சில சுவாரசியமான கடிதங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5409 (page 62)

சில சுவாரசியமான கடிதங்கள்

Some Interesting Letters

தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சபையாரின் உரிமைகள்

PERSONAL AND CLASS RIGHTS மிகவும் அன்பிற்குரிய பாஸ்டர் அவர்களே:-என்னுடைய அன்பைத் தெரிவிக்கவும் மற்றும் நான் வாக்குறுதியை (vow) எடுத்துள்ளேன் என்று உங்களுக்குத் தெரிவிக்கவும் விரும்பிட்ட அந்த ஒரே ஒரு தருணத்தைத் தவிர, மற்றப்படி உங்களுக்குக் கடிதம் எழுதுவது ஞானமாகவோ அல்லது உகந்ததாகவோ இருக்குமென நான் ஒருபோதும் எண்ணினதில்லை. உங்களது நேரத்தினை ஞானமற்ற விதத்தில் நான் குறுக்கிடக் கூடாதே என்ற எண்ணமே, இப்பொழுது உங்களுக்கு நான் எழுதும்போதும் எனக்குக் காணப்படுகின்றது; ஆனால் இப்பொழுது எழுதுவது சரியே என்று உணர்கின்றேன்.கொஞ்சம் நாட்களுக்கு முன்பாக, சகோதரர்களில் சிலர் தங்களுடைய இல்லங்களில் சபையாரால் ஏற்பாடு பண்ணப்படாத நிரந்தரமான கூட்டங்களை நடத்திக்கொண்டு வந்தனர். சில சந்தர்ப்பங்களில் இக்கூட்டங்களானது மூப்பர்களாகவோ, உதவிக்காரர்களாகவோ இல்லாத சகோதரர்களால் நடத்தப்பட்டு வந்தது. வேறு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட சில உதவிக்காரராகிய சகோதரர், தங்களது அன்பின் காரணமாகவும், வைராக்கியம் காரணமாகவும் புதியவர்கள் சிலருக்கு உதவும் வாய்ப்பினைக் கண்டடைந்தனர் மற்றும் கொஞ்சக் காலங்களுக்குப் பிற்பாடு அவர்களது நலன்கருதி, நிரந்தரமான கூட்டங்களை நடத்தத் துவங்கினர்; இந்தக் கூட்டங்களானது, சபையினுடைய நிரந்தர (regular) கூட்டங்களுக்கு இடைஞ்சலாக இல்லாத மாலை வேளைகளில் நடத்தப்பட்டது.இக்காரியங்கள் சபையாருடைய கவனத்தில் வந்து, கலந்தாலோசிக்கப்பட்டு, பின்வரும் தீர்மானமானது வாக்கின் (vote) அடிப்படையில் எடுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது; அது பின்வருமாறு:கலந்து கொண்டவர்களின் சார்பிலான கர்த்தருக்கான மற்றும் சகோதரருக்கான நல்நோக்கங்களையும், அன்பையும் மற்றும் பக்திவைராக் கியத்தையும் நாம் ஒரு கணம்கூடச் சந்தேகிக்கவில்லை என்றபோதிலும், சபையாரால் ஒழுங்குப்படுத்தப்பட்டிருக்கும் கூடுகைகளுக்கு அப்பாற்பட்டு,_________________ அவர்களின் இல்லத்தில் நடைபெறும் நிரந்தரக் கூட்டங்களானது எங்களது கணிப்பின்படி,___________என்ற நம்முடைய இடத்திலுள்ள சபையாருடைய ஆவிக்குரிய பிரயோஜனத்திற்கு உரியதாய்க் காணப்படாமல், மற்றச் சில காரணங்களோடுகூட, தற்காலத்தில் மிகவும் அவசியமானது என்று நாம் எண்ணுகின்றதான முழுமையான ஐக்கியத்தினைச் சரீரத்தின் மத்தியில் தடைப்பண்ணுகிறதற்கு ஏதுவானதாய் இருக்குமென நாங்கள் முடிவிற்கு வந்துள்ளோம்.