வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R1900

வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்

Dawn Circles For Bible Study

செப்டம்பர் 15-இன் நமது வெளியீட்டில், வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்களானது – வேதாகம வாக்கியங்களை நிதானமாய்ப் பகுப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் ஒரே சாத்தியக்கூறாய் உள்ள யுகங்களுக்கடுத்த ஒட்டுமொத்த திட்டங்களின் பொதுவான அம்சங்களில், ஒவ்வொருவரையும் உறுதிபடுத்துவதன் வாயிலாகச் சபையைக் கட்டியெழுப்புவதற்குப் பிரயோஜனமானவைகள் என்று நாங்கள் பரிந்துரைத்திருந்தோம். இந்த வழிமுறைக்கு நான்கு வரவேற்கத்தக்க விசேஷித்த அம்சங்கள் காணப்படுகின்றன; அவை: (1) இது ஓர் அதிகாரத்திலுள்ள ஒரு சில வசனங்கள் மீது கவனத்தை எல்லைக்குட் படுத்துவதற்குப்பதிலாக, ஆதியாகமம் முதற்கொண்டு வெளிப்படுத்தல் விசேஷம் வரையிலுமான வேதவாக்கியங்கள் மொத்தத்தையும் ஆராய்வதற்கும், பயன்படுத்திடுவதற்கும் வழிவகுக்கின்றது. இது வேதாகமத்தினுடைய ஒரு வசனம் மற்றும் அதிகாரத்தின் ஆராய்ச்சியாக இராமல், தலைப்பின் கீழான ஆராய்ச்சியாக இருக்கும். (2) இது ஆண்டவருடைய பண்டகசாலையிலிருந்துள்ள ஐசுவரியமான மற்றும் சத்தான ஆகாரமென நாம் கண்டுகொண்டுள்ளதானவைகளில் மனங்களையும், இருதயங்களையும் புத்துணர்வடையத்தக்கதாக வழிநடத்திடும் மற்றும் இருதயத்தைத் திருப்தியோ அல்லது பலப்படுத்திடவோ செய்திடாத வீணான மனித கற்பனைகளிலிருந்து தூர வழிநடத்திடும். (3) இது ஒவ்வொருவரும் சிந்திப்பதற்கும், ஆராயப்படும் விஷயம் குறித்து வேதவாக்கியங்கள் கூறும் அனைத்திற்கும் இசைவாய்ச் சத்தியம் பற்றின தனது கருத்தினைத் தொகுத்திட கற்றுக்கொள்வதற்கும் மற்றும் தான் காண்கின்றதான சத்தியங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திடுவதற்கும்கூடப் பழக்குவிக்கின்றது. (4)

இவைகளே சபையிலுள்ள சகல போதித்தல்களுக்குமான நோக்கங்களாகும், அதாவது அப்போஸ்தலன் குறிப்பிடுவது போன்று, “பரிசுத்தவான்கள் பக்திவிருத்தி அடைவதற்காகவும், சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும் ஆகும் (எபேசியர்4:12). எனினும் இவ்வகைக் கூட்டங்கள் தொடர்பான யோசனைகளைச் சிலர், வெகு சிலர் முற்றிலும் தவறாய்ப் புரிந்துகொண்டுள்ளனர் மற்றும் வேதாகமம் வாசிப்பதைக் கைவிடவும், அதற்குப் பதிலாக மில்லேனியல் டாண் வெளியீட்டை வாசிக்கவும் நாம் அறிவுரை வழங்கினதாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை நாங்கள் கவனித்தோம்; அவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான் என்று சொல்வதற்கு நாம் மகிழ்கின்றோம். அவர்கள் புரிந்திருப்பதுபோல் எங்கள் கருத்துகள் இருந்ததில்லை. வேதாகமத்தையோ, டாண் வெளியீட்டினையோ வெறுமனே வாசித்தல் என்பது, ஒவ்வொருவனாலும் தனக்கென்று தனிப்பட்ட விதத்தில் வாசித்துக்கொள்ளப்படலாம்.

