நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3089 (page 307)

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்

Though Ye be Established

“இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும்,நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.” – (2 பேதுரு 1:12)

இங்கு எவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது? நிச்சயமாகவே சகல ஜாக்கிரதையுள்ளவர்களாய், விசுவாசத்தோடே நற்பண்பினையும் / தைரியத்தையும் (மனோதிடத்தையும்), தைரியத்தோடே / நற்பண்போடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும் (சுயக்கட்டுப்பாட்டையும்), இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குவதற்கான அவசியமே ஆகும். ஏனெனில் இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் ஒருக்காலும் இடறி விழுவதில்லை இவ்விதமாய் நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய இராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பூரணமாய் அளிக்கப்படும் (வசனங்கள் 5-11).

சத்தியத்தில் உறுதிப்பட்டிருத்தல் என்பது குறிப்பது என்னவெனில், நாம் சத்தியத்தினைக் கவனமாய் ஆராய்வதையும், அதை “வேதாகமத்தைக் கொண்டும், சாட்சியாகமத்தைக் கொண்டும்” நாம் முழுவதுமாக உறுதிப்படுத்திக்கொள்வதையும் [ஏசாயா 8:20] மற்றும் இதன் விளைவாக அதன் உண்மைத்தன்மைக் குறித்து நாம் நம்பிக்கை அடைவதையும், இப்படியாய் நமது விசுவாசமானது உறுதியாயும், அசைவுறாததாயும் ஆகுகின்றது என்பதாகும்; அதாவது நாம் யாரை நம்புகின்றோம் என்பதை நாம் அறிவோம்; கர்த்தர் நல்லவர் என்பதை நாம் ருசித்திருக்கின்றோம், கண்டிருக்கின்றோம்; அவருடனான ஐக்கியத்தின் இன்பங்களை அனுபவித் திருக்கின்றோம்; யுகங்களுக்கடுத்த அருமையான தெய்வீகத் திட்டத்தில் வெளிப்படுகின்றதான கிருபையின் பரிபூரணத்தைக் குறித்த சந்தோஷமான உணர்ந்துகொள்ளுதலுக்கு வழிநடத்தப்படுவதற்கு ஏதுவான அளவுக்குத்தக்கதாய், அவருடைய தேவபக்தியின், விசுவாசத்தின், சாந்தத்தின் ஆவியில் பங்கெடுத்துள்ளோம்; மேலும் அந்தத் திட்டத்தினுடைய பல்வேறு அம்சங்களைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டதோடல்லாமல், இன்னுமாக நியமிக்கப்பட்ட காலங்களில், அதன் மகிமையான பலனானது முழுமையாய் அடையப்பெறுவதற்கு ஏதுவான அதன் பல்வேறு நடவடிக்கைகள் யாவற்றின் அவசியத்தையும் மற்றும் நியாயத்தையும்கூடப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம். இதுதான் தற்கால சத்தியத்தில் உறுதிப்பட்டிருத்தலாகும். இது உண்மையில் மிகப் பாக்கியமான நிலைமையாகக் காணப்பட்டு அதனோடுகூட, உலகத்தால் கொடுக்க முடியாததும், எடுத்துப்போட முடியாததுமான அத்தகையதொரு சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டு வருகின்றதாய் இருக்கின்றது.

ஆனால் நாம் இப்படியாகத் தற்கால சத்தியத்தில் உறுதிப்படுத்தப் பட்டிருந்தும், நாம் அழைக்கப்பட்டுள்ளதான உயர் ஸ்தானத்திற்கான நம்முடைய தெரிந்துகொள்ளுதலானது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை நாம் மனதில் கொண்டிருப்பது அவசியமாய் இருக்கின்றது. நம்முடைய பரம அழைப்பிற்கான பந்தையப்பொருளுக்குரிய பந்தயமானது இன்னமும் நம்முன் இருக்கின்றது மற்றும் நாம் இன்னமும் அநேகம் தந்திரமுள்ள மற்றும் வல்லமையுள்ள சத்துருக்களினால் சூழப்பட்டிருக்கும் சத்துருவின் நாட்டில்தான் காணப்படுகின்றோம்; ஆகையால் நாம் வெற்றியடைய வேண்டுமெனில், “நம்முடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், – தப்பறையின் மற்றும்
மூடநம்பிக்கையின் மற்றும் உடன்பிறந்த பாவங்களின் – அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் (தேவனுடைய சத்தியமானது) தேவபலமுள்ளவை களாயிருக்கிறது என்பதை நினைவில்கொண்டும் மற்றும் “மாம்சத்தோடும், இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு என்பதை நினைவில்கொண்டும், நாம் “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தினைப் போராடிட வேண்டும் (2 கொரிந்தியர் 10:4; எபேசியர் 6:12).

