R4977 (page 66)
“நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெய்யைப்போல் இருக்கும்; அது என் தலையை நொறுக்கிப் போடுவதில்லை.” – (சங்கீதம் 141:5; சரியான மொழியாக்கம்)
வேதவாக்கியங்களில் நீதிமான் என்ற வார்த்தையானது இரண்டு விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு விதத்தில் அது முற்றும் முழுமையான நீதியான நிலையைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; உதாரணத்திற்கு, “அந்தப்படியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.” நம்முடைய ஆதார வசனத்தில், நமது கர்த்தர் இயேசு குட்டுகிற நீதிமானாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இப்படியான விதத்தில் பார்க்கும்போது, சிட்சைகள் என்பது நமது கர்த்தரிடத்திலிருந்து வருகின்றதாய் இருக்கின்றது; மற்றும் சிட்சையைப் பெற்றுக்கொள்கின்றவன், இப்படியான கண்டித்தலிலுள்ள தேவனுடைய ஞானம், நீதி மற்றும் அன்பை அறிந்தவனாக, அதை உணர்ந்துகொண்டுள்ள நிலையில் ஏற்றுக்கொள்வான். ஆனால் இன்னொரு விதத்தில் நீதிமான் என்ற வார்த்தையானது, மனுக்குலத்திற்குப் பொருந்தும் வகையிலும் பயன்படுத்தப்படுகின்றது. வேதவாக்கியங்களில் பல்வேறு நபர்கள் நீதிமான்கள் என்று குறிப்பிடப் படுகின்றனர்; காரணம் அவர்கள் பூரணமானவர்கள் என்பதினால் இராமல், மாறாக அவர்கள் சரியான நோக்கமும், சரியான சித்தமும் உடையவர்களாய் இருந்து, தங்கள் நடக்கையில் தேவனுடைய ஆவியை,நீதியின் ஆவியை வெளிப்படுத்தினதினாலேயே ஆகும்.
இப்படியாக நீதிமான் என்ற இந்த வார்த்தையை, ஆதார வசனத்தில் பொருத்திப் பார்க்கும்போது, அது கர்த்தருடைய ஜனங்களாய் இருப்பவர்கள் அனைவரும் யாரை திருத்திட முயற்சிக்கின்றார்களோ, அவர்களுக்கு உதவியாகவும், அவர்களுடைய நன்மைக்காகவும் இருக்கும் வகையில், நீதியாய்க் கண்டித்தலையும், நெறிப்படுத்துதலையும் செய்யமுடிகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும்;; அதுவும் ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும், புத்துணர்வையும் கொண்டுவரும் விதத்தில் செய்ய முடிகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும்; அதுவும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நறுமணம் கொண்டுள்ள நறுமண எண்ணெய் போன்று இருக்கும் விதத்தில் செய்யமுடிகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இந்தக் கருத்துக்களை நம்முடைய மனங்களுக்கு முன்பாகக் கொண்டிருக்கும்போது, இதில் நமக்கு விலையேறப்பெற்ற படிப்பினைகள் கிடைக்கின்றதாய் இருக்கும். முதலாவதாக நாம் கர்த்தரிடமிருந்து வரும் சரிப்படுத்துதல்களை ஏற்றுக்கொள்பவர்களில் அடங்குகின்றவர்களாக இருத்தல் வேண்டும் மற்றும் ஏதேனும் காரியத்தில் நாம் தவறு செய்திருந்தால், அதனை சரிசெய்துகொள்வதில் மகிழ்ச்சியாய் இருப்பவர்களாக இருத்தல் வேண்டும்; அடுத்தப்படியாகக் கண்டித்தல் வழங்கப்படுவது ஏற்றதாக இருக்குமென்றால், அது பாதிப்பை ஏற்படுத்துகிற விதமாய் இராமல், மாறாக ஆவிக்குரியதாகவும், தூக்கிவிடுவதாகவும், புத்துணர்வு ஊட்டுவதாகவும் காணப்பட வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இப்படியாகக் காணப்பட வேண்டுமெனில், கண்டித்தல் என்பது அனுதாபத்துடன் / இரக்கத்துடன்கூடிய ஒன்றாகக் காணப்படவேண்டும். கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் மாம்சத்தில் விழுந்துபோனவர்களாகவும், ஆனால் கிறிஸ்துவில் புதுச்சிருஷ்டிகளாகவும் காணப்படுகின்றனர் என்றும், அவர்கள் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகள் என்றால் அவர்கள் கர்த்தருடைய மனதையும், அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருப்பார்கள் என்றும் நாம் நினைவில் கொண்டிருத்தல் வேண்டும். இந்த ஒரு கண்ணோட்டத்திலிருந்து கண்டித்தலை வழங்கக்கூடிய எந்த ஒரு சகோதரரும், தான் யாரைக் கண்டிக்கின்றாரோ அந்நபர் தீமையான நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதை அடையாளம் கண்டுகொண்டு, முடிந்தமட்டும் தயவாயும், இரக்கமாயும், உண்மை விவரங்களை விளக்கிக்கொடுப்பவராய்க் காணப்படுவார். இம்மாதிரியான கண்டித்தலானது திடீரென்று கொடுக்கப்படக்கூடாது; மற்றும் கண்டித்தலை வழங்கும் நபர், வழங்கப்படவேண்டிய தண்டனை மற்றும் அதற்கான ஏறற் வேளை முதலானவைகள் கர்த்தருக்குரியது என்பதையும் நிதானித்துக்கொள்ள வேண்டும். இப்படியாகவே நீதிமானாய்க் காணப்படும் யாவரும், மற்றவரைக் கண்டிக்கும்போது காணப்பட வேண்டும். ஜாக்கிரதையாய்க் கருதிக்கொண்டும், ஜெபத்தில் வைத்த பிற்பாடும்தான், கண்டித்தல் பண்ண வேண்டும் மற்றும் இப்படிக் கண்டிப்பதே ஒரு சகோதரனுக்கு (அ) சகோதரிக்கு உதவி செய்வதற்கு இருப்பதிலேயே மிகச் சிறந்த வழியாய் இருக்கும் என்ற முடிவிற்கு வந்த பிற்பாடே கண்டிக்க வேண்டும். இப்படியான நிலைமையில் கண்டிப்புகள் யாவும் கொடுக்கப்பட்டால், இது சாதாரணமாய் வழங்கப்படும் கண்டிப்புகளைக் காட்டிலும், மிகவும் உதவிகரமானதாகக் காணப்படும் என்று நம் அனைவராலும் ஒத்துக்கொள்ள முடியும்.
