R3864 (page 308)
“ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கவும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப் போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.” (மல்கியா 3:2,3)
முழு மனுக்குலத்தின் மீது – விசேஷமாக கிறிஸ்தவ மண்டலத்தின் மீது வரவிருக்கின்றதான மகா ஆபத்துநாள் குறித்த வேதவாக்கியங்களினுடைய போதனையைப் புரிந்துகொண்டதின் விளைவாக, ஆசீர்வாதங்கள் நமக்குக் கடந்துவந்துள்ளது. யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் இல்லாத ஓர் ஆபத்துக்காலத்தைக் குறித்து வேதவாக்கியங்களானது, உண்மையிலேயே போதிக்கின்றதாய் இருக்கின்றது; மற்றும் அக்காலம் குறித்து இப்பொழுதும், நம்முடைய கர்த்தரால் தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டது போல், “”பூமியின்மேல் வருபவைகள் குறித்துப் பயந்து எதிர்ப்பார்த்திருக்கிறதினால், மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோகின்றது”” (லூக்கா 21:26). உலகத்தின் மீது திருடனைப் போன்றும், கண்ணியைப் போன்றும் கடந்துவருகின்றதான இந்த ஆபத்துக்காலமானது, நம்மீது இப்படியாகக் கடந்துவரவில்லை என்பதினாலும், அதன் விவரங்கள் அநேகவற்றையும், மகிமையான விளைவையும், பரலோகத்தின் கீழ்த் தேவராஜ்யம் ஸ்தாபிக்கப்படுதலையும் நாம் விசுவாசத்தினால் ஏற்கெனவே பார்த்து வருகின்றோம் என்பதினாலும் நாம் களிகூருகின்றோம். உலகத்தின்மீது
கடந்துவருகின்றதும், சில விதங்களில் நாம் தப்புவிக்கப்படுவோம் என்று நம்மால் எதிர்ப்பார்க்கப்படுகின்றதுமான இந்த மாபெரும் ஆபத்தானது, கர்த்தருடைய ஜனங்கள் சிலரின் மனதின் கவனத்தை ஈர்த்துள்ளப்படியால், இது சபைக்கான விசேஷித்த மற்றொரு வகையான சோதனையினை அவர்களது கவனத்தினின்று மறைத்துள்ளது; சபைக்கான இந்த விசேஷித்த சோதனையானது, உலகத்திற்கான ஆபத்துநாள் வருகிறதற்கு முன்னதாக, நம்மேல் கடந்துவந்து, நம்மைப் பரீட்சித்து, நம்மை நிரூபித்திட வேண்டும். சபையின் மீதான இந்த ஒரு சோதனை நாள்தான், தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கான இந்த ஒரு விசேஷித்த பரீட்சைத்தான், நம்முடைய ஆதார வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் – SUB HEADING
லேவி வீட்டார், ஆசாரிய கோத்திரமானது, இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய விசுவாச வீட்டாருக்கு நிழலாய் இருக்கின்றனர். லேவியர்கள் மத்தியில் ஆசாரியர்கள் என்பவர்கள் உயர் வகுப்பாராய் அல்லது முறைமையானவர்களாய் இருப்பதுபோல, இராஜரிக ஆசாரியக்கூட்டத்தார், கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்டவர்கள், இந்தச் சுவிசேஷ யுகத்தின் பரிசுத்தவான்கள், ஆவிக்குரிய லேவியர்களாகிய, விசுவாச வீட்டார் மத்தியில் உயர் வகுப்பாராய் இருக்கின்றனர். ஆகையால் தீர்க்கத்தரிசி வாயிலாக கர்த்தர் லேவி வீட்டாரின் பரீட்சை மற்றும் சுத்திகரித்தல் குறித்துக் கூறுகையில், அது “”விசுவாச வீட்டார்”” யாவரையும், “”சிறுமந்தையினரை”” மற்றும் “”திரள் கூட்டத்தாரை”” உள்ளடக்குகின்றதாய் இருக்கும். இந்த யுகத்தினுடைய