R5453 – ஒன்பது பேர் எங்கே?

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5453 (page 139)

ஒன்பது பேர் எங்கே?

WHERE ARE THE NINE?

லூக்கா 17:11-19

“”தேவனை மகிமைப்படுத்துவதற்கு இந்த அந்நியனே ஒழிய, மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே.” (வசனம் 18)

இன்றைய நம்முடைய பாடத்தின் சாராம்சமானது நன்றியறிதல் ஆகும். இது ஒரு மிக நியாயமான குணலட்சணமாகவும், விலங்கினிடத்திலும் கூடக் காணப்படுகின்றதாகவும் இருக்கின்றது. இந்த ஒரு பண்பில்லாமல், ஒரு பரிபூரண மனுஷனோ (அ) தேவதூதனோ, தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது, கற்பனை செய்துபார்க்க முடியாத ஒன்றாக இருக்கும். நம்முடைய நன்றியறிதலின் அளவுக்குத்தக்கதாகவே, நாமும் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றோம். இந்த ஒரு நன்றியறிதலானது, தெய்வீகப் பிரமாணங்களையும், ஒழுங்குகளையும் நாம் புரிந்துக்கொண்டோமோ (அ) இல்லையோ, இது தெய்வீகப் பிரமணாங்களுக்கும், ஒழுங்குகளுக்கும் நாம் கீழ்ப்படியத்கக்கதாக நம்மை வழிநடத்தும். நன்றியறிதலானது, தேவனுக்கான ஊழியத்தில் சுயத்தைப் பலிச் செலுத்தும் பிரயாசங்களை எடுப்பதற்கு நமக்கு உதவி செய்திடும்; மேலும் இயங்கிக்கொண்டிருக்கும் தெய்வீக ஏற்பாட்டின்படி இந்த நன்றியறிதலானது, அதற்கே உரியதான ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும். [R5454 : page 139]

இயேசு சமாரியா மற்றும் கலிலேயா வழியாக எருசலேமுக்கு வந்தார். இதுவே அவர் மரிப்பதற்கு முன்னதாக, எருசலேமை நோக்கி செய்திட்ட அவரது கடைசி பிரயாணமாக இருக்கின்றது என அனுமானிக்கவும் படுகின்றது. அவருடைய கீர்த்தி எங்கும் பரவியிருந்தது. வழியருகே உட்கார்ந்து இருந்த பத்துக் குஷ்டரோகிகளும், நாசரேத்தூரின் இயேசு அவ்வழியாய்க் கடந்துப் போய்க் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டார்கள். ஊடனடியாகத் தங்களுடைய நோயின் காரணமாக, தங்களுக்கு இருக்கும் தொண்டைக் கட்டின குரலில், முடிந்தமட்டும் இயேசுவை உரக்கக் கூப்பிட்டார்கள். பொதுவாக இவர்கள் பணத்திற்காகவே சத்தமிடுவார்கள். ஆனால் இத்தருணத்திலோ, “”ஐயரே எங்களுக்கு இரங்கும்!” என்று சத்தமிட்டார்கள்.

குஷ்டரோகிகள் என்பவர்கள் பரிதாபப்படுவதற்குரிய ஒரு வகுப்பாராகக் காணப்படுகின்றனர். இவர்களுடைய இந்த நோயானது, நீண்ட காலமாகச் சொஸ்தப்படுத்த முடியாத ஒன்றாக இருப்பதினால், வேதாகமத்தில் இந்த நோயானது பாவத்திற்கு அடையாளமாய் இருக்கின்றது. இந்த நோயானது, இரத்தத்தை மாசுப்படுத்துகிற ஒன்றாகும். மூட்டுகள் முறுக்கி, இணைந்து போய், அழுகி, தோல் போல் உரிந்து விழுந்துவிடும். நம்முடைய இந்தப் பாடத்தின் சம்பவம் நடைப்பெற்றதான காலப்பகுதியில் காணப்பட்ட ஒழுங்குகளின்படி, குஷட்ரோகிகள் பட்டணத்திற்குள் வர அனுமதிக்கப்படுவதில்லை; மீறினால் பிரம்பினால் முப்பத்தொன்பது முறை அடிக்கப்படுவது தண்டனையாக இருந்தது. இவர்கள் ஜீவிப்பதற்கென எவ்வேலையும் செய்யமுடியாது; மற்றும் இவர்கள் தங்களுடைய நண்பர்கள் (அ) பொது ஜனங்களின் தருமத்தையே எப்போதும் சார்ந்தவர்களாகக் காணப்பட்டனர். நோய் தொற்றிவிடும் என்ற அச்சத்தினால் இவர்கள் நூற்றைம்பது அடிக்கு தள்ளியே, ஒருவரை அணுக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் செத்து, செத்து உயிர்வாழ்கின்றவர்களாகக் காணப்பட்டனர்.

