R2291
சமீபத்தில் நாங்கள் பெற்றுக்கொண்ட ஒரு கடிதத்தில், சகோதரர் டி.பி.ஜாக்சன் அவர்கள், நான்குபேர் தன்னுடைய இல்லத்தில் கூடிவந்து, நினைவுகூருதலில் பங்கெடுத்ததைத் தெரிவித்தப் பிற்பாடு, பின்வருபவைகளையும் எழுதியுள்ளார்:
இங்குள்ள எங்களது சிறு ஐக்கியத்தினுடைய கவனத்திற்குச் சமீபமாக வந்துள்ள சில காரியங்களை உங்கள் கவனத்திற்குள் கொண்டுவந்திட நான் விரும்புகின்றேன், அது பின்வருமாறு:
இங்குள்ள சகோதரரில் ஒருவர், M_________ என்ற இடத்திலுள்ள சபைக்கு, ஏப்ரல் 5-ஆம் தேதி போய், கர்த்தருடைய இராப்போஜனத்தினை ஆசரித்திட உதவும்படிக்கு வேண்டுகோள் விடப்பட்டது. இது B_________ என்ற இடத்திலுள்ள தனது சொந்த கூடுகையில் தான் கலந்துகொள்ள முடியாமல் செய்திடும் என்பதினால், அதுவும் இங்கு இரண்டு குடும்பத்தார் மாத்திரமே காணப்படுகின்றார்கள் என்பதினால், அச்சகோதரன் மறுப்புத் தெரிவித்துவிட்டார். Y _____________ என்ற இடத்திலுள்ள ‘A’ என்ற சகோதரன், வேண்டுகோளுக்கு இணங்கி, M _________என்ற இடத்திலுள்ள சபையாரிடத்திற்குச் சென்று, அவர்களுக்கு நினைவுகூருதல் இராப்போஜனத்தை ஆசரித்திட உதவும்படிக்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றார் மற்றும் இதைப்போன்ற காரியத்திற்குச் சகோதரர் M – அவர்கள் N _________ என்ற இடத்திலுள்ள சபையாரிடத்திற்குச் செல்கின்றார்.
M _________என்ற இடத்திலுள்ள சபையாரிடத்திற்கு வரும்படியான வேண்டுகோளுக்கு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் நிமித்தம் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் மேலும் சிந்தித்துப் பார்த்ததில், சபையின் அங்கத்தினர்கள், நினைவுகூருதல் ஆசரிப்பிற்காய் உதவிடும்படிக்கு மற்றச் சபையாருடைய வழிநடத்துபவர்களையும், முதன்மையான அங்கத்தினர்களையும் அழைக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்வது பின்வரும் காரணங்களினிமித்தம் ஞானமாய் இராது என்று எங்களுக்குத் தோன்றியது; காரணங்கள் பின்வருமாறு:
(1) பஸ்கா என்பது குடும்ப ஆசரிப்பாகும். இது கர்த்தருடையஇராப்போஜனமானது விசேஷித்த ஆடம்பரமாய்க் காண்பித்துக்கொள்ளும் தருணமாக்கப்படக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.
(2) அப்போஸ்தலர் காலங்களில், தங்களுக்கு நினைவுகூருதல் ஆராதனையை நடத்தித் தருவதற்காய், மூப்பர் ஒருவர் வந்து ஊழியம்புரியும்படிக்கு, ஒரு சபையார் இன்னொரு சபையாரிடம் வேண்டிக்கொள்ளும் வழக்கம் காணப்பட்டதாக நமக்கு எந்தப் பதிவுகளுமில்லை.
(3) விசுவாச துரோகம் நடந்திட்டதான சபைகள் யாவற்றிலும் கர்த்தருடைய இராப்போஜனத்தை மையமாகக் கொண்டுதான் குருமார் வகுப்பினர், மோசமான அநேகம் குருமார் சார்ந்த கொள்கைகளை ஏற்படுத்தினார்கள். இதை இன்றைய நாட்களில் காணப்படும் புரோட்டஸ்டண்ட் குருமார் வகுப்பினர், சாதாரணமான வகுப்பார் மீதான குருமார் வகுப்பாரின் முக்கியத்துவத்தினைப் பெரிதும் மிகைப்படுத்திடுவதற்கான வழிவகையாகப் பெற்றிருக்கின்றனர். கடந்த பனிகாலத்தின்போது, Kentucky – யிலுள்ள Louisville – யின் Presbytery சபையானது, பாதிரி – “நியமிக்கப்பட்ட ஊழியக்காரன் இல்லாமலேயே சபையின் சாதாரண அங்கத்தினர்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரிப்பது சரியே என்று போதித்ததற்காக ஊழியக்காரர் ஒருவரைச் சபை நீக்கம் செய்துள்ளது.