ஆதார வசனத்தில் இடம்பெறும் “அது என் தலையை நொறுக்கிப்போடுவதில்லை” என்பதான வார்த்தைகளானது, கண்டித்தல் துன்பத்தைக் கொடுக்கிறதாகவோ, நொறுக்கிப்போடுகிறதாகவோ காணப்படாமல், ஆசீர்வாதமாய்க் காணப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஒருவருடைய தலையை நொறுக்கிப்போடுதல் என்பது, அந்நபரைக் கொன்றுபோடுவதான காரியமாகும். மற்றவர்களுக்குப் பாதகம் ஏற்படுத்துவதற்கான (அ) மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான நோக்கத்திற்காக நீதிமான்கள் உலகத்தில் காணப்படாமல், மாறாக உலகத்தில் நன்மை புரிவதற்கான நோக்கத்திற்காகவே காணப்படுகின்றனர். மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றவர்கள், இப்படிச் செய்ததற்கு ஏற்ப அநீதிமான்களாய் இருப்பார்கள். தங்களால் கண்டிக்கப்படுபவர்களை நொறுக்கிப்போடத்தக்கதாக தங்களது விமர்சனங்களையும் / குற்றஞ்சாட்டுதல்களையும் மற்றும் கண்டனங்களையும் பயன்படுத்துகின்றவர்கள் நீதிமான்கள் அல்ல. இப்படிப்பட்டவர்கள் குற்றங்களைச் சரியாய் எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் அப்போஸ்தலனின், “கடிந்துகொள்ளுதல்,” “கண்டனம் பண்ணுதல்” முதலான வார்த்தைகள், தேவனுடைய ஜனங்கள் அனைவரிடமும் கூறப்படாமல், மாறாக மூப்பனாகிய தீமோத்தேயுவிடம் கூறப்பட்டதை அறிந்துகொள்ள வேண்டும். இதனால்தான் சாந்தகுணமுள்ள மனிதர்களாகவும், வளர்ச்சியடைந்துள்ள மனிதர்களாகவும், தங்களது சொந்த ஜீவியங்களையும், சொந்த நாவுகளையும் கட்டுப்படுத்தியுள்ள மனிதர்களாகவும் இருப்பவர்கள் மாத்திரமே மூப்பர்களாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்; இதினிமித்தம் இவர்கள் மற்றவர்களை நொறுக்கிப்போடுகின்றவர்களாய் இராமல், மாறாக இவர்களது கடிந்து கொள்ளுதலானது, மற்றவரைக் கர்த்தரிடம் நெருக்கமாய்க் கொண்டுவருவதற்கு நோக்கமாயும் மற்றும் இதற்கு உதவியாயும் மற்றும் உற்சாகமூட்டுகிறதாயும் மற்றும் துணைப்புரிகின்றதாயும் காணப்படும்.
முதிர்வயதுள்ளவரைக் கடிந்துகொள்ளாமல்
முதிர்வயதுள்ளவரைக் கடிந்துகொள்ளாமல், அவரைத் தகப்பனைப்போன்று பாவிக்கும்படிக்கு, பரிசுத்தவனாகிய பவுல், தீமோத்தேயுவுக்குப் புத்திமதி கூறினபோது, அப்போஸ்தலன் இங்குச் சபையிலுள்ள மூப்பரைக் குறித்துக் குறிப்பிடாமல், மாறாக ஒரு நபரைக்காட்டிலும் வயதில் முதிர்ந்தவராய் இருப்பவரைக் குறித்துக் குறிப்பிடுகின்றார். உன்னைக்காட்டிலும் வயதில் முதிர்ந்தவரைக் கடிந்துகொள்ளாதே என்றும், அவரைத் தகப்பன்போன்று பாவிக்க வேண்டும் என்றும், இதுபோலவே முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய புருஷர்களைச் சகோதரர்கள்போலவும், பாலிய ஸ்திரீகளைச் சகோதரிகள் போலவும், நடத்தவேண்டும் என்றும் உள்ள விதத்தில் அப்போஸ்தலன் குறிப்பிடுள்ளார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், மற்றவர்களுடைய சுயாதீனங்களை நசுக்கிடுவதற்கோ (அ) மற்றவர்களை அச்சுறுத்துவதற்கென்றோ, சபையில் மூப்பர்கள் நியமிக்கப்படவில்லை. தயவு, காருண்யம் முதலானவைகளின் ஆவியே பரிசுத்த ஆவியாய் இருக்கின்றது. இவைகள் அல்லாத வேறே ஆவியில் ஒரு மூப்பர் கடிந்துகொள்வாரானால், அவர் தன்னால் கடிந்துகொள்ளப்படும் நபர் ஒரு குழந்தை அல்ல என்பதையும், அந்நபர் குழந்தை போன்று நடத்தப்படக்கூடாது என்பதையும், அந்நபர் கடிந்து கொள்ளப்படவோ (அ) தாக்கிப்பேசப்படவோ (அ) “இவைகள் அனைத்துமே தவறு!” என்று கூறப்படவோ கூடாது என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். ஞானமற்ற விதங்களில் வழங்கப்படும் கடிந்துகொள்ளுதலானது, பிரச்சனைக்கான பலமான காரணமாய் அமைகின்றது.