இச்சம்பவத்தில் இடம்பெறும் பத்துக் குஷ்டரோகிகளானவர்கள், யூதர்கள், சமாரியர்கள் என்ற இனவேற்றுமையைப் பொருட்படுத்தாமல், தங்கள் அனைவருக்குமே குஷ்டரோகம் இருப்பதினால், ஒன்றுகூடி ஜீவித்தவர்களாய்க் காணப்பட்டார்கள். இவர்களுடைய கூக்குரலுக்கு இயேசு பதில் கொடுக்கும் வண்ணமாக, அவர் மிகுந்த இரக்கம் கொண்டவராக இருந்தபோதிலும், ஏதோ இவர்களைக் கடுமையாய் நடத்துவது போன்று, “”நீங்கள் போய் ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்” என்று கூறினார். நியாயப்பிரமாண உடன்படிக்கையில், யூதர்களுடனான தேவனுடைய ஏற்பாடானது, பாவங்களினால் அல்லாமல், மற்றபடி அவர்களுக்கு நோய் வருவதில்லை என்பதாக இருந்தது; மேலும் குஷ்டரோக நோயின் விஷயத்தில், வியாதி உண்மையில் குஷ்டரோகமா (அ) வேறு ஏதாகிலும் வியாதியோ என்று ஆசாரியர்களே தீர்ப்புச் சொல்ல வேண்டியவர்களாய் இருந்தார்கள். நமது கர்த்தர் குஷ்டரோகிகளை ஆசாரியரிடத்திற்குப்போய், காண்பிக்கச் சொன்ன காரியமானது, சொஸ்தமாக்குதலைக் குறிப்பதாகவும், இவர்கள் ஆசாரியர்களிடத்திற்குப் போய்ச்சேரும் நேரத்தில், இவர்கள் தாங்கள் சுத்தமாகிவிட்டோம் என்று கூறும் நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதைக் குறிப்பதாகவும் இருந்தது.

இந்தக் குஷ்டரோகிகள், இயேசுவின் வல்லமைக் குறித்துப் போதுமான அளவுக்கு அறிந்திருக்க வேண்டும், மற்றும் இவர்கள் இப்படி ஆசாரியனிடத்திற்குப் புறப்பட்டுச் சென்ற விஷயத்தில், மிகுந்த விசுவாசத்தையும் செயல்படுத்தியிருக்க வேண்டும்; ஏனெனில் இவர்கள் உடனடியாகச் சொஸ்தப்படுத்துவதற்குக் கூக்குரலிடுவதற்குப் பதிலாக, அவருடைய கட்டளையின்படி பின்பற்றி, ஆசாரியனிடத்தில் தங்களைக் காண்பிக்கப் புறப்பட்டுப் போனார்கள். இவர்கள் ஆசாரியனிடத்திற்குத் தாங்கள் போய்ச்சேரும் நேரத்தில், தாங்கள் நன்றாய்ச் சுகமடைந்திருப்பார்கள் என்றும், ஆரோக்கியம் அடைந்திருப்பார்கள் என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. இவர்கள் கொஞ்சம் தூரத்திற்குப்போன உடனே, தாங்கள் சொஸ்தமடைந்ததைக் கண்டுகொண்டார்கள். இவர்கள் தங்களுடைய குடும்பம், வேலை முதலானவைகளுக்குத் திரும்பிச் செல்லத்தக்கதாக ஆசாரியனிடத்தில் ஒப்புதல் வாங்க வேண்டுமென எத்துணை சந்தோஷத்துடன் துரிதப்பட்டுப் போயிருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகின்றது. இவர்களுடைய இரத்தம் சுத்திகரிக்கப்பட்டதினால் ஏற்பட்ட மகிழ்ச்சியினால், இவர்கள் ஓடித்தான் சென்றிருக்க வேண்டும்! ஆனால் இவர்களில் ஒருவன் ஓடுவதை நிறுத்திவிட்டு, பின்னே திரும்பி வந்துவிட்டான்; அநேகமாக மற்றவர்கள் மகிழ்ச்சியின் பரவசத்தில் இருந்தபடியால், ஒருவன் இப்படிப் பின்னே ஓடுவதைக் கவனிக்கவில்லை. அவன் பின்னே ஓடி வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றிச் செலுத்தினான், அவன் நன்றியுள்ள இருதயத்தைக் கொண்டிருந்தான்; மேலும் இதன் காரணமாக அவன் பின்னாளில் ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை; அவன் அப்பொழுது சமாரியனாகவும், அந்நியனாகவும், இஸ்ரயேலின் காணியாட்சிக்குப் புறம்பானவனாகவும் இருப்பதினால் அத்தருணத்தில் அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பின்னாளில் பெற்றுக்கொள்வான்.

