மூப்பருக்குரிய பொறுப்புகள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3171 (page 102)

மூப்பருக்குரிய பொறுப்புகள்

THE RESPONSIBILITIES OF ELDERSHIP

“வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டும்.” – அப்போஸ்தலர் 20:28-38

எபேசுவில் நடந்த கலகத்திற்குப் பிற்பாடு, அங்கிருந்;து புறப்படும்போது அப்போஸ்தலனாகிய பவுல் மீண்டுமாக எருசலேமுக்குப் போக வேண்டுமென்று தீர்மானம் பண்ணினார், ஆனால் முதலாவதாக ஐரோப்பியாவிலுள்ள சபைகளை – மக்கெதோனியாவிலும், கிரேக்கிலும் உள்ள சபைகளைச் சந்திக்க வேண்டுமென்றிருந்தார். மக்கெதோனியாவில் இருக்கும்போதுதான் அவர் கொரிந்தியருக்கான தனது இரண்டாவது கடிதத்தை எழுதியுள்ளதாக அனுமானம் காணப்படுகின்றது; இந்தப் பிரயாணத்தில் கொரிந்து பட்டணத்தில் சுமார் மூன்று மாதங்கள் காணப்பட்ட போது, அவர் ரோமர்களுக்கான தனது நிருபத்தை எழுதியுள்ளதாக அனுமானம் காணப்படுகின்றது. அந்த ஒரு காலக்கட்டத்தில் 21- வயதான நீரோ, ரோமின் சக்கரவர்த்தியாகக் காணப்பட்டார் மற்றும் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு 56-வயதாக இருந்தது – தனது கிறிஸ்தவ ஜீவியம் மற்றும் அனுபவங்களின் முழு நிறைவு பகுதியில் காணப்பட்டார்.

வாணிக கப்பல் ஒன்றில் அப்போஸ்தலன் எருசலேமுக்குப் போய்க் கொண்டிருக்கையில், கப்பலானது எபேசுவிலிருந்து 30-மைல் தூரத்திலுள்ள மிலேத்து துறைமுகத்தில் நின்றது; இங்கே நம் பாடம் ஆரம்பமாகுகின்றது. எத்தனை நாட்கள் கப்பலானது நிற்கும், சரக்கை ஏற்றி இறக்கும் இவை முதலானவைகள் திட்டவட்டமாய்ச் சொல்ல இயலாது; ஆகையால் அப்போஸ்தலன் [R3171 : page 103] எபேசுவிற்குச் செல்வதற்குப் பதிலாக, அங்குள்ள சபையின் மூப்பர்கள் மிலேத்துவில் தன்னிடம் வருவதற்கும், இப்படியாகத் தனது கப்பலானது பிரயாணத்திற்குப் புறப்பட ஆயத்தமாகும்போது, கப்பலை தான் தவறவிடாமலும், அவர்களோடு அதிகக் காலம் செலவழிக்கத்தக்கதாகவும், மூப்பர்களுக்கு ஆள் அனுப்பினார். மூப்பர்கள் வந்தார்கள் மற்றும் அவர்களுக்கு அப்போஸ்தலன் கூறியவைகளை நம்முடைய பாடத்தில் காணலாம். அவர்கள் அநேக நாட்கள் அவரோடுகூடக் காணப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அநேகமாக அவரும் அநேகம் காரியங்களைப் பேசியிருக்க வேண்டும்; ஆனால் லூக்காவின் மனதில் காணப்பட்டதும், இவரால் காலக்கிரமமாகத் தொகுத்து வழங்கப்பட்டதும், அப்போஸ்தலனுடைய இறுதி வார்த்தைகளாக, முழு உரையாடலின் சுருக்கமாக இருக்கின்றது; இது ஆற்றல்மிக்கதாயும், நெஞ்சைத் தொடுகிறதாயும் பொதுவாய்க் கருதப்படுகிறது. இது உள்ளூர் கண்காணிகளுக்கான, பொதுக்கண்காணியினுடைய பேருரையாகும் மற்றும் இது புரிந்து கொள்ளப்படவேண்டுமானால் இந்த ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும்.

“உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்;” தங்கள் சொந்த இருதயத்தையே காத்துக்கொள்ள முடியாதவர்களினால், பொதுவான சபைக்கான நலனுக்கடுத்த விஷயங்களில் உண்மையாய் ஊழியம் புரிய முடியாது என்று அப்போஸ்தலன் சரியாகத்தான் உணர்ந்திருக்கின்றார். பக்தியும், அன்பும் வீட்டில்தான் துவக்கம் கொண்டிருக்க வேண்டும். இது தொடர்பாக ஜான் கேல்வின் அவர்கள் கூறியுள்ளதாவது: “தன்னுடைய சொந்த இரட்சிப்பை அலட்சியம் பண்ணுகிறவன், மற்றவர்களுடைய இரட்சிப்புக்கடுத்த விஷயங்களில் ஆக்கப்பூர்வமாய்க் கவனம் செலுத்திட முடியாது; ஏனெனில் அவனே மந்தையில் ஒரு பாகமாகத்தான் காணப்படுகின்றான்.” இதே கருத்தானது அப்போஸ்தலனாலும் [R3172 : page 103] பின்வருமாறு கூறுகையில் முன்வைக்கப்படுகின்றது: “தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த (நீங்களும் உள்ளடங்கும்) மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்;” And (take heed) to all the flock, over the which the holy spirit hath made you overseers;” – “In the which” என்று ரிவைஸ்டு மொழியாக்கத்தில் (Revised Version) இடம்பெறும் வார்த்தைகள் மிகவும் சரியாய் உள்ளது; கண்காணிகளானவர்கள் சபையின் மீது அதிகாரிகளாகக் கருதப்படாமல், சக அங்கத்தினர்கள் தொடர்பான பொறுப்பினையுடைய சபையின் அங்கத்தினர்களாகக் கருதப்பட வேண்டும். கண்காணியினுடைய பராமரிப்பானது மந்தையில் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும், கல்வியிலும் அல்லது வேறு எதிலாகிலும் நன்கு வளம் பெற்றுள்ளதான அங்கத்தினர்களுக்கு மட்டும் எல்லைக்குட்படுத்தப்படாமல், மாறாக அப்போஸ்தலன் கூறுவதுபோன்று “மந்தை முழுவதற்கும் – ஏழைகளாகவும், இயல்பாகவே விநோதமானவர்களாகவும் காணப்படுபவர்களை உள்ளடக்கின நிலையில் பொதுவாய்க் காணப்பட வேண்டும்.

