மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5388 (page 29)

மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை

ST. PAUL'S EXHORTATION TO ELDERS

“நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.”

(அப்போஸ்தலர் 20:29-30)

இந்த வார்த்தைகளானது, எபேசுவிலுள்ள சபையின் மூப்பர்களுக்குக் கூறப்பட்டவையாகும். பரிசுத்த பவுலடிகளார் எருசலேமுக்குப் போகையில், எபேசு பட்டணத்திற்கு அருகாமையில் காணப்பட்டபோது, தான் அங்குக் கொஞ்சம் காலம் காணப்படப்போவதாகவும், அவர்களை மீண்டும் ஒருமுறை சந்திப்பதில் மகிழ்ச்சியாய் இருப்பார் என்பதாகவும் கூறி (எபேசு சபையின்) மூப்பர்களுக்கு ஆளனுப்பி வைத்தார். அவர்களும் வந்து, அவரோடுகூட நீண்டதொரு கலந்துரையாடல்
பண்ணினார்கள். நமது ஆதார வசனமானது, அவர்களுக்கு அவரால் கொடுக்கப்பட்ட செய்தியின் ஒரு பாகமாய் இருந்தது. அவர்களை பட்டணத்திற்கு அருகாமையில் காணப்பட்டபோது, தான் அங்குக் கொஞ்சம் காலம் காணப்படப்போவதாகவும்,
அவர்களை மீண்டும் ஒருமுறை சந்திப்பதில் மகிழ்ச்சியாய் இருப்பார் என்பதாகவும் கூறி (எபேசு சபையின்) மூப்பர்களுக்கு ஆளனுப்பி வைத்தார். அவர்களும் வந்து, அவரோடுகூட நீண்டதொரு கலந்துரையாடல் பண்ணினார்கள். நமது ஆதார
வசனமானது, அவர்களுக்கு அவரால் கொடுக்கப்பட்ட செய்தியின் ஒரு பாகமாய் இருந்தது. அவர்களை மறுபடியுமாக சந்திக்கப்போவதில்லை என்று அவர் அவர்களிடத்தில் கூறி, அவர்கள் தங்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க
வேண்டுமென்று அறிவுரை கூறினார். இது மற்றவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருத்தல் என்பதைவிட, தன்னைக் குறித்தே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் கடமையாக்குகின்றது. ஒரு மனுஷன் தன்
சொந்த மனதை அடக்குகிறதற்குக் கற்றுக்கொள்ளாதது வரையிலும், அவன் மற்றவர்களை அடக்குவதற்கு ஏதுவான நிலையில் காணப்படான்.

இது மூப்பர்கள் அனைவரின் விஷயத்திலும் குறிப்பாய் உண்மையாகக் காணப்படுகின்றது. அவர்கள் தங்களைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். சபையார் அவர்களுக்குக் கொடுத்திடும் கனத்தின் நிமித்தமாக, அவர்கள்
தற்பெருமையினால் – இறுமாப்புணர்ச்சியினால் இழுக்கப்பட்டுப் போவதற்குரிய அபாயத்தில் காணப்படுகின்றனர். அவர்கள் கர்வமுள்ளவர்களாகுவதற்கான அபாயத்தில் காணப்படுகின்றனர். அவர்கள் தங்களைக் குறித்தும் மற்றும் தங்களைக் கண்காணிகளாக வைத்த தேவனுடைய மந்தையைக்குறித்தும் எச்சரிக்கையாய் இருக்கும்படிக்குச் செய்தி கொடுக்கப்பட்டது. அவர்கள் சபையாருக்கு மாத்திரமல்லாமல், கர்த்தருக்கும்கூடப் பிரதிநிதிகள் என்ற தங்களது ஸ்தானத்தை அடையாளம்
கண்டுகொள்ள வேண்டும். நியமிக்கப்பட்ட வழியில் – அதாவது கைகளை நீட்டி தேர்ந்தெடுக்கும் வழி மூலமாய் இந்த ஸ்தானம் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளபடியால், இதை அவர்கள் சபையாருடைய வார்த்தையாக எடுத்துக்கொள்வது