கிருபையின் மற்றுமொரு துணிக்கை

இந்தச் சம்பவத்தில், இந்தச் சொஸ்தப்படுத்துதலானது, பிள்ளைகளின் மேஜையிலிருந்து விழுந்த துணிக்கையாகும். ஏனெனில் ஐசுவரியவான் இன்னமும் மரிக்கவில்லை, அதாவது இஸ்ரயேலிடமிருந்து இன்னமும் தேவனுடைய கிருபையானது எடுக்கப்படவில்லை. “”உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கி விடப்படும்” என்னும் வார்த்தைகளை இன்னமும் இயேசு கூறவில்லை. அவர்களுடைய வீடானது பாழாய் விடப்பட்ட பிற்பாடும் கூட, இஸ்ரயேலிடத்திலான கிருபையானது, தனித்தனி நபருக்கான கிருபையாக 3½ வருடங்கள் தொடர்ந்துக் கொண்டிருந்தது. இயேசு மரித்துப்போய், 3½ வருடங்கள் யூதர்களுக்குத் தனித்தனி நபராக கிருபை வழங்கப்பட்ட விஷயம் நின்ற பிறகே, சுவிசேஷமானது புறஜாதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது; கொர்நேலியு என்பவர் தேவனுடைய உறவிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் புறஜாதியாக இருக்கின்றார் (அப்போஸ்தலர் 10).

ஒருவேளை நன்றிச் சொல்வதற்கெனத் திரும்பி வந்தவன் சமாரியனாக இல்லாமல், யூதனாக இருந்திருந்தால் அவனை இயேசு தம்முடைய பின்னடியார்களில் ஒருவனாகும்படிக்கு அழைத்திருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை; “”உன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என் பின்னே வா!” என்று சொல்லியிருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனால் வந்தவன் சமாரியனாக இருந்தபடியால், “”நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” (லூக்கா 17:19) என்று மாத்திரமே கூறி அனுப்பினார். ஆனால் இந்த நன்றியுள்ள சமாரியனைக் கர்த்தருடைய ஏற்பாடானது பின்தொடர்ந்தது என்பதிலும், புறஜாதிகளுக்குக் கதவு திறக்கப்படுவதற்கான காலம் வந்தபோதோ, இவனும் செய்தியை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவனாக இருந்து, தேவனுடைய சுதந்தரர் ஆகுவதற்கும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன், பரம சுதந்தரத்தில் உடன் சுதந்தரராகுவதற்குமென அர்ப்பணம் பண்ணியும் இருப்பான் என்பதிலும் நமக்கு ஐயமில்லை.

