R4157 (page 92)
யோவான் 10:1-18
“”நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.” (வசனம் 10:1)
நமது கர்த்தர் தம்முடைய உண்மையுள்ளவர்களிடம் கொண்டிருக்கும் உறவுமுறையை விவரிக்கும் வண்ணத்தில், வேதவாக்கியங்களானது அநேக மிக அருமையான மற்றும் அர்த்தமுள்ள பெயர்களை அவருக்கு அளிக்கின்றது. இப்படிப்பட்ட மிக அருமையான மற்றும் கவரும் பெயர்களில் ஒன்று நல்ல மேய்ப்பன் ஆகும்; இதைப் பெரிய மேய்ப்பன், தலைமை மேய்ப்பன் என்றும் வழங்கலாம். இதுபோலவே நமது கர்த்தருடைய பின்னடியார்களுக்குப் பொருந்தும் பல்வேறு பெயர்களில், “”ஆடு” என்பது மிகவும் பரிச்சயமானதாகவும், மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கின்றது. இப்படியான ஓர் உதாரணத்தைப் பயன்படுத்துவது என்பது, சுபாவத்தின்படியான மனுஷனுக்குத் தோன்றியிருக்காது. உதாரணத்திற்கு இங்கிலாந்தின் சீமான்களும், பிரபுக்களும் கொண்டுள்ள பல்வேறு முத்திரைகளிலும், மரபுரிமை சின்னம் உடைய மேல் சட்டைகளிலும், மிருகங்கள் (அ) மிருகங்களின் தலைகள் இடம்பெறுகின்றன. இவைகளில் ஏதாவது ஒன்றில் ஆட்டின் தலை இடம்பெறுகின்றதா? இப்படியாக இல்லை. அதுவும் ஒருவேளை ஏதோ ஒரு பூமிக்குரிய பிரபுவானவன் ஆட்டின் சின்னத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அது முரட்டுத்தனமான கொம்பைக் கொண்டுள்ள செம்மறியாட்டுக்கடாவாகவே இருக்கும். சிங்கத்தின் தலைகள், புலியின் தலைகள், கழுகின் தலைகள், வலுசர்ப்பம் முதலிய கொடிய மிருகங்களின் தலைகள் பொதுவாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இது பலமுள்ளவனாகவும், கொடியவனாகவும், மற்றவர்களை அச்சுறுத்தபவனாகவும் காட்சியளிப்பதற்கான மாம்ச சுபவாத்தின்படியான மனுஷனுடைய ஆசையையும், மனதையும் வெளிப்படுத்துகின்றது. தம்மை நல்ல மேய்ப்பன் என்றும், தம்முடைய பின்னடியார்கள் ஆடுகள் என்றும் கூறுபவர் மேற்கூறப்பட்ட விஷயங்களில் சுபாத்தின்படியான மனுஷனிடத்திலிருந்து முற்றிலுமாய் வேறுபட்ட கருத்தைக்கொண்டிருப்பவர் ஆவர்; மேலும் இதை அவருடைய பின்னடியார்களானவர்களாகிய நாம் கருத்தில் எடுத்துக்கொண்டு, உணர்ந்துக்கொண்டு, மேய்ப்பனாகிய அவரிடத்தில் நமக்கிருக்கும் உறவில், ஆட்டினுடைய சுபாவத்தை அதிகமதிகமாய் வளர்த்திக்கொள்ள வேண்டும்.
நம்முடைய பாடத்தின் உவமையானது, இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது; முதலாவதாக இயேசு ஆட்டுத்தொழுவத்தின் வாசலாய் இருக்கின்றார் என்றும், இரண்டாவதாக இயேசு மேய்ப்பனாக இருக்கின்றார் என்றும் காட்டப்படுகின்றது. உவமையில் விவரிக்கப்பட்டுள்ள தொழுவம் என்பது, பின்வரும் விளக்கத்தில்/உவமையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. அது கள்வர்களிடமிருந்தும், இரைத்தேடித்திரியும் காட்டு விலங்குகளிடமிருந்தும் பாதுகாப்பான இடமாகவும், இளைப்பாறுவதற்குரிய இடமாகவும் இருக்கின்றது. இந்தத் தொழுவங்களுக்கு ஒரே வாசல் இருந்தது; மேலும் உண்மையான மேய்ப்பனை அறிந்தவராகவும், உண்மையான மேய்ப்பனை மாத்திரம் உள்ளே அனுமதித்து, வேறு எவரையும் உள் அனுமதிக்காதவராகவும் இருக்கும் காவல்காரர் ஒருவர், வாசலைக் காவல் காத்துக்கொண்டிருப்பார். நமது கர்த்தர் தம்மைத் தேவனுடைய மந்தைகளுக்கான உண்மையான மேய்ப்பனாகவும், காவல்காரன் உள்ளே அனுமதிக்கக்கூடிய ஒரே நபராகவும், ஆடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய உரிமை உடையவராகவும், ஆடுகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறவராகவும் கூறுகின்றார். நல்ல மேய்ப்பன் மற்றும் கெட்ட மேய்ப்பனை வித்தியாசம் காண முடிந்த காவல்காரன், நியாயப்பிரமாண [R4157 : page 93] உடன்படிக்கையைக் குறிக்கின்றார். நியாயப்பிரமாணத்திற்குப் பதில் கொடுக்க முடியாதவர்களுக்கு, நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதவர்களுக்கு, மேய்ப்பன் என்றும், மேசியா என்றுமுள்ள உரிமையை உறுதிப்படுத்த/மெய்ப்பிக்க முடியாது. ஆனால் நமது கர்த்தர் நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளை, முற்றும் முழுமையாக நிறைவேற்றினார் . . . “”அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை” (1 பேதுரு 2:22). அவர் ஏற்கெனவே பரிசுத்தமானவராகவும், கபடில்லாதவராகவும், பாவிகளுக்கு விலகினவராகவும் காணப்பட்டார். இப்படியாகவே, அவரே உரிமையுள்ள மேய்ப்பன் என்று நமக்கு அடையாளம் காட்டப்படுகின்றார்; மற்றவர்கள் அவருடைய நாமத்தில் வந்து, மேசியா என்று தங்களை அறிக்கைப் பண்ணிக்கொண்டார்கள்; இவர்கள் பொய் மேசியாக்கள் ஆவர்; இவர்கள் ஆடுகளைக் கவருவதற்கு முயற்சித்தனர்; ஆனால் இவர்கள் வஞ்சகர்கள் என்றும், “”கள்ளரும், கொள்ளைக்காரரும்” என்றும், இவர்கள் ஆடுகளைத் திருடுவதற்கே உதவுகின்றனர் என்றும், ஆடுகளின் நன்மைக்காக அல்லாமல், தங்களுடைய தனிப்பட்ட, சுயநலமான இலட்சியங்களினால் தூண்டப்பட்டவர்கள் என்றும், நமது கர்த்தர் கூறுகின்றார்.
