R3307 – மனுஷரைப் பிடிக்கிறவர்கள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3307 (page 25)

மனுஷரைப் பிடிக்கிறவர்கள்

FISHERS OF MEN

லூக்கா 5:1-11

“”நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” யோவான் 8:31

கலிலேயாவின் கடற்கரை அருகில் கப்பர்நகூம் காணப்பட்டது. கலிலேயா கடல் அழகானதும், நமது கர்த்தருக்கும், இக்கடலுக்கும் இடையே இருக்கும் தொடர்பின் நிமித்தம் உலக பிரசித்தி வாய்ந்ததும், மீன்கள் நிறைந்ததுமாய் உள்ளது. இயேசு நாசரேத்தில் புறக்கணிக்கப்பட்ட பிற்பாடு இக்கடலின் அருகாமையிலுள்ள கப்பர்நகூமுக்கே வந்தார். இவ்விடத்தில் அவருக்கு வித்தியாசமான வரவேற்புக் காணப்பட்டது; கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதற்காக, ஜனங்கள் அவரை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவர்களுக்கும் தமக்கும் வசதியாக இருக்கும் எனக் கருதி, சீமோன் பேதுருவின் மீன் பிடிக்கும் படகை இயேசு கேட்டுக்கொண்டார்; இப்படகில் நின்றவாறு, கடற்கரையில் உட்கார்ந்த நிலையில் (அ) நின்று கொண்டிருக்கும் நிலையில் காணப்படும் ஜனங்களுக்குப் பயனுள்ளமுறையில் போதிப்பதற்கென இயேசு படகைக்கேட்டார்.

நம்முடைய கர்த்தருடைய அனைத்து உரையாடல்களும் சுவிசேஷப் பதிவுகளில் பதிவு செய்யப்படவில்லை என்ற எண்ணங்கள் நமக்குள் எழுகின்றது. நாம் பெற்றிருப்பது துண்டுத் துண்டான பதிவுகளே ஆகும். இப்படித் துண்டுத்துண்டாகக் காணப்படுவதில் பிரதானமானது மலைப்பிரசங்கமாகும். இயேசுவின் மற்றப் போதனைகளும் கூடச் சுருக்கமான குறிப்புகளாகவே காணப்படுகின்றது; உதாரணத்திற்கு அவருடைய உவமைகளும், மறைப்பொருள்களும் ஆகும். உதாரணமாக, அவர் தம்மை வானத்திலிருந்து இறங்கின அப்பம் என்றும், அப்பமாகிய தம்மைப் புசிப்பவன் ஒருபோதும் மரிப்பதில்லை என்றும் கர்த்தர் கூறினார்; இதைக் கேட்ட அநேகர், இது கடினமான உபதேசம் என்று கூறி, அவருடனே கூட நடவாமல் பின்வாங்கிப் போனார்கள். சுவிசேஷத்தின் மாபெரும் உபதேசமாகிய பிரதானமான போதனைகள், அதாவது ஈடுபலி குறித்தும், விலையேறப் பெற்ற இரத்தத்தின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலம் கிடைக்கும் நம்முடைய நீதிமானாக்கப்படுதல் குறித்தும், நமக்குப் புத்திரசுவிகாரம் கொடுக்கப்படுவது குறித்தும், நாம் ஜெநிப்பிக்கப்படுவது மற்றும் உயிர்த்தெழுதல் குறித்தும், முதலாம் உயிர்த்தெழுதலுக்கும் மற்ற உயிர்த்தெழுதலுக்கும் இடையே காணப்படும் வித்தியாசம், முதலியவைகள் குறித்ததுமான பிரதானமான போதனைகள் நமக்கு அப்போஸ்தலர்கள் எழுதின நிரூபங்கள் மூலமாகவும், அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அப்போஸ்தலர்களின் சொற்பொழிவுகள் மூலமாகவுமே கிடைக்கின்றது.

