R748 (page 1)
லூக்கா 12:56-59
பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக கொஞ்சம் வருவோம். அப்பொழுது இயேசு, பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடன் காணப்பட்டார்; இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாகக் காணப்பட்டார்கள்; ஆண்டவர் முப்பது வயதைத் தாண்டினவராக இருந்தார். அப்போஸ்தலர்களுக்குக் கல்வியறிவு இருந்ததில்லை, மற்றும் இவர்களில் பெரும்பாலானோர் சாதாரணமான மீனவர்களாகவே இருந்தனர். இவர்கள், “”படிப்பறியாதவர்களாகவும், பேதைமையுள்ளவர்களாகவும்” இருந்தாலுங்கூட, இவர்கள் போதனையின் மீது நம்பிக்கையும், போதிப்பதற்கான ஆற்றலையும் கொண்டிருந்தக் காரியம், இவர்களை மனுஷர்கள் மத்தியில் விசேஷித்தவர்களாய் காட்டியது; மேலும் இவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் இவர்கள், “”இயேசுவோடு இருந்தவர்கள் என்று அறியப்பெற்றிருந்தனர்,” காரணம் இவர்களுடைய ஆண்டவராகிய இயேசு ஒருபோதும் கல்லாதவராய் இருந்த போதிலும் அவர், “”வேத எழுத்துக்களில் புலமை மிக்கவராக” காணப்பட்டார் (அப்போஸ்தலர் 4:13; யோவான் 7:15).
எனினும் இவர்கள் இராணுவ ஆளுநராகிய பிலாத்துவின் கண்களுக்கு முன்பாகவும், பிரதான ஆசாரியனுடைய கண்களுக்கு முன்பாகவும், பரிசேயர், வேதபாரகருடைய கண்களுக்கு முன்பாகவும், அந்நாளில் சட்டப்படியான பரிசுத்தத்திற்கு அப்போஸ்தலர்களெனக் காணப்பட்ட நியாயசாஸ்திரிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், முக்கியத்துவமற்ற சிறு கூட்டத்தாராகவே காணப்பட்டனர். “”காலம் நிறைவேறியுள்ளது, தேவனுடைய இராஜ்யம் சமீபித்துள்ளது” என்று கூறி, இயேசுவே, யூதர்களுக்கான இராஜா என்று அறிவிப்பதற்கெனத் தெரிந்துக்கொள்ளப்பட்ட வகுப்பாரானவர்கள், ஈர்க்கக்கூடியவர்களும் அல்ல, இன்னுமாக நீண்டகாலமாய் மேசியாவை எதிர்ப்பார்த்திருந்த வைராக்கியமுள்ள யூதர்களுடைய எதிர்ப்பார்ப்பின்படியும் காணப்படவில்லை. மேலும் யூதர்களுடைய மாபெரும் மதபோதகர்கள் போன்று இல்லாமல், முற்றிலும் மாறானவர்களாக இருந்தபடியால், யூதர்கள், இயேசுவை மேசியா என்று அடையாளம் கண்டுகொள்ளத் தவறிவிட்டனர் (மாற்கு 1:15).
மேசியாவின் வருகை தொடர்புடைய விஷயத்தில், கர்த்தருடைய தீர்க்கத்தரிசிகளினால் நீண்ட காலத்திற்கு முன்பாக உரைக்கப்பட்டிருந்த காரியங்களுக்கும், இயேசுவின் போதனைகள் மற்றும் அற்புதங்களுக்கும் இடையே இருந்த ஒற்றுமையே, இஸ்ரயேலர்களுக்கு இயேசுதான் நீண்டகாலமாய் எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த இராஜா என்பதற்கான ஒரே நிரூபணமாய் இருந்து; இந்த நிரூபணமானது, “”அதிக உறுதியான தீர்க்கத்தரிசனங்களுக்கு” ஜாக்கிரதையாய்க்கவனித்து இருப்பவர்களுக்கும், எதை எதிர்ப்பார்க்கலாம் என்பதை அறிந்திருப்பவர்களுக்கும், இயேசு மறுதலிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படுவார் என்பது தொடர்பாக உரைக்கப்பட்ட தீர்க்கத்தரிசனங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்வதற்கு மாத்திரமல்லாமல், தாழ்மையான மீனவர்கள் சூழ, சாந்தமாய் வருபவரை ஏற்றுக்கொள்வதற்கு, மனத்தாழ்மையுடன் ஆயத்தமாய் இருப்பவர்களுக்கும் மாத்திரமே நிரூபணமாய் இருக்கும்.