ஆண்டவருடைய ஆடுகளுக்கான உண்மையான மேய்ப்பனாகுவதற்கும், ஆடுகளைச் சத்தியம் மற்றும் கிருபை எனும் புல்லுள்ள இடங்களிலும், அமர்ந்த தண்ணீரண்டைகளிலும் நடத்த வெளியே கொண்டு வருவதற்கும், பின்னர் தொழுவத்திலுள்ள இளைப்பாறுதலுக்குள்ளும், பாதுகாப்பிற்குள்ளும் கொண்டு வந்துவிடுவதற்குமான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கும் ஒரே ஒரு வழி உள்ளது. அந்த வழி, சிலுவையின் வழியாகும் . . . அதாவது அனைவருக்குமான ஈடுபலியாக தம்மையே ஒப்புக்கொடுத்து விடுவதாகும். இதை நமது கர்த்தர் செய்து, இப்படியாக ஆட்டுத்தொழுவத்தினுடைய வாசலாகி, ஜீவனுக்கான புதிய பாதையைத் திறந்து வைத்தார். ஆனால் தொழுவத்திற்குப் புதிய வாசலை உண்டு பண்ணுவதாக இராமல், மாறாக முன்பு பூட்டப்பட்டிருந்த வாசலே திறக்கப்படுகின்றது என்று புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். வாசல் நியாயப்பிரமாணமாய் இருந்தது; நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாதது வரையிலும் இந்த வாசல் திறக்கப்பட முடியாது. இப்பொழுதோ நியாயப்பிரமாணத்தைக்கைக்கொண்ட நமது கர்த்தர் இயேசு, தம்முடைய உண்மையான ஆடுகளானது, நியாயப்பிரமாணத்தின் ஆவியைக் கைக்கொள்வதின் மூலமாய், இதே வாசல் வழியாய் உட்பிரவேசிப்பதற்கு ஏற்பாடு பண்ணியுள்ளார்; நியாயப்பிரமாணத்தின் எழுத்துக்களைக் கைக்கொள்வது என்பது கூடாத காரியம், ஆனால் அதன் ஆவியைக் கைக்கொள்வதன் மூலமாய் உட்பிரவேசிக்க ஏற்பாடு பண்ணியுள்ளார். தொழுவத்திற்குள் உண்மையான ஆடு பிரவேசிப்பது குறித்து, அப்போஸ்தலர் ‘மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்”; (ரோமர் 8:4) என்று கூறுகின்றார்; ஏனெனில் நமது மேய்ப்பன், நாம் குறைவுப்பட்டிருப்பதை நிறைவுபடுத்தத்தக்கதாக, நம் சார்பிலான அவருடைய கிருபையை, (நமக்கான) தகுதியாக ஏற்பாடு பண்ணியுள்ளார். நாம் எதுவரைக்கும் அவருடையவர்களாக காணப்பட்டு, அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பதற்கு முயற்சிக்கின்றோமோ, அவ்வளவாய் நம்முடைய ஒவ்வொரு குறைவும் அவருடைய (திரளான கிருபைகளினால்) திரளானவைகளால் ஈடுகட்டப்படும். அவருக்குக் காவல்காரன் திறப்பான்; அவரைக்குறித்தே நியாயப்பிரமாணங்களும், தீர்க்கத்தரிசனங்களும் சாட்சிப்பகர்கின்றன.
பிறவிக் குருடனாக இருந்தவனும், ஜெப ஆலயத்திலிருந்து தள்ளப்பட்டவனுமான மனுஷன் கேட்பதற்காகவும், அம்மனுஷனைப் புறம்பாக்கிப் போட்ட பரிசேயர்கள் கேட்பதற்காகவுமே இந்த உவமை உரைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. கர்த்தருடைய ஜனங்களின் தொழுவம் என்று எண்ணப்படுவதிலிருந்து, அம்மனுஷன் புறம்பாக்கிப் போடப்பட்டதினிமித்தம், அம்மனுஷன் சோர்வடைந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அம்மனுஷன் உண்மையிலேயே கர்த்தருடைய தொழுவத்திலிருந்து புறம்பாக்கித் தள்ளப்படாமல், மாறாக இக்காரியம் தொடர்புடைய விஷயத்தில் எவ்விதமான வல்லமையையும் கொண்டிராதவர்களால், மனித அமைப்பிலிருந்து மாத்திரமே தள்ளப்பட்டிருக்கின்றான் எனும் உண்மையை விவரிக்கும் வண்ணமாகவே, கர்த்தர் இந்த உவமையைக் கொடுத்தார் என்று கருதப்படுகின்றது. கர்த்தரை வழிநடத்துனராகவும், மேய்ப்பனாகவும் கொண்டிருக்கும் மந்தையையே கர்த்தர் கொண்டிருக்கின்றார் என்பதையும், தம்மூலம் அல்லாமல், தம்முடைய பலியில் தம்மால் நிறைவேற்றப்போகும் வேலையின் மூலம் அல்லாமல், இந்தப் பலியை, விசுவாசத்தின் வாயிலாய் நாம் ஏற்றுக்கொள்வதன் மூலம் அல்லாமல், அந்த மந்தைக்குள் வருவதற்கு வேறு வழி இல்லை என்பதையும் அம்மனுஷனும், பரிசேயர்களும், அவருடைய சீஷர்களும், நாமும் காண்பதற்குக் கர்த்தர் விரும்புகின்றார். ஆனால் 6-ஆம் வசனமானது, கேட்டுக்கொண்டிருந்தவர்கள் உவமையின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ளவில்லை என்பதைத் தெரிவிக்கின்றது; ஆகவே கொஞ்சம் வித்தியாசமான வார்த்தைகளில் உவமையைத் திரும்பவும் கூறி, ஒருவன் கர்த்தருடைய மந்தைக்கான அங்கத்தினர் ஆகுவதற்கான தெய்வீகக் கிருபையில் பிரவேசிப்பதற்கான