நமக்கு முன்பாய்க் காணப்படும் போர் குறித்தும், நமக்கான சோதனைகளுடைய தந்திரம் குறித்தும், மாம்சத்தினுடைய பெலவீனம் குறித்துமான – இந்த உண்மைகளின் கண்ணோட்டத்தில்தான் – உண்மையுள்ள அப்போஸ்தலனாகிய பேதுரு – கிறிஸ்தவ கிருபைகளை உருவாக்கி வளர்த்திடுவதில் சகல ஜாக்கிரதைக் கொண்டிருக்கவும், நாம் நம்முடைய அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கேதுவாய் நாம் பலப்படுத்தப்படத்தக்கதாக, நாம் கற்றுக்கொண்டுள்ளதான விலையேறப்பெற்றச் சத்தியங்களைத் தொடர்ச்சியாய் நினைவுக்குக் கொண்டுவரவும் வலியுறுத்துகின்றார். விசுவாசம் என்பது நல்லதுதான்; ஆனால் நற்கிரியைகள் இல்லாத விசுவாசமானது செத்ததாய் இருக்கும்; மற்றும் சத்தியத்தினை அநீதியுடன் வைத்திருப்பது என்பது, அதைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கும்போதுள்ள நிலைமையைக் காட்டிலும் மோசமானதாய் இருக்கும். சத்தியமானது, நம் இருதயங்கள் மற்றும் ஜீவியங்கள் மீது அதன் பரிசுத்தமாக்கும் தாக்கத்தினைக் கொண்டிருக்கவே, சத்தியமானது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் அது நம்மிடத்தில் அதன் போக்கில் செயல்பட்டு, மகிமைப்படுவதாக. அதன் விலையேறப்பெற்ற கனிகள் நாளுக்குநாள் அதிகமதிகமாய்த் தோன்றிடுவதாக. உங்கள் விசுவாசத்தோடே நற்பண்பினை (திருவிவிலியம்) / கூட்டி வழங்குங்கள் – அதாவது முதல்தரமான குணலட்சணத்தினை, அதாவது உலகத்தினின்றும், அதன் ஆவியினின்றும் பிரிந்திருப்பவர்களென உங்களை அடையாளம் காட்டும் அத்தகையதொரு குணலட்சணத்தின் முதல்தரத்தினைக் கூட்டிவழங்குங்கள். இப்படியானவர்கள் அனைவரிடத்திலும் உலகமானது, எவ்வளவுதான் நம்முடைய விசுவாசத்தினை எதிர்த்திட்டாலும், அவர்கள் அங்கீகரிக்கக்கூடிய அந்த நற்பண்புகளை இத்தகையவர்களிடத்தில் காண்பார்கள். மிகச்சிறந்த நேர்மையினை, உண்மையினை, தொழில் ரீதியான விஷயங்கள் யாவற்றிலும் நாணயத்தினைக் கொண்டிருங்கள்; சமுக உறவுகள் யாவற்றிலும் உத்தமமாய் இருங்கள்; அயலானுக்கு ஊறுவிளைவிக்காதபடிக்குச் சுத்தக் கைகளையும் மற்றும் தூய்மையான இருதயத்தையும் மற்றும் கடிவாளமிடப்பட்ட நாவையும் கொண்டிருங்கள். இவைகள் அனைத்தும், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களிடத்தில் எதிர்ப்பார்த்திடுவதற்கு உலகத்திற்கு உரிமை இருக்கின்றது; மற்றும் இவை அனைத்தும் நமது விசுவாசத்துடன் கூட்டிவழங்கப்பட வேண்டியதான நற்பண்புள்ள குணலட்சணத்தினுடைய இன்றியமையாத அம்சங்களாய்க் காணப்படுகின்றன. சுத்தமான கைகளானது நேர்மையற்ற எதிலும் கையிடுவதில்லை அவைகள் [R3090 : page 308] தொழில் விஷயத்தில் அநீதியான திட்டங்கள் எவற்றுடனும் எத்தொடர்பும் கொண்டிருப்பதில்லை. தூய்மையான இருதயமானது பொல்லாங்கானவைகளைத் திட்டமிடாது அல்லது தீய எண்ணங்களைக் குடிக்கொண்டிருக்காது அல்லது தீங்கு செய்ய திட்டமிடாது. கடிவாளமிடப் பட்டதான நாவானது, புறங்கூறிடாது, மாறாக அதனால் நன்றாயும், ஞானமாயும் பேசிட முடியாதபோது அமைதிக் காத்திடும். ஆனால் அயலாருக்கு இப்படியாக ஊறுவிளைவிக்கின்ற எதையும் செய்திட வெறுமனே மறுக்கும் இந்த எதிர்மறையான அம்சங்களையும் தாண்டி வேறுகாரியங்களைச் செய்திட, நற்பண்புகளினுடைய தூண்டுதல்களானது ஏவிடும் அவை சில விஷயங்களைச் செய்யாமல் இருப்பதற்கு மாத்திரமல்லாமல், சிலவற்றைச் செய்திடுவதற்கும் தூண்டுகின்றதாய் இருக்கின்றது – அதாவது மற்றவர்களில் துயரங்களைத் தணித்திடுவதற்கும், துயரப்படுவார் மீது அனுதாபங்கொள்வதற்கும், வேதனையில் காணப்படுவோரை ஆறுதல்படுத்துவதற்கும் மற்றும் மற்றவர்களைத் தூக்கிவிடுவதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் – வாய்ப்பிற்கேற்ப யாவருக்கும் உதவிடுவதற்கும் நாடுகின்ற பரந்தமனப்பான்மையுடன் கூடிய அன்பில் நன்மைசெய்வதற்கும் தூண்டுகின்றதாய் இருக்கின்றது.