மூப்பர்கள் என்பவர்கள், சரீரரீதியில் வயோதிப புருஷர்களாகக் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றுமில்லை ஏனெனில் கிறிஸ்துவின் சபையில் மாம்சம் என்பது மரித்ததாக எண்ணப்படுகின்றது; அவர்களது வயதும், அவர்களது முதிர்ச்சியும், அவர்களது மூப்பர்த்துவமும் புதுச்சிருஷ்டியின் அடிப்படையிலாகும். இவர்கள் சபையால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருப்பினும் இவர்கள் தங்கள் பொறுப்பானது பரத்திலிருந்து வருகின்றதெனக் கருத வேண்டும்; இவர்களது நியமனம் தொடர்புடைய விஷயத்தில் மனிதர்கள் சம்மந்தப்பட்டிருந்தாலும், இவர்களது கடமையானது, கர்த்தருடைய பரிசுத்த ஆவியின் மூலமான கர்த்தருடைய பிரதிநிதி என்ற வண்ணமாகவே உண்மையில் ஆகும். “மூப்பர்கள் ( Elders ) என்ற வார்த்தையும் 1 தீமோத்தேயு 4:14-ஆம் வசனத்தில் இடம்பெறும் “மூப்பராகிய சங்கத்தார் / Presbytery என்ற வார்த்தையும் ஒன்றே ஆகும். வேதவாக்கியங்கள் எங்கும் “Overseers” என்றும், “Bishop” என்றும் வழங்கப்பட்டுள்ளதான கண்காணி என்ற வார்த்தையானது, மற்றவர் சார்ந்த கடமை/பொறுப்பைப் பெற்றுக்கொண்டவர் ஆவார் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. Bishoop or Overseer எனும் கண்காணி என்ற இந்த வார்த்தையானது, நவீன காலங்களில் அதன் ஆதி எளிமை இல்லாமல் காணப்படுகின்றது. கிறிஸ்துவினுடைய சபையின் மூப்பர்கள், அதன் கண்காணிகளாகக் காணப்படுகின்றனர் மற்றும் இவர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதான ஊழியத்திற்குரிய பொறுப்பினை உணர்ந்துகொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் பொதுவான விதத்தில் கண்காணியாக இருந்துள்ளார்; இதை அவர்தானே, “எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது என்று குறிப்பிடுகையில் வெளிப்படுத்துகின்றார்; அதிலும் குறிப்பாகக் கர்த்தருடைய வழிநடத்துதலின் பேரில், சத்தியத்தில் நிலைவரப்படுத்தப்படுவதற்கு அவர் வழிவகையாக யாருக்கெல்லாம் இருந்தாரோ, அவர்கள் குறித்தும் அல்லது தனிப்பட்ட விதத்திலான அவரது ஊழியத்தின் மூலமாகவோ (அ) கடிதத்தின் மூலமாகவோ அவரது ஊழியங்களை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் அனைவர் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை அவரை நாள்தோறும் நெருக்கியது. இவ்விஷயங்களைப் பரிசுத்த ஆவியானது மேற்பார்வையிடுகிறதென்றாலும், கர்த்தருடைய ஜனங்கள் அடங்கிய சபையார் – கண்காணிகளை நியமிக்கும் விஷயத்தில் ஆவியினுடைய வழிநடத்துதலைக் கவனிப்பதும் மற்றும் அப்படியானவர்களை, ஆம் அப்படியானவர்களை மாத்திரம் ஏற்றுக்கொள்வதும், கர்த்தருடைய ஏற்பாடு என்று தாங்கள் நம்புகின்றதான கண்காணிப்பையும், மேற்பார்வையையும் ஏற்றுக்கொள்வதும் – சபையாரின் காரியமாய் இருக்கின்றது.