வாசலாக, தாம் காணப்படுவதைக் கூறினார். இப்படியாக ஜெப ஆலயத்திலிருந்து புறம்பாக்கப்பட்ட மனுஷன், தான் உண்மையில் எதையும் இழக்கவில்லை, மாறாக இளைப்பாறுதல் கிடைக்கும் உண்மையான தொழுவத்திற்கான சரியான வாசலினிடத்திற்கே வழிநடத்தப்படுகின்றான் என்பதைப் புரிந்துக்கொள்ள ஏதுவாயிற்று. அப்பொழுது அம்மனுஷன், கர்த்தர் மாத்திரமே இளைப்பாறுதலுக்கும், இரட்சிப்பிற்கும், தெய்வீக அறிவுரையின் ஆவிக்குரிய புத்துணர்வுக்கும் வழியாக இருக்கின்றார் என்பதைக் காண்பதற்கு வரவேற்கப்படுகின்றான். மற்றவர்களோ தங்களுடைய தனிப்பட்ட நன்மைகளுக்காக ஆடுகளைக் கொள்ளையிடுவதற்கு அல்லது ஆடுகளை அழிப்பதற்குச் சுயநலமாய் நாடினார்கள்; ஆனால் கர்த்தர் உண்மையான மேய்ப்பனாக, தமக்கென சொந்த ஆதாயங்களை நாடுவதற்குப் பதிலாக, ஆடுகள் ஜீவனையும், மற்றும் ஜீவனை அதிகளவில் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, ஆடுகளின் நன்மையையும், ஆதாயத்தையும் நாடினவராகக் காணப்பட்டார்.
நமக்கு எத்தகைய ஒரு பாடம் காண்பிக்கப்படுகின்றது! நித்தியமான சித்திரவதையிலிருந்து ஆடுகளை மீட்க வந்ததாகக் கூறாமல், மாறாக, மரணத்திலிருந்து ஆடுகளை மீட்க வந்ததாகவே ஆண்டவர் கூறினார். சந்தோஷத்திலோ (அ) துயரத்திலோ செலவிடத்தக்கதாக ஆடுகள் ஏற்கெனவே ஜீவனைக் கொண்டிருப்பதாகவும், துயரத்தில் கழித்துவிடாதபடிக்கு, ஆடுகளுக்கு வழிகாட்டுவதற்கே தாம் வந்துள்ளதாகவும் கர்த்தர் சொல்லவில்லை; மாறாக ஜீவன் அளிப்பவராகிய தம்மையல்லாமல், ஆடுகள் ஜீவன் பெற்றுக்கொள்ள முடியாது என்றும், ஆதாமின் கீழ்ப்படியாமையின் மூலமாய் இழக்கப்பட்ட மனித ஜீவனைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு அளிக்கத்தக்கதாக ஏற்றகாலத்தில் சீர்த்திருத்தல் வாயிலாக கொடுப்பதற்கே தாம் வந்துள்ளார் என்றும்தான் அவர் போதித்துள்ளார். ஆம் இழந்ததைக் காட்டிலும், அதிகமான ஜீவனைக் கொடுக்க அவர் நோக்கம் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது உண்மைத்தான். இது எப்படிக் கூடும்? பிதாவாகிய ஆதாம் பரிபூரணமாய் இருந்தாரானால், தெய்வீக ஏற்பாட்டின்படி அவர் நித்திய ஜீவனைத்தானே அடைய வேண்டும்? இந்தச் சுவிசேஷ யுகத்தில் அவருடைய ஆடுகளாய் இருப்பவர்களுக்கு, அதாவது இந்தச் சிறு மந்தையினருக்கு, அவர் இன்னும் உயர்வான ஜீவனின் நிலையை, அதாவது அழியாமையைக்கொடுக்க சித்தமுள்ளவராய் இருக்கின்றார் என்று நாம் பதிலளிக்கின்றோம். இவர்களை, தம்முடைய உயிர்த்தெழுதலாகிய, முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையச் செய்வதின் மூலம், திவ்விய சுபாவத்தில் பங்கடைய அழைக்கின்றார் (பிலிப்பியர் 3:10).
இதுவே நம்முடைய பாடத்தின் மையக் கருத்தாகும். நல்ல மேய்ப்பன் சுயத்திற்காக நாடாமல், ஆடுகளுக்காக தம்முடைய ஜீவனைச் சந்தோஷமாய் ஒப்புக்கொடுத்தார்; மேலும் இப்படியாக அவர் தம்முடைய விலையேறப்பெற்ற சொந்த இரத்தத்தினால், ஆடுகளை விலைக்கு வாங்கினபடியினாலேயே, ஆடுகளுக்கான நித்தியத்திற்குரிய ஜீவன் உறுதியாயிற்று; அவர் விலைக்கு வாங்கவில்லையெனில், மந்தையும் இருக்க முடியாது, மேலும், இப்படி மந்தையை விலைக்கு வாங்கினபடியினாலேயே, அவர் மந்தையின் மேய்ப்பரானார். “”கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்” என்பது எவ்வளவு தெளிவாகவும், அருமையாகவும் காணப்படுகின்றது!. இந்த ஈடுபலியை வேறு எவராலும் நமக்காகக்கொடுக்க முடியாது, வேறு எவராலும் நம்மை வாங்கவும் முடியாது, நம்மை நித்தியத்திற்குரிய ஜீவனை அளிக்கவும் முடியாது; வேறு எவராலும் சட்டப்பூர்வமாக நம்முடைய மேய்ப்பனாகவும் முடியாது; அல்லது நம்மைத் தேவனிடத்திலான சமாதானத்திற்குள்ளாகவும், இளைப்பாறுதலுக்குள்ளாகவும், சத்தியத்தின் அறிவிற்குள்ளாகவும், இறுதியில் பரலோக தொழுவத்தினிடத்திற்கும், தேவனுடைய ஜனங்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் இளைப்பாறுதலுக்குள்ளும் வேறு எவராலும் வழிநடத்தவும் முடியாது. அடிக்கப்பட்ட [R4157 : page 94] ஆட்டுக்குட்டியானவர் மகிமைக்கும், கனத்திற்கும், ஆளுகைக்கும், வல்லமைக்கும் பாத்திரமானவர்!
