R1866 (page 216)
கூட்டங்களை நடத்திடுவதற்கான மிகப் பிரயோஜனமான வழிமுறைகள் தொடர்பான அறிவுரை வேண்டி, சத்தியத்தில் காணப்படும் நண்பர்களிடமிருந்து அநேகம் வேண்டுகோள்களை நாம் பெற்றுக்கொண்டோம். ஒரு சகோதரன் பின்வருமாறு எழுதுகின்றார்:
“டாணை வாசித்துக்கொண்டிருக்கும் சில சகோதரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆராயத்தக்கதாக ஏதோ ஓர் இடத்தில் கூடிடலாம் என்ற தங்கள் விருப்பத்தினைத் தெரிவித்துள்ளனர் மற்றும் புதிதாய்த் துவங்கியுள்ளவர்களுக்குப் பொருத்தமான ஒரு திட்டத்திற்காக தங்களது ஆலோசனையை நான் கேட்கின்றேன். நாங்கள் இந்த ஆராய்ச்சியைச் சரியான விதத்தில் துவங்கி, அநேகம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக எங்களுக்காய் ஜெபம்பண்ணுங்கள்.
– உங்கள் J. W. Mclane.
புதிய இடத்திற்குச் சமீபத்தில் இடமாறியுள்ள வேறொரு சகோதரன் கூறுகிறதாவது:
“இந்த இடத்தை வேலை பண்ணிடுவதற்கான நல்ல நிலமாக நான் காண்கின்றேன். நான் இங்குக் கைப்பிரதிகளைக் கொடுத்துள்ளவர்களில் அநேகர் ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களிடத்தில் நான் வேதப் பாடங்களைக் குறித்துத் தாராளமாய்ப் பேசியுள்ளேன் மற்றும் என் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அவர்களது வாக்கையும் பெற்றுள்ளேன். ஆகையால் தாங்கள் எனக்கு அறிவுரையளித்து உதவினால், நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருப்பேன்.”
ஆண்டவருடைய ஊழியத்தில் தங்கள்
அருமை சகோதரன்,
JOSHUA L. GREEN.
வேறொரு சகோதரன் எழுதினதாவது:-
“ஆராதனைக்கெனக் கூடிடுவதற்கென்று விரும்பும் அநேகர் இங்குக் காணப்படுகின்றனர். அதை எப்படிச் செய்வது என்பது தொடர்பான சில அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ள நாங்கள் பிரியப்படுகின்றோம்.
எங்களுக்குத் திருப்திகரமாயிருக்கும் சில வழிமுறைகளை நீங்கள் எங்களுக்குச் சொல்லிடுவீர்கள் என்று நம்புகின்றோம். எங்களில் சிலர் (பெயர்) சபைகளை விட்டு வந்தவர்களாகவும், மனித கட்டளைகள் யாவற்றிடமிருந்தும் சுதந்தரமடைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். நானும் Presbyterian சபையைவிட்டு வந்தவனாவேன்.
கிறிஸ்துவுக்குள் உங்கள்,
C. C. FLEMING.
யுகங்களுக்கடுத்த தேவனுடைய திட்டத்தைக் கற்றுக்கொள்வதற்கான விருப்பம் பெருகி வருவதையும் மற்றும் இதில் வழிமுறைகளின் மற்றும் ஒழுங்குமுறைகளின் முக்கியத்துவமும் அடையாளம் கண்டுகொள்ளப் பட்டுள்ளதையும் கவனிக்கையில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எங்களது அறிவுரை பின்வருமாறு:-
(1) இது தொடர்பாக மே 1, “93; பக்கம்-131; செப்டம்பர் “93; பக்கம்-259; அக்டோபர் 15, “93; பக்கம்-307; மார்ச் 1, “94; பக்கம்-73; ஏப்ரல் 1, “95; பக்கம்-78; மே 1, “95; பக்கம்-109 ஆகிய நம்முடைய வெளியீட்டுகளில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள சில காரியங்களை முதலாவதாக மறுபடியும் வாசியுங்கள்.
(2)”அமைப்பை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அது முற்றிலும் அவசியமற்றதாகும். வேதாகம விதிமுறைகளே, உங்களுக்கு அவசியப்படும் ஒரே விதிமுறைகளாகக் காணப்படுகின்றன. மற்றவர்களுடைய மனசாட்சியினைக் கட்டிப்போடுவதற்கு நாடாதிருங்கள் மற்றும் மற்றவர்களும் உங்களுடைய மனசாட்சியினைக் கட்டிப்போடுவதற்கு அனுமதித்துவிடாதீர்கள். இன்றையதினம் தேவனுடைய வார்த்தைகளை உங்களால் புரியமுடிந்த அளவுக்கேற்ப அதை விசுவாசித்து, அதற்குக் கீழ்ப்படியுங்கள் மற்றும் இப்படியாக நாளுக்கு நாள் கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் வளர்வதற்குத் தொடருங்கள்.
(3)வேதாகமமானது நீங்கள் யாரிடம் “சகோதரரென ஐக்கியங் கொள்ளலாம் என்று உங்களுக்குத் தெரிவிக்கின்றது – மாம்சத்தின்படி நடக்காமல், ஆவியின்படி நடப்பதற்கு நாடுகின்ற விசுவாசிகளுடன் மாத்திரமேயாகும். எதையாவது மற்றும் எல்லாவற்றையும் விசுவாசிக்கும் விசுவாசிகளல்ல, மாறாக மனுக்குலம் பாவத்திற்குள் விழுந்தது மற்றும் அதற்கான தண்டனை மரணம் என்றும், “அனைவருக்குமான (சரிநிகர் சமமான விலையென) ஈடுபலியென, “பாவமன்னிப்புண்டாகும்படிக்குச் சிந்தப்பட்ட, “அவரது இரத்தத்தின் மீதான விசுவாசத்தின் வாயிலாகவே கிறிஸ்துவுக்குள்ளாக மாத்திரம் இரட்சிப்பு இருக்கின்றது என்றுமுள்ள சுவிசேஷத்தினுடைய பதிவுகளை விசுவாசிக்கும் விசுவாசிகளே ஆவர். கிறிஸ்துவைச் சிறந்த மற்றும் நல்ல நபர் என்றும், நீதியான வாழ்க்கைக்குரிய சிறந்த உதாரணம் என்றும் மாத்திரம் விசுவாசிப்பவர்கள் என்பவர்கள் அயலகர் அல்லது அறிமுகமானவர்கள் என்று கருதப்படலாம்; ஆனால் அவர்கள் “விசுவாசிகளல்ல மற்றும் இதனால் அவர்களைப் போன்றே யூதர்கள், முகமதியர்கள், நாத்திகர்கள், ஆயக்காரர்கள் மற்றும் பாவிகள் இயேசுவைக் கருதுவதினால், இவர்களும், அவர்களும் “சகோதரர்களாய் இருப்பதில்லை.
(4) பாவம் மற்றும் மரணத்திலிருந்து மிகவும் விலைக்கொடுத்து வாங்கப்பட்டுள்ளதினால், நீங்கள் தேவனுடைய பிள்ளைகளென ஒன்றுகூடிவந்து, இனிமேல் உங்களுக்காக இல்லாமல், உங்களுக்காக மரித்தவருக்காக ஜீவித்திடுவதற்கு முடிவெடுத்துள்ளீர்கள்(2 கொரிந்தியர் 5:15). உங்களது கூட்டங்களானது சில குறிப்பிட்ட நோக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். அவை:-
(a) ஆராதனை, துதி மற்றும் ஜெபம்
(b) உலகம், மாம்சம் மற்றும் உள்ளிலும், வெளியிலுமுள்ள பிசாசுக்கு எதிராக வெற்றிகரமாய்ப் போர்ப்புரியத்தக்கதாக ஒருவருக்கொருவர் உதவுதல்.