இதற்கு வாக்குக் கேட்கப்பட்டபோது, நானும் தனிப்பட்ட விதத்தில் இத்தீர்மானத்தை ஆதரித்தேன். ஆனால் பிற்பாடு நான் ஞானமாய்த்தான் செயல்பட்டிருக்கின்றேனா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டதினால், இக்காரியத்தினை அதிகம் ஜெபத்தோடு சிந்திக்கத் துவங்கி, உதவிக்காக டவர் (ரீப்பிரிண்டஸ்) மற்றும் டாண் (volumes) புத்தகங்களில் தேடிப் பார்த்தேன். இறுதியில் நான் தவறு செய்துள்ளேன் என்றும், மற்றவர்களுடைய சுதந்தரம் மற்றும் சுயாதீனத்தில் தலையிடுகிற தன்மையிலுள்ளதாக, என் மனதிற்குத் தோன்றும் தீர்மானம் ஒன்றில் நான் பங்கெடுத்திருக்கின்றேன் என்றுமுள்ள முடிவிற்கு நான் வந்தேன்.நேற்றைய இரவில் வழக்கமான அலுவல் கூட்டத்தின்போது, அக்காரியமானது மீண்டுமாகக் கலந்துரையாடத்தக்கதாக வந்தது; அக்கூட்டங்கள் சிலவற்றில் அக்கறைக் கொண்டிருந்த சகோதரர்கள், தங்கள் கூட்டங்களுக்குக் கூட்டத்தலைவர் ஒருவரை நியமித்துத் தரும்படிக்குச் சபையாரிடம் வேண்டிக்கொள்ளும் கடிதம் ஒன்றினைச் சபைக்குக் கொடுத்திருந்தனர். மூன்று மணிநேர கலந்தாலோசனை நடந்தும், காரியம் தீர்வுக்குள்ளாக வரவில்லை. மேலும் நான் ஒரு கவலைக்கிடமான பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டியவனாய் இருக்கின்றேன். நான் மற்ற மூப்பர்களிடமிருந்து மாறான கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டவனாகவும், நான் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டில் தனித்து நிற்கும் மூப்பனாக நின்றுகொண்டிருக்கின்றேன்; அதாவது எங்களால் எடுக்கப்பட்ட தீர்மானமானது ஞானமற்றது என்பதும், உகந்ததல்ல என்பதும், தனிப்பட்ட சுயாதீனத்தை அழித்துப்போடுவதற்கு ஏதுவானதாகவும், எங்களுடைய சகோதரரில் சிலருக்கு விசேஷமாய்ப் பாதகமானதாகவும் காணப்படுகின்றது என்பதும் நான் கொண்டிருக்கும் நிலைப்பாடாய் இருக்கின்றது.எவ்விதத்திலும் மற்றவர்களுடைய உரிமைகளைக் குறுக்கிடுவதற்கோ, அடிமைப்படுத்துகிறதற்கோ இந்தத் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்ற கண்ணோட்டம் காணப்பட்டது. ஆனால் எனக்கு அது ஒருவிதத்தில் “பொல்லாங்காய்த் தோற்றமளித்தது;” இத்தீர்மானத்தினால் ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்படுகையில் அடையப்பெறுகிற நன்மையானது, வேறொரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்படுகையில் இதனால் உண்டாகும் பாதகத்திற்கு ஈடுசெய்திட முடியாது எனும் கருத்தினை என் மனதில் பெற்றிருந்து, இதை விட்டுவிலக நான் விரும்புகின்றேன்.