ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5955 (page 275)

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்

DANGER IN SPIRITUAL PRIDE

எத்தோற்றத்திலும் மற்றும் யாருக்குள்ளும் இருப்பினும், பெருமைஅபாயகரமானதேயாகும். “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுகைக்கு முன்னானது மனமேட்டிமை” எனும் நீதிமொழியானது உலக ரீதியிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது மற்றும் நியாயமாய்ப் பெருமைக்கொள்ளத்தக்கதாக, எதையாகிலும் மிகமிகச் சொற்பமானவர்களே பெற்றிருக்கின்றனர் என்பதிலும் நிச்சயமே! தாங்கள் ஏதோ சிறந்த பூமியின் தூளினின்று விசேஷமாகச் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதுபோல் கர்வத்தின் ஆவியினுடைய பெருமையினால் இறுமாப்பாய் இருக்கும் சிலரிடத்தில், அவர்களது மூதாதையர் குறித்துப் பெருமையடித்துக்கொள்வதற்கு உண்மையில் எதுவுமிராது. கடந்த காலங்களிலுள்ள வெகுசில சந்ததியினரே பெருமைப் பாராட்டிக்கொள்வதற்கு ஏதுவானவர்களாய்க் காணப்பட்டனர்.

ஐசுவரியங்கள் குறித்துப் பெருமையடித்துக்கொள்வது ஞானமாயிராது என்று உலகம் கற்றுக்கொண்டு வருகின்றது; காரணம் எவ்வாறு மற்றும் யாரால் அந்தச் செல்வங்கள் குவிக்கப்பட்டன என்றும், அவைகள் நேர்மையாய்ச் சம்பாதிக்கப்பட்டவைகளா என்றும் யாராகிலும் கேள்விக் கேட்பார்கள் என்ற பயத்தினாலாகும். கல்வியைக் குறித்த பெருமையும் பொருத்தமற்றதாகும்; காரணம் பொதுவாக கல்வி என்பது மற்ற ஜனங்கள் கண்டுபிடித்துள்ளவைகளை அல்லது வரலாறாக எழுதியுள்ளவைகளைக் கற்றுக்கொள்வதையே குறிக்கின்றதாய் இருக்கின்றது. நம்முடைய நாட்களில் தங்களின் மிகுந்த கல்வியறிவு குறித்துத் தற்பெருமையடித்துக்கொள்பவர்களுக்குத் தாழ்மை அவசியமாய் உள்ளது; காரணம் அவர்கள் எதைக்குறித்துப் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அது பிந்தய கால ஆராய்ச்சிகளினால் தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 1900-ஆம் வருடத்தின் அறிவியல் புத்தகங்களானது, இன்று தரமானவைகள் என்று ஏற்கப்படுகிறதில்லை மற்றும் அவைகளிலுள்ள கூற்றானது தற்காலத்தினுடைய அறிவின் வெளிச்சத்திற்கு முன்னாக நிலைநிற்கிறதுமில்லை. ஆகையால் அறிவைக்குறித்துப் பெருமைப்பாராட்டுவது சரி எனில், பெருமைப்பாராட்டுகிறவன் இன்று வரையிலுள்ள அறிவினைப் பெற்றுக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் காணப்படுவது அவசியமாகும்.

தன் அழகைக்குறித்தோ அல்லது சரீர ரீதியிலான பூரணம் குறித்தோ பெருமைப்பாராட்டிக் கொள்வதுகூட நியாயம் என்று சொல்ல முடியாது; ஏனெனில் வடிவம் மற்றும் முகத்தோற்றத்தின் அழகானது மரபுவழிவந்ததாகும் மற்றும் பிள்ளையை விட பெற்றோரே பெருமைப்பாராட்டிக்கொள்வதற்குக் கொஞ்சமேனும் காரணங்களைப் பெற்றிருக்கின்றனர். ஆடை, அலங்காரம் விஷயத்திலெல்லாம் பெருமையடித்துக்கொள்வது என்பது மதியீனமாகும். ஒருவேளை கைத்திறன் விஷயத்தில் ஆடையையோ அல்லது ஆபரணங்களையோ உண்டுபண்ணினவனுக்குப் பெருமைப்பாராட்டிடுவதற்குச் சில காரணங்கள் இருக்கலாம், ஆனால் நிச்சயமாய் ஆடையை அணிபவனுக்குக் காரணங்கள் இருக்காது! அவன் மற்றவர்களுடைய கைத்திறனையும் மற்றும் உழைப்பையும் சொந்தமாக்கி மாத்திரம் கொள்கின்றான்.

ஆவிக்குரிய பெருமையே எல்லாவற்றிலும் மோசமானது – SUB HEADING

ஆனால் நம்முடைய கருப்பொருள் ஆவிக்குரிய பெருமையாகும்! நாம் அதைஇரண்டு வகையாகப் பிரிக்கின்றோம்: முதலாவது பெயரளவிலான கிறிஸ்தவனாக தன்னைக் கிறிஸ்தவன் என்று அறிக்கைப்பண்ணிக்கொள்கின்றவனாக மாத்திரம் காணப்படுகின்றவனுடைய ஆவிக்குரிய பெரும் மற்றும் இரண்டாவது உண்மை கிறிஸ்தவர்களைப் பாதிக்கக்கூடிய ஆவிக்குரிய பெருமையாகும்.

பெயர்ச்சபைக்குப் போகிறவனுடைய ஆவிக்குரிய பெருமை என்பது முற்றும் மாய்மாலமானதல்ல. அவன் ஆவிக்குரிய சடங்குகளையும், ஆச்சாரங்களையும் கவனித்துக்கொள்கின்றான்; ஆவிக்குரிய பாடல்களையும், பிரசங்கங்களையும் கேட்கின்றான் மற்றும் அநேக தருணங்களில் தன்னை உண்மை கிறிஸ்தவன் என்று உணராமல் இருக்கின்றான். அவன் சபை கூடுகைகளுக்கு ஒழுங்காய்ப் போகிறவனல்லவா? ஆராதனை ஸ்தாபனங்களுடைய செலவுகளுக்கு மாத்திரமல்லாமல், கர்த்தருக்கடுத்தக் காரியங்களை – தருமங்களை முதலானவைகளைச் செய்திடுவதற்கான வாய்ப்புகள் அவனுக்கு அவ்வப்போது வருகையில் இவைகளுக்காகவும் அவன் தவறாமல் நன்கொடைகள் அளிப்பவனல்லவா?

தாங்கள் வாரமுழுவதும் எப்படி ஜீவித்திருந்தாலும் சரி, இறைச்சிக் கடைக்காரனிடத்திலும் மற்றும் ரொட்டி விற்பவனிடத்திலும் எப்படி நடந்து கொண்டிருந்தாலும் சரி, பெயர்ச்சபைக்குப் போகும் பெரும்பான்மையானவர்கள் – ஆலயக் கட்டடங்கள் மீது அலைப் பாய்கின்றதான சில பகட்டான வகுப்பாருடன் இணைந்துகொள்வதில் அமோக பெருமை கொள்பவர்களாக இருக்கின்றனர். ஆவிக்குரிய பெருமைகொண்டிருப்பவர்கள் பொதுவாகவே பகட்டான மற்றும் மிகுந்த உயர்மட்ட மற்றும் உயர்பாணியுள்ள ஆராதனை ஆலயங்களையே விரும்பித் தேர்ந்தெடுக்கின்றனர். ஆராதனை முடியும் போது, அவர்கள் தங்களில் திருப்தியடைகின்றனர் தாங்கள் தேவனைத் தொழுது கொண்டிருக்கின்றார்களல்லவா? அனைத்து ஜனங்களும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டுமல்லவா? எத்தனை பேர்கள் இப்படித் தொழுதுகொள்ளாமல் இருக்கின்றனர்! கலந்துகொள்ளாதவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப்பார்க்கையில், அவர்கள் ஆவிக்குரிய பெருமை கொள்கின்றனர் அல்லது தங்களை மேலானவர்கள் என்று எண்ணுகின்றனர்.

அவர்கள் ஆவிக்குரிய அறிவுரையைப் பெற்றுக்கொள்வதற்காகச் செல்லவில்லை ஒருவேளை அவர்கள் போகிற இடங்களில் ஆவிக்குரிய அறிவுரை கொடுக்கப்பட்டாலும், அவர்கள் ஆவியில் ஜெநிப்பிக்கப்படாதபடியினால், அவற்றை ஏற்றுக்கொள்ளுகிற நிலைமையிலும் அவர்கள் இல்லை. நீதிக்காகவோ, சத்தியத்திற்காகவோ, அவர்களுக்கு உண்மையான பசி ஏதுமில்லை. அவர்கள் கடமையின் ஓர் உணர்வினை மாத்திரம் திருப்திபடுத்தியுள்ளனர். அவர்கள் ஒருவிதத்தில் தங்கள் பாவங்களுக்குப் பிராயச்சித்தமே செய்துள்ளனர் மற்றும் இது ஏதோ விதத்திலும் மற்றும் எப்போதோ ஒரு காலக்கட்டத்தில் தங்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்புகின்றனர் – ஒருவேளை இது உத்தரிக்கும் ஸ்தலத்தினுடைய மோசமான பாடுகள் சிலவற்றிலிருந்து தங்களைத் தப்புவிக்கும் என்று – ஒருவேளை தங்களைப் பரலோகத்திற்குக்கூடப் பாத்திரவான்களாக்கிடும் என்று நம்புகின்றனர். அவர்கள் தங்களுக்கடுத்தவைகளுக்கு இடம்கொடாமல், அவரைத் தொழுது கொள்ளுவதற்குச் செல்லத்தக்கதாக, தங்கள் விலையேறப்பெற்ற சில மணிநேரங்களைச் செலவழித்துள்ளதினிமித்தம், தேவன் தங்களிடத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பாரல்லவா ? என்று எண்ணுகின்றனர்.

