கைகளை வைத்தல்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R1956 (page 69)

கைகளை வைத்தல்

LAYING ON OF HANDS

மேற்கு வெர்ஜீனியா

அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:-

நவம்பர் 15, 95-இன் டவர் வெளியீட்டில், “சபையினுடைய ஒழுங்கு எனும் பாடம் தொடர்பான உங்களது மனமும், ஆராய்ச்சியும், எங்களுடையதற்கு மிகவும் துல்லியமாய் ஒத்திருப்பதைக் கண்டு நான் மனநிறைவடைந்தேன். அவ்விஷயம் தொடர்பான உங்கள் கருத்து எதையும் பார்ப்பதற்கு முன்னதாகவே, இங்குள்ள சபையானது, அதிக ஒழுங்கிற்கான அவசியத்தை உணர்ந்துகொண்டிருந்தார்கள் மற்றும் நீங்கள் கொடுத்திருந்ததான முழுப்பாடத்தையும் ஆராய்வதற்கு நிர்பந்தத்திற்குள்ளானார்கள்.

எனினும் நீங்கள் கவனிக்கத்தவறினதாகத் தெரிகிற அல்லது ஆராய்வதற்கு அவசியமற்றது என எண்ணினதாகத் தெரிகிற ஒரு காரியம் இருக்கின்றது; அது தொடர்பான உங்கள் கருத்தினை அறிந்திடுவதற்கு நான் பெரிதும் விரும்புகின்றேன்; அதாவது “கைகளை வைத்தல் வழக்கம் தொடர்பாக ஆகும்.

முடிந்தமட்டும் மாதிரியைப் பின்பற்றிடும் விஷயத்திற்கு நானும் உங்களோடுகூட இருதயப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன் மற்றும் அப்படியாகச் செய்கையில், தேவனுடைய வரங்களுக்கான அங்கீகாரமானது, மூப்பராகிய சங்கத்தார் கைகளை வைப்பதாகிய பயபக்தியான முறைவாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றது என்ற எனது ஆராய்ச்சியின் முடிவினை என்னால் கண்டுகொள்ளாமல் விடமுடிகிறதில்லை. இப்பொழுதும் என்னுடைய ஆராய்ச்சி முடிவானது தவறாக இருக்குமானால், தயவாய் எனக்கு உதவிடுங்கள். [R1957 : page 69] ஒருவேளை உங்கள் புரிந்துகொள்ளுதலின்படி என்னுடைய ஆராய்ச்சி முடிவு தவறாய் இருக்குமானால் தயவாய் அப்போஸ்தலர் 6:6; 1 தீமோத்தேயு 4:14; 5:22-ஆகிய வசனங்களை விளக்கவும். “கண்காணி மற்றும் “மூப்பர் என்ற வார்த்தைகள் ஒரே அர்த்தமுள்ள வார்த்தைகளா?

இந்த ஓர் ஏற்படுத்துதலின் விஷயத்தில், ஆதிசபையார் எந்த விசேஷித்த வல்லமையை அருளிடவில்லை, தங்கள் மீது யாரையும் அதிகாரியாக அல்லது எஜமானாக ஏற்படுத்திடவில்லை என்பதை நான் அறிவேன்; எனினும் “மூப்பரை அல்லது “கண்காணியை, இவர்கள் மேல் கைகளை வைக்கிறவர்களுக்கான பிரதிநிதியாக அல்லது ஊழியக்காரர்களாக, இந்த ஒரு முறையானது ஆக்குகின்றதல்லவா? நாங்கள் பெரிதும் மதிக்கின்றதான உங்கள் கருத்தானது இக்கேள்வியின் விஷயத்தில் எங்களைத் தெளிவுப்படுத்திடுமென நாங்கள் நம்புகின்றோம்.

நாங்கள் மூன்று “மூப்பர்களை நியமித்திருக்கின்றோம் – அதில் ஒருவர் இவ்விடத்திலுள்ள வேலைகளை மேற்பார்வையிடுவார் மற்றும் மீதி இருவரும் அருகாமையிலுள்ள இடங்களின் வேலைகளைப் பார்த்துக்கொள்கின்றனர்; அந்த இருவரில் நானும் ஒருவராவேன். நியமிக்கப்பட்டிருக்கின்றோம் என்றுதான் நான் குறிப்பிடுகின்றேன்; எங்கள்மேல் கைகள் ஏதும் வைக்கப்படவில்லை ஆனால் இக்கேள்வியானது சகோதரர்களினால் இப்பொழுது விவாதிக்கப்பட்டு வருகின்றது மற்றும் சீக்கிரத்தில் இறுதி தீர்வுக்குள் வருமெனத் தோன்றுகின்றது.

