R5021 – ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5021 (page 149)

ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்

PRAYER A GREAT PRIVILEGE

மத்தேயு 6:1-18

“”மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.” மத்தேயு 6:1

இன்றைய பாடத்தில் ஆண்டவர், தர்மம் கொடுப்பதிலுள்ள சரியான விதம் மற்றும் சரியில்லாத விதம் குறித்துக் கூறுகின்றார். பிற்பாடு அவர் சரியான மற்றும் சரியில்லாத ஜெபம் குறித்தும், சரியான மற்றும் சரியில்லாத உபவாசம் குறித்தும் விளக்குகின்றார். இவைகள் அனைத்தையும் பேசுகையில் அவர் மாய்மாலத்தையும், நாடகமிட்டுக் காட்டுவதையும் குற்றப்படுத்திப் பேசினார். பரமப் பிதாவைப் பிரியப்படுத்துவதற்கும், அவருடைய அங்கீகரிப்பைப் பெற்றுக்கொள்வதற்குமான விருப்பத்தினால் மாத்திரமே, கர்த்தருடைய பின்னடியார்கள் இயக்கப்படுகின்றவர்களாய் இருக்க வேண்டும். சில நேரங்களிலும், இடங்களிலும் மற்றவர்கள் சூழ்ந்திருக்கும்போதுங்கூட, அவர்களுடைய முன்னிலையில் தர்மம் வழங்குவது சரியான காரியமாக இருப்பதுண்டு. சில நேரங்களிலும், இடங்களிலும் மற்றவர்கள் முன்னிலையில் ஜெபம் பண்ணுவது சரியான காரியமாக கருதப்படுவதற்குங்கூட வாய்ப்புண்டு. சில சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் நாம் உபவாசம் இருப்பதை அறிய நேரிட்டாலுங்கூட அவர்களுடைய பழிதூற்றுதலுக்கு இடமிராது.

மாபெரும் போதகர் குறிப்பிடும் கருத்தானது, நம்மை இயக்கும்/தூண்டும் தூண்டுதலாகக் காணப்படுகின்றது. ஒருவேளை நாம் சுயநலமான நோக்கங்களினால்/தூண்டுதல்களினால் இயக்கப்படுகின்றவர்களாய்க் காணப்படுவோமானால், ஒருவேளை நாம் பாராட்டையோ, பூமிக்குரிய ஆதாயத்தையோ, பிரபலத்தையோ நாடுபவர்களாய்க் காணப்படுவோமானால், அதன் வாயிலாக நாம் தெய்வீக அங்கீகரிப்பையோ அல்லது ஆசீர்வாதத்தையோ பெற்றுக்கொள்ள முடியாது. “”இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.” நாம் நன்மைகள் செய்கிறதோ அல்லது ஜெபம் பண்ணுகிறதோ அல்லது உபவாசம் பண்ணுகிறதோ மற்றவர்களால் அறியப்படலாம். ஆனால், மற்றவர்களால் அறியப்பட வேண்டும் என்ற விதத்தில் நாம் நன்மைகளை, அல்லது நம்முடைய ஜெபங்களை, உபவாசங்களைச் செய்கின்றவர்களாய்க் காணப்படக்கூடாது. இப்படிப்பட்டவர்களுக்கு (மற்றவர்கள் அறிய வேண்டும் என்று செய்பவர்களுக்கு) “”தங்களுக்கான பலனை அடைந்து தீர்ந்தார்கள்” என்று கர்த்தர் கூறுகின்றார். இவர்கள் நாடின விளம்பர பிரபலத்தைத் தவிர வேறெதையும் அடைவதில்லை.