(c) மேலும் இவைகளுக்காக, நமக்கு அறிவுரையாகவும் மற்றும் தேவனை அன்புகூருகிறவர்களுக்கும், அவருக்கு ஊழியஞ்செய்ய, அவரைக் கனப்படுத்த மற்றும் அவருக்குக் கீழ்ப்படியத்தக்கதாக தங்களது பிரயாசங்களின் வாயிலாக தங்களது அன்பினை ரூபகாரப்படுத்துகிறவர்களுக்கும் அவரால் ஆயத்தம் பண்ணப்பட்டதான அந்த ஆசீர்வாதங்களிடத்திற்கு நடத்துகின்றதான இடுக்கமான வழியில் நமக்கு உதவுவதற்காகவும் – அவர் அருளியுள்ளதான அவரது வார்த்தைகளை ஆராய்வதற்கும்கூட நீங்கள் ஒன்றுகூடிட வேண்டும்.
(5) இப்படியாக உபதேசங்களைப் பற்றின அறிவானது நாம் கூடிடுவதில் அடைந்தாக வேண்டிய நோக்கமாயிராமல், மாறாக குணலட்சணத்தைக் கட்டியெழுப்புவதற்கேயாகும்; இந்தக் குணலட்சணங்களானது, தேவனுடைய அருமையான குமாரனின் சாயலை அடைவதற்கான முயற்சிகளாக, “பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் தேவனுடைய கிருபையில் வளருவதற்குரிய நம்முடைய பிரயாசங்களுக்கு, அவரது வார்த்தையில் அவர் நமக்கு வெளிப்படுத்தியுள்ளதான உபதேசங்கள் குறித்த அறிவானது மிகவும் விலையேறப்பெற்றதாய் இருக்குமெனத் தேவன் தெரிவிக்கின்றார்.
ஆகையால் ஆராதனை, துதி மற்றும் ஜெபத்திற்குப் பிற்பாடு வேதாகம ஆராய்ச்சியானது, அதன் இரண்டு பாகங்களில் அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும், அவை: (a) தேவனுடைய திட்டம் குறித்து ஆராய்ச்சி — அவர் நமக்கும், உலகத்திற்கும் என்ன செய்துகொண்டிருக்கிறாரென அவர் நமக்குச் சொல்வது என்ன என்பது குறித்தும், அவர் என்ன செய்திருக்கின்றார் மற்றும் என்ன இனிமேல் செய்யவிருக்கின்றார் என்பது குறித்தும் நாம் ஆராய்வதினால் நாம் புத்திரர்களெனத் தேவனுடைய மாபெரும் வேலைக்குரிய ஆவியை அடையவும் மற்றும் அவரோடு அறிவுள்ள உடன் வேலையாட்களாகக் காணப்படவும் உதவப்படுவோம். (b) இப்பொழுதும், இனிவரும் யுகங்களிலும் தேவனுக்குப் பிரியமாயும், அவர் அங்கீகரிக்கத்தக்கதாயுமுள்ள அப்படியான குணலட்சணங்களை நாம் வளர்க்கத்தக்கதாக, தேவனுடைய ஊழியங்களில் ஒருவர் இன்னொருவரிடத்திலும் மற்றும் நம்மில் ஒருவராய் [R1867 : page 216] இல்லாதவர்களாய் இருப்பவரிடத்திலும் கொண்டிருக்கும் நமது கடமைகள் மற்றும் சிலாக்கியங்கள் குறித்து ஆராய்வதாகும்.
பொதுவான சௌகரியத்தின் நிமித்தமாக இந்தக் கூட்டங்களானது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நடத்தக்கூடாது என்றபோதிலும், வாரந்தோறும் இரண்டு கூட்டங்களாகிலும், ஒன்று கிறிஸ்தவ கிருபைகள் மற்றும் சாட்சி மற்றும் ஒருவருக்கொருவர் உதவுதல் ஆகியவற்றிற்கான கூட்டமாகவும், மற்றொன்று வேதாகம ஆராய்ச்சிக்காகவும் இருப்பது பொதுவாக நலமாயிருக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் நன்றியோடு தொழுதுகொள்வதற்கான நமது பாடல்கள், ஜெபங்கள் தேவனுக்கு முன்பு சுகந்தவாசனையாய் [R1867 : page 217] எழும்பிட வேண்டும் மற்றும் இந்த ஆராதனையில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.
ஆதிசபையில் இருந்தது போலவே, நம் மத்தியிலும் முறையாய் உரையாற்றும் பிரசங்கித்தல் என்பது அரிதாக வாய்ப்புகள் இருப்பதற்கேற்ப காணப்படுகின்றன. தேவையான தகுதிகளை – அதாவது சத்தியத்தைக் குறித்த தெளிவான புரிந்துகொள்ளுதல் மற்றும் அதைக் கர்த்தருடைய மந்தைக்கு உதவியாகக் காணப்படத்தக்கதாக முன்வைத்திடுவதற்கான திறமை, குரல், கல்வியறிவு போன்ற தகுதிகளையும் கூடப் பெற்றிருக்கும் ஏதோ சகோதரன் காணப்படும்போதே அந்த அரிதான வாய்ப்புகள் காணப்படுகின்றது மற்றும் இத்தகுதிகளோடுகூட, அவர் சாந்தமுள்ளவராகவும், இறுமாப்பு அடைவதற்கு ஏதுவாக இல்லாதவராகவும் அல்லது தன்னைக்குறித்துப் பிரசங்கியாமல், கிறிஸ்துவின் சிலுவையினைப் பிரசங்கிக்கிறவராகவும் காணப்பட வேண்டும்.
ஆனால் பிரசங்கித்தல் இருக்கின்றதோ அல்லது இல்லையோ, அனைவராலும் (சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இருவராலும்) பங்குகொள்ள முடிகின்ற மற்றும் அனைவரும் பங்குகொள்ள வேண்டிய மற்றக் கூட்டங்களானது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்; மேலும் பரிசுத்தவான்களில் (அர்ப்பணம் பண்ணியுள்ள “விசுவாசிகளில் ) ஒவ்வொருவரும் நன்மை செய்யவும், நன்மையை அடையவும் நாடிட வேண்டும் (ரோமர் 14:19; எபேசியர் 4:11-32; 1 தெசலோனிக்கேயர் 5:11 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்).
(6) நாம் எந்த அளவுகோலைக் கொண்டு சத்தியத்தை அறிந்துகொள்ளலாம் மற்றும் நிரூபித்துக்கொள்ளலாம்? வேதவார்த்தைகளானது, “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது என்று நாம் பதிலளிக்கின்றோம் (2 தீமோத்தேயு 3:16,17).