முடிவானது, முழு விசுவாச வீட்டாரையும் கர்த்தர் சோதித்துப்பார்க்கும் காலமாய் இருக்கின்றது; மற்றும் சோதித்துப் பார்த்தலானது வீட்டாரின் மேல்மட்டத்தினின்று துவங்குகின்றது, பரிசுத்தவான்களிடமிருந்து துவங்குகின்றது; ஆனால் ஒவ்வொரு அர்ப்பணிக்கப்பட்டவர்களிடமும் கடந்துவரும். புடமிடுகிறவரின் பற்றி எரிகிற அக்கினிக்கு உட்படுத்தப்படும் இரண்டு வகுப்பார், பொன் மற்றும் [R3865 : page 308] வெள்ளியினால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். கர்த்தருக்காகவும், சத்தியத்திற்காகவும், சகோதரருக்காகவும் தங்கள் ஜீவியங்களைத் தியாகம் பண்ணிடும் தங்களது அன்பிலும், வைராக்கியத்திலும், கர்த்தருக்கான தங்களது நேர்மையினை விசேஷமாய் நிரூபிப்பவர்களைப் பொன் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இவர்களே பொன் வகுப்பாராய் இருக்கின்றனர் மற்றும் இவர்கள் மணவாட்டி வகுப்பாரென, பூமியின் குடிகள் யாவற்றையும் ஆசீர்வதிப்பதற்கென மாபெரும் இராஜாதி இராஜனோடும், கர்த்தாதி கர்த்தனோடும், அவரது உலகளாவிய சாம்ராஜ்யத்தில், அவரோடுகூட உடன்சுதந்தரராய் இருப்பது இவர்களது பங்காய் இருக்கும். நம்முடைய ஆதார வசனத்தில் இடம்பெறும் வெள்ளியினால் அடையாளப்படுத்தப்படுகின்றதான மற்ற வகுப்பார், அவர் பார்வையில் குறைந்த மதிப்புடைய வகுப்பாராய் இருக்கின்றனர்; வெளிப்படுத்தல் விசேஷத்தினுடைய 7-ஆம் அதிகாரத்தில் பேசப்படுகின்றதான இந்தத் திரள்கூட்டத்தினர், 45-ஆம் சங்கீதத்தில், மகிமையின் இராஜாவினுடைய முன்னிலையில் அழைத்துக் கொண்டுவரப்படுகின்றதான மணவாட்டியின் “”பின்னாலே செல்லும், அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள்”” என்று கூறப்பட்டுள்ளனர்.
“”அவர் சோதித்துப் பார்க்கையில் நிலைநிற்பவன் யார்?”” என்ற வார்த்தைகளானது, நம்முடைய இருதயத்தை நடுங்கப்பண்ணுகிறதென்றால், பின்வரும் சிந்தனையால் நமக்குத் துயர் தணிகின்றது; அதாவது: சோதித்துப்பார்த்தலானது மிகவும் கடுமையாயும், மிகவும் ஊடுருவி சோதிக்கிறதாயும் இருப்பினும் – அக்கினியின் சோதனையானது களிம்பை முற்றிலுமாய்ப் பிரித்து, பொன்னையும், வெள்ளியையும் சுத்திகரிக்கிறதாய் இருப்பினும் – இப்படியாகச் சோதித்துப் பார்க்கின்றவர், இப்படியாகச் சோதிக்கின்றவர், இப்படியாய்ச் சுத்திகரிக்கின்றவர், இப்படியாகப் புடமிடுகின்றவர், தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை வாங்கினவரும், தம்முடைய அன்பையும், பரிவையும் நமக்கு நிச்சயப்படுத்தினவருமான நமது கர்த்தராகவும், ஆண்டவராகவும் இருக்கின்றார்; இவர் நம்முடைய திராணிக்குமேல் நாம் சோதிக்கப்பட நம்மை விடுவதில்லை என்றும், சோதனையோடுகூடத் தப்பித்துக் கொள்ளும் [R3865 : page 309] போக்கையும் அருளுவார் என்றும், அப்போஸ்தலனிடத்தில் வாக்களித்துள்ளவராய் இருக்கின்றார்; மற்றும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாகிய நாம் தேவனிடத்தில் அன்புகூருகிறபடியால், சகலமும் நம்முடைய நன்மைக்கு ஏதுவாய் நடக்கும் என்றும் நமக்கு நிச்சயமளித்தவராய் இருக்கின்றார் (1 கொரிந்தியர் 10:13; ரோமர் 8:28).
