ஏதோ புதுமையென்று திகையாமல்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R2264 (page 54)

ஏதோ புதுமையென்று திகையாமல்

THINK IT NOT STRANGE

“பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.” – 1 பேதுரு 4:12,13)

இப்போது இருப்பதுபோல, அறுவடை வேலையின் மீதான மாபெரும் எதிராளியானவனின் தாக்குதலானது இவ்வளவுக்கு ஆற்றல்மிக்கதாக வேறு எப்போதும் இருந்ததாக நாங்கள் அறியவில்லை. ஒவ்வொரு திசையிலுமிருந்து – பற்றியெரிகிற அக்கினிகளும், மறைவான ஆபத்துக்களும், துன்புறுத்தல்களும் தற்கால சத்தியத்தின் வெளிச்சத்தினைப் பின்பற்றினவர்களுக்கும் மற்றும் கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருக்கத்தக்கதாக தீர்மானதோடு காணப்படுகிறவர்களுமானவர்களுக்கு எதிராக செயல்படுத்தப்படுகின்றன அல்லது ஆயத்தப்படுத்தப்படுகின்றன என்று தகவல் எங்களுக்கு வருகின்றது. எங்களுக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் நாங்கள் வெளியிடுவது நலமானதாய் இருக்காது; ஏனெனில் அநேகமானவைகள் ஊக்கமிழக்கச் செய்கிறதாக இருப்பினும், அநேகமானவைகள் ஊக்கமூட்டவும் செய்கின்றதாக இருக்கின்றது; இப்படி ஈடுசெய்கிறதற்காகக் கர்த்தரை ஸ்தோத்தரிக்கின்றோம். எனினும் சிலவற்றை அனைவரும் பொதுவான விதத்தில் இரண்டு காரணங்களுக்காக அறிந்திருக்க வேண்டுமென நாம் விரும்புகின்றோம்; அவை: (1) இது அவர்களுக்கு இம்மாதிரியான தருணங்கள் வருகையில், அதை எதிர்க்கொள்ளத்தக்கதாக, அவர்களை வலிமைப்படுத்திடும் மற்றும் (2) இது அவர்களில் அனுதாப அன்பினை வளர்த்திடும்; ஏனெனில் சரீரத்தில் ஓர் அவயவம் பாடுபட்டால், அதோடுகூடப் பாடுபடுகிறதன் வாயிலாக அவயவங்கள் அனைத்திற்கும் பிரயோஜனம் உண்டாகிறது.

இங்கு ஒரு விவகாரத்தை நாம் குறிப்பிடுகின்றோம், காரணம் அதன் காரியங்களானது, சிலருக்குப் படிப்பினையைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். சகோதரர் Bahret – இன் கடிதமானது பிரச்சனையைப் பின் வருமாறு எடுத்துரைக்கின்றது —

நீயூயார்க்

அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:–

எங்களது அனுபவங்களைக்குறித்து நான் உங்களிடம் சொல்லிட வேண்டும். கடந்த ஜூன் மாதம் சகோதரர் W. de Ronden Pos அவர்கள் நியூயார்க் பட்டணத்திலிருந்து இங்கு வந்து, மாலையில் கூட்டம் ஒன்றினை நடத்தி, அதில் ரோமர் 8-ஆம் அதிகாரத்தின் அடிப்படையில் உரையாற்றினார் மற்றும் அது மிகவும் நல்ல மற்றும் ஆசீர்வாதமான கூட்டமாகவே இருந்தது என்று நான் சொல்லிடுவேன். அப்போது அவர் தனது பெயர்ச்சபையை தான் விட்டுவிலகிடவும் வேறு ஏதேனும் தொழிலில் ஈடுபடவும் நோக்கம் கொண்டிருப்பவராகவும் மற்றும் ஒருவேளை சாத்தியமாகும் பட்சத்தில், அவர் இங்குக் குடிப்பெயர்வார் என்பதாகவும் கூறினார். அவரை எங்கள் மத்தியில் பெற்றிருக்க நாங்கள் மகிழ்ச்சியாய் இருப்போம் என்ற எங்கள் விருப்பத்தினை நாங்களும் தெரியப்படுத்தினோம்; ஆனால் இதற்கப்பால் எதுவும் செய்யப்படவில்லை. பின்னர் மீண்டுமாக அவர் எங்கள் பட்டணத்தில் ஒருவாரக்காலம் வருகைதந்து, ஒரு சில கூட்டங்களை நடத்தினார்; ஆனால் சகோதரனே, நான் ஜெர்மனியில் அப்போது காணப்பட்டப்படியால், நான் இங்குக் காணப்படவில்லை மற்றும் நாங்கள் திரும்பிவருவது வரையிலும், என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டதென்று அறியாமல் இருந்தோம். அவர் இங்கு வருவதற்கும், தனக்குக் கிடைக்கும் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடலாம் என்று, உதாரணத்திற்கு agency- இல் வேலை பார்க்கலாம் என்று அல்லது பிழைப்பிற்காகக் [R2264 : page 55] காய்கறிகள் மற்றும் கோழிகளை வளர்க்கத்தக்கதாகப் பட்டணத்தினுடைய புறநகர் பகுதிகளில் இடம் ஒன்றைக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார் என்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கொஞ்சம் வசதியுள்ளவர் என்றும், இதனால் முழுமையாக அவர் தனது தொழிலைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் நான் அறிந்துகொண்டேன். அவர் அதிகம் முன்னின்று நடத்துவார் என்றும், மற்றபடி எங்களது கூட்டங்களானது முன்பு போலவே தொடரும் என்று எண்ணினோம்; எங்களால் முடிந்தமட்டும் பூலோகத்திற்கடுத்தவைகளில் அவருக்கு உதவிட விரும்பினோம் மற்றும் நான் ஐரோப்பியாவிலிருந்து திரும்பின கொஞ்சக்காலத்திற்குள்ளாகவே, அவரும் இங்கு வந்து சேர்ந்தார். அவருக்கு மாதத்திற்கு 15 டாலர் நாம் கொடுக்கலாம் என்று நான் கூறினேன் மற்றும் எங்களது பொருளாளரிடம், பற்றாக்குறையினை நான் சந்திப்பேன் என்று தெரிவித்தேன்.

அவர் வந்த பிற்பாடு நல்ல சில கூட்டங்களைப் பெற்றிருந்தோம். புதன் இரவு கூட்டங்கள் ஒன்றில், நாம் (ஊழியர் தேர்ந்தெடுத்தல் நடத்த) ஒழுங்குமுறைக்குள் வரவேண்டும் என்று முன் வைத்தார். நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு முன்னதாக நாம் அனைத்தையும் நன்கு கருதிப் பார்க்கலாம் எனும் யோசனையை நான் முன்வைத்தேன்; ஆனால் அவர் ஒழுங்குமுறைக்குட்படுத்துதலுக்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் எழுந்துநிற்பதன் மூலம் அதைத் தெரிவித்திட வேண்டும் என்று சொல்லி வாக்கெடுக்க கடந்துபோனார் மற்றும் அனைவருமே எழும்பி நின்றார்கள்; நானும் தயக்கத்தோடே எழும்பி நின்றேன்; மறுப்புத் தெரிவிப்பதற்கு எந்தத் திட்டவட்டமான காரியங்களை நான் பெற்றிராத போதிலும், எனக்கு வாக்களிக்க விருப்பமில்லாமல்தான் இருந்தது. எனினும் ஒழுங்குமுறை ஏற்படுத்துவதற்குரிய நியமிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக இன்னொரு கூட்டம் நடத்திட வேண்டும் என்று நான் கூறினேன்.