வயதில் முதிர்ந்த ஒருவர், ஒரு காரியத்தை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது என்று, வயதில் குறைந்த ஒரு நபர் எண்ணி, “இவைகளையெல்லாம் நீங்கள் அறிய வேண்டியிருக்கிறது, நான் உங்களுக்குப் பாடம் புகட்டுகிறேன்” என்று வயதில் குறைந்தவர் கூறுவதும், பொறுமையை இழந்துபோவதும், ஞானமுள்ள காரியமாகவோ (அ) இரக்கமுள்ள காரியமாகவோ (அ) தயவுள்ள காரியமாகவோ இருந்திடாது. இம்மாதிரியான ஆவியானது, அநேக இடங்களில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான நடக்கைகளுக்கு எதிர்மாறாகவே அப்போஸ்தலனுடைய புத்திமதி காணப்படுகின்றது மற்றும் அவர் இரக்கத்தையும், தயவையும், வயதை கருத்தில்கொள்ளும் தன்மையையும் மற்றும் இது விஷயத்தில் தேவையான அனைத்தையும் அறிவுறுத்துகின்றவராய்க் காணப்படுகின்றார். அநேக வேதவாக்கியங்களைப் பார்க்கும்போது, நம் நாட்களில் நாம் காணமுடியாத அளவு, முற்காலங்களில் குடும்பத்தின் மீதான ஓர் அனுதாபம் காணப்பட்டுள்ளது என்பது நிச்சயமே இதுவே அப்போஸ்தலனின் பின்வரும் வார்த்தைகளிலும் வெளிப்படுகின்றது. “முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு” (1 தீமோத்தேயு 5:1-2).
இன்றைய நாட்களில் அந்நியர்களிடம் மிகவும் பரிவுடன் / பண்பட்ட விதத்தில் நடந்துகொள்வதும், ஒருவருடைய சொந்த குடும்பத்தாரிடம் மிகவும் பரிவற்ற / பண்பற்ற விதத்தில் நடந்துகொள்வதும் வழக்கமாய்க் காணப்படுகின்றது; சிலர் வெளியாட்களிடம் மிகவும் பரிவுடன் / பண்பட்ட விதத்தில் நடந்து கொள்வார்கள், ஆனால் தாங்கள் யாருக்கு இரக்கமும், உதவியும் மற்றும் அனுதாபமும் காண்பிக்க வேண்டுமோ அத்தகையவர்களிடம் மிகவும் பரிவற்று/பண்பற்று நடந்துகொள்வார்கள். இதே கருத்தே, “சகோதர சிநேகமுள்ளவர்களாய் இருங்கள்” என்ற புத்திமதியில் வெளிப்படுகின்றது. ஆனால் இன்றைய நாட்களில் நீங்கள் உண்மையான நண்பர்களைத் தேடுகையில், நீங்கள் சொந்தக் குடும்பத்திற்குள் பெரும்பாலும் தேடிடுவதில்லை. இந்த விஷயத்தில் நம்முடைய வளர்ச்சி என்பது பரிணாம [R4978 : page 67] வகையாய் நிச்சயமாய்க் காணப்படுவதில்லை. தகப்பன், தாய், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அக்கறையுடனும், இரக்கத்துடனும், அன்புடனும் நடத்தப்பட வேண்டும். மேலும் இந்தக் கொள்கையானது விசுவாச வீட்டாரிடத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.