தாங்கள் இப்படியாக முயற்சிப்பதையெல்லாம் தேவன் கண்டுகொள்ளாமல் இருந்து மற்றும் இதற்குப் பொருத்தமான பலனை அளிக்கவில்லையெனில், அவர் மிகவும் அநீதியுள்ளவராக இருப்பார் என்று அவர்கள் எடுத்துரைக்கவில்லை என்றாலும், இப்படியாய் எண்ணிடுவார்கள். அவர்கள் ஆவிக்குரிய பெருமை கொண்டவர்களாகவும், சுயதிருப்திக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் மற்றும் இந்நிலைமையில் காணப்படுமளவும், சத்தியத்தினால் இழுக்கப்படுவதில்லை. இத்தகையவர்கள் மீது மாபெரும் எதிராளியானவன் விசேஷமாய்த் தனது கவனத்தைக் கொடுத்துக்கொண்டிருப்பான் என்றும் நாம் எண்ணிட வேண்டாம்; காரணம் அவர்கள் அவனுடைய செல்வாக்கின் கீழ்ப் பாதுகாப்பாய்க் காணப்படுகின்றனர். பெருமையை முதலாவதாக வெளிப்படுத்தினவனாகி, தனது இருதயத்தில், “நான் தேவனுடைய புத்திரர்களுக்கு மேலாக என்னை உயர்த்துவேன் (மற்றவர்களுக்கு மேலாக என்னை உயர்த்துவேன்); உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று சொன்னவன் அவனல்லவா. ஆவிக்குரிய பெருமைதான் நிச்சயமாகவே சாத்தானின் பெருந்தவறாகும் மற்றும் அதுவே அவனது முழுமையான வீழ்ச்சிக்கு வழிநடத்தினதாய் இருந்தது.

தேவன் மீதோ அல்லது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீதோ அல்லது வேதாகமத்தின் மீதோ நம்பிக்கை உண்டென எவ்விதமான பாசாங்குப் பண்ணிடாத சிலர் ஒருவிதமான பெருமையைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. ஒழுக்கமுள்ள ஜீவியம் ஜீவிப்பதினிமித்தம், ஜீவியத்தில் நல்லொழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் தாங்கள் ஜீவிக்க முடிந்ததினிமித்தம் – ஒருபோதும் மதுபானம் பருகாததன் நிமித்தம், அநேகரால் செய்யப்படுகின்றதான சில மோசமான பாவச் செயல்களையும், கெட்டக்காரியங்களையும் செய்யாததன் நிமித்தம் – தங்களைக் குறித்துப் பெருமையாய் எண்ணுகின்றனர். பெருமையிலும், தற்பெருமையிலும் இத்தகையவர்கள்: “ஒரு சபையின் அங்கத்தினன்போலவே, நானும் நல்லவனாக இருப்பதாக என்னால் உணரமுடிகின்றது மற்றும் நான் சபைக்கு ஒருபோதும் செல்லுகிறதில்லை என்று சொல்லிடுவார்கள். இதன் அர்த்தம், “சபையின் அங்கத்தினனைக் காட்டிலும் நான் நல்லவன் / மேம்பட்டவன் என்று நான் என்னைக் குறித்து எண்ணுகின்றேன்” என்பதேயாகும். இவர்கள் தாங்கள் சொல்வதைக் கேட்பவரிடத்தில் சிறந்த தாக்கத்தினை எது ஏற்படுத்தும் என்று எண்ணுவதற்கேற்ப பெருமையின் சிந்தனையை இவர்கள் தன்னடக்கமான வார்த்தைகளுடன்
இணைக்க மாத்திரமே செய்கின்றனர்.

இவர்கள் எந்தெந்த நற்கிரியைகளைச் செய்வதில் சந்தோஷம் கொள்கிறார்களென விசாரிக்கப்பட்டால் – இவர்கள் எப்படி (Odd fellows, masons) “நண்பர் கழக உறுப்பினர்களென,” [R5955 : page 276] “உடன்பிறப்புணர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் கேண்மை கழக உறுப்பினர்களென” அவ்வளவுக்கு வியாதிப்பட்டிராதவரும், அவ்வளவுக்குக் கவனிக்கப்பட அவசியம் பெறாதவரும் மற்றும் தன்னைப் பராமரித்துக்கொள்வதற்குப் – பயிற்சிபெற்ற தாதியைப் (Nurse) பெற்றிருப்பவருமான கழகத்திலுள்ள ஒரு சகோதரனுடன், தாங்கள் இராமுழுவதும் இருந்து பராமரித்தார்கள் என்றும், தாங்கள் தலைச்சிறந்த அறச்செயலைச் செய்துள்ளது போன்று உணர்ந்தார்கள் என்றும் நமக்குத் தெரிவிப்பார்கள். தாங்கள் சட்டங்களை மீறவில்லை என்பதிலும், தாங்கள் நல்லொழுக்கத்துடன், கண்ணியமாய் ஜீவித்துள்ளார்கள் என்பதிலுமே இவர்களது பெருமைக் காணப்படுகின்றது. இதில் பெருமைப்பாராட்டிக்கொள்வதற்கு, தன்னையே விசேஷமாய்ப் பாராட்டிக்கொள்வதற்கு உண்மையில் என்ன இருக்கின்றது? இந்தச் சட்டங்களானது நல்ல ஜனங்களுக்காக இல்லாமல், தீமை செய்பவர்களுக்கே இயற்றப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவுகூருகையில், எந்த மனுஷன் (அ) மனுஷி சட்டங்களைக் கைக்கொள்ளாமல் இருப்பான் மற்றும் அச்சட்டங்களைக் கைக்கொள்ளத் தவறினால், இதினிமித்தம் வெட்கம் அடையாமல் இருப்பான்?

உண்மை சபையில் ஆவிக்குரிய பெருமை – SUB HEADING

இப்பொழுது இருப்பவைகளிலேயே மிக அபாயகரமான விஷயத்திற்கு வருகின்றோம்! உலகத்தாரிடமும், பெயரளவிலான கிறிஸ்தவர்களிடமும் காணப்படும் பட்சத்தில் அறிவீனமானதாகவோ அல்லது அரைப்பாசாங்காகவோ மாத்திரமே காணப்படும் பெருமையானது, ஒருவேளை தேவனுடைய பிள்ளையின் இருதயத்தையும், ஜீவியத்தையும் தாக்கும் பட்சத்தில் மிகவும் அபாயகரமான காரியமாகிவிடுகின்றது. ஆனால் ஏன் இப்படி நாம் வித்தியாசப்படுத்துகின்றோம். ஆவிக்குரிய பெருமை என்பது உலகத்தாரின் விஷயத்தில் முட்டாள்தனத்தைக் காட்டிலும் கொஞ்சம் மேலானது என்று சொல்லி, ஏன் இது கர்த்தருடைய பரிசுத்தவான்களில் ஒருவனுக்கு மிகவும் அபாயகரமானது என்று நாம் சொல்லுகின்றோம்? ஆ! வித்தியாசம் என்னவெனில் – இவர்கள் உலகத்தில் தேவனுடைய விசேஷித்த பிரதிநிதிகளாக இருக்கின்றனர் மற்றும் இவர்கள் கர்த்தரினால் அழைக்கப்பட்டுள்ளதான மகிமை, கனம் மற்றும் அழியாமையை அடைய வேண்டுமெனில் தேவனுடைய பிரியமான குமாரனின் சாயலாக வேண்டும்.

இவர்கள் தங்களை முற்றிலுமாய்க் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, மீட்பருடைய பலியின் புண்ணியத்தின் வாயிலாகப் பாவங்களினின்று நீதிமானாக்கப்பட்டு மற்றும் இவர்கள் இப்படியாய்த் தேவனுடைய குடும்பத்திற்குள்ளாகக் கொண்டுவரப்பட்டனர் மற்றும் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டபோது – இவைகள் இவர்களுக்கு மிகுந்த மாற்றத்தைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. பழையவைகள் ஒழிந்துபோயின; அனைத்தும் புதிதாயின. இவர்கள் – ஆம், இவர்கள் மாத்திரமே இந்தச் சுவிசேஷயுகத்தில் நித்திய ஜீவனா (அ) நித்திய மரணமா எனும் பரீட்சையில் காணப்படுகின்றனர். இவர்களுக்கான சோதனைகள் மற்றும் வஞ்சனைகள் அனைத்திலுமே, ஆவிக்குரிய பெருமை எனும் பாவமே, அநேகமாக அனைத்திலும் மிகவும் அபாயகரமாய் இருப்பவைகளில் ஒன்றாய் இருக்கின்றது. எந்தளவுக்கு அது உள்ளே கடந்து வருகின்றதோ, அவ்வளவாய்க் கர்த்தருடைய ஆவியானது வெளியேறுகின்றது மற்றும் அந்நபருடைய ஆவிக்குரிய தன்மையானது ஓய்ந்துவிடுகின்றது. இந்த ஆவிக்குரிய நோயானது கட்டுப்படுத்தப் படவில்லையெனில், நிச்சயமாய் இரண்டாம் மரணத்திற்கு வழிநடத்திவிடும்; ஏனெனில் ” கர்த்தர் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்” (யாக்கோபு 4:6).

“ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” என்று சபைக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகையில், ஆவிக்குரிய பெருமை எனும் இந்தச் சுற்றிவளைக்கும் அபாயத்தினை அவர் மனதில் கொண்டிருந்தார் என்பது உறுதியே (1 பேதுரு 5:6). “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்று ஆண்டவர் கூறியுள்ளார் (லூக்கா 14:11).