நாங்கள் சகோதரர்கள், கூட்டம் ஒன்றினை நடத்தினோம் மற்றும் அவரும் காணப்பட்டார்; ஆனால் முழு நேரமும் ஞானஸ்நானம் குறித்துப் பேசினதிலேயே செலவழிந்துபோனது; ஞானஸ்நானத்தினைக் கட்டாயமாக்கிட வேண்டும் என்று அவர் எண்ணம்கொண்டிருந்தார்; ஆனால் தேவனுடைய பிள்ளையாகவும், இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவராகவும் காணப்படும் யாரேனும், தண்ணீர் ஞானஸ்நானத்தைக்குறித்து நாம் காணுகின்றது போன்று காணமுடியாததன் காரணமாக, அவர்களை வற்புறுத்தவோ அல்லது தள்ளிவைக்கவோ கூடாது என்று நாங்கள் வலியுறுத்தினோம். இவ்விஷயத்தில் அவர் எங்களுடன் இணங்கினார் என்று நாங்கள் எண்ணினோம் மற்றும் டிசம்பர் 15-ஆம் தேதியன்று மாலையில் நாங்கள் கூட்டம் ஒன்றினைப் பெற்றிருந்தோம் மற்றும் அவர் சில வார்த்தைகளைப் பேசின பிற்பாடு, அவரால் வடிவமைக்கப்பட்ட “அறிக்கை” ஒன்றினை வாசித்து, அதில் நாங்கள் கையெழுத்திட்டோம்; நான் தான் முதலாவதாகக் கையெழுத்திட்டேன்; ஏனெனில் அதற்குக் கையெழுத்திட என்னால் எப்போதும் கூடும். நாங்கள் கையெழுத்திட்டதான “அறிக்கையானது” மிகவும் எளிமையானதாகவும், பரமபிதாவையும், நமது இரட்சகரும், ஆண்டவருமான அவரது குமாரனான இயேசுவையும் அங்கீகரித்ததாகவும் இருந்தது. அந்த இரவில் 22 பேர் அதில் கையெழுத்திட்டார்கள் என்று எண்ணுகின்றேன்; இதில் சிலரை நாங்கள் பார்த்ததேயில்லை அவர்கள் எங்களை விட்டுப் பிரிந்துபோய், எங்களுக்கு உலகத்தார் போன்று காணப்படுபவர்களாய் இருந்தவர்கள் ஆவர். அவர் நீண்ட நேரம் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பேசி, ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் எவரையும் அவர் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கெடுக்க அனுமதிப்பதில்லை என்றும், அது தனது சொந்த தாயாராகவும் காணப்பட்டாலுங்கூட, இப்படி அனுமதியாதது, அவள் இருதயத்தினை நொறுக்கிப்போடும் என்றாலும் தான் அனுமதிப்பதில்லை என்றும் கூறினார். எங்களில் சிலர் தங்கள் பெயர்களைப் பட்டியலிலிருந்து அழிக்கும்படிக்குக் கேட்டுக்கொண்டனர்; சிலர் மறுப்புத் தெரிவித்தனர் மற்றும் பிரச்சனைத் துவங்கினது.

அதே கூட்டத்தில்தான் அவர் – தானும் மற்ற அங்கத்தினர்கள் போன்று தான் என்றும், எப்போதேனும் தான் “ஏதோவாக” ஆக வேண்டுமென எண்ணங்கள் தனக்குள் உதித்திருந்தாலும், தான் அதை முற்றிலுமாய்க் கைவிட்டுவிட்டார் என்றும், எந்தச் சகோதரனும் தனக்கு இணையாகவே காணப்படுகின்றார் என்றும்; இதனால் அங்கத்தினர்கள் பட்டியலில் தனது பெயரை முதலாவதாக, தான் எழுதிடாமல், கடைசியில்தான் கையெழுத்திடுவார் என்றும் கூறியிருந்தார். ஆகையால் அதேகூட்டத்தில், ஞானஸ்நானம் எடுக்காதவர்களைக்குறித்து மற்றவர்கள் வேறே கருத்தில் காணப்படுகின்றனர் என்று அவர் அறிந்திருந்தபோதிலும், அவர் ஞானஸ்நானம் எடுக்காதவர்களை, கர்த்தருடைய பந்தியில் பங்கெடுக்க அனுமதிப்பதில்லை என்று கூறினதானது சிலருக்கு விநோதமாய் இருந்தது.