அன்பானது பிறனுக்கு பொல்லாங்குச் செய்யாது
2 தீமோத்தேயு 4:2-ஆம் வசனத்தில், தேவனுடைய கிருபையின் ஊழியக்காரனாக அப்போஸ்தலன், சுவிசேஷம் அறிவிக்கப்படும் விஷயத்தில் அடங்கும் மூன்று அம்சங்களை அதாவது: (1) கண்டனம்பண்ணுதல்; (2) கடிந்துகொள்ளுதல்; (3) புத்திசொல்லுதல் எனும் அம்சங்களைக் குறித்து விவரிக்கின்றார். ஆனால் முதல் இரண்டு அம்சங்களைத் தாராளமாய்ப் பயன்படுத்தும் விஷயத்திற்கு எதிராக, கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் எச்சரிக்கப்படுவது பாதுகாப்பானதாகும். சரியாய்க் கண்டனம் பண்ண வேண்டுமெனில் இருதயமானது, அன்பினாலும், அனுதாபத்தினாலும் மிகவும் நிரம்பிக் காணப்பட வேண்டும்; இல்லையேல் கண்டனங்களும், கடிந்துகொள்ளுதல் களும் கூர்மையுடன் கடந்துவருகின்றதாய் இருந்து, நன்மையைப் பார்க்கிலும், பாதகத்தையே உண்டுபண்ணுகிறதாய் இருக்கும். இருதயம் முழுக்க அன்பினால் நிரம்பி இருந்தாலும், யாருக்கு உண்மையில் அவசியப்படுகின்றதோ, அப்படிப்பட்டவர்களுடைய நன்மைக்கு ஏதுவாக கடிந்துகொள்ளுதல்களையும், கண்டித்தல்களையும் பயன்படுத்த முடிகின்றதான மிகுந்த சீரான தலையும்கூட அவசியமாய் உள்ளது. இதில் தேவனுடைய ஜனங்கள், “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப்போலக் கபடற்றவர்களாகவும்” காணப்பட வேண்டும். “புத்திசொல்லும்” வகை ஊழியமானது, பெரும்பான்மையான கர்த்தருடைய ஜனங்களினால் நன்கு பயன்படுத்தப்படலாம். இந்த வகை பிரயாசங்களும், மற்ற வகை பிரயாசங்களும், பொறுமையுடனும், நீடிய பொறுமையுடனும், சகோதர சிநேகத்துடனும் கையாளப்பட வேண்டும்.
எப்போது மன்னிப்பு ஏற்றதாய் இருக்கும்?
“உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக” (லூக்கா 17:3-4).
நாம் நமது பாவங்களை ஒப்புக்கொண்டு, தேவனிடம் மன்னிப்புக் கேட்காதது வரையிலும், அவர் நம்முடைய பாவங்களை மன்னிப்பதில்லை. நமக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்திருப்பவர்கள் விஷயத்தில், நாம் நமது முழுமையான மன்னிப்பை வெளிப்படுத்துவதற்கு முன்னதாக, அவர்கள் தங்கள் தவறைக் கொஞ்சம் ஒப்புக்கொள்ள வேண்டுமென எதிர்ப்பார்ப்பது ஏற்புடையதென நமது கர்த்தர் தெளிவாய்த் தெரிவிக்கின்றார். “ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக.”
நாம் தெய்வீகக் கட்டளையினுடைய ஒரு பாகத்தை ஏற்றுக்கொண்டு, மற்றொரு பாகத்தைப் புறக்கணிக்கிறவர்களாகக் காணப்படக்கூடாது. “அவனுக்கு மன்னிப்பாயாக” என்று கர்த்தர் கூறினபோது, அவர் மன்னிக்க வேண்டும் என்று அர்த்தம் கொண்டிருந்தார் என்றும், “அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக” என்று கர்த்தர் கூறினபோது, அவர் மன்னிக்க வேண்டும் என்று அர்த்தங்கொள்ளவில்லை என்றும் நாம் கூறக்கூடாது. தவறுசெய்கின்றவர்கள் மனஸ்தாபப்படுவது, அவர்களுக்கான கடமையாய் இருக்கின்றபடியால், பெரும்பான்மையான ஜனங்களின் விஷயத்தில் மனஸ்தாபப்படுவது ஏற்புடையது என்று வலியுறுத்திக் கொண்டிருப்பது அவசியமற்றதாய் உள்ளது. தங்களிடம் மன்னிப்புக் கேட்பது வரையிலும், மன்னிப்பு வழங்குவதற்கும் பெரும்பான்மையான ஜனங்கள் விருப்பமற்றுக் காணப்படுகின்றனர்.
இன்னொரு பக்கத்தில் ஜாக்கிரதையும் அவசியமாய் உள்ளது. கிறிஸ்தவன் என்பவன் அன்பான, பெருந்தன்மையுடன் கூடிய இருதயதன்மையை உடையவனாகவும், பரம பிதாவினுடைய பண்புகளின் சாயலாகவும் காணப்பட வேண்டும். அறிந்து செய்யாமலும் மற்றும் துணிகரம் இல்லாமலும் இருக்கும் பட்சத்தில், எப்படித் தேவன் கிறிஸ்துவின் நிமித்தமாக நம்மைக் கையாளுகின்றாரோ அதுபோலவே மற்றவர்களின் சிறு தவறுகளைக் கிறிஸ்தவனும் கவனியாமல்; விட்டுவிடத்தக்கதாக அவன், முக்கியத்துவம் இல்லாதவைகளின் விஷயத்தில் மிகவும் அனுதாபமும், அன்பும் கொண்டவனாக இருக்கவேண்டும். இப்படியான கொள்கை கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படுமானால், அதாவது வேண்டுமென்றே செய்யப்படாத எதையும் குற்றமென அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்ற உறுதியான தீர்மானம் காணப்படுமானால், இது அனைவருக்கும் மாபெரும் ஆசீர்வாதமாய்க் காணப்படும் மற்றும் தேவனுக்கொத்த நடக்கையாகவும் காணப்படும். நமது கர்த்தரால் அவ்வசனத்தில் குறிப்பிடப்படும் பாவங்களானது, முக்கியத்துவமில்லாத காரியங்களாகவோ, பின்விளைவுகள் உண்டுபண்ணாத காரியங்களாகவோ, கற்பனைகளாகவோ (அ) பொல்லாத அனுமானங்களாகவோ, கற்பனைபண்ணப்பட்ட அவமதிப்புகளாகவோ இராமல், நமக்கு எதிராய்ச் செய்யப்படும் உண்மையான