இந்த ஆத்தும நோய்க்கான ஓர் அறிகுறி

ஆவிக்குரிய பெருமையை நாம் எப்படிக் கண்டறிவது? என்று கேட்கப்படலாம். [R5956 : page 276] ஆவிக்குரிய பெருமையின் விஷயத்திலுள்ள மிக அபாயகரமான காரியம், அதனை பெற்றிருப்பவர் அதைக்குறித்து மிக அபூர்வமாகவே அறிந்திருப்பார். அவர்கள் சிலசமயம் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்தவர்களாகக் காணப்படுகின்றனர். இந்தத் தேவபக்தியின் வேஷமானது மற்றவர்களை மாத்திரம் வஞ்சியாமல், அவர்களையும் வஞ்சித்து, தங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றதும், மற்றவர்களால் மிகத் தெளிவாய்க் காணமுடிகின்றதுமான ஆவிக்குரிய பெருமையை அவர்கள் கண்டுகொள்வதைத் தடுத்துவிடுகின்றதாயும் இருக்கின்றது.

சபை கூடுகைகளில் நீங்கள் கலந்துகொள்ளுதல் குறித்தோ, வேதாகம பாடங்கள் ஆராய்ச்சி புத்தகத்திலிருந்து நாளொன்றிற்கு அதிகமான பக்கங்களை நீங்கள் படிப்பதுகுறித்தோ, அநேக பிரதிகளை நீங்கள் விநியோகிப்பதைக்குறித்தோ அல்லது அநேக புத்தகங்களை நீங்கள் மற்றவர்கள் படிப்பதற்கெனக் கடனாகக் கொடுக்கிறதுகுறித்தோ பெருமையடித்துக்கொள்வதற்குத் தோன்றுகின்றதா? – அப்படியானால் எச்சரிக்கையாயிருங்கள்! தற்பெருமையடித்துக் கொள்வதற்கான இந்த விருப்பம் என்பது, சாதகமான சூழ்நிலை அமைகையில், நீங்கள் ஆவிக்குரிய பெருமையினால் பிடிக்கப்படுவதற்கான அபாயத்தில் இருக்கின்றீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. மேற்கூறப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் நற்காரியங்களும், பாராட்டத்தக்கவைகளும்தான், அனைத்தும் தகுந்த காரியங்கள்தான்; மற்றும் அன்றாட செய்தித்தாள்களையோ அல்லது நாவல்களையோ வாசிப்பதை, சிற்றுரையாடல்களை வாசிப்பதை அல்லது சிற்றுரையாடல்களை எழுதுவதை விட்டுவிட்டு, (மேலே கூறப்பட்டுள்ள செயல்பாடுகளாகிய) நியாயமான செயல்பாடுகளை, மிகவும் தகுதியான செயல்பாடுகளை, தெய்வீகச் சித்தத்திற்கு மிகவும் இசைவாகக் காணப்படும் செயல்பாடுகளைச் செய்திடுவதற்கு விருப்பம் கொண்டவராகவும் மற்றும் அப்படிச் செய்ய முடிகிறவராகவும் நீங்கள் இருப்பதை நீங்கள் காணும்போது, நீங்கள் தகுதியான விதத்தில் உங்களில் மகிழ்ச்சிகொள்ள வேண்டும். ஆனால் இச்செயல்பாடுகள் குறித்துத் தற்பெருமையடித்துக் கொள்வதற்கான தன்மையானது / விருப்பமானது காணப்படுமாயின், இதினிமித்தம் கர்த்தருடைய ஊழியத்திற்கென்றுள்ள இந்தச் செயல்பாடுகளின் பின்னால் உள்ள நோக்கங்களை சிந்தனைகளைக் கவனமாய்ச் சோதித்தறிய நீங்கள் வழிநடத்தப்படவேண்டும். மற்றவர்களை உற்சாகமூட்டத்தக்கதாக அல்லது நாம் கர்த்தரை அன்புகூருகின்றோம் என்பதற்கும், அவருக்கு ஊழியம்புரிய நாம் ஆவலாய் இருக்கின்றோம் என்பதற்குமான ஆதாரமாகக் காணப்படத்தக்கதாக, இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் சாட்சியாக வெளிச்சொல்வது முறையற்றது என்ற அர்த்தத்தில் நாம் சொல்லவில்லை. கர்த்தருடைய பிள்ளையென நாம் இருக்ககூடிய விதம் அல்லது செய்யும் எதையேனும் குறித்துத் தற்பெருமையடித்துக் கொள்ளும் விருப்பம் அல்லது ஆவிக்கு எதிராகவே நாம் எச்சரிக்கையாயிருக்கும் படிக்குக் கூறுகின்றோம். இதில் தற்பெருமையடித்துக் கொள்வதற்கு நமக்கு எதுவுமில்லை. ஆவிக்குரிய தரித்திரரைப் போஷிப்பதற்கென நம்முடைய உடைமைகள் அனைத்தையும் நாம் ஒருவேளை கொடுத்திட்டாலும், சத்தியத்தைப் பரப்புவதற்கென நம்முடைய நேரம் முழுவதையும் கொடுத்திட்டாலும், கர்த்தருடைய நாமத்தைக் கனப்படுத்துவதில் நம்முடைய சக்தி / ஆற்றல் முழுவதையும் கொடுத்திட்டாலும், அனைத்தையும் செய்து முடித்த பிற்பாடு, நம்முடைய கர்த்தருக்கு உண்மையில் நம்மால் பிரயோஜனம் ஏற்படவில்லை என்று நாம் எண்ணிட வேண்டும்; மேலும் அவருடைய கரங்களினின்று நாம் ஏற்கெனவே பெற்றுக்கொண்டுள்ளதான எண்ணற்ற ஆசீர்வாதங்களையும் மற்றும் நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்கும் பட்சத்தில் நம்முடையதாய்க் காணப்படுமென அவர் வாக்களித்துள்ளதான இன்னும் அதிகமான வியக்கத்தக்க கிருபைகளையும் நன்றியோடு ஏற்றுக்கொண்டுள்ள நம்முடைய இருதயங்களின் பக்தியில் கொஞ்சத்தை அவருக்கு வெளிப்படுத்திடுவதற்கான வாய்ப்பை நாம் பெற்றுக்கொள்ள மாத்திரமே செய்திருக்கின்றோம் என்று நாம் எண்ணிட வேண்டும். கவிஞன் பின்வரும் வரிகளைச் சரியாய்த்தான் எழுதியுள்ளான்:

“பெருமையோ அல்லது பேராசையோ இல்லாத ஓர்
அணுகுமுறை எந்தனுக்கு வேண்டுமே!

இன்னும் கூடுதலான அறிகுறிகள் – SUB HEADING

ஆவிக்குரிய பெருமை எனும் இந்த நோயின் மற்றொரு வடிவமானது, குற்றம் கண்டுபிடிக்கும் மனோ நிலையில் வெளிப்படுகின்றது. ஒருவர் சாட்சிக் கூட்டத்திலோ அல்லது பெரோயா வகுப்பிலோ கலந்துகொள்கையில், தன்னுடைய சாட்சியைத் தவிர வேறு எந்தச் சாட்சியும் அவருக்கு உண்மையில் நல்ல சாட்சியாகத் தோன்றவில்லையெனில், கலந்தாய்வு செய்யப்படும் ஏதோ ஒரு கேள்விக்குத் தன்னுடைய பதிலைத் தவிர வேறெந்தப் பதிலும் சரியான பதிலாக அவருக்குத் தோன்றவில்லையெனில், கூடுகையை எப்படி நடத்திட வேண்டும் என்று அறிந்துள்ள (தகுதிவாய்ந்த) மூப்பரை அவரால் அங்கு ஒருபோதும் பார்க்க முடியவில்லையெனில் – இவைகள் ஆவிக்குரிய பெருமைக்கான அபாயக்கரமான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மேற்கூறியவைகள் அனைத்தும் நடக்க வாய்ப்பில்லை என்று சொல்லிட முடியாது; எனினும் அப்படியாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்காது என்பதில் நிச்சயமே. வேதவாக்கியம் அங்கீகரியாத நடவடிக்கைகளையோ அல்லது செய்யப்படும் ஊழியங்களானது ஆற்றல்மிக்கதாய் இருப்பதற்கு இடையூறாய் அமையக்கூடியதான மிகுந்த குறைபாடுள்ள கணிப்புகள் கணிக்கப்படும் தருணங்களையோ உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளத்தக்கதாக நாம் இப்படியானதொரு கவனம் கொடுப்பதும், நன்கு விளக்கம் அறிந்தவர்களாகவும் காணப்படுவதும் முற்றிலும் தகுதியானதே. சபைக்கான சிறந்த நலனுக்கடுத்த காரியங்கள் செய்யப்படாததை நாம் எப்போதேனும் காணும் பட்சத்தில், அதுவும் கொஞ்சம் காலம் நாம் பொறுமையாய்க் காத்திருந்த பிற்பாடும்கூட, அவைகள் சரிச்செய்யப்படப்போவதில்லை என்று நாம் அறியும் பட்சத்தில், சபையார் மத்தியிலோ அல்லது மூப்பரிடத்திலோ அல்லது மிகுந்த பலனுக்கேதுவானதும், குறைவாய்ச் சுட்டிக்காட்டுகிறதுமான ஏதேனும் விதத்தில் அத்தவற்றினைச் சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியில் கவனத்திற்கு நாம் கொண்டுவருவது முற்றிலும் தகுதியானதாகவே இருக்கும். “ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்யாமல்,” எல்லாம் தேவனுடைய மகிமைக்காகச் செய்யப்பட வேண்டும்.

இதிலும்கூட நம் கருத்துகளுக்கு இசைவாயுள்ள அனைத்தும் தேவனுக்கு மகிமை சேர்க்கும் என்றும், நம்முடைய கருத்துகளுக்கு இசைவாயிராத அனைத்தும் அவருக்குப் பிரியமாயிராது என்றுமுள்ள சிந்தனைகளுக்குள் போய்விடாதபடிக்கு நாம் கவனமாய் இருப்பது அவசியமாகும். “ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து,” ” See then that ye walk circumspectly, not as fools, but as wise…” (எபேசியர் 5:15) என்று அப்போஸ்தலன் சரியாய்த்தான் எழுதியுள்ளார். இவ்வசனத்தில் இடம்பெறும் ” circumspectly “/கவனமாய் எனும் வார்த்தையானது ஒவ்வொரு விஷயத்திலும், அதிலும் விசேஷமாகச் சிந்தனைகள், நோக்கங்கள், உள்நோக்கங்கள் தொடர்புடைய விஷயத்தில் கவனமான சோதித்தறிதலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்பதை நாம் அறிந்துகொள்வது நலம்.

உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக – SUB HEADING

“என் சகோதரரே அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” என்று பரிசுத்த யாக்கோபு சரியாய்த்தான் எழுதியிருக்கின்றார் (யாக்கோபு 3:1). நாம் ஏற்கெனவே சுட்டிக்காண்பித்திருந்தது போலக் கர்த்தருடைய ஜனங்கள் அனைவருமே ஆவிக்குரிய பெருமையினால் விசேஷமாய் எளிதில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றபோதிலும், அவருடைய சத்தியத்தைப் பிரகடனம்பண்ணும் விஷயத்தில் ஏதேனும் விதத்தில் தொடர்புபட்டிருப்பவர்கள் அனைவரையும் ஒரு விசேஷித்த அபாயம் சூழ்ந்திருப்பதாகத் தெரிகின்றது.

கேட்கும் செவிகளுடைய அனைவரிடமும் தேவனுடைய கிருபைபற்றின செய்தியை அறிவிப்பது என்பது உண்மையில் ஒரு விசேஷித்த சிலாக்கியமேயாகும். இந்தச் சிலாக்கியமானது – ஒரு காலத்தில் ஊகிக்கப்பட்டதுபோன்று குருமார் வகுப்பாருக்கு மாத்திரம் உரியதல்ல என்பதினாலும்; இன்னுமாகக் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களாக இருப்பவர்களும் மற்றும் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களும் மற்றும் சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கவும், இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டவும் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டவர்களுமான அனைவருக்கும் இச்சிலாக்கியம் உரியது என்பதினாலும் நாம் எவ்வளவாய் நன்றி ஏறெடுக்கின்றோம் [R5956 : page 277] (ஏசாயா 61:1). அயலகத்தாருடனும், நண்பர்களுடனுமான நம்முடைய தனிப்பட்ட (சத்திய) உரையாடல்களையும் உள்ளடக்கும் இச்சிலாக்கியத்தினிமித்தம் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். தேவனுடைய ஸ்தானாபதிகளாக இருப்பதும் மற்றும் அவரது நாமத்தில் வரவிருக்கின்ற இராஜ்யம் குறித்தும், இயேசுவினுடைய மரணத்தின் மூலமாக தேவன் ஏற்கெனவே பண்ணியுள்ளதான மாபெரும் ஏற்பாடுகளைக்குறித்தும், இதன் பிரம்மாண்டமான விளைவுகுறித்தும், அந்த இராஜ்யத்திற்கான இராஜாக்களும், ஆசாரியர்களும் எப்படி இப்பொழுது உலகத்திலிருந்து அழைக்கப்பட்டு, தங்கள் எதிர்க்கால வேலைக்காய் ஆயத்தமாகுவதற்குச் சுபாவ மாறுதலை அடைந்துவருகின்றனர் என்பது குறித்தும் அறிவிப்பது என்பதும் எப்படிப்பட்டச்சிலாக்கியமாயிருக்கிறது!

தூது / செயதி பழையதாய் இருப்பினும், அது சரியாய் முன்வைக்கப்படுகையில் மிகவும் புதியதாகவும், வியப்பானதாகவும், கேட்கும் உத்தம இருதயத்தாரிடம் ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறதாகவும் காணப்படும். இந்தச் சாதாரணமான மனுஷன் (அ) மனுஷி எப்படி இத்தகைய வியத்தகுக் காரியங்களைப் புரிந்துகொண்டார்கள் மற்றும் இவ்வளவு அருமையாய்ச் சித்தரித்து விளக்கமுடிபவராய் இருக்கின்றனர் என்று நம்மைக்குறித்து தூதைக் கேட்ட அந்த உத்தம இருதயத்தார்கள் ஆச்சரியப்படுகின்றனர். அநேகமாக அவர்களது இந்த வியப்பை வெளிப்படுத்தவும் செய்கின்றனர். அத்தருணத்தில்தான் ஆவிக்குரிய பெருமை எனும் நோயினால் பிடிக்கப்படுவதற்கான அபாயகரமான தருணம் வருகின்றது. மனமானது கொஞ்சம் தடுமாறிவிடுகின்றது மற்றும் “மனுக்குலத்தில் திரளான ஜனங்களானவர்கள் இவைகள் எல்லாவற்றையும் குறித்துக் கொஞ்சமேனும் அறியாமலிருக்க மற்றும் வேத வசனங்களைக் கையாளுகிற மிகுந்த திறமிக்க மற்றும் ஆற்றல் மிக்க ஊழியக்காரர்களில் சிலர் கூட வேதாகமத்தின் இக்காரியங்கள் குறித்து அறியாதிருக்க, நான் இவைகளையெல்லாம் அறிந்திருப்பது ஆச்சரியமான காரியந்தான்” என்று நீ எண்ணிடுவாய்.

ஆவிக்குரிய பெருமை எனும் நோயினை நீ உள்வாங்கிடும்போது, உன் முதுகெலும்பு சந்தேகத்திற்கிடமின்றி நிமிர்ந்திடும். உன்னை நீ மிக முக்கியமானவனாக எண்ணிடுவதற்கும் மற்றும் மிகவும் மேன்மையானவனாய்த் தோற்றமளிப்பதற்கும், பெரியவனாய் எண்ணிடுவதற்கும் நீ ஆரம்பிப்பாய். உன்னுடைய குரல்கூட இதை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கும் மற்றும் நீ பேசுவதைக் கேட்கிறவன், இதனை கவனிப்பான்; அவன் நீ பேசுவது கர்த்தருடைய வார்த்தையல்ல மாறாக நீ காண்பித்துக்கொள்கிறது போல, உன்னால் உருவாக்கப்பட்ட ஏதோ காரியங்கள்தானென – உன்னால் கொடுக்கப்பட்ட ஏதோ விளக்கந்தானென எண்ணத்துவங்கிடுவான் மற்றும் இதினிமித்தம் நீ பேசினவைகளை அவன் பொருட்டாய் எடுத்துக்கொள்கிறதில்லை.

சத்தியத்தை மற்றவர்களுக்குச் சொல்வதற்கான வாய்ப்புகள் தொடர்புடைய விஷயத்தில் மிகவும் மேட்டிமை மற்றும் பெருமையடித்துக்கொள்வதற்குப் பதிலாக, கர்த்தருடைய ஜனங்கள் மிகுந்த தாழ்மைக் கொள்வது தகுதியான மனோநிலையாக இருக்குமென அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். நமது அபாத்திர நிலையை நாம் உணர்ந்திட வேண்டும். திட்டம் நம்முடையதல்ல என்றும், நாம் அதைக் குறித்துக் கேட்டறிந்தவர்களாக மாத்திரமே காணப்படுகின்றோம் என்றும், அது உண்மையில் தேவனுடைய திட்டமேயாகும் என்றும், நாம் அதைப் பிரகடனப்படுத்தும் அவரது ஊழியர்களெனக் கனப்படுத்தப்பட்டிருக்கின்றோம் என்றும் நாம் உணர்ந்திட வேண்டும். ஆனால் நம்முடைய ஏதேனும் ஞானத்தினாலோ அல்லது ஏதேனும் திறமையினாலோதான் செய்தியானது அருமையாய்த் தோற்றமளிக்கின்றதென ஏதேனும் எண்ணத்தினை வெளிப்படுத்துவோமானால், அவ்வளவாய் நாம் கர்த்தருக்கு உரியதான மகிமையை நமக்கென எடுத்துக் கொள்கிறவர்களாக இருப்போம் மற்றும் தற்காலத்திலும், எதிர்க்காலத்திலும் கர்த்தரினால் பயன்படுத்தப்படுவதற்கு நாம் பாத்திரவான்களாய் இருக்கின்றோம் என்பதை நிரூபிக்க தவறுவதற்கேற்ப, நமக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறவர்களாக இருப்போம். கர்த்தருடைய ஸ்தானாபதிகளெனப் பேசிடுவதற்கும், அவரது மகத்துவங்களையும், திட்டத்தையும் குறித்து அறிவிப்பதற்குமான அருமையான சிலாக்கியமானது – பலத்தில் மேம்பட்டிருப்பவர்களும், இந்த மிக அருமையான செய்தியை அறிவிப்பதில் அவரால் பயன்படுத்தப்பட முடிகின்றவர்களுமாகிய தேவத்தூதர்களை அவர் பெற்றிருந்த போதிலும், நமக்கு அவர் சிலாக்கியம் அருளியுள்ளார் எனும் எண்ணம் – நம்மைத் தாழ்மைக்கொள்ள செய்திட வேண்டும்.

மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் மீதான விசேஷித்த சோதனை – SUB HEADING

சபையாரால், மூப்பர்களென மற்றும் உதவிக்காராகளெனத் தேர்ந்தெடுக்கப்படும் அருமையான சகோதரர்கள் தங்கள் தாழ்மையின் விஷயத்தில் இன்னும் பரீட்சைக்குள்ளாகுகின்றனர். இந்த ஸ்தானத்தில் ஆவிக்குரிய பெருமை என்று அழைக்கப்படும் நோயினால் பிடிக்கப்படுவதற்குரிய மகாபெரும் அபாயமில்லாமல் எவரும் காணப்பட முடியாது. நூதன சீஷன், புதிதானவன், சத்தியத்தில் குழந்தையாய் இருப்பவன் ஒருவன், எவ்வளவுதான் அறிவுமிக்கவனாகவும், எவ்வளவுதான் படித்தவனாகவும் இருப்பினும், அவன் மூப்பனாகவோ அல்லது உதவிக்காரனாகவோ தெரிந்தெடுக்கப்படக்கூடாது என்று பரிசுத்த பவுலினால் கொடுக்கப்பட்டதான எச்சரிப்பைச் சிலசமயம் கர்த்தருடைய ஜனங்கள் முற்றிலுமாக மறந்துபோய்விடுகின்றனர்; அவன் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்பதற்கான காரணம் என்னவெனில், அப்போஸ்தலன் குறிப்பிட்டுள்ளதுபோல அவன் தேவனுடைய பிள்ளைக்குச் சத்துருவாகிய – ஆவிக்குரிய பெருமையினால் விசேஷமாய் எளிதில் பாதிக்கப்படக்கூடியவனாய் இருப்பான் (1 தீமோத்தேயு 3:6).