எதிர்ப்பார்க்காத திசைகளிலிருந்து சோதனைகள் – SUB HEADING
விசுவாசத்திற்கான மற்றும் அன்பிற்கான மற்றும் கொள்கைக்குரிய அர்ப்பணத்திற்கான மற்றும் கர்த்தருக்கும், சகோதரருக்குமுரிய நேர்மைக்கான ஒவ்வொரு சோதனையும் எப்படி வருமென நாம் முன் கூட்டியே அறிந்திருப்போமானால், அதை எதிர்க்கொள்ள நாம் ஆயத்தமாய்க் காணப்படுவோம் மற்றும் இப்படி இருக்குமானால், சோதனையானது கடுமையற்றதாக இருக்கும் மற்றும் இதற்கேற்ப நம்முடைய தாழ்மையும், பொறுமையும், அன்பும் குறைவாகவே சோதிக்கப்பட்டிருக்கும். ஆனால் கர்த்தர் இவைகள் விஷயத்தில் நம்மைச் சோதித்திட விரும்புகின்றார்; ஆகையால் எதிர்ப்பார்க்காத திசைகளிலிருந்து நமக்கான சோதனைகளானது பொதுவாக கடந்துவருகின்றது. இது சோதனையை மிகவும் கடுமையானதாக்கி, நம்முடையஇருதயங்களினுடைய உண்மையான உணர்வுகளை நன்றாய் நிரூபிக்கின்றதாய்இருக்கின்றது. சுயசித்தம், தனிப்பட்ட குறிக்கோள், பெருமை – போன்ற களிம்புகள் யாவற்றையும் நம்மிடமிருந்து சுத்திகரிக்கக் கர்த்தர் விரும்புகின்றார்; தமக்கும் மற்றும் தம்முடைய குணலட்சணத்தில் வெளிப்படுகின்ற நீதியின் கொள்கைக்குமான நேர்மையினை நம்மிடத்தில் வளர்த்திட அவர் விரும்புகின்றார் மற்றும் தம்முடைய வார்த்தைகள் வாயிலாக நமக்குப் புத்திமதி கூறுகின்றார்.
பொதுவான கிறிஸ்தவ மண்டலத்தினை ஏறெடுத்துப் பார்க்கையில், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையினுடைய பக்கத்தில், “”ஆயிரம்பேர் விழுவார்கள்”” என்று தீர்க்கத்தரிசி கூறுவது நமக்குக் கேட்கின்றது. நாம் விழுகை நடந்துகொண்டிருப்பதை, மீட்பராகிய கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தினின்று விழுந்துகொண்டிருப்பதை மற்றும் பரிணாமம், உயர் விமர்சனம், கிறிஸ்தவ விஞ்ஞானம் முதலானவைகளுக்குள் விழுந்துகொண்டிருப்பதைக் காண்கின்றோம். ஆனால் நாம் இப்பொழுது வீட்டை, சரீரத்தின் அங்கத்தினர்களை, அதாவது இவர்களில் யார் நம்முடைய நாட்களின் சோதனைகளில் நிலைநிற்க முடியும்?”” என்று காணும்படிக்கு நாம் உற்றுக் கவனிக்கின்றோம். “”யார் நிலைநிற்கக்கூடும்?”” என்று அப்போஸ்தலன் கேட்கின்றார் (வெளிபடுத்தல் 6:17). “”அவர் சோதித்துப் பார்க்கையில், நிலை நிற்பவன் யார்?”” என்று நம்முடைய ஆதார வசனத்தில் தீர்க்கத்தரிசி கேட்கின்றார். பரிசுத்தவான்கள் யாவருக்குமான சோதனை விஷயத்தில், சோதித்துப் பார்த்தலானது – மிகக் கடுஞ்சோதனையாக இருக்கும் என்பதே சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி.