மாத்திரமல்லாமல், இன்னுமாக தாங்கள் பரிசுத்த ஆவியினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும். சபையை இப்படியாகப் பராமரிப்பது என்பது தங்களுக்கான மாபெரும் ஊழியமென, கர்த்தருடைய நாமத்தில்
ஏறெடுக்கப்பட வேண்டிய முக்கியமான ஊழியமென அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

ஓநாய்களும், கள்ள ஆடுகளும்

ஏன் மூப்பர்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாம் காரணமானது, அப்போஸ்தலன் சொல்லியுள்ளது போன்று, மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய் அவர்களுக்குள்ளே வரும்
என்பதாகும். ஓநாய்களானது எந்த ஒரு காலப்பகுதியிலும் மந்தையில் அங்கம் வகிப்பவர்களாக இருக்கவில்லை என்பது சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது. இவர்கள் தங்களை ஓநாய்கள் என்று காண்பித்துக் கொள்வதில்லை. ஓநாய் சுபாவமுள்ள
ஒரு குறிப்பிட்ட வகுப்பார், சபையாருடன் தங்களை [R5388 : page 30] இணைத்துக்கொள்ள நாடிடுவார்கள் என்று அப்போஸ்தலனுடைய எச்சரிப்பானது சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. “கள்ளத்தீர்க்கத்தரிசிகளுக்கு
எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” என்று நமது கர்த்தர் எச்சரித்துள்ளார் (மத்தேயு 7:15). இது வஞ்சிப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது – ஆடுகள்போன்று நடந்து, ஆடுகள் மத்தியில் காணப்பட்டு மற்றும் ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு, தங்களை ஆடுகள் என்று காண்பித்துக்கொள்பவர்கள், ஆனால் ஒருபோதும் உண்மையான ஆடுகளாக இராதவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. மந்தைக்குள் இவர்கள் வருவதற்கான நோக்கம் சுயநலமானதேயாகும் மற்றும் இவர்களது ஆதிக்கமானது, ஆடுகள் மத்தியில் ஓநாய் கொண்டிருக்கும் ஆதிக்கமாகவே இருக்கின்றது. ஓநாயானது ஆடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றதாய் இருக்கின்றது – ஓநாய் ஆடுகளைக் கொன்று, அவைகளின் இரத்தத்தினை உறிஞ்சிடுவதற்கே நோக்கம் கொண்டிருக்கின்றது.

நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட நிலையில், எந்தக் காரணமுமில்லாமல் சத்தியத்தைப் புரட்டுகிற, மந்தையை பாதிப்பிற்குள்ளாக்குகிற, மந்தையைக் குழப்புவதற்கு ஏதுவாயும், அவர்களைப் புதுச்சிருஷ்டிகளென அழித்துப் போடுவதற்கு ஏதுவாயும், அவர்களை மரணத்திற்கு இழுத்துச்செல்வதற்கு ஏதுவாயும் வாக்குவாதங்களை எழுப்புகிற ஒரு வகுப்பார் காணப்படுவார்கள் என்பதாகத் தெரிகின்றது. அநேகமாக யுகம் முழுவதிலும் இம்மாதிரியான வகுப்பார் காணப்பட்டிருக்கின்றனர். நம்முடைய

ஆதார வசனமானது, ஆடு ஓநாய்களாக மாறும் என்று சுட்டிக்காண்பிக்கவில்லை என்றாலும், ஒரு காலத்தில் ஆடுகளாய் இருந்து பிற்பாடு ஓநாய் சுபாவத்தினை வெளிப்படுத்தி மற்றும் மந்தையைப் பாதிப்பிற்குள்ளாக்கும் விஷயத்தில் தங்களால்
முடிந்த அனைத்தையும் செய்திடுவதில் பிரியம் கொண்ட சில நபர்களை, நம்மில் சிலர் ஒருவேளை அறிந்திருக்கலாம். ஆடுகள் மத்தியில் வந்து தங்களை ஆடுகள் போல் காண்பித்துக்கொள்பவர்களைக் குறித்து நாம் ஜாக்கிரதையாய்

இருக்கும்படிக்கு கர்த்தரும், அப்போஸ்தலர்களும் நம்மை எச்சரிக்கின்றனர்.