[R5410 : page 62]நான் எதிர்த்துச் சண்டைப் போடவில்லை, போடவும் மாட்டேன்; ஆனால் நான் கர்த்தருடைய சித்தத்தை அறியவும், அதையே செய்ய வேண்டுமென்றும் இருக்கிறேன்; மேலும் மற்ற மூப்பர்களிடமிருந்தும், சபையாரிலுள்ள மற்ற அங்கத்தினர்களில் சிலரிடமிருந்தும் எதிர்மாறான கண்ணோட்டத்தினை நான் கொண்டிருப்பவனாக என்னை நான் காண்கின்றபடியினால், நான் மிகவும் கவலையடைந்து, உங்களது அறிவுரையைக் கேட்கின்றேன். சபையாருடைய தற்போதைய மற்றும் எதிர்க்கால நலனுக்கடுத்த காரியங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்கையில், இக்காரியம் இப்பொழுது மிகவும் முக்கியமானதென நான் எண்ணுகின்றேன். இப்படிக்கு, அவரது ஆசீர்வாதமான ஊழியத்தில் தங்கள்,- ஜெ. ஜெ. பி.மேலே இடம்பெறும் கடிதத்திற்கான எங்களது பதில்:இக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ள காரியங்கள் சம்பந்தமான வேதவாக்கி யங்களின் அடிப்படையிலான போதனைகள் என்று நாம் நம்புகிறவைகளை, வேதாகம பாடங்களினுடைய 6-ஆம் தொகுதியில் முன்வைத்திட நாம் பிரயாசப்பட்டிருக்கின்றோம். அதைத் திரும்பவும் கூறி, அதைக் கேள்வியில் இடம்பெறும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்த நாடிடும்படிக்கு நாம் கூறுவதாவது: ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும், தான் அபிஷேகிக்கப்பட்டுள்ளதன் காரணமாகப் பேசிடுவதற்கும், பிரசங்கம் பண்ணிடுவதற்கும், தனது பரலோகத் தந்தையின் வார்த்தைகளையும், செய்தியையும் அறிவித்திடுவதற்கும் உரிமை உடையவனாய் இருக்கின்றான். பிரசங்கித்திடுவதற்கான உரிமை என்பது பிஷப்புகளுக்கோ அல்லது அவர்கள் யார்மேல் கைகளை வைக்கிறார்களோ, அவர்களுக்கோ மாத்திரம் எல்லைக்குட்பட்டதல்ல அல்லது சபையாரால் கைகளை நீட்டுதல் என்று வேதவாக்கியம் கூறிடும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பர்களுக்கோ, உதவிக்காரர்களுக்கோ மாத்திரம் எல்லைக்குட்பட்டதல்ல. ஏதேனும் காரணங்களினால் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் கவனத்தைச் சிதறாமல் தக்கவைத்துக் கொள்வதற்குரிய திறமையின்மை எனும் குறைபாடுகள் காணப்படலாம். சகோதரிகள் பொது இடங்களில் பிரசங்கம் பண்ணக்கூடாது எனும் அப்போஸ்தலனின் கட்டுப்பாடு தவிர மற்றப்படி எந்தக் கட்டுப்பாடுமில்லை.திவ்விய அதிகாரம் அளிக்கப்பட்டிருத்தல், அபிஷேகித்தல் அல்லது பரிசுத்த ஆவியின் அங்கீகாரம் குறித்த இந்தப் பரந்த கண்ணோட்டத்தில், ஒருவருக்கும் இன்னொருவரைத் தடைப்பண்ணிடுவதற்குரிய உரிமையில்லை என்று நாம் புரிந்திருக்கின்றோம். இயேசு அப்போஸ்தலனாகிய யோவானிடம் கூறினது போன்று, “அவனைத் தடுக்க வேண்டாம்” (மாற்கு 9:39).