தவறுகளாய் இருக்கின்றது; இப்பாவங்கள் ஏற்கத்தக்க நிரூபணங்களை உடையவைகளாய் இருப்பதினால், இதன் காரணமாக நாம் தவறை அடையாளம் கண்டுகொண்டுள்ளோம் என்றும், அது நம்மைத் துன்பப்படுத்தியுள்ளது என்றும், நமக்கு வலியுண்டாக்கியுள்ளது என்றும் கொஞ்சம் சுட்டிக்காட்டும் வண்ணம், கொஞ்சம் ஏற்றவிதமான கடிந்துகொள்ளுதலை ஞானமாயும், அன்பாயும், இரக்கமாயும் வழங்குவது நமக்கான கடமையாய்க் காணப்படுகின்றது. கடிந்துகொள்ளுதல் வழங்கப்படுவதற்கான ஒரே ஓர் ஏற்ற வழிமுறை குறித்ததான திவ்விய பிரமாணமானது, நமது கர்த்தரினால் கொடுக்கப்பட்டுள்ளது (மத்தேயு 18:15-17) மற்றும் இதைக்குறித்து விவரமாய் நம்முடைய வெளியீடுகளில் பார்த்திருக்கின்றோம். நமது கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் காணப்படுவது என்பது, சீஷத்துவத்திலுள்ள குறைப்பாட்டிற்கான ஆதாரமாகுகின்றதாகக் கர்த்தர் சுட்டிக்காட்டுகின்றார். கர்த்தர் வெகு சில குறிப்பிட்ட கட்டளைகளைக் கொடுத்திருந்தபோதிலும், மனக்குறைகளைச் சரிச் செய்துகொள்வதற்கான ஒரே ஒரு வழியென, அவர் இந்த ஒரு கட்டளையைக் கவனமாய்க் கொடுத்திருக்க, இது அநேக வளர்ந்துள்ள கிறிஸ்தவர்களினால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கின்றது.
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல
மன்னிப்பதற்கான மனப்பாங்கு எப்போதும் நம்மிடத்தில் காணப்பட வேண்டும் மற்றும் அது அனைத்து நேரங்களிலும் நம்மால் வெளிப்படுத்தவும் படவேண்டும். நம்முடைய அன்புடன்கூடிய பெருந்தன்மையும், இரக்கமும், கொஞ்சமும் தீங்குநினைக்க விரும்பாத தன்மையும், நம்முடைய வார்த்தைகள் மற்றும் ஜீவியத்தின் கிரியைகள் அனைத்திலும் வெளிப்படுத்தப்பட வேண்டும். இது தேவனுக்கொத்த நடக்கையாகக் காணப்படும். நாம் பாவிகளாகவே இருந்தபோதிலும், தேவன் நம்மிடத்தில் இரக்கமுள்ள, பரந்த மனப்பான்மையுள்ள பெருந்தன்மையுடன்கூடிய உணர்வினையே கொண்டிருந்தார். பாவிகள் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று அவர் காத்திருக்கவுமில்லை, மாறாக இசைவிற்குள்ளாக வந்திடுவதற்கான தமது விருப்பத்தையும், மன்னிப்பதற்கான தமது ஆயத்தத்தையும் உடனடியாக வெளிப்படுத்தினவராகவே காணப்பட்டார். இதற்கு இசைவான ஒட்டுமொத்த சுவிசேஷத்தின் செய்தியானது, “தேவனோடே ஒப்புரவாகுங்கள்” என்பதாகும். நம்முடைய முகங்களானது, கடினமான பார்வையைக் கொண்டிராத அளவுக்கு, நம்முடைய வார்த்தைகளில், கடுமையான வலிக்கொடுக்கும் கண்டித்தல் காணப்படாத அளவுக்கு, நம்முடைய இருதயங்களானது மன்னிக்கும் இந்த மனப்பாங்கை முழுக்கக் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய முகங்களும், வார்த்தைகளும், அனைத்துச் சமயங்களிலும் நம்முடைய இருதயங்களில் நாம் பெற்றிருக்க வேண்டிய, அன்புடன்கூடிய மன்னிப்பை வெளிப்படுத்திட வேண்டும்.
இதமான வார்த்தைகளுடன்கூடிய வெளித்தோற்றமான மற்றும் சம்பிரதாயமான மன்னிப்பிற்கும், இருதயத்திலிருந்து கடந்துவரும் உண்மையான மன்னிப்பிற்கும் இடையிலான வித்தியாசத்திற்கு நேராக நமது கர்த்தர் குறிப்பாய் நமது கவனத்தைத் திருப்புகின்றார். வெளித்தோற்றமான மன்னிப்பு என்பது, உதட்டளவு மாத்திரமானதாகவும், மற்றும் உள்ளுக்குள் எரிச்சல் காணப்படுவதையும், மன்னிப்பு வழங்காத ஆவி காணப்படுவதையும் மற்றும் அடக்கிவைக்கப்பட்டதான குரோதம் மற்றும் பகைமையின் உணர்வுகளானது, இன்னும் கொஞ்சம் காலத்திற்குள்ளாக அவதூறு வார்த்தைகளாக வெளிப்படும் என்பதையும் அர்த்தப்படுத்துகிறதாகவும் இருக்கும். தேவன் இருதயத்தைப் பார்க்கின்றவர் ஆவார் மற்றும் உதட்டளவிலான அறிக்கைகள் என்னவாக இருப்பினும், அவ்வார்த்தைகளுடன் இருதயமும், ஜீவியமும் இசைவாய்க் காணப்படாதது வரையிலும், அவர் அதைக் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை. ஆகையால் “என் சகோதரனை நான் அன்புகூருகின்றேன்” என்று ஒருவர் கூறிக்கொண்டு, மற்றும் அதே வேளையில், வார்த்தையினாலோ அல்லது கிரியையினாலோ சகோதரனுக்குப் பாதிப்புண்டாக்க நாடும்போது, அவ்வார்த்தைகள் வீணானதேயாகும். தீமை பேசுதல், குரோதம்;, பகைமை, பொறாமை, வாக்குவாதம் / சண்டை ஆகிய அனைத்தும், இருதயத்திலுள்ள பொல்லாப்பிட மிருந்தே கடந்துவருகின்றது; ஆகையால் கர்த்தருடைய சரீரமாக இருப்பதற்கு விரும்புகின்றவர்கள் அனைவரும், கிறிஸ்துவின் சரீரத்தில், அதாவது புளிப்பில்லாத அப்பத்தில் அங்கத்தினர்களாகத் தக்கதாக, “துர்க்குணம் எனும் புளித்தமாவை” அப்புறப்படுத்துவது அவசியமாய் உள்ளது.