காட்டுவிலங்குகள் குறித்த புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான திரு. தாம்சன் செட்டன் ( Thompson Seton ) அவர்கள் “லைவ்ஸ் ஆப் தி ஹண்டட் / Lives of the Hunted எனும் தனது புத்தகத்தில் குறிப்பிடுவதாவது: “மந்தைகளின் தலைவர்கள், வழிநடத்துனர்கள் என்ற தங்கள் ஸ்தானத்தை, மந்தையின் மீதான ஏதோ அதிகாரத்தினால் பெற்றுக்கொள்வதுமில்லை மற்றும் தக்கவைத்துக் கொள்வதுமில்லை மாறாக நல்ல புல்வெளிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் தங்களை அறிவுள்ளவர்கள் என்றும், சத்துருக்களினின்று பாதுகாப்பதில் மிகவும் திறமிக்கவர்கள் என்றும், மந்தைகள் தங்களை நம்புவதற்குக் கற்றுக்கொண்டுள்ளது என்றும் காண்பிக்கின்ற காரியங்களின் அடிப்படையிலேயே ஆகும். இது வேதவாக்கியங்களின்படி கர்த்தருடைய ஜனங்களால் கண்காணிகளாக, மூப்பர்களாக, மேற்பார்வையாளராக ஏற்றுக் கொள்ளப்படுகிறவர்களிடத்திலான, கர்த்தருடைய ஜனங்களின் மனோநிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதை நன்கு விவரிக்கின்றதாய் இருக்கின்றது. ஆனால் அந்தோ பரிதாபம்! பெயர்ச்சபையில், அப்போஸ்தலனால் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதான தலைமைத்துவத்திற்கான சரியான பண்புகள் ஏதும் இல்லாத அநேக வழிநடத்துனர்கள் இருப்பதை நாம் பார்க்கின்றோம்; அவை: (1) மந்தைக்கான பொதுவான நலனுக்கடுத்தவைகளை மேற்பார்வையிடுதல்/கண்காணித்தல் அல்லது எச்சரிக்கையாயிருத்தல் மற்றும் (2) மந்தையைப் போஷித்தல் ஆகும். மிகுந்த பக்தி, ஞானம் மற்றும் அனுபவத்தினால் சரியாய் வருகின்றதான அதிகாரம் தவிர மற்றபடி கண்காணியின் ஸ்தானம் என்பது சபையின் மீதான எந்த அதிகாரத்தையும் கொடுப்பதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். மந்தையானது தப்பறையான உபதேசங்களினின்றும் மற்றும் தவறான போதகர்களிடமிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் தேவனுடைய வார்த்தைகளாகிய ஐசுவரியமான மேய்ச்சல்களிடத்திற்குள்ளும் மற்றும் அருமையான கிறிஸ்தவ அனுபவங்களுக்குள்ளும் மற்றும் மாபெரும் பயன்பாடு (Usefulness) எனும் களங்களுக்குள்ளும் / வயல்களுக்குள்ளும் வழிகாட்டப்பட வேண்டும்.

இது விஷயம் குறித்துப் புகழ்மிக்க எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு எழுதுகின்றார்:-

“மில்டன் லைசிடாஸ்-இல் ( Milton’s Lycidas) குருடான வாய்கள் எனும் விநோதமான சொற்சடொருக்கு திரு. ரஸ்கின் (Ruskin) அவர்கள், தனது சீசாமி மற்றும் லில்லீஸ் ( Sesame and Lilis ) எனும் வெளியீட்டில் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்: இந்த இரண்டு சொற்களும் சபையினுடைய இரண்டு மாபெரும் பணிகளின் – கண்காணி மற்றும் மேய்ப்பன் பணிகளின் சரியான அம்சங்களுக்கு நேரெதிரானவைகளைத் துல்லியமாய்த் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. கண்காணி என்பவன் காண்கின்ற / பார்க்கின்ற மனுஷனாவான்; மேய்ப்பன் என்பவன் போஷிப்பவனாவான்; ஒரு மனுஷனிடத்தில் கண்காணிக்குத் தகுதியில்லாத தன்மை என்பது குருடனாய் இருப்பதாகும் மற்றும் மேய்ப்பனுக்குத் தகுதியில்லாத தன்மை, மற்றவரைப் போஷிப்பதற்குப் பதிலாக, தானே போஷிக்கப்பட வேண்டிய நிலைமையாகும். சபையின் விஷயத்திலான பெரும்பாலான தீமைகளானது, வெளிச்சத்தை நாடிடுவதற்குப் பதிலாக அதிகாரத்தைக் கண்காணிகள் நாடினதால் எழும் பினவைகளாகவே காணப்படுகின்றது. இவர்கள் அதிகாரத்தையே விரும்பினார்கள், கண்காணிக்கும் வேலையை விரும்பவில்லை. (நம்முடைய இராஜாவாகிய கிறிஸ்துவின்) இராஜாவின் பணியே ஆளுகை செய்வதாகும்; கண்காணியின் பணி மந்தையைக் கண்காணிப்பதாகும்; மந்தையின் இலக்கத்தை எண்ணிக் கணக்கிட்டுப் பார்த்தலாகும்; மந்தையைக் குறித்த கணக்கை ஒப்புவிப்பதற்கு எப்போதும் ஆயத்தமாயிருப்பதாகும்.”

இத்தனை அக்கறையுடன்கூடிய புத்திமதிக்கான காரணத்தை அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார்: (1) அவர்கள் கண்காணிக்கின்ற மற்றும் போஷிக்கின்றதான சபையானது, தேவன் “*தம்முடைய (குமாரனின்) சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட, அவருடைய சபையாக அடையாளங்கண்டுகொள்ளப்பட வேண்டும். [* இது நமது கர்த்தராகிய இயேசு [R3172 : page 104] “தம்முடைய சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை வாங்கினார் எனும் கருத்தைத் தெரிவிக்கும் மற்ற வேதவாக்கியங்களின் அறிக்கைகளுக்கு முரணானது என்று புரிந்துகொள்ளப்படக்கூடாது. இரண்டு கருத்துகளுமே சரிதான்; இந்த இரண்டு கருத்துகளும் காரியத்தை இரண்டு வெவ்வேறு கோணத்திலிருந்து காண்கின்றதாயிருப்பினும், இரண்டு கருத்துகளுமே சரிதான். பெரிதான கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, தேவனே முழு இரட்சிப்பின் திட்டத்தைத் தோற்றுவித்தவராய் இருந்தார் – துவக்கம் முதல் முடிவு வரை அவரே இரட்சகராவார். ஆனால் அவர் இரட்சிப்பைக் குமாரன் மூலம் நிறைவேற்றினார்; “(நமக்கு) சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் – முழுக்க தகுதியுள்ளவர்மேல் – வைத்தார். (ஏசாயா 43:11; 1 தீமோத்தேயு 2:5; 4:10; சங்கீதம் 89:19) இப்படியாக நம்முடைய இரட்சிப்பிற்கான ஒவ்வொரு அம்சமும் அப்போஸ்தலன் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுவதுபோன்று, குமாரன் மூலமாய்ப் பிதாவுடையதாகும.; 1கொரிந்தியர் 8:6] தேவனால் மிகவும் விலையேறப்பெற்றதாகக் கருதப்பட்டதும், இத்தனை மாபெரும் விலைக்கொடுத்துச் சம்பாதித்துக் கொண்டதுமானது/மந்தையானது அவருக்கும், மந்தைக்கும் ஊழியக்காரர்களாய் இருப்பவர்கள் அனைவராலும் மிகவும் விலையேறப்பெற்றதாய்க் கருதப்பட வேண்டும்.