உங்களுக்கான சகோதர அன்பில் தங்கள்,
சி. ஏ. மக்கிலங்

[பதில்:- வேதவாக்கிய வார்த்தைப் பயன்பாட்டின்படி “Presbytery எனும் வார்த்தையானது “மூப்பர்கள் சங்கத்தினைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; “வயதான மனுஷன் எனும் அர்த்தமுள்ள கிரேக்க வார்த்தையிலிருந்து, இவ்வார்த்தை வருகின்றதாய் இருக்கின்றது. “Bishop” எனும் வார்த்தை “கண்காணியைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது மற்றும் அப்போஸ்தலர் 20:28- ஆம் வசனத்தில் மூப்பர்களைக் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் நிச்சயமாகவே பிலிப்பியர் 1:1-ஆம் வசனத்தில் மூப்பர்களுக்கான மற்றொரு பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1 தீமோத்தேயு 5:22-ஆம் வசனமானது, கைகளை வைத்தலின் மூலம் ஏற்படுத்துதலைக் குறிக்கின்றதாக இருக்கலாம்; ஆனால் உறுதியாய்ச் சொல்ல முடியாது.

மூப்பராகிய சங்கத்தார் (மூப்பத்துவத்தினை) தீமோத்தேயுவின் மேல் கைகளை வைத்தல் தொடர்பாகப் பார்க்கையில், இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடப்படும் மூப்பர்கள் என்பவர்கள் அப்போது இன்னும் ஜீவித்துக்கொண்டிருந்ததான அப்போஸ்தலர்களாய்க் காணப்பட்டனர். பவுல் தன்னால் துவங்கப்பட்ட ஊழியத்தினை, தனக்குப் பின் தொடரும்படிக்குத் தீமோத்தேயுவைத் தெரிந்துகொண்டார் மற்றும் அப்போஸ்தலர்கள் அனைவரும் இதை அங்கீகரித்திட வேண்டுமெனப் பவுல் விரும்பினது நிச்சயமே. அல்லாமலும் விசுவாசம் வைத்தவர்கள் யாவர்மேலும் கைகளை வைப்பதும் மற்றும் இப்படியாக ஆவியின் வரங்களைப் பகிர்ந்து கொடுப்பதும் அந்நாட்களில் அப்போஸ்தலர்களுடைய வழக்கமாய் இருந்தது. இப்படியாக வரத்தினைத் தீமோத்தேயு பெற்றிருப்பதை, அவருக்குப் பவுல் நினைப்பூட்டினார். அப்போஸ்தலர்களால் மாத்திரமே இவ்வரங்களை அளித்திட முடியும் என்பதற்கு ஆதாரமாக – மாயவித்தைக்காரனாகிய சீமோன் என்பவன் தான் யார்மேலும் கைகளை வைக்கையில், அவர்கள் ஆவியின் வரங்களைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, தான் இவ்வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு அப்போஸ்தலர்களுக்குப் பணம்கொடுக்க முற்பட்ட சம்பவத்தை நினைப்பூட்டுகின்றோம். அப்போஸ்தலர் 19:6-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவத்தையும் நாம் நினைவுகூருகின்றோம்; இன்னுமாக அப்போஸ்தலர் 8:13-19-வரையிலான வசனங்களில், (சுவிசேஷகராகிய) பிலிப்பு சமாரியர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்திருந்த போதிலும் மற்றும் அவர்களும் விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றிருந்தபோதிலும், இவர்கள்மேல் பிலிப்பு கைகளை வைக்கவுமில்லை, பரிசுத்த ஆவியினைப் பகிர்ந்து கொடுக்கவுமில்லை மாறாக அப்போஸ்தர்களாகிய பேதுருவுக்கும், யோவானுக்கும் செய்தி அனுப்பிவைக்கப்படுகின்றது மற்றும் இவர்கள் வந்து, அவர்களோடு கூட ஜெபம் பண்ணி, ஆவியின் வரங்களை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைகள் அனைத்துமே, அப்போஸ்தலர்கள் மாத்திரமே ஆவியின் இந்த வரங்களைப் பகிர்ந்துகொடுப்பதற்கான வல்லமையைப் பெற்றிருந்தார்கள் என்பதைத் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; அப்போஸ்தலர்கள் மூப்பர்கள் அல்லது மூப்பராகிய சங்கத்தார் என்று அழைக்கப்படுவது சரியே மற்றும் அவர்கள் தங்களை இப்படியாகவே தெரிவித்தும் கொண்டார்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் உயிரோடிராததால், கைகளை வைத்தலின் மூலம் ஆவியின் வரங்களைப் பகிர்ந்துகொடுக்க முடிகின்றவர்கள் எவரும் இல்லை. [R1957 : page 70]