ஜெபம் எனும் சிலாக்கியம்

ஜெபம் ஒரு சிலாக்கியமாகும். ஜெபம் பண்ணும்படி, இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளைக்கொடுக்கவில்லை. ஜெபம் பண்ணுவது எப்படி என்று அவர்கள் வேண்டிக்கொள்ளாதது வரையிலும், ஜெபம் பண்ணுவதற்கான மாதிரியையும் அவர்களுக்குக் கர்த்தர் அருளவில்லை. “”வார்த்தைகளினால் உச்சரிக்கப்படுகின்ற அல்லது உச்சரிக்கப்படாத ஆத்துமாவின் உண்மையான வாஞ்சையே ஜெபமாகும்.” பரலோகக் கிருபையின் சிங்காசனத்தை அணுகுவதற்குரிய சிலாக்கியத்தை நாம் உணர்ந்துக்கொள்வதற்கு முன்னதாக, நமக்குத் தெய்வீகக் கிருபை மற்றும் உதவி, தேவையாய்யுள்ளது என்பதை நாம் முதலாவது உணர்ந்துக்கொண்டவர்களாய் காணப்பட வேண்டும். ஜீவியத்தின் போராட்டங்கள், துக்கங்கள், பரீட்சைகள், சோதனைகளானது, தேவனுடைய பிள்ளைகளை அடிக்கடி ஜெபம்பண்ணத் தூண்டுகின்றது. தேவனுடைய ஜனங்கள் தங்களுடைய வேதனையான சூழ்நிலைகளில் மாத்திரமல்லாமல், தங்களுடைய சந்தோஷமான சூழ்நிலைகளிலும் கூட நன்றி செலுத்துவதற்கும், துதி ஏறெடுப்பதற்கும், தொழுது கொள்வதற்கும் கிருபையின் சிங்காசனத்திற்குச் செல்ல விரும்புவது என்பது உயர்தரமான கிறிஸ்தவ வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகின்றது.

உலகத்தார் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தர் கூறாமல், தம்முடைய சீஷர்களுக்கு மாத்திரமே… “”நீங்கள் ஜெபம் பண்ணும்போது” என்று கூறினதைக் கவனிக்க வேண்டும். புறஜாதிகள், மனுக்குலத்தின் உலகம், பொதுவாக கிருபையின் சிங்காசனத்தை அணுகுவதற்கான வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்கள். தேவனுடன் உடன்படிக்கை உறவினைக் கொண்டிருந்தவர்கள் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) மாத்திரமே, தங்களுடைய விண்ணப்பங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற தெய்வீக வாக்குறுதியைப் பெற்றிருந்தார்கள். இது எல்லோரையும் ஜெபம் செய்யும்படிக்கு ஊக்குவிக்கும் பழக்கத்தையுடைய சிலருக்கு, ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஜெபத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கொள்கையை, நாம் சுருக்கமாக சூழ்நிலையைப் பார்ப்பதின் மூலமே அறிந்துவிடலாம். அதைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஆதாமின் சந்ததியாராகிய உலகத்தார், பொல்லாத கிரியைகளின் நிமித்தம், தேவனிடமிருந்து தூர விலக்கப்பட்டார்கள். ஆதாம், தேவனுடன் ஓர் உடன்படிக்கையின் கீழ்க் காணப்பட்டார். மேலும், இந்த உடன்படிக்கையின் காரணமாக ஆதாம், தேவனுடைய குமாரனுக்குரிய சிலாக்கியங்களை அனுபவித்தார். இந்தச் சிலாக்கியங்களானது, உறவையும், ஐக்கியத்தையும், ஜெபத்தையும், தெய்வீக மேற்பார்வை மற்றும் பராமரிப்பையும் உள்ளடக்கினது. ஆனால், ஆதாமினுடைய கீழ்ப்படியாமை அந்த உடன்படிக்கையை முறித்துப்போட்டு, அந்த உடன்படிக்கை உறவையும், அதன் அனைத்துச் சிலாக்கியங்களையும் அழித்துப்போட்டது (ஓசியா 6:7). தேவனுடன் உடன்படிக்கை உறவிற்குள்ளாக மீண்டுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே இன்று ஜெபமாகிய சிலாக்கியத்தை அனுபவிக்கின்றார்கள். இப்படியாகவே மாம்சீக இஸ்ரயேலர்கள், நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். ஆகவே, எருசலேமிலுள்ள ஆலயம், ஜெபவீடு என்று அழைக்கப்பட்டது. இது விசேஷித்த விதமாக யூத தேசத்தாருக்குக் காணப்பட்டது. ஆனால், மற்ற அனைத்துத் தேசத்தாருக்கும் யூதமார்க்கத்தமைந்தவர்களாகுவதற்கான (யூத மதத்திற்கு மாறும்) சிலாக்கியம் இருந்தது. மேலும், இப்படி யூதமார்க்கத்தமைவதன் மூலமாக, ஜெபத்தின் சிலாக்கியத்தையும் உள்ளடக்கியுள்ள யூதர்களுக்கான அனைத்துச் சிலாக்கியங்களுக்குள் இவர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பு இருந்தது.

