ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4197 (page 197)

ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்

THE CHOICE OF A KING

1 சாமுயேல் 10:1-27

“மானிடரை ஆளுபவன், நீதியோடு, இறை அச்சத்துடன் ஆள்பவன்.” (2 சாமுயேல் 23:3; திருவிவிலியம்)

R4198 : page 198
சவுலைத் தேவன் தேர்ந்தெடுத்தது தெரிவிக்கப்பட்டது


கர்த்தர் ஏற்படுத்திய ஒழுங்கின் கீழ்க் காணப்படுவதற்குப் பதிலாக, ஓர் இராஜா வேண்டும் என்று ஜனங்கள் கேட்டுக்கொண்ட விஷயத்தில், அவர்கள் ஞானமாய் நடந்துகொள்ளவில்லை என்றும், ஜனங்கள் விரும்பிக் கேட்டுக்கொண்ட விஷயத்தின் அடிப்படையிலேயே அவர்களுக்கு ஓர் அனுபவம் வழங்கிட கர்த்தர் விரும்புகின்றார் என்றும், இஸ்ரயேலின் ஜனங்களின் மத்தியிலிருந்து யார் இந்த இராஜாவிற்குரிய முக்கிய ஸ்தானத்திற்கு வரப்போகிறார் என்று கர்த்தரிடத்தில் விசாரித்து அறிந்துகொள்ளும்படிக்கு ஜனங்களாகிய அவர்கள் ஒன்று கூட்டப்பட்டுள்ளனர் என்றும், குறிப்பிட்ட ஏற்றத் தருணத்தின்போது சாமுயேல் எழுந்து நின்று, ஜனங்களுக்கு விளக்கினார். கர்த்தர் தேர்ந்தெடுக்கும் நபர் எக்கோத்திரத்தைச் சேர்ந்தவர் என ஜனங்கள் முதலாவதாக கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள். பன்னிரண்டு கோத்திரங்களை அடையாளப்படுத்தும் பன்னிரண்டு கோல்கள் பேரில் போடப்பட்ட சீட்டில், [R4198 : page 199] இராஜா பென்யமீன் கோத்திரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற பதில் கிடைத்தது. அடுத்ததாக பென்யமீன் கோத்திரத்திலுள்ள பல்வேறு குடும்பங்களின் பேரிலும், பின்னர்த் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் அங்கங்கள் பேரிலும் சீட்டுப் போடப்பட்டு, சாமுயேல் ஏற்கெனவே அறிந்திருந்ததுபோல சீட்டு, கீசின் குமாரனாகிய சவுல் பேரில் விழுந்தது; சாமுயேலுடைய வார்த்தைகளின் நிமித்தமாகவும், அவர் அபிஷேக தைலத்தினால் தன்னை அபிஷேகம் பண்ணியிருந்ததின் நிமித்தமாகவும், சீட்டு தன் பேரிலேயே விழும் எனச் சவுலும் அறிந்திருந்தார். இவ்விதமாக, ஜனங்களுக்கு கர்த்தர் தம்முடைய தேர்ந்தெடுத்தலைக் காட்டுவதற்கும், அவர்களுடைய பல்வேறு விஷயங்களில் அவர்கள் தெய்வீக வழிநடத்துதலை நோக்குவதற்கு கற்றுக்கொடுப்பதற்கும் கர்த்தர் செயல்பட்டார்.

பல்வேறு சபைகளில், மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கர்த்தருடைய ஜனங்களுக்கும் இங்கு ஒரு படிப்பினை உள்ளது. அர்ப்பணிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும், தேர்ந்தெடுத்தல் (election) விஷயத்தில் தன்னுடைய பங்கை நிறைவேற்றும் போது, தான் கர்த்தருடைய கருவியாக மாத்திரமே செயல்பட வேண்டும் என்பதையும், கர்த்தருடைய சித்தமே முற்றும் முழுமையாகச் செய்யப்பட வேண்டும் என்பதையும் உணர்ந்தவராகக் காணப்பட வேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் புறக்கணிக்கப்பட வேண்டும்; மேலும் குணலட்சணம் தொடர்பான விஷயத்தில் வேத வாக்கியங்களுக்கு இசைவாக மாத்திரமே வாக்கு (vote) செலுத்துபவர்களுடைய மனதில் தாக்கம் ஏற்படுத்துவதற்கு முற்படுதலும், செல்வாக்கைப் பயன்படுத்த முற்படுதலும் இருக்க வேண்டும் மற்றும் சண்டையிடுவதற்காகவோ அல்லது வீண்பெருமையினாலாவது எதுவும் செய்யப்படாமல், மாறாக அனைத்தும் தேவ மகிமைக்காகவே செய்யப்பட வேண்டும். பரிசுத்த ஆவி மற்றும் பரிசுத்தமான வார்த்தைகளுடைய வழிநடத்துதலின்படி, தேர்ந்தெடுக்கும் காரியம் தங்களுடைய கரங்களில் இருக்கின்றது என்பதை உணர்ந்தவர்களாக தேவனுடைய ஜனங்களென, தேவ வாக்கை (oracles of god) அளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றபடியால், இந்தத் தேர்ந்தெடுத்தல் விஷயத்தில், பூமிக்குரிய உறவுகள் எவ்விதமான செல்வாக்கையும் செலுத்தக்கூடாது.