மேலும் ஆதி சபையில் கைகளை வைக்குதலானது, ஒப்புதலைச் சுட்டிக்காட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டது என்பதைக் கவனியுங்கள்; இதற்கு உதாரணமாக, அந்தியோகியாவிலுள்ள சபையானது, தங்கள் ஊழியக்காரர்களாகவும், சுவிசேஷவேலையின் பிரதிநிதிகளாகவும் இருப்பதற்குப் பவுலையும், பர்னபாவையும் தெரிந்தெடுத்த சம்பவம் காணப்படுகின்றது. இந்தச் சபையார் உபவாசம் இருந்து, ஜெபித்து, தங்கள் கைகளைப் பவுல் மற்றும் பர்னபாவின் மீது வைத்து, அவர்களை அனுப்பி வைத்தார்கள். இந்த ஒரு சந்தர்ப்பத்தில் கைகளை வைத்தலானது, எந்த வரத்தையாகிலும் பகிர்ந்துகொடுப்பதைக் குறிக்கிறதாக இராமல், மாறாக பிரதிநிதித்துவத்தினை மாத்திரம் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; அதாவது முற்காலத்து ஆசாரியர்களின் விஷயத்தில், மிருகம் அடிக்கப்படுவதற்கு முன்னதாக, பலிச்செலுத்துபவர், மிருகத்தின் மீது தனது கையை வைக்கையில், அது – கைகள் எந்த மிருகம் அல்லது நபர் மீது வைக்கப்படுகின்றதோ, அந்த மிருகம் அல்லது நபர் அதன் அல்லது அவன் மீது கைகளை வைத்த நபருக்குப் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்படுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது போன்றதாகும். இப்படியாக அந்தியோகியா விலுள்ள சபையார், அவர்கள் இருவரையும் தங்கள் மத்தியிலிருந்து, வேலைக்கான தங்களது பிரதிநிதிகளென அனுப்பிவைத்தார்கள். அவர்களுடைய பிரயாணத்திற்கென இவர்கள் பணமும் கொடுத்தார்கள் என்பதிலும் மற்றும் பவுலும், பர்னபாவும் தங்களது பிரயாணத்தினை மேற்கொண்ட பிற்பாடு, அந்தியோகியா சபைக்குத் திரும்பி, இவர்களது பிரதிநிதிகளெனவும், கர்த்தருடைய பிரதிநிதிகளெனவும் தாங்கள் பண்ணின ஊழியத்தைக் குறித்த அறிக்கையையும் சபையாருக்குக் கொடுத்தார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. அப்போஸ்தலர் 14:26-27; 15:3-ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.

இவைகளைத் தற்காலத்திற்குப் பொருத்தி, நாம் கூறுகிறதாவது: ஐரோப்பியாவிலும், அமெரிக்காவிலும் பிரதிநிதித்துவத்தினைச் சுட்டிக்காட்டுவதற்குரிய கைகளை வைத்தல் வழக்கமானது இப்பொழுது நடைமுறையில் இல்லை அதாவது எப்படிப் புருஷர்கள் மத்தியில் முத்தம் கொடுக்கும் வழக்கம் இப்பொழுது நடைமுறையில் இல்லாமல் இருப்பது போன்றதாகும். ஆனால் இவ்விரு வழக்கங்களும் இன்றளவும் கிழக்குத் தொலைவில் நடைமுறையில் இருக்கின்றது. ஆகையால் உள்ளூர் பொறுப்புகள் பார்க்கும் அல்லது பிரயாணம்பண்ணும் மூப்பர்களைச் சபையார் அங்கீகரித்தல் தொடர்புடைய விஷயத்தில் தேர்ந்தெடுத்தலும், உபவாசித்தலும், ஜெபித்தலும் நம்முடைய கணிப்பின்படி, தகுதியான செயல்களாகவே இருக்கின்றன; ஆனால் ஆவியின் வரங்களைப் பகிர்ந்து கொடுக்காததும், நம் நாட்டு வழக்கத்தில் பிரதிநிதித்துவத்தினைச் சுட்டிக் காட்டாத வழக்கமுமான கைகளை வைத்தலானது இனி மேலும் பொருத்தமானதாய் இராது. இது முறையற்றது என்று, பொதுவாய் நிலவும் வழக்கங்கள் மற்றும் பழக்கங்களின் கண்ணோட்டத்தின்படி கருதுகின்றோம்; ஏனெனில் அது தவறாய்ப் புரிந்துகொள்ளப்படலாம் மற்றும் அதைச் செய்கின்றவர்கள் தவறான கூற்றினை ஆதரிக்கின்றார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றதாய் இருக்கும் – அதாவது ரோமன் கத்தோலிக்கர்கள், கிரேக்க கத்தோலிக்கர்கள், எபிஸ்கோப்பலியர்கள், மார்மன்ஸ் மற்றும் சிறிய அளவில் கிட்டத்தட்ட மற்றச் சபை பிரிவினர்கள் யாவராலும் செய்யப்பட்டுவருவது போன்று, அங்கீகாரம் வழங்கிடுவதற்கும், பொறுப்பு ஒப்படைப்பதற்கும் மற்றும் கைகள் யார்மேல் வைக்கப்படுகின்றதோ, அந்நபருக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமைகளைக் கொடுப்பதற்குமான வல்லமையோடுகூட, அப்போஸ்தல வாரிசு உரிமையானது தொடர்ந்து காணப்படுகின்றது என்ற அநேகருடைய கூற்றினை, அதைச் செய்கின்றவர்களும் ஆதரிக்கின்றார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றதாய் இருக்கும்.]