நமது கர்த்தருடைய சீஷர்களாக, அடிச்சுவடுகளைப் பின்பற்றும் பின்னடியார்களாக வந்தவர்களை, பாவங்களுக்கான தம்முடைய மேலான பலியின் மூலம் இவர்கள், ஜெபத்தினுடைய மேலான சிலாக்கியங்களை அடையத்தக்கதாக, இவர்களைப் பரிசுத்தம்பண்ணி, பாத்திரவான்களாக ஆக்கினார். இவர்கள் பெந்தெகொஸ்தே நாள் முதல் தேவனுடைய புத்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர், மேலும் இவர்கள் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் ஜெநிப்பித்தலையும் அனுபவித்தார்கள். முதலில் யூத விசுவாசிகள் மாத்திரமே காணப்பட்டார்கள். ஆனால், [R5021 : page 150] ஏற்றவேளையில் யூதர்களுக்கும், புறஜாதிகளுக்குமிடையே இருந்த சுவர் உடைக்கப்பட்டது. பின்னர், கொர்நேலியு முதல், அனைத்துப் புறஜாதி விசுவாசிகளும் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட புத்திரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜெபத்தின் அனைத்துச் சிலாக்கியங்களும் அருளப்பெற்றார்கள் (அப்போஸ்தலர் 10).

இந்தப் புறஜாதிகள், மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மூலமாக தேவனுடன் ஓர் உறவிற்குள் வராமல், பலியின் உடன்படிக்கையின் மூலமாகவே வந்தார்கள். இந்த உடன்படிக்கையின் கீழ்தான் இவர்கள் கிறிஸ்துவுடன் உடன் பலிச்செலுத்தும்படிக்கு அழைக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். “”பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்” (சங்கீதம் 50:5). கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, இந்தப் பலியின் உடன்படிக்கையை அவரோடு பண்ணும் புறஜாதிகள் மாத்திரமே இந்த யுகத்தில் தேவனுடைய புத்திரர்களாகி, ஜெபம் எனும் சிலாக்கியத்தை உள்ளடக்கியுள்ள புத்திரத்துவத்திற்கான சிலாக்கியங்களை அனுபவிக்கின்றன்றவர்கள் ஆகின்றார்கள். தேவனுடன் உடன்படிக்கை உறவிற்குள் வராதவர்களை ஜெபம் பண்ணும்படி அழைக்கும் பழக்கமானது, வேதவாக்கியங்களின்படியான காரியமும் இல்லை, சரியானதும் அல்ல. தேவன் பாவிகளுடைய ஜெபத்தைக் கேட்பதில்லை (யோவான் 9:31). கிறிஸ்து மூலம் தேவனிடத்திற்கு வருபவர்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். ஏனெனில், இயேசு அவர்களுக்குப் பரிந்து பேசுபவராக இருக்கின்றார். ஆகவே, தங்களுடைய சொந்த நாமங்களில்/நாமங்களின் மூலம் தேவனை அணுகுபவர்கள் அதாவது, பரிந்து பேசுபவராகிய கர்த்தரையும், சீஷத்துவத்திற்கான அவருடைய நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் பிதாவை அணுகுபவர்களுக்கு, பிதாவினிடத்தில் எவ்விதமான உறவும் இல்லை. மேலும், அவர்களுடைய ஜெபங்களும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பது தெளிவாகின்றது.

ஆகவே, நம்முடைய நண்பர்களையும், அயலார்களையும், தேவனிடத்தில் ஜெபம் ஏறெடுப்பதற்கும், அவர்கள் ஏறெடுக்கும் விண்ணப்பங்கள் நிறைவேறும் என நம்பிக்கைக்கொள்வதற்கும் நாம் புத்திமதிச் சொல்வதற்குப்பதிலாக, வேதவாக்கியங்களுக்கு இசைவாக அவர்கள் பாவங்களுக்காக மனம் வருந்தவும், தங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பை விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளவும், இயேசுவின் அடிச்சுவடுளைப் பின்தொடரும் பின்னடியார்களாக ஆகுவதற்குத் தங்களை முழுமையாய் அர்ப்பணம் பண்ணவும் நாம் ஆவிக்குரிய ஆலோசனை வழங்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இப்படியாகச் செய்த பின்னர் அவர்கள் தேவனுடைய புத்திரர்களாகி, தற்காலத்திலும், மகிமையான எதிர்க்காலத்திலும், புத்திரத்துவத்திற்குரிய அனைத்துச் சிலாக்கியங்களையும் பெற்றுக்கொள்வார்கள் என்றும் ஆவிக்குரிய ஆலோசனை வழங்க வேண்டும்.