ஓநாய்களிடமிருந்து வரும் இந்த அபாயத்துடன்கூட, உள்ளிலும் அபாயங்கள் காணப்படும். இதனை மிகவும் சூழ்ச்சிகரமான அபாயம் என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். ஓநாய் சுபாவம் உள்ளவர்கள் ஒருபக்கம் இருக்க, சபையாரில் சிலர்
போதகர்களாக ஊழியம் புரிபவர்களாகக் காணப்பட்டு, மாறுபாடானவைகளைப் போதிப்பதன் மூலம், சீஷர்களைத் தங்களிடத்திற்கு இழுத்துக்கொள்வதற்கு நாடிடுவார்கள். ஏதோ சீஷர்கள் அவர்களுக்குச் சொந்தமானவர்கள் போன்று, இழுத்துச்
செல்வதற்கு நாடிடுவார்கள். சபை [R5389 : page 30] கர்த்தருடைய மந்தையாக இருக்கின்றனர் என்றும், அவர்கள் கர்த்தருடைய ஆடுகளாய் இருக்கின்றனர் என்றும், அடையாளம் கண்டுகொள்ளாமல் – இது என்னுடைய சபையார்,
என்னுடைய மந்தை என்பது இவர்களது உணர்வுகளாய் இருக்கும். இம்மாதிரியான உணர்வுகளில், கர்த்தருடைய மற்றும் வேதவாக்கியங்களுடைய ஆவிக்கு எதிரான சுயநலமான மனப்பான்மையே காணப்படுகின்றது. “தன்னைத்தான்

உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்பது திவ்விய நிர்வாகத்தின் கொள்கையாகும் (லூக்கா 14:11). உண்மையான மூப்பராகவும், கர்த்தருக்கு உண்மையான ஊழியக்காரனாகவும்
இருக்க விரும்பும் எவரும், இவைகளை நினைவில் கொண்டிருக்க வேண்டும் மற்றும் சுயநல நாட்டத்தின் ஆவியாயிருக்கும் அனைத்தையும் தவிர்த்திட வேண்டும். இப்படியாக இல்லையேல் அவன் தனக்கு மாத்திரமல்லாமல், இம்மாதிரியான

நடக்கையின் வாயிலாக மற்றவர்களுக்கும் பாதகம்பண்ணுகிறவனாய் இருப்பான் என்பதைத் தெரிந்துகொள்வானாக.

திறமைக்கு ஏற்ப பொறுப்பு

செம்மறியாடுகள் மிகவும் அச்சம்கொள்ளும் விலங்குகளாகும் மற்றும் சில வழிநடத்துதல் அவைகளுக்குத் தேவைப்படுகின்றது. மேய்ப்பன் இல்லாமல் இருக்கையில், அவைகளை வழிநடத்துவதற்கு, அவைகளின் மத்தியிலிருந்து, ஒன்று
காணப்படுவது அவசியமாய் இருக்கின்றது. ஆட்டுமந்தையில், ஞானமுள்ள ஆடுகள் – மந்தையின் ஆட்டுக்கடாக்கள், வழிநடத்துபவைகளாக காணப்படுகின்றன; இவைகளை மேய்ப்பன் இல்லாமல் இருக்கையில், பின் தொடருவதற்கு ஆடுகள்
கற்றுக்கொள்கின்றன. மந்தையிலுள்ள இந்த மூத்த ஆட்டுக்கடாக்கள், கிறிஸ்துவின் சபையிலுள்ள மூப்பர்களுக்கு அடையாளமாய் இருக்கின்றன. ஆட்டுக்கடாக்களின் கொம்புகளானது பாதுகாக்கும் வழிவகையாகக் காணப்படுகின்றது; இதனால்
ஆட்டுக் கடாவானது, தாக்குதலின்போது, எதிரியைத் துரத்தமுடியும் மற்றும் செம்மறியாடுகளானது ஆட்டுக்கடாவிற்குப் பின்பாக போய் நிற்கமுடியும்.