ஆனால் நூதன சீஷன் மாத்திரம் அபாயத்தில் இல்லை. கர்த்தருடைய ஜனங்களுக்கு ஊழியம் புரிவதற்கென நியமிக்கப்படும் அனைவரும், ஆவிக்குரிய வீழ்ச்சிக்கும், இரண்டாம் மரணத்தில் அழிவதற்கும் ஏதுவான மாபெரும் சோதனைக்குள்ளாகுகின்றனர். அநேகமாக தங்களது ஊழியக்காரர்களெனத் தேர்ந்தெடுக்கப்படப்போகிறவர்களின் விஷயத்தில், இவைகளையெல்லாம் கர்த்தருடைய ஜனங்கள் போதுமான அளவுக்குச் சிந்திக்காதவர்களாய் இருக்கின்றனர். அநேகமாக சகோதரர்களுடைய வாக்குகளின் (Votes) அடிப்படையில், ஊழியத்திற்கான இந்த ஸ்தானங்களை ஏற்றுக்கொள்பவர்களும்கூட, இதை ஏற்றுக்கொள்வதினால் தாங்கள் என்னென்ன அபாயங்களுக்குள்ளாவார்கள் என்று உணர்ந்துகொள்ளுகிறதுமில்லை. ஒருவேளை உணர்ந்திருப்பார்களானால், சந்தேகத்திற்கிடமின்றி அந்த உணர்ந்து கொள்ளுதலானது, அதனை ஏற்றுக்கொள்வதில் அவர்களைத் தயக்கம் கொள்ளச் செய்திடும்; மற்றும் ஊழியத்திற்கென அவர்கள் மிகவும் தெளிவாய் / வெளிப்படையாய் நியமிக்கப்படாதது வரையிலும், ஊழியஞ்செய்ய முற்படாமல் இருப்பதற்குத் தாழ்மையானது அவர்களை நிச்சயமாய் வழிநடத்திடும்.

ஆனால் நாம் எதைப் பார்க்க நேரிடுகின்றது? அந்தோ பரிதாபம்! மூப்பர் அல்லது உதவிக்காரர் ஸ்தானம் அடைந்திடுவதற்கான மனநிலையைச் சிலரிடத்தில் பார்க்கின்றோம். தாங்கள் தேர்ந்தெடுக்கப்படத்தக்கதாகப் பேரம் பேசிடுவதற்கும் மற்றும் “விரும்பியதை அடைய இரகசியமாகச் செல்வாக்கினைப் பயன்படுத்திடுவதற்குமான” மனோ நிலையைக்கூடச் சிலரில் பார்க்கின்றோம்; தாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில், எரிச்சலடையும் மனோநிலையைச் சிலரில் பார்க்கின்றோம்; தேர்ந்தெடுத்தலின்போது தங்களுக்கு எதிராக வாக்களிப்பவர் யாரிடத்திலும், கோபங்கொள்ளும் மனோநிலையைச் சிலரில் பார்க்கின்றோம். அந்தோ பரிதாபம்! அந்தோ பரிதாபம்! ஒருவேளை இந்த அருமையான சகோதரர்கள் தங்கள் மனதில் எது அரித்துக்கொண்டிருக்கின்றது என்றும் மற்றும் இப்படியெல்லாம் நடந்துகொள்ளுவதற்கு எது தூண்டிக் கொண்டிருக்கின்றது என்றும் உணர்ந்துகொள்வார்களானால்- ஓ! அவர்கள் எப்பேர்பட்ட வித்தியாசமான வழிமுறையை / போக்கினை எடுத்துக்கொள்பவர்களாய் இருப்பார்கள்! சகல சாந்தத்திலும், தாழ்மையிலும், அப்படிப்பட்டதான பொறுப்பை உடைய ஸ்தானத்தைப் பெற்றுக்கொள்ளும்போது, அவர்கள் அச்சம் கொள்ளவேண்டும். சபையில் உள்ள அனைவருமே, தங்களது சத்திய அறிவிற்கேற்ப் போதகர்களாகுவதற்குத் தகுதிப்பட்டிருக்கவேண்டும் என்றபோதிலும், போதகர்களாய் இருப்பவர்கள் கடுமையான சோதனைக் குள்ளாவார்கள் என்று அறிந்து போதகராகாதிருப்பதே பாதுகாப்பானது என்பதுதான் எச்சரிப்பாய் இருக்கிறது. கர்த்தருக்கும் மற்றும் சகோதர சகோதரிகளுக்குமான பொறுப்புணர்வு மாத்திரமே ஒருவரை இப்படியாக ஊழியம்புரிந்திட விரும்பிடுவதற்கு, சபையில் கர்த்தருடைய பிரதிநிதியாக விரும்பிடுவதற்குத் தூண்டிட வேண்டும்.
[R5957 : page 277]

மூப்பனாகுவதற்கான அல்லது பெரியவனாகுவதற்கான அதிகம் பிரியமும், பெருமையின் தன்மையிலுள்ள அனைத்தும், அந்நபருக்கு அபாயகரமாய் மாத்திரமல்லாமல், அவன் சம்பந்தப்பட்டுள்ளதான முழுச்சபையாருக்கும்கூட அபாயகரமானதாகும். நோயின் தொற்றுத்தன்மைபோன்று இந்த ஆவியும் தொற்றுகின்றதாய் இருக்கின்றது. கர்த்தருடைய ஆவிக்கு எதிரான சண்டை, வீண் பெருமை, பேராசை விரைவில் வெளிப்படும். இதைத் தொடர்ந்து கோபம், துர்க்குணம், பொறாமை, பகைமை, தீமைபேசுதல், பொல்லாத சம்சயங்கள் கடந்து வருகின்றது. இவைகளைப் பரிசுத்த பவுல் அடிகளார், “மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகள்” என்று நம்மிடம் கூறுகின்றார். இந்தப் பாதகம் அனைத்தும், எதிராளியானவனுடைய இந்த ஆவி அனைத்தும் – ஒன்றில் சபையாருடைய ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மூப்பர்களினாலோ அல்லது வழிநடத்துனர்களினாலோ, இல்லாவிடில் மூப்பர்களாகவோ, வழிநடத்துனர்களாகவோ ஆகிடுவதற்கு ஆசைகொண்டுள்ளதான ஒருவராலோ, ஒன்றிற்கு மேற்பட்டவர்களாலோ சபையாருக்குள் கொண்டுவரப்படக்கூடிய வாய்ப்புள்ளது.

இப்படியாக நடைபெறுகின்றது என்பதினால் நாம் வருத்தமடைகின்றோம்; இன்னுமாக தேவனுடைய அருமையான பிள்ளைகள் அநேகரைக்கொண்டுள்ள (பல்வேறு இடங்களிலுள்ள) அநேகம் சபைகளில், முன்மாதிரியாகக் காணப்பட்டிருந்த அநேகர், இந்நிலைக்குள்ளாகியுள்ளனர் என்பதையும் நாம் அறிவோம். கர்த்தருடைய ஆவியானது முழுக்கட்டுப்பாட்டையும் பெற்றிருப்பதற்குப் பதிலாக, தீமையான ஆவி (அ) பண்பானது, கூடுகைகளில், பல்வேறு விதங்களில் அடிக்கடி வெளிப்படுகின்றதாய் இருக்கின்றது. எண்ணிக்கையில் / விரிவாக்கத்திலும் சரி, ஆவிக்குரிய விஷயத்திலும் சரி, சபையார் வளர்வதற்குத் தவறுகின்றனர். இவைகளே ஆவிக்குரிய பெருமை எனும் இந்தத் தீமையின் கசப்பான கனிகளாக இருக்கின்றன.

வாட்ச் டவர் வெளியீட்டின் வாசகர்கள் அதன் உண்மையான தோற்றத்தையும், கொடூரமான தன்மையையும் காணத்தக்கதாக, அவர்கள் முன்பாக அதை வெளிப்படுத்துவதற்கான மொழியின் ஆற்றல் எங்களுக்கு இருக்குமானால், நிச்சயமாய் அது சீயோனில் அச்சத்தை உண்டுபண்ணியிருக்கும்! இப்படியாக ஆவிக்குரிய பெருமைக்குள்ளாகுபவர்கள் பெரும்பாலும் அருமையான பாத்திரங்களாகவும், உண்மையில் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளதான தேவப் பிள்ளைகளாகவும் காணப்படுகின்றனர் என்று கவனிக்கப்படத்தக்கதாக வாட்ச் டவரிலிருந்து எச்சரிப்பு மணியடிக்க நாங்கள் விரும்புகின்றோம். அப்படியானவர்களில் சிலர் கடந்த காலங்களில் ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடினவர்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். இவர்களது குணலட்சணங்களானது, தவறான திசையில் மாறியுள்ளதற்கான அறிகுறிகளைக் காண்கையில் நாம் மிகவும் வருத்தமடைகின்றோம்! “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவரீகள்”; என்று சொன்னவருக்குச் செவிச் சாய்ப்போமாக (மத்தேயு 7:16).