கீசின் குமாரனாகிய சவுல், இராஜாவாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட பொழுது, அவர் தேடப்பட்டார் என்றும், அவர் எங்கு இருக்கின்றார் என்பது தெரியாமல் இருந்தது என்றும் பதிவுகள் தெரிவிக்கின்றன. கர்த்தரிடத்தில் விசாரித்தப்போது, சவுல் தளவாடங்கள் இருக்கிற இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கின்றார் என்ற உண்மையைக் கர்த்தர் வெளிப்படுத்தினார். சவுலின் தன்னடக்கம் பாராட்டத்தகுந்ததாகும். கர்த்தர் தன்னை அபிஷேகம்பண்ணினதால், ஜனங்கள் ஒன்று கூடியிருக்கின்ற தருணத்தில் தான்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை சவுல் அறிந்திருந்தபோதிலும், அவர் தன்னடக்கத்துடன் மறைந்து போய்விட்டார். இருதயத்தின் மிகுதியான தன்னடக்கமானது, (சவுல் சொல்லர்த்தமாக ஒளிந்துகொண்டு தனது தன்னடக்கத்தை வெளிப்படுத்தின விதத்திலிருந்து வேறுபட்ட விதத்தில் வெளிப்படுத்தப்படும் நிலைமை) கர்த்தருடைய அருமையான ஜனங்கள் அனைவரின் மத்தியிலும் காணப்பட வேண்டும், அதிலும் விசேஷமாக
கர்த்தருடைய மந்தைக்கு எந்த விதத்திலாகிலும் ஊழியம் புரிவதற்கெனத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மத்தியில் காணப்பட வேண்டும். ஒரு மனுஷன் கர்த்தருக்கும், அவருடைய மந்தைக்கும் ஊழியக்காரனாய் இருப்பதினால் இருக்கும் கனத்தை எவ்வளவுதான் உணர்ந்துகொண்டவனாக இருப்பினும், ஊழியம் செய்வதற்கான ஸ்தானத்தினை அடைவதற்கு ஆசைப்படுவதற்குப் பதிலாக தன்னை மறைத்துக்கொண்டிருப்பவனாக இருக்க வேண்டும்.

சவுல் இராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் அதிகாரமாய் ஆணையிடும் ஆவியையும், அதிகாரத்தையும் செலுத்தாமல், கர்த்தர் தனக்கு இராஜ்யபாரத்தைக் கொடுத்து ஆசீர்வதிப்பது வரையிலும் — தன் சார்பில் தான் எதையாகிலும் செய்ய வேண்டும் என்று கர்த்தர் சுட்டிக்காட்டும் காலம் வரும் வரையிலும், தன்னுடைய சொந்த நிலத்தில் பணிகள் செய்வதற்கெனக் கடந்துபோன விஷயத்தில் சவுலினுடைய தன்னடக்கம் இன்னும் அதிகமாக வெளிப்படுகின்றது. இப்படியே நம்முடைய விஷயத்திலும் காணப்பட வேண்டும்; “அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்” என்று அப்போஸ்தலன் கூறுகிற பிரகாரமாக நாமும் செய்ய வேண்டும் (1 கொரிந்தியர் 7:20). [“தேவன் அழைத்தபோது இருந்தபடியே ஒவ்வொருவனும் இருக்கட்டும்” – ERV] இப்படியாக என்றென்றும் இருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக கர்த்தருக்கும், அவருடைய ஜனங்களுக்கும் ஊழியம் செய்வதற்கெனக் கர்த்தருடைய வழிநடத்துதல், கதவைத் திறந்து ஒருவனை அழைக்கும் காலம் வரும்வரையிலும் இருக்க வேண்டும். ஒருவேளை ஓர் ஊழியம் கர்த்தருடைய ஊழியமாக இருக்குமானால், கர்த்தர் வாய்ப்பையும், வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான ஞானத்தையும் அருளுவார். ஒருவேளை ஊழியம் கர்த்தருடையதாய் இராமல் இருக்கும் பட்சத்தில், அத்தகைய ஊழியங்களுக்குள் எவ்வளவேனும் ஈடுபடாமல் இருப்பது நலமாகும்.