ஆனால் வேதாகமத்தைப் புரிந்துகொள்வது எப்படி? நூற்றாண்டுகளாக நல்ல மனுஷர்களும், கெட்ட மனுஷர்களும் அதன் பக்கங்களில் தேடியிருந்திருக்கின்றனர். இதில் ஆசீர்வாதங்களை நல்ல மனிதர்கள் கண்டடைந்துள்ளனர்; எனினும் உபதேசங்களைப் பொறுத்தமட்டில் குழப்பமே அடைந்துள்ளனர்; திருப்திகரமானத் திட்டம், ஒழுங்கு, நீதி மற்றும் ஞானம் குறித்தும் அவ்வளவு காலங்களாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேவ திட்டத்தின் இரகசியத்தினுடைய நிறைவேறுதலுக்குரிய ஏற்றவேளை வராமல் இருந்தது மற்றும் அது அந்த ஏற்றகாலம் வரையிலும் “முத்திரிக்கப்பட்டிருந்தது, “மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது “பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” காலங்களில் ஜீவித்துக் கொண்டிருக்கும் நாம் மற்றும் குறிப்பாக 1335-நாட்களின் முடிவிலுள்ள பாக்கியமான காலங்களிலும், தற்கால அறுவடையிலும் மற்றும் ஏழாம் எக்காளம் தொனிக்கத் துவங்கும் காலத்திலும் காணப்படும் நாம், கடந்த காலங்களிலுள்ள பரிசுத்தவான்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தைக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களிலும் அநேகம் நீதியான மனுஷர்களும், அநேகம் தீர்க்கத்தரிசிகளும் காண்பதற்கு சிலாக்கியமடையாத, தேவனுடைய இராஜயங்களுக்கடுத்த இரகசியங்களை நாம் காணும்படிக்கு அருளப்பட்டிருக்கின்றது. தற்கால சத்தியத்தின் வெளிச்சத்திற்காக தேவனுக்கு நன்றி! இப்பொழுது நம்மால் தேவனுடைய ஒரு திட்டத்தினைக் காணமுடிகின்றது – கடந்தகால சரித்திரத்தின், எதிர்க்கால வெளிப்படுத்துதலின் ஒவ்வொரு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ள ஒரு திட்டமாகும்; முழுமையான ஒரு திட்டமாகும்; எப்பாகத்திலும் தொடர்பற்ற நிலைமையும், குறைப்பாடும் இல்லாத ஒரு திட்டமாகும்; தெய்வீக நீதி, ஞானம், வல்லமை மற்றும் அன்பிற்கும் மற்றும் திவ்விய வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் முற்றிலும் இசைவான ஒரு திட்டமாகும் மற்றும் இப்படியாக இது ஒரு நியாயமானத் திட்டமாக இருக்கின்றது என்று மாத்திரமல்லாமல், தேவனுடைய திட்டத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கையில், மற்ற அனைத்துக் கூற்றுகளும், திட்டங்களும் குறையுள்ளவைகளாகவும், நிச்சயமாய்த் தப்பறையானவைகளாகவும், திவ்விய குணாதிசயங்கள் மற்றும் திவ்விய வார்த்தைகளுக்கு முரணாகவும் காணப்படுகின்றது என்றும் நிரூபிக்கின்றதாய் இருக்கின்றது.
யுகங்களுக்கடுத்தத் திட்டம் குறித்த புரிந்துகொள்ளுதலுக்குள்ளாக வருபவர்கள், அது தேவனால் உண்டானது என்றும், மனிதனால் உண்டானதல்ல என்றும் அடையாளம் கண்டுகொள்கின்றனர். அது தேவனுடைய இரகசியங்களுக்குத் தேவன் தாமே அருளியுள்ளதான திறவுகோலாய்க் காணப்படுகின்றது மற்றும் இதற்காக அவருக்குத் துதியனைத்தையும் சாற்றிடும்படியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்துவிடுவோமாக. அதன் ஒளியானது, மில்லேனியேல் டாணுடையதாய் இருந்து, ஆயிரமாயிரமானவர்களுக்குச் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டுவருகின்றதாய் இருக்கின்றது. நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் இறங்கி வருகின்றதான திவ்விய காரணக்கர்த்தாவிற்கு அனைத்துத் துதியையும், கனத்தையும் உரித்தாக்குவோமாக மற்றும் இவர் தம்முடைய வாக்குத்தத்தத்திற்கேற்ப (லூக்கா 12:37) ஆவிக்குரிய “ஏற்றகால சத்தியத்தினை கொண்டு தமது சபையைத் தொடர்ந்து போஷிக்கின்றார். தேவன் நம்முடைய போதகராகத் தொடர்ந்து காணப்பட்டு, இதுவரையிலும் அவருடைய ஜனங்களுக்கு தம்முடைய அறிவுரை வழங்கப்படத்தக்கதாகக் கருவிகளைப் பயன்படுத்தி வந்தார் மற்றும் மில்லேனியேல் டாணில் (volumes) முறையாய் முன்வைக்கப்பட்டவைகளைப் பயன்படுத்தி யுகங்களுக்கடுத்த தம்முடைய திட்டத்தைக்குறித்தும், இந்த அறுவடைகாலத்தின் போதான கடமைகள் மற்றும் சிலாக்கியங்கள் குறித்தும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார்; காரணம் “தேவரகசியம் நிறைவேறுவதற்கான ஏற்றகாலம் வந்துள்ளது (வெளிப்படுத்தல் 10:7). தேவனால் அனுப்பப்பட்ட போதகராகிய மில்லேனியேல் டாண் வாயிலாகத் தனிப்பட்ட விதத்தில், வசனத்தில் கற்பிக்கப்பட்டவர்கள், அதைத் தங்களது தனிப்பட்ட ஆராய்ச்சியிலும், ஒன்றுகூடிப் பண்ணிடும் ஆராய்ச்சியிலும் தேவனுடைய வாய்க்கருவி இல்லையென்று புறக்கணிப்பதற்கு எக்காரணமும் அறியாதிருப்பார்கள்; அதாவது உயிருள்ள போதகர் ஒருவரை வாய்க்கருவி இல்லையென்று புறக்கணிப்பதற்கு எக்காரணமும் அறியாதிருப்பது போலவேயாகும்.
தற்கால சத்தியமென்னும் இந்த ஆசீர்வாதம் கடந்துவருவதற்கான கால்வாயாக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எளிய மனித பாத்திரங்களைத் தொழுதுகொள்ள முற்படுபவர்களுக்கு நாம் சொல்வதாவது: “நீ இப்படிச் செய்யாதப்படிக்குப் பார்; உன்னோடும், உன் சகோதரரோடும், தீர்க்கத்தரிசி களோடும் (அனைத்து உண்மையான போதகர்கள் அல்லது தேவனுடைய வாய்க்கருவிகளோடு) . . . நானும் ஒரு ஊழியக்காரன் (நான் கர்த்தரல்ல); தேவனைத் தொழுதுகொள் (வெளிப்படுத்தல் 22:9). ஜீவத்தண்ணீரும் மற்றும் அதைக் கொடுப்பவருமேதான் ஒழிய, அது அனுப்பப்படும் பூமிக்குரிய பாத்திரமானது தொழுதுகொள்ளப்படக்கூடாது. பூமிக்குரிய பாத்திரங்களானது மகிமைப்படுத்தப்படக்கூடாது. “அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்? (1 கொரிந்தியர் 4:6,7).