“”உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்ற நமது கர்த்தருடைய வார்த்தைகளை, தெய்வீக வல்லமையினால் இல்லாமல், அம்மனுஷனுடைய விசுவாசமே அவனை இரட்சித்தது என்று நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது, மாறாக அம்மனுஷனுடைய விசுவாசத்தோடு கூடவே ஆண்டவர் தெய்வீக வல்லமையைப் பயன்படுத்தினார் என்றே புரிந்துக்கொள்ள வேண்டும். தேவனுடைய வல்லமையும், அம்மனுஷனுடைய விசுவாசமும் சேர்ந்து, அவனைச் சொஸ்தப்படுத்தினது. இவை இரண்டும்தான் மற்ற ஒன்பது பேரைக்கூடச் சொஸ்தப்படுத்தினது. ஒன்பது பேர்க் கூட விசுவாசம் கொண்டிருந்தார்கள் மற்றும் சொஸ்தமாக்கப்பட்டார்கள்; மேலும் இவர்கள் (9-யூதர்கள்) நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் யூதர்களாகக் காணப்பட்டபடியால், இவர்களே சமாரியனைக் காட்டிலும், மன்னிப்பையும், சொஸ்தமாக்குதலையும் வேண்டிக்கொள்வதற்கான உரிமைக் கொண்டிருந்தார்கள்.

பத்துப்பேர் சொஸ்தமாக்கப்பட்டிருந்தார்கள் – 9 பேர் எங்கே?

பத்துப் பேர் சொஸ்தப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஒருவன் மாத்திரமே தேவனுக்கு மகிமை செலுத்தத் திரும்பிவந்துள்ளான் எனும் காரியத்தை, அங்கிருந்த பொதுஜனங்களின் கவனத்திற்கு இயேசு கொண்டு வந்தார். இவர்கள் திரும்பிவர வேண்டுமென்றும், துதிச்செலுத்த வேண்டுமென்றும், தம் மூலமாய்த் தெய்வீக வல்லமையே செயல்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும், அவர் இவர்களிடத்தில் கேட்டுக் கொள்ளவில்லை என்பது உண்மைதான் அவர் என்ன செய்யச் சொன்னாரோ, அதைத்தான் இவர்கள் செய்தார்கள், தங்களை ஆசாரியனிடத்திற்குப் போய்க் காண்பித்தார்கள்; பின்னர் என்ன செய்ய வேண்டுமென்பது பற்றி, எதுவும் சொல்லவில்லை என்பதும் உண்மைதான்!

இவர்களைக் குணப்படுத்துவதற்கு முன்னதாக, “”ஒருவேளை நான் உங்களைக் குணப்படுத்தினால், நீங்கள் உங்கள் ஜீவியங்களை அர்ப்பணித்து, என் சீஷர்களாகுவீர்களா?” என்று கர்த்தர் கூறி ஏன் பேரம் பேசவில்லை? அப்படி இயேசு கூறியிருந்தாலும், இவர்கள் ஒத்துக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமும் இல்லை. இப்படியாக வெறுக்கத்தக்கதும், சொஸ்தப்படுத்த முடியாததுமான நோயினை அகற்றுவதற்குக் கொடுக்கப்படும் எந்த நிபந்தனைகளுக்கும், யார்தான் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்? ஏன் இம்முறையைக் கையாண்டு, இயேசு தம்முடைய சீஷர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளவில்லை? “”பிதாவை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்கிறவர்களையே பிதா விரும்புகின்றார்” என்பதாகிய பிதாவின் கையாளுதலின் ஆவியையே, இயேசுவும் பின்பற்றுகிறவராக இருந்தார் என்பதே பதில். ஆவியோடும், உண்மையோடும் தம்மைத் தொழுதுகொள்ளாதவர்களைப் பிதா விரும்பாதது போன்று, குமாரனும் விரும்புவதில்லை.

