R4345 (page 71)
எபேசு சபையின் மூப்பர்களுக்கு உரைக்கப்பட்டதான அப்போஸ்தலனின் வார்த்தைகள் தேவ ஜனங்களிலேயே, இன்றுள்ளவர்களுக்கு மிகப் பொருத்தமாய் இருந்தளவுக்கு, யாருக்கும் இருந்ததில்லை. “உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்” என்று அவர்களிடம் அவர் கூறினார் (அப்போஸ்தலர் 20:28-31).
எங்கும் காணப்படும் மூப்பர்கள் விசேஷித்த எச்சரிக்கைக்கொள்வது அவசியமாய் இருக்கின்றது; ஏனெனில் ஒவ்வொரு சோதனைகளிலும் மிகவும் கிருபைப் பெற்றவர்களும், மிகவும் முதன்மையாகக் காணப்படுபவர்களும் கடுமையான இன்னல்களுக்கும், பரீட்சைகளுக்கும் ஆளாவார்கள். ஆகையால்தான், “என் சகோதரரே கடுமையான சோதனைக்குள்ளாவீர்கள்” என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” என்று அப்போஸ்தலன் புத்திமதிக் கூறுகின்றார். இது போலவே இருதயத்தில் தூய்மையும், சுய நலமில்லாமையும் கொண்டிருக்கும் மூப்பர்கள் யாவரும் – அவர்கள் மனுக்குலம் யாவருக்கும் அன்பு மற்றும் நல்லெண்ணங்களை கொண்டிருக்கவும், அவர்கள் பரிசுத்த ஆவியின் கனிகளாலும், கிருபைகளாலும் அதிகமதிகமாய் நிரம்பிக் காணப்படவும் மற்றும் மந்தையைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவும் நாங்கள் புத்திமதி கூறுகின்றோம். மந்தை கர்த்தருடையது என்றும், உங்களுக்குக் கர்த்தரிடத்திலும், அவர்களிடத்திலும் ஒரு பொறுப்புக் காணப்படுகின்றது என்றும் நினைவில்கொள்ளுங்கள். மாபெரும் பிரதான மேய்ப்பனுக்கு அவர்களது ஆத்துமாக்களுக்காக (நலன்களுக்காக) உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் நீங்கள் விழித்திருக்க வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அனைத்திலும் அன்பே பிரதானம் என்றும் நினைவில் கொள்ளுங்கள்; அவர்கள் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்குத் தகுதியுள்ளவர்களாகத்தக்கதாகவும் மற்றும் தெய்வீகச் சித்தத்திற்கு ஏற்ப இந்தத் தீங்கு நாளில் இடறிப்போகாமலும், அனைத்தையும் செய்து முடித்தப்பிற்பாடு, கிறிஸ்துவில், அவரது சரீரத்தில், அவரது அங்கத்தினர்களில், அவரோடு உடன்பலிச்செலுத்துபவர்களில், அவரோடு உடன்சுதந்தரர்களில் முழுமையடைந்து நிற்கத்தக்கதாகவும் – உபதேசங்களைப் புறக்கணியாமல், அவரது சரீரத்தின் பல்வேறு அவயவங்கள் மத்தியில் கர்த்தருடைய ஆவி வளர்ந்திடுவதற்கு மிக விசேஷித்த கவனம் கொடுத்திடுங்கள்.