ஏன் இப்படியாக உள்ளது என்றும், எதிர்க்கால வாழ்க்கை மற்றும் பயபக்தியான ஜீவியம் தொடர்பான விஷயங்களைக்குறித்ததான பிரதானமான போதனைகள், நமது கர்த்தருடைய (வாயின்) வார்த்தைகளின் வாயிலாகவே நமக்கு ஏன் அருளப்படவில்லையே என்றும் நம்மைச் சிந்திக்க வைக்கலாம். ஆனால், நம்முடைய சந்ததியில் எவரேனும் பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புத்திர சுவிகாரத்தின் ஆவி அருளப்படுவதற்கு முன்னதாக, நமது கர்த்தர் ஈடுபலி விலைகிரயத்தைச் செலுத்தியாக வேண்டும் என்பதின் அவசியத்தை நாம் புரிந்துக்கொள்கையில், நமக்குள் எழும்பின கேள்விகளுக்குத் தெளிவான பதில் கிடைக்கின்றது. இது எல்லாவற்றையும் விளக்கிவிடுகின்றது, என்னவெனில்: புத்திர சுவிகாரத்தின் ஆவி இல்லாமல், நம்மால் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துக்கொள்ள முடியாது; ஆகவேதான் இயேசுவின் காலத்தில் வாழ்ந்து, அவர் பேசினவைகளைக் கேட்டவர்களுக்கு, இயேசு பேசின ஆவிக்குரிய விஷயங்கள் உவமைகளாகவும், மறைப்பொருள்களாகவும் காணப்பட்டது; உதாரணத்திற்கு புதிய/மறு பிறப்பைக்குறித்து இயேசு, நிக்கொதேமுவிடம் பேசுகையில், அவரால் புரிந்துக்கொள்ள முடியாமல் காணப்பட்ட போது, நமது கர்த்தர் பரத்திற்குரிய விஷயங்களைப் பேசாமல், பூமிக்குரிய விஷயங்கள் மாத்திரமே பேசினதாக சுட்டிக்காட்டி, “”பூமிக்குரிய காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்று கூறினார் (யோவான் 3:12). நமது கர்த்தர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள், பரம காரியங்களைப் புரிந்துக்கொள்வதற்கு ஆயத்தமடையவில்லை என்று கண்டு, பூமிக்கடுத்த காரியங்களைச் சொல்லிக்கொடுப்பதிலும் தமது கவனத்தைப் பிரதானமாகச் செலுத்தினார். மேலும், பிற்காலங்களில் ஆவியின் மூலம் கர்த்தருடைய உவமைகளும், மறைப்பொருள்களுமான வார்த்தைகள், அவருடைய உண்மையுள்ளவர்களுக்குப் புரிய வைக்கப்படும்.

மாம்சீக சுபாவப்படியான மனுஷன்ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துக்கொள்ள மாட்டான்

இது நம்முடைய கர்த்தருடைய ஊழியம் குறித்த பரந்த கண்ணோட்டத்தைக் கொடுக்கின்றது: [R3307 : page 26] முதலாவதாக, மாம்சீக சுபாவத்தின்படியான மனுஷனால் புரிந்துக்கொள்ளும் காரியங்களை மாம்சீக சுபாவத்தின்படியான மனுஷனுக்கு அவர் போதிப்பதாகும்; இரண்டாவதாக, மாம்சீக சுபாவத்தின்படியான மனுஷனுடைய வியாதிகள் சொஸ்தப்படுத்துவதன் மூலமாய் அவர் தாம் பெந்தெகொஸ்தே நாள் முதல் தொடங்கி, இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் அவருடைய பிரதிநிதியாகிய அப்போஸ்தலர்கள் மூலமாகவும், அப்போஸ்தலர்களின் வார்த்தைகளின் மூலம் தம் மேல் விசுவாசம் வைக்கும் அனைவர் மூலமாகவும் செய்யப்போகின்ற ஆவிக்குரிய வேலைகளுக்கு அகன்ற/வெளிப்படையான அஸ்திபாரத்தைப் போடுவதாகும். இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் கர்த்தர்தாமே, “”தம்முடைய சரீரமாக,” “”தம்முடைய சகோதரராக” இருக்கும் சபைக்குப் போதகராக இருக்கின்றார், மேலுமாக, “”புதியதும், பழையதுமாகிய” சத்தியத்தைக்கொண்டு நம்மைப் போஷிப்பதிலும், போதிப்பதிலும் உள்ள சகல விஷயங்களையும் அவர் கவனித்துக் கொண்டிருக்கின்றார். இன்றும் அவர்தான் போதகராக இருக்கின்றார். மேலும், அப்போஸ்தலர்கள் மூலமாக நாம் பெற்றுக்கொள்ளும் அனைத்தும் கூட அவர்கள் வாயிலாக வரும் கர்த்தருடைய போதனைகளே தவிர, அவைகள் அவர்களுடைய சொந்த போதனைகள் அல்ல. இன்றும் கூடக் கர்த்தருடைய நாமத்தில் பேசுகிறவர்கள் அவருடைய பிரதிநிதியாகவும், ஸ்தானாதிபதியாகவும் மாத்திரமே பேசுகிறதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் தங்களுக்கு அருளப்பட்ட அதிகாரத்தைக் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு உரியதாக அல்லது முழுமையான அதிகாரம் அவரால் கொடுக்கப்பட்டு, அவராலேயே ஏவப்பட்டு (அ) வழிநடத்தப்பட்டவர்களுடைய, அதாவது, 12 அப்போஸ்தலர்களுடைய (யூதாசுக்குப் பதிலாக அப் பவுல்) வார்த்தைகளுக்கு உரியதாகக் கருதிக்கொள்ள வேண்டும்.