கர்த்தருடைய கிருபையுள்ள ஏற்பாட்டினால், வாட்ச் டவரானது, அறுவடை களத்தின் மீது அத்தகையதொரு பார்வையைக் கொண்டிருப்பதினால், அஞ்சல் வாயிலாக, பயண ஊழியர்கள் வாயிலாக, தொகுதி விநியோகிப்பவர்கள் வாயிலாக கர்த்தருடைய ஜனங்களாகிய சிறுமந்தையினர் யாவரிடத்திலும் அத்தகையதொரு தொடர்பினைக் கொண்டிருப்பதினால், அநேகமாக மற்றவர்களைக் காட்டிலும் எங்களால் மாபெரும் புடமிடுகிறவரின் நெருப்பானது ஏற்கெனவே பற்றி எரிந்து கொண்டிருப்பதையும், பொன்னும், வெள்ளியும் சோதித்துப் பார்க்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் உய்த்துணர முடிகின்றது. சிலர் இவ்வேளையின் சோதனைகளில் நன்றாய் நிற்கக் கூடாமல் போவதை அவ்வப்போது காண்கையில் ஓ! அது எத்துணை வேதனையை எங்களுக்குத் தருகின்றதாய் இருக்கின்றது! இப்பொழுது சோதனையின் சூளையில் காணப்படும் கர்த்தருடைய அருமையானவர்கள் யாவரையும் நாம் அன்புகூருகின்றோம்; புடமிடுகிறவராகிய கர்த்தர் தாமே அவர்களை அதிகமாய் அன்புகூருகின்றார் என்பதிலும் நமக்கு நிச்சயமே. பெலவீனங்களையும், நோக்கத்திற்கு நேர்மையற்று இருப்பதையும், பெயருக்காகவும், கீர்த்திக்காகவும் அல்லது ஸ்தானத்திற்காகவும் குறிக்கோள் கொண்டிருப்பதையும், பெரியவர்களாகிடுவதற்கான விருப்பம் இருப்பதையும், தேவனுடைய சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆண்டிடுவதற்குரிய மனப்போக்கினைக் கொண்டிருப்பதையும் நாம் கண்டுகொள்கையில், இவைகளைக் கண்டு நாம் மனவேதனை அடைவோமானால், வருந்துவோமானால், சிலரில் ஏமாற்றமடை வோமானால், மாபெரும் புடமிடுகிறவர் அக்கறையற்றவராக இருப்பார் என்று நாம் எண்ணக்கூடுமோ? நிச்சயமாக இல்லை! அவர் தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார் என்று அவரைக்குறித்து எழுதப்பட்டுள்ளது; மற்றும் பதிவுகளை வைத்துப் பார்க்கையில், அவர் மிகவும் பொறுமையோடு காணப்பட்டார் மற்றும் சுயநல நாட்டமுள்ள, பேராசையுள்ள, சத்தியத்தினை விற்ற, கர்த்தரை விற்ற யூதாசை தறித்துப்போடுவதில் மெதுவாகவே செயல்பட்டார் என்று நாம் பார்க்கின்றோம். எந்தளவுக்கு ஆண்டவருடைய குணலட்சணதையும், சாயலையும் அடைகின்றோமோ, அப்போது வழிவிலகிப் போகிறவர்கள் அனைவரிடத்திலும் நாம் மிக அனுதாபம் உடையவர்களாய்க் காணப்படுவோம். இப்படி வழிவிலகிப் போகிறவர்கள், சீர்த்திருந்திவிடவில்லையெனில் இவர்கள் நமது கர்த்தரினாலும், அப்போஸ்தலரினாலும் கூடச் சுட்டிக்காண்பிக்கப்பட்டது போல் “”அக்கினியிலகப் பட்டு தப்புகிற”” திரள்கூட்டத்தின் அங்கத்தினர்களாகக் காணப்பட்டாலும், இவர்கள் நிச்சயமாய்ச் சரீரத்தினுடைய அங்கத்துவத்திலிருந்து தள்ளுண்டுபோவார்கள் (1 கொரிந்தியர் 3:15).
நீடிய சாந்தத்துடனும், பொறுமையுடனும் கடிந்துகொள்ளுங்கள் – SUB HEADING
இரண்டு காரணங்கள் நிமித்தமாக, ஆபத்தில் காணப்படுவதாக தோன்றும் அனைவருக்கும் நாங்கள் கடிதம் எழுதுவது கூடாத காரியமாய் இருக்கின்றது.
