R5888 (Page 126)
மிகவும் அன்புக்குரிய பாஸ்டர் அவர்களே:-
நான் எந்தப் பெயரையோ அல்லது முகவரியையோ குறிப்பிடுகிறதில்லை ஏனெனில் இப்படிக் குறிப்பிடுவது ஞானமாய் இருக்கமென எனக்குத் தோன்றவில்லை மற்றும் ஒருவேளை தகுதியாய் இராது என்று நீங்கள் கருதுவீர்களானால், இந்தக் கடிதத்தை நீங்கள் குறிப்பிட வேண்டாம். இல்லையேல் டவர் வெளியீட்டில் உங்களால் வெளியிடக்கூடுமானால், நீங்கள் வெளியிடுவதற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
____________என்ற இடத்திலிருந்து வந்த சகோதரி ஒருவர், அச்சபையில் 1925-ஆம் வருடம் வரைச் சபையானது மகிமைப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட முடியாது என்றும்; இது உங்களுடைய கருத்தாகவும் இருக்கின்றது என்றும் போதிப்பதாக எங்களிடம் தெரிவித்தார்கள்; இதன் விளைவு உணர்வற்ற ஆவியினை உண்டுபண்ணுகின்றது மற்றும் அநேகர் தொழில் காரியங்களிலும், லௌகீக காரியங்களிலும் பெரிதும் நாட்டம் கொள்கின்றனர். அப்படி இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி, அது என்னைப் பொறுத்தவரையில் நான் ஆயத்தமாய்க் காணப்படத்தக்கதாக நான் விழிப்பாய் இருப்பதற்கும், அரைகளில் கச்சைக் கட்டிக்கொண்டும், விளக்கை எரியப்பெற்றும், “விழித்திருந்து, காத்திருப்பதற்கும்” ஏவுகின்றதாய் இருக்கின்றது.
ஐந்து வருடங்கள் காலமாக “தற்கால சத்தியத்தினுடைய” மகிமையான செய்தியினை நான் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு காணப்படுகின்றேன் மற்றும் அது எப்போதும் மிகவும் விலையேறப்பெற்றதாகிக்கொண்டு வருகின்றது. நான் இங்கிலாந்து சபையில் வளர்க்கப்பட்டேன் மற்றும் ஆக்ஸ்போர்ட்டில் வாழ்ந்தேன்; அது மிகவும் பெரிய சபையாய் இருந்தபடியால், நீங்களே அறிவீர்கள் நான் எவ்வளவுக்கு முன்பு கற்றுள்ளவைகளை ஒழிக்க வேண்டியிருந்திருக்கும்.
அருமையான சகோதரனே, உங்களை “அந்த ஊழியக்காரனாக” தேவன் எழுப்பியுள்ளதற்காக நான் தேவனை ஸ்தோத்திரிக்கின்றேன். நீங்கள் எங்களுக்கு “ஏற்றகால சத்தியத்தினைக்” கொடுக்கத்தக்கதாக, தேவன் உங்களை இன்னும் அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பாராக. இந்தப் பயங்கரமான போர் நடைப்பெறுவதற்கு முன்னதாக, அருமை கர்த்தர் என்னை இந்த நாட்டிற்குக் கொண்டுவந்ததற்காகவும் மற்றும் என்னுடைய ஜனங்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு, நான் நம்பிக்கைக் குலைந்திருக்க, “மரித்தவர்கள் எங்கே இருக்கின்றனர்” என்று என்னைப் புரிந்துகொள்ள செய்ததற்காகவும், நான் அவருக்கு நன்றி ஏறெடுக்கின்றேன்.
நான் குறிப்பிடுவதற்கு விரும்புகின்ற இன்னொரு சிறு காரியம் இருக்கின்றது. நான் கலந்து கொள்ளும் சபையின் மூப்பர் ஒருபோதும் ஆயத்தமாய்க் காணப்படுகிறதில்லை. கூட்டங்களில் அந்நாளுக்கான மன்னா வசனம் எங்கிருக்கிறது என்பது அவருக்குத் தெரியாது மற்றும் ஜெபம் மற்றும் சாட்சிக்கூட்டமாக இருப்பினும், அவர் தற்போதைய நாட்டு நடப்புகள் மற்றும் போர் ஆபத்துக்கள் குறித்த தனது கண்ணோட்டங்களைக் கொடுப்பதிலேயே அதிக நேரம் எடுத்துக்கொள்வார். வேறு யாருக்கும் நேரம் கிடைக்கிறதில்லை.
நான் குறைக்கூறுகின்றேன் என்று நீங்கள் எண்ண மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்; நான் பெரிதும் மதிப்பதற்குப் பழகியுள்ளதான இந்தச் சிறிய பழைய சபையில் மூப்பர் கொட்டாவி விட்டுக் கொண்டும், உறங்கிக்கொண்டும் அல்லது தனது நகங்களையும், பற்களையும் குத்திக்கொண்டும் இருப்பது – மிகவும் ஒவ்வாதவைகளாகக் காணப்படுகின்றன! இவர் தனது மூன்று வயது குழந்தையையும் தன்னோடு அழைத்துவந்து, சபையாருக்கு மிகுந்த தொந்தரவு ஏற்படுத்துகின்றவராய் இருக்கின்றார். இவர் 15 வருடங்களாகச் சத்தியத்தில் காணப்படுவதாகக் கூறுவதால், இவரிடத்தில் எதையும் கூறிட யாரும் விரும்புகிறதில்லை. இவர் விசேஷமாய் ஒரு தொழிலதிபராக இருப்பதினால், ஆவிக்குரிய விஷயத்தில் இவரால் நாங்கள் உதவப்படுவதாக எங்களுக்குத் தோன்றுகிறதில்லை. கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக, இவர் தொழில்குறித்துப் பேசுகின்றார் மற்றும் முடிந்த மாத்திரத்தில் கடையைக்குறித்துப் பேசுகின்றார்.