நமது கர்த்தர் முதலில் யூதேயாவிலும், பின்னர் கலிலேயாவிலும், அதாவது நம்முடைய பாடத்தின் சம்பவம் நிகழும் தருவாய் வரையிலும், பிரசங்கம் பண்ணுவதில் சுமார் ஒரு வருடம் செலவு பண்ணியிருந்திருக்க வேண்டும். நம்முடைய பாடத்தில் இடம்பெறுகிற மீனவர்களாகிய பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவானுக்குக் கர்த்தர் ஏற்கெனவே அறிமுகமாய் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியே. இப்பாடத்தின் சம்பவம் நடப்பதற்கு முன்னதாக நடந்த சம்பாஷணையின்போதே, இயேசு சீமோனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார். இந்த மீனவர்கள் அநேகமாக ஏற்கெனவே இயேசுவைச் சந்தித்திருக்க வேண்டும்; மேலும் வேறு தருணங்களிலும் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டிருந்திருக்க வேண்டும்; சொல்லப்போனால், அவருடைய சீஷர்களாகத்தான் காணப்பட்டார்கள்; சீஷர்கள் என்று சொல்லுகையில், அவரை அவர்கள் பின்பற்றுபவர்களாகவும், அவர்மேல் விசுவாசம் வைத்தவர்களாகவும், அவருடைய போதனைகளுக்கு ஆதரவு வழங்கினவர்களாகவும் இருந்ததையே குறிப்பிடுகின்றது. எனினும் தம்மோடு கூட இவர்கள் தொடர்ந்து இருக்கும்படிக்கும், தம்முடைய அற்புதங்களைக் காணும்படிக்கும், தம்முடைய பிரசங்கங்களைக் கேட்கும்படிக்கும், பேசப்பட்டவைகளுக்கும், செய்யப்பட்டவைகளுமான சகலவற்றிற்கும் சாட்சியாக இருக்கும்படிக்கும், பின்னர் ஏற்றக்காலத்தில் இவர்கள், அவருடைய விசேஷமான பிரதிநிதியாக இருந்து பணிபுரியும்படிக்கும், நமக்கும், பின்னர் வரும் கர்த்தருடைய பின்னடியார்களுக்கும் தம்முடைய ஊழியத்தின் முக்கியமான சம்பவங்கள் குறித்ததான துல்லியமான மற்றும் உண்மையான பதிவுகளைக் கொடுக்கும்படிக்கும், 12-அப்போஸ்தலர்களை நமது கர்த்தர் தெரிந்தெடுப்பதற்கான நேரம் இப்பொழுது வந்துவிட்டது.

இயேசு படகில் உட்கார்ந்த வண்ணம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு தமது பிரசங்கத்தை முடித்த பிற்பாடு, படகின் சொந்தக்காரர்களாகிய சீமோனிடமும், அந்திரேயாவிடமும், அவர்கள் படகுகளை ஆழத்திற்கு எடுத்துச்சென்று மீன்களைப் பிடிக்கும்படிக்கு வலைகளைப் போடும்படிச் சொன்னார்; ஆனால் பேதுருவோ அந்நாள் அனுகூலமற்ற நாளாயிருப்பதினால் (அ) ஏதோ காரணங்கள் நிமித்தம் அக்காலக்கட்டத்தில் கலிலேயா கடலிலுள்ள அப்பகுதிகளில் மீன்கள் காணப்படாததினால், மீண்டும் சென்று மீன்களுக்கு வலை போடுவது பிரயோஜனமற்றது என்று கூறினார்; காரணம் அவரும், அவரோடு இருந்தவர்களும் இராமுழுவதும் பிரயாசப்பட்டும், ஒன்றும் அகப்படவில்லை என்பதினாலேயே ஆகும். எனினும் கர்த்தரைப் பிரியப்படுத்த வேண்டும் என்று, அவர் கூறின பிரகாரமே செய்தார்கள். கடலில் சென்று வலைகளை இழுக்க ஆரம்பித்தப் போதோ, தங்கள் படகு கொள்ளமுடியாத அளவிற்கு மீன்கள் வலையில் அகப்பட்டிருப்பதைக் கண்டார்கள். மற்றப் படகுகளில் இருந்த தங்கள் கூட்டாளிகளை உதவி கரம் கொடுக்கவும், மீன்களை எடுக்க உதவவும் அழைத்தார்கள். இச்சம்பவமானது, திட்டமிட்டிருந்தபடி அதற்கேயுரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இப்படித் திரளான மீன்களைக்கொண்டு வருவது [R3308 : page 26] என்பது ஒரு சாதாரண மனிதனால் முடியாது என்று உணர்ந்தவராக சீமோன் பேதுரு கர்த்தர் முன் அவர் பாதங்களில் விழுந்தார்.