(1) நேரம் போதுமானதாய் இல்லை இவ்வேளைக்கான மற்றக் கடமைகளும் காணப்படுகின்றன;
(2) ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய வசனத்திற்குச் செவிக்கொடுக்க மாட்டார்களெனில், ஒருவேளை அவர்கள் இயேசு மற்றும் அப்போஸ்தலர்களின் மற்றும் மோசேயின் மற்றும் தீர்க்கத்தரிசிகளின் வார்த்தைகளுக்குச் செவிக்கொடுக்க மாட்டார்களெனில், அவர்கள் எங்கள் வார்த்தைகளுக்குச் செவிக்கொடுப்பார்களென்று நாம் எதிர்ப்பார்த்திட முடியாது. ஆகையால் நாங்கள் கூறுபவைகள், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாக இருப்பினும் இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனையாக இருக்குமென நாம் நம்புகின்றோம் என்றாலும், முன்னே சொல்லப்பட்டது போன்ற எச்சரிப்பின் வார்த்தைகளை அவ்வப்போது கொடுப்பது மிகவும் சரியான வழிமுறையாக இருக்குமென எங்களுக்குத் தோன்றுகின்றது.
விநோதமாய்த் தோன்றிடலாம் – எனினும் கடந்த காலங்களிலுள்ள பதிவுகள் யாவற்றுடன் முழு இசைவாய்க் காணப்படுகிறதென்னவெனில் – இந்தப் பற்றியெரிகிற சோதனைகளும், இந்தப் புடைத்தெடுத்தல்களும், அநேகம் சந்தர்ப்பங்களில் மந்தையினை வழி நடத்துபவர்கள் மத்தியிலேயே மிகுந்த களிம்பைக் கண்டுபிடிக்கின்றதாய்த் தெரிகின்றது. இதற்குக் காரணம், அநேகமாக இவர்கள் மிகவும் கவனத்தினை ஈர்க்கும் நிலைமையில் காணப்படுகின்றனர்; இவ்வளவு பெரிதான முதன்மையான நிலைமையில் காணப்படாத அநேகர் உண்மையில் விழுந்து, வெந்துபோய், “”நஷ்டமடைந்து”” மற்றும் “”அக்கினியிலகப்பட்டுத் தப்பினது”” போன்று அநேகமாக இவர்களும் இருப்பார்கள். கர்த்தர் மாத்திரமே இருதயத்தை ஆராய முடியும் மற்றும் எண்ணங்களையும், நோக்கங்களையும் வகையறுக்க முடியும் மற்றும் இப்பொழுது லேவி வீட்டாரின், விசுவாச வீட்டாரின் ஒவ்வொரு அங்கத்தினனையும் தூய்மைப்படுத்துவதும், சுத்திகரிப்பதும், புடமிடுவதும் கர்த்தருடைய சித்தமாய் இருக்கின்றது; மற்றும் நம்முடைய நாட்களிலுள்ள பற்றியெரிகிற சோதனைகளானது, தெய்வீக ஏற்பாடுகளுக்கு இசைவாய் வேலையைக் கர்த்தர் நிறைவேற்றத்தக்கதான, அவரது ஏற்பாடுகளாக, அவரது தூற்றுக்கூடைகளாகக் காணப்படுகின்றது.
டாண் 6-ஆம் தொகுதியானது, தொகுதி வரிசையிலுள்ள மற்றத் தொகுதிகள் போன்று, அதன் ஏற்றகாலத்தில் வந்தது என்று நாம் நம்புகின்றோம் மற்றும் அதைச் சிலவிதங்களில் இவ்வேளைக்கான புடமிடும் நெருப்புகளை எரியப்பண்ணிடும், காற்று ஊதும் பூமிக்குரிய துருத்தி குழாயெனக் கர்த்தர் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்பதிலும் ஐயமில்லை. மற்றத் தொகுதிகள் போன்று, அந்தத் தொகுதியிலும் (Volume) நாம் நம்முடைய சொந்த கருத்துக்களை முன்வைப்பதற்கல்ல, மாறாக வசனத்தினுடைய போதனைகளையே முன்வைத்திட முயற்சித்தோம் மற்றும் இது சில தருணங்களில் – சுத்த இருதயத்தினின்று புறப்படும் அன்பும், சபையினுடைய மகிமையான சுயாதீனங்கள் குறித்த உணர்ந்து கொள்ளுதலும் மாத்திரமே காணப்பட வேண்டிய சில வழிநடத்துபவர்களின் இருதயங்களில் கோபத்தின் ஆவியினை, மனக்கசப்பினை எழுப்பியுள்ளதாகத் தெரிகின்றது. வழிநடத்துபவர்கள் என்பவர்கள் மந்தையினுடைய எஜமான்களல்ல என்றும், இறுமாப்பாய் ஆளும் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளும் எந்த வழிநடத்துனனும், கிறிஸ்துவிலுள்ள தன்னுடைய சொந்த உறவு நிலையை அபாயத்திற்குள்ளாக்குவதோடு, கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையில் மந்தை முன்னேறுவதற்குத் தடைப்பண்ணுகிறவனாய் இருந்து விடுகின்றான் என்றுமுள்ள உண்மையினைச் சகோதரருடைய கவனத்திற்குக் கொண்டுவரும் கடமையையே நாம் செய்தோம். கர்த்தருடைய மந்தையிலுள்ள யாரேனும், இத்கைய பேராசையுள்ள வழிநடத்துபவர்களோடு ஒத்துழைப்பார்களெனில், இவர்கள் அவர்களுக்குத் தீங்குபண்ணுபவர்களாகவும் மற்றும் தங்களுக்கும், தங்களோடுகூட வேதவார்த்தைகளின் ஆராய்ச்சியில் இணைந்துள்ள மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்கின்றதான அங்கீகரிக்கப்படாத அளவுக்கு மீறின மரியாதையினை அளிக்கின்றவர்களாகவும் இருப்பார்கள்.