(4) கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரிக்க வந்து, உதவும்படிக்கு ஒரு சபை இன்னொரு சபையாரிடத்தில் “வழிநடத்துபவரை, “மூப்பரை அல்லது முதன்மை வகிக்கும் அங்கத்தினனை அனுப்பும்படிக்கு வேண்டிக்கொள்ளும் பழக்கமானது, ஆதிசபையின் சீர்க்குலைவுக்குக் காரணமாய்க் காணப்பட்டதான கிறிஸ்தவ குருமார்கள் மீதான பற்று ஆர்வத்தின் மற்றும் குருமார் உரிமை கோட்பாட்டின் – அதே ஆவியின் நுணுக்கமான துவக்கமாய் இருக்குமல்லவா? இவ்வழக்கமானது – இந்த ஆசரிப்பை ஆசரிப்பதற்கெனத் தொலைவில் உள்ள சபைக்குச் சென்று உதவும்படிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட வழிநடத்துனனின் மனதை பெரு மகிழ்வுணர்ச்சிக்கொள்ளச்செய்வதற்கு ஏதுவானதல்லவா? மற்றும் ஆசரிப்பை நடத்திடுவதற்கு “வழிநடத்துபவர்களை மற்றும் “மூப்பர்களைப் பெற்றிருப்பது அவசியம் அல்லது பயனள்ளது அல்லது முக்கியமுமானது என்ற எண்ணத்தினை அங்கத்தினர்கள் மனதில் உருவாக்கிடுவதற்கு மாத்திரமல்லாமல், தங்கள் சபையின் சொந்த மூப்பரானவர், தொலைவிலுள்ள சபையிலிருந்துவரும் ஒருவரால், இந்த முக்கியமான கடமையின் விஷயத்தில் வலுவூட்டப்படுவதற்கு வெளியிலிருந்துவரும் வழிநடத்துனனின் பங்கு மிகவும் அவசியமாய் இருக்கின்றது என்றுமுள்ள எண்ணத்தினை, அங்கத்தினர்கள் மனதில் உருவாக்கிடுவதற்கு ஏதுவானதல்லவா? தங்களுக்குப் பழக்கப்பட்டிருக்கும் அயலானைக்காட்டிலும், தொலைவிலிருந்து வரும் ஒரு மனுஷனை “பெரிய மனுஷனாகக் கருதிடுவது, மனுஷீக சுபாவத்தினுடைய பெலவீனமாய் இருக்கின்றது.
(5) சபையில் நற்கருணை ஆராதனையை நடத்திடுவதற்குப் பாஸ்டருக்கு உதவியாக இருக்கும்படிக்கு சமீபமாகக் காணப்படும் சபையிலிருந்து பாதிரி ஒருவரை அழைத்துக்கொள்ளும் வழக்கமானது பிரஸ்பைடீரியன் சபைகளில் சகஜமான ஒரு காரியமாகும் மற்றும் இது ஆசரிப்பின்போது பாதிரி காணப்படுவதின் முக்கியத்துவத்தை உயர்வாய்க் காண்பிக்கும் பொருட்டுச் செய்யப்படுவதாகத் தெரிகின்றது மற்றும் இவ்வழக்கம் அறுவடை காலத்தின்போதான கர்த்தருடைய தாழ்மையுள்ள பின்னடியார்களினால் கைக்கொள்ளப்படுவதைப் பார்க்கிலும், தடைப்பண்ணப்படுவதே கனத்திற்குரியதாய் இருக்குமல்லவா?
கிறிஸ்தவ மதக்குருப் பற்று ஆர்வம் மற்றும் பிரிவினை வெறி மற்றும் குறுகிய நோக்கத்திற்கான சோதனைகளானது, நமக்கான சோதனைகளிலேயே மிகவும் சாதுரியமான, “பிசாசின் தந்திரங்களிலேயே மிகவும் வஞ்சகமான சோதனைகளாகக் காணப்படுகின்றது என்று நான் எண்ணுகின்றேன். வரும்படி அழைப்பு விடுத்தவர்களும், அழைப்பினை ஏற்றுக்கொண்டவர்களுமான இந்தச் சகோதரர்களானவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி நல்நோக்கத்திலேயே இதைச் செய்துள்ளனர் மற்றும் இந்த நடைமுறையில் அபாயம் ஏதேனும் காணப்படுமோ என்று கொஞ்சமும் எண்ணிப் பார்க்காதவர்களுமாய்க் காணப்பட்டுள்ளனர் மற்றும் என்னுடைய முதலாம் அப்பிராயத்தின்படிதான் நான் இவறை உறுதிப்படுத்தியுள்ளேன் மற்றும் இந்தப் பழக்கத்தில் அபாயம் காணப்படுகின்றது என்றும், “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல – தீங்கற்றதாய்த் தோற்றமளிக்கின்றதும் மற்றும் பக்திவிருத்திக்கு ஏதுவான நடைமுறையாகத் தோற்றமளிக்கிறதுமான இந்தப் பழக்கத்தினால் – மனமானது கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்றும், எளிமையினின்றும் விலகும்படி கெடுக்கப்படுமோவென்றும் பயந்திருக்கிறேன். இதைக்குறித்து நீங்கள் ஆழ்ந்து, ஜெபத்துடன் சிந்திப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன்.