கர்த்தர் பக்திவைராக்கியத்தையும், ஊக்கத் தன்மையையும் விரும்புகின்றார்

சீமோன் பேதுருவிடம் சிறப்பான ஏதோ ஒன்று உள்ளது; அவருக்குள் ஏற்படும் திடீர் உணர்ச்சி வேகமே அவரிடத்தில் கவர்ச்சியூட்டும் பண்பாக அமைகின்றது. எந்தக் காரியத்தையும் அவர் வைராக்கியத்துடனும், ஊக்கத்துடனும் கையாளும் விதமும் அவர்மேல் கவனம் செலுத்துவதற்குப் பாத்திரமானதாகவும் காணப்படுகின்றது. பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானாகிய மூன்று பேர்தான் 12-அப்போஸ்தலர்கள் மத்தியில் விசேஷமாகக் கர்த்தரால் அன்புகூரப்பட்டார்கள் என்பதையும் நாம் அறிவோம். கர்த்தர் அங்கீகரிக்கும் வைராக்கியமும், ஊக்கமும், மன உறுதியும் (force) இம்மூவரிடமும் காணப்பட்டது போன்று தோன்றுகிறது. இவர்கள், “”உன் கைக்கு அகப்படுவது எதுவோ அதை உன் முழு பலத்தோடு செய்” என்ற புத்தமதிக்கு நிஜமான உதாரணங்களாக (practical illustrations) திகழ்ந்தனர். “”நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போக வேண்டும்” என்று பேதுரு கர்த்தரிடம் கூறின வார்த்தைகள், தனக்கும், ஆண்டவருக்கும் இடையில் காணப்படும் மாபெரும் வித்தியாசத்தைப் பேதுரு ஒத்துக்கொள்வதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; பேதுரு சூழ்நிலையைக் கிரகித்துக் கொண்டார், அதாவது தான் பாவியாகவும், பூரணமற்ற மனுஷனாகவும் இருக்கின்றார் எனவும், தனக்கு முன் காணப்படும் ஆண்டவரோ பூரணராகவும், பிதாவுக்கு முழு இசைவுடன் காணப்படுகின்றபடியினால், பிதாவின் இரக்கங்களை மற்றவர்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டும் இருக்கின்றார் எனவும் கிரகித்துக் கொண்டார்.

பேதுரு பேசின வார்த்தைகளுக்கு, எதிர்மாறாகவே அவருடைய உள்ளத்தின் உண்மையான உணர்வு காணப்பட்டிருக்க வேண்டும். “”ஓ கர்த்தாவே, நான் பாவியான மனுஷனாக இருப்பினும், உம்முடன் தொடர்பு வைப்பதன் மூலம் நான் ஆசீர்வதிக்கப்படத்தக்கதாக, உம்மிடத்தில் நெருங்கி பழக என்னை அனுமதியும்” என்பதே அவர் உள்ளத்தின் உண்மையான உணர்வாக இருந்தது. இயேசு, இவரைத் தம்முடைய தெரிந்துக்கொள்ளப்பட்ட 12-அப்போஸ்தலர்களில் ஒருவராக நியமித்ததின் மூலம், பேதுருவின் இந்தச் சரியான இருதய நிலைமையை ஏற்றுக்கொண்டு, அவரின் உண்மையான வேண்டுதலுக்குப் பதில் கொடுத்தார்.