இதன் அடிப்படையில் இயேசு மற்றும் அப்போஸ்தலர்களுடைய பிரசங்கமானது, இன்றுள்ள சுவிசேஷகர்கள், எழுப்புதல் ஊழியங்கள் முதலானவர்களின் பிரசங்கங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாய்க் காணப்படுகின்றது. உலகப்பிரகாரமான ஜனங்கள் கிறிஸ்துவின் சீஷர்களாகும்படிக்கு இயேசுவும் சரி, அப்போஸ்தலர்களும் சரி ஒருபோதும் வலியுறுத்துவதில்லை. இயேசுவும், அப்போஸ்தலர்களும் சில மாபெரும் உண்மைகளை மாத்திரமே பிரசங்கித்தார்கள், மற்றும் இந்தப் பிரசங்கத்தைக் கேட்டு, அதில் முன்வைக்கப்பட்ட மாபெரும் உண்மைகளினால் தாக்கத்திற்குள்ளானவர்களே ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். இயேசுவும், அப்போஸ்தலர்களும் பாவத்தையும், நீதியையும், நியாயத்தீர்ப்பின் காலத்தையும் கூறி, காரியத்தை அந்தந்த நபரின் மனசாட்சிக்கே விட்டுவிட்டார்கள். பாவத்தை விட்டுவிட்டு, தேவனிடத்தில் திரும்புகிறவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் புண்ணியத்தினால் மன்னிப்பும், ஒப்புரவாகுதலும் கிடைக்கப்பெறும் என்று அப்போஸ்தலர்கள் கூறினார்கள். தேவனுக்கும், சத்தியத்திற்கும், நீதிக்குமான ஊழியத்திற்கென, தங்களுடைய ஜீவியங்களை அர்;ப்பணம் பண்ணவும், [R5454 : page 140] நல்ல போர்ச்சேவகர்களாக தீங்கு அனுபவிக்கக் கூடியவர்களுமாகிய, பாவத்திற்காக வருந்துகிறவர்களுக்குப் பரம அழைப்பைப்பற்றி அப்போஸ்தலர்கள் கூறினார்கள்.

இன்னொரு தருணத்தில், உணர்ச்சிவசப்படுதலைக் கடிந்துக்கொள்ளும் வண்ணமாக, இயேசு “”அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்க்கக்கடவன்” என்று கூறினார் (லூக்கா 14:30). தம்முடைய குமாரனுடன் கூட, உடன் சுதந்தரர்களாய் இருப்பதற்கெனச் சத்தியத்தைப் பிரசங்கிப்பதன் மூலமாக ஒரு வகுப்பாரை அழைத்திட தேவன் பிரியங்கொண்டுள்ளார். இந்த வகுப்பார் ஜெபங்கள் மூலமாகவோ அல்லது உணர்ச்சிப் பரவசத்தின் மூலமாகவோ, தேவனுடைய குடும்பத்திற்குள்ளாகக் கொண்டு வரப்படாமல், மாறாக தெய்வீக நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கொண்டு வரப்படுவார்கள். இப்படியாகத் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு அதை விருதாவாகப் பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும், கலப்பையில் கை வைத்திட்ட பிற்பாடு, அவர்கள் பின்னோக்கிப் பார்க்கக்கூடாது என்றும், அவர்கள் தங்களைச் சிலுவையின் நல்ல போர்ச்சேவகர்களாக இணைத்துக்கொண்டுள்ளபடியால், அவர்கள் தீங்கு அனுபவித்து, ஊழியம் மற்றும், பலியாகிய சிலாக்கியத்தில் களிக்கூர வேண்டுமென்றும் உள்ள அவசர செய்தி கடந்துச் செல்கின்றது.

இயேசுவும் சரி, அப்போஸ்தலர்களும் சரி, கர்த்தருடைய சேனையில் போர்ச்சேவகர்களைச் சேர்ப்பதற்கு, ஆரவார பரவச முறையை, “”hip-hip-hurrah” முறையைக் கையாளவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டுகின்றோம். இப்படிக் கூறுவதினால் நாம் மற்றவர்களைக் குறைக் கூற வரவில்லை, மாறாக தேவனுடைய ஜனங்கள், தேவனுடைய சித்தத்தை அறிவதற்கும், அவர் சித்தத்தைச் செய்வதற்கும் வழிகாட்டப்படத்தக்கதாக, உண்மைகளை அவர்களுடைய கவனத்திற்குக்கொண்டுவர மாத்திரமே செய்கின்றோம்.