இந்தக் கொடிய அறுவடைகாலங்களில், ஊழியம் புரிவதற்கான பெலம் மற்றும் கிருபை மற்றும் ஞானத்தின் பொக்கிஷங்கள் வேண்டுமெனில், தேவனால் கொடுக்கப்பட்டதான யுகங்களுக்கடுத்த திட்டத்தையே நாம் அனைவரும் வேதாகமத்தின் ஆராய்ச்சியில் பயன்படுத்திட வேண்டும்; மற்றும் இதற்காகவே அது தேவனால் அருளப்பட்டுமுள்ளது. அதைத் தேவனால் அருளப்பட்ட வெளிச்சமென அடையாளம் கண்டுகொள்ளும் ஒவ்வொருவரும் அதை வசனத்தினுடைய ஆராய்ச்சியின்போது பயன்படுத்திட வேண்டும். தேவன் சித்தம்கொண்டுள்ளது போன்று ஒவ்வொருவரும் அதைத் தனது சொந்த ஒளியாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தேவனுடைய பொதுவானத் திட்டம் குறித்துக் கேட்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதான ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க முடிகிற அளவுக்கு, ஒவ்வொருவரும் அதைப் பயன்படுத்துவதில் கைத்தேர்ந்தவர்களாகக் காணப்பட வேண்டும். ஆனால் அந்தோ! அது சகோதரர் ரசலின் திட்டம் என்று சிலர் எண்ணி, தாங்களும் தங்கள் சொந்தத் திட்டத்தை உண்டுபண்ணிட வேண்டும் என்று எண்ணுகின்றனர். இது மாபெரும் தவறாகும். அது எங்களுடைய திட்டமல்ல, மாறாக தேவனுடைய திட்டமாகும். ஒருவேளை அது தேவனுடைய திட்டமில்லையெனில், அதற்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை. நமக்கு மனித திட்டங்கள் எதுவும் அவசியமில்லை. நிச்சயமாகவே தேவன் அங்கீகரிக்கத்தக்கதான திட்டங்களை, அவருக்காக மனுஷர்கள் ஏற்படுத்திட முடியாது; ஏனெனில் “உலகத்தோற்றத்திற்கு முன்னதாகவே அவரது திட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன. தேவன் ஒரே ஒரு திட்டத்தினை வைத்திருக்கின்றார் மற்றும் அது மாற்றியமைக்கப்பட முடியாது மற்றும் இப்பொழுது அதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்; அது அருமையாகவும், அதேசமயம் எளிமையாகவும், அழகாகவும் காணப்படுகின்றது என்று நாம் அறிக்கையிடுகின்றோம். அது மனிதனால் எண்ணிப் பார்க்கவோ அல்லது திட்டமிடவோ முடியாத ஒரு திட்டமாகும். அதன் சிந்தைகளானது, மனிதனுடைய சிந்தைக்கு அப்பாற்பட்டதாய் இருக்கின்றது மற்றும் இதனால்தான் கடந்த நூற்றாண்டுகளில் மனிதர்கள் யுகங்களுக்கடுத்த இந்தத் தெய்வீகத் திட்டத்தினை ஊகித்துக்கூடப் பார்த்ததில்லை.
ஆகையால் வேதாகமம் எனும் அளவுகோல் தரமானது, ஒவ்வொருவரும் அதில் திறமிக்கவர்களாக – அதில் திறமிக்க போதகனாகுவது வரையிலும், தேவனால் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் போதித்தல்களின் வெளிச்சத்தில் கற்றுக்கொள்ளப்பட வேண்டும். பின்னர் ஒவ்வொருவரும் தனது வெளிச்சத்தினைப் பிரகாசிக்கப்பண்ணிட வேண்டும் – தாழ்மையாய் அதை மற்றவர்களுக்குப் பரிமாறிட வேண்டும்.
அந்தோ பரிதாபம்! யுகங்களுக்கடுத்த தேவனுடைய அன்பான திட்டத்தினைக் காணத்தக்கதாக தங்கள் கண்கள் திறக்கப்பட்ட சிலர், ஆச்சரியமடைந்து, தற்கால சத்தியத்திற்காகத் தேவனுக்கு நன்றி செலுத்துகிற போதிலும், அதிகமான ஆசைக்கொள்கின்றனர். தேவன் தம்முடைய ஜனங்களென நமக்கு ஏற்கெனவே கொடுத்துள்ளவைகளை நன்றாய்ப் பயன்படுத்துவதே, இத்தகையவர்கள் செய்ய வேண்டிய காரியமாய் இருக்கின்றது. தேசத்தில் பஞ்சம் காணப்படுகின்றது; அது ஆகாரத்திற்கான பஞ்சமல்ல, ஜலத்திற்கான பஞ்சமல்ல, கர்த்தருடைய வசனத்திற்கான பஞ்சமாகும் (ஆமோஸ் 8:11). காத்துக்கொண்டிருக்கும் தம்முடைய ஜனங்களுக்காக நமது கர்த்தரும், ஆண்டவருமானவர் வந்துள்ளார் மற்றும் புதியதும், பழையதுமான சத்தியங்களை முறையாகப் பந்தியில் வைத்துள்ளார் (மத்தேயு 13:52). நமக்கு முன்வைக்கப்பட்டுள்ளவற்றை முழுமையாய்ப் புசியாதது வரையிலும், அதிகமான அல்லது வேறே ஆசீர்வாதங்களைக் கேட்பதற்கு நிச்சயமாய் நமக்கு அதிகாரமில்லை. புசித்தப் பிற்பாடு, பெற்றுக்கொண்டு பலத்தினால் மற்றவர்களுக்குப் போஜனத்தைப் பரிமாறுவதன் வாயிலாக நாம் பயிற்சி செய்ய வேண்டும். இதைச் செய்யத்தவறி, இன்னமும் திறக்கப்படாத பண்டகச் சாலையிலுள்ள மற்றப் பாகங்கள் எதையேனும் திறக்க முற்படுபவர் நிச்சயமாய் மோசமான நிலைமையிலேயே காணப்படுவார். யாரும் உள்ளே புகமுடியாத விதத்திலும் மற்றும் நியமிக்கப்பட்ட வேளையில் சுலபமாய்த் திறந்திடும் விதத்திலுள்ள, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் திறக்கும் பூட்டின் / Time lock -இன் உதாரணத்தை நினைவில்கொள்ளுங்கள் (மில்லேனியேல் டாண், volume 2, தமிழ் பக்கம்-12; ஆங்கில பக்கம்-23).
[R1867 : page 218]
“உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே (மனித சாமார்த்தியத்தினாலோ அல்லது பிரயாசத்தினாலோ உண்டுபண்ணப்படவில்லை அல்லது அடையப்பெறவில்லை), அவைகளை உட்கொண்டேன் (எரேமியா 15:16; வெளிப்படுத்தல் 10:10). நமது கர்த்தர் தம்முடைய சபையின் நலனுக்குத் தேவையான உணவினை எப்போதுமே கொடுத்துள்ளார் மற்றும் சம்பூரணமாகவே எப்போதும் கொடுத்துள்ளார். ஏற்கெனவே பெற்றுக்கொண்டதான உணவைப் புசிப்பதிலும் மற்றும் அதனிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதான பலத்தைப் பயன்படுத்துவதிலும் சுறுசுறுப்பாய் இருப்பதே சபைக்கான சரியான மனப்பான்மையாய் இருக்க வேண்டும். அவள் திரளானவைகளைப் பெற்றிருக்கும் பந்தியை விட்டுவிட்டு, அதிகமானவைகளுக்காக ஜெபம் ஏறெடுக்கக் கூடாது. அதிகமானவைப் பிரயோஜனமாய் இருக்குமானால், அதிகமானவை, தேவன் மற்றும் சபையின் சில “ஊழியக்காரரின் கரங்கள் வாயிலாக அனுப்பிவைக்கப்படும். உண்மையான “ஊழியக்காரன் உணவைத் தயாரிக்க வேண்டிய அவசியத்தினைக் காண்பதில்லை ஏனெனில் உணவானது மாபெரும் வீட்டெஜமானால் அவனுக்குக் கொடுக்கப்படும். அவ்வுணவானது அவனுக்குக் “கிடைத்திடும் மற்றும் அவன் அதைக் கர்த்தருடைய குடும்பத்திற்கு முன்னதாக முன்வைக்கையில், அவர்கள் அதில் திவ்விய சத்தியத்தின் அடையாளங்களைக் கண்டுகொள்வார்கள். அதில் அவர்கள் சம்பூரணமாய்ப் பங்குகொண்ட பிற்பாடு, அதை அவர்கள் மற்றவர்களுக்குப் பரிமாறிடுவார்கள்.