தேவனால் ஏவப்பட்ட இருதயங்களை உடையவர்கள்


இராணுவத்தில், தேவனால் மனதில் ஏவப்பட்டவர்கள், சவுலோடேகூடப் போனார்கள் என்று 26-ஆம் வசனம் நமக்குத் தெரிவிக்கின்றது. 27-ஆம் வசனமோ, மற்றவர்களாகிய “பேலியாளின் மக்கள்,” சவுலை அசட்டைப்பண்ணி, சவுலுக்கு அன்பளிப்புகளையும் கொண்டுவராமல், “இவனா நம்மை இரட்சிக்கப்போகிறவன்” என்று கூறினார்கள். அநேகமாக சவுலோடுகூடச் சென்ற மனுஷர்களைக்காட்டிலும் இந்தப் பேலியாளின் மக்கள் திரளாய் இருந்திருக்க வேண்டும். சவுலைப் பற்றின இச்சம்பவமானது, நமது கர்த்தர் அபிஷேகம் அடைந்த மாத்திரத்தில், அவரிடத்தில் “தேவனால் ஏவப்பட்ட இருதயங்களை உடையவர்கள்” ஈர்க்கப்பட்டார்கள் என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றது; இவர்கள் அவருடைய சீஷர்களாகவும், பின்னடியார்களாகவும் ஆனார்கள், மேலும் இவர்கள் சுமார் 500 பேராக இருந்தார்கள் என அப்போஸ்தலர் நமக்குத் தெரிவிக்கின்றார். இயேசுவை எதிர்த்த பேலியாளின் சில குமாரர்களும் இருந்தார்கள்; இவர்களைக் குறித்துத் தீர்க்கத்தரிசி, “அவரைப் பார்க்கும் போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது, அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்” என இவர்கள் கூறுவதைக் குறிப்பிட்டுள்ளார். “இவனா நம்மை இரட்சிக்கப்போகிறவன்?” என்று இவர்களும் எண்ணினார்கள்; மேலும் இவர்களுடைய கணிப்பில் அவரிடத்தில் விரும்பத்தக்கதான எதுவும் காணப்படவில்லை.

அன்றுமுதல் இன்றுவரையிலும் கர்த்தருடைய நோக்கம் மற்றும் உண்மையான ஜனங்களுடைய விஷயத்தில், அதிலும் குறிப்பாக அவருக்கான ஊழியத்தில் முதன்மையான ஸ்தானங்களில் காணப்படுபவர்களின் விஷயத்தில் மேற்கூறிய விஷயங்கள் உண்மையாக நிகழ்ந்துள்ளது. சிலர் தேவனுடைய கையாளும் விதங்களை அங்கீகரித்து, அவருடைய வழிநடத்துதல்களை அடையாளம் கண்டுகொண்டு, அதற்கு இசைவாக தங்களுடைய விசுவாசத்தின் மூலம் செயல்படுகின்றனர்.
இவர்களே தேவனால் ஏவப்பட்ட இருதயங்களைக் கொண்டவர்கள் ஆவார்கள். “உம்முடைய வசனமே சத்தியம்” எனும் சத்தியத்தின் வாயிலாகவே தற்காலத்தில் தேவனுடைய வழிநடத்துதல்களும், ஏவுதல்களும் முக்கியமாகக் காணப்படுகின்றது. “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களை பரிசுத்தமாக்கும்.” பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் கர்த்தருடைய வழிநடத்துதலை நோக்கிப் பார்க்கின்றவர்களாய் இருக்கின்றார்கள், மேலும் வழிநடத்துதல்களைப் புரிந்துகொள்வதற்கும் இவர்கள் உதவப்படுகின்றனர். மற்றொரு பக்கத்தில், சவுலின் நாட்களிலும், நம்முடைய கர்த்தருடைய நாட்களிலும் இருந்ததுபோன்று, அன்றுமுதல் இன்றுவரை தேவனுடைய வழிநடத்துதல்களினாலும், அவருடைய தீர்க்கத்தரிசியின் வார்த்தைகளினாலும் வழிநடத்தப்படுவதற்கு விருப்பம் இல்லாதவர்களும், சண்டையிடுகிறவர்களுமாகிய பேலியாளின் மக்கள் காணப்படவே செய்கின்றனர். சண்டையிடும் இந்த மக்கள், ஒழுக்கம் குறைந்தவர்கள் மத்தியில் உள்ளவர்களாகவும் எப்போதும் இருப்பதுமில்லை உதாரணத்திற்கு நம்முடைய கர்த்தருடைய காலக்கட்டத்தில் பொறாமையினால் ஏவப்பட்ட சதுசேயரும், பரிசேயரும், வேதபாரகரும் (ஒழுக்கமுள்ள மக்கள்) இந்தப் பேலியாளின் மக்களாகக் காணப்பட்டார்கள்; ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் மிகவும் வாதிக்கும் சாத்தானுடைய பண்பாகிய பொறாமை இந்தப் பரிசேயர், சதுசேயரிடமும் காணப்பட்டது. நம்முடைய தனிப்பட்ட காரியங்களில் மற்றும் விசேஷமாக கர்த்தருடைய இராஜ்யத்தின் விஷயங்களில் நாம்
ஒருபோதும் கர்த்தரை மறந்துவிடக்கூடாது என்பதே நமக்கான படிப்பினையாகும். “தேவனோடே போர்ச்செய்கிறவர்களாய்” நாம் காணப்படாதப்படிக்கு நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம்மை மிகவும் ஜாக்கிரதையாய் இருக்கச்செய்யத்தக்கதாக, மேற்கூறின படிப்பினையை நாம் உள்வாங்கினவர்களாகக் காணப்பட வேண்டும் (அப்போஸ்தலர் 5:39).


வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தாமதமின்மை


கர்த்தருடைய வழிநடத்துதலின்படி, சவுலுக்கு வாய்ப்பு வந்தது. மேலும் அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதில் அவரிடத்தில் காணப்பட்ட துரிதமானது, பெரும்பான்மையான ஜனங்களுடைய அன்பை அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. சத்துருவாகிய மோவாபியர்கள் யாபேசை தாக்கி, அதற்கு முற்றுகைப்போட்டார்கள்; யாபேஸ் பட்டணத்தாரைக்காட்டிலும், சத்துரு வலிமைக்கொண்டவர்களாகவும் இருந்தார்கள். யாபேஸ் பட்டணத்தின் ஜனங்கள் தங்களுடைய கண்களைப் பிடுங்கக் கொடுக்கும் நிபந்தனையின் பேரில் அவர்கள் ஜீவன் உயிரோடேவிடப்படும் எனும் செய்தி யாபேஸ் பட்டணத்தாருக்கு அறிவிக்கப்பட்டது. சவுல் உடனடியாக அனைத்துக் கோத்திரத்தாரும் தங்களுடைய சகோதரராகிய யாபேஸ் பட்டணத்தாருக்கு உதவ வரும்படி, அனைத்துக் கோத்திரங்களுக்கும் செய்தி அனுப்புகின்றார். மேலும் இப்படியாக கூட்டிச் சேர்க்கப்பட்ட நபர்களைக் கொண்டு சவுல் சத்துருவைத் துரத்தியடித்து, ஜனங்களை விடுவித்தார். இதிலிருந்து தேவனால் பரிசுத்த ஆவியைக்கொண்டு அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள், இறுதியில் இராஜ்யத்தில் இயேசுவுடன் உடன் சுதந்தரர்களாக ஆகும் விஷயம் தொடர்பான கண்ணோட்டத்தில் நாம் ஒரு விளக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். நாம் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட பிற்பாடு, தெய்வீக ஊழியம் செய்வதற்கான சில வாய்ப்புகளுக்காக நாம் எதிர்ப்பார்த்துக்காணப்பட வேண்டும், மேலும் அப்போஸ்தலர் வலியுறுத்தியுள்ளது போல, நாம் அழைக்கப்பட்ட நிலைமையிலேயே நிலைத்திருக்கும் போதும்கூட நாம் வாய்ப்புகளுக்காக எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். கர்த்தருடைய ஜனங்களில் சிலரைக் குருடாக்கியுள்ள மற்றும் மற்றவர்களைக் குருடாக்குவதற்கு அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற ஒரு சத்துருவை நாம் அறிவோம். இம்மாதிரியான சூழ்நிலை, ஊழியம் புரிவதற்கான அழைப்பாக நமக்கு மாறுகின்றது; கர்த்தருடைய நாமத்தினாலும், பலத்தினாலும் மற்றும் நம்முடைய சகோதரரை குருடாக்கும் வல்லமையினின்று விடுவிப்பதற்குக் கர்த்தர் ஏற்பாடுபண்ணியுள்ள அனைத்துக் காரியங்களுடைய உதவியினாலும் நாம் கடந்துசெல்ல வேண்டும். யார் ஒருவன் இப்படியான வாய்ப்பைக் கண்டும், அதைப் பயன்படுத்த தவறுகின்றானோ அவனுக்கு, இராஜரிக ஆசாரியக்கூட்டத்தில் ஒருவனாகுவதற்குரிய சரியான இருதய நிலைமை இல்லை என்பதையும், கர்த்தர் பேரிலும், அவருடைய ஜனங்கள் பேரிலும், அவனுக்கு அதிக அன்பு வளர வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும்.