உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3142 (page 37)

உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல

THE TRUE FOLD NOT A PEN

அநேக கர்த்தருடைய செம்மறியாடுகள் மனிதனுடைய பல்வேறு விசுவாசப் பிரமாணங்களுக்குக் கீழ்க்கூண்டில் அடைக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர் மற்றும் இப்படியாக உணவைப் பெற்றுக்கொள்வதிலிருந்தும், மாபெரும் மேய்ப்பனானவர் அவர்கள் பெற்றிருக்க வேண்டுமென்று நோக்கம் கொண்டுள்ளதான சுயாதீனத்தைச் செயல்படுத்துவதிலிருந்தும் தடைப் பண்ணப்பட்டிருக்கின்றனர். மாபெரும் பிரதான மேய்ப்பனுடைய செம்மறியாடுகளானது, கூண்டினால் ஒருவரிடமிருந்து ஒருவர் பிரித்து வைக்கப்படுவதும் மற்றும் தொழுவத்தின் தகுதியான சுயாதனீங்கள் அவர்களுக்குத் தடைப்பண்ணப்படுவதும், அவருடைய சித்தத்திற்கு எதிரானவையாகும். இந்த யுகத்தினுடைய உண்மையான செம்மறியாடுகள் மற்றும் மந்தை அனைத்தும் ஒரு பொதுவான வேலியடைப்பிற்குப் பின்னாகவே காணப்படுகின்றனர்; மற்றும் இதற்கு ஒரேயொரு வாசல் – அதாவது தாம் தான் வாசல் என்று கர்த்தர் நமக்குத் தெரிவிக்கின்றார்.

இந்த ஒரு தொழுவத்தையும், அதன் ஒரே வாசலையும் குறித்து அனைவரும் கொஞ்சம் அறிந்திருப்பார்கள் என்று நாம் எண்ணக்கூடும்; ஆனால் இது தவறாகும்; கிறிஸ்தவ மண்டலத்தில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எண்ணற்ற தொழுவங்களினிமித்தம், அநேகர் மிகவும் குழம்பிப்போய்க் காணப்படுகின்றபடியால், அநேகர் இவைகளை, உண்மையான தொழுவத்துடன் குழப்பிக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். “ஆடுகளுக்காக” ஜீவனைக்கொடுத்த நல்ல மேய்ப்பன், ஆடுகளுக்காகச் சில வரையறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார் என்று “ஓநாய்கள்” அறிகையில் ஏமாற்றத்திற்குள்ளாகுகின்றனர்; மற்றும் ஆடுகள் அவருடைய சத்தத்திற்குக் (அவருடைய வார்த்தைகளுக்குக்) கீழ்ப்படியும் பட்சத்தில், ஆடுகளினால் அந்த வரையறையைத் தாண்டிச் சென்றிட முடியாது மற்றும் அவர்கள் உண்மையாய் அவரது ஆடுகளாய் இருக்கும் பட்சத்தில் அந்த வரையறையைத் தாண்டிச் சென்றிட விரும்பிடவும் மாட்டார்கள்.

சுவருகளுடனான இந்த உண்மையான தொழுவத்தினை, “மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கூண்டு” என்று அழைக்க விரும்புபவர்கள், அப்படியே அழைக்கட்டும் – இதன் பாதுகாப்பினை அனுபவிப்பவர்கள், இதன் சுயாதீனத்தையும் அனுபவிக்கட்டும். இதற்கு ஒரேயொரு, உயரமான, மாபெரும் சுவர் காணப்படுகின்றது; இது இதுவரையிலும் ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு வருபவர்களை – ஆடுகளைப் போன்று பாவனைப்பண்ணுபவர்களைத் தவிர – மற்றப்படி ஓநாய்கள் உள்ளே வர தடுத்துள்ளது. இந்தச் சுவரானது, கல்வாரியில் நிறைவேற்றப்பட்டதான – மனிதனுக்கான ஈடுபலியாகிய – கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வது என்பதாகும்.

வேலியானது உள்ளே அனுமதித்திடாத எவரும் “ஆடுகளல்ல.” அந்த எளிமையான, அதே சமயம் பலமான விசவாசம் எனும் வேலிக்குப் பின்பாகக் கர்த்தருடைய “செம்மறியாடுகளுக்குத்” தகுதியான சுயாதீனம் அனைத்தும் காணப்படுகின்றது – எனினும் அச்சுயாதீனம் “வெள்ளாடுகளுக்கு” அநேகமாய்ப் போதுமானதாக இருப்பதில்லை.