நமக்குச் சத்தியம் “கிடைக்கும் போது, அதிகமான வேலையும் கடந்துவருகின்றது – அதைப் புசிப்பதற்கும், ஆராய்வதற்கும் மற்றும் அதை உள்வாங்கிக்கொள்வதற்குமான வேலையும் மற்றும் மற்றவர்களுக்கு அதைப் பரிமாறிடும் வேலையும் கடந்துவருகின்றது. சத்தியம் கிடைக்கையிலும், அதை முதலாவது சுவைக்கையிலும் – வேலை மற்றும் கசப்பான அனுபவங்கள் வருகிறதில்லை மாறாக இவை நம்முடைய மற்றும் மற்ற ஜனங்களுடைய தவறான அபிப்பிராயங்களுக்குச் சத்தியமானது முரண்படுகையிலேயே வருகின்றதாய் இருக்கின்றது. பின்னரே மற்றவர்களுக்கும் சத்தியமானது சுலபமாய்க் கிடைத்து, அதை அவர்கள் புசிக்கத்தக்கதாக, மற்றவர்களுக்கும் பரிமாறிடும் இன்பகரமாய், ஆனால் பெரும்பாலும் வலியுள்ளதாய்க் காணப்படும் வேலையானது கடந்து வருகின்றது. சத்தியத்தைப் புசித்தல் (அதை மெய்யென்று கண்டுகொள்ளுதலும் மற்றும் பின்னர்ப் பலமடையத்தக்கதாக அதை உள்வாங்கிக் கொள்ளுதல்) என்பது சிறு வேலையல்ல. ஒரு புதிய ஆகாரம் நம்முன் வருகையில், நம்முடைய கண்களானது முதலாவது அதை விமர்சிக்கின்றது. ஒருவேளை அது நல்லதாய்க் காணப்படுகிறதென்றால், அதை நாம் எடுத்து, அதை முகர்கின்றோம்; நம்முடைய பற்களினால் அதைக் கடிப்பதன் மூலம், அதை இன்னுமாய்ப் பகுத்துணர்கின்றோம்; பின்னர் நம்முடைய சுவைப்புலனானது, சுவையை வைத்துப் பகுத்துணர்கின்றது மற்றும் நமது பற்களானது போஷாக்கைப் பெறுவதற்கு ஆயத்தமாய்க் காணப்படுகின்றது. ஆகையால் ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் கர்த்தர் அவனுக்கான ஆவிக்குரிய ஆகாரத்தினை அளித்தப் பிற்பாடு மற்றும் அவனுக்கு அது “கிடைத்த பிற்பாடு, அதை மெய்யானது என்று கண்டுகொள்வதிலும் மற்றும் அதைப் புசிப்பதிலும், அவனுக்கு நிறைய வேலை காணப்படுகின்றது. மெய்யானது என்று நிரூபித்துக் கொள்ளுதல் / கண்டு கொள்ளுதல் அவசியமாய் இருக்கின்றது, காரணம் சாத்தான் தனது பிரதிநிதிகள் வாயிலாக நமக்கு விஷமான ஆகாரங்களைக் கொடுத்திடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றான். நாம் நமது ஆவிக்குரிய புலன்களைப் பயன்படுத்தி, நாம் புசிக்கும் அனைத்தையும் அளவுகோல் தரத்தினால் பகுத்தறிய அல்லது மெய்ப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் மற்றும் இப்படியாக தீமையினின்று நன்மையை வேறுபடுத்தி அறிய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேவன் விரும்புகின்றார். இந்த ஆராய்தலுக்கும், மெய்ப்பித்துக்கொள்ளுதல்களுக்கும் மற்றும் உள்வாங்கிக்கொள்ளுதல்களுக்கும் உலகம், மாம்சம் மற்றும் பிசாசிடமிருந்து எதிர்ப்புக் காணப்படுகின்றபடியால், இதற்கே அதிகமான சக்தியும், ஜெயங்கொள்ளும் தன்மையும் தேவையாய் இருக்கின்றது மற்றும் இதனால் மற்றவர்களுக்கு உதவுவதற்குக் கொஞ்சமே நேரமும், சக்தியும் காணப்படுகின்றது.
“ஏற்றகால சத்தியமாய் இராதபடியினால், பொருத்தமானதாய் இராது என்று தேவன் மறைத்துவைக்க விரும்பும் எந்த இரகசியங்களையும் நம்மால் உடைத்திட முடியாது மற்றும் [R1868 : page 218] இப்படிச் செய்ய நாம் விரும்பவும் கூடாது என்றும் நாம் நினைவில்கொள்வோமாக. கீழே விழும்வரை காய் பருவத்தில் காணப்படும் ஆப்பிளை அடிக்கிற சிறுவன், அது விழுகையில் தனக்கு ஆரோக்கிய கேட்டை உண்டுபண்ணும் ஆகாரத்தையே பெற்றுக்கொள்கின்றவனாய் இருப்பான். கனிந்த ஆப்பிளானது சுலபமாய் மரத்திலிருந்து பறிக்கப்படலாம். காய் பருவத்தில் காணப்படும் chestnut / செஸ்நட் கொட்டையானது, பறிப்பதற்கு மிகவும் சிரமமாய் இருக்கும் மற்றும் அதை உடைப்பதற்கும் மிகச் சிரமமே காணப்படும் மற்றும் அதை உடைத்தாலும், அதன் பருப்பு ஆரோக்கிய கேட்டையே கொண்டுவரும்; ஆனால் கனிந்த கொட்டையோ கீழே விழுந்து, தானாகவே உடைந்திடும் மற்றும் அதன் பருப்பு சுவையாய் இருக்கும். ஆகையால் நமது ஆண்டவர் நமக்கு என்ன தேவை என்பதை அறிந்திருக்கின்றார் என்றும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதை நமக்கு ஏற்றவேளையில் அளித்திடுவார் என்றும் நிச்சயம்கொண்டு, தெய்வீக வழிநடத்துதலினுடைய கனியும்பருவத்தினைக் கவனிப்பதிலும் மற்றும் வரும் காலங்களுக்கான ஐசுவரியமான பலன்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளத்தக்கதாக நமது மனங்களையும், இருதயங்களையும் தாழ்மையுடன்கூடிய ஆயத்தத்துடன் காணப்பட வைப்பதிலுமே நாம் விழிப்பாய்க் காணப்பட வேண்டும்.