ஆவிக்குறிய பெருமைக்கு எதிராக விழித்திருங்கள் – SUB HEADING

ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது போன்று, ஆவிக்குரிய பெருமை எனும் இந்த நோயின் விஷயத்திலுள்ள மிக அபாயகரமான காரியம், இந்நோயைப் பெற்றிருப்பவர்கள், தாங்கள் (நோயைப்) பெற்றிருப்பதை அறியாமல் இருப்பதேயாகும். மற்றுமொரு சிரமம் – அவர்களைத் திருத்திடுவதும் மற்றும் நோயைப் பெற்றிருப்பதை அவர்கள் அறியப்பண்ணிடுவதும் கூடாத காரியமாகும். இது குறித்து ஒருவேளை அவர்களிடம் பேசப்பட்டால், தங்களால் நன்மையடைந்தவன், தங்களது சத்துருவாகியுள்ளான் என்றும், தங்கள் மீது அவன் பொறாமைக் கொண்டுள்ளான் என்றும், தங்கள் ஸ்தானம், முதலானவைகளை எடுத்துக்கொள்ள விரும்புகின்றான் என்றும் உடனடியாக எண்ணிடுவார்கள். ஆகையால் ஒன்றில் சபையார் உதவிச்செய்தாலொழிய, இல்லாவிடில் கர்த்தருடைய வழிநடத்துதல்
இடைப்பட்டாலொழிய, மற்றப்படி இந்நோயானது கிட்டத்தட்டக் குணப்படுத்தப்பட முடியாது.
[R5957 : page 278]

இத்தகைய பெருமையானது வளருவதைச் சபையார் கவனிக்கும் பட்சத்தில், சபையார் உடனடியாகவும் மற்றும் அன்புடனும் மற்றும் நல்நோக்கங்களுடனும் செயல்படும் வண்ணமாக – ஆவிக்குரிய பெருமை – மேட்டிமை அடைந்துவரும் ஒரு நபரைச் சபையாருக்கென்றுள்ள எந்த ஓர் ஊழியத்திற்கென்றும் தேர்ந்தெடுக்காமல் மாத்திரம் காணப்பட வேண்டும். இப்படிச் செய்ததின் நிமித்தம் அந்நபர் கோபமடைந்தாரெனில், அவருடைய மற்றும் சபையாருடைய நன்மைக்கெனச் சுயநலவாதியான அந்நபர் அமைதியாய் தணிந்திடவும் மற்றும் பொறுமை காக்கவும் என்று அவரை விட்டுவிடுவது அவசியமெனக் கருதப்பட வேண்டும். இப்படியாய்ச் சபையார் உதவி செய்ய தவறிடும் போது, அந்நபருடைய நன்மைக்கென – ஒன்றில் தொழிலில் பின்னடைவுகள் (அ) இழப்புகள் மூலம் அல்லது சரீரப்பிரகாரமான நோய் மூலம் அல்லது அந்நபருக்குச் சிறந்ததாயிருக்குமென்றுள்ள ஏதோ ஒன்றின் மூலம், அந்நபரை கர்த்தர் சிட்சிப்பது தவிர, வேறேதும் வழியில்லை. கர்த்தருடைய பிள்ளையாயும் மற்றும் நீதியில் சரிப்பண்ணப்படுவதற்கு அவசியமான நிலையில் காணப்படுபவர்களாயும் உள்ள ஒவ்வொருவருக்கும், இதைக் கர்த்தர் செய்வார் என்று நாம் நம்பிக்கைக்கொண்டிருக்கிறோம். “கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து (தண்டிப்பார்)” என்று எழுதப்படவில்லையா? (உபாகமம் 32:36).

இந்தப் பாவத்திற்கான ஒரு வேதாகம உதாரணம் – SUB HEADING

இந்தப் பாவம் தொடர்புடையதான அநேக உதாரணங்களை வேதாகமம் கொடுக்கின்றதாய் இருக்கின்றது, எனினும் நாம் மிகவும் பிரசித்திப்பெற்ற ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றோம். பழைய ஏற்பாட்டின் காலங்களில் ஒரு பரிசுத்தமான, கர்த்தருக்குப் பிரியமான, உயர்பண்புகளுள்ள, சுயத்தைப் பலிச் செலுத்தின ஒரு மனுஷன், கர்த்தருடைய தீர்க்கத்தரிசியானவர் காணப்பட்டார். அவர் கர்த்தருக்கும் மற்றும் அவரது ஜனங்களுக்கும் உண்மையாயும், அருமையாயும், நாற்பது வருடக் காலங்கள் ஊழியம் புரிந்தவராவார்; ஆனால் முடிவிலோ அவர் தன்நம்பிக்கை – ஆவிக்குரிய பெருமை எனும் இந்தப் பாவத்துக்குள்ளானார். இவைகள் அனைத்திலும் ஆச்சரியம் என்னவெனில், இந்த மனுஷன் தன் ஊழியத்தினுடைய துவக்கத்தில், “பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்” என்று வேதாகமத்தில் நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதேயாகும் (எண்ணாகமம் 12:3).

ஆம்! மோசேயே அந்தப் பெரும் சிறப்பு மிக்க நபராவார்; இவர் கர்த்தருடைய ஊழியக்காரரெனக் காணப்பட்ட ஆரம்பக் காலங்களில் மிகவும் சாந்த குணமுள்ளவராகவும், மிகவும் தாழ்மையுள்ளவராகவும் காணப்பட்டார்; ஆனால் தனது ஊழியத்தின் முடிவிலோ, கர்த்தருக்கு மகிமையைச் சாற்றுவதற்குப் பதிலாக ஆவிக்குரிய பெருமை அல்லது தன்னம்பிக்கைக்கொண்டதற்கான தண்டனையாக, வாக்களிக்கப்பட்டத் தேசத்திற்கு செல்வதில் தடைப்பண்ணப்பட்டார். அச்சூழ்நிலையினை நாம் நினைவுக்குக் கொண்டுவருகின்றோம்: கர்த்தருடைய விசேஷித்த ஊழியக்காரனாகிய மோசே, கானானை நோக்கின பிரயாணத்தில் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து, செங்கடல் வழியாய் வனாந்தரத்திற்குள் வழிநடத்தினார். கர்த்தருடைய கட்டளையின் பேரில், பிரயாணத்தின்போது, அவர் அநேகம் அற்புதங்களைச் செய்தார். இதில் ஒன்று ஜனங்கள் தண்ணீருக்காய்க் கடும் தாகம் கொண்டபோது, கன்மலையை அடித்த சம்பவமாகும். தேவன் கன்மலையை அடிக்கும்படிக்குக் கட்டளையிட்டார் மற்றும் ஜனங்கள் புத்துணர்வு அடையத்தக்கதாக, கன்மலையினின்று தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது.

வேதாகமத்தின்படி, அந்தக் கன்மலையானது கிறிஸ்துவுக்கு – “யுகங்களுக் கடுத்த கன்மலைக்கு” அடையாளமாய்க் காணப்படுகின்றது (1 கொரிந்தியர் 10:4). கர்த்தருடைய ஏற்பாட்டின்படியே – உத்தம இஸ்ரயேலர்களாகி, எகிப்தினின்று – உலத்தினின்று – கீழ்ப்படிதலுக்குள்ளும், கர்த்தருடன் ஐக்கியத்திற்குள்ளும் – கடந்துவருபவர்களாகிய ஆதாமின் சந்ததியார் யாவருக்கும் ஜீவத்தண்ணீரானது, இயேசுவிடமிருந்து வரத்தக்கதாக “யுகங்களுக்கடுத்த இந்தக் கன்மலையானது” அடிக்கப்பட்டது.

இப்படியாகக் கன்மலையை அடித்து, 40-வருடங்களுக்குப் பிற்பாடு, இஸ்ரயேலர்கள் கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கான காலத்திற்காகக் காத்திருந்து, இங்கும் அங்குமாகப் பிரயாணிக்கையில், அவர்கள் மீண்டுமாக – வறண்டதும், தண்ணீரற்றதுமான இதே இடத்திற்கு வந்தார்கள். ஜனங்கள் மோசேயிடம் கூக்குரலிட்டனர் மற்றும் என்ன செய்யப்பட வேண்டுமென, ஜனங்கள் சார்பாக மோசே கர்த்தரிடத்தில் கூக்குரலிட்டார். மோசே முன்பு அடித்திட்டதான கன்மலையை நோக்கிப் பேச வேண்டும் என்றும், அப்பொழுது தண்ணீர் வரும் என்றும் கர்த்தருடைய பதில் காணப்பட்டது. ஆனால் தகப்பன் பிள்ளைகளைக் கையாளுவதுபோன்று, நாற்பது வருடங்கள் இஸ்ரயேலர்களை வழிநடத்திட்டதான மோசே, இயல்பாகவே அதிகளவில் தன்னம்பிக்கை அடைந்தவராகிவிட்டார். அவரால் இத்தகையதொரு அனுபவத்திற்குள்ளும் கடந்து சென்று, அவரால் பூமியிலேயே சாந்தமுள்ள மனிதராக தொடர்ந்து காணப்பட்டிருக்க முடியும்.

இப்பொழுது மோசே கர்த்தருடைய கட்டளையைப் புறக்கணித்தவராக, கன்மலையினிடத்திற்குச் சென்று, ஜனங்களை நோக்கி “கலகக்காரரே உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமோ?” என்று கூறி, கன்மலையைத் தன் கோலால் இரண்டாம் முறையாக அடித்தார் (எண்ணாகமம் 20:1-12). அந்தோ பரிதாபமான மோசே! இவர் மகிமை அனைத்தையும் கர்த்தருக்குச் சாற்றுவதற்குப் பதிலாக, தனக்கு எடுத்துக்கொண்டவரானார். தான் பண்ணின தவற்றை மோசே உடனடியாக உணர்ந்து கொண்டார். இதுவே அவர் செய்திட்ட ஒரே தவறு என்றுகூடச் சொல்லப்படலாம்; எனினும் இதினிமித்தம் அவர் கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கான சிலாக்கியத்தின் விஷயத்தில், கர்த்தரால் மறுக்கப்பட்டார் மற்றும் பிரவேசிப்பதற்குப் பதிலாக யோர்தான் நதியின் ஒரு பக்கத்திலிருந்து தேசத்தைப் பார்த்திடுவதற்கும், அங்கேயே அவரை அடக்கம்பண்ணிடுவதற்கும் மாத்திரமே கர்த்தர் அனுமதி வழங்கினார்.