ஆனால் மந்தையினுடைய சில ஆட்டுக்கடாக்களைக் குறித்துள்ள – கர்த்தருடைய ஜனங்களுக்கான சில வழிநடத்துபவர்களைக் குறித்துள்ள அபாயம் பற்றி வேதவாக்கியங்கள் கூறுகின்றன (எசேக்கியேல் 34:17-23); இந்த ஆட்டுக்கடாக்களானது,
ஓடைக்குள் இறங்கி, அதைச் சேறாக்கி, தண்ணீரை அசுசிப்படுத்துகின்றது. வெள்ளாடுகள்கூடக் குறிப்பிடப்பட்டுள்ளன; இது கிறிஸ்துவின் சபையிலுள்ள சில மூப்பர்களுடைய மனப்பான்மையைச் சித்தரிக்கின்றதாய் இருக்கின்றது; மற்றும் இதை

நாம் மறந்துபோய்விடக்கூடாது. செம்மறியாடுகளின் சொந்தக்காரர்கள் சிலசமயம் மந்தையை வழிநடத்துவதற்கு வெள்ளாடுகளைப் பயன்படுத்துவார்கள் என்று நமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது; காரணம் செம்மறியாட்டைப்பார்க்கிலும்
வெள்ளாடானது, எதிர்த்து நிற்கும் தன்மையை அதிகமாய்ப் பெற்றதாய் இருக்கின்றது மற்றும் இப்படியாக வெள்ளாடானது, செம்மறியாடுகளுக்குத் தேவைப்படும் தைரியம் முதலியனவற்றை அளிக்கின்றதாய் இருக்கின்றது. எத்தனை
கர்த்தருடைய மந்தைகள் வெள்ளாடுகளினால் வழிநடத்தப்படுகின்றனர் என்பதை நாம் அறியோம். ஆனால் ஒருவர் வெள்ளாட்டினுடைய சுபாவத்தினை வெளிப்படுத்தும்போது அவரை, வழிநடத்துபவராக்குவதைச் சபையார் கண்டிப்பாய் தவிர்த்திட
வேண்டும்.

தகுதியான பண்புகளை வெளிப்படுத்துபவர்களே தகுதியான வழிநடத்துபவர்கள். சபையானது பெரும்பாலும் வழிநடத்துபவர்களைச் சார்ந்திருக்கின்றது; ஆகையால் வழிநடத்துபவர்களே பெரிதளவில் பொறுப்பினை உடையவர்களாய் இருக்கின்றனர்.
ஆகையால்தான் போதகனாய் இருக்கும் மனுஷன் கடுமையான சோதனைக்குள்ளாவான், கடுமையான பரீட்சைக்குள்ளாவான் என்பதை அறிந்து, என் பிரியமான சகோதரரே, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக என்று அப்போஸ்தலன்
கூறுகின்றார் (யாக்கோபு 3:1). அவன் தன்னுடைய திறமைக்கேற்ப அதிகம் பொறுப்புடையவனாக இருப்பான். ஆகையால் மூப்பர்களின் ஸ்தானத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருமே ஒருவிதத்தில் மந்தைக்குப் பிரதான மேய்ப்பனாகக்
காணப்படுகின்றதான கர்த்தரைப் பிரதிநிதித்துவம் பண்ணுகின்றவர்களாய் இருப்பார்கள்.