விவரங்களின் பதிவுகள் திடீரென நின்றுவிடுகின்றது. மேலும், அதே மணி நேரத்திலோ (அ) அடுத்த நாளிலோ பேதுருவும், அந்திரேயாவும், யாக்கோபும், யோவானும் விசேஷமாக நமது கர்த்தருடைய கூட்டாளிகளாக ஆகுவதற்கும், பின்னர் அவருடைய பிரதிநிதிகளாகவும், அவருடைய அப்போஸ்தலர்களாகவும் ஆகுவதற்கும் எனத் தங்கள் மீன் பிடிக்கும் தொழிலையும், தங்கள் படகுகளையும், வலைகளையும் விட்டுச் சென்றார்கள் என்பது தொடர்பாக பதிவுகள் நமக்கு வழங்கப்படவில்லை. நம்முடைய நியாயமான அனுமானம் என்னவெனில், இவர்களுடைய இந்த மீன் பிடிக்கும் தொழிலில் இவர்களோடு பங்காளிகளாக/கூட்டாளிகளாக இருந்தவர்கள், இவர்களுடைய உறவினர்களேயாகும், மேலும் பேதுரு தனது படகையும், வலைகளையும் தனது உடன் சகோதரர்களிடம் (அ) குமாரர்களிடம் (அ) மற்றக் கூட்டாளிகளிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அதுபோல் செபதேயுவின் குமாரர்களும் தங்கள் தொழிலுக்குரிய சொந்த உடைமைகளைத் தங்கள் தகப்பனிடத்தில் (அ) தொழிலில் தங்களோடு கூடக்காணப்பட்ட மற்றவர்களிடத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். நம்முடைய இந்த அனுமானமானது, நமது கர்த்தர் மரித்த பிற்பாடு, அதாவது சுமார் 2 வருடங்களுக்குப் பிற்பாடு இதே மனிதர்கள் (இந்த அப்போஸ்தலர்கள்) மீண்டும் மீன் பிடிக்கும் தொழிலுக்குத் திரும்புவது குறித்துப் பேசின காரியங்கள் தொடர்பான உண்மைக்கும் முழு இசைவாக உள்ளது. இந்தக் கடைசி சம்பவத்தில்தான் இயேசு மீண்டுமாக பெரும் திரளான மீன்களைக் கொடுக்க, இத்தகைய அற்புதம் வேறு எவராலும் அல்ல, மாறாக சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த கர்த்தராலேயே செய்ய முடியும் என மீண்டும் முதலாவது நபராக உணர்ந்த பேதுரு, கர்த்தர்தான் கரையில் நின்று கொண்டிருக்கின்றார் என்றும் அறிந்துக்கொண்டார் என்று பார்க்கின்றோம்.

மேலான / உயர்வான அழைப்புக்கு அழைக்கப்படுதல்

“”இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்பதே நமது கர்த்தர், பேதுருவிடம் கூறின வார்த்தைகளாய் இருக்கின்றது. இவ்வார்த்தைகள் பேதுருவின் கூட இருந்தவர்களுக்கும் கூடப் (யாக்கோபு, அந்திரேயா, யோவான்) பொருந்தக் கூடியதாய் இருக்கின்றது, மேலும் சந்தேகத்திற்கிடமின்றி இவ்வார்த்தைகளே, பிற்பாடு மற்றவர்களும், பேதுருவோடு கூட அவருடைய சீஷர்களாக (அ) அப்போஸ்தலர்களாக ஆக்கத்தக்கதான அழைப்பாகச் சென்றது. சீமோன் பேதுருவின் சகோதரனும், பேதுருவுடன் கூடத் தொழிலில் பங்காளியாயும் காணப்பட்ட அந்திரேயாவிற்கான அழைப்புக் கொஞ்சம் மாற்றங்களுடனான வார்த்தைகளாக மாற்கு 1:17-ஆம் வசனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது; அதாவது, “”என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” என்ற விதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக, இவ்விரண்டு விதமான வாக்கியங்களையும், கர்த்தர் பயன்படுத்தியிருக்க வேண்டும்; இரண்டு தருணங்களில் கர்த்தர் இதைப் பேசியிருந்தாலும் இவைகளின் அர்த்தமும்/முக்கியத்துவமும் ஒன்றேயாகும்.