அந்நிய தேவர்களை வணங்குபவர்களின் வீணான அலப்பல் வார்த்தைகள்

உலகத்தை விட்டுவிட்டு, கிறிஸ்து மூலம் தேவனுடன் உடன்படிக்கை உறவிற்குள் வராத அனைவரும் புறஜாதிகளும், அந்நிய தேவர்களை வணங்குகின்றவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட அந்நியர்கள் தேவனுடைய கிருபை பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழியை, வாசலைப் புரிந்துக்கொள்ளாததினால், அநேக வார்த்தைகளைப் பயன்படுத்துவதினாலும், தங்கள் ஜெபங்களைத் திரும்பத் திரும்ப கூறுவதினாலும், தங்கள் ஜெபங்கள் கேட்கப்படும் என்று எண்ணிக்கொள்கின்றனர். சிலர் ஜெப சக்கரங்களைப் (prayer wheels – China) [R5022 : page 150] பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் ஜெபமாலைகளைப் பயன்படுத்துகின்றனர். வேறு சிலர் குறிப்பிட்ட வார்த்தைகளைப் பல நூறுமுறை கூறி ஜெபிக்கின்றனர்.

இயேசுவின் பின்னடியார்களாகாத எவர்களுடைய ஜெபமும் கேட்கப்பட மாட்டாது. நீண்ட ஜெபம் ஏறெடுப்பதினால், தங்களுடைய ஜெபங்கள் பிதாவினால் அங்கீகரிக்கப்படும் என்று இயேசுவின் பின்னடியார்கள் எண்ணிக்கொள்ள வேண்டாம் எனப் புத்திமதி இயேசு கூறுகின்றார். இவர்கள் நீண்ட நேரம் ஜெபம் ஏறெடுக்க வேண்டியதில்லை. ஏனெனில், “”நீங்கள் கேட்பதற்கு முன்னதாகவே உங்களுக்கு என்ன தேவை என்பதை உங்கள் பிதா அறிந்திருந்கின்றார்” என இயேசு கூறியுள்ளார். இப்படிப் பிதா அறிவார் என்றால், பின்னே நாம் ஏன் கேட்க வேண்டும்? என்று கேள்விகள் எழலாம். நம்முடைய விசுவாசத்தைத் தூண்டிவிடுவதற்கும், நமக்கு அதிகமான ஆசீர்வாதங்களை அடிக்கடி கொடுப்பதற்கும்தான் இந்த ஜெபம் எனும் தெய்வீக ஏற்பாடு ஒழுங்குப்பண்ணப்பட்டிருப்பதற்கான நோக்கமாகும். தம்மை மிகவும் அன்பு செய்யும் அருமையான பிள்ளைகளாக தேவன் நம்மைக் கையாண்டு, நமக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஜீவியத்தின் அனுபவங்களினால் நம்மைப் பயிற்றுவிக்கும் விதமாகவும் வழிநடத்துகின்றார். இயேசுவுக்கு நீண்ட ஜெபங்கள் ஏறெடுக்க வேண்டியிருந்தபோதெல்லாம், அதை அவர் வெளியரங்கமாக, பொதுவிடங்களில் செய்யவில்லை. அவர் மலைக்குப் போய் ஜெபம் பண்ணினார். இப்படியே அவருடைய பின்னடியார்களுடைய விஷயத்திலும் காணப்பட வேண்டும். கர்த்தருடைய ஜனங்களின் கூடுகையின் மத்தியில் பொதுவாக ஜெபம் ஏறெடுக்க வேண்டியது இருந்தாலுங்கூட, இது அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தாலுங்கூட, நாம் பிதாவுடன் தனிமையில் உறவு வைத்தக்கொள்ள பிரதானமாக நாட வேண்டும்.

முறையான வார்த்தைகள்

இயேசு தம்முடைய சீஷர்களுடைய விண்ணப்பத்திற்கு இணங்கி சரியான ஜெபத்திற்கான ஒரு மாதிரியை அவர்களுக்குக்கொடுத்தார். அந்த மாதிரி ஜெபத்தில் நாம் அதன் சுருக்கத்தையும், அதன் எளிமையையும், அதன் வழிக்காட்டுதலையும், அதன் ஒழுங்கையும் காண முடிகின்றது.