பத்து, நூறு, ஆயிரக்கணக்கான மற்றவர்கள்

நம்முடைய இப்பாடத்தை அடையாள கண்ணோட்டத்தில் பார்க்கலாம். அந்தக் குஷ்டரோகிகள், பாவிகளுக்கு அடையாளமாய் இருக்கின்றனர்; அதாவது தாங்கள் அசுத்தமாய் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்துக்கொண்டு, சுத்திகரிக்கப்படுவதற்காக கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் பாவிகளாய் இருக்கின்றனர்; இப்படியாக இவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிடுவது என்பது, கர்த்தர் தேவனுடைய குமாரன் எனக் கொண்டிருக்கும் மகத்துவத்தையும், வல்லமையையும் ஒத்துக்கொள்வதையும், இவர் மூலமாய் மாத்திரம் பாவம் மன்னிக்கப்படுவதை ஒத்துக்கொள்வதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது; இன்னுமாக இவர்கள் கர்த்தரை நோக்கி கூக்குரலிட்ட காரியமானது, இவர்கள் அவருடைய சீஷர்களாகுவதற்கான அதாவது, பின்னடியாராகுவதற்கான விருப்பத்தை அறிவிப்பதாகவும், பாவம் பாதகமானது என்று உணர்ந்து, தங்களுக்குள்ளாகவும், உலகத்திலும் காணப்படுகின்றதான பாவத்தை எதிர்த்துப் போராடி, அவருடைய அடிச்சுவடுகளில் இனிமேல் நடக்க வேண்டுமென்ற தீர்மானத்தை அறிவிப்பதாகவும் காணப்படுகின்றது. இப்படியான, எத்தனை பத்து, நூறு மற்றும் ஆயிரக்கணக்கானோரின் பக்தியையும், விசுவாசத்தையும் கர்த்தர் ஏற்றுக்கொண்டுள்ளார்? எத்தனை பேர்களைக் குணப்படுத்தி, மன்னித்து, இவர்களுடைய சீஷத்துவத்தின் அறிக்கையின்படிக் கர்த்தர் ஏற்றுக்கொண்டுள்ளார்? இவர்களில் எத்தனை பேர் அவருடைய உண்மையான சீஷர்களாகியுள்ளனர்?

கர்த்தருக்குப் பாவத்தைக் குறித்ததான தங்களுடைய துக்கத்தையும், பாவ மன்னிப்பிற்கான தங்களுடைய வாஞ்சையையும், வாழ்நாள் முழுவதும் அவருக்கும், அவருடைய தயவிற்கும், நன்றியும், பக்தியும் குறித்ததான தங்களது வாக்கையும் தெரிவித்துள்ள எத்தனை பேர்கள், தங்களுக்குக் கிடைத்திட்ட சிலாக்கியங்களையே மறந்துப்போய் உள்ளனர்; ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட பிற்பாடு, எத்தனை பேர்கள் ஒரு தொழில் துறையினின்று, இன்னொரு தொழில் துறையினிடத்திற்கும், ஒருவகை களியாட்டங்களிலிருந்து இன்னொன்றிற்குச் சென்றிருக்கின்றனர்! இரக்கத்திற்கான கர்த்தரிடத்திலான தங்களுடைய ஜெபங்களையும், ஒருவேளை தங்கள் ஜெபங்கள் கேட்கப்பட்டால், தாங்கள் என்ன செய்வார்கள் என்று எடுத்திட்ட தீர்மானங்களையும் சொற்பமானவர்களே நினைவில் கொண்டவர்களாய் இருக்கின்றார்கள்!

மறுமலர்ச்சியானது வரவிருக்கின்றது

தேவனுடன் உடன்படிக்கைப் பண்ணியுள்ளவர்கள் தொடர்புடைய விஷயத்தில், நாம் ஒரு கடுமையான சோதனை காலத்தில் இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம் என்ற கருத்தானது அநேக கிறிஸ்தவ ஜனங்கள் மத்தியில் பெருகிக்கொண்டு வருகின்றது. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது, உயிர்த்தெழுதலுடைய மாற்றத்தின் மூலமாக, கர்த்தருடைய மணவாட்டியாக, அவரால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நேரத்தை நாம் நெருங்கிக் கொண்டிருப்பதாக அநேக கிறிஸ்தவ ஜனங்கள் நம்புகின்றனர். “”மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது;” “”ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். (1 கொரிந்தியர் 15:50,51,52). இயேசுவுடன் கூட, அவருடைய இராஜ்யத்தில் துணையாளர்களாக இருக்கப்போகின்ற மணவாட்டி வகுப்பாருக்கான அங்கத்தினரைக் கண்டுபிடிப்பதற்கே, இந்தச் சுவிசேஷ யுகத்திற்கான அழைப்புக் கொடுக்கப்பட்டது.