டாணினுடைய (volumes) வெளிச்சத்தில் வேதவசனங்களை ஆராய்கையில், ஒவ்வொருவரும் சொல்விளக்கப்பட்டியல் தொகுதியையும் (concordance) மற்றும் ஓரக்குறிப்புகளையும் (marginal references) மற்றும் வாய்ப்பிற்கேற்ப வேதவாக்கியங்களினுடைய பல்வேறு மொழிப்பெயர்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் மற்றும் வேதவசனத்தின் எழுத்திற்கும், ஆவிக்கும் இசைவாய்க் காணப்படாத எதுவும் சத்தியமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்பதை நினைவில்கொள்ளுங்கள். தேவனுடைய வசனமே புசிக்கப்பட வேண்டும்; டாண்களும் (volumes) மற்றும் டவர்களும் (ரீப்பிரிண்ட்ஸ்) ஆகாரத்தினைப் போஷிக்கத்தக்கதாக – அதாவது “சத்தியவசனத்தை நிதானமாய்ப் பகுத்திடுவதற்கும் மற்றும் இப்படியாய் அதைப் புசிப்பதற்கு எளிமையாக்குவதற்கும் நமக்கு உதவுவதற்குத் தேவனால் அளிக்கப்பட்ட உதவிகளாய்க் காணப்படுகின்றது.
யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டம் குறித்து இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ள வெளிச்சத்தில், வசனத்தை ஆராயும் இத்தகைய கூட்டங்களானது, “டாண் குழுக்கள் என்று அழைக்கப்படுகின்றது. இத்திட்டமானது பல வருடங்களுக்கு முன்னதாக Baltimore- இன் சகோதரர் ரான் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது மற்றும் இதனால் அவரும், அவரது சபையின் அங்கத்தினர்களும் பலன் அடைந்ததாகத் தகவல் அறிவித்தனர். இதே திட்டமுறையானது மற்றப் பட்டணங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் சரியாய் நடத்தப்படும் பட்சத்தில் வெற்றியே அடைந்தும் இருக்கிறது. உதாரணத்திற்கு டிசம்பர் 15, “94-ஆம் வெளியீட்டில் இடம்பெறும் சகோதரர் Townsend அவர்களின் கடிதத்தையும், ஜனவரி 1, “95-ஆம் வெளியீட்டில் இடம்பெறும் சகோதரர் Jeffery அவர்களின் கடிதத்தையும் பார்க்கவும். “டாண் குழுக்களின் பலன் குறித்துச் சோதித்துப்பார்க்க வேண்டியதில்லை என்பதினாலும் மற்றும் அவைகளின் முக்கியத்துவமானது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளபடியாலும், சத்தியத்தின் மாணவர்கள் அனைவரும் மற்றவர்களுடைய அனுபவங்களினால் பலனடையத்தக்கதாக, இக்காரியத்தினை அறிவிப்பது நலமாயிருக்கும். இந்த டாண் குழுக்களை எங்கும் நடத்தும்படிக்கு நாம் அறிவுரை கூறுகின்றோம் மற்றும் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் பலனில் விசுவாசமுள்ளவர்களையும், உண்மையான கிறிஸ்தவ குணலட்சணமுடையவர்களையும் மாத்திரம் இக்குழுக்களுக்கு வரவேற்றுக்கொள்ளும்படிக்கு நாங்கள் உங்களுக்கு யோசனை கூறுகின்றோம். ஆனால் தேவனுடைய வழியை மிகவும் பூரணமாய்க் கற்றுக்கொள்வதற்கு வாஞ்சிக்கும் யாரும் மனப்பூர்வமாய் அனுமதிக்கப்படலாம். அப்போஸ்தலன் கூறியுள்ளது போன்று, “விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் (கிறிஸ்துவுக்கு முழுமையாய் ஒப்புக்கொடுக்காதவனை) சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள் – அவிசுவாசியின் சந்தேகங்களைக் குறித்துக் கலந்தாராய்வதற்கு நீங்கள்
கூடிடாமல், விசுவாசியின் விசுவாசத்தினை உறுதிப்படுத்திட கூடிடுங்கள் (ரோமர் 14:1; 1 கொரிந்தியர் 14:24,25).
வழிநடத்துபவர் நல்லதொரு வாசகனாய் இருப்பதும் மற்றும் அவர் volume – 1-இன் துவக்கத்துடன் துவங்குவதும் தகுதியானதாய் இருக்கும். அவர் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் சற்று நிறுத்திட வேண்டும் மற்றும் தேவைப்படும் பட்சத்தில் (கலந்துகொள்பவர்கள்) கேள்விகள் கேட்கப்படுவதற்கோ அல்லது கருத்துரைப்பதற்கோ முழு வாய்ப்பினை அளித்திடலாம் மற்றும் ஒவ்வொரு பத்தியினுடைய முடிவிலும், அதன் பொருளடக்கம் குறித்தும் பொதுவாய்க் கலந்தாயவும் மற்றும் இதனோடுகூட அப்பத்தியில் இடம்பெறும் வசனங்களையும், அவ்விஷயம் சம்பந்தப்பட்ட மற்ற வசனங்களையும் ஆராயவும் கலந்து கொள்பவர்கள் ஊக்கமூட்டப்பட வேண்டும். அனைவருடைய கருத்துக்களை வெளிக்கொண்டு வருவதும், கலந்தாயப்படும் அக்காரியம் குறித்து அங்குக் காணப்படும் ஒவ்வொரு நபரும் புரிந்திருக்கின்றார்களா என்று பார்ப்பதும் வழிநடத்துபவரின் நோக்கமாய்க் காணப்பட வேண்டும். சிலசமயங்களில் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் அல்லது சிலசமயம் ஒன்று அல்லது இரண்டு பத்திகளில் பிரயோஜனமான கலந்தாய்வு பண்ணிடுவதற்கு ஒரு முழுக்கூட்டமே தேவைப்படுகின்றது. டாண் குழுவில் காணப்படும் ஒவ்வொருவரும் சில வேதாகம மொழியாக்கங்களை அல்லது ஒரு “டாணை (volume) கையில் பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், குழுவிலுள்ள ஒவ்வொருவரும், பாடம் குறித்த தனது சிந்தனையைச் சுருக்கமாய்ச் சொல்லிட முயற்சித்திட வேண்டும்; இதினிமித்தம் அவன் எவ்வளவு தெளிவாய்க் கிரகித்துள்ளான் என்று பார்க்கப்படலாம் மற்றும் பாடத்தினை அவனுக்கு மிக ஆழப் பதியவைப்பதற்கும் ஏதுவாயிருக்கும். அனைவருமே சத்தியத்தினை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்ற கண்ணோட்டத்தில், ஒவ்வொருவரும் கலந்தாயப்பட்ட பாடத்தினைக் குறித்துத் தனது சொந்த வார்த்தைகளில் கூறிடுவதற்கும், அதுவும் “டாணில் முன் வைக்கப்பட்டுள்ள முறையில் கூறிடுவதற்கும் முயற்சிக்கும்படிக்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இவ்வகையான வேதாகம ஆராய்ச்சி வழிமுறையினைப் பார்க்கையில், volume -1-இன் முதல் அத்தியாயத்தில் எத்தனை சுவாரசியமான மற்றும் பிரயோஜனமான கலந்துரையாடல் பண்ணப்படலாம் என்பதைக் கவனியுங்கள். Volume -1- இன் முதலாம் அத்தியாயத்தின் முதல் பத்தியானது சங்கீதம் 30:5-ஆம் வசனத்தை: “அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும். கவனத்திற்குக் கொண்டுவந்து கையாளுகின்றதாய் இருக்கின்றது. இது எத்தனை கருத்துக்களை, கலந்துகொள்ளும் ஒவ்வொரு தேவபிள்ளைக்குள் கொண்டுவருகின்றதாய் இருக்கும்! (1) பாவம் மற்றும் மரணம் ஆளுகை செய்யும் நீண்ட, இருண்ட இரவினை ஒவ்வொருவரும், இப்பொழுது விடிந்து கொண்டிருக்கின்றதும், கிறிஸ்துவின் மாபெரும் வேலையினால் நீதியும், ஜீவனும் ஆளுகை செய்யப்போகின்றதுமான நீண்ட மகிமையான நாளுடன் வேறுபடுத்திக் காண்பித்திடலாம். (2) இரவிற்கும், தெய்வீகத் தயவு மறுக்கப்பட்டதற்குமான காரணமாகிய கீழ்ப்படியாமையானது, காலைக்கான காரணமாகிய – நாம் தேவனுடைய குமாரனின் மரணத்தினால் அவருடன் ஒப்புரவாகிடும் காரியத்துடன் வேறுபடுத்திக் காண்பிக்கப்படலாம். (3) கண்ணீர் மற்றும் வேதனைக்கான காரணமாகிய – சாபமாகிய அல்லது நீதியான தீர்ப்பாகிய – “நீ சாகவே சாவாய் என்பதானது, விடியலின் சந்தோஷம் மற்றும் களிப்பிற்கான காரணமாகிய – தேவன் அறிவித்துள்ளதான திரும்பக்கொடுத்தலின் காலங்களின், இளைப்பாறுதலின் காலங்களின்போதான “மரித்த உம்முடையவர்கள் எழுந்திருப்பார்கள் எனும் காரியத்துடன் வேறுபடுத்திக் காண்பிக்கப்படலாம் (அப்போஸ்தலர் 3:19-21). பாவம் ஆளுகை செய்கின்றதான இருளான இரவு குறித்தும், இப்பொழுது பிரகாசித்துக்கொண்டிருக்கும் நீதியின் சூரியனுடைய கதிர்களின் வெளிச்சம் பற்றி, தான் உணர்ந்துள்ளவைகள் குறித்தும் மற்றும் தனது விசுவாசத்தின் கண்களுக்கு இப்படியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதான மகிமையான நம்பிக்கைகள் குறித்தும், தான் அறிந்திருப்பவைகளைச் சொல்லிடுவதற்கு ஒவ்வொருவரும் ஊக்கமூட்டப்பட வேண்டும்.
இரண்டாம் பத்தியானது ஏசாயா 55:8,9-ஆம் வசனங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் சிந்திப்பதற்கும், பிரயோஜனமாய் உரையாடுவதற்கும் அதில் அநேகம் காரியங்கள் உள்ளன. இந்த இரண்டு பத்திகளுமே கூட்டத்திற்கான முழு நேரத்தையும் [R1868 : page 219] எடுத்துக்கொள்ளும்; மற்றும் ஒருவேளை குழுவானது அதிக எண்ணிக்கையானவர்களைப் பெற்றிருக்குமானால், இவைகளை முழுமையாய் ஜீரணிக்க இரண்டு கூட்டத்தொடர் அவசியப்படலாம்.
மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் பத்திகளானது சத்தியத்தைத் தேடுபவர்களென நாம் கொண்டிருக்க வேண்டிய நோக்கங்களையும், நாம் எதை நாட வேண்டும் என்பதையும், நாம் எதைக் கண்டடைவோமெனத் தேவன் வாக்களிக்கின்றார் என்பதையும் கையாளுகின்றதாய் இருக்கின்றது (யோவான் 16:13) மற்றும் வேறு வேதவாக்கியங்களும் நினைவுக்கு வருகின்றது. அடுத்ததாக ஆறாம் பத்தியானது வேதாகம ஆராய்ச்சிக்கான சரியான வழிமுறைகளைக் கையாளுகின்றது மற்றும் எபேசியர் 4:11-16-ஆம் வசனப்பகுதியைக் குறிப்பிடுகின்றது; இதுதவிர குழுவினருக்கு நினைவுக்கு வரும் மற்ற அநேகம் வேதவாக்கியங்களானது குறிப்பிடப்படலாம். எட்டு மற்றும் ஒன்பதாம் பத்தியானது ஆராய்ச்சிக்கான சரியான மற்றும் சரியற்ற வழிமுறைகளை வேறுபடுத்திக் காண்பிக்கின்றது மற்றும் புதிய சுவாரசியமான வேதவாக்கியங்களை முன்வைத்திட அழைக்கப்படலாம். மூன்று முதல் ஒன்பது வரையிலான பத்திகளானது, டாண் குழுக்கான இரண்டாம் கூட்டத்தொடருக்குப் பிரம்மாண்டமான மற்றும் உதவிகரமான வேதாகம மற்றும் திட்டம் குறித்த ஆராய்ச்சியினைக் கொடுக்கின்றதாய் இருக்கும்.
அடுத்த ஏழு – அதாவது 10 முதல் 16 வரையிலான பத்திகளானது, உலகத்தினுடைய தற்போதைய மத நிலவரத்தைக் கையாண்டு, சரியாய்ப் பயன்படுத்தும் பட்சத்தில் அருமையான மூன்றாம் பாடமாக அமையும். ஆராயப்படும் பாடம் சம்பந்தமான ஒரு டவர் கட்டுரையானது (ரீப்பிரிண்ட்ஸ்) (பிப்ரவரி “90, பக்கம்- பிரயோஜனமாய்க் காணப்படத்தக்கதாக உள்ளே கொண்டும் வரப்படலாம். எத்தனை சுவாரசியமான கேள்விகளும், சில சரியான மற்றும் சில சரியற்ற கருத்துக்களும் அனைவருடைய மனங்களில் கடந்துவருகிறதாய் இருக்கும் மற்றும் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் மகா பரிசுத்தமான விசுவாசத்தில் கட்டியெழுப்புவதில் எத்துணை உதவிகரமாய்க் காணப்படுவார்கள் மற்றும் வீடுகளுக்குத் திரும்புகையில், எத்தனைபேர் முன்பில்லாத அளவுக்கு உலகத்தின் பொதுவான இருளையும், வெளிச்சத்தின் மற்றும் அதற்குக் கண்கள் திறக்கப்படுவதின் முக்கியத்துவத்தையும் முழுமையாய் உணர்ந்து கொண்டவர்களாய்த் திரும்பிடுவார்கள். இப்படியாக நாம் தொடர்ந்து செய்வோமானால், ஒவ்வொரு பாடமும் படிப்பினைகள் நிறைந்ததாகவும், வேதவாக்கியங்கள் சரியாய்ப் பொருத்திப் பார்க்கப்பட்டதாகவும் காணப்படும். டாண் குழுக்களானது, புதிதான “விசுவாசிகள் சிலர் கலந்துகொள்கையில் மிகவும் சுவாரசியமாய்க் காணப்படும். டாண் குழுக்களில் ஆராயப்படும் சத்தியத்தில் சிறு ஆர்வம் காண்பிக்கும் உங்களது கிறிஸ்தவ நண்பர்களுக்குக்கூட இது குறித்துத் தெரிவிக்கப்பட்டு, முதலிலிருந்தே வந்து, கலந்துகொள்ளும்படிக்கு அழைக்கப்படலாம். ஆனால் குழுவில் அதிகம் பாடங்கள் கடந்து போயுள்ள நிலையில், யாரேனும் புதிதாய் வந்து இணைந்து கொள்வார்களானால், அவர்களுக்காகத் திருமபி முதலிலிருந்து வர அவசியமில்லை ஏனெனில் அவைகளை (கலந்து கொள்ளாதப்போதுள்ள பாடங்களை) அவர்கள் இல்லங்களிலிருந்து வாசித்துக்கொள்ளலாம் மற்றும் பொருத்தமாய் இருக்குமென வழிநடத்துபவர் கருதுவாரானால் அவர் சுருக்கமான விளக்கங்களைக் கொடுத்திடலாம்.