யாருமே தனது சகோதரனைத் தடைப்பண்ணவோ அல்லது கட்டுப்பாடு பண்ணவோ முடியாது என்றாலும், நாம் நம்முடைய சுயாதீனங்கள் சிலவற்றை விட்டுக்கொடுத்திடலாம். தேவன் ஒழுங்கின் தேவனாய் இருக்கின்றார் என்றும், ஒவ்வொரு நற்கிரியையும் ஒழுங்கினாலேயே வளம்பெறுகின்றது என்றும் அடையாளம் கண்டுகொண்டு மற்றும் தம்முடைய பின்னடியார்கள் ஒரே சரீரமென ஒன்றுகூடிட வேண்டும் என்று கர்த்தர் கொடுத்திட்டதான கட்டளைகளைப் பின்பற்றுகையில், சரீரத்தில் நமக்கான இடத்தை நாம் எடுத்துக்கொள்கையில், நாம் நமது தனிப்பட்ட சுதந்தரம், சுயாதீனங்கள், சிலாக்கியங்களில் சிலவற்றை இழக்கின்றோம் என்று நாம் உணர்ந்து கொள்கின்றோம். இதை நாம் செய்வதில் மகிழ்கின்றோம்; காரணம் அது கர்த்தருடைய சித்தம் என்று நாம் நம்புகின்றோம்; ஏனெனில் அவர், “சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள்” என்று நமக்குக் கட்டளையிட்டுள்ளார். ஆகையால் வேதத்தின் மாணவர்கள் காணப்படும் சபையில் அங்கத்தினர்களாகியுள்ள அனைவரும் தனிப்பட்ட உரிமைகளை ஒப்புக்கொடுத்து விடுகின்றனர். அவர்கள் ஒரு சபையாராகச் செயல்பட்டு, எந்தக் கூட்டங்கள் தேவையாய் இருக்கின்றது என்றும், எந்தக்கூட்டங்கள் தேவையில்லை என்றும், தங்கள் மத்தியிலுள்ள யார் நன்கு வழிநடத்துபவராகக் காணப்பட்டு, சபையாருக்கு ஊழியஞ்செய்பவர்கள் என்றும், யார் மற்ற ஊழியங்களைச் செய்வார்கள் என்றுமுள்ளவைகளைத் தீர்மானிக்கின்றவர்களாய் இருக்கின்றனர்.[R5410 : page 63]இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில், சபையார் மத்தியிலுள்ள சகோதரர்கள், புதிய வகுப்புகளை/சபைகளைத் தொடங்கி மற்றும் இன்னமும் தங்களை அந்தப் பழைய சபையாரின் அங்கத்தினர்களெனத் தொடர்ந்து கருதிக்கொள்வதும் சரியான காரியமாய் இராது. ஒரு சபையார் மத்தியிலுள்ள அங்கத்தினன் ஒருவன், தனது சபையாரால் ஏற்பாடுபண்ணப்பட்டுள்ளவைகளுக்கு அப்பால் வேறொரு வகுப்பை / சபையைத் தனிப்பட்ட விதத்தில் துவங்குவது என்பது, அந்தப் பழைய சபையாரைப் புறக்கணிப்பதாகவும், பழைய சபையாரோடுள்ள தனது உறவினைத் துண்டிப்பதாகவும் இருக்கும் மற்றும் இனிமேல் அச்சபையின் ஊழியக்காரனாகவோ அல்லது அதன் அங்கத்தினனாகவோ அல்லது அதன் சிலாக்கியங்களில் பங்குகொள்பவராகவோ தான் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். தனது சொந்த தனிப்பட்ட சுயாதீனத்தை மீண்டுமாகக் கையில் எடுத்துக்கொள்ளும்போது, அவன் சபையாரின் ஓர் அங்கத்தினன் என்றுள்ள தனது சிலாக்கியங்களைக் கையளித்துவிடுபவனாக இருப்பான்.