இத்தகைய நேர்மையான நற்பண்புகளுடன் அறிவைக் கூட்டிக் கொள்ளும்படிக்கு, நமக்குப் புத்திமதி கூறப்பட்டுள்ளது; அதாவது தேவனுடைய குணலட்சணத்தினை நாம் மிகவும் முழுமையாய்ப் பின்பற்றத்தக்கதாக, அவரது குணலட்சணம் பற்றின அறிவையும், அவரது போதனைகளுக்கு மிகவும் இணங்கி காணப்படத்தக்கதாக, அவரது சத்தியம் பற்றின அறிவையும் கூட்டிக் கொள்ளும்படிக்கு நமக்குப் புத்திமதி கூறப்பட்டுள்ளது; ஞானத்தோடு இச்சையடக்கத்தை – அனைத்திலும் சுயக்கட்டுப்பாட்டை, தன்னடக்கத்தை / சாந்தத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும். “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. நாம் அவசரபுத்தியுடையவர்களாகவும், முன்கோபியாகவும் அல்லது மூர்க்கத்தனமானவர்களாகவும், முன்யோசனையற்றவர்களாகவும் காணபப்படக் கூடாது. மாறாக நாம் சீரான நிலையில் காணப்படுவதற்கும், ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படுவதற்கும் மற்றும் கருத்தூன்றி கவனம் செலுத்துவதற்கும் நாடிட வேண்டும்; அதாவது கர்த்தருக்குப் பிரியமானவைகளைச் செய்திடுவது குறித்தும், அவரது பிரதிநிதிகளென அவரிடத்திலான நம்முடைய பொறுப்புக்குறித்தும், சகமனிதர்களிடத்திலான நம்முடைய செல்வாக்கானது எப்போதும் நன்மைக்கு ஏதுவாய் இருக்க மற்றும் ஒருபோதும் தீமைக்கு ஏதுவாய் இல்லாமல் இருக்க நாம் பார்த்துக்கொள்வது குறித்தும் நாம் எப்போதும் கவனமாய் இருப்பதைச் சுட்டிக்காட்டும் விழிப்பானது நம்முடைய ஒட்டுமொத்த நடத்தையில் காணப்பட வேண்டும்.