அடுத்து நடந்தது என்ன என்று விவரமளிப்பதற்கு முன்னதாக, வேறொரு விவரத்தையும் நான் கொடுக்க வேண்டியுள்ளது; இதற்கு முந்தின ஞாயிற்றுக் கிழமையன்று, அவர் “கர்த்தருடைய இராப்போஜனமானது” வாரந்தோறும் ஆசரிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தைக் கூட்டத்தில் முன்வைத்தார். இது விஷயத்தில் சிலர் அவருக்கு இணங்கினார்கள் மற்றும் மற்றவர்கள் இணங்கிடவில்லை.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரித்தோம் மற்றும் சகோதரர் Pos அவர்கள் ரோமர் 14-ஆம் அதிகாரத்தை வாசித்து, ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் விஷயத்தில் என்ன செய்திட வேண்டும் என்று கர்த்தர் தனக்குக் காண்பித்துக் கொடுத்ததாகக் கூறினார் (நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்ததுபோல, கையெழுத்துப் போட்டிருந்தவர்களில் சிலர் யார் என்று எங்களுக்குத் தெரியாது, காரணம் அவர்கள் முந்தின கூட்டங்களில் சிலமுறைகள் கலந்து கொண்டவர்களாகவும், சிலர் கூட்டங்களில் ஒருபோதும் கலந்து கொள்ளாதவர்களாகவும் காணப்பட்டனர்; அவர்கள் “டிசைப்பில்ஸ் / சீஷர்கள் / Disciples ” எனும் சபை பிரிவைச் சேர்ந்தவர்களாவர்; அவர்கள் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டவர்கள், எனினும் எங்கள் அனைவருக்குமே பெயர்ச் சபையினராகவே தோற்றமளித்தனர்); இந்த விதியை நடைமுறைப்படுத்துவதற்கு, ஞானஸ்நானம் எடுத்தும், உலகத்தாராய் இருக்கும் சில ஜனங்களை உள்ளே அனுமதிப்பதாகவும், நம்மோடு இசைவான நிலையில் காணப்படும் மற்றவர்கள் தள்ளிவைக்கப்படுவார்கள் என்பதாகவும் தெரிவித்தார் மற்றும் இப்படியாக இவர்களை மறுபடியுமாக உள்ளே அனுமதித்து, மற்றவர்களை அப்போது புறக்கணித்தார்; மற்றும் பிற்பாடு அவர்களையும் மறுபடியுமாக உள்ளே அனுமதித்தார் மற்றும் இவர்களே அவரது பிரதான ஆதரவாளர்களாக இப்பொழுது காணப்படுகின்றனர். இப்படியாகக் காரியங்கள் ஜனவரி மாதம், முதலாம் வாரம்வரை நடந்துகொண்டிருந்தது; அப்போது நாங்கள் சில ஒழுங்கினைப் பெற்றிருப்பதன் அவசியத்தைக் கண்டுகொண்டோம் மற்றும் சில மூப்பர்கள் தெர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று முன்வைக்கப்பட்டது; இது வேதவாக்கியங்களின் அடிப்படையில் காணப்படுகின்றது என்றும், நவம்பர் 15, “95 வாட்ச் டவர் வெளியீட்டிலும் உங்களது அறிவுரையும் இப்படியாகக் காணப்பட்டது என்றும் நாங்கள் கண்டுகொண்டோம். இதற்கிடையில் அவர் பிரசங்கம் பண்ணிடுவதற்குத் திறமைமிக்க ஒருவராய் இருக்கின்றார் என்று நான் கருதினதையும், அதை அவரால் முழுமையாகப் பிரயோஜனப்படுத்த முடியாததற்காகப் பரிதாபம் கொள்கின்றேன் என்பதையும், அவரை நீங்கள் வாட்ச் டவர் பைபிள் டிராக்ட் சொசைட்டியினால் வேலையில் அமர்த்திடும் திட்டம் ஒன்றினை உங்களுக்கு யோசனையாகக் கூறியும் கடிதம் உங்களுக்கு எழுதியனுப்பியிருந்தேன். நீங்கள் அவருடன் தொடர்ச்சியாய்த் தொடர்பில் காணப்படுவதாக நான் எண்ணிக்கொண்டிருந்தபடியால், சமீபக்காலமாக, அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் உங்களுக்கில்லை என்று உங்களிடம் தகவலறிந்தபோது, அது எனக்கு விநோதமாகவே இருந்தது; எனினும் நான் உங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதைக்குறித்தும், அதை நீங்கள் நன்றாய் வரவேற்றது குறித்தும், ஆயினும் அவர் வாயிலாகவே நீங்கள் கேட்க விரும்பினது குறித்தும் அவர் அறிந்திட வேண்டும் என்றும் நான் எண்ணினேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியமன்று, கூட்டத்திற்குப் பிற்பாடு, அவரிடம் பேசிட வேண்டுமென்றிருந்தேன்; மற்றும் அவர் மற்றவர்களுடன் பேசிமுடித்துவருவதற்கு நான் காத்துக்கொண்டு நின்றேன்; திடீரென அவர் மில்லேனியேல் டாணின் (volume) உபதேசங்களானது பாதாளத்திலிருந்து வந்ததென வெளிப்படையாய்த் தாக்கிப்பேசத் துவங்கினார் மற்றும் கர்த்தர் வந்துள்ளதாகச் சொல்லிடும் ஜனங்களைக் கர்த்தர் மன்னிப்பாராக என்று கூறினார். நான் உடனே: “சகோதரனே நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள் என்பதைக்குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள்; ஒரு விஷயம் பிசாசிடமிருந்து வருகின்றது என அவசரப்பட்டுக் கூறிவிடாதீர்கள்” என்று கூறினேன். அதற்கு அவர்: “அது பிசாசிடமிருந்துதான் வந்துள்ளது மற்றும் அதன் உபதேசங்களினால் அநேகர் இடறிபோய் விட்டனர்” என்றார் மற்றும் அவற்றை மிகுதியாய்த் தாக்கிப் பேசினார்.

நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டோம்; நான் அதிர்ச்சி யடைந்து போனேன்; அப்போது இவைகளைக்குறித்து உங்களுக்கு எழுதிட எனக்கு மனதில்லாமல் இருந்தது; ஏனெனில் இவைக்குறித்து அவரிடம் பேசுவதற்கும், விவரித்திடுவதற்கும், அவரது தவறை அவர் கண்டுகொள்வதற்கும் வாய்ப்புக் கிடைக்குமென நான் எண்ணினேன். ஆனால் காரியங்கள் மிகவும் மோசமானது.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, மூப்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென ஒரு கூட்டமானது எங்களுக்கு நடைப்பெற்றது. அது சகோதரர்களுக்கான கூட்டமாக மாத்திரம் காணப்பட்டது; ஏனெனில் சபையினை நிர்வகித்தல் விஷயத்தில், பவுலினுடைய போதித்தல்கள்படி ஸ்திரீயானவள் அமைதியாகக் காணப்பட வேண்டும் என்று அவர் கூறினார் மற்றும் இதில் நாங்கள் அவருக்குப் பகுதியளவு இணங்கினோம். மேலும் ஸ்திரீகள் மிக எளிமையாக வஞ்சிக்கப்படுகிறவர்களானபடியால், அவர்களை வாக்களிக்க அனுமதிப்பது பாதுகாப்பாய் இராது; ஏனெனில் தகுதிகளின் அடிப்படையில் இல்லாமல், தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுப்பவர்களாய்க் காணப்படுகின்றனர் என்று அவர் கூறினார். பின்னர் மூப்பர்கள் அல்லது கண்காணிகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? என்ற கேள்வி எழும்பினது. தீமோத்தேயு மற்றும் தீத்துவுக்கு எழுதப்பட்டுள்ள நிருபங்களை வாசிக்கையில், அங்கு அவர்களுக்கான தகுதிகளானது தெளிவாய்க் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், பின்னர் ஒவ்வொருவரும் தனது பகுத்தறிவின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பானாக என்றும் நான் முன்வைத்தேன். அவர் இதற்கு மறுப்புத் தெரிவித்து, [R2265 : page 55] தன்னோடு நன்கு ஒத்துழைப்புக்கொடுத்து வேலை பார்ப்பவரென, தான் கருதுபவரைத் தேர்ந்தெடுப்பதற்கு அல்லது முன்மொழிந்திடுவதற்கு, மேய்ப்பனாகிய / பாஸ்டராகிய தனக்கு உரிமை காணப்படுவதாக, தான் எண்ணுவதாகத் தெரிவித்தார்; நாங்கள் அவர் தேர்ந்தெடுத்தவரை அங்கீகரித்திடலாம் அல்லது அங்கீகரிக்கவில்லையெனில் வேறொருவரை, தான் தேர்ந்தெடுப்பதாகக் கூறினார். இதுவரையும் அவர் பாஸ்டராக எங்களால் கருதப்படவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

சரி, நமக்கு இதுவரை பாஸ்டர் யாரும் இல்லையெனில் மற்றும் இதுவரையிலும் நான் தற்காலிகமான பாஸ்டராகத்தான் இருந்துள்ளேனானால், நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், ஒரு பாஸ்டரைத் தேர்ந்தெடுப்பதுதான்; மேலும் நான் உங்களது பாஸ்டர் இல்லையெனில், [R2265 : page 56] நான் இனிமேல் கூட்டத்தினைத் தலைமைத் தாங்கி நடத்திடமாட்டேன் என்று அவர் கூறினார். நாங்களோ: நாங்கள் செய்யும்படிக்கு வேதாகமம் அங்கீகரிப்பவைகளை மாத்திரமே நாங்கள் செய்ய விரும்புகின்றோம்; இந்த விதத்தில் ஒரு மேய்ப்பனைத் தேர்ந்தெடுக்க வேதாகமம் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றதானால், அதை நாங்கள் செய்வோம்; ஆனால் முதலாவதாக இது விஷயத்தில் நாங்கள் அறிய வேண்டிய காரியங்கள் இருக்கின்றன என்று கூறினோம்.

