R5922 (page207)
அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:-
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – இக்கடிதத்தோடுகூட
நான் நான்கு கேள்விகளையும் இணைத்துள்ளேன்; அவைக் குறித்துப் பனாமாவிலுள்ள சபையாராகிய எங்கள் மத்தியில் பெரிதளவில் வேறுபட்டக் கருத்துக் காணப்படுகின்றது. இக்கேள்விகளானது உங்களால் பல தடவைகள் கையாளப்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன. ஆனால் நாங்கள் புரிந்துகொள்ளும் திறனில் மிகவும் மந்தமானவர்களாகவும், மிகவும் ஓட்டையான பாத்திரங்களாகவும் காணப்படுகின்றோம்!
கேள்விகள்: (1) “சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகையில், அவர் பெரோயா ஆராய்ச்சி வகுப்பில் கருத்துக்களை முன் வைப்பதையும் உள்ளடக்கித்தான் கூறுகின்றாரா? (1 கொரிந்தியர் 14:34;1 தீமோத்தேயு 2:11-12).
மேலே உள்ள கடிதம் மற்றும் கேள்விகளுக்குப் பதில்:
உங்கள் கேள்விகளுக்கான எங்கள் பதில்: சகோதரிகள் பெரோயா பாட வகுப்பில் பங்கெடுப்பதில், அப்போஸ்தலனுடைய கட்டளையானது மீறப்படுகிறதில்லை என்று நாங்கள் புரிந்திருக்கின்றோம். அங்கு அர்ப்பணிக்கப்பட்ட அல்லது திறமையுள்ள சகோதரர் இல்லையெனில், சகோதரிகள் பெரோயா வகுப்பினை நடத்திடக்கூடாது என்று சொல்லிடுவதற்கு நான் எந்தக் காரணத்தையும் காண்கிறதில்லை.
– கர்த்தருக்குள்ளான உங்களது சகோதரனும், ஊழியக்காரனும்.