இயேசுவுக்கு ஞானஸ்நானம் வழங்கினவரும், அவர்மேல் தேவனுடைய பரிசுத்த ஆவி வந்து அபிஷேகிப்பதையும் பார்த்து, சாட்சியளித்தவருமாகிய, இயேசுவினுடைய உறவினனாகிய யோவான் ஸ்நானன் கூட விநோதமாய்க் காரியங்கள் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு மிகவும் குழப்பமடைந்தார். இயேசு அபிஷேகம் பெற்றுக்கொண்டவுடன், அவர் தம்மை வல்லமையுடனும், அதிகாரத்துடனும் வெளிப்படையாய் அறிவித்து, தம்முடன் இருப்பவர்களுக்குக் கனத்தையும், மதிப்பையும் கொண்டு வருவார் என்று யோவான் ஸ்நானன் எண்ணியிருக்கக் கூடும். ஆனால் இப்படியாகவெல்லாம் இல்லாமல், இயேசு அமைதியாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்; இன்னுமாக யோவான் சிறையில் போடப்பட்டிருந்த போது, இயேசு இராஜா போல் தம்முடைய வல்லமையைச் செயல்படுத்த முற்படவுமில்லை. யோவான் எதிர்ப்பார்த்தவைகளிலிருந்து, மிகவும் வேறுபட்ட விதத்தில் காரியங்கள் நடந்து கொண்டிருந்தபடியால், இயேசுதான் மேசியா என்ற யோவானுடைய விசுவாசங்கூடத் தளர ஆரம்பித்தது. இரட்சகராக இஸ்ரயேலை ஆசீர்வதிக்கவும், இஸ்ரயேல் மூலம் சகல ஜாதிகளையும் ஆசீர்வதிக்கவுமுள்ள மேசியாவாக . . . “”வருகிறவர் நீர்தானா (என்னைப் போன்று நீர் ஒரு முன்னோடி மாத்திரமா) அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா?” என்று யோவான், இயேசுவினிடத்தில் கேட்கும்படிச் செய்தி அனுப்புவித்தார்.
யோவானுக்கு, இயேசு கொடுத்தப் பதிலைக் கவனமாய்க் கவனிக்கவும்; கேள்விப்பட்டுக் கொண்டிருக்கும் காரியங்களை, யோவானுக்கு இயேசு நினைப்பூட்டினார்; சம்பவங்களை வைத்துக் காலங்களை யோவான் அறிந்துக்கொள்ள இயேசு எதிர்ப்பார்த்தார். “”வருகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்” (மத்தேயு 11:3-6).
மேசியாவைக்குறித்து வாக்களிக்கப்பட்டுள்ள காரியங்களைக் காட்டிலும், மேசியா அப்போது வந்திருக்கின்றார் என்பதற்கு நிரூபணமாக, கேள்விப்படும் சம்பவங்கள் இருப்பது என்பது ஒன்றும் குறைவானதல்ல. இயேசுவின் அற்புதங்கள் கொஞ்சம் இரகசியமாகவே செய்யப்பட்டது என்பதையும், அதே சமயத்தில் பெரிய பரப்பளவிலான இடங்களில் செய்யப்பட்டதினால், அந்த இடத்தில் காணப்படும் பெரும்பான்மையான யூதர்கள் அநேகமாக சொஸ்தப்படுத்தப்படும் நபர்களை ஒருபோதும் கண்டதில்லை என்பதையும், நாம் மறந்துவிடக் கூடாது. அற்புதங்கள் பற்றின விவரங்களைப் பரப்புவதற்கு, அவர்களுக்கு அன்று அச்சகங்களும், பத்திரிக்கை நிருபர்களும் இருக்கவில்லை.
அங்கிருந்த கல்வியறிவுயடைவர்கள், தானியேல் தீர்க்கத்தரிசனத்தை வைத்து, அந்த வேளை நிறைவேறியுள்ளது என்பதை அறிந்திருப்பார்கள் (தானியேல் 9:24-27; மாற்கு 1:15). ஆனாலும் அநேகமான ஜனங்களுக்கு இந்த நிரூபணங்கள் வேளைகளுக்கான அடையாளங்களாக மாத்திரமே இருந்தன. ஆனால் இவர்கள் மனுஷருடைய பாரம்பரியங்களினால் குருடாக்கப்பட்டபடியால், இவர்கள் உணர்ந்துக்கொள்ளவில்லை. இவர்கள் மனிதர்களைப் பின்பற்றுகிறவர்களாக ஆனபடியினால், தேவனுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு இல்லாமல் போயிற்று; ஆகையால் ஜனங்களும், தலைவர்களும் குருடர்களாய் இருந்தனர். குருடர்கள், குருடர்களைப் பின்தொடர்ந்து போய், இருவரும் இடறிப்போனார்கள்; இவ்வாறாக இஸ்ரயேல் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், “”கபடற்ற உத்தம இஸ்ரயேலர்களாகிய” தெரிந்தெடுக்கப்பட்ட வகுப்பாரே ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டனர்.