அதுவரையிலும் முன்புபோல் கூட்டத்தினை நடத்திடும்படியாக அவரிடம் கேட்டுக்கொண்டோம். அதைச் செய்ய ஒப்புக்கொண்டார்; ஆனாலும் மேய்ப்பனுக்கான தேர்ந்தெடுத்தலானது வேறுபட்ட ஒன்று என்றும், இதில் சகோதரர்கள் போன்றும் சகோதரிகளும் கருத்துத் தெரிவித்திடலாம், காரணம் அவர்கள் இதில் மிகவும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். வேதாகமம் போதிப்பது எதையும் நாங்கள் செய்திடுவோம், ஆனாலும் இந்த இரவில் எதையும் செய்திட நாங்கள் ஆயத்தமாக இல்லை என்றும் தெரிவித்தோம். அவரோ: நீங்கள் சொல்வது எதிலும் சகோதரிகள் திருப்தியடைந்துவிடுவார்கள் என்று நான் அறிவேன்; ஆனாலும் நீங்கள் பாஸ்டர் ஒருவரைப் பெற்றிருந்தீர்கள் என்றும், இப்பொழுது பாஸ்டர் இல்லாதவர்களாக இருக்கின்றீர்கள் என்றும் அறிந்தால் ஜனங்கள் (பொதுமக்கள்) உங்களைக்குறித்து என்ன சொல்லுவார்கள் என்று சொன்னார். நாங்களோ: உலகம் என்ன சொல்லும் என்று நாங்கள் கவலைப்படப்போவதில்லை என்றோம். பின்னர் நாங்கள் அந்த இரவில் எதுவும் செய்யப் போவதில்லை என்று அவர் கண்டு, அவர் கூறினதாவது: “நான் பரிசுத்த ஆவியினால் இங்கு வந்தேன்; சபையை ஒழுங்குப்படுத்தினேன்; மந்தையைக் கூட்டிச் சேர்த்தேன் மற்றும் இனிமேல் நான்தான் மேய்ப்பனாய்க் (பாஸ்டராய்) காணப்படுவேன் மற்றும் நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், நான் என்னையே மேய்ப்பனாக அறிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

இது வேதவாக்கியங்களின்படியானது என்றால், இதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்; அப்படி இல்லையேல் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தோம். நேரமாகிக்கொண்டிருந்தபடியால் கூட்டமானது ஒருவாரம் தாண்டி திங்கள் கிழமைக்கெனத் தள்ளிவைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று அவர் நெகேமியாவைக்குறித்த பாடம் ஒன்றினைப் பிரசங்கித்தார்; (நெகேமியாவின் இடத்தில் தன்னை நிறுத்திப் பிரசங்கித்தார்) மற்றும் நெகேமியாவின் வேலையை அழித்துப்போட மற்றவர்கள் அனைத்து வழிகளிலும் முயற்சித்தார்கள் என்றும், அவரின் சார்பில் கர்த்தர் காணப்பட்டபடியால், அவர் இறுதியில் ஜெயித்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.

திங்கட்கிழமையன்று அவர் “சீஷர்களின் / Disciples ” பிரிவினரின் மாநாட்டிற்குச் சென்றார்; அங்கு அவர் புதன் மதியம் வரைக் காணப்பட்டார். திங்கள் இரவன்று கூட்டம் நடத்தப்பட்டு, இரண்டு மூப்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; சகோ. Knauss மற்றும் நானும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்; மேலும் நம்மத்தியில் போதிப்பதற்கும், கூட்டங்களை நடத்திடுவதற்கும் திறமிககவர்கள் காணப்படுவதாக நாங்கள் எண்ணுவதினால், உதவி ஊழியராக அல்லது உதவிக்காரராக (Deacon) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று நாங்கள் முன் வைத்தோம் மற்றும் சகோதரர் W.de Ronden Pos அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். எங்களது கூட்டத்தின் முடிவுகளைக் குறித்து சகோதரர் Pos அவர்களிடம் தெரிவிக்கும்படிக்கு ஒரு குழுவானது நியமிக்கப்பட்டது. சகோதரர் Knauss, சகோதரர் Doughty மற்றும் நானும் நியமிக்கப்பட்டிருந்தோம் மற்றும் நாங்கள் அவர் இல்லத்திற்குச் சென்று, அவருக்கு விவரத்தைக் கூறினோம். அவரோ: “என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் நியமிக்கப்பட்ட மூப்பனாகவும், சுவிசேஷகனாகவும் இங்கு வந்தேன் மற்றும் நான்தான் உங்களது முதல் மூப்பன் மற்றும் சபையைக் கூடிவரும்படிச் செய்து, அனைவருக்கும் இதைத் தெரிவித்திடுவேன்; அவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றார்களா அல்லது இல்லையா என்று தெரிவித்திடலாம். அதுவுமல்லாமல் ‘Disciples / சீஷர்கள்” பிரிவிலிருந்து ஒரு சகோதரன் ஒன்றிரெண்டு வாரங்களில் இங்கு வந்திடுவார் மற்றும் இப்பட்டணத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உட்காரும் மரத்தினாலான கட்டிடத்தை அமைக்கப்போகின்றோம் மற்றும் நீங்கள் எனக்கு ஆதரவு வழங்கவில்லையெனில், முன்புபோல் நீங்கள் உங்கள் கூட்டங்களை நடத்திடலாம்” என்றார்.

அன்று மாலையில் கூட்டத்தினை நடத்திடுவதற்கான சிலாக்கியத்தினை நான் கேட்டுக்கொண்டேன். தற்போதுள்ள இந்த அறுவடையின் காலத்தின் போதுள்ள நமது கடமைக்குறித்தும், அறுவடைப்பண்ணுவதா அல்லது விதைகளை மேலுமாக விதைப்பதா, எது நம்முடைய பிரதான கடமையாயிருக்கிறது என்பது குறித்தும் பேசிட வேண்டுமென்றிருந்தேன். சில விஷயங்களைத் தெளிவு பண்ணிட வேண்டும் என்று எண்ணி எதிர்ப்பார்த்திருந்தேன்; ஆனால் அவரோ: “நான் சில விஷயங்களை முதலாவது ஜனங்களிடம் பேசிட வேண்டும் மற்றும் அவர்கள் பிற்பாடு நீங்கள் பேசுவதைக் கேட்க விரும்பினால், நீங்கள் பேசிடலாம்” என்றார். கூட்டத்தில் அவர் முதலாவதாக … தான் இதுவரையிலும் தற்காலிகமான பாஸ்டராகத்தான் இருந்துள்ளதாக சிலர் எண்ணுவதாகவும் மற்றும் தன்னுடைய ஸ்தானம் என்ன என்பதை தான் அறிய விரும்புகின்றார் என்பதாகவும், இச்சபைக்குப் பாஸ்டர் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று அறிய தான் விரும்புகின்றார் என்பதாகவும் கூறி, இதினிமித்தம் சபையானது தன்னுடைய நிலைப்பாட்டினைத் தெரிவிப்பதே இந்த ஞாயிற்றுக்கிழமை மதியவேளையில் முதலாம் காரியமாயிருக்கின்றது என்று கூறினார்.