கிழக்கத்திய நாடுகளின் மேய்ப்பர்களையும், அவர்களுடைய மந்தைகள் குறித்தும் கூறப்படும் கதைகள் குறிப்பிடத்தக்கவைகளாகவும், இந்த உவமையில் கர்த்தர் கூறியுள்ளவைகளுக்கு நல்ல உதாரணமாகவும் அமைகின்றது. கர்த்தருடைய வார்த்தைகளின் ஆவிக்கு இசைவாய்ப் புரிந்துக்கொள்ளத்தக்கதாக, இக்கதைகளில் சிலவற்றை நாம் ஆராயலாம். கர்த்தரால் போதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உண்மைகள் பரிச்சயமே. ஒரு எழுத்தாளர் இப்படியாகக் கூறுகின்றார்.
“”தண்ணீர் ஊற்றண்டையில் தண்ணீர் தாகமுள்ள ஆடுகளின் திரளான மந்தையைப் பார்ப்பது சுவாரசியமான காட்சிகளில் ஒன்றாகும். ஓவ்வொரு மந்தையும், அதனதின் மேய்ப்பனுடைய அழைப்புக்குரல் வருவது வரையிலும், கீழ்ப்படிதலுடன் அதன் தருணம் வரை அமர்ந்துக் காத்திருக்கும். ஒரு மந்தையினுடைய மேய்ப்பன், தன்னுடைய ஆடுகளைப் பிரிவு பிரிவாக அழைப்பான்; மேலும் ஒரு பிரிவு ஆடுகள் வந்து தண்ணீர் பருகி முடிந்த பிற்பாடு அவை போகும்படிக்குச் சத்தம் கொடுக்கின்றான்; இந்தச் சத்தத்தை ஆடுகள் நன்கு அறிந்திருக்கும்; பின்னர் அடுத்த பிரிவை வரும்படி அழைக்கின்றான். யார் தங்களை அழைக்கின்றார்கள் என்ற விஷயத்தில், ஆடுகள் ஒருபோதும் தவறாய்ப் புரிந்துக்கொள்ளுவதில்லை. நூறு (அ) ஆயிரம் ஆடுகளைக் கொண்டிருக்கும் மந்தையிலுள்ள ஒவ்வொரு ஆட்டிற்கும் பெயர் உள்ளது; அதன் பெயரை அதுவும் அறிந்திருக்கும், மேய்ப்பனும் அதை அறிவான். கிரேக்கர்களுக்கும் இதைப் போன்ற வழக்கம் உண்டு. ஆட்டிற்குக் காணப்படும் சில குறைபாடுகளின் அடிப்படையிலேயே, பெரும்பாலும் பெயர்க் காணப்படும்; உதாரணத்திற்கு, “”உடைந்த கால்”, “”ஒற்றைக் கண்”, “”வளைந்த கொம்பு”, “”வழுக்கைத்தலை” என்ற பெயர்கள் ஆடுகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. ஆட்டுக்குட்டிளும்கூட, அதன் பெயர்கள் கூப்பிடப்படுகையில் கீழ்ப்படிவதற்குப் பொறுமையாய்ப் பயிற்சியளிக்கப்படுகின்றன இன்னுமாக மந்தையிலிருந்து வெளியேயும், உள்ளேயும் அழைத்துச் செல்லப்படுகின்றன மேலும் அழைப்புக்குச் சரியாய் ஆட்டுக்குட்டிகள் செவிசாய்ப்பது வரையிலும், உணவுக்காக அதன் தாயினிடத்திற்குப் போக அனுமதிக்கப்படுவதுமில்லை. மேய்ப்பன் ஒருபோதும் தன்னுடைய ஆடுகளைக் கிழக்குத் திசையில் ஓட்டிச்செல்வதில்லை; அவைகளுக்கு முன்னாக மேய்ப்பன் செல்கின்றான்; அவைகள் அவனைப் பின்தொடர்கின்றன் அவைகளின் கண்களுக்கு மேய்ப்பன் மறைவது போல தோன்றினால், அவன் பின் அவைகள் ஓடிச் செல்கின்றன அவன் காணாமல் போய்விட்டாலோ அல்லது அவனுக்குப் பதிலாக அந்நியன் ஒருவன் வந்து நின்றாலோ, அவைகள் பயந்து விடுகின்றன. மேய்ப்பன், தன் அருகில்தான் காணப்படுகின்றான் என்பதை அவைகளுக்கு தெரிவிக்கும்படியாக, அடிக்கடி சத்தம் கொடுக்கின்றான்; இச்சத்தத்தைக் கேட்டு, அவைகள் மேய்வதைத் தொடர்கின்றன மாறாக ஒருவேளை வேறு யாராவது இதே சத்தத்தைக் கொடுக்க முற்பட்டால், அவைகள் சுற்றிச் சுற்றிப் பார்த்து, திகைத்துப்போய், சிதறிச் செல்ல ஆரம்பித்துவிடும். ஸ்காட்ச் நாட்டைச் சார்ந்த பிரயாணி ஒருவர் மேய்ப்பன் போலவும், மேய்ப்பன் பிரயாணியைப் [R4158 : page 94]போலவும் உடைமாற்றிக் கொண்டனர்; பிரயாணி ஆடுகளை அழைத்தார்; அவைகள் அசையாமல் அப்படியே நின்றுவிட்டன பின்னர் உண்மையான மேய்ப்பன் உரத்தச் சத்தத்தில் கூப்பிட்ட போதோ, மேய்ப்பன் வேறே ஆடைகள் அணிந்திருந்த போதிலும், அவனிடத்தில் வந்தது.”