“உங்கள் இருதயங்களில்” மன்னித்தல் என்பது, எப்போதும் நீங்கள் அடையப்பெற வேண்டிய ஒரு நிலையாகும். மற்றவர்கள் நமக்கு எதிராக எவ்வளவு கடுமையாகக் குற்றம் புரிந்திருந்தாலும், நாம் அனைவருக்குமான நல்லெண்ணத்தையும், மன்னிப்பையுமே நம் இருதயங்களில் கொண்டிருக்க வேண்டுமே ஒழிய, வேறு எந்த எண்ணங்களுக்கும் நாம் புகலிடம் கொடுக்கக்கூடாது. இப்படியாக இருக்கும் பட்சத்தில், மனந்திரும்புகிறவர்களை நாம் வெளிப்படையாய் மன்னிப்பதற்கும் மற்றும் அதை வெளிப்படுத்துவதற்கும், நாம் ஆவலும், ஏக்கமும் உள்ளவர்களாய்க் காணப்படுவோம். ஆகையால் தவறுக்காக மனம் வருந்துபவரின் சார்பிலிருந்து மிகவும் விளக்கமான அறிக்கையினை வற்புறுத்திக் கேட்பதற்கு நாம் நாடுகின்றவர்களாய் இருக்க மாட்டோம்; மாறாக கெட்டக் குமாரனுடைய தந்தையைப்போன்று நாமும், மனம் வருந்துகிறவர் தாழ்மையான மனநிலையோடு வருகிறதைக் காண்கையில், நாம் இருதயங்கள் தொடப்பட்டவர்களாக இருந்து, நாமும் பாதித் தூரம் சந்திக்கச் செல்லத்தக்கதாகவும், அவரை மன்னிக்கத்தக்கதாகவும், அவரை அன்போடு வரவேற்கத்தக்கதாகவும் மற்றும் முழுமையான ஐக்கியம் மற்றும் சகோதரத்துவத்தின் வஸ்திரத்தை உடுத்துவிக்கத்தக்கதாகவும் தூண்டப்படுகிறவர்களாக இருப்போம்.
“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” (மத்தேயு 6:15).
பாவத்தை வெறுத்துவிடுங்கள், பாவியையல்ல
“காயப்படுத்தாதே” எனும் வார்த்தையானது, நாம் சரீரப்பிரகாரமாக நமது சத்துருக்களைக் கொல்லவோ (அ) காயப்படுத்தவோ கூடாது என்பதைக் குறிப்பதாக நாம் முற்காலங்களில் அர்த்தம் எடுத்துக்கொண்டோம்; ஆனால் போதகரை நாம் பார்க்கும்போதும், அவரது வார்த்தைகளுக்குச் செவிக்கொடுக்கும் போதும், அவர் “என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறுவதைக் கேட்கின்றோம் மற்றும் அவர் பாவம் எதுவும் செய்யாமலும், அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படாமலும் இருந்தபோதிலும், “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேதுரு 2:22-23) என்று அப்போஸ்தலரோடுகூட நாமும் கவனிக்கின்றோம்.
நாம் உண்மையுள்ள மாணாக்கர்களாகக் காணப்படுவோமானால், இருதயத்தினுடைய எண்ணங்களையும், நோக்கங்களையும் பகுத்தறியத்தக்கதாக, கிறிஸ்துவின் பிரமாணத்தை, [R4978 : page 68] சுயாதீனத்தின் பூரண பிரமாணத்தைப் பெற்றிருக்கத்தக்கதாக நாம் பார்த்துக்கொள்வோம் மற்றும் நாம் பாவம் அனைத்தையும் வெறுக்க வேண்டியவர்களாயிருக்க, நாம் எந்தப் பாவியையும் வெறுக்க முடியாதவர்களாகக் காணப்பட்டு, தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் பூரணப்பட்டிருக்க நாம் பார்த்துக்கொள்வோம். நம்முடைய சத்துருக்களை நாம் பழிக்குப் பழி வாங்கவும் மற்றும் தூஷிக்கவும் கூடாது என்பது மாத்திரமல்லாமல், இப்படியாகச் செய்வதற்கு நாம் விரும்பவும் கூடாது. தீமையான விருப்பங்கள் ஜெயங்கொள்ளப்பட வேண்டும் மற்றும் இம்மாதிரியான விருப்பங்களைக் கொடுத்திட்டதான சுயநலமான நிலைமைகளும், முற்றிலுமாய் அழிக்கப்பட்டு மற்றும் அவைகளுக்குப் பதிலாக அன்பு, அதாவது கிறிஸ்துவின் ஆவி நிரப்பப்பட வேண்டும்.