இதற்கு மாறாக வேத ஆராய்ச்சிகளை வரையறையற்றதாக்கிடுவதே யோசனையாகும்; மற்றும் டாணில் முன்வைக்கப்பட்டுள்ளதான தேவனுடைய ஒழுங்கின்படியான திட்டத்தைப் படிக்கையில், வெளிச்சம் நமக்குக் கடந்து வந்திருக்கிறதென்றால், நாம் அதே கண்ணோட்டத்தில் தொடர்ந்து ஆராய்கையில் அத்திட்டமானது, அதன் நுட்பமான விவரங்கள் அனைத்திலும் அதிகமதிகமாய்த் தெளிவாகிடும். ஒருவேளை யுகங்களுக்கடுத்த திட்டமானது மாத்திரமே, தெய்வீகத் திட்டத்தினுடைய மெய்யான முக்கிய பொதுவான அம்சங்களைத் (outline) தெரிவிக்கிறதென்றால் மற்றும் அந்த முக்கிய பொதுவான அம்சங்களை (outline) நாம் முழுமையாகக் கற்றுக்கொண்டுள்ளோமானால், யுகங்களுக்கடுத்த தேவத்திட்டத்தினுடைய நுட்பமான விவரங்களைத் தொடர்ந்து ஆராய்வதிலும் அதே உதவிக்கரங்களை நாம் பயன்படுத்திடுவோமாக, அதே தெய்வீகத் திட்டத்தினைக் கவனிப்போமாக.

இந்த நோக்கத்திற்காகத்தான் நாம் “வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்களை ஆலோசனையாகத் தெரிவித்தோம் மற்றும் பரிந்துரைத்திட்டதான இம்முறைமைக்கு உதாரணமாக, டாண் – ஒன்றாம் தொகுதியின் முதல் பத்தியினுடைய மாதிரி ஆராய்ச்சியினை வழங்கியுள்ளோம்:

• திவ்விய வெளிப்படுத்தல் என்றால் என்ன? – 2 பேதுரு 1:21; 2 தீமோத்தேயு 3:16,17.

• எப்போது மற்றும் எப்படிப் பாவம் உலகத்திற்குள் வந்தது? – ரோமர் 5:12; etc.

• நீதியின் சூரியன் யார்? – மல்கியா 4:1,2; மத்தேயு 13:43; தானியேல் 12:3.

• இந்தச் “சூரியன் எப்போது உதிப்பார்? – அப்போஸ்தலர் 3:19-21; கொலோசெயர் 3:4.

• அதன் பிரகாசத்தின் விளைவு என்ன? – மல்கியா 4:1,2; ஏசாயா 60:18,19; 25:7-9; அப்போஸ்தலர் 3:23.

• அதன் குணமாக்குதல் என்னவாக இருக்கும் மற்றும் அது எப்படி நிகழ்த்தப்படும்? – ரோமர் 5:18,19.

• பாவமும், மரணமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தற்காலத்தின் அழுகையையும், உபத்திரவத்தையும் உண்டுபண்ணினதா? எப்படி? எதன் அடிப்படையில் “விடியலையும் மற்றும் அதன் சந்தோஷங்களையும் நாம் எதிர்ப்பார்த்திடலாம்? – ரோமர் 5:6-8; 14:9; 1 கொரிந்தியர் 15:3,21; 2 பேதுரு 1:16,19; நீதிமொழிகள் 4:18; யோபு 14:13-15; சங்கீதம் 49:14,15.

• இரவைத் தொடர்ந்து அந்த “மகிமையான நாள் வருமா? –வெளிப்படுத்தல் 21:21-25; ஏசாயா 60:20,21.