ஆவிக்குரிய பெருமையும், தன்னம்பிக்கையும், கர்த்தருடைய பார்வையில் மிகவும் வெறுக்கத்தக்கதாய் இருக்கின்றது என்று இந்த ஓர் உதாரணத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம் அல்லவா? நம்முடைய எச்சரிப்பிற்காக எழுதப்பட்டுள்ளதான இந்த மாபெரும் பாடத்தினின்று வேறு ஏதேனும் கருத்துகளை நாம் அடையப்பெறலாமா?

ஆறுதலான ஒரு வார்த்தை – SUB HEADING

மோசேயைப்பார்க்கிலும் தாங்கள் மோசமாய் நடந்துள்ளனர் என்றோ அல்லது அதிகம் தன்னம்பிக்கையுடன் தாங்கள் இருந்துள்ளனர் என்றோ அல்லது கர்த்தரைக் கனப்படுத்தும் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையற்றவர்களாக தாங்கள் இருந்துள்ளனர் என்றோ அல்லது அதிகமாய் ஆவிக்குரிய பெருமையுடன் தாங்கள் இருந்துள்ளனர் என்றோ வருந்துகின்றவர்களுக்கு ஆறுதலாக, இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் தண்டனையானது கடுமையாய் இருப்பதற்கான காரணம், அது நிழலின் ஒரு பாகமாய்க் காணப்படுவதினாலேயே ஆகும் என்பதைக் கவனத்தில் கொண்டுவருகின்றோம். கன்மலையை முதல்விசை அடிப்பது என்பது, நமது கர்த்தருடையசிலுவை மரணத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றபடியால், கன்மலையை இரண்டாம்விசை அடிப்பது என்பது, எபிரெயர் 6:6-ஆம் வசனத்தில் பரிசுத்த பவுலினால் விவரிக்கப்பட்டுள்ளது போன்று, தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைந்து, அவமானப்படுத்துகிறதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. (இரண்டாம் விசை) கன்மலை அடிக்கப்படுதலானது, இயேசுவையும், அவரது போதனைகளையும், அவரது நோக்கங்களையும் வெளிப்படையாய் மறுதலிப்பதை அடையாளப்படுத்துகின்றபடியால், யோர்தானைக் கடந்து கானானுக்குச் செல்வதில் மோசே தடைப் பண்ணப்பட்டது என்பது இரண்டாம் மரணத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. மோசே ஒருபோதும் கானானுக்கு வரமாட்டார் என்றோ, அவர் இரண்டாம் மரணம் மரித்துவிட்டார் என்றோ நாம் எண்ணிடாமல், மாறாக இந்த ஒரு நிழலானது, அவரது அனுபவங்களில் காண்பிக்க மாத்திரமேபட்டுள்ளது என்றே எண்ணிட வேண்டும்.

ஆவிக்குரிய பெருமையை வெளிப்படுத்தினவர்களாகவும், கர்த்தருடைய நாமத்திலும், சபையின் நாமத்திலும் செய்யாமல், தங்களுடைய நாமத்தினால் காரியங்களைச் செய்பவர்களாகவும் காணப்படும் சகோதர்கள், மரணத்திற்கேதுவான பாவத்தைச் செய்துள்ளதாக நாம் எண்ணியும் விடக்கூடாது. எனினும் ஆவிக்குரிய பெருமையினால் பயங்கரமான அபாயம் ஏற்படும் என்றும், அதிலே தொடர்ந்து காணப்படும் பட்சத்தில், நிச்சயமாய் இரண்டாம் மரணம் நேரிடும் என்றும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதை உணர்கையில், நம்மில் காணப்படும் அதற்குரிய ஒவ்வொரு அறிகுறியை அழித்துப்போடுவதற்கு மாத்திரமல்லாமல், அந்நோய் நம்மைத் தொற்றாதபடிக்கு அல்லது ஏதேனும் விதத்தில் நாம் அதன் ஆதிக்கத்தின்/தாக்கத்தின் கீழ் வந்துவிடாதபடிக்கு அல்லது அதன் அறிகுறிகள் எதையேனும் பெற்றுவிடாதபடிக்கு ஜாக்கிரதையாய் இருப்பதற்கும் நாம் எவ்வளவு கவனத்துடனும், எவ்வளவு வைராக்கியத்துடனும் காணப்படுவோம்!

ஆவிக்குறிய பெருமை – தடுப்பு மற்றும் குணப்படுத்துதலுக்கான நடவடிக்கைகள் – SUB HEADING

இந்நோய்க்கு ஆளாகிவிட்டால், இதற்கான சிகிச்சையின் விஷயத்திலுள்ள சிரமத்தை நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளோம். சிரமத்தின் பிரதான அம்சம் – இந்நோய் மனசாட்சியை அழிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதேயாகும். மனமானது – பொன்னான பிரமாணத்தினுடைய எளிமையான கொள்கைகளுக்கும், சகோதரருக்கான நமது கர்த்தருடைய புதிய கற்பனையினுடைய, இன்னும் மேலான பிரமாணத்திற்கும் – ஏறக்குறைய மந்தமாகிவிடுகின்றது. சபையாருக்கான ஊழியக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலோ அல்லது சபை கூடுகைகளை ஒழுங்குப்படுத்தும் விஷயத்திலோ சபையாரைக் கட்டாயப்படுத்துவதற்கான முயற்சிகள் ஒவ்வொன்றிலும், பொன்னான பிரமாணம் புறக்கணிக்கப்படும் காரியம் வெளிப்படுகின்றது.

கர்த்தருடைய வார்த்தைகளிலுள்ள கட்டளைகள் தெரிந்தவைகளாயிருக்க, சபையாரிடமே அதிகாரம் உள்ளது என்பது அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருக்க, இதை மூப்பர் ஒருவர் மாற்றிடுவதற்கோ அல்லது வேறு மாதிரியாக்கிடுவதற்கோ முற்படுகையில், அவன் தனக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்றானோ, அதை அவன் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பது போன்று காணப்படும். சபையாரில் ஒருவனாக, அவன் எந்த ஒரு காரியத்திலும் கர்த்தர் சித்தம் குறித்த தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதற்கு உரிமைப் பெற்றிருக்கின்றான். அவன் தனது கணிப்பை வெளிப்படுத்துவதற்கு உரிமையுடையவனாய் இருக்கின்றான். ஆனால் மற்றவர்கள் தங்கள் கணிப்பை வெளிப்படுத்துவதைத் தடுத்திடுவதற்கு அவனுக்கு எந்த உரிமையும் இல்லை மற்றும் இப்படிப்பட்டதான (அவனது) ஒவ்வொரு தலையிடுதலானது, பொன்னான பிரமாணத்தை மீறுவதாகவும், அன்பின் பிரமாணத்தை மீறுவதாகவும் மற்றும் தேவனைக் கனப்படுத்திட வேண்டும் என்றுள்ள முதலாம் கற்பனையை மீறுவதாகவும் இருக்கும்; ஏனெனில் இம்மாதிரியான காரியங்களுக்காக அருளப்பட்டுள்ளதான தெய்வீக ஒழுங்குமுறைகளைப் புறந்தள்ளுவதை, அவனது தலையிடுதலானது குறிக்கின்றதாயிருக்கும்.

ஆனால் மூப்பர் ஒருவர் பொன்னான பிரமாணத்தினுடைய கொள்கை யினை எதிர்ப்பவராகக் காணப்பட்டு சபையார் மீது ஆதிக்கம் செலுத்தவும், தன் இஷ்டப்படி, தன் விருப்பத்தின்படி சபையார் செய்யத்தக்கதாக, அவர்களை வசப்படுத்திடவும் அல்லது கட்டாயப்படுத்திடவும் முயற்சிக்கையில், அவன் தன் மனதையே சீரழிக்கின்றவனாயிருப்பான். அவனது மனசாட்சி மழுங்கிப்போய் விடுகின்றது. தன்னிடத்திலுள்ள தவற்றைத் தெளிவாய்க் கண்ட பிற்பாடும், அதைத் திருத்திடுவதற்குரிய கொள்கைகளைப் புறக்கணிப்பதன் மூலம் தன் மனசாட்சியைத் திரும்பத் திரும்ப மீறுகிறவன், தன் மனசாட்சியைப் படிப்படியாய் அழித்துப்போடுகிறவனாய் இருப்பான்.
[R5958 : page 279]