ஜீவியத்தின் சகல காரியங்கள் வாயிலாக வரும் படிப்பினைகளை நாம் ஒருவேளை ஏற்றுக்கொள்வோமாகில், அவைகள் எதிர்க்காலம் முழுவதற்கும் நன்மை வழங்குவதாகக் காணப்படும். சாதாரணமான காரியங்கள், எந்தவிதமான வேலைகள் மற்றும் தொழில்கள் நேர்மையுடனும், நியாயத்துடனும், கண்ணியத்துடனும் செய்யப்படுவற்கு ஏற்ப, வரும் படிப்பினைகள் சரியான விதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டு, ஞானத்துடன் விருத்திச் செய்யப்படுமாயின், அவைகள் கர்த்தருடைய ஊழியங்களில் நாம் பிரயோஜனமுள்ளவர்களாய் இருப்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவதாகவும், நமக்கு விலையேறப்பெற்ற போதனையாகவும் காணப்படும். மீன் பிடிக்கும் தொழிலில் விசேஷித்தவிதமாய் உதவியளிக்கக்கூடிய ஏதோ ஒன்று அநேகமாகக் காணப்பட்டிருக்க வேண்டும்; அதாவது இந்த மீன் பிடிக்கும் தொழிலுக்கும், அப்போஸ்தலர்கள் தங்களின் மீதமுள்ள ஜீவியகாலம் முழுவதிலும் செய்யப்போகின்ற மாபெரும் வேலைக்கும் விசேஷித்தவிதமான ஒற்றுமை காணப்பட்டது. இதைத் தம்முடைய அழைப்பில் நமது கர்த்தர் தெரியப்படுத்துகின்றார். மீன் பிடிப்பதற்கு ஊக்கமும் (energy) சாமார்த்தியமும் (tact), மீனைப் பிடிப்பதற்கான சரியான தூண்டில் இரையும் (bait), மீன் பிடிப்பவன் தன்னை (மீனின் கண்களுக்குப் படாமல்) மறைத்துக்கொள்வதும் அவசியப்படுகின்றது. இந்த நான்கு விஷயங்களும், கர்த்தர் கொடுத்த இந்த ஆவிக்குரிய மீன் பிடிக்கும் வேலையாகிய, நமக்குரிய சிலாக்கியத்திற்கு அவசியமாய் உள்ளது. ஆகவேதான் அவர், “ஆடுகளை ஓய்நாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் [R3308 : page 27] இருங்கள்” என்ற புத்திமதியைக் கொடுக்கின்றார் (மத்தேயு 10:16). அப்போஸ்தலனாகிய பவுலும் கூடச் சுவிசேஷத்தைச் சாமர்த்தியமாக முன்வைப்பதில், தான் பயன்படுத்தின ஞானத்தைக்குறித்து “”உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்” என்று குறிப்பிடுகின்றார் (2 கொரிந்தியர் 12:16). சுவிசேஷத்தை (practical) நடைமுறை விதத்தில் முன்வைப்பதற்கு, அப்போஸ்தலன், தான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் இயல்பான சுபாவங்கள் மற்றும் மனப்பாங்கைச் சாதகமாகப் பயன்படுத்தியபோதிலும், அவர் சத்தியத்தின் ஒரு சிறிய அம்சத்தையாகிலும் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை. இது நமக்கொரு மாதிரியாக உள்ளது. மீன்கள் தங்களை எடுத்துகொள்ள/கைப்பற்ற ஒருவர் விரும்புகின்றார் என அறிந்துக்கொள்ளும் மாத்திரத்தில் அவைகள் உடனடியாக அச்சமடைந்து விடுகின்றன என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். மேலும், மீன்களைப் போன்றே மனுக்குலமும் ஏதாகிலும் ஒன்றினால் கைப்பற்றப்படுவதைக்குறித்த விஷயத்தில், வெட்கம் அடைகின்றவர்களாக இருக்கின்றார்கள். அதாவது, தங்களது சுயாதீனங்களைத் தாங்கள் இழந்துபோய்விடுவோம் என்ற சந்தேகம் ஒருவேளை அவர்களுக்கு எழும்பும் பட்சத்தில் விசேஷமாக அவர்கள் வெட்கம் கொள்கிறார்கள். அர்ப்பணம் செய்வதன் மூலம் சுயாதீனம் இழக்கப்படுகின்றது என்பதே அர்ப்பணம் குறித்ததான உலகத்தின் கண்ணோட்டமாய் இருக்கின்றது.