தேவனுடைய அன்பின் குமாரனைப் பின்பற்றுதல்
யோவான் ஸ்நானன் மற்றும் நமது கர்த்தராகிய இயேசு ஆகிய இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் ஒவ்வொருவரும், தெய்வீக ஏற்பாட்டிற்கு ஏற்ப தங்களுக்கான பணிகளை நிறைவேற்றினார்கள். ஆனாலும், அவர்களுக்கு வெவ்வேறு பணிகள் இருந்தது எனும் உண்மையிலிருந்து, நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். யோவானுடைய பணி என்பது பிரதானமாகக் கண்டிப்பவராகவும், சீர்த்திருத்தவாதியாகவும் இருப்பதேயாகும் மற்றும் அவர் மேற்கொண்டுள்ள பணி தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் பற்றின காரியங்களில், அவர் தீர்க்கத்தரிசியாக, இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் வழிநடத்தப்பட்டார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நமது கர்த்தருடைய பணியோ, வேறுபட்ட ஒன்றாகும்; யோவானுடைய ஊழியமானது யாரிடத்தில் நீதியையும் மற்றும் கர்த்தருடைய சித்தத்தை அறிவதற்கும், அதைச் செய்வதற்குமான வைராக்கியத்தையும் தூண்டினதோ, அத்தகையவர்களைத் தம்மிடமாய்ச் சேர்த்துக்கொள்வதே கர்த்தருடைய பணியாய்க் காணப்பட்டது.
கிறிஸ்துவினுடைய சரீரமாயிருப்பதற்கும் மற்றும் அவரைப் பின்பற்றுவதற்குமென்று அழைக்கப்பட்டுள்ள நாம், மேற்கூறிய விஷயத்திலிருந்து, நமக்கான சரியான நடக்கை தொடர்புடைய பாடம் ஒன்றினைக் கற்றுக்கொள்ளலாம். வனாந்தரத்தில் தங்குவதற்கும் மற்றும் ஜீவிப்பதற்கும் மற்றும் விநோதமாய் வஸ்திரம் உடுத்திக்கொள்வதற்கும் மற்றும் அனைத்தையும் மற்றும் அனைவரையும் பற்றி வெளிப்படையாய்க் கண்டனம் பண்ணுவதற்கும் மற்றும் குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் என்று நாம் யோவான் போன்று அனுப்பிவைக்கப்படவில்லை. இம்மாதிரியான பணிகள் விசேஷமானவைகளாகவும், மிகவும் அபூர்வமானதாகவும் காணப்படுகின்றன என்று கர்த்தருடைய அருமையான சில ஜனங்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்; மற்றும் சில சமயங்களில் தங்களுக்குரியதல்லாத மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம், இவர்கள் கர்த்தருடைய காரணங்கள் மீது திட்டமிடாமலேயே அவதூறைக் கொண்டு வருகின்றனர்.
தேவனுடைய அன்பின் குமாரனாகிய நமது கர்த்தரையே நாம் பின்பற்றுகிறவர்களாய்க் காணப்பட வேண்டும் மற்றும் நாம் யோவான் ஸ்நானனைப் பின்பற்றுகிறவர்களாய்க் காணப்படக்கூடாது. மற்ற ஜனங்களுடைய காரியங்களில் தலையிடுவதற்கு முயல்வதின் மூலமாகவோ, இந்த உலகத்தின் காரியங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு நாடுவதின் மூலமாகவோ, சக்கரவர்த்திகள், இராஜாக்கள், அதிபதிகள் முதலானவர்களைக் கண்டிக்க முற்படுவதன் மூலமாகவோ நாம் சண்டைகளைத் தூண்டிவிடக்கூடாது; மாறாக அனுமதிக்கப்படுவதற்குப் பாத்திரமானவைகள் எவைகள் என்று தேவன் காண்கின்றாரோ, அவைகள் சகிக்கப்படுவதற்கும் பாத்திரமானவைகள் என்பதாக நாமும் காணலாம் என்பதை நினைவுகூருவதற்கு, அப்போஸ்தலனால் நாம் அறிவுறுத்தப்படுகின்றோம். நம்மால் அங்கீகரிக்க முடியாத அநேகக் காரியங்கள் இருந்திட்டாலும், அவைகள் அனைத்தையும் அதிலும் விசேஷமாகக் கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றும் விஷயங்களில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதவைகளை, விசேஷித்த விதத்தில் வெளிப்படையாய்க் கண்டிப்பதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்று கூறி, அப்போஸ்தலன் சரியான நிலையைக் குறித்துச் சுட்டிக்காட்டுகின்றார். “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” (மத்தேயு 5:9) என்று நமது கர்த்தர் கூறி, இதே கருத்தை வலியுறுத்தினவராகக் காணப்படுகின்றார்.
