R3938 (page 45)
ஆதியாகமம் 13:1-13
“பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.” (KJV)
“கவனமாக இருங்கள், எல்லா வகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.” (லூக்கா 12:15; ERV – தமிழ்)
R3939 : page 46
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதேயும்
பெரும்பாலும் சுயநலம் மற்றும் பொருளாசை (பேராசை) காரணமாகவே குடும்பத்திலும், சபையிலும் சண்டைகள் எழுகின்றது; மேலும் கர்த்தருக்கு அருகாமையிலும், அவருடைய குணலட்சணத்திற்கு ஒத்த சாயலில் அதிகமாக வளர்ந்துள்ள நிலையிலும் காணப்படுபவர்கள் எல்லாவிதமான சண்டையிலும் மிகவும் பெருந்தன்மையுடன் காணப்படுவது என்பது இத்தகையவர்களுக்கான சிலாக்கியமாகும். பெரும்பான்மையான சண்டைகள் விட்டுக்கொடுக்கப்படாத அற்ப அல்லது முக்கியத்துவமற்ற விஷயங்கள் நிமித்தமே காணப்படுகின்றது; கொள்கைகள் விஷயங்களில் மாத்திரமே கர்த்தருடைய ஜனங்கள் உண்மையாகப் போராடலாம். கொள்கை விஷயத்திலான போராட்டத்திலும்கூட அன்பு மற்றும் பரந்த மனப்பான்மையுடனே காணப்பட வேண்டும்; அதாவது தனிப்பட்ட விருப்பங்கள் தொடர்புடைய விஷயத்தில், முடிந்தமட்டும் மற்றவருக்கு விட்டுக்கொடுக்கும் விருப்பத்தின் சிந்தை காணப்பட வேண்டும், ஆனால் கர்த்தருடைய வார்த்தை மற்றும் நீதியின் கொள்கையைப் பொறுத்தவரையில், உறுதியாகவே காணப்பட வேண்டும். சபையில் சண்டை எழும்பும் போது, பொதுவாக தவறான புரிந்துகொள்ளுதல் அல்லது சுயநலம், பேராசை, பிரதானமாக பெரியவராய் [R3940 : page 47] இருப்பதற்கான ஆசை ஆகியவைகளே அடிப்படையாகக் காணப்படுகின்றது. இப்படியான சந்தர்ப்பங்களில் கர்த்தருடைய ஜனங்கள் ஒவ்வொருவரும் எதிர்மாறான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ள தன்னுடைய சகோதரனுக்கு உதவிசெய்ய முற்படுவதற்கு முன்னதாக, தனது சொந்த இருதயத்தை நன்கு பரிசோதித்துக்கொள்ள வேண்டும் மற்றும் தனது சொந்த கண்கள் நலமாய் இருக்கின்றதா எனப்பார்த்துக்கொள்ளவும் வேண்டும். இப்படியாக ஒருவர் விட்டுக்கொடுக்கும் அளவுக்கு நோக்கமும், விருப்பமும், சொந்த இருதயத்தில் பெருந்தன்மையும் கொண்டிருப்பதையும், மற்றவர்களிடத்தில் நலமானதைக் காணவும், ரசிக்கவும், அங்கீகரிக்கவும் தன்னால் முடியும் என்பதையும் தனக்குள் நிச்சயம் பண்ணினவர், மற்றவர்களோடு கலந்துபேசவும், சூழ்நிலைப் பற்றிய சரியான, பரந்த மற்றும் பெருந்தன்மையுமான கண்ணோட்டத்தை மற்றவர்களும் எடுக்கத்தக்கதாக, உதவவும் ஆயத்தமாய்க் காணப்படுவார்.
வீட்டிலும், சபையிலும் “ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையி னாலாவது” செய்யக்கூடாது என அப்போஸ்தலர் வலியுறுத்துகின்றார். மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசித்தவர்களாகிய, கிறிஸ்து இயேசுவுக்குள்ளான புதிய சிருஷ்டிகள் மத்தியில் அன்பு மாத்திரமே ஊக்குவிக்கும் வல்லமையாகக் காணப்பட வேண்டும். இப்படியாக அனைத்துப் பிரச்சனைகளைச் சமாதானமான விதத்தில் சரிசெய்துகொள்வதற்கான வழி உள்ளது, மேலும் இதை நம் கர்த்தர் தாமே முன்வைத்துள்ளார்; மேலும் இதை விரிவாக நாம் டாண் வெளியீட்டில் தொகுதி – VI, அதிகாரம் VI-இல் கொடுத்துள்ளோம். ஆனால் எங்கு அனைத்து வழிகளும் தோல்வியடைகையில், அங்குச் சகோதரத்துவத்தின் ஆவியை அணையச்செய்து, பகைமை (அ) கோபத்தின் ஆவியை நிலவச்செய்வதற்குப் பதிலாக, தங்களால் அன்பில் ஒன்றாக ஐக்கியம் வைத்துக்கொள்ள முடியாது என்று கண்டுகொள்பவர்கள், ஆபிரகாம் மற்றும் லோத் சூழ்நிலைபோன்று, பிரிந்துசெல்வதின் மூலம் ஆவியில் ஐக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள நாட வேண்டும். இப்படிச் செய்வது என்பது, உள்ளுக்குள்ளே சண்டைகள் கொண்டிருப்பதைவிட, கடைசி தீர்வு என அங்கீகரிக்கப்பட்டாலும், இப்படியான நடவடிக்கை என்பது நிச்சயமாக கவலைக்குரிய ஒன்றாகும்; மற்றும் இது அக்கூட்டத்தாரில் அனைவரும் இல்லை என்றாலும், சிலராகிலும் புதிய சுபாவம் தொடர்பான விஷயங்களில் மிகவும் வளர்ச்சியற்ற நிலையில் காணப்படுகின்றார்கள் என்பதையும், சமாதானம்பண்ணுகிறவர்களுக்குரிய வல்லமையில் மிகவும் குறைவுபட்டவர்களாய் இருக்கின்றார்கள் என்பதையும், திரளான பாவங்களை மூடிப்போடுகிறதும், நீடிய பொறுமையுடனும், அன்புடனும், பொறுமையுடனும், இரக்கத்துடனும் சகிக்கும் சகோதர சிநேகத்தில் மிகவும் குறைவுபட்டிருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.