(2) இரண்டாம் காரணம் ஆபத்துகளும், சத்துருக்களும் உருவாகும் என்பதினாலேயே ஆகும்; இவைகள் தெய்வீக அனுமதியில்லாமல் வரமுடியாது என்றாலும், இவைகள் முழு மந்தைக்கும், மூப்பர்களுக்கும், கண்காணிகளுக்கும், மேய்ப்பர்களுக்கும் விசுவாசம் மற்றும் உண்மையின் விஷயத்தில் பரீட்சைகளாக அமைவது தெய்வீகச் சித்தத்தினுடைய ஒரு பாகமாய்க் காணப்படுகின்றது. தீமைக்கு எதிராய் இப்படி எதிர்த்து நிற்பதற்கு அவசியமான ஆற்றலானது, தேவன் தம்முடைய மந்தையின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் பெற்றிருக்கும்படி தாம் விருப்பங்கொள்ளும் குணலட்சணங்களை வளர்த்திடுவதற்கு ஏதுவானதாகும். தேவன் அவர்களுடைய திராணிக்குமேல், அவர்கள் சோதிக்கப்படுவதற்கு அனுமதிப்பதில்லை மற்றும் ஒவ்வொரு சோதனையிலும் தப்பித்துக்கொள்வதற்கான போக்கையும் உண்டாக்குவார்; ஆனால் அவர்கள் தம்மை விசுவாசிப்பதற்கும், விசுவாசத்தைச் செயல்படுத்துவதற்கும் மற்றும் கீழ்ப்படிவதற்கும் மற்றும் விழிப்பாய் இருப்பதற்கும் மற்றும் தீமையை எதிர்த்து நிற்பதற்கும் கற்றுக்கொள்ள செய்கின்றார்.

தான் இனிமேல் மறுபடியும் இந்த அருமையான சகோதரர்களைப் பார்க்கப்போவதில்லை என்றும் சகோதரர் விஷயத்திலான தன்னுடைய ஊழியம் நிறைவடையப்போகின்றது என்றும் ஏதோ ஒரு வகையான உந்துதலினால் அறிந்துகொண்டார் மற்றும் உண்மையான உடன்மேய்ப்பனாக, மந்தையின் நலனுக்கடுத்தவைகளில் கவனம் செலுத்தினார். அநேகமாக தானியேலின் தீர்க்கத்தரிசனம் மூலமாக மாபெரும் விசுவாச துரோகம் நேரிடவிருக்கின்றது என்றும், ஒரு மாபெரும் அந்திகிறிஸ்து அமைப்பை உருவாக்கிடுவதற்கு எதிராளியானவன் அனுமதிக்கப்படவிருக்கின்றான் என்றும் அப்போஸ்தலன் அறிந்திருந்தார்; இதையே அவர் பிற்பாடு தெசலோனிக்கேயாவிலுள்ள சபைக்கு எழுதியுள்ளார்; உள்ளூர் கண்காணிகள் தங்கள் ஸ்தானத்திற்குரிய பொறுப்பினை உணர்ந்துகொண்டு, விழிப்பாயிருக்க வேண்டுமென்று அப்போஸ்தலன் விரும்பினார். “மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்; வல்லமை, செல்வாக்கு முதலியவைகளுக்கான பேராசைகொண்டவர்களாக, இவர்கள் தங்களுடைய சொந்த முன்னேற்றத்திற்காக மந்தையினுடைய நலனுக்கடுத்தவைகளை வியாபாரம் பண்ணிடுவதற்கும் தயங்கமாட்டார்கள். அபாயத்திற்கான மற்றுமொரு காரணி – “உங்களிலும் சிலர் எழும்புவதாகும் – இவர்கள் தங்களுக்கென்று பின்னடியார்கள், ஆதரவாளர்கள் வேண்டுமென்ற பேராசையில், தங்களுக்கும் மற்றும் இவர்களால் தவறாய் வழிநடத்தப் படுகிறவர்களுக்கும் பாதகமாய் அமையும் தப்பறையான உபதேசங்களுக்குள்ளாக வழிநடத்திடுவார்கள்.