அவர் பேசி முடிந்தபிற்பாடு, நான் சில வார்த்தைகளைப் பேச வேண்டும் என்றேன்; ஆனால் அவரோ: இது அலுவல் கூட்டமல்ல, நாம் பக்திவிருத்தியடைவதற்காக ஒன்றுகூடி வந்திருக்கின்றோம் என்று கூறி, வேதவாக்கியங்களிலிருந்து வாசிக்கத் துவங்கி, எனக்கு அனுமதி வழங்காமல் இருந்தார். கூட்டம் முடிவது வரையிலும் நான் காத்திருப்பேன் என்றும், விளக்கமளிக்கும் சில வார்த்தைகளைக் கேட்க விரும்புபவர்கள் அங்குக் காத்திருக்கலாம் என்றும் கூறினேன். கூட்டம் முடிந்தவுடன், அனைவரும் நேராக வீடுகளுக்குச் சென்று ஜெபிக்கும்படியாக, தான் அறிவுறுத்துவதாகக் கூறினார். தன்னைப் பிரியப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் மற்றும் மற்றவர்களுடையதைக் காட்டிலும் தன்னுடைய பகுத்துணர்வே மேலானது என்று அவர்கள் கருதினால் அவர்கள் வீட்டிற்குச் சென்றிட வேண்டும் என்றார். நானோ ஒரு விஷயத்தினுடைய ஒரு பக்கத்தின் விவரத்தில் மாத்திரம் திருப்தியடைந்திருப்பவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றிடலாம் என்றும், மற்றவர்கள் காத்திருக்கும்படிக்குக் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் என்றும் கூறினேன். சிலர் வீட்டிற்குத் திரும்பியும், சிலர் காத்தும் இருந்தனர். இது நடைபெறுவதற்கு முன்னதாக இந்த விஷயமானது ஞாயிற்றுக்கிழமைக்குக் கொண்டுவரப்படாமல், வேறொரு நாளில் நடக்க வேண்டும் என்று சகோதரர் Knauss அவர்கள் யோசனை தெரிவித்தார்கள்; ஆனால் சகோ. Pos அவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று நடக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்; மற்றவர்கள் அச்சமடையத்தக்கதாக, பெரிய கூட்டத்தார் முன்னிலையில் இது நடைப்பெற வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று நான் கண்டுகொண்டேன். ஆனால் அது அவருக்குச் சாதகமற்றதாகவே போனது. முடிந்தமட்டும் பிரச்சனையைத் தவிர்த்துக்கொள்ளத்தக்கதாக, எங்களை ஒரு சபை பிரிவோடு இணைப்பது அவரது திட்டமாக இருப்பதினாலும், சிலருடைய பெயர்களை ஒப்புதல் இல்லாமலேயே செய்தித்தாள்களில் அவர் வெளியிட்டுள்ளபடியாலும், நாங்கள் ஒரு சபை பிரிவோடு இணைந்திட விரும்பவில்லை என்று சுருக்கமான வார்த்தைகளில் அவருக்கு எழுதினோம். கையெழுத்திடப்பட்ட காகிதங்களைச் சனிக்கிழமை இரவன்று நான் அவரிடம் கொடுத்து, காரியங்களை எளிமையாக்கிடவே நாங்கள் இப்படிச் செய்ததாகவும், ஞாயிற்றுக்கிழமையன்று வேதாகம ஆராய்ச்சி ஒன்றையும், ஜெபக்கூட்டத்தையும் மாத்திரமே கொண்டிருக்க சகோதரர்கள் விரும்புவதாகவும் அவருக்குத் தெரிவித்தோம். அவரோ: தனது நண்பர்கள் அனைவரும் அங்கு வருவதினால் அவர் முதலாவது காரியத்தை முன்வைப்பதாகவும், பிற்பாடு எங்கள் பக்கக்கருத்துகளைத் தெரிவிப்பதற்கு எனக்குப் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கொடுப்பதாகவும்; பின்னர் அவர் பிரசங்கம்பண்ணிடுவார் என்றும், அதற்குப் பிறகு எங்கள் விருப்பப்படி நாங்கள் செய்திடலாம் என்றும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை மதியமும் வந்தது மற்றும் சில புதியவர்கள் வந்திருந்தார்கள். மற்றவர்களுடன் அவர் அமர்ந்திருந்தார் மற்றும் நேரம் வந்தபோது கூட்டத்தலைவர் இல்லாததினால், கூட்டத்தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றார். நானோ: சபையின் நியமிக்கப்பட்ட மூப்பராய் நான் காணப்படுவதினால், நான் அப்பொறுப்பை எடுத்துக்கொள்ளுகிறேன் என்று கூறினேன் மற்றும் கூட்டத் தலைவராகச் செயல்பட்டேன். கீர்த்தனை ஒன்றைப் பாடி, ஜெபம் ஏறெடுத்தோம்; பின்னர் என்னால் முடிந்தமட்டும் விவரங்களை அளித்துவிட்டு, அவ்வாரத்திற்கான கூட்டங்களைக்குறித்து அறிவிப்புக் கொடுத்தேன்; பின்னர்ப்பிரசங்கம் பண்ணிடுவதற்குச் சகோதரர் Pos அவர்கள் கூறியிருந்தார்கள் மற்றம் அதற்கு நாம் அவருக்கு வாய்ப்பளிக்கின்றோம் அல்லது அவர் ஏதேனும் சொல்ல விரும்பினால், அவர் சொல்லிடலாம் என்றேன்.

அவரோ: இச்சூழ்நிலையில் தன்னால் பிரசங்கம் பண்ணிட முடியாது என்றும், உங்களை வேறொரு சபை பிரிவோடு இணைக்கப்பண்ண நான் விரும்புவதாகச் சொல்லப்படுவது உண்மை இல்லை என்றும், மாறாக நம்மைப் போன்று ஒரே அஸ்திபாரத்தின் மீது காணப்படும் சகோதரர்களோடு நாம் ஐக்கியம் வைத்துக்கொள்வோமா என்பதுதான் கேள்வி என்றார்.

இப்பொழுது சகோதரர் Draper அவர்கள் இங்கு வருவது தொடர்பாகச் சொல்ல வேண்டுமெனில், அவர் இங்கு எப்போது வேண்டுமானாலும் வருகைத் தருவதைக்குறித்து நாங்கள் மகிழ்ச்சித்தான் கொள்வோம்; ஆனால் அவரால் இங்கு நடந்தவைகளை மாற்றமுடியுமா என்பது ஐயம்தான், எனினும் இங்கு மீதியிருப்பவர்களைப் பலப்படுத்திட மாத்திரமே முடியும். அவரது முந்தின வருகையினால் நாங்கள் மிகவும் உதவப்பட்டோம் மற்றும் அது இந்த எரிகிற அக்கினியில் நிலைநிற்பதற்கான தைரியத்தினைக் கொடுத்தது என்று நான் உறுதியாய்ச் சொல்கின்றேன்.

கிறிஸ்தவ அன்பில் உங்கள்,
C. F. BAHRET.
*********

இந்த வேதனையின்போது நிலைநின்ற அருமையான நண்பர்களை நாம் பாராட்டுகின்றோம். கிறிஸ்து உண்டாக்கின சுயாதீனத்தை இவர்கள் மிகவும் விரும்பியுள்ளப்படியால், இவர்கள் தங்களிடத்தில் ஆரம்பத்தில் தற்கால சத்தியத்தின் வெளிச்சத்தினைச் சுமந்துவந்த தூதுவனாகக் காணப்பட்டும், பிற்பாடு தன்னைத்தான் பாஸ்டராக அல்லது மேய்ப்பனாக நியமித்துக்கொண்ட ஒருவரினால் பாபிலோனின் அடிமைத்தனத்திற்குள்ளும், இருளுக்குள்ளும் மறுபடியுமாக வழிநடத்தப்படுகிறதில் விருப்பப்படவில்லை!