தவறுவது என்பது மனுஷீகம், மன்னிப்பது என்பது தெய்வீகம் – SUB HEADING
“”தவறுவது என்பது மனுஷீகம்”” என்று எழுதப்பட்டுள்ளது மற்றும் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டிருப்பினும், நாம் அனைவரும் புதிய சுபாவம் எனும் பொக்கிஷத்தினை மண்பாண்டங்களிலே பெற்றிருப்பதினால், நாம் தவறு செய்திடுவதற்கு ஏதுவானவர்களாய் இருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். இதை உணர்ந்தவர்களாக, சபையினால் நியமிக்கப்படாமல் அல்லது தேவனுடைய சபையில் வழிநடத்தும் ஸ்தானத்தினைத் தங்களுக்கென எடுத்துக்கொள்ளும் மனநிலையிலுள்ள அல்லது தாங்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிற்பாடு, மற்றவர்களுடைய உரிமையினை அலட்சியம்பண்ணிடும் மனநிலையிலுள்ள வழிநடத்துனர்களை நாம் கடினமாயும், இரக்கமற்றும் கையாண்டிடக்கூடாது. எனினும் சபையார் அன்பாயும், நிதானமாயும், உறுதியாயும், அதன் காரியங்கள் அனைத்தையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவேண்டும் மற்றும் சபையாரின் வாக்கானது, அர்ப்பணிக்கப்பட்டவர்களின் வாக்காய் இருக்கின்றதென வழிநடத்துபவர்கள் அடையாளம் கண்டுகொள்ளத்தக்கதாகச் சபையார் பார்த்துக்கொள்ள வேண்டும். இது அனைவருக்கும் அனுகூலமாய் இருக்கும்; அதாவது இது வழிநடத்துபவரைத் தாழ்மைக் கொண்டிருக்க செய்யும், தான் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் ஓர் அங்கத்தினன் மாத்திரமே என்றும், தான் கர்த்தரின் வழிநடத்துதலின்பேரில் சபைக்கு ஊழியம் புரிகின்றான், காரணம் அவர்களுக்கு தான் ஊழியம் புரிய சபையார் விரும்புகின்றனர் மற்றும் அதைக் கர்த்தருடைய சித்தமென, தான் கருதுகின்றான் என்றும் அவரை நினைவில் கொண்டிருக்கச் செய்திடும். [R3865 : page 310] இது இறுமாப்படைவதிலிருந்தும், மனமேட்டிமைக் கொள்வதிலிருந்தும், சபையாரை “”என்னுடைய ஜனங்களென,”” “”என்னுடைய சபையென,”” “”என்னுடைய சபையாரென,”” “”என்னுடைய வேலையென”” அகங்காரமாய்ப் பேசுவதிலிருந்தும் வழிநடத்துபவரைக் காத்துக்கொள்ள உதவிடும். இது சபையாரை, “”கர்த்தருடைய ஜனங்கள்,”” “”கர்த்தருடைய சபை,”” “”கர்த்தருடைய சபையார்,”” “”கர்த்தருடைய வேலை”” என்றும், சபையின் ஊழியக்காரனாய் இருப்பது என்பது ஒரு கனம், ஒரு கிருபை என்றும், அதன் அதிபதியாக, அதன் “”அதிகாரியாக”” இருப்பது தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டதல்ல என்றும் அடையாளம் கண்டுகொள்ள அவனுக்கு உதவிடும்.