முன் பார்த்திட்ட உதாரணங்கள், மேற்கூறப்பட்ட (தலைப்பிலுள்ள) வார்த்தைகளைப் புரிந்துக்கொள்வதற்கும், இவ்வார்த்தைகளைக் கர்த்தருடைய சிறுமந்தையாகிய உண்மையான ஆடுகளுக்குப் பொருத்திப் பார்ப்பதற்கும் நமக்கு உதவியாய் இருக்கின்றது. “”கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்;” மேலும் அவருடையவராய் இருக்கிறவர்களும் அவரை அறிந்திருப்பார்கள் என்பதும் உண்மையே. “”அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துப்போகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்” (யோவான் 10:4-5). கர்த்தருடைய சத்தம் என்பது நீதியின், சத்தியத்தின் மற்றும் அன்பின் சத்தமாக இருக்கின்றது; மேலும் அவருடைய ஆடுகளாய் இருப்பவர்கள் அனைவரும், அவருடைய செய்திக்கும், மந்தையைத் தவறாய் வழிநடத்துவதற்கென, மனித கருவிகளைப் பயன்படுத்தும் எதிராளியானவனுடைய தவறான செய்திகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை வித்தியாசப்படுத்திக் கண்டுணரத் தக்கவர்களாய்க் காணப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். உண்மையான ஆடுகளிலுள்ள எவரும் தவறான சுவிசேஷத்தில் திருப்தியடையமாட்டார்கள் என்றும், அந்தத் தவறான சுவிசேஷங்கள் அவர்களுடைய இருதயங்களைக் கவருவதில்லை என்றுமுள்ள கர்த்தருடைய நிச்சயத்தை நாம் பெற்றிருக்கின்றோம்; இன்னுமாக உண்மையான ஆடுகள் உண்மையான சுவிசேஷத்தில் திருப்தியடைவார்கள் என்ற நிச்சயத்தையும் நாம் பெற்றிருக்கின்றோம், காரணம் மற்றவைகள் அனைத்தையும்விட உண்மையான சுவிசேஷமே அவர்களது ஏக்கங்கள் அனைத்தையும் திருப்திச் செய்யும். இது நமது மனதில் நாம் நிறுத்த வேண்டிய முக்கியமான கருத்தாகும். இது முற்றும் முழுமையாகக் கர்த்தருடைய ஆடுகளாக வேண்டியதற்கான முக்கியத்துவத்தையும், அவருடன் உடன்படிக்கையின் உறவிற்குள் பிரவேசிப்பதற்கான முக்கியத்துவத்தையும், இப்படியாக அவருடைய பாதுகாப்பிற்குரிய பராமரிப்பையும், அறிவுரையையும் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முக்கியத்துவத்தையும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.
நாம் எப்படி மற்றும் எப்பொழுது கர்த்தருடைய மந்தையாகின்றோம் என்ற கேள்வியை இப்பொழுது எழுப்புகின்றோம். ஞானிகள், கல்விமான்கள், ஐசுவரியவான்கள் மற்றும் வல்லவர்கள் அனைவரும் கர்த்தருடைய மந்தையாகுகின்றார்களா? இல்லை என்று அப்போஸ்தலர் கூறுகின்றார்; இன்னுமாக ஆடுகளில் அநேகர் வல்லவர்களாகவும், ஐசுவரியவான்களாகவும், பிரபுக்களாகவும், கல்விமான்களாகவும் இல்லாமல், பிரதானமாக இவ்வுலகத்தில் தரித்திரராய் இருப்பவர்கள் மாத்திரமே, விசுவாசத்தில் ஐசுவரியமாய் இருக்கின்றார்கள் என்றே அப்போஸ்தலர் கூறுகின்றார் (1 கொரிந்தியர் 1:26-28; யாக்கோபு 2:5). அப்பொழுது தரித்திரர்கள் அனைவரும் கர்த்தருடைய ஆடுகளாக இருக்கின்றார்களா? இல்லை என்றே நாம் பதிலளிக்கின்றோம். பல்வேறு மந்தைகள், கிறிஸ்துவின் நாமத்தையே பொதுவாய்க்கொண்டுள்ளன. ஆனால் இவர்களில் அநேகர், அவருடைய சீஷர்களாக, அவருடைய பின்னடியார்களாய் இருப்பதற்கான எவ்வித சான்றுகளையும் காண்பிக்கவில்லை. இவர்களில் அநேகர் அவருடைய வார்த்தைகளையும், அவருடைய சத்தத்தையும் அறியவே இல்லை; இவர்களில் அநேகர், அவர் தெய்வீகச் சத்தியம் மற்றும் கிருபை எனும் புல்வெளிகளிலும், அமர்ந்த தண்ணீரண்டைகளிலும் வழிநடத்துவதை அறிந்துக்கொள்ளவே இல்லை. இவர்களில் அநேகர் உண்மையான தொழுவத்தையும், அதன் இளைப்பாறுதலையும், சமாதானத்தையும், பாதுகாப்பான பராமரிப்பையும் அறிந்துக்கொள்ளவே இல்லை. இவர்கள் இவைகளையெல்லாம் அறியாமல் இருப்பது என்பது, இவர்கள் கர்த்தரால் வழிநடத்தப்படும் உண்மையான மந்தையில் இல்லாதவர்கள் என்பதைக் காட்டுகின்றது; அதாவது இம்மாதிரியான ஒவ்வொரு சபை பிரிவுகளிலும் கர்த்தருடைய உண்மையான ஆடுகள் காணப்பட்டாலுங்கூட, இப்பிரிவுகளிலுள்ள மற்றவர்கள் கர்த்தரால் வழிநடத்தப்படும் உண்மையான மந்தையில் இல்லாதவர்கள் என்பதைக் காட்டுகின்றது. உண்மையான ஆடுகள் எங்குக் காணப்பட்டாலும் சரி, அவர்கள் அவருடையவர்களாய் இருந்தால், அவர்கள் அவரால் வழிநடத்தப்பட்டு, போஷிக்கப்பட்டு, இருப்பார்கள்; அவரை அறிந்திருப்பார்கள்; அவருடைய சத்தத்தை, அவருடைய வார்த்தைகளை அறிந்திருப்பார்கள் மற்றும், செவிக்கு இனிமையற்ற உமி போன்ற மனித பாரம்பரியங்களில் அதிருப்தியடைந்தவர்களாகவே இருப்பார்கள்.