ஒரு விஷயத்திலுள்ள உண்மை அல்லது போலியை, நீதி அல்லது அநீதியை, சரி அல்லது தவறை உறுதிப்படுத்திக்கொள்வதற்கென்று நம்முடைய பகுத்துணர்தலுக்கு ஒப்புவிக்கப்படும் பல்வேறு காரியங்களின் விஷயத்தில் பகுத்துணர்வதற்கு உதவியாக மனசாட்சியே அளவுகோலாகக் காணப்படுகின்றது. இந்த அளவுகோலானது மிகவும் நயமற்றதாகவோ அல்லது மிகவும் நேர்த்தியானதாகவோ காணப்படலாம். இது மிகவும் நுணுக்கமாய் வேற்றுமை கண்டறியும் தன்மையுடையதாகவோ அல்லது காரியங்களை நயமற்றும், பக்குவம் இல்லாமலும் மாத்திரம் பார்க்கக்கூடியதாகவோ காணப்படலாம். கிறிஸ்தவன் ஒருவன் நீண்டகாலமாய்க் கிறிஸ்துவினுடைய பள்ளிக்கூடத்தில் காணப்படுவானானால், அவன் மிகவும் உணர்வுமிக்க மனசாட்சியை உடையவனாய் இருக்க வேண்டும் மற்றும் ஜீவியத்தின் காரியங்கள் தொடர்புடையதாக எழும்பும் கேள்விகள் அனைத்தின் விஷயத்திலும் சமநிலையை அடையத்தக்கதாக தேவனுடைய வார்த்தைகளிலிருந்து அவன் (சமநிலை அடைவதற்கான) எடை கற்களை (weights) எடுக்க முடிகிறவனாகவும் மற்றும் ஜீவியத்தின் காரியங்களிலுள்ள சரி அல்லது தவறை, இவைகள் எந்தளவுக்குக் கர்த்தருக்குப் பிரியமாக அல்லது பிரியமற்றதாகக் காணப்படும் என்பதை மிகவும் துல்லியமாய்த் தீர்மானிக்க முடிகிறவனாகவும் காணப்பட வேண்டும். இந்த அளவுகோலானது வலுவற்றதாய் இருப்பது என்பது, சகல பாவங்களின் விஷயத்திலும் மகா அபாயகரமானதாகும் மற்றும் இப்படியாகவே விசேஷமாக ஆவிக்குரிய பெருமை எனும் பாவத்தின் விஷயத்திலும் காணப்படும் என்று நமக்குத் தோன்றுகின்றது. இந்த அளவுகோலானது சரிப்படுத்தப்படாதது வரையிலும், எதுவும் செய்யப்பட முடியாது.

கர்த்தருடைய ஜனங்கள் தங்கள் மனசாட்சியை முற்றிலுமாக நீதிக்குட்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றும், தொழில் விஷயத்திலோ அல்லது ஒரு விவாதத்தின் விஷயத்திலோ அல்லது சபையின் தேர்தல் விஷயத்திலோ – ஒரு சகோதரனையோ அல்லது வேறொருவரையோ பயன்படுத்திடுவதற்கு விருப்பமற்று இருக்க வேண்டும் என்றும் எண்ணிடுவது எத்துணை முக்கியமானதாகும்!

நீதியினின்றுள்ள தன் சார்பிலான சிறிதளவு மீறுதலுக்கேதுவான சிந்தனையானது, உண்மையான ஒவ்வொரு தேவபிள்ளையினுடைய இருதயத்திலும், தலையிலும் பின்வருமாறு அபாய அறிவிப்பு மணியொலியை உரக்கத் தொனிக்கச் செய்திட வேண்டும்: “நீதிக்கு இசைவாகக் காணப்படுவேன் என்று உடன்பட்டுள்ளவனாகிய நான் அநீதிக்கு இசைவாயாகியுள்ளேனோ? என்னுடைய நடக்கையிலுள்ள அநீதியான காரியம் எதையேனும் நான் கண்டுகொள்ளாமல் இருக்கின்றேனா? என் மனசாட்சியினை அசுசிப்படுத்துகிறவனாயிருந்து, அதனால் ஏற்படும் பயங்கரமான விளைவுகள் அனைத்திற்கும் நான் பொறுப்பாளியாகிவிடுவேனா?”

ஒரு தவறான போக்கினைச் சரிச்செய்து கொள்வது என்பது, இது நித்திய மரணம் அல்லது ஜீவன் சம்பந்தப்பட்டிருப்பதால், இதற்கு ஏற்ப ஜாக்கிரதையுடன் இருதயங்களிலும், மனங்களிலும் நீதியின் கொள்கைகளை மறுபடியும் நிறுவுவதைக் குறிக்கின்றதாய் இருக்கும். நீதியானது நம்முடைய மனங்களில் மீண்டுமாக நிறுவப்பட்டிருக்கும்போது, அது நம்முடைய வார்த்தைகளையும், கிரியைகளையும் கட்டுப்படுத்துகின்றதாயிருக்கும். பின்னர்ப் படிப்படியாக தவறு செய்தவர், தான் எவ்வளவு கீழ்த்தரமாய்க் கொள்கைகளை மீறியுள்ளார் என்பதையும், இராஜ்யம் பற்றின தனது எதிர்க்கால நம்பிக்கைகளை எப்படி ஆவிக்குரிய பெருமையானது கிட்டத்தட்ட அழித்துள்ளது என்பதையும் காணத்துவங்குவார். இத்தகையவர் நிச்சயமாய் இருதயத்தில் மனஸ்தாபப்பட்டு, இனிவரும் தருணங்களுக்கென முழுமையானத் தீர்மானங்களை எடுப்பவராய் இருப்பார்.

சுய பரிசோதனைக்கான மிகுந்த அவசியம் – SUB HEADING

இந்த ஆவிக்குரிய பெருமையின் நயவஞ்சகமான தன்மைகளையும், தீயத் தாக்கங்களையும் / ஆதிக்கங்களையும் அறிந்திருக்கிற நாம், இதிலிருந்து நம்மை நாம் எப்படிப் பாதுகாத்துக்கொள்வது? நாம் நம்மைத் தேவனுடைய அன்பில்தான் காத்துக்கொண்டிருக்கின்றோம் என்றும், ஆவிக்குரிய பெருமையினிடத்திற்குத் திசைமாறிடவில்லை என்றும் எப்படி நாம் அறிந்துகொள்வது?

நம்முடைய ஆலோசனை, நாம் ஏற்கெனவே வாட்ச் டவர் வெளியீட்டில் குறிப்பிட்டுள்ள அதே ஆலோசனையாகவே உள்ளது: கர்த்தருடைய ஜனங்கள் ஒவ்வொரு நாளினுடைய துவக்கத்திலும் அவரிடத்தில் சென்று, தெய்வீக ஞானத்தையும், அவரது மேற்பார்வையையும் கேட்டுக்கொள்வதும் மற்றும் நாள்முழுவதும் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்திற்கேற்ப ஜீவித்திட நாடிடுவதும் மாத்திரம் போதாது; இதனோடுகூட நாளினுடைய இறுதியில், கர்த்தருக்கென்றுள்ள நமது அர்ப்பணிப்பின் வாக்குறுதிக்கேற்ப அன்றைய நாளில் செய்யப்பட்டுள்ள விஷயங்கள் குறித்தும், செய்ய வேண்டிய, ஆனால் நம்மால் செய்யாமல் விடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்தும், செய்யக்கூடாதவைகளாயிருக்க ஆனால் நம்மால் செய்யப்பட்டுள்ள விஷயங்கள் குறித்தும் விசேஷித்த சுயப்பரிசோதனை செய்திடுவதற்கு நாம் பரிந்துரைத்தோம். இப்படியாக ஒவ்வொரு இரவிலும் கர்த்தருடன் கணக்குகளையும், கடன்களையும் நாம் பார்ப்பது தொடரும் பட்சத்தில், அதுவும் இவைகள் உத்தமமாய்ச் செய்யப்படும் பட்சத்தில், மாறுபாடற்றதாயும், சீராயும் உள்ள மனச்சாட்சியினால் செய்யப்படும் பட்சத்தில், கர்த்தருடைய வார்த்தைகளுக்கு இசைவாய்ச் செயல்படும் இத்தகையவர்கள், தங்களைத் தேவனுடைய அன்பிலே காத்துக்கொள்பவர்களாய் இருப்பார்கள் என்று நாம் நிச்சயமாய் எண்ணலாம். இவர்கள் கிருபையில் வளருகிறவர்களாகவும், அறிவில் வளருகிறவர்களாகவும், அன்பில் வளருகிறவர்களாகவும் இருப்பார்கள் மற்றும் “பொல்லாங்கன் அவர்களைத் தொடான்.”

மற்றவர்களுடைய வார்த்தைகளையும், கிரியைகளையும் கண்ணோக்கும் விஷயத்தில் மிகவும் கடுமையற்றுக் காணப்பட்டு, அவர்களிடத்தில் நல்நோக்கங்கள் வெளிப்படும் பட்சத்தில் அதை மாத்திரமே அவர்களிடத்தில் குறிப்பிடுகிறவர்களாயிருக்க, நம்முடைய சொந்த இருதயங்களையும், நம்முடைய சொந்த நோக்கங்களையும் நம்முடைய முழுப்பெலத்துடன் நாம் ஆராய்ந்திட வேண்டும் என்பதை நாம் மறவாமல் இருப்போமாக. ஏன் நான் இதைச் செய்தேன் அல்லது அதைச் செய்யவில்லை? ஏன் இதை நான் இன்னவிதத்தில் செய்தேன்? ஏன் நான் அப்படியானதொரு தொனியில் பேசினேன்? என்று நம்மிடமே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும். இம்மாதிரியாகச் சிந்தைகளையும், வார்த்தை களையும், கிரியைகளையும் கவனமாய்ச் சுயப்பரிசோதனைச் செய்வதும், நிதானிப்பதும், கர்த்தருக்கு இசைவுடன் காணப்படுவதில் விருப்பமற்றிருக்கும் ஒருவருக்கு மிகவும் பிரியமற்றதாயிருக்கும். ஆனால் கர்த்தருடன் உடன்படிக்கைப் பண்ணியுள்ளவரும், அந்த உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவராகக் காணப்படுபவருமானவருக்கு இந்த வழிமுறையானது (சுயப்பரிசோதனையானது) – மாபெரும் ஆசீர்வாதமானதாகவும், அத்தருணங்களில் அவர்களது இருதயங்களை ஆறுதல்பண்ணுகிறதாகவும், எதிர்க்காலத்தில் அவர்களைப் பலப்படுத்து கிறதாகவும் மற்றும் கர்த்தருடைய வழிநடத்துதலோடுகூடப் பரலோக இராஜ்யத்தின் ஸ்தானங்களுக்காக அவர்களைப் பொருத்தி, ஆயத்தப்படுத்துவதற்கு ஏதுவானதாகவும் காணப்படும்.