இப்படிச் செய்வது என்பது சபையாருக்கும்கூட நன்மை பயக்கின்றதாய் இருக்கும்; அதாவது இவர்களது பிரதிநிதியென, சபையாருக்கு ஊழியக்காரனாக அல்லது வழிநடத்துபவராக ஒருவரை இவர்கள் ஆதரித்து, அங்கீகரிப்பதற்கு ஏற்ப, கர்த்தருக்கும் அவரது நோக்கத்திற்குமான இவர்களது பொறுப்பு இருக்கும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றதாய் இருக்கும். வழிநடத்துபவரினால் செய்யப்படும் தவறுகள் எல்லாம் அச்சபையாருடைய பெரும்பான்மையானவர்களின் குற்றமாயிருக்கும் மற்றும் தங்கள் பொறுப்பினை இவர்கள் உணர்ந்துகொள்ளுதல் என்பது, இவர்களது குணலட்சணங்கள் பெலப்படுவதையும், இவர்களது மனங்கள் தெளிவாகுவதையும் மற்றும் இங்கும் மற்றும் இனிமேலும் உள்ள கர்த்தருடைய ஊழியத்திற்கு இவர்கள் ஆயத்தப்படுவதையும் குறிக்கின்றதாய் இருக்கும். தேவ செய்தி கொடுக்கையில், சபையாரை முன்னிலை விதிப்படி, உதாரணத்திற்கு “”நீங்கள் இதைச் செய்யக் கூடாது”” என்று மூப்பர் ஒருவர் சொல்வதைக் கேட்பதே காதிற்கு எரிச்சலூட்டுதலாய் இருந்திட வேண்டும். மூப்பர்கள் யாவரும், சபையில் அங்கீகரிக்கப்பட்ட போதகர்கள் யாவரும், எவ்விதத்திலும் வழிநடத்துபவர்களாய்க் காணப்படுபவர்கள் யாவரும், பெயர்ச்சபையில் குருமாரை ஒரு வகுப்பாராகவும், மற்றொரு வகுப்பாரைச் சாதாரண வகுப்பாராகவும் அடையாளங்கண்டு கொள்ளும் வழக்கத்தைப் போன்று, சபையாரைத் தங்களிடமிருந்து வேறுபட்ட ஒரு வகுப்பாராகப் பேசிடாதபடிக்குப் பார்த்துக் கொள்வதற்குக் கவனம் செலுத்திட வேண்டும். மாறாக வழி நடத்துபவர் புத்திமதியினைச் சபையாருக்குக் கூறுகையில், தன்னையும் உள்ளடக்கிக் கூறுவதே தாழ்மையான முறைமையாக, சிறந்த முறைமையாகக் காணப்படும்; உதாரணத்திற்கு “”நாம் இக்காரியங்களைச் செய்திடக் கூடாது”” என்று சொல்லுவதாகும்.
அன்பு நியாய்ப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது – SUB HEADING
நம் அனைவரின் இருதயங்களிலும், அன்பின் ஆவியானது பெரிதும் வளர்ந்திருக்குமானால், இவ்விஷயம் குறித்து எந்த ஒரு கண்ணோட்டத்திலும் நாம் ஆராய்வதற்கு அவசியமிராது; ஆனால் ஆவியின் கனிகளில் நாம் பகுதியளவே வளர்ச்சியடைந்திருக்கின்றோம்; ஆகையாலதான் நமக்குச் சிரமம் காணப்படுகின்றது; மேலும் ஒரே சரீரத்தின் சகஅங்கத்தினர்களென நம்முடைய உறவானது நாம் முடிந்த மட்டும் யாவருக்கும் உதவிகரமாய்க் காணப்படத்தக்கதாக, ஒருவருக்கொருவர் உதவுவது, மகா முக்கியமானதாய்க் காணப்படுகின்றது. ஒரு வழிநடத்துனனுடைய நடவடிக்கைத் தொடர்பாக, நம்முடைய இருதயங்களில் ஏதேனும் குறைகுற்றத்தின் எண்ணம்