அநேகர் மேய்ப்பனாக, அதாவது கர்த்தருடைய ஆடுகளுக்காக ஆடுகளுக்கு மேற்பார்வையாளராக இருக்கும் கனத்தினிமித்தம் மகிழ்ச்சியடைவார்கள்; ஆயினும் இதற்குரிய பரீட்சையும், விலையும் / இழப்பும் இவர்களுக்கு மிக அதிகமானதாகவும் இருக்கும். தேவதூதர்களில் அநேகர் இந்த ஸ்தானத்தை எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவார்கள் என்று நாம் எண்ணலாம்; ஆனால் இந்த ஸ்தானத்திற்குரிய விலையைக்கொடுத்து, இழப்பைச் சந்தித்து, இந்த ஸ்தானத்தை எடுக்க விரும்புவார்களா? நமது கர்த்தருடைய நாட்களுக்கு முன்னதாகவும், பின்பும் மனுஷர்கள் மத்தியில் அநேகர், மேய்ப்பனுக்குரிய வேலைக்காக ஆசைப்பட்டனர்; ஆனால் மனுஷர்கள் அனைவரும் தண்டனை தீர்ப்பின் கீழ்க் காணப்பட்டிருக்க, மனுஷர்களில் எவரும் ஆடுகளை வாங்க முடியாது என்பதினால், எவனும், தனக்குள்ள அனைத்தையும் இழந்து, ஆடுகளை விலைக்கு வாங்க விரும்புவான் என்று நாம் எண்ணுவதில்லை. இதனை கர்த்தருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையான மேய்ப்பன் மாத்திரமே பலிச் செலுத்துவதற்கும், ஆடுகளுக்காக தன்னுடைய ஜீவனையே ஒப்புக்கொடுப்பதற்கும் விரும்புவான். கர்த்தருடைய மந்தைக்கு ஒரு மேய்ப்பன் இருக்கின்ற போதிலும், அவர் இல்லாமல் இருக்கும் காலங்களில், அவர் தம்முடைய மந்தைக்கு ஒர் ஏற்பாடு பண்ணியுள்ளார் என்றும், தேவனுடைய மந்தையைப் போஷிப்பதற்கும், அவருடைய ஆத்துமாக்களுக்காகவும், அவருடைய ஜீவியங்களுக்காகவும், அவருடைய நலன்கடுத்தவைகளைப் பராமரிப்பதற்கும், போதகர்களையும், ஆயர்களையும் (Pastor) மந்தைகளுக்கு ஏற்பாடு பண்ணிக்கொடுத்துள்ளார் என்றும் நாம் இங்குக் குறிப்பிடுகின்றோம்.
இந்த மந்தையைப் போஷிப்பதற்கும், மேய்ப்பதற்குமான இந்த ஸ்தானத்திற்குரிய தகுதியாய் இருப்பவர்கள் அனைவரும், அவருடைய ஆவியையும், ஆடுகளுக்காக தங்களின் ஜீவனைக்கொடுப்பதற்கான விருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கின்றார்; இன்னுமாக அவருடைய பிரதிநிதிகளாக இருந்து, எதிராளியானவனிடமிருந்து, அவனுடைய பல்வேறு கண்ணிகள், தந்திரங்களிலிருந்தும், ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு வரும் ஓநாய்களிடமிருந்தும் மந்தையைக்காக்க விருப்பத்தைக்கொண்டிருக்க வேண்டுமென்றும் அவர் எதிர்ப்பார்க்கின்றார். இந்த ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு வரும் ஓநாய்கள், உண்மையான மேய்ப்பனினால் திறந்து வைக்கப்பட்ட உண்மையான தொழுவத்திலிருந்து ஆடுகளை விலக்கி, அடிமைத்தனத்திற்கும், மனித எழுத்துக்களுக்கும் கீழாகக்கொண்டு வந்து, “”ஏற்றகால சத்தியமாகிய” புல்வெளியில் ஆடுகளை வழிநடத்துவதற்குப் பதிலாக இனிமையற்ற, உமி போன்ற மனித பாரம்பரியத்தினிடத்திற்கு வழிநடத்தி, வியாபாரம் பண்ணுகிறவர்களாய் இருப்பார்கள். உண்மையான ஆடுகள், உண்மையான மேய்ப்பனை அறிந்தும், அவரும் அவைகளை அறிந்திருப்பது போலும், உண்மையான மேய்ப்பன் உண்மையான கீழ் உடன் மேய்ப்பர்களை அறிந்திருப்பார்; இந்த உடன் மேய்ப்பர்களும் ஆடுகளை நெருக்கமாய் அறிந்திருப்பார்கள். தங்களுடைய சொந்தமான குரலில் சத்தமிடுபவர்கள்/ அழைப்பவர்கள், உண்மையான மேய்ப்பனினாலோ அல்லது உண்மையான ஆடுகளினாலோ அடையாளம் கண்டுக்கொள்ளப்படுவதில்லை/அங்கீகரிக்கப்படுவதில்லை; [R4158 : page 95] உண்மையான உடன் மேய்ப்பனானவன், உண்மையான மேய்ப்பனுடைய சத்தத்தையும், வார்த்தைகளையுந்தான் பேசுவான்.
“”நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அது போல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக்கொடுக்கிறேன்” என்ற வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலாய்க் இருக்கின்றது! (14, 15-ஆம் வசனங்களுக்கான திருவிவிலிய மொழிப்பெயர்ப்பே, சரியான மொழிப்பெயர்ப்பாய் இருக்கின்றது). இங்குக் கர்த்தருக்கும், தம்முடையவர்களுக்கும் இடையேயுள்ள, விலையேறப்பெற்ற உறவு எத்துணை அருமையானதாக விவரிக்கப்பட்டுள்ளது! பிதாவை அறியாதவன் தம்மை அறியவில்லை என்று கர்த்தர் வேறொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, இங்குத் தம்முடைய அறிந்துக்கொள்ளுதலையும், பிதாவின் அறிந்துக்கொள்ளுதலையும் ஒப்பிட்டு ஆண்டவர் கூறுவது அழுத்தம் நிறைந்ததாய் இருக்கின்றது. இந்த அறிவு, தெய்வீகக் கண்ணோட்டத்தின்படி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது; இது தலையில் காணப்படும் அறிவாக மாத்திரமிராமல், இருதயம் சார்ந்த அறிவாக இருக்கின்றது; அதாவது கர்த்தருடனும், அவருடைய மகிமையான திட்டத்துடனும் நெருக்கமான பழக்கமாகும்!