மனித அமைப்புகளை உண்டாக்கும் விதத்தில் அப்போஸ்தலர்கள் மனுஷரைப் பிடிக்கிறவர்கள் அல்ல. அப்போஸ்தலர்கள், சீஷர்களைச் சில மதப்பிரிவின் அடிமைத்தனத்திற்குள் கொண்டுவருவதற்கு முயற்சி செய்யவில்லை. அவர்கள் கர்த்தருக்காகவும், மனுஷரைப் பிடிக்கிறவர்கள் ஆனார்கள்; அவர்கள் கர்த்தருடைய பிரதிநிதிகளாக மனுஷரைப் பிடிக்கிறவர்கள் ஆனார்கள்; அதாவது இவர்கள்மூலம், தேவன் மனுஷர்களைப் பிடிப்பது போல் செயல்பட்டார்கள். மகிமையான நம்பிக்கைகளுடனும், சுவிசேஷம் அளிக்கும் எதிர்க்கால வாய்ப்புகளுடனும் மனுஷர்களைப் பிடிப்பது அப்போஸ்தலர்களின் பணியாக இருந்தது; மேலும் (பிடிப்பட்ட) மனுஷர்கள் தங்களுக்குள்ள எல்லாவற்றையும் சந்தோஷத்துடனும், முழுமையாகவும் கர்த்தருக்கு அர்ப்பணம் செய்யத்தக்கதான நிலைக்குள் கொண்டுவரப் பண்ணுவதும் அப்போஸ்தலர்களின் பணியாக இருந்தது. இந்த வழிமுறையே இன்றும் உள்ள கர்த்தருடைய பிரதிநிதிகளுக்குப் பொருந்தக் கூடியதாக இருக்கின்றது. நாம் கர்த்தருக்காவும், அவருடைய ஊழியத்திற்காகவும் மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாய் இருக்க வேண்டுமே ஒழிய, நம்முடைய தனிப்பட்ட நன்மை (அ) ஆதாயத்திற்காக, அதாவது தனிப்பட்ட மதப்பிரிவைக் கட்டியெழுப்புவதற்காக இருக்கக்கூடாது. நாம் நம்முடைய சொந்த சுயாதீனங்களை மனுஷர்களுக்குக் கொடுத்துவிடுகிறவர்களாகவோ அல்லது மனுஷர்கள் மற்றும் அமைப்புகளின் கட்டளையின்படி, மற்றவர்களின் சுயாதீனத்தை எடுத்துப்போட்டுவிடுகிறவர்களாகவோ இருக்கக்கூடாது. ஆனால் கர்த்தர் இட்ட கட்டளையின் பிரகாரமாக மனுஷரைப் பிடிக்கும்படிக்கு, கடந்து வந்த உண்மையான சீஷர்களிடமிருந்து வரும் செய்தியானது, வெற்றிகரமாக பிடிப்பட்டவருக்கு ஜீவனை இழப்பது மற்றும் சுயாதீனத்தை இழப்பது குறித்தே சுட்டிக்காட்டுகின்றது. மீன் பிடிக்கும் தொழிலானது அனைத்துக் காரியங்களுக்குமான முழுமையான விளக்கமாக இருப்பதில்லை, ஏனெனில் கர்த்தரால் பிடிக்கப்பட்ட அனைவரும் விரும்பி அவரிடத்தில் பிடிப்பட வேண்டும். இல்லையேல், அவர்கள் பிடிப்படாதவர்களாகவே காணப்பட்டு புறம்பாக்கிப் போடப்படுவார்கள்; மேலும் அவருடைய தனிப்பட்ட சுயாதீனம் மற்றும் ஜீவன் இழந்துபோவது என்பது அவர்கள் மகிமை, கனம் மற்றும் நித்திய காலத்திற்குமுரிய ஜீவனை அடைவதைக்குறிக்கின்றது.

இந்த மீன் பிடிக்கும் தொழிலை, நமது கர்த்தர் தாம் பேசின உவமைகளில் ஒன்றிற்கு அடிப்படையாகக்கொண்டு விளக்கியிருந்தார்; பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. இறுதியில் வலையானது கரைக்குக் கொண்டுவரப்படும் (மத்தேயு 13:47) வலை சந்தேகத்திற்கு இடமின்றி இந்தச் சுவிசேஷ யுகத்தைக்குறிக்கின்றது. மேலும், இராஜ்யம் தொடர்பான கர்த்தருடைய நோக்கத்திற்குப் பாத்திரமானவர்களும், பாத்திரமற்றவர்களும் கலந்த ஜனங்கள் பொதுவாகப் பிடிக்கப்பட்டார்கள். வலை கரைக்குக் கொண்டுவரப்பட்டது என்பது இந்த யுகத்தின் “”அறுவடை” காலத்தைக் குறிக்கின்றது. அதாவது, மனுஷரைப் பிடிப்பதற்கான நேரம் முடியும் காலப்பகுதியைக் குறிப்பிடுகின்றது. நல்ல மீன்கள் கூடைகளில் சேர்க்கப்பட்டு, ஆகாதவைகளாகிய மற்ற மீன்களோ கடலில் மீண்டுமாக எறியப்பட்டுவிட்டன என்று உவமையில் காணப்படுகின்றது. இப்படியாகவே சுவிசேஷ யுகத்தின் அழைப்பானது, சுவிசேஷ யுகத்தின் வலையானது, இந்தச் சுவிஷேச யுகத்தின் மீனவர்கள், மனுக்குலத்திலிருந்து இராஜ்யத்திற்கு எனக் கர்த்தர் கொண்டுள்ள நோக்கத்திற்குப் பாத்திரமான ஜனங்களையுடைய ஒரு விசேஷித்த வகுப்பாரைச் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர்; மேலும், மற்றவர்கள் இவ்வலைக்குள் வந்தாலும் அவர்கள் விரும்பத்தக்கவர்கள் அல்ல. அவர்கள் மீண்டுமாக லௌகீக நிலைக்குள் சறுக்கி விழுந்து போய்விடுகின்றனர். அடுத்த யுகத்திற்கான மீன்/மனுஷர் பிடிக்கப்படுதலோ, வேறுபட்டதாகவும், மிகுந்த பெரிய, பிரமாண்ட நிலையிலும் காணப்படும்.