இவைகள் பற்றின அறிவானது, வெளியிலிருந்து வரும் ஓநாய்களுக்கு எதிராக மாத்திரமல்லாமல், தங்கள் மத்தியிலிருந்து எழும்புகின்ற பேராசைமிக்கவர்களுக்கும் எதிராக அவர்களைத் தொடர்ச்சியாக எச்சரிக்கையாய் இருக்கப்பண்ணிடும் – ஒருவரையொருவர் குறித்து விழிப்பாயிருத்தல் மாத்திரமல்லாமல், ஒவ்வொருவனும் மிகுதியான சுயமதிப்பு அல்லது பெரியவராகுவதற்கான மிகுதியான ஆசை எனும் விஷயங்களின் நிமித்தமான எதிராளியானவனுடைய இரகசியமான தாக்குதல்களுக்கு எதிராக விழித்திருந்து, தன்னுடைய சொந்த இருதயத்தை விசேஷமாய்க் காத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மத்தியிலான தனது நடக்கையை – தாழ்மையான சிந்தைக்கும் மற்றும் மந்தையினுடைய நலனுக்கடுத்தவைகளுக்கான வைராக்கியத்திற்குமான மாதிரியாகத் தன்னால் சுட்டிக்காட்ட முடிந்ததற்கு அப்போஸ்தலன் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்பதில் நமக்கு நிச்சயமே. “ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள் (அப்போஸ்தலர் 20:31). அப்போஸ்தலனுடைய வைராக்கியத்திற்கான இரகசியம் – தான் தேவனுடைய ஸ்தானாபதி என்றும், உடன்வேலையாளாக இருப்பதற்குத்தான், சிலாக்கியமடைந்துள்ள கர்த்தருடைய இந்த வேலையானது மிகவும் முக்கியமான ஒன்று என்றும் – அவ்வேலை முதலாவதாகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய பரிசுத்தவான்களின் இரட்சிப்பு மற்றும் பூரணப்படுத்துதல் தொடர்புடையதும் மற்றும் இறுதியில் இவர்கள் மூலமாய்ப் பூமியின் குடிகள் அனைத்தினுடைய ஆசீர்வதிக்கப்படுதல் தொடர்புடையதான வேலை என்றுமுள்ள உண்மைகளை அவர் உணர்ந்துகொண்டதேயாகும். ஒருவேளை அந்த மூன்று வருட காலப்பகுதியிலும் அப்போஸ்தலன் மந்தையினுடைய ஆவிக்குரிய நலன்களை அசட்டைப்பண்ணியிருந்திருப்பாரானால், அவரால் இப்படியானதொரு உரையை மூப்பர்களிடம் கொடுத்திருக்க முடியாது. அவர் ஒருவேளை பின்வருமாறு அதாவது: “உங்களோடுகூட நான் அற்பத்தனமான எத்தனை பொழுதுபோக்குகளில் கலந்துகொண்டிருக்கின்றேன் என்றும், அம்மாதிரியான பொழுதுபோக்கு விருந்துகளை ஒழுங்குப்படுத்த உதவியிருக்கின்றேன் என்றும் நினைவில் கொள்ளுங்கள்; நாம் சேர்ந்து சென்றதான, சிப்பி மீன் உணவு இராவிருந்துகள், பீச் மற்றும் கிரீம் விழாக்கள் (Peach and Cream Festivals ), நாடகக் கொட்டகைகள், காட்சி கூடாரங்கள், விடுகதை விளையாட்டுகள், வேடிக்கை விளையாட்டுகள் மற்றும் பணம் ஈட்டுவதற்கு நாம் போட்ட திட்டங்கள் முதலானவைகளை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தாரானால், அது ஏற்றதாய் இருந்திருக்காது. தான் இராஜாதிராஜனின் ஸ்தானாபதி என்ற உண்மையைக் குறித்து அப்போஸ்தலன் கொண்டிருந்த உணர்ந்துகொள்ளுதலானது எப்போதுமே அவருக்குக் காணப்பட்டது மற்றும் இதுவே – நீதியின் சார்பிலும் மற்றும் ஆவிக்குரியவைகள் சார்பிலுமான அவருடைய வேண்டுதல்களுக்கு, அதுவும் அற்பத்தனமானவைகளைக் காட்டிலும் மிகச் சிறந்ததான கண்ணீருடன்கூடிய அவரது வேண்டுதல்களுக்கு – ஆற்றலையும், சிரத்தையையும் கொடுக்கின்றதாய் இருக்கின்றது.

வரவிருக்கின்றதான பிரச்சனைகள் மற்றும் சோதனைகளின் இருளான காட்சியினின்று அப்போஸ்தலன் திரும்பி, அடுத்ததாக அவர் – தங்கள் இரட்சிப்பின் அதிபதியை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்கள் எதிராளியானவனால் தீங்கிழைக்கப்படாதபடிக்கு, அதுவும் இந்தத் தேவ கிருபையானது, அவர்களுக்குத் தேவனுடைய வார்த்தைகள் மூலம் வரும் என்று உறுதிப்படுத்திக்கொண்டு, சபையை விலைக்கொடுத்து சம்பாதிக்குமளவுக்கு அதை அன்புகூர்ந்தவரும், அதன் நலனுக்கடுத்தவைகளைக் கவனிக்கின்றவருமான கர்த்தரிடத்தில் சகோதரரை ஒப்புக்கொடுத்தார். கல்லூரிகளுக்கும், குருமார்களுக்கான பயிற்சிக் கல்லூரிகளுக்கும் மற்றும் உலகப்பிரகாரமான அறிவியலுக்கும் எதிராய் அப்போஸ்தலன் எதுவும் பேசவில்லை எனினும் எதிராளியானவனுடைய தந்திரங்களுக்கு எதிராய்க் கர்த்தருடைய ஜனங்களைக் காக்கும் வல்லமையைக் குறிப்பிடுகையில், அப்போஸ்தலன் தன்னுடைய உடன்வேலையாட்களிடம் மேற்கூறப்பட்டுள்ள கல்லூரிகள், அறிவியல் போன்றவற்றைச் சுட்டிக்காட்டாமல், மாறாக ஆவியின் பட்டயமாகிய, தேவனுடைய வார்த்தையையே குறிப்பிடுகின்றார். தற்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாமும், இந்தச் சாட்சியத்தை இருதயத்தில் வைத்துக்கொள்வோமாக; ஏனெனில் கர்த்தருடைய மந்தைகளைச் சத்துருக்கள் அனைத்துத் திசைகளிலும் இன்று தாக்கிக்கொண்டிருக்கின்றனர்; அறிவியல் எனும் ஓநாய்களானது மந்தையைத் தப்பவிடாமல், கர்த்தருடைய ஜனங்களின் விசுவாசத்தினை, நம்பிக்கையை, எதிர்ப்பார்ப்பினை மோதி உடைக்கின்றது மற்றும் இதற்குப் பதிலாக நிலைவரமான எதையும் திருப்பிக்கொடுப்பதுமில்லை தங்களது மேம்பட்ட கல்வியறிவு குறித்தும், தெய்வீக ஏவுதலுக்கும், ஏவுதல் இல்லாமைக்கும் இடையிலான வித்தியாசத்தை வேறுபடுத்திக் கண்டறியும் தங்கள் திறமை குறித்தும் பெருமையடித்துக் கொள்பவர்களும் மற்றும் ஆடுகளுக்காக எப்போதாகிலும் தேவனுடைய வார்த்தைகளினின்று புல்லை தெரிந்தெடுத்துத் தருவோமெனச் சொல்பவர்களுமான “உயர் விமர்சகர்கள், ஆடுகள் போஷாக்கைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதிகப்படியான கல்வியறிவு வேண்டுமென்று ஆடுகளுக்கு உறுதிப்படுத்துகின்றவர்களாய் இருக்கின்றனர்.