“இச்சையடக்கத்தோடே பொறுமையையும் கூட்டிக்கொள்ளுங்கள். “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்காளாயிராமல், பூரணராயும், நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது (யாக்கோபு 1:4). ஆம் இந்த ஆவியின் கிருபையானது (பொறுமையானது), மற்ற ஒவ்வொரு கிருபைக்கான வழிகளிலுள்ள தடையினை அகற்றுகின்றதாய் இருக்கின்றது; காரணம் ஆவியின் கிருபைகள் அனைத்தும் பொறுமை மற்றும் தொடர்ச்சியான சுயக்கட்டுப்பாடு எனும் வழிமுறையின் கீழ் அடையப்பட வேண்டும். பொறுமை எனும் இக்கிருபையானது செயல்படுத்தப்படாமல், எந்த ஒரு வளர்ச்சியின் படிநிலையையும் அடையப்பெற முடியாது மற்றும் கிருபைகளில் உள்ள வேறு எந்தக் கிருபையைக் காட்டிலும் இந்த ஒரு கிருபையே கிறிஸ்தவக் குணலட்சணத்தினை அழகுப்படுத்துகின்றது அல்லது உலகத்தாருடைய மனசாட்சியின் ஒப்புதலைப் பெற்றுத்தருகின்றது அல்லது இக்கிருபைக்குத் தூண்டுதலாய் இருந்த சத்தியத்தின் காரணியாகிய சகல கிருபையுடைய தேவனை மகிமைப்படுத்துகின்றது. இது நீடிய பொறுமையுடன், சாந்தத்துடன், மனித பூரணமின்மை மற்றும் பெலவீனத்தின் பேரலைகளைச் சமாளித்து முன்னேறிடுவதற்கு ஊக்கமாய் நாடுகின்றது மற்றும் தெய்வீகச் சாயலை மீண்டும் அடைந்திடுவதற்குக் கடுமையாய்ப் பிரயாசம் எடுக்கின்றது. இது கோபங்கொள்ள தாமதிக்கின்றது / நீடிய சாந்தமாய் இருக்கின்றது மற்றும் மிகுந்த கிருபையுள்ளதாய் இருக்கின்றது; இது சத்தியம் மற்றும் நீதியின் பாதைகளை உணர்ந்துகொள்வதில் துரிதமாய் இருக்கின்றது மற்றும் அவைகளில் நடக்கவும் துரிதமாயுள்ளது; இது நம் சொந்த பூரணமின்மைகளைக்குறித்து நம்மை விழிப்பாய் இருக்கச் செயது, மற்றவர்களுடைய பூரணமின்மைகள் மற்றும் குறைவுகள் குறித்து அனுதாபங்கொள்ளச் செய்கின்றது.

“பொறுமையோடே தேவபக்தியையும் – அதாவது திவ்விய வசனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதான திவ்விய குணலட்சணம் குறித்துக் கவனமாய்க் கற்று, பின்பற்றுதலை – கூட்டிக்கொள்ளுங்கள்.

“தேவபக்தியோடே சகோதர சிநேகத்தை – திவ்விய குணலட்சணத் தினுடைய கொள்கைகளை நம்முடைய சகமனிதர்களிடத்தில் செயல்படுத்துவதை மற்றும் வெளிப்படுத்துவதை – கூட்டிக்கொள்ளுங்கள்.

“சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டிக்கொள்ளுங்கள். சிநேகமானது – யார் மீது சிநேகம் பாராட்டப்படுகின்றதோ, அவர்பால் கொஞ்சமே அன்பு இருக்கும் தருணங்களின்போது – சிநேகமானது பாராட்டப்படுகின்றது; ஆனால் அனுதாபத்துடன்கூடிய அக்கறையானது எழவில்லையெனில், இத்தகைய சிநேக செயல்பாடுகளில் நாம் தொடர்ந்து நீடிக்கமுடியாது மற்றும் போகப்போக அந்த அக்கறையானது தொடர்ந்து செயல்பாட்டில் காணப்படுகையில், அது அன்பாகுகின்றது. நேசிக்கப்படும் அந்நபர் குணலட்சணத்தில் விரும்பத்தகாதவராக இருப்பினும், விழுந்துபோன மற்றும் சீரழிந்து போனவர்களுக்கான அனுதாப அன்பானது தொடர்ந்து வளருகின்றது; தவறிழைக்கும் குமாரனுக்காகப் பெற்றோர் கொண்டிருக்கும் அன்பிற்கு ஒத்ததாகவும் மற்றும் பரிவாயும், அக்கறையாயும் ஆகும்வரை வளர்கின்றது.