(1) பிதாவிடம் பிள்ளைகள்போன்று, நாம் துதி ஏறெடுப்பதுடன் ஜெபமானது ஆரம்பமாகுகின்றது. “”நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” (மத்தேயு 6:9). தேவனுடைய நாமம் என்பது அவருடைய குணலட்சணத்திற்கும், அவருடைய இராஜ்யத்திற்கும், அவருடைய தனித்துவத்திற்கும் அடையாளமாக இருக்கின்றது. முதலாவதாக, நம்முடைய மாபெரும் சிருஷ்டிகருக்கு கனத்தையும், மதிப்பையும், மகத்துவத்தையும், மகிமையையும் செலுத்த வேண்டும். தேவன் நியமித்துள்ள வழியில், பரலோகத்தில் இருக்கும் அவரை அழைப்பதில் நாம் பிரியப்பட வேண்டும்.

(2) வரிசையில் அடுத்ததாக, நாம் தெய்வீக அதிகாரம் மற்றும் ஆளுகையை நம்புவதாக ஒப்புக்கொள்ள வேண்டும். அதாவது, இப்படிச் சொல்வது என்பது சந்தோஷமோ, துக்கமோ, இன்பமோ, வலியோ, ஜீவனோ, மரணமோ, எதுவாக இருப்பினும், நம்முடைய இருதயங்கள் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட்டு, ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளதைக் குறிக்கின்றது. இன்னுமாக, இப்படிச் சொல்வது என்பது இப்பொழுது பரலோகத்தில் செயல்பட்டு வருவதுபோன்று, இறுதியில் தெய்வீகச் சித்தமானது பூமியில் முற்றும் முழுமையாகச் செய்யப்படும் என்ற தெய்வீக வாக்குத்தத்தம் மற்றும் வல்லமை மீது நாம் நமது நம்பிக்கையைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதையும் குறிக்கின்றது. “”உம்முடைய ராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10). மேலும், இதை ஜெபத்தில் கூறுவதின் மூலம் நாம் வரவிருக்கின்ற மேசியாவின் இராஜ்யத்தை ஒப்புக்கொள்கின்றவர்களாய் இருக்கின்றோம். மேலும், அந்த இராஜ்யத்துடன் தொடர்புடைய நம்முடைய சொந்த நம்பிக்கைகளையும் ஒப்புக்கொள்கின்றவர்களாய் இருக்கின்றோம். அதாவது, நாம் இறுதிவரை உண்மையுள்ளவர்களாய்க் காணப்படுவோமாகில், நாம் கர்த்தருடன் அவருடைய மகிமையான சிங்காசனத்தில் பங்கடைவோம் என்றும், தெய்வீக வல்லமை மற்றும் இரக்கத்தின் ஆசீர்வாதங்களை மனுக்குலத்திற்கு வழங்கி, விருப்பத்துடனும், கீழ்ப்படிதலுடனும் காணப்படும் மனுக்குலத்தைச் சீர்த்திருத்துவதில் பங்கடைவோம் என்றுமுள்ள நம்முடைய நம்பிக்கைகளையும் ஒப்புக்கொள்கின்றவர்களாய் இருப்போம்.

(3) அடுத்தது நம்முடைய அன்றாட தேவைகள், நம்முடைய ஆகாரம் பற்றின விண்ணப்பமாகும். “”எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத்தேயு 6:11). எவ்வளவு எளிமையான வார்த்தைகள்! தேவன் நம்மையும், நம்முடைய தேவைகளையும் மறக்க மாட்டார் என்றவிதத்தில் நமக்கு அப்பமும், தண்ணீரும் தருவார் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். நாம் விண்ணப்பிக்கையில், நாம் கர்த்தர்மேல் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்; அதாவது, கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதற்குக் கொண்டுள்ள வல்லமை மற்றும் விருப்பத்தின் விஷயத்தில் எவ்விதமான சந்தேகமும் இல்லாமல், அவர்மேல் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கின்றோம் என்று மாத்திரமே தெரியப்படுத்துகின்றவர்களாய் இருக்கின்றோம். ஆஸ்தி, ஐசுவரியம் போன்றவைகளைத் தேவன் வாக்களிக்கவுமில்லை, நாமும் அவைகளுக்காக ஜெபம் பண்ணக்கூடாது. நல்ல உயர்தரமான ஆகாரம், சொகுசுகளையும் நாம் குறிப்பிட்டு ஜெபத்தில் கேட்கக்கூடாது. நமக்குச் சிறந்தது என ஜீவியத்தின் தேவைகளினுடைய விஷயத்தில், தந்தையே நீர் காண்கிறது எதுவோ, அதையே எங்களுக்கு அனுதினம் அருளியருளும் என்றவிதத்திலேயே நம்முடைய ஜெபம் காணப்பட வேண்டும். மேலும், ஒருவேளை இந்தத் தேவைகளைத் தெய்வீக ஏற்பாடு/வழிநடத்துதல் நமக்கு சந்திக்கவில்லையெனில், தேவன் கவனம் செலுத்தாதால் அல்லது அவருக்கு வல்லமை இராததினால் நம் தேவை சந்திக்கப்படவில்லை என்று நாம் எண்ணாமல், இப்படிச்செய்வதே நமக்குச் சிறந்தது எனத் தெய்வீக ஞானம் கண்டதினாலேயாகும் என்று நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