இன்றும்கூட நம் மத்தியிலேயே சிலர் எழும்பி, தங்களுக்குப் பின்னாக சீஷர்களை இழுக்க நாடிடும் இதே போக்கினை – அனைத்துத் திசைகளிலும் நாம் பார்க்கின்றோம்; மேலும் ஆடுகளுக்கான தற்காப்பு என்பது பூமிக்குரிய ஞானத்தில் காணப்படாமல், தேவனுடைய வார்த்தைகளிலும், திட்டத்திலும் அடையாளப்படுத்தப்படும் தேவனுடைய வல்லமையிலேயே காணப்படுகின்றது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். எபேசுவின் இந்த மூப்பர்களுக்கு அப்போஸ்தலன் கூறினதுபோலவே, தேவனுடைய வார்த்தைகளே – நம்மை உறுதியாய்க் கட்டியெழுப்புகிறதாகவும், “கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுத்தக்கூடியதாகவும், “பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் சுதந்தரத்தை” [R3173 : page 105] நமக்கு இறுதியில் கொடுக்கக்கூடியதாக இருப்பதை, அவர் நம்மிடமும் கூறுவதை நாம் கேட்க முடிகின்றது.

வேதவாக்கியங்களில் கர்த்தருடைய ஜனங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளதான சுதந்தரம் மற்றும் நித்திய பலன்கள் யாவும் “பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கே என்று – இவைகள் வேறு எந்த வகுப்பாருக்கும் வாக்களிக்கப்படவில்லை என்று இங்குக் கவனிக்கப்பட வேண்டும். நம்முடைய Watch Tower Society -இன் தொகுதி விநியோகிப்பவர்களில் ( Colporteurs ) ஒருவர் சமீபத்தில் நமக்குப் பின்வரும் சம்பவத்தை எழுதி அனுப்பியிருந்தார்: டாணின் தொடர் தொகுதிக்காக ( Volume ) முன்பணம் செலுத்தியிருந்த ஒரு ஸ்திரீக்குத் தொகுதியை விநியோகிக்கச் சென்றபோது, அந்த ஸ்திரீ ஆட்சேபணைத் தெரிவித்து, புத்தகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மறுத்து, இப்புத்தகமானது நித்திய சித்திரவதைக்கான நரகம் குறித்துப் போதிக்கின்றதான வேதவாக்கியங்களை மறுக்கின்றதென, தான் புரிந்துகொண்டுள்ளதாகக் கூறியிருக்கிறாள்; மேலும் இதற்கு மாறானவைகளையே தான் நம்புவதாகவும், அப்படி ஓர் இடம் இருக்க வேண்டும் என்பதாகவும் கூறியிருக்கிறாள். தொகுதி விநியோகிப்பவரோ, யார் இரட்சிக்கப்படுவார்கள் என்று அவள் நம்புவதாகக் கேட்டுள்ளார்; அதற்கு அவளோ: நம்முடைய இந்தப் பாடத்தில் அப்போஸ்தலனால் குறிப்பிடப்பட்டுள்ளதான “பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்தான் என்று பதிலளித்திருக்கின்றாள். தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்டுள்ள பரிசுத்தவான்களில் ஒருவளாக அவள் இருப்பதாக, அவள் கூறுகின்றாளா என்று தொகுதி விநியோகிப்பவர் கேட்டிருக்கின்றார். அவள் “இல்லை என்று பதிலளித்திருக்கின்றாள். அதற்கு அவரோ: “அப்படியானால் நீங்கள் நித்தியத்தைச் சித்திரவதையில் செலவழிக்க விருக்கின்றீர்களா? என்று கேட்டிருக்கின்றார்.

உடனடியாக அந்த ஸ்திரீ தவறான வாதத்தினுடைய ஆற்றலைக் கண்டுகொண்டு, புத்தகத்தை வாங்குவதாகக் கூறியிருக்கிறாள் மற்றும் பரிசுத்தமாக்கப்பட்ட வகுப்பாரில் அடங்கிடாத அனைவரும் நித்தியமான சித்திரவதைக்குள் கடந்துபோவார்களானால், முழுச்சந்ததியினுடைய எதிர்க்காலமே கொடூரமானதாக இருக்குமென்று கூறியிருக்கிறாள். நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையின்போது, பரிசுத்தமாக்கப்பட்டவர்களின் சுதந்தரம் இராஜ்யமாக இருக்கும் என்றும், அப்போது ஸ்தாபிக்கப்படும் இராஜ்யமானது தேவனைப் பற்றின தெளிவான அறிவினாலும், நமது கர்த்தராகிய இயேசுவின் மூலமாய்ப் பரிசுத்தமாக்கப்படுவதற்கேதுவான அவரது கிருபையையும், இரக்கத்தையும் மற்றும் ஆசீர்வாதத்தையும் மற்றும் நித்தியமான ஜீவனையும் ஏற்றுக்கொள்வதற்கான முழு வாய்ப்பினாலும், முழு மனுக்குலத்தையும் ஆசீர்வதிப்பதற்கான தெய்வீகப் பிரதிநிதியாகக் (இராஜ்யம்) காணப்படும் என்றும் நமக்குக் காண்பிக்கின்றதான தெய்வீகத்திட்டம் பற்றின தெளிவான அறிவில் நாம் எத்தகைய இளைப்பாறுதலைக் கண்டடைகின்றோம்.