சீஷத்துவத்தை விட உயர்வான அப்போஸ்தலத்துவம்

சீஷத்துவத்திற்கும், அப்போஸ்தலத்துவத்திற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. ஆட்டுக்குட்டியானவருக்கு 12-அப்போஸ்தலர்கள் இருக்கின்றார்கள் (வெளி. 21:14). ஆனால், சீஷர்களின் எண்ணிக்கையோ பெரிதாய் உள்ளது. சீஷன் என்ற வார்த்தையின் அர்த்தம் மாணவன் (அ) கற்றுக்கொள்கிறவன் ஆகும். மேலும் இப்பொழுதும் கர்த்தரினால் அழைக்கப்பட்டுள்ள அனைவரும், தற்கால ஒழுங்கின்/ஏற்பாட்டின் கீழ், பாத்திரமான மீன்களாக இப்பொழுது பிடிக்கப்பட்டிருக்கும் அனைவரும் கர்த்தரால் போதிக்கப்படுவதற்கு விருப்பம் கொண்டவர்களாகவும், அவருடைய போதனைகளுக்கு விருப்பத்துடன் செவிச் சாய்ப்பவர்களாகவும் இருப்பார்கள். நம்முடைய பாடத்தின் ஆதாரவசனமானது, அவருடைய சீஷர்களாக நாம் இருப்பதற்கான நிபந்தனைகளை முன் வைக்கின்றது. அதாவது, நாம் கர்த்தரை ஏற்றுக்கொண்டால் மாத்திரம் போதாது, நாம் அவருடைய வார்த்தைகளிலும் நிலைத்திருக்கின்றவர்களாய் இருக்க வேண்டும்; அவரால் போதிக்கப்படுவதிலும் நிலைத்திருக்க வேண்டும்; கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்வதிலும் நிலைத்திருக்க வேண்டும்; அவருடைய பள்ளிக்கூடத்திற்குள் நாம் பிரவேசிப்பதற்கு முன்னதாக, நாம் சுபாவத்தின்படி பாவிகளாக இருக்கின்றோம் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும், மேலும் அவருடைய பள்ளிக்கூடத்தில் பிரவேசிப்பதற்கு (அ) அவருடைய சீஷர்களாகுவதற்கு முன்பு நமக்கு அவசியமென அவர் பரிந்துரைப்பது நாம் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பது மாத்திரமேயாகும். விலையேறப்பெற்ற இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்ததான தெய்வீக வார்த்தைகளின் ஆலோசனையை நாம் ஏற்றுக்கொண்ட பிற்பாடே, விசுவாசத்தினால் இந்தப் பாவ சுத்திகரிப்பு நிறைவேறின பிற்பாடே, மாணாக்கர்களாக பள்ளிக்குள் பிரவேசித்த பிற்பாடே, நம்முடைய வளர்ச்சிக்கு அவசியமான பல்வேறு பாடங்கள் கற்க வேண்டியுள்ளது என்று நாம் உணர்ந்துக்கொள்கின்றோம்.

நமக்கு என்ன படிப்பினைகள் தேவை, என்ன அனுபவங்கள் அவசியம், என்ன பரீட்சைகள், என்ன இடர்பாடுகள், எவ்விதமான உற்சாகங்கள், எவ்விதமான உதவிகள் நமக்கு அவசியமாய் இருக்கும் என்பதை தீர்மானிக்கப் போகிறவர் போதகரே/ஆசிரியரே ஆவார். நன்மையான யாதொன்றும் நமக்குத் தடைப்பண்ணப்படுவதில்லை என்று வாக்களிக்கப்பட்டுள்ளது. நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப, அவர் நமக்கு எச்சரிப்புகளையும், சீர்த்திருத்தங்களையும், உற்சாகமூட்டுதல்களையும், ஆசீர்வாதங்களையும், வாக்குத்தத்தங்களையும் அருளுவார்; ஆனால் இவைகளை நாம் நன்மையான விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. சீஷனாக பள்ளியில் சேரும் அனைவரும், கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்திலிருந்து, இராஜ்யத்தின் மகிமைக்கும், போதகருடன் உடன்சுதந்திரராய் இருக்கும் நிலைக்கும் பட்டமளிக்கப்படும் மாபெரும் பரிசைப் பெற்றுக்கொள்வதில்லை; மாறாக சீஷத்துவத்தில் உண்மையுடனும், பொறுமையுடனும் தொடர்ந்து நிலைநிற்பவனும், தன்னுடைய ஓட்டத்தை முடிக்கும் வரையிலும் மாபெரும் ஆண்டவர் போதிக்கும் பாடங்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவனுமே, தனது கிரீடத்தை கர்த்தருடைய கரங்களிலிருந்து நிச்சயமாகப் பெற்றுக்கொள்வான்.”