16-ஆம் வசனத்தில் முக்கியமான சத்தியமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கர்த்தருடைய ஆடுகளுக்கென இப்பொழுது ஒரேயொரு தொழுவம் ஏற்பாடு பண்ணப்பட்டுள்ளது; மேலும் இந்தத் தொழுவத்தில், இந்தச் சுவிசேஷ யுகத்திலுள்ள அவருக்கு உண்மையானவர்கள் அனைவரும், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் வாயிலாக சமாதானத்தையும், இளைப்பாறுதலையும் கண்டடைவார்கள். இது சிறுமந்தையாகும்; இவர்களுக்கே இராஜ்யத்தைக் கொடுப்பது, பிதாவினுடைய திருவுளமாய் இருக்கின்றது. இராஜ்யத்தின் மகிமையையும், கனத்தையும், அழியாமையையும் பெற்றுக்கொள்ளும் இந்தத் தெரிந்தெடுக்கப்பட்ட சிறுமந்தை மாத்திரமே, கர்த்தரால் தம்முடைய ஆடுகள் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, மற்றவர்கள் அனைவரும் உத்தரிக்கும் ஸ்தலத்திற்கு (அ) நித்தியமான சித்திரவதைக்கு அனுப்பப்படுவார்கள் என்று முன்னர் வாழ்ந்த அநேகரினால் யூகிக்கப்பட்டது. ஆனால் இக்கண்ணோட்டத்தினுடைய தவறுகளானது, இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல், வேறே ஆடுகளும் தமக்கு உண்டு என்றும், நாம் இராஜ்யத்தின் மகிமைகளை எதிர்ப்பார்த்தவர்களாக, தொழுவத்தினுடைய விசுவாசத்தின் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தது போன்று, பிரவேசிக்காத வேறே ஆடுகள் தமக்கு உண்டு என்றுமுள்ள கர்த்தருடைய வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. தெய்வீக அன்பு மற்றும் கிறிஸ்துவுக்குள்ளான ஏற்பாடுகளின் ஆழம், அகலம், உயரம் மற்றும் நீளம் பற்றின சரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்போமாக ஆதாமின் கீழ்ப்படியாமை வாயிலாக முழு உலகமும் பாவத்திலும், மரணத்திலும் தொலைந்துப் போயிருக்க, கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் முழு உலகமும் மீட்கப்பட்டுள்ளது! கர்த்தருடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கும், தற்கால ஆட்டுத்தொழுவத்தில் இருக்கும் நிலையை அடைவதற்கான சிலாக்கியத்திற்கும் இன்று ஒரு விசேஷித்த வகுப்பார் மாத்திரமே இருளினின்று அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துக்கொள்வோமாக! மீதமான திரளான மனுக்குலமானது தேவனற்றவர்களாய் இருக்கின்றார்கள் என்றும், உலகத்தாருக்கு உலகில் எவ்விதமான நம்பிக்கை இல்லை என்றும், காரணம் அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டு, செவிகள் கேட்கும் திறனை இழந்துள்ளபடியால், அவர்கள் தேவனுடைய கிருபையை அறிந்துக்கொள்ளவும் இல்லை, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும் இல்லை என்றும் அறிந்துக்கொள்வோமாக!
இன்னுமாக ஏற்ற காலத்தில் குருடானவர்கள் அனைவரின் கண்களும் திறக்கப்படும் என்றும், செவிடானவர்கள் அனைவரின் செவிகளும் கேட்கும் என்றும் கர்த்தர் கூறியுள்ள வார்த்தைகளையும் கவனித்துக் கேட்போமாக! இப்பொழுது தெரிந்தெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுமந்தையினர், இராஜ்யத்தில் அவருடைய மணவாட்டிகளாகவும், உடன் சுதந்தரர்களாகவும் இருக்கப் போகிறார்கள் என்றும், அப்பொழுது அவர்கள் மூலமாயும், அவருடைய மகிமையடைந்த மணவாட்டி மூலமாயும் தேவனுடைய ஆசீர்வாதங்கள், மனுக்குலத்தின் ஒவ்வொரு அங்கத்திற்கும் அளிக்கப்படும் என்றுமுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையும் கவனித்துக் கேட்போமாக! நீதியின் சூரியன் உதிக்கும், அதன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்; அதாவது அனைத்து முழங்கால்களும் முடங்கி, அனைத்து நாவுகளும் அவரை அறிக்கைப்பண்ணும். பின்னர் மற்ற மந்தையின் ஆடுகள், யோவான் 10:16-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கூட்டிச் சேர்க்கப்படும். அப்பொழுது, இக்காலத்திலுள்ள மந்தையானது, திரையைக் கடந்து, இராஜ்யத்திற்குள்ளும், அதன் மகிமைகளுக்குள்ளும் கடந்துப் போயிருக்கும். அப்பொழுது இக்காலத்தின் தொழுவம் முடிவிற்கு வரும்; மேலும் இத்தகைய தொழுவம் எதிர்க்காலத்தில் பயன்படாது, காரணம் எதிர்க்காலத்தில் கள்வர்களும், திருடர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். “”என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஏசாயா 11:9). அப்பொழுது மாபெரும் எதிராளியானவன், ஆயிரம் வருஷம் முடிவது வரையிலும் ஆடுகளை வஞ்சிக்காதபடிக்கு, ஆயிரம் வருஷங்கள் கட்டிப்போடப்படுவான். இதற்கிடையில் ஒட்டுமொத்த மனுக்குலமும், கர்த்தர் மற்றும் அவருடைய மணவாட்டி வகுப்பாருடைய அறிவுரையின் கீழ்க் காணப்படும்; அப்பொழுது தேவனை அறிகிற அறிவால் முழுப்பூமியும் நிரம்பியிருக்கும் (ஆபகூக் 2:14). இந்த அறிவிற்கான பலன், மனுக்குலத்திற்கான பரீட்சையாக இருக்கும்; மேலும் சிலர் கர்த்தருடைய ஆடுகள் போல், அவருடன் இசைவிற்குள் மகிழ்ச்சியுடனும், விருப்பத்துடனும் வருவார்கள்; மேலும் இவர்கள் அவர் நித்தியத்திற்குரிய ஜீவனை அளிப்பதற்குப் பிரியப்படும் அவருடைய வலது கரத்தினிடத்திற்கும், அவருடைய கிருபையினிடத்திற்கும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இதே சாதகமான சூழ்நிலைகளின் கீழ்க் காணப்படும் சிலர் வெள்ளாட்டின் பண்பை, மூர்க்கத்தனமான பண்பை வெளிப்படுத்தி, கர்த்தர் தயவு பண்ண விரும்பிடாத, எதிராளியானவனின் ஆவியை உடையவர்களுக்கான, அவருடைய இடது கரத்தினிடத்திற்குச் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் இறுதியில், ஆயிர வருட யுகத்தினுடைய முடிவில் சாத்தானுடன் கூட, இரண்டாம் மரணத்தில் முற்றிலுமாய் அழிக்கப்பட்டுப் போவார்கள். இவர்களுக்கான தண்டனை நித்திய காலத்திற்குமுரியதாகும், ஏனெனில் இவர்களுடைய மரணம் நித்திய காலத்திற்குமானதாகும்; இவர்கள் ஒருபோதும் உயிர்த்தெழுவதில்லை; இவர்கள் கெஹன்னா வார்த்தையை அடையாளப்படுத்தும் அழிவாகிய இரண்டாம் மரணத்தை அடைவார்கள்.