அவர்களைத் தேவனுடைய வார்த்தைகளிடம் ஒப்புக்கொடுத்த பிற்பாடு, தான் அவர்களோடுகூடக் காணப்பட்டபோதுள்ள தனது சொந்த வாழ்க்கை முறைமையை, பரிசுத்தமாக்கப்பட்டுள்ள இருதயத்திலுள்ள சுவிசேஷத்தின் தாக்கத்திற்கான சரியான உதாரணமென – அவர்கள் பின்பற்றுவதற்கு நாடவேண்டியதென – சபையில் மூப்பர் மற்றும் கண்காணிக்கான சரியான மாதிரியென அப்போஸ்தலன் கவனத்திற்குக் கொண்டு வருகின்றார். இதைக்குறித்து இப்பொழுது அவரால் இந்தச் சகமூப்பர்களிடம் பேச முடிந்தது; ஆனால் இதைக்குறித்து எபேசு சபையில், தான் அவர்களுக்கு ஊழியஞ்செய்து கொண்டிருந்தபோது, சொல்ல தயக்கம் காண்பித்திருந்திருப்பார்; ஏனெனில் இப்படிப் பேசுவது சிலரால் தற்பெருமையடித்துக் கொள்வதாகக் கருதப்படும். எபேசுவிலுள்ள சபைக்கான தனது ஊழியத்தின் போது, அவர்களது வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும், வஸ்திரத்தையாகிலும் தான் இச்சிக்கவில்லை, மாறாக தன்னுடைய சொந்த கைகளாலேயே வேலை செய்துள்ளார் மற்றும் இப்படியாக அவர்களும் மூப்பர்களென (Presbyters ) மற்றும் கண்காணிகளெனப் ( Bishops, epicopos ) பலவீனரைத் தாங்கிடுவதற்கும், “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைப்பதற்கும், எல்லா விஷயத்திலும் தான் அவர்களுக்கு மாதிரியாய் இருந்துள்ளார் என்பதை இந்த மூப்பரும், கண்காணிகளுமான சகோதரர்கள் கவனிக்கச் செய்தார்.

இப்படியாக அப்போஸ்தலனால் சபைக்குரிய சரியான ஊழியக்காரனுக்கான மாதிரியாகத் தன்னைச் சுட்டிக்காட்ட முடிந்தது; காரணம் அவர் மாபெரும் தலையாகிய இயேசுவின் மாதிரியை மிகவும் கவனமாகப் பின்பற்றினவராயிருந்தார். வாங்குகிறது பாக்கியம்தான், ஆனால் கொடுக்கிறது என்பது அதனிலும் பாக்கியமானதாகும். தேவன் கொடுக்கிறதில் மாபெரியவராய் இருக்கின்றார்; நமக்குத் தொடர்ந்து கிருபைகளை அருளுகின்றவராய் இருக்கின்றார்; நல்லோருக்கு மாத்திரமல்லாமல், தீயோருக்கும் அருளுகின்றவராய் இருக்கின்றார் – அனைவருக்கும் மீட்கும்பொருளினை அவர் கொடுத்தார் மற்றும் ஏற்றகாலங்களில் இதற்குரிய சாட்சி விளங்கிவருகிறது. “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்ற நமது கர்த்தருடைய இந்த வார்த்தைகளானது, எந்த ஒரு சுவிசேஷபுத்தகங்களிலும் பதிவு செய்யப்படவில்லை. முனைவர். பிலிப்பு ஸ்காப் / Dr.Philip scorff நமக்குத் தெரிவிப்பதென்னவெனில்: “சுவிசேஷ புத்தகங்களில் தெய்வீக ஏவுதலின் பேரில் பதிவுசெய்யப்பட்டுள்ளவைகளைத் தாண்டி இயேசு பேசியுள்ளதாக, இருபது வார்த்தைகளின் சில பதிவுகள் நம் மத்தியில் வெளியிலிருந்து பரவி கடந்துவந்துள்ளது. இவைகளில் ஒன்றைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் இங்கு மேற்கோளிடுகின்றார் மற்றும் இதன் நம்பகத்தன்மை குறித்து நமக்கு எந்தச் சந்தேகமுமில்லை மற்றும் இது நம்முடைய அருமை மீட்பருடைய நடக்கைக்கு முழு இசைவுடனே காணப்படுகின்றது. அவர் தொடர்ந்து மற்றவர்களுக்காகக் கொடுத்து, கொடுத்து, கொடுத்துக்கொண்டுவந்த விஷயத்தில் பிதாவைப் பின்பற்றினவராகவே இருந்தார். தமக்கு எவ்வளவு சௌகரியம், சுகம் மற்றும் கனம் கிடைக்கும் என்று அவர் சுயநலத்துடன் பார்க்கவில்லை, நம் நிமித்தமாக அவர் புகழ் எதையும் தேடிக்கொள்ளவில்லை பூமிக்குரிய விஷயத்திலும் அதேசமயம் ஆவிக்குரிய விஷயத்திலும் மற்றவர்களுக்கு உதவி செய்யத்தக்கதாக தம்முடைய ஜீவனைத் தினந்தோறும் கொடுத்துவந்து, அவர் பெற்றிருந்த அனைத்தையும் நமக்காகக் கொடுத்துவிட்டவராக, இறுதியில் பலியைக் கல்வாரியில் நிறைவு செய்தார்.