இந்த அருமையான நண்பர்களானவர்கள், நவம்பர் 15,”95-ஆம் வாட்ச் டவர் [R2265 : page 57] கட்டுரையில் முன்வைத்திட்டதான வேதவாக்கியங்களின் அடிப்படையிலான அறிவுரைகளுக்குச் சீக்கரமாய்க் கவனம் செலுத்தியிருந்திருப்பார்களானால், இச்சோதனைகள் சிலவற்றிலிருந்து தப்பியிருந்திருப்பார்கள்; அக்கட்டுரையில் “தேவனுடைய சுதந்தரத்தின்மீது இறுமாப்பாய் ஆளுகிறவர்களிடமிருந்தும்”, சபையாருடைய தேர்ந்தெடுத்தலுக்கு மேலாக தங்களையே மேய்ப்பர்களாக நியமித்துக்கொள்ள முற்படுபவர்களிடமிருந்தும் மற்றும் தங்கள் சொந்தக் கண்ணோட்டங்களை நிலைநிறுத்த முற்படுகிறவர்களிடமிருந்தும், கர்த்தருடைய இராப்போஜனம் முதலான காரியங்களில் யார் பங்கெடுக்கலாம், யார் பங்கெடுக்கக்கூடாது என்று தீர்மானம் செய்ய முற்படுகிறவர்களிடமிருந்தும், கிறிஸ்துவினால் உண்டான தங்கள் சுயாதீனத்தைக் காத்துக்கொள்வதற்கான சரியான வழிமுறைக் குறித்த – சபையின் ஒழுங்குக்குறித்த காரியங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை இந்த நண்பர்கள் கவனிக்கத்தவறிப்போனபடியால், இவர்களது சுயாதீனங்கள் தாக்கப்பட்ட போது, இவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள். எனினும், நாம் அவர்களைப் பாராட்டவே செய்கின்றோம் மற்றும் அவர்களை விடுவித்ததற்காகக் கர்த்தரைத் துதிக்கின்றோம்.

இந்த நண்பர்கள் மேய்ப்பன் என்பவர் உதவிக்காரர் என்று அனுமானித்துக்கொண்டதில் தவறிழைத்துள்ளனர். மூப்பர்கள் மேய்ப்பர்களாக அல்லது மேற்பார்வையாளர்களாகக் காணப்பட்டு, சபையினுடைய ஆவிக்குரிய நலனுக்கடுத்தவைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, சபையினுடைய ஆவிக்குரியவையல்லாத காரியங்களைக் கவனித்துக் கொள்வதற்காக ஆதிசபையில் உதவிக்காரர்கள் என்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவர் மேய்ப்பனாகவும், பிரதானமானவராகவும், மற்றவர்கள் அவருக்கான துணையாளர்களாகவும் மற்றும் உதவுபவர்களாகவும் மற்றும் ஆலோசகர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டால், இது வேதாகமத்தின் எந்தக் கட்டளைக்கும் முரணாய் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் ஸ்தானத்தைக் கைப்பற்றிக்கொள்வதற்கும் மற்றும் கர்த்தருடைய சபையை அச்சுறுத்துவதற்கும் மற்றும் மிதித்துப்போடுவதற்கும் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ நாடும் ஒருவரைத் தாங்கள் தேர்ந்தெடுப்பதைத் தேவன் விரும்பமாட்டார் என்று எண்ணினதிலும், அப்படித் தேர்ந்தெடுக்காமல் இருந்ததிலும் நண்பர்கள் சரியாகவே செயல்பட்டுள்ளனர்.

“பக்திவிருத்தியடைவதற்கெனச்” சபைகூட்டங்கள் எனும் உண்மையான கருத்தானது, பாபிலோனுக்கு ஒத்திருக்க வேண்டுமென்ற ஆவியின் காரணமாகப் பிரசங்கிப்பதற்கான பிரபலமான விருப்பத்தின் கீழ்த் தொலைந்து போய்விட்டது. பொதுப்பேச்சாளருக்கான திறமையானது ஒருபோதும் இழிவாகக் கருதப்படக்கூடாது அல்லது புறக்கணிக்கப்படக்கூடாது; ஆனாலும் அது பக்திவிருத்தி உண்டாவதற்கேதுவாக மாத்திரமே நாடப்பட வேண்டும் மற்றும் மதிக்கப்பட வேண்டும். அதிகமான பிரசங்கித்தல்கள், அதுவும் தவறான அடிப்படையில் காணப்படுகையில், அது பாதகமானதேயாகும்.

காரியங்களானது கையாளப்பட்டதான சாந்தத்தையும் நாம் பாராட்டுகின்றோம் ஆனாலும் மிக அதிகமான சாந்தம் காணப்பட்டுள்ளது. இவர்கள் “கர்த்தருடைய இராப்போஜனம்” தொடர்புடைய பாடத்தில் தவறாய் வழிநடத்தப்பட்டுள்ளனர். வேதவாக்கியங்களில் எங்குக் காலை மற்றும் மதிய உணவுகளானது “இராப்போஜனம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லது எப்படி இராப்போஜனம் எனும் வார்த்தைக்கு இப்படித் திரித்த அர்த்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று இவர்கள் கேட்டிருக்க வேண்டும். அவ்வார்த்தைக்கான கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “மாலை நேர போஜனமே” ஒழிய, வேறு எதுவுமில்லை. நமது கர்த்தர் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதை ஆசரிக்கும் ஒரு விசேஷித்த நாளாய்க் காணப்படும் ஒரு நாளில் (ஞாயிற்றுக்கிழமையில்), அவரது மரணத்திற்கான நினைவுகூருதலை ஆசரித்தல் தொடர்பாக இவர்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை? ஆதி சபையினரால் கைக்கொள்ளப்பட்டு வந்ததான “அப்பம் பிட்குதலானது,” கர்த்தருடைய மரணத்தை நினைவுகூருவதற்காக ஆசரிக்கப்படும் “கர்த்தருடைய இராப்போஜனமாய்” இராமல், எம்மாவூரில் நடந்த அப்பம் பிட்குதல் போன்றதேயாகும் என்று இவர்கள் ஏன் சுட்டிக்காண்பிக்கவில்லை? (லூக்கா 24:30; மத்தேதயு 14:19). “அப்பம் பிட்குதலானது” கடைசி இராப்போஜனத்தின் நினைவுகூருதலாய் இருக்குமானால், நமது கர்த்தருடைய சிந்தப்பட்ட இரத்தத்திற்கு அடையாளமான திராட்சரசத்தின் “பாத்திரத்திற்குக்” கடைசி இராப்போஜனம் பற்றின 1 கொரிந்தியர்11:23, 24-ஆம் வசனங்களின் பதிவில் முழு [R2266 : page 57] முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க, “அப்பம் பிட்குதல்” தொடர்பான பதிவுகளில் அது குறிப்பிடப்படாதது ஏன் என்று இவர்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

சகோதரிகள் இல்லாமல் சகோதரர்கள் மாத்திரம் மூப்பர்களைத் தேர்ந்தெடுப்பதும் தவறாகும்; “நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” பொது இடங்களில் பேசுதல் தொடர்பான அவர்களுக்குரிய வரையறைகளானது, மிகைப்படுத்தப்படக்கூடாது. இது விஷயமான வேதவாக்கியங்கள் குறித்த எங்களது கண்ணோட்டமானது வாட்ச் டவரின் ஜூலை, 1893-ஆம் வருடத்தின் கட்டுரையில் இடம்பெறுகின்றது. Election / தேர்ந்தெடுத்தல் மீண்டுமாக நடத்தப்பட வேண்டும்; உங்களோடுகூட வழக்கமாகக் கூடுகிற யாவரும், ஈடுபலியில் விசுவாசம் வைத்து, கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளதாக அறிக்கைப்பண்ணுகிறவர்கள், தேர்ந்தெடுத்தலின்போது தங்களுடைய தெரிந்துகொள்ளுதலைத் தெரியப்படுத்துவதற்காக இல்லாமல், மாறாக வேதவாக்கியங்கள் முன்வைப்பவைகளுக்கு இசைவாயுள்ள கர்த்தருடைய தெரிந்துகொள்ளுதலின்படியானவர்கள் என்ற தங்களது பகுத்துணர்தலைத் தெரியப்படுத்துவதற்கு அழைக்கப்பட வேண்டும்.