இப்பொழுது நாம் என்ன காண்கின்றோம்? மேசியா மீண்டுமாக வந்திருக்கின்றார்; அவருடைய இரண்டாம் வருகைக்கான வேளை நிறைவேறியுள்ளது; ஆவிக்குரிய ஓர் ஜீவியாக, இயேசு வல்லமையில் வந்திருந்து, உலகத்தை அதாவது யாக்கோபின் வீட்டாரையும், பூமியின் குடிகள் அனைத்தையும் நியாயந்தீர்க்கவும், சுத்திகரிக்கவும், சொஸ்தப்படுத்தவும், ஆசீர்வதிக்கவும் எனத் தம்முடைய சரீரத்தைத் தம்முடைய நிலைமைக்கு உயர்த்தவிருக்கின்றார்.
சாட்சிகள் / நிரூபணங்கள் என்ன? நிரூபணங்கள் திரும்பத் திரும்ப, அதிகமாக இப்பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு வருகின்றது. கர்த்தருடைய நாள் (கிறிஸ்துவின் வந்திருத்தல் வேளை) ஆபத்துக் காலமாய் இருக்கும் என்றும், அந்நாளில் (பூமிக்குரிய அரசாங்கமும், அதிகாரங்களுக்கும் மாற்றப்படும்) வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும் என்றும் தீர்க்கத்தரிசிகளின் சாட்சிக் காணப்படுகின்றது என்பதை நாம் காண்பித்தோம் (மத்தேயு 24:29; எபிரெயர் 12:27,28; தானியேல் 2:44). இப்படியாக நடைபெறும் போது, இப்பொழுது அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருப்பவரின் நிமித்தமாக, பூமியின் குடிகள் அனைவரையும் ஆசீர்வதிப்பதற்கு வந்திருப்பவர், ஜனங்களுக்குத் தடையாகவும், ஜனங்களை ஒடுக்கியும் (அ) குருடாக்கியும் வைத்துள்ள சகல தீமையான அமைப்புகளை அசைத்துப் போடுபவர் நிமித்தமாக பூமியின் சகல கோத்திரங்களும் துக்கிக்கும். உலகில் மகாபெரியவர்களாய் இருந்தவர்கள், பூமியின் மீது வந்துக்கொண்டிருக்கும் காரியங்களைக் காண்கையில் அஞ்சுவார்கள். இவர்கள் ஜனங்கள் மத்தியில், சுதந்தரத்தின் ஆவி கிரியைச் செய்வதைக் காண்பார்கள்; மேலும் இந்த ஆவியானது ஜனங்களை வெறித்தனத்திற்குள்ளாக்கி, படுகொலைக்கான போராட்டத்திற்கு நேராக வழிநடத்தும் என்பதையும் இவர்கள் காண்கின்றனர். இன்னுமாக வரவிருக்கின்ற உபத்திரவங்களில், உலகத்தின் ஐசுவரியவான்கள் வெகுவாய்ப் பாடுபடுவார்கள் என்பதாக வேதவாக்கியங்களில் காணப்படுகின்றது (யாக்கோபு 5:1-4). இப்படியாகவே இன்று ஐசுவரியவான்களுக்கு எதிராகவே, மனநிறைவு அடையாதவர்களின் இலட்சியங்களும், அச்சுறுத்தல்களும் காணப்படுகின்றது. இப்படியான காரியங்கள் நம்மைச் சுற்றிலும் நடைபெறுவதை நாம் காண்கின்றோம்; இவைகள் எல்லாம், நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் காலங்களுக்கான அடையாளங்களாய் இருக்கின்றது அல்லவா?
11 பத்திகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
நம்முடைய நாட்களுக்கான அடையாளங்களைக்குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? வானத்தின் தோற்றத்தை நிதானிக்கத் தெரிந்திருக்கும் உங்களால், எப்படி இந்த வேளையை நிதானிக்க முடியவில்லை? முதலாம் வருகையில் இருந்தவைகளைக் காட்டிலும், இரண்டாம் வந்திருத்தலுக்கான காரியங்கள் மிகத் தெளிவாய் இருக்கின்றதல்லவா? நாம் கர்த்தருடைய பிரசன்னத்தின்/வந்திருத்தலின் நாட்களில் காணப்படுகின்றோம் என்பவைகளுக்கு இவைகள் எல்லாம் திருப்திகரமான சாட்சியங்களாய் இருக்கின்றதல்லவா?