ஆனால் சிலர் சொல்லிடலாம்… இந்த வேகத்தில் சென்றால் மில்லேனியேல் டாணின் முதலாம் தொகுதிக்கு (volume- 1) ஒரு வருடம் முழுக்க எடுத்துக்கொள்ளும் என்றும், மூன்று தொகுதிகளுக்கு, மூன்று வருடங்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சொல்லிடலாம். வருஷம் முழுவதும் ஆவிக்குரிய புத்துணர்வு அடையப்பெறுகின்றதானால், அது ஒரு நாளுக்கு மாத்திரமே காணப்படுவதைக் காட்டிலும், வருஷம் முழுவதும் காணப்படுவது நலமானதே; கடமைக்காக அல்ல, மாறாக நாமும் நமக்கெனத் தெளிவாய்ப் பார்த்துக் கொள்ளத்தக்கதாகவும், நம்மில் காணப்படும் நம்பிக்கைக்கான காரணத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பும் எவனுக்கும் நாம் பதிலளிக்க முடியத்தக்கதாகவும், வேதவசனத்தின் ஆராய்ச்சியில் ஆவிக்குரிய புத்துணர்வை அடைவதே நமது நோக்கமாகும். நீங்கள் ஆராய்ந்த தொகுதியினுடைய ஆராய்ச்சியின் முடிவில், யுகங்களுக்கடுத்தத் தெய்வீகத் திட்டத்தின் – திவ்விய வெளிப்பாட்டின் பல்வேறு அம்சங்களைப் பிரகாசிப்பிக்கும் – கர்த்தருடைய ஏவுதலின்பேரில் பேசப்பட்டதான எண்ணற்ற வேதவாக்கியங்களை ஆராய்ந்தவர்களாய் இருப்பீர்கள். வேதாகமத்தினை ஆயத்தம் பண்ணிடுவதற்குக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதானால், அதை நாம் பயபக்தியுடன் ஆராய்ந்திட வேண்டும்; சாதாரணமாய்ப் பார்த்து, எண்ணி செல்லக்கூடாது. இதுவுமல்லாமல், இப்படியாகப் பாடத்தினை நீங்கள் முற்றும்முடிய ஆராய்ந்திருப்பதினால், அது தொடர்பான எக்கேள்விக்கும் உடனடியாகப் பதிலளிப்பதற்கும் மற்றும் உங்கள் வார்த்தைகளை ஆதரிக்கும் வேதவாக்கியங்களை மேற்கோளிட்டுக் கூறிடவும் ஆயத்தமாய்க் காணப்படுவதற்கும் நீங்கள் மிகத் திறமிக்கவர்களாகிடுவீர்கள். “சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காக தங்களை ஆயத்தப்படுத்துவதற்காக மாத்திரமாக அனைவருக்கும் இத்தகைய ஆராய்ச்சிகளானது தேவையாய் இராமல், இன்னுமாக இந்தப் பொல்லாத நாட்களில் அதிகரித்துக் கொண்டுவரும் மோசங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் ஒவ்வொருவருக்கும் இத்தகைய ஆராயச்சிகளானது அவசியமாய்க் காணப்படுகின்றது.
டாண்களை வெறுமனே வாசிப்பது என்பது பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையாக இருப்பதில்லை ஏனெனில் ஒவ்வொருவராலும் வீட்டிலேயே, தனிமையில் இருக்கையில் நன்கு வாசித்துக்கொள்ள முடியும். நம்மால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையானது, தேவனுடைய மகாபெரும் இரட்சிப்பின் திட்டத்திற்கான ஒரு பொது ஆராய்ச்சியாகும் – அதாவது தெய்வத்தன்மைக் குறித்த விசாலமான ஆராய்ச்சியாகும் – டாண்களைப் பயன்படுத்துகையில், அவை அனைவருடைய மனங்களையும் ஒரே ஆவிக்குரிய கால்வாய்க்குள்ளாகச் செலுத்தவும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்தறிய உதவவும் மாத்திரம் செய்கின்றது. இந்த ஆராய்ச்சிகளுக்குள்ளாகக் கொண்டுவரப்பட முடியாத நிலையில் எந்த வேதவாக்கியங்களும் இருப்பதில்லை ஏனெனில் வேதவாக்கியங்கள் அனைத்துமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேவனுடைய திட்டத்துடன் தொடர்புடையதாய் இருக்கின்றன. வேதாகமம் முழுவதையும், முழுமையான விதத்தில் ஆராய்வதும் மற்றும் ஆராயப்படும் பாடத்தின் மீது ஒளிக்கொடுக்கும் ஒவ்வொரு வசனத்தையும், கருத்துக்களையும் முன்னுக்குக் கொண்டு வருவதில் அனைவருடைய ஒத்துழைப்புக் காணப்படுவதும்தான் இவ்வாராய்ச்சியின் வடிவமைப்பாய் இருக்கின்றது.
நம்முடைய இனத்திலுள்ள அனைவரையும் பாதித்துள்ளதான இழிவு தன்மைக்குறித்து அறிந்தவர்களாக, நாம் ஒன்றுகூடி வரும்போதெல்லாம்,ஒருவருக்கொருவர் பக்திவிருத்தியடையப்பண்ணும் மற்றும் ஒருவரையொருவர் மகா பரிசுத்தமான விசுவாசத்தில் கட்டியெழுப்புகின்றதானவைகளையும் தவிர மற்ற ஏதும் நம்முடைய வாயினின்று புறப்படாதபடிக்கு நாம் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் மற்றும் நாம் தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாராய்ச்சியானது, பிறரைக்குறித்துப் பேசுதலையும், வீணான பேச்சுகளையும் தடுத்துப்;போட்டு, “நீதியானவைகளை மற்றும் உண்மையானவைகளை மற்றும் [R1869 : page 219] தூய்மையானவைகளை மற்றும் நற்கீர்த்தியுள்ளவைகளையே நாம் சிந்திக்கவும், பேசவும்பண்ணுகின்றது. தன் மீதும், கர்த்தருடைய சரீரத்தின் மற்றவர்கள் மீதும் கர்த்தருடைய ஆசீர்வாதம் வரவேண்டுமென ஜெபித்து, ஒவ்வொருவரும் கூட்டத்திற்கும் கடந்துவருவார்களானால், அதை உதவிகரமாய்க் காண்பார்கள். வழியையும், சத்தியத்தையும், ஜீவனையும் அதிகமதிகமாய் நாடுகின்ற நம் அனைவரோடும் நமது பிதாவாகிய தேவன் மற்றும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், இரக்கமும், சமாதானமும் காணப்படுவதாக.