உண்மையில் பேதுரு மிகவும் விரும்பத்தக்க குணலட்சணத்தை விவரிக்கின்றார் மற்றும் இதை அடைவது என்பது ஜீவக்காலம் முழுவதுமான வேலையாக இருக்கும் என்று யார்தான் இதைப் படிக்கையில் உணராமல் இருப்பார்கள். அது ஒருநாளிலோ அல்லது ஒரு வருடத்திலோ அடையப்பெற முடியாது; மாறாக அதை அடைவதற்கு முழு ஜீவியமுமே கொடுக்கப்பட வேண்டும்; மற்றும் நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்தால் நாளுக்குநாள், கிறிஸ்தவ குணலட்சணத்தினுடைய வளர்ச்சியிலும் மற்றும் கிருபையிலும் ஓரளவிற்கு இருக்கும் வளர்ச்சியினை நாம் உணர்கின்றவர்களாய் இருப்போம். சத்தியத்தை நாம் அறிந்திருந்து மற்றும் அதை அநீதியான நிலையில் வைத்திருப்பதில் மனநிறைவு கொள்வது என்பது தகுதியானதல்ல. சத்தியமானது அதன் முறையான மற்றும் அது நோக்கம் கொண்டுள்ளதான விளைவினைக் குணலட்சணத்தின்மீது கொணரத்தக்கதாக நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை சத்தியமானது இப்படியாக உண்மையும், நன்மையுமான இருதயத்திற்குள்ளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமாயின், நாம் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை என்றும், ஏற்றகாலங்களில் நமது கர்த்தரும், இரட்சகருமான இயேசு கிறிஸ்துவினுடைய இராஜ்யத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்றும் அப்போஸ்தலன் நமக்கு நிச்சயமளிக்கின்றார்.

கர்த்தருடைய கட்டளைகள் மற்றும் உபதேசங்களை நம்முடைய மனங்களில் எப்போதும் கொண்டிருப்பதின் அவசியத்தினையும் மற்றும் நாம் சத்தியத்தில் ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் ஊக்குவிக்கும் ஆவிக்குள் ஆழமாய் மூழ்கிடுவதன் அவசியத்தினையும் நாம் பார்த்துள்ளோம். விசுவாசத்தில் உறுதிப்பட்டிருப்பது என்பது ஒரு காரியமாகவும், ஆனால் கிறிஸ்தவ குணலட்சணத்திலும், ஆவியின் கிருபைகள் அனைத்திலும் உறுதிப்படுவது என்பது முற்றிலுமாய் இன்னொரு காரியமாகவும் காணப்படுகின்றது.

ஒரு நடைமுறை யோசனை

நம்முடைய சொந்த இருதயங்களிலும், அருமையான விசுவாச வீட்டார் யாவருடைய இருதயங்களிலும் ஆவியின் கிருபை விஷயத்திலுள்ள ஆழமான வேலையின் அவசியத்தினை நாம் உணர்கையில், நம் யாவரின் சார்பிலும் இக்குறிப்பிட்ட காரியத்தின் திசையிலான அதிக விசேஷித்த பிரயாசங்களானது, அநேகமாக மிகுந்த பிரயோஜனத்திற்கேதுவாய் இருக்குமென எங்களுக்குத் தோன்றுகின்றது. வரவிருக்கின்றதென நாம் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருக்கின்றதான இரவின் இருண்ட அந்தகாரத்தின் காலப்பகுதியில், விசுவாசம் மற்றும் பொறுமை செயல்படுத்த வேண்டிய எப்படிப்பட்டதான நிலைக்குள் நாம் கடந்துபோக வேண்டியிருக்கும் என்பதை நாம் அறியோம்; ஆயினும் “அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் மற்றும் நாம் கிருபையை உண்மையாய்ப் பற்றிக்கொண்டு, பொறுமையோடே அதிலே தொடருவோமானால், அந்தந்த நாளுக்கு கிருபையானது போதுமானதாய் இருக்கும் என்பதற்காக தேவனை ஸ்தோத்தரிக்கின்றோம். ஒவ்வொரு நாளும் அதன் பரீட்சைகளைக் கொண்டுவருகையில், நாம் பரீட்சைகளினால் முறையாய்ப் பயிற்றுவிக்கப்படுகையில், ஒவ்வொரு நாளும் அதன் ஜெயத்தினைக் கண்டடைந்து – இப்படியாக நம்மைக் குணலட்சணத்திலும், விசுவாசத்திலும் மிக உறுதியாய் ஸ்திரப்படுத்தி, பெலப்படுத்துகின்றது.