கிறிஸ்துவினுடைய சபையின் மூப்பர்கள் அனைவரும், இயேசு மற்றும் அப்போஸ்தலன் பவுலினுடைய இந்த மேன்மையான முன்மாதிரிகளை முழுமையாய் இருதயத்திற்குள் எடுத்துச் செல்வார்களானால் மற்றும் தங்களையே முற்றிலும் மறக்குமளவுக்குச் சுவிசேஷத்தின் செய்தியினாலும், தேவனுடன் உடன் வேலையாட்களாக இருப்பதற்கான சிலாக்கியத்தினாலும் முழுமையாய் வைராக்கியமுடையவர்கள் ஆகுவார்களானால், இது இவர்களுக்கும் சரி, மந்தையின் நலனுக்கடுத்தவைகளைக் கவனிக்கவும், மந்தையைப் போஷிக்கவும் வேண்டி கர்த்தருடைய வழிநடத்துதலினால், பரிசுத்த ஆவியானது இவர்களைக் கண்காணிகளாக வைத்துள்ளதான கர்த்தருடைய ஜனங்களின் பல்வேறு சிறுசிறு கூட்டத்தாருக்கும் சரி, மாபெரும் ஆசீர்வாதமாய் அமையும். இன்று உண்மையுள்ள சகோதரர் யாருமில்லை என்று நாம் சொல்லவரவில்லை. இதற்கு மாறாகவே நாம் சொல்லுகின்றோம். ஆனால் நாம் அனைவரும் அதிகமதிகமாய் உண்மையுள்ளவர்களாகக் காணப்படத்தக்கதாகவும், அதிகமதிகமாய்த் தேவனுடைய அருமையான குமாரனின் சாயலுக்கொத்தச் சாயலை அடையத்தக்கதாகவும், சீயோனின் நன்மைக்கடுத்த விஷயங்களில் சுயத்தைப் பலிச்செலுத்தும் அளவிலான அர்ப்பணிப்புக்கொண்டிருக்கும் விஷயத்தில் அதிகமதிகமாய் மாபெரும் அப்போஸ்தலனைப் போலாகத்தக்கதாகவும், அப்போஸ்தலனுடைய கருத்தான புத்திமதியை இருதயத்தில் கொண்டிருப்பது நமக்கு நலமாயிருக்கும் என்றே நாம் சொல்ல வருகின்றோம்.

கூட்டத்தின் முடிவில், கப்பல் புறப்பட ஆயத்தமாயுள்ளது என்று அறிவிக்கப்பட்டபோது, அப்போஸ்தலன் எபேசுவிலிருந்து வந்துள்ள சகோதரருடன் ஜெபிப்பதற்கு முழங்காற்படியிட்டார்; அந்த ஜெபத்தின் குரல் நன்கு கற்பனை செய்து புரிந்து கொள்ளப்படலாம். பின்னர் விடைப்பிரிதல் நடந்தது மற்றும் சந்தேகத்திற்கிடமின்றி அந்த அருமையான சகோதரர்கள் அப்போஸ்தலனுடைய ஊழியங்கள் மூலமாக தேவன் தங்களுக்கு எத்துணை மாபெரும் ஆசீர்வாதங்களை அருளியுள்ளார் என்று முன்பில்லாத அளவுக்கு முழுமையாய் உணர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள் மற்றும் அப்போஸ்தலனைத் தாங்கள் இனி மீண்டுமாகப் பார்க்கப்போவதில்லை என்ற எண்ணமானது, அவர்களைத் துயரத்தில் ஆழ்த்தினது மற்றும் கப்பல் மட்டும் அவரோடுகூடச் செல்கையில் அவர்கள் அழுதார்கள்.

பிரிந்திருக்கும் காலங்களானது சீக்கிரத்தில் முடிவடைந்துவிடும் என்றும், நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் காலமாய் மாத்திரமல்லாமல், மீட்பரையும் கிறிஸ்து இயேசுவில் [R3173 : page 106] உண்மையுள்ளவர்களாய் இருந்தவர்கள் அனைவரையும் சந்திக்கும் காலமுமாய் இருக்கும் – ஒன்றிணைதலின் மற்றும் ஐக்கியத்தின் பாக்கியமான நித்திய காலங்கள் சீக்கிரமாய்த் துவங்கும் என்றுமுள்ள சிந்தனையினால், அப்போஸ்தலன் அவர்களைத் தேற்றியிருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. நமது கர்த்தரும்கூட இவ்விஷயம் குறித்து “கொஞ்சக்காலம் என்று குறிப்பிட்டார். இடையே காணப்பட்ட 18 நூற்றாண்டுகளானது, அன்று துவங்கி இப்பொழுதுவரை எவரேனும் வாழ்ந்திருப்பாரானால், அது அவருக்கு நீண்ட காலமாய்த் தோன்றியிருக்கும்; ஆனால் அவர்களது “நித்திரையானது சுயநினைவற்ற இடைவெளியாக இருப்பதினால், தேவன் இரக்கத்துடன் அவர்களது கண்களுக்குத் திரையிட்டு, “சீக்கிரமாய், “விரைவாய், “கொஞ்சக்காலம் என்பவற்றின் – தமது பெரிய கண்ணோட்டத்திலிருந்து மாத்திரம் அவர்களைத் தேற்றினது நல்லதே. ஆனால் இப்பொழுதோ அந்த இராஜ்யமானது, சமீபித்துள்ளது, வாசலருகே வந்துள்ளது; நம்முடைய இருதயங்களானது, இனிமேலும் “ஓ! ஆண்டவரே, எதுவரைக்கும்? என்று கதறுவதில்லை அல்லேலூயா! விடியலின் நட்சத்திரம் உதயமாகியுள்ளது – காலை இதோ வந்துள்ளது!