Q102:1
கேள்வி (1909)-1- மூப்பர் ஒருவரால் ஆலோசனையாகத் தெரிவிக்கப்படும் ஜெபத்திற்கான ஒழுங்குமுறையினை நாம் ஏற்றுக்கொள்வதற்கு, கீழ்ப்படிதலின் கொள்கையானது நம்மை வழிநடத்திடுமா?
பதில் – சபை ஒழுங்குமுறையின் விஷயத்தில், நாம் ஒன்றுகூடி ஆராதனை பண்ணுகையில், சபையாரின் ஏற்பாடுகளுக்கு நம்மை நாம் கீழ்ப்படுத்துவது நமக்கு மிகவும் ஏற்றகாரியமாக இருக்கும். கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களாக நாம் காணப்படுவோமானால், கூட்டத்தினுடைய (meeting) முறைமை என்னவாகக் காணப்பட வேண்டும் என்று நாம் சொல்ல வேண்டியவர்களாய் இருப்போம் மற்றும் மூப்பர் இல்லாமல் இருக்கும்போது கூட்டத்தினுடைய முறைமை என்னவாகக் காணப்படவேண்டும் என்று ஒன்றுகூடி ஆராதிப்பவர்கள் சொல்லிடுவதும் தகுதியானதாகும். ஒருவேளை மூப்பர் கலந்துகொள்ள முடியாத தருணங்களில், யார் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று மூப்பர் கூறிடுவதும் தகுதியானதே மற்றும் மூப்பரினால் நியமிக்கப்பட்டவர், “ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் எனும் அப்போஸ்தலனின் வார்த்தைகளுக்கு ஏற்ப, முடிந்தமட்டும் அன்புடன் மூப்பரின் கருத்துகளுக்குக் கீழ்ப்படிந்திடுவதும் தகுதியானதேயாகும். உதாரணத்திற்குச் சகோ. ஷெர்மன் அவர்கள் கூட்டத்தைத் துவக்கிவைத்து, “பாடல் பாடிட நாம் அனைவரும் எழும்பிடுவோமா? என்று கூறுவாரானால், “நாங்கள் எழும்ப வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லிட உமக்கு சுதந்திரம் தந்தது யார்? என்று கேட்பதற்குப் பதிலாக, நாம் எந்தச் சரீர பலவீனங்களையும் பொருட்படுத்தாமல், எழும்பிட வேண்டும். உதாரணத்திற்கு யாரேனும் “ஜெபிப்பதற்கென்று நம்முடைய தலைகளைத் தாழ்த்திடலாமா? என்கிறபோது, ஒருவர்: “நான் ஜெபிக்கும்போது எழும்பி நிற்கும் பழக்கமுடையவன். நான் எழும்பி நிற்க போகிறேன் என்று சொல்வதற்குப் பதிலாக இசைந்திட வேண்டும். மனசாட்சி சம்பந்தப்படாத காரியங்களில் எல்லாம் இசைந்துபோவதற்கு விருப்பம் கொண்டிருப்பது நல்லதாகும். கர்த்தருடைய ஜனங்கள் அதிகளவில் எதிர்த்துப்போராடும் மனப்பான்மையைப் பெற்றிருப்பார்கள் மற்றும் இந்தத் தன்மையை நாம் பெற்றுக்கொள்ளாதவரையிலும், நாம் ஜெயங்கொண்டவர்களாக முடியாது. ஆனால் இத்தன்மையானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் படவில்லையெனில், இது நம்மைச் சண்டையிடுகிறவர்களாகவும், ஒத்துப்போகச் சிரமமானவர்களாகவும், அனுசரித்துப்போகக் கஷ்டமானவர்களாகவும் ஆக்கிவிடும். நியாயமான ஒவ்வொரு ஒழுங்குகளுக்கும் நம்மால் முடிந்தமட்டும் நாம் கீழ்ப்படிந்திட வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் உரிமைகளையும், சித்தங்களையும் செயல்படுத்திக் கொண்டிருப்பார்களானால், எப்போதுமே குழப்பம் காணப்படும். நாம் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருப்பது நல்லதே நம்மைக் கீழ்ப்படுத்துவதற்குக் கற்றுக்கொள்வதும் நல்லதே – ஆனால் விஷயம் மனசாட்சி சம்பந்தப்பட்டதாக இருக்கையில், மனசாட்சியினை நாம் மீறாதபடிக்கு, அந்த மனசாட்சிக்கு இசைவாக நிற்பதற்குப் போதுமான தைரியத்தையும் மற்றும் திடமனதையும் நாம் கொண்டிருக்க வேண்டும். மனசாட்சி சம்பந்தப்படாத அநேக காரியங்கள் உலகத்தில் காணப்படுகின்றது.