கிறிஸ்தவ குணலட்சணத்தை விசேஷமாய் அபிவிருத்திச் செய்திடும் கண்ணோட்டத்தில், நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதும், அலிகெனி மற்றும் வேறு இடங்களிலுமுள்ள சபையாரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றதுமான நம்முடைய யோசனை என்னவெனில்: எங்கெல்லாம் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் சிலரால் ஒன்று
கூடிட வாய்ப்புள்ளதோ, இந்த விசேஷித்த நோக்கத்திற்காக ஓர் இடை வாரக்கூடுகையினை ஒழுங்குப்படுத்திடலாம். இத்தகைய கூடுகையானது, தொழுதுகொள்வதற்கும், ஜெபிப்பதற்கும் மற்றும் துதிப்பதற்கும் மற்றும் சகோதரருக்குப் புத்திமதி கூறிடுவதற்கும், சேர்ந்து உரையாடுவதற்கும் மற்றும் கலந்துபேசுவதற்கும் என்று ஒதுக்கப்பட வேண்டும் மற்றும் வேதாகம ஆராய்ச்சிக்காகவோ அல்லது எதிர்த்து வாதாடுவதற்கோ என்று ஒதுக்கப்பட வேண்டாம். உபதேச ரீதியான காரியங்கள் பற்றின ஆராய்ச்சிகள் யாவும், இத்தகைய கூட்டங்களில் தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் வாக்குவாதத்தினை எழப்பண்ணுகின்றதான அத்தகைய பாடங்களானது தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் அத்தகைய காரியங்களானது வேறொரு கூட்டத்திற்கென, அதாவது அனைவரும் ஒன்றுகூடிவரும் கர்த்தருடைய நாளில், ஒரு பொருத்தமான வேளையில் ஏற்பாடு பண்ணப்பட்டும், வேறொரு கூட்டத்திற்கென ஒதுக்கப்பட வேண்டும்; இப்படிக் கூறுவதன் நோக்கம், உபதேசத்தைப் புறக்கணிக்கவோ அல்லது வேத ஆராய்ச்சி வேண்டாம் என்றோ இல்லை மாறாக இந்த அவசியத்தினை (கர்த்தருடைய நாளில் ஒழுங்குப்பண்ணும்) ஒரு கூட்டத்தில் சந்திக்கையில் மற்ற (இடைவார) கூட்டமானது, எவ்விதமான குழப்பமும் இல்லாமல், சரிசமமான மற்ற அவசியத்தினைச் சந்திக்கின்றதாய் இருக்கும்.