சுவிசேஷ யுகம் முழுவதிலும், இரட்சிக்கப்படுவதற்கென வானத்தின் கீழ்க் கொடுக்கப்பட்ட ஒரே நாமத்தை ஒருபோதும் கேட்டிராத பெரியதொரு வகுப்பார் இருக்கின்றார்கள் என்றும், இப்படிக் கேள்விப்படாததினால், கர்த்தருடைய மந்தையின் அங்கமாகுவதற்கான வாய்ப்பினை ஒருபோதும் பெற்றிராமல் இருக்கும் பெரியதொரு வகுப்பார் இருக்கின்றார்கள் என்றும் எவராலும் மறுக்க முடியாது. அந்த ஒரேயொரு நாமத்தை அறிந்துக்கொள்ளாமலேயே இவர்கள் பரலோகம் போய்விட்டார்கள் என்ற கூற்றை வேதவாக்கியம் அங்கீகரியாதது மாத்திரமல்லாமல், நியாயமாயும் காணப்படாது; அதேசமயம் இவர்கள் இரட்சிப்படைவதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளாமலேயே நித்தியமான சித்திரவதைக்குள் போய்விட்டார்கள் என்பதும்கூட வேதவாக்கியங்கள் அங்கீகரிக்காததாகவும், நியாயமற்றதாகவும் காணப்படும். கர்த்தர் நித்தியத்திற்குரிய ஜீவனையளிக்க வேண்டுமென்று சித்தம் கொண்டுள்ள மனுக்குலத்திற்கு, ஆயிர வருட யுகத்தில், மனித மந்தையில் அங்கமாகுவதற்கான வாய்ப்பையும், தமது இரக்கத்தையும், கிருபையையும் எடுத்துச் செல்வதற்கென இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுமந்தையினரை, ஆயிரவருட யுகத்தில் தம்முடைய இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் ஆக்குவதற்கு நோக்கம் கொண்டுள்ளார் என்பது, வேதவாக்கியங்கள் அங்கீகரிக்கின்றதாகவும் நியாயமானதாகவும் காணப்படுகின்றது.
ஆங்கிலத்தில், “ “one fold (தொழுவம்) and one shepherd” என்று மொழிப்பெயர்ப்பு இடம் பெறுகின்றது; ஆனால் கிரேக்க வார்த்தையானது சரியாக மொழிப்பெயர்க்கப்படுகையில், “ “one flock [R4159 : page 95] (மந்தை) and one shepherd” என்று இடம்பெற வேண்டும் (நமது KJV மொழிப்பெயர்ப்பு சரியாக உள்ளது; யோவான் 14:16). இது அப்போஸ்தலன் எபேசியர் 1:9-ஆம் வசனத்தில் கூறியுள்ள வார்த்தைகளுக்கு முழு இசைவாகவே இருக்கிறது. “”காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டும்.” இறுதியில் தேவனுடைய சிருஷ்டிகளிலுள்ள அனைத்தும், இப்பொழுது சிறுமந்தையாகிய சபைக்குத் தலையாக இருக்கும் இந்த மாபெரும் மேய்ப்பனுடைய தலைமையின் கீழ்க்கொண்டு வரப்படும்; இந்த மாபெரும் மேய்ப்பன் எதிர்க்காலத்தில் தூதர்கள் மீதும், சீர்ப்பொருந்தப்பட்ட மனுக்குலத்தின் மீதும், தலையாகக் காணப்படுவார்;. மந்தை ஒரேயொரு மந்தையாகக் காணப்படும், ஆனால் ஆடுகள் பல்வேறு ஜீவதளங்களில், பல்வேறு சுபாவங்களில் காணப்படும்; ஆகவேதான், “”என் பிதாவின் வீட்டில் அநேகம் வாசஸ்தலங்கள்” அநேகம் நிலைகள், அநேகம் தளங்கள் உண்டு என்று எழுதப்பட்டுள்ளது; ஆனால் அனைத்தும் இசைவாய் ஒன்றிக் காணப்படும். ஆனால் இந்தத் தளங்களிலேயே உயர்வான, மகிமையின் தளத்திற்கு, இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய மணவாட்டி வகுப்பாராகிய, சிறுமந்தையினர் கர்த்தரால் வரவேற்கப்படுகின்றனர். அவருடைய சத்தத்தைக் கேட்போமாக அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோமாக நம்முடைய அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்வோமாக.