ஐக்கியத்திற்குத் தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பரீட்சையாக்கிடுவதற்குச் சகோதரர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாலும் மற்றும் நமது கர்த்தரை அன்புகூருகிறவர்கள், சேவிக்கிறவர்கள் யாவருடனும் அவர்களது அறிவின் நீளத்தையும், ஆழத்தையும் பொருட்படுத்தாமல், ஐக்கியம் வைத்துக்கொள்ள தாங்கள் விரும்புவதை முழுமையாய் அறிக்கையிட்டதாலும் நாம் சந்தோஷப்படுகின்றோம்; ஏனெனில் கர்த்தரை அன்புகூருகிறவர்கள், அவரது வார்த்தைகளின் வாயிலாக அவரை அதிகமதிகமாய் அறிந்துகொள்ள நாடிடுவார்கள்.

“சீஷர்கள் சபை பிரிவினரின்” அறிக்கைக்கும், வேதாகம கிறிஸ்தவர்களாகிய நம்முடைய நிலைப்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்று கேட்கப்படலாம்; ஆகையால் இங்கு வித்தியாசங்களைச் சுருக்கமாய்த் தெரிவிக்கின்றோம்:

(1) ஒருவேளை “சீஷர்கள்” பிரிவினர் தாங்கள் அறிக்கைப் பண்ணுகிறதற்கேற்ப ஜீவிப்பார்களானால், அவர்கள் நம்மோடு கூட ஜீவித்திருந்திருப்பார்கள். அவர்கள் அறிக்கைப் பண்ணுபவைகள் முற்றிலும் சரியே – அவர்களது அறிக்கையானது, வேதாகமமே – ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம் மற்றும் ஒரே ஞானஸ்நானம் தொடர்பானவைகளுக்கான மற்றும் தேவனுக்கும், மனிதனுக்குமான நமது கடமை தொடர்பானவைகளுக்கான ஒரே விதியும், வழிகாட்டியாகும்; மற்றும் மதக்குருப்பற்றிலிருந்து முழுமையாக விடுதலையுடையதாகும்.

இவை அனைத்தையும் நாம் ஒப்புக்கொள்கின்றோம் மற்றும் இதன்படி ஜீவிக்கின்றோம்; ஆனால் “சீஷர்கள்” பிரிவினர் இப்படிக் காணப்படுகின்றார்களா? நிச்சயமாக இல்லை! அவர்கள் மத்தியில் சென்று, தற்கால சத்தியத்தின் அறுவடை செய்தியினை முன்வைக்க முயன்று பாருங்கள்; எழுதப்படாத எத்தனை விசுவாசப்பிரமாணங்களை அவர்கள் பெற்றிருக்கின்றனர் என்றும், அது அவர்களை எவ்வளவு இறுக்கிக் கட்டிவைத்துள்ளது என்றும் பார்ப்பீர்கள். பாபிலோனின் பிரிவுகளிலேயே மிகுந்த சுயாதீனமுடையவர்களாய்த் தாங்கள் காணப்படுவதாக அவர்கள் வார்த்தையில் அறிக்கைப்பண்ணிக் கொண்டாலும், அவர்கள் (அவர்களையும் அறியாமல்) மிகவும் குறுகின நோக்கமுடையவர்களாகவும், மிகவும் தடைவிதிக்கிறவர்களாகவும் காணப்படுகின்றனர். இதை எங்களது இரண்டாம் கருத்தில் நிரூபித்திடுவோம்.

(2) இவர்கள் தண்ணீர் ஞானஸ்நானத்தினைப் பரீட்சையாக்குகின்றனர்; மற்றும் இது பாவங்களுக்கான மன்னிப்பிற்காகவும் என்று கூறுவதன் மூலம், குறிப்பிட்ட சில வார்த்தைகள்கூறி தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளாத Presbyterians, Methodists, Episcopalians, Protestant, Lutherans, Reformed kw;Wk; United Presbyterians> Protestant, Methodists மற்றும் மற்ற அனைவரும், பாவிகள் – தேவனுக்கு அந்நியர்களாகவும், கிறிஸ்துவுக்குள்ளான அவரது கிருபைக்கும், சத்தியத்திற்கும் அஞ்ஞானிகளாய் இருக்கின்றனர் என்ற கூற்றிற்கு இவர்கள் ஒப்புதல் அளிக்கின்றனர். இதைவிட குறுகின நோக்கமுள்ள ஏதேனும் விசுவாசம் காணப்பட முடியுமா? ஒருவேளை இருக்கின்றதானால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! ஆம், இவர்களைப் போன்று குறுகின நோக்கமுடைய Christadelphians எங்கள் ஞாபகத்திற்கு வருகின்றனர். Christadelphians பிரிவினர் பாவிகள் அழிக்கப்படுவார்கள் என்றும், “சீஷர்கள்” பிரிவினர் பாவிகள் நம்பிக்கையற்ற நித்திய சித்திரவதைக்குள் அனுப்பப்படுவார்கள் என்றும் சொல்கின்றனர் மற்றும் இக்கண்ணோட்டத்தின் தவற்றினை வேதாகமத்திலிருந்து காண்பித்துக்கொடுப்பதற்கான வாய்ப்பையும் இவர்கள் கொடுக்கிறதில்லை. ஒருவேளை வாய்ப்புக்கொடுப்பதில்லை என்று நாம் சொன்னது தவறென்றால், வாய்ப்பிற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பைப் பெற்றுக்கொள்வதில் நாம் [R2266 : page 58] சந்தோஷப்படுவோம் மற்றும் சத்தியம் அவர்களுக்கு உடனே முன்வைக்கப்படத்தக்கதாகப் பார்த்துக் கொள்ளப்படும்.

இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிறையற்றவனாயிருக்கிறான்

Rev. de Ronden Pos அவர்களை நாங்கள் முதலாவது கலிபோர்னியாவில் வைத்து அறிந்து கொண்டோம்; அதாவது பிப்ரவரி 1. “92-ஆம் வருடத்தின் நம்முடைய வெளியீட்டில் நாம் வெளியிட்டதான அவரது கடிதத்தை, அவர் எங்களுக்கு எழுதினபோதே, அவர் எங்களுக்கு அறிமுகமானார்.

அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:- Los Angeles -இல் உள்ள ஒரு புத்தகக் கடையில் நான் பார்த்திட்ட மில்லேனியேல் டாணின் மூன்றாம் தொகுதியில் எவ்வளவு அதிகமாய்க் கவரப்பட்டேன் என்பதை நான் உங்களுக்கு எழுதியாக வேண்டும். நான் இக்கடிதத்தோடு ஐம்பது cents பணத்தினை அனுப்பிவைக்கிறேன்; அதைக்கொண்டு நீங்கள் உடனடியாகவே முதலாம் மற்றும் இரண்டாம் தொகுதிகளை எனக்கு அனுப்பித்தர விரும்புகின்றேன்; உங்களது Zion’s Watch Tower- இன் ஒன்று அல்லது இரண்டு வெளியீடுகளையும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன்; டாண் தொகுதி-3 போல் ஒருவேளை நான் எதிர்ப்பார்க்கிறவைகளின்படி (ரீப்பிரிண்ட்ஸ்) அவ்வெளியீடானது காணப்படுமானால், நான் உடனே சந்தாதாரராகிடுவேன். தொகுதி-3 ஏற்கெனவே என் நண்பர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கிறிஸ்துவின் இராஜ்யத்திற்காகக் காத்திருக்கும் உங்கள்,
W. DE RONDEN POS,
Pastor First Baptist Church.

அடுத்ததாக Kentucky – இலிருந்தும், பிற்பாடு Washington, D. C -இலிருந்தும், அவரிடமிருந்து கடிதங்கள் எங்களுக்கு வந்தன் பிற்பாடு Canada – விலுள்ள Montreal – இலிருந்து அவர் அங்குள்ள Episcopal சபையில் பாஸ்டராக இருப்பதாக எங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார் மற்றும் பிற்பாடு Baltimore, Md – யிலுள்ள Reformed Episcopal சபையில் பாஸ்டராகப் பொறுப்பேற்றுள்ளாரெனத் தெரிவித்திருந்தார். சபை பிரிவுணர்ச்சியிலிருந்தும், அதன் அடிமைத்தனத்திலிருந்தும் கிறிஸ்துவினால் உண்டான சுயாதீனத்தில் நம்மோடுகூடச் சுதந்தரமாய் நிலைநிற்க அவர் இறுதியில் முடிவெடுத்துள்ளதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். இவர் நண்பர்களுடன் கொண்டிருக்கும் ஐக்கியத்தின் நிமித்தம் மிகுந்த பிரயோஜனம் உண்டாகும் என்று அதிகம் எதிர்ப்பார்த்திட்டோம்; எனினும் பாபிலோனுக்கும், அதன் தானிய களஞ்சியத்திற்குமான மகா பெலவீனத்தை வருடக்கணக்காக வெளிப்படுத்தியுள்ள ஒருவரிடமிருந்து அருமை நண்பர்கள் அதிகமாய் எதிர்ப்பார்ப்பதைக்குறித்தும் அஞ்சினோம்; எனினும் எங்களது அச்சங்கள் குறித்த துப்பு எதையும், எவருக்குமே நாம் கொடுக்கவுமில்லை. இவரது கடந்தகாலத் தொடர்புகளைக்குறித்து நாங்கள் அறிந்திருக்கும் நிலையில், ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளாத எவரையும் கர்த்தருடைய பந்திக்கு அனுமதிப்பதில்லை என்ற இவரது வீராந்த (Heroic) தீர்மானம் குறித்து நாங்கள் வாசிக்கையில், சிரிப்பே ஏற்பட்டது. இவர் Episcopalian மற்றும் Reformed Episcopalian ஆடுகளுக்குப் போதித்தும், மேய்த்தும், அவர்களது குழந்தைகளுக்குத் தண்ணீரைத் தெளித்தும், அவர்களுக்குச் சம்பிரதாயமாகவும், ஆச்சாரமாகவும் சடங்குகளை நடத்தியும் வந்த வருடங்களில் எங்கே போனது இவரது தைரியம் என்று எண்ணுகின்றோம். இவரது தற்போதைய “விசுவாசத்தின்படி,” அந்த “ஆடுகள்,” “ஆடுகளல்ல,” மாறாக தங்கள் பாவங்களிலேயே காணப்படுபவர்கள் – காரணம் அவர்கள் பாவ மன்னிப்புண்டாகத்தக்கதாக ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளவில்லை. இவர் அவர்களுடைய டாலர்களைத் தவறாமல் பெற்றுக் கொண்டு வந்தார் என்று நாம் எண்ணுகின்றோம்; ஏனெனில் Episcoplians பிரிவினர்கள் நன்கு சம்பளம் கொடுப்பவர்களாகக் கருதப்படுகின்றனர்; ஆனால் அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இவர் இருந்துள்ளாரா? மற்றும் தனது விசுவாசத்தின்படி அவர்கள் அனைவரும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டுள்ள பாவிகளாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளாரா? தண்ணீர்தான் நித்திய ஜீவனுக்கான வழியென்று அவர்களுக்குச் சுட்டிக்காண்பித்துள்ளாரா? அல்லது அவர்களை வஞ்சித்து, போலியாய் நடத்தி, அவர்களது பணத்தினைப் பெற்றுக்கொண்டாரா? ஆம் நம்மால் இப்படிக் கூற முடியாது! இத்தகைய ஜனங்களின் இருதயங்களை நம்மால் நியாயந்தீர்க்க முடியாது! அநேகமாக இவரது மனசாட்சியானது அத்தனை வருடங்களாக உறங்கிக்கொண்டிருந்திருக்க வேண்டும் அல்லது அநேகமாக இவருக்கு மனசாட்சி இல்லாமல் இருந்திருக்கும்!

எனினும் சத்தியத்திற்கு ஒரு விலையேறப்பெற்ற இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நாம் நம்புகின்றோம். இத்தகைய ஜனங்கள் எதிர்த்திடுவார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம் மற்றும் அவர்களது வஞ்சகமான, அப்பட்டமான வெற்றுரைகளைவிட, அவர்களின் எதிர்ப்பே மேல். Parousia உள்பட்ட தேவனுடைய ஆழமான காரியங்கள் குறித்த அறிவானது இத்தகையவர்களுக்காகவேயாகும் என்று நம்பிடுவதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. தேவன் உலகத்தில் மூடர்களாகவும், பலவீனர்களாகவும் மற்றும் உலகத்தை ஜெயங்கொள்ளும் முக்கியத்துவமற்ற நேர்மையானவர்களாகவும் இருப்பவர்களைத் தம்முடைய உடன்சுதந்தரர்களாக இருக்கும்படிக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றார் மற்றும் “கவர்ச்சிகரமானவர்களை,” “மனிதர்களைப் பிரியப்படுத்துபவர்களை,” உலகப்பொருட்களைத் தொழுதுகொள்பவர்களையும் விட்டு விலகிப்போகின்றார். “ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது” (மத்தேயு 11:26). பிரியமான சக செம்மறியாடுகளே – எத்திசையிலிருந்தும் வரும் எதிராளியானவனின் அத்துமீறுதல்களையும், கவர்ச்சிகளையும், தந்திரங்களையும் மற்றும் தாக்குதல்களையும் எதிர்த்து நிற்பவர்கள், இதனால் பலமடைவார்கள் என்று நாம் நினைவில் கொள்வோமாக மற்றும் அன்பிலும், பரிவிலும் ஒன்றாய் மிக நெருக்கமாய்க் கட்டப்பட்டிருப்போமாக மற்றும் “சுயாதீன பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தின்” ஆவியிலும், எழுத்திலும் மிக உறுதியாய் ஸ்திரப்பட்டிருப்போமாக.