd col.); Z.’01-72 (2nd col.par.3).
(15) நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர்ப்புரிகிறோம? பிலிப்பியர் 2:12;1 யோவான் 3:16; எபேசியர் 6:12; Z.’98-153-155; F.599-658
(16) ” விசுவாசத்தினால் நடப்பது ” என்பதற்குப் பொருள் என்ன? 2 கொரிந்தியர் 5:7;F.631,par.2,3;Z.’00-57 (1st col.);Z.’95-92,93;F.142,par.2.
(17) விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது ? யாக்கோபு 1:3,4; 1 பேதுரு 4:12,13; F.642-644; Z.’96-54; Z.’95-134,135.
(18) விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன ? 1 கொரிந்தியர் 2:9,10;F.689 (par.2) to 692;F.686,par.3.
(19) விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன ? 1 யோவான் 3:2; வெளிப்படுத்தல் 2:10; F.693,694, F.721 (par.1,2) to 729.
(20) விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன ? எபிரெயர் 4:1-11;F.392-394;Z.’95-168,169; Z.’99-253(1st col.par.1).
(21) விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் என்பதற்கான விளக்கம் என்ன ? எபிரெயர் 10:22;Z.’00-169,par.1.
(22) விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு, அதை எப்படித் தக்கவைத்துக்கொள்வது ? Z.’98-247;E.249,250.
(23) விசுவாசத்தின் பூரண நிச்சயத்திற்குத் தடையாய் இருப்பது எது ? Z.’00-169,170.
(24) நம்முடைய விசுவாசத்தை அதிகரிப்பது எப்படி ? F.691,par.2;Z.’96-86(2nd col.par.3).
(a) ஜெபம் மூலம் .Z.96-162,163.
(b) வேத ஆராய்ச்சி மூலம்.F.315.
(c) தேவனுடைய வாக்குத்தத்தங்களைத் தொடர்ந்து நினைவுகூருவது மற்றும் உரிமைப்பாராட்டிக் கொள்வதன் மூலம்.Z.’00-170 (1st col.par.4).
(d) நம்முடைய அனுபவங்களைக் கவனிப்பது மூலம்.7.’00-170 (2nd col.par.1,2).
(25) உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க “தற்கால சத்தியங்களின்” சில முக்கிய அம்சங்களைக் கூறவும்.
(26) கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? யாக்கோபு 2:14,17,18,22;Z.’00-343 (1st col.par.1,2);Z.’01-231 (2nd col.par.2,3).
(27) யார் இந்த “விசுவாச வீட்டார் ”? கலாத்தியர் 6:10; Z.’00-368, (2nd col.)
(28) யாக்கோபு 5:14-16 – ஆம் வசனங்களின் விளக்கம் கூறவும். யாக்கோபு 5:14-16;F.631-638.
(29) விசுவாசம் மற்றும் நம்பிக்கைத் தொடர்புடைய விஷயத்தில், கேடயம் மற்றும் நங்கூரம் எனும் அடையாளங்களுக்கான முக்கியத்துவம் என்ன ? எபேசியர் 6:16;F.657,par.5;எபிரெயர் 6:19 ;Z.’02-345 (1stcol.)
(30) விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு, ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும் ? Z.’00-238 (2nd col.par.1,2) to 239;F.106,(par.3) to 107.