ஓ! அருமையான சகோதரனே, நான் தீமையாய்ச் சிந்திப்பதற்கோ அல்லது தீமையாய்ப் பேசிடுவதற்கோ விரும்புகிறதில்லை! இது விஷயமாக எங்களில் அநேகர் ஜெபம் ஏறெடுத்துள்ளனர். குழந்தைகளினாலும் எங்களுக்குத் தொந்தரவு ஏற்படுகின்றது; ஆனாலும் நான் கடுமையான ஆங்கில வர்க்கக்கருத்துக்களை உடையவளாய் இருக்கின்றேனென என்னிடம் சொல்லப்படுகிறதினால், இக்காரியம் குறித்துப்பேசிட நான் துணிகிறதில்லை. அவரது உணர்வுகளைக் காயப்படுத்த நான் விரும்பவில்லை ஆகையால் நான் தவறு செய்கிறேனாகில், நான் எழுதியுள்ளவைகளைப் புறக்கணித்து விடுங்கள். நான் கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிடுவதற்கும் மற்றும் எனது பெருமையினைக் கீழ்ப்படுத்தி வைப்பதற்கும் மற்றும் அருமை ஆண்டவர் செய்தது போன்று என்னையே வெறுமையாக்கிடுவதற்கும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன் என்று அருமை கர்த்தர் அறிவார். உங்கள் விலையேறப்பெற்ற நேரத்தை எடுத்துக்கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன் அருமை பாஸ்டர் அவர்களே,
அவரது கிருபையில் உங்கள் சகோதரி.
இதழாசிரியரின் பதில்:
தேவன் தம்முடைய ஜனங்களுக்குத் தெளிந்த புத்தியுள்ள ஆவியினை – அவரது ஆவியினை, அவரது மனதைக் கொடுப்பதாக அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார். ஆனால் இதை நமது நேர்மைக்கும், கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் செவிசாய்ப்பதற்கும் ஏற்ப நாம் பெற்றுக்கொள்வோம். எவ்வளவு அதிக காலமாய் நாம் கிறிஸ்துவினுடைய பள்ளிக்கூடத்தில் காணப்படுகின்றோமோ, நாம் சரியான மாணவர்களாய்க் காணப்படுவோமானால், நாம் அவரை நன்கு அறிந்திருப்போம் மற்றும் அவரது குணலட்சணத்தையும், போதனைகளையும் மாதிரிப்படுத்த நன்கு முடிகிறவர்களாகவும் காணப்படுவோம்.
கடிதத்தை எழுதினவரின் பெயர் தெரியாதபடியாலும், யார் அந்த மூப்பர் என்பது குறித்துக் கொஞ்சமும் எங்களால் அறியமுடியவில்லை. அவர் நல்நோக்கமுடையவராகவே காணப்படுவார் என்று நாம் பாவித்துக்கொள்ளலாம். எனினும் கர்த்தருக்கு ஊழியம்புரியும் விஷயத்தில், தெளிந்த புத்தியுள்ள மனதின் ஆவியினை மாதிரித்துவப்படுத்துவதற்குப் போதுமாய் விழித்துக்கொள்ளவில்லை என்றும் நாம் பாவித்துக்கொள்ளலாம். இல்லையேல் அவர், தான் தேவனை மகிமைப்படுத்தத்தக்கதாகவும், அவரது ஜனங்களுக்கு மிகவும் உதவிகரமாகக் காணப்படத்தக்கதாகவும் இருப்பதற்கென்று தனது கிரியைகளிலும், வார்த்தைகளிலும் மிகவும் ஜாக்கிரதையாய் இருந்திருப்பாரல்லவா?
பயபக்தி குறைப்பாடானது எங்கும் வெளிப்படுகின்றது, ஆனால் அது கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களின் கூடுகைகளில் விசேஷமாகப் பொருத்தமற்ற ஒன்றாய்க் காணப்படுகின்றது. நாம் ஏற்கெனவே சொன்னதுபோன்று, நாம் மறுபடியுமாகச் சொல்வதென்னவெனில், நம்முடைய தாலந்துகள் எவ்வளவு குறைவாக இருப்பினும், நம்முடைய கிரியைகள் வாயிலாகவும் மற்றும் செயல்வகை பாணியின் வாயிலாகவும், இருளினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்துவந்தவருடைய புண்ணியங்களை அதிகமதிகமாக நாம் பேசிடலாம்.
[R5888 : page 127]
வாட்ச் டவர் வெளியீடு என்ன கூறுகின்றது என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்தும், அதன் போதனைகள் குறித்துத் தவறாய் விவரம் கூறிக்கொண்டும் அருமையான நண்பர்களில் அநேகர் காணப்படுகின்றனர். இவர்கள் அதன் போதனைகளுக்கு அதிகம் செவிக் கொடுத்திடவில்லை என்பதே நமது அன்பான கருத்தாய் இருக்கின்றது. இல்லையேல் அதன் பத்திகளினின்று 1925-ஆம் வருடத்தையோ, வேறு ஏதேனும் வருடத்தையோ நாங்கள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை இவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள். வாட்ச் டவரில் நாங்கள் விளக்கமாகத் தெரிவித்துள்ளது போன்று, நாங்கள் தொடர்ந்து கடந்து போய்க் கொண்டிருக்கின்றோம்; எங்களால் கடைசியாக தெரிவிக்கப்பட்ட வருடமானது, கடந்து போய் ஒருவருடத்திற்கும் மேலாகிவிட்டது.