ஆகையால் இந்த நிலைப்பாட்டின்படி, இச்சந்தர்ப்பத்தில் புதிய சபையை / வகுப்பை ஏற்படுத்துவதில் பங்கெடுக்கச் சகோதரர்களும், சகோதரிகளும், நிச்சயமாகவே சிறந்த நோக்கங்களை மாத்திரம் பெற்றிருந்தனர் என்றும், அநேகமாக சபையை ஏற்படுத்தும் தங்களது செயல்பாட்டின் உண்மையான அர்த்தத்தை மற்றும் தாக்கத்தை அத்தருணத்தில் சிந்தித்துப் பார்க்காதவர்களாய் இருந்துள்ளனர் என்றும் நாம் சொல்லலாம்.இன்னுமாக பழைய சபையாரும், அதன் மூப்பர்களும், உதவிக்காரர்களும், சபையாருடைய விருப்பங்கள் மற்றும் தேவைகள் யாவற்றையும் முழுமையாய்ச் சந்திக்கவில்லை என்பதும் தெரிகின்றது; இல்லையேல் சபையாரால் ஏற்படுத்தப்பட்டுள்ளவைகளுக்கு அப்பால் புதிய வகுப்புகளை / சபைகளை உருவாக்கிடுவதற்கான காரணம் வேறெதுவும் இருக்கமுடியாது. தேவையுடையவர்களுக்கான ஆவிக்குரிய தேவைகளானது சந்திக்கப்படும்படிக்குப் பார்த்துக் கொள்ளத்தக்கதாக எப்போதும் சபையாருடைய ஊழியக்காரர்கள் கவனித்திருக்க வேண்டும்; மற்றும் போதுமான எண்ணிக்கையில் மூப்பர்களும், உதவிக்காரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட வேண்டும்.அத்தீர்மானத்தை எடுத்திட்ட சகோதரர்களின் உணர்வுகளை நாம் மதிக்கிறோம் என்றாலும், அவர்களது செயல்பாட்டினுடைய ஞானத்தினைக் குறித்து நாம் ஐயம்கொள்ளவே செய்கின்றோம். சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்குமான சிறந்த வழி, அனைத்துத் தரப்பினரும் தங்கள் தவறுகளை அறிக்கையிடுவதாகவே இருக்கும் என்று நாம் நம்புகின்றோம். சபையாரும், மூப்பர்களும் பின்வருமாறு கூறிடலாம்: “அன்பான சகோதர சகோதரிகளே, கூட்டங்கள் தொடர்புடையதான சபையாரின் தேவைகளை நாங்கள் சந்தியாமல் போனதின் காரணம், அப்போது நாங்கள் சூழ்நிலையைக் கிரகிக்க முடியாதவர்களாய் இருந்தோம். அதற்காக நாங்கள் வருந்துகின்றோம். எதிர்க்காலத்தில் எங்கள் கடமைகள் விஷயத்தில் நாங்கள் மிகவும் உண்மையாய் இருப்போமென்று நாங்கள் வாக்களிக்கின்றோம்.”புதிய வகுப்பை / சபையைத் தொடங்கினவர்களும் பின்வருமாறு கூறிடுவது நலமாயிருக்கும் என்று நாம் எண்ணுகின்றோம்: அதாவது “அருமையான சகோதர சகோதரிகளே, நாங்கள் இவ்விஷயத்தைக் குறித்துப் போதுமான பரந்த கண்ணொட்டம் பெற்றாராததற்கும், சபையாருடைய நியமித்தலின்படி தேவையானது சந்திக்கப்பட வேண்டும் என்றுள்ள நோக்கத்தில் கூட்டத்திற்கான வேண்டுகோளை முன்வைத்திடாததற்கும் நாங்கள் வருந்துகின்றோம்.”இப்படியாகத் தவறை வருத்தத்தோடு ஒப்புக்கொண்டு மற்றும் பொறுத்துக் கொள்வதோடு, முழுக்காரியமும் சரியாகிவிடும் என்றும், அனைவரும் மனபதற்றத்திலிருந்து விடுதலையடைவதை உணருவார்கள் என்றும் நாம் நம்புகின்றோம் மற்றும் அநேகமாக இந்த விளைவுகளானது, பழைய சபையாருடைய நியமித்தலின் கீழ்ப் புதிய கூட்டங்கள் நடத்தப்படாதது வரையிலும் சிறப்பாய் இராது.