ஞானமற்ற நடக்கை
மேற்கூறப்பட்டுள்ள காரியம் தொடர்புடைய விஷயத்தில், தங்கள் சொந்த குடும்பத்தின் காரியத்தில் கர்த்தருடைய ஜனங்களிலேயே பரிசுத்தமானவர்களாய்க் காணப்படும் சிலர் தவறு செய்தவர்களாகிப்போய், தேவையற்ற தப்பான அபிப்பிராயங்களையும், எதிர்ப்புகளையும் உருவாக்கிக்கொண்டு, பரிசுத்தத்திற்குரிய நியமங்களின் அளவுக்கும், சிலுவை சுமத்தலுக்குரிய அளவுக்கும் உயர்வானதாய் இராத காரியங்களிலும், அதே வேளையில் இயல்பில் பொல்லாங்கானதாகவோ (அ) நல்லொழுக்கமற்றதாகவோ காணப்படாத காரியங்களிலும் தொடர்ந்து குறைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பவர்களாய்க் காணப்பட்டு, தங்கள் இல்லங்களை மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடுகின்றனர். ஒழுக்கக்கேடுகள் முதலானவைகள் தொடர்புடைய விருப்பங்கள் அனைத்திற்கும் எதிராக, பெற்றோர்களும், பாதுகாவலர்களும் நிச்சயமாய்ப் பாதுகாத்திடவே வேண்டும், ஆனால் தாங்கள் அன்புகூருகின்றவர்கள் பெயர்க் கிறிஸ்தவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்பதினாலும் மற்றும் உலகப்பிரகாரமான ஆவியைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதினாலும், அவர்களிடத்தில் குற்றங்கண்டுபிடிப்பது என்பது நிச்சயமாய் ஞானமற்ற காரியமாகவே காணப்படும். பரிசுத்த ஆவிக்குள்ளான சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலுமான ஜீவியம் ஜீவித்தல் என்பதே கர்த்தருடைய ஜனங்கள் கொடுக்க முடிந்த, உலகப்பிரகாரமான ஜீவித்தலுக்கு எதிரான மிகச் சிறந்த கண்டனமாகவும், அவர்கள் அறிக்கைப்பண்ணுகின்றதான மகிமையான சுவிசேஷத்திற்கான மிகச் சிறந்த சிபாரிசாகவும் காணப்படுகின்றது. இந்த நிருபமே வாசிக்கப்படும் மற்றும் இதுவே இருளைக் கண்டிக்கிறதான ஒளியாகவும் காணப்படும்.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நம்மிடமுள்ள சுயத்தை வெறுத்தலுக்கான அம்சங்களை நாம் அர்ப்பணம்பண்ணாதவர்களிடம் எதிர்ப்பார்க்கவும் முடியாது மற்றும் அதை அவர்களிடத்தில் திணிக்கவும் நாம் முற்படக்கூடாது. முழுமையான [R4979 : page 68] அர்ப்பணிப்பு என்பது, அவர்கள் செலுத்தக்கூடிய “புத்தியுள்ள ஆராதனை” என்று அவர்கள் கண்டுகொண்டு, அவர்கள் தங்கள் சரீரங்களை, தேவனுக்கான ஜீவப்பலிகளாக ஒப்புக்கொடுப்பது வரையிலும் நாம் காத்திருக்க வேண்டும். பரிசுத்தம் மற்றும் அர்ப்பணிப்பிற்கான அளவுகோல்களைக் குறைத்துப் போடத்தக்கதாக அநேக செல்வாக்குகள் தொடர்ச்சியாகச் செயலாக்கத்தில் காணப்படுகின்றன என்பதை உணர்ந்த நிலையில், மேய்ப்பர்களும், போதகர்களும், கர்த்தருடைய அர்ப்பணம்பண்ணியுள்ளதான “மந்தைக்கு” முன்னதாக, தொடர்ந்து உயர்ப்பட்ச வேதவாக்கியங்களின் அளவுகோல்களை வைத்திடுவதற்கு நாடிட வேண்டும்.
நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்?
சுவிசேஷ யுகத்தைச் சேர்ந்தவர்களாகிய நாம், இந்த யுகத்திற்கான சிலாக்கியங்களையும் மற்றும் வாய்ப்புகளையும் உயர்வாய் மதித்தவர்களாக, “நம் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு” நாடிட வேண்டும்! (2 பேதுரு 1:4-11). “பணிவிடை வீட்டாராகும்படிக்கு,” பூமிக்குரிய அழைப்பைப் பெற்றுக்கொண்டுள்ளவர்கள், (உதாரணத்திற்கு யோவான் ஸ்நானன் போன்று) கர்த்தருடைய வேலையில் வைராக்கியமாய் ஈடுபட்டதின் வாயிலாக, ஒரு புத்தியுள்ள ஆராதனையைச் செலுத்தி உண்மையுள்ளவகளாயக் காணப்பட்டார்களானால், மிகவும் அதிகமாய்த் தயைப் பாராட்டப்பட்டவர்களாகிய நாம், எத்தனை அதிகமான வைராக்கியத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்திட வேண்டும்? “நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!” (2 பேதுரு 3:11).
இந்தப் “பரம அழைப்பானது,” இராஜ்யத்தில் நமது கர்த்தருடன் உடன் சுதந்தரர்களாகும்படிக்கான இந்தப் “பரலோக அழைப்பானது,” மிகவும் விசேஷமானது என்பதையும், மிகவும் வரையறைக்குட்பட்ட அழைப்பு என்பதையும், சீக்கிரத்தில் முடிந்துவிடும் என்பதையும், தெய்வீக வெளிப்படுத்தல்களின்படி, இனி மீண்டுமாக அழைப்பு வராது என்பதையும் நாம் நினைவில் கொள்வோமாக. இப்படியான கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக, “மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர் 12:1).