இன்னுமாக இவ்வழக்கமானது பரவலாகிக் கொண்டிருக்கின்றதா என்றும் நான் அறியவிரும்புகின்றேன். இந்தப் பக்கத்திலுள்ள கிட்டத்தட்ட அனைத்துச் சபைகளிலும் இது நடந்துள்ளதாகத் தெரிகின்றது. இப்படித்தான் மற்ற அநேக இடங்களிலும் காணப்படுகின்றதா அல்லது இங்குள்ள இடத்தில் மாத்திரம் இப்படிக் காணப்படுகின்றதா என்பதை அறிந்துகொள்வதும் சுவாரசியமாய் இருக்கும். ஒருவேளை அநேகம் சபைகளில் நடந்துள்ளதெனில், இது சீர்த்திருத்தப்பட்ட சபைகளில் “அக்கிரமத்தின் இரகசியத்தினுடைய முளைகளைச் சத்துரு நடுவதற்கான பொருத்தமான தருணமாய் இருக்கும்; ஏனெனில் ஒருவேளை இப்பழக்கம் பரவலாகிடும்போது, அதிகம் ஒதுங்கிக் காணப்படும் மற்றும் குறைவான தாலந்துள்ள அங்கத்தினர்கள் தங்களைக் காட்டிலும் இந்த “வழிநடத்துபவர்களே நினைவுகூருதல் ஆசரித்தல் தொடர்புடைய விஷயத்தில் அதிகம் பங்காற்ற வேண்டியவர்களாய் இருக்கின்றனர் என்று நிச்சயமாய் எண்ணிடுவார்கள் மற்றும் காலப்போக்கில் மூப்பர்கள் மற்றும் அங்கத்தினர்களுக்கு இடையிலான வேறுபாடானது, இறுதியில் குருக்கள் வகுப்பார் என்பவர்கள் தனித்துத் தெரியும் அளவுக்கு, விரிவடைந்துவரும்.
தங்கள் உண்மையுள்ள,
டேவிட் பி. ஜாக்சன்.
************
மேலே கடிதத்தில் இடம்பெறும் இந்த நண்பர்கள் எவரும், “குருக்கள் / பாதிரிகள் கோட்பாட்டினை ஊக்குவிப்பதற்குக் கொஞ்சமேனும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று நாம் ஊகிக்கின்றோம். அழைப்பு விடுத்ததான சபைகளானது, இந்த வருடத்தில் முதல்முறையாக நினைவுகூருதலை ஆசரித்துள்ளார்கள் என்று நாம் எண்ணுகின்றோம் மற்றும் அதிக அனுபவமிக்க யாரேனும் அவற்றைத் துவங்கிவைப்பது சரியே. இது தவிர கடிதத்தில் குறிப்பிடப்படும் அந்தச் சிறுசிறு கூடுகைகளானது Y என்ற இடத்திலுள்ள சகோதரர்களின் பிரயாசத்தினால் கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர்; Y _________என்ற இடத்திலுள்ள சகோதரர்கள்தான் சுவிசேஷகர்களாக, யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டத்தினை அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆகையால் இவர்கள் தாங்கள் சத்தியத்தினை ஏற்கெனவே யாருடைய கவனத்திற்குக் கொண்டுவந்தார்களோ, அவர்களோடுகூடி, அவர்களுக்கு நினைவுகூருதல் இராப்போஜனத்தின் ஆசரிப்பை அறிமுகப்படுத்துவது முற்றிலும் சரியானதேயாகும்.
எனினும் திருச்சபையினுடைய குருமாருடைய பிளவுள்ள குழப்பங்களுக்கு எதிராகவும், கர்த்தருடைய ஜனங்களைப் பிரித்திடும் அல்லது நமது அருமை மீட்பரினால் பரஸ்பரமான முறையில் நமக்கு அருளப்பட்டதான சுயாதீனங்களை அடக்க முற்படும் எல்லாவற்றிற்கு எதிராகவும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியதன் அவசியம் தொடர்புடைய விஷயத்தில் நாம் சகோதரர் ஜாக்சன் அவர்களோடு முற்றிலுமாய் ஒப்புக்கொள்கின்றோம். இந்த ஓர் ஆசரிப்பின் விஷயத்திலும் அல்லது மற்றத் தருணங்களிலும், யார் கர்த்தருடைய ஜனங்களுக்காக ஊழியம் புரிந்திடலாம் என்பதற்குத் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது – அதாவது மன, ஒழுக்க, சரீர அல்லது ஆவிக்குரிய தகுதியாகும். இக்கடிதத்தினை நாம் வெளியிடுவதற்கான காரணம், அதன் அநேகம் கருத்துகள் நன்றாய் உள்ளது. பஸ்கா என்பது ஒரு குடும்பக்காரியமாகும் மற்றும் இதனிடத்தில் பிற்பாடு இடம்பெறும் நினைவுகூருதல் இராப்போஜனமும்கூட ஒரு குடும்பக் காரியமாகும்; ஆனால் அது பூமிக்குரிய குடும்பம் சம்பந்தப்பட்டதாக இல்லாமல், கர்த்தருடைய குடும்பமாகிய, “விசுவாச வீட்டார் சம்பந்தப்பட்டதாய் இருக்கின்றது.