யூத யுகத்தினுடைய முடிவின் சோதனையான காலங்களில் வாழ்ந்துக் கொண்டிருந்த யூதர்களைக் குறித்து, “”கடவுள் உன்னை தேடி வந்த காலத்தை நீ அறிந்துக்கொள்ளவில்லை” என்று இயேசு கூறினார் (லூக்கா 19:44; திருவிவிலியம்). வெகு சொற்பமானவர்கள் மாத்திரமே, தாங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் காலத்தினுடைய அம்சங்களையும், நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் மாற்றங்களையும் புரிந்துக்கொள்வதற்குரிய, தேவனுக்கு அருகாமையிலான இருதய நிலைமையைக் கொண்டிருந்தார்கள். அதே மாதிரியான மாற்றங்கள் இப்பொழுது நமது மத்தியிலும் காணப்படுகின்றது. இதுவும் தங்களுடைய புரிந்துக்கொள்ளதலின் கண்களைத் திறந்திருக்கப் பெற்றிருப்பவர்களால் மாத்திரமே, உணர்ந்துக்கொள்ள முடிகின்றதாய் இருக்கின்றது.

நம்முடைய பாடத்தில் இடம்பெறும் சமாரியன், தங்களுடைய கிருபையிலும், வார்த்தையிலும், எண்ணங்களிலும் கர்த்தருக்கு மகிமை செலுத்த, நாடும் கர்த்தருடைய நன்றியறிதலுள்ள பின்னடியார்களாகிய வகுப்பாரை அடையாளப்படுத்துகின்றவனாய் இருக்க, மற்ற ஒன்பது பேரும் [R5455 : page 140] ஒரே மாதிரியான கிருபையைக் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்த போதிலும், தற்கால ஜீவியத்தின் இன்பங்களையும், ஆசைகளையும் நாடினவர்களாகவே இருக்கின்றனர்; ஆண்டவர் கடந்துச் சென்ற பாதையில் செல்லாததினால், இந்த ஒன்பது பேரும் சமாரியன் அடையாளப்படுத்தும் வகுப்பாருக்குரிய கனம், மகிமை மற்றும் அழியாமையை அடைவதில்லை. இவர்களுக்குக் கொஞ்சம் கீழான நிலைமையே அருளப்படும். வேதவாக்கியங்களின்படி, இன்னும் கொஞ்சங்காலத்திற்குள்ளாக, இராஜ்யத்தின் மகிமையானது, அதிர்ச்சியடைந்திருக்கும் உலத்திற்கு வெளிப்படுத்தப்படும், மற்றும் தற்கால சூழ்நிலைகளின் மகிமைகள் அனைத்தும் கடந்துப் போய்விடும்.

தம்முடைய ஜீவனையும் பொருட்படுத்தாமல், தாம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றத்தக்கதாக தம்மைத்தாமே வெறுமையாக்கினவரும், இதன் விளைவாக இப்பொழுது மிகவும் உயர்த்தப்பட்டிருப்பவருமாகிய நமது இரட்சகர் வாயிலாகப் பரத்திலிருந்து வருகிறதான ஞானம் வெளிப்படுத்தப்பட்டது. கிறிஸ்துவின் சரீரத்தில், அதாவது திரைக்கு அப்பால், மகிமையான சபையில், ஓர் அங்கமாகுவதற்கென, தான் அனைத்தையும் குப்பையும், தூசியுமாக எண்ணினார் என்ற இதே கருத்தைத்தான் பரிசுத்தவானாகிய பவுலும் தெரிவித்துள்ளார். ஆயிரம் வருடம் யுகத்தின் போது, உலகத்திற்கு வரும் ஆசீர்வாதம் மகா பெரியதாயிருக்கும், சபை பெற்றுக்கொள்ளப் போவதான ஆசீர்வாதமானதோ தலைச்சிறந்ததாக இருக்கும்.