இந்த உண்மையான தொழுவத்திற்குள்ளாகச் சபை பிரிவுக்கேதுவான வேலிகளை உடன் மேய்ப்பர்களோ அல்லது வேறு யாராவதோ ஏற்படுத்திடுவதோ அல்லது “ஆடுகளை” இப்படியான பிரிவுகளுக்குள்ளாக மயக்கி இழுத்து, இப்படியாய்த் தொழுவத்திற்குள்ளாகவே அவர்களது சுயாதீனங்களைக் கட்டுப்படுத்திடுவதோ தவறாய் இருக்கும்; உண்மையான தொழுவத்தின் உண்மையான வேலியடைப்பிற்குள்ளாக “ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு காணப்படும் ஓநாய்களிடமிருந்தும்” மந்தையினைப் பாதுகாத்திடுவது உண்மையான உடன்மேய்ப்பனுக்குத் தகுதியானது மாத்திரமல்லாமல், கடமையின் பாகமாகவும் காணப்படுகின்றது. (பிரியமான) தாவீது தனது மந்தைகளைப் பாதுகாக்கையில், சிங்கத்தையும், கரடியையும் கொன்றுப்போட்டு, தன் பொறுப்பின் கீழ்க் காணப்பட்ட ஆடுகளை விடுவித்தக் காரியமானது, சந்தேகத்திற்கு இடமின்றி கர்த்தருடைய மந்தைக்கான உண்மையான மேய்ப்பனுக்கு நிழலாய் இருக்கின்றது.

மாபெரும் பிரதான மேய்ப்பனாகிய நமது கர்த்தர், உடன் மேய்ப்பர்களுக்கு மாதிரியை முன்வைத்தார்; மற்றும் அவரால் நியமிக்கப்படுபவர்களில் உண்மையுள்ளவர்கள் அனைவரும், அதே ஆவியைப் பெற்றிருப்பது அவசியமாகும்; இல்லையேல் சீக்கிரமாய்த் தங்கள் பொறுப்பினை இழந்துபோகிறவர்களாய் இருப்பார்கள். அவர்தாமே உண்மையான ஆடுகளைப் பின்வருமாறு கூறி [R3142 : page 38] முன்னெச்சரித்தவராய் இருந்தார்: “கள்ளத்தீர்க்கத்தரிசிகளுக்கு (போதகர்களுக்கு) எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு (கர்த்தருடைய மந்தையென்று அறிக்கைப் பண்ணி, ஆனால் உண்மையில் அப்படி இல்லாதவர்கள்; காரணம் தங்கள் பாவங்கள் அனைத்திற்குமாக ஒருதரம் செலுத்தப்பட்ட மாபெரும் பலியில் நம்பிக்கையில்லா மையாகும்) உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (இவர்கள் ஈடுபலியின் மீதான உங்கள் விசுவாசத்தினை அழித்துப்போட்டு, இப்படியாக உங்களை ஆடுகள் என்று இல்லாமலாக்கிப் போடுபவர்கள்); மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் (கள்ளப் போதகர்கள்) வருகிறதைக் கண்டு, ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் (கள்ளப் போதகர்கள்) ஆடுகளைப் பீறி, அவைகளைச் சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” (மத்தேயு 7:15; யோவான் 10:12-15).

ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டுள்ள அல்லது ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொள்ளாமலேயே காணப்படும் ஓநாய்களின் அங்கீகரிப்பானது, உண்மையான உடன் மேய்ப்பன் நாடிட வேண்டிய காரியமல்ல. உண்மையான உடன்மேய்ப்பனானவன் பிரதான மேய்ப்பனின் மற்றும் ஞானேந்திரியங்களைப் பயன்படுத்தப் பயிற்சிப்பெற்றவர்களாகிய வளர்ச்சியடைந்துள்ள செம்மறியாடுகள் அனைவரின் அங்கீகரிப்பைப் பெற்றிட வேண்டும். விசுவாசிகளாகவும்,

“ஆடுகளாகவும்” இல்லாமல் இருக்கையில், தங்களை விசுவாசிகள் எனவும், ஆடுகள் எனவும் காட்டிக்கொள்கின்றவர்களாகிய இத்தகைய கள்ளப்போதகர்களுக்கு எதிராக அப்போஸ்தலனாகிய பவுல் கடினமாய்ப் போராடினவராய்க் காணப்பட்டார். இது குறித்து எபேசு பட்டணத்தின் சபையினுடைய மூப்பர்களிடத்தில் (உடன் மேய்ப்பர்களிடத்தில்) பேசுகையில், அவர் பின்வருமாறு கூறினார்:-

“எல்லோருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறே னென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன். ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே (விலைக்கு வாங்கின காரியத்தின் மீதான விசுவாசமே அவர்களை “ஆடுகளாக்கிற்று “) சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக (மேய்ப்பர்களாக) வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் (ஆம்! ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வரும்; மற்றப்படி உள்ளே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை) உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, (பின்னடியார்கள்) சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி (பவுலாகிய நான் போதித்தவைகளிலிருந்து, மாறுபட்டவைகளை) மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்” (அப்போஸ்தலர் 20:26-31).

அப்போஸ்தலனாகிய பேதுருவும்கூட இதைப்போன்ற வேண்டுகோளினை உடன் மேய்ப்பர்களிடத்தில் பின்வருமாறு வைத்திட்டார்: “உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிற தென்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்;” “கள்ளத்தீர்க் கத்தரிசிகளும் (கடந்த காலங்களில் “ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு”) ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள். அப்படியே கேட்டுக்கேதுவான வேதப் புரட்டுகளைத் (ஆக்கினைக்குள்ளான தீர்ப்பிற்கும் மற்றும் புறந்தள்ளுதலுக்கும் வழிநடத்தும் தப்பறைகள்) தந்திரமாய் (வஞ்சகமாய்த் தங்கள் போதனைகளுடைய உண்மையான நோக்கத்தினை மறைத்து) (தொழுவத்திற்குள்) நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்;”-1 பேதுரு 5:1-4; 2 பேதுரு 2:1,2.