அலிகெனி மற்றும் பிட்ஸ்பர்கில், இங்குள்ள எங்களது ஏற்பாடு பின்வருமாறு: எங்கள் சபையார் ஆங்காங்கே மிகவும் சிதறிக் காணப்படுவதினால், கலந்துகொள்ள விரும்பும் யாவருக்கும் இடம் போதுமானதாய்க் காணப்பட வேண்டும் எனும் அவசியத்தின் காரணமாக, அவர்களை அநேகம் சுற்றுவட்டார கூட்டங்களாகப் பிரித்திருக்கின்றோம்; மற்றும் ஒவ்வொரு கூட்டத்திற்குமென, திறமை விஷயத்தில் பகுத்தறிந்து, ஒரு வழிநடத்துபவர் நியமிக்கப்படுகின்றார். இவர்கள் விசுவாசத்தில் உறுதிப்பட்டிருக்கிற – உபதேசத்தில் [R3090 : page 309] தெளிந்தவர்களாகிய, உண்மையுள்ளவர்களாகிய மற்றும் பக்தியுள்ளவர்களாகிய சகோதரராய் இருத்தல் வேண்டும். இந்தக் கூட்டங்களானது, ஒவ்வொரு சிறு கூட்டத்தார் மத்தியிலுள்ள ஏதோ ஓர் அங்கத்தினனுடைய இல்லத்தில், புதன்கிழமை சாயங்காலம் நடத்தப்படுகின்றது. கூட்டமானது, கீர்த்தனையோடும், ஜெபத்தோடும் துவங்கி, ஞாயிற்றுக்கிழமை மதியத்தினுடைய வசனப்பகுதியானது வழிநடத்துபவரால் வாசிக்கப்படுகின்றது; அடுத்ததாக ஒவ்வொருவராய் இடுக்கமான வழியிலுள்ள தனது வளர்ச்சி குறித்துக் கூறும்படிக்கு; எப்படிக் கிருபையில் வளர்ந்து கொண்டிருப்பதை மற்றும் எப்படி உலகம், மாம்சம் மற்றும் பிசாசினை ஜெயம்கொள்ள முயன்றுகொண்டிருப்பதைக் குறித்த – அவனது அல்லது அவளது தனிப்பட்ட அனுபவத்தினை – கூறும்படிக்குக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இங்கு அவர்கள் தாழ்மையோடு தங்கள் ஜெயங்களைக்குறித்துக் கூறிடலாம் அல்லது தங்கள் சோதனைகள் குறித்துப் பேசிடலாம் அல்லது கடினமான சந்தர்ப்பங்களில், கிறிஸ்தவ ஆலோசனையையும், அனுதாபத்தையும் கேட்டுக் கொள்ளலாம்; பெரிய எண்ணிக்கையிலுள்ள கூடுகைகளில் பேசிடுவதற்கு வாய்ப்புள்ளதை (அ) தகுதியாய் இருப்பதைக் காட்டிலும் இத்தகைய சிறிய எண்ணிக்கையிலுள்ள கூடுகைகளில் மிகவும் மனந்திறந்து இங்குப் பேசிடுவார்கள். இங்கு அவர்கள் ஒருவர் இன்னொருவருடைய விண்ணப்பங்களைக் கேள்விப்படுகின்றார்கள் மற்றும் ஓர் இருதயத்திலிருந்து, இன்னொரு இருதயத்திற்குக் கிறிஸ்தவ அன்பும், அனுதாபமும் மிகத் தாராளமாய்ப் பொழிகின்றது.

இந்தக் கூடுகைகளில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியதான நோக்கம் என்னவெனில்… கர்த்தருடனான மற்றும் அவரது ஊழியத்திலுள்ள புதிதான, இப்போதுள்ள, வாரந்தோறும் மற்றும் தினந்தோறுமுள்ள அனுபவங்கள் பகிரப்பட வேண்டும், மாறாக மிகவும் கடந்த காலத்திலுள்ள பழைய / மலர்ச்சியிழந்த அனுபவங்களை மாத்திரம் பகிரப்படுதல் அல்ல என்பதாகும். ஒரு தெளிவான கடந்த கால அனுபவம் பகிரப்படுதல் என்பது நல்லதுதான்; ஆனாலும் தெளிவான தற்கால அனுபவமானது பகிரப்படுதல் என்பது சிறந்ததாய், மிகவும் அதிகம் முக்கியமானதாய் இருக்கும். உபதேசம் எனும் வார்த்தைப் பொருந்துகின்றதான நம்பிக்கை, விசுவாசம், கீழ்ப்படிதல், தேவபக்தி, ஜெபம் முதலான வேதவாக்கியங்களின் போதனைகள் தவிர, மற்றப்படியுள்ள உபதேசங்களானது, இந்தக் கூடுகைகளில் தவிர்க்கப்படுகின்றது. சத்தியத்தினை அறிந்துகொள்வதில் திருப்திக்கொண்ட நிலையில், ஆனாலும் அதன்படி தினந்தோறும் மற்றும் ஒவ்வொரு மணிநேரமும் ஜீவித்திடுவதற்கு விசேஷித்தப் பிரயாசங்கள் ஏதும் எடுக்காத நிலையில் அநேகர் காணப்படுவதை நாம் காண்கின்றோம். இருதயத்தின் நேர்மையும், மீட்பரினால் நிறைவேற்றப்பட்டுள்ளதான வேலையின் மீதான விசுவாசமும், அவரது ஊழியத்திற்கென அர்ப்பணிப்பதும் “பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்கு அவசியமாய் இருக்கின்றபடியால் – அதாவது தெய்வீகத் திட்டத்தினுடைய ஆழமான அம்சங்களைப் புரிந்துகொள்ள முடிகின்ற மற்றும் முழுமையாய் உணர்ந்துகொள்ள முடிகின்றதான “பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்கு அவசியமாய் இருக்கின்றபடியால் – இந்தப் பண்புகளானது, தொடர்ந்து காணப்பட வேண்டும், நீடித்திருக்க வேண்டும்; இல்லையேல் ஒளியானது, இருளாகிடும் – ஒளியினின்று புறம்பான இருளுக்குள் நீங்கள் தள்ளப்பட்டுப் போவீர்கள்; இந்தப் புறம்பான இருளில்தான், ஆவியுலகக் கோட்பாடு, கிறிஸ்தவ விஞ்ஞானம், பிரம்ம ஞானம் மற்றும் மனித இனம் முழுமைக்கும் மீட்பு கிடைக்கும் என்ற கிறிஸ்தவ சபை பிரிவினரின் கோட்பாடு (Universalism) எனும் சுடர்விட்டு மின்னுகிற தப்பறையின் பின், உலகமும் பெயர்ச்சபையும் போய்க்கொண்டிருக்கின்றது.