பிரயோஜனம் உண்டாகத்தக்கதாக, வேறு வேதவாக்கியங்கள் முன்கொண்டுவரப்படலாம்; எனினும் மிக அதிகளவிலான சுதந்தரமானது அனுமதிக்கப்படக்கூடாது என்பதின் அவசியத்தினை அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் கூட்டத்தை வழிநடத்துபவர் தனது பகுத்துணர்தலைப் பிரயோகித்து, ஒருவர் அதிகமாய் வேறொன்றை விவரித்துக்கொண்டிருக்கையில் அவருக்கு அன்போடு அதைக் குறித்து நினைப்பூட்டிட வேண்டும். சபையார் பல்வேறு வேதாகமங்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இந்தக் கூட்டங்கள் யாவும் துதித்தலோடும், ஜெபத்தோடும் துவங்கி, முடிக்கும்படிக்கு நாம் பரிந்துரைக்கின்றோம். எழுதுகோலை / பென்சிலைப் பெற்றிருந்து, தங்கள் டாண் புத்தகத்தின் ஓரத்தில் (margin) ஓரக்குறிப்புகளைக் குறித்துக்கொள்ளலாம் எனும் சிலருடைய திட்டமிடுதல்கூட வரவேற்கத்தக்கது. சத்தியத்தினைச் சந்தேகமுடையவர்களுக்கு மெய்ப்பித்துக் காண்பிப்பதற்கு மீண்டுமாகப் பிரயாசம் எடுப்பது என்பது, அனைவருக்குமே மிக உதவியாகக் காணப்படும்.

இந்த ஒரு பத்தியிலுள்ள காரியங்களிலிருந்து, மூன்றுபேர் கொண்ட ஒரு வகுப்பிற்குத் திரளான மற்றும் ஐசுவரியமான வேதாகம உணவினை ஒரு மணி நேரம் பெற்றுக்கொள்ளலாம்; மற்றும் பன்னிரண்டு பேருள்ள ஒரு பெரிய கூட்டத்தார் ஒரு கூடுகையில் அனைத்தையும் பார்த்து முடிக்க முடியாது. கர்த்தருடைய மந்தையின் இந்தச் சிறு சிறு கூட்டத்தார்கள், வாரத்தில், ஒருமுறை இந்த “வேத ஆராய்ச்சிக்கான டாண் குழுக்களை பெற்றிருக்க நாம் பரிந்துரைக்கின்றோம். இது “சுவிசேஷவேலையினை மற்றவர்களுக்குச் செய்திடுவதற்கு நிபந்தனையாகக் காணப்படும் வேதவசனத்தினுடைய புரிந்துகொள்ளுதலில் அனைவரையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக்கிடும் (எபேசியர் 4:12). இது – ஒன்றுகூடி, ஊகங்கள் செய்திடுவதற்கும், வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதான ஒவ்வொரு நபரைக்குறித்தும் மற்றும் ஒவ்வொரு காரியத்தைக்குறித்தும் நிழல்களை உருவாக்கிடுவதற்கு முயற்சிப்பதற்கும் – அதாவது புதுக் கருத்துக்களை உண்டுபண்ணும் திறமையின் காரணமாகப் பெருமைக்குள்ளாக (மற்றும்) “புறம்பான இருளுக்குள்ளாக அநேகரை வழிநடத்திட்டதான ஒரு திட்டத்தை முயற்சிப்பதற்கும் பதிலாக, இது – மிகவும் பாதுகாப்பான ஒரு வழிமுறையாகும். இது – தற்செயலாக ஏதோ ஒரு தலைப்பை அல்லது முன்கூட்டியே நியமிக்கப்படாத எந்த ஒரு தலைப்பை எடுத்துக் கொள்வதைப் பார்க்கிலும், மிகவும் பிரயோஜனமாகக் காணப்படும். ஒவ்வொரு பாடமும் அனைவராலும், அதிலும் விசேஷமாக வழிநடத்துபவரால் அல்லது மூப்பரால் நன்கு சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டும். கலந்துகொள்பவர் யார் ஒருவராலும் யோசனையாகத் தெரிவிக்கப்படும் வேறு எந்த ஒரு வேதாகம தலைப்பையும், கருத்தில் எடுத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு கூட்டத்தாரும் விருப்பத்துடன் காணப்பட வேண்டும் மற்றும் பிரயோஜனமான தலைப்பாக இருக்குமென அக்கூட்டத்தாரில் பெரும்பான்மையானவர்களால் கருதப்பட வேண்டும். இந்தக் காரணத்தின் நிமித்தம் (வேறு வேதாகம தலைப்புகள் ஆராயப்படுவதற்காக) டாண் பாடங்களானது தற்காலிகமாக நிறுத்தப்படலாம் அல்லது கூடுதலாக ஒரு கூடுகை நியமிக்கப்படலாம்.