அப்போஸ்தலனாகிய யோவானும் நம்மை எச்சரிக்கைப்பண்ணும் வண்ணமாகப் பின்வருமாறு கூறியுள்ளார்: “உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். மனுஷகுமாரன் தம்மை அனைவருக்குமான ஈடுபலியாகக் கொடுத்திடுவதற்கு வந்தார் எனும் (மத்தேயு 20:28; 1 தீமோத்தேயு 2:6) கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். (ஆடுகளுக்கான போதகன் என்று) ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். (கிறிஸ்துவினால் போதிக்கப்பட்டதான ஈடுபலி எனும்) இந்த உபதேசத்தைக் கொண்டு வராமலிருந்தால் அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் (அல்லது நாம் கர்த்தரினால் விலைக்கொடுத்து வாங்கப்படவில்லை எனும் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுதல்களைப் பரப்ப மறைமுகமாக உதவுபவன்) (வெளிப்படையாயும், வெளியரங்கமாயும் அவனால் செய்யப்படும்) துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்” (2 யோவான் 8-11).

இப்படியாக மந்தையைத் தந்திரமான ஓநாய்களிடமிருந்து பாதுகாத்திடுவதும், ஏற்றகால சத்தியத்தினால் மந்தையைப் போஷிப்பதுமாகிய உடன் மேய்ப்பர்களின் கடமையானது, ஆரம்பக்காலங்கள் துவங்கி அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுக் காணப்படுகின்றது என்று நாம் பார்க்கின்றோம்; காரணம் ஆரம்பம் துவங்கியே இம்மாதிரியான ஓநாய்கள் காணப்பட்டன. மேலும் யுகத்தினுடைய முடிவில், “பொல்லாதவர்களும், வழிநடத்துபவர்களும்” மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள் என்றும், இவர்களைக் கருவியாகப் பயன்படுத்தி சாத்தான் அசத்தியத்தைப் பரவச் செய்திடுவான், ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்திடுவான் என்றும் பரிசுத்த ஆவியானது விசேஷித்த எச்சரிப்புகளைக் கொடுத்திருக்கிறபடியால், இந்த உண்மைகளையெல்லாம் ஆடுகள் யாவும் அடையாளம் கண்டுகொள்வதற்கும், தந்திரமான வார்த்தைகளினாலும், நயவசனிப்பினாலும் வஞ்சிக்கப்படாமல் இருப்பதற்கும் ஏற்றகாலம் வந்துள்ளதல்லவா? உண்மையான ஆடானது, சக ஆட்டினை, ஆட்டுத்தோலை வைத்துக் கணிக்கக்கூடாது; ஏனெனில் ஓநாய்க்கு, ஆட்டினுடைய தோலினைப் போர்த்திக்கொள்ள முடியும்; ஆடானது மேய்ப்பனுடைய சத்தத்தையும், பாணியையும் – நேரடியாய் அவரது வார்த்தைகளின் வாயிலாகவும் மற்றும் மறைமுகமாய் – அவரால் பயன்படுத்தப்படும் [R3143 : page 38] அவரது பிரதிநிதிகள் வாயிலாகவும், அதாவது மந்தையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானது வைத்தக் கண்காணிகள் (மேய்ப்பர்கள்) வாயிலாகவும் கவனிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்படியாக அப்போஸ்தலன் உடன் மேய்ப்பர்களுக்கு மாத்திரம் வழிக்காட்டிடாமல், இந்த அறிவுரையை அவர் சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார், ஏனெனில் இப்படியாகவே பிரதான மேய்ப்பன் தமது மந்தையை வழிநடத்தி, மேய்த்து, பாதுகாக்கின்றார் (எபிரெயர் 13:17; எபேசியர் 4:11-16; 1 கொரிந்தியர் 12:27-31; சங்கீதம் 91:11-12).

ஆகையால் கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைக் கொண்டிருப்போமாக; மனிதனால் ஏற்படுத்தப்பட்ட விசுவாசப் பிரமாணங்களினால் எவரும் நம்மைக் கூண்டில் அடைத்துப்போட அனுமதியாமல் இருப்போமாக; பிரதான மேய்ப்பனால் நமக்கு வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, அவர் ஒருபோதும் அங்கீகரித்திடாத சுயாதீனங்களுக்குள்ளும், உரிமைகளுக்குள்ளும் மற்றும் கற்பனை கோட்டைகளுக்குள்ளும் எவரும் நம்மை வழிநடத்திடுவதற்கு நாம் அனுமதியாமல் இருப்போமாக. அப்போஸ்தலன் கூறினதுபோன்று, தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு, நாம் அவரில் நிலைத்திருப்போமாக.