இத்தகைய கூட்டத்திற்கென நியமிக்கப்பட்டுள்ளதான வழிநடத்துபவர், தான் நியமிக்கப்பட்டுள்ளதான ஒவ்வொரு சிறு கூட்டத்தாருடைய விசேஷித்த தேவைக்கென, தனது ஆலோசனையும், சீர்ப்படுத்துதலும் அல்லது உற்சாக மூட்டுதலும் போதுமானதாய்க் காணப்படத்தக்கதாக, அவன் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அவனது கடமை உணர்வும், ஒவ்வொருவரிடத்திலான தனிப்பட்ட அக்கறையும், அனைவருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கிறதாய் இருக்க வேண்டும். இத்தகைய இடைவாரக் கூட்டங்களானது, தெய்வீக ஜீவனில் உயர் தேர்ச்சி அடைவதற்கான படிக்கல்லாய்க் காணப்படுகின்றது என்றும், அனைவரும் பெரிதும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் மற்றும் நன்மை அடைவார்கள் என்றும், முழுச்சரீரமும், ஒருவருக்கொருவர் ஆவிக்குரிய காரியங்களில் மிகவும் பலனுக்கேதுவாய் ஊழியம்புரிந்திட உதவப்படுவார்கள் என்றும் நாங்கள் நம்புகின்றோம். ஒவ்வொரு மாதத்தினுடைய மத்திய புதன் மாலையன்று, ஜெப அம்சத்திற்கு அதிக கவனம் கொடுக்கப்படுகின்றது மற்றும் கிருபையின் சிங்காசனத்தை நோக்கி ஒருவர்பின் ஒருவராக இரண்டு அல்லது மூன்றுபேர் ஜெபித்திடுவதற்கான வாய்ப்பானது, யாவருக்கும் அருளப்படுகின்றது. காலாண்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையன்று நடைபெறும் இதே அம்சமுடைய பொதுக்கூட்டத்தில் இந்தப் பல்வேறு சிறு கூட்டத்தாருடைய ஆவிக்குரிய வளர்ச்சியினைக்குறித்து, வழிநடத்தினவர்களிடமிருந்தும், கலந்துகொண்ட பல்வேறு நபர்களிடமிருந்தும் கேட்டறிந்து கொள்கின்றோம் மற்றும் காலாண்டு தோறும், வழிநடத்துபவர்கள் மற்றக் கூட்டத்தார்களுக்கு இடமாற்றம் பண்ணப்படுகின்றனர்.

இந்த யோசனைகளோடுகூட, கர்த்தருடைய ஆசீர்வாதம் கடந்துவருவதாக மற்றும் பலனானது, கிறிஸ்தவ அன்பினுடைய கட்டினைப் பலப்படுத்துதலாகவும் மற்றும் எங்கும் பரஸ்பர பரிவாகவும், ஐக்கியமுமாகவும் காணப்படுவதாக.