(4) “”எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” (மத்தேயு 6:12). இவ்வார்த்தைகளில் இரக்கம் காட்டுபவர்கள் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள் என்ற கர்த்தருடைய போதனையும், மன்னிப்பு வழங்குகிறவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்ற கர்த்தருடைய போதனையும் வெளிப்படுகின்றது. இங்கு ஆதிப்பாவம் பற்றிப் பேசப்படவில்லை. இரத்தத்தின் கீழ்க் காணப்படுபவர்களுக்கும், அதாவது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கும், அவருடன் உடன்படிக்கை உறவிற்குள் வந்தவர்களுக்கும் இந்த ஆதிப்பாவம் மூடப்பட்டு உள்ளது. இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் பாவமானது, நம்முடைய அன்றாட குறைவுகள், பெலவீனங்கள், தவறுகள், தெய்வீகப் பிரமணாத்திற்கு எதிரான மீறுதல்கள் ஆகும். பிதா நம்மை மன்னிக்கிற விஷயத்தை, நாமும் மற்றவருடைய விஷயத்தில் செய்யவேண்டும் என்ற விஷயத்தை நாம் ஆழமாக உணர்ந்துக்கொண்டு, ஜெபம் பண்ணும்போதுதான் நாம் மன்னிக்கப்படுவோம் என்றவிதத்தில் தெய்வீக ஏற்பாடு காணப்படுகின்றது.

(5) “”எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல் (சோதனையில் கைவிட்டுவிடாமல்) தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” (மத்தேயு 6:13). நம்முடைய சொந்த பெலவீனங்களையும், பூரணமின்மையையும் நாம் உணர்கின்றோம். ஆகவே, தெய்வீக வழிநடத்துதலின்படி பரீட்சைகள் மற்றும் சோதனைகளுக்குள் வழிநடத்தப்பட வேண்டும் என்பதை அறிந்துள்ள நாம், நம்முடைய சொந்த பலத்தினால், சோதனையில் போராடுவதற்கு விடப்படாமல், அவருடைய கிருபை நமக்கு போதுமானதாய் இருக்கின்றபடியால், அக்கிருபையை நமக்கு அருளும்படிக்கு நாம் ஜெபம்பண்ண வேண்டும்.

(6) பொல்லாங்கன் ஒருவன் இருக்கின்றான் என்றும், அவனுக்கு ஜனங்கள் மத்தியில் மிகுந்த வல்லமையும், செல்வாக்கும் இருக்கின்றது என்றும், அவன் இந்த யுகத்தில் தேவனாய் இருக்கின்றான் என்றும், ஆகாயத்து அதிகாரப் பிரபுவாய் இருக்கின்றான் என்றும் வேதம் நமக்கு நிச்சயமளிக்கின்றது. ஆகவே, சாத்தானின் தந்திரங்களை எதிர்த்துப்போராடும் விஷயத்தில் நம்முடைய சொந்தபலத்தினால் போராடுவதற்கு நாம் கைவிட்டுவிடப்பட வேண்டாம் என்று கர்த்தரிடத்தில் விண்ணப்பிப்பது எத்துணைச் சரியானக் காரியமாக உள்ளது!

“”இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்” என்ற வார்த்தைகள், பழைய கிரேக்க மூலப்பிரதிகளில் இல்லை. ஆகையால், Revised Version மொழியாக்கத்தில் இவ்வார்த்தைகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்காலத்தின் இராஜ்யமோ, ஆளுகையோ தேவனுடையதல்ல. அவருடைய இராஜ்யத்தையும், வல்லமையையும், மகிமையையும் தற்காலத்தில் பார்க்க முடியவில்லை. சாத்தானுடைய சாம்ராஜ்யம் தகர்க்கப்படுவதற்கும், எதிராளியானவன் ஆயிரவருஷம் அளவும் கட்டப்படுவதற்கும், மேசியாவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட நாம் காத்திருக்கின்றோம். அப்போதுதான் தெய்வீக இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் காணப்படும்.”