R3746 – நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3746 (page 92)

நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்

TAKE HEED HOW YE HEAR

மத்தேயு 7:15-29

“”திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.” யாக்கோபு 1:22

நம் பாடம் மலைப்பிரசங்கத்தின் காரியங்களைப் பின்தொடர்ந்துவரும் காரியங்கள் பற்றியதாகும். கர்த்தருடைய ஜனங்கள் கேட்ட காரியங்களைக்குறித்த முக்கியத்துவத்தை, அவர்களுடைய மனதில் பதிய வைப்பதற்காகவும், நற்செய்தியைக் கேட்பதோடுகூட, அதற்குக் கீழ்ப்படிவது குறித்த முக்கியத்துவத்தை அவர்களுடைய மனதில் பதிய வைப்பதற்காகவும் கர்த்தர் உவமையாக இவைகளைப் பேசியுள்ளார். அவருடைய வார்த்தைகளானது, கவனமாய்க் கீழ்ப்படிதலின் மூலம் உண்டாகும் நல்ல விளைவுகளிலிருந்து, கீழ்ப்படிய தவறிப்போவதினால் உண்டாகும் திருப்திகரமற்ற விளைவுகளை வேறுபடுத்திக் காண்பிக்கின்றது. மந்தைகளைத் தவறாய் வழி நடத்தும்படிக்கு, மந்தைகள் மத்தியில் வருவார்கள் என்று கர்த்தரால் அறிவிக்கப்பட்டுள்ள கள்ள போதகர்களை நாம் கவனித்துப்பார்த்து அறிந்துக்கொள்வது எவ்விதத்திலும் பொல்லாத ஊகங்கள் ஆகாது. மேலும், மந்தையின் கவனத்திற்கு, இப்படிப்பட்ட தவறான போதகர்களைக்கொண்டு வருவதும் தீமை பேசுதலாகவும் இருக்காது. கள்ள போதகர்களைக் குறித்து, ஆண்டவரும், அப்போஸ்தலர்களும் முன்னமேகூறி, அவர்களுக்கு எதிராக எச்சரித்தும் உள்ளபடியால், ஆண்டவருடைய மாதிரியை உண்மையாய்ப் பின்பற்றுகிற அனைவரும் அப்படியே செய்ய வேண்டும்.

[R3747 : page 93]

நமது கர்த்தரும், அப்போஸ்தலர்களும் தெளிவாய்ச் சுட்டிக்காட்டியுள்ள விதத்திலேயே நாமும் அத்தகையவர்களை வேறுபடுத்திக் கண்டறிந்துக்கொள்ள வேண்டும். வெளித்தோற்றத்தில் இத்தகையவர்கள் மென்மையுள்ளவர்களாகவும், மெருகூட்டப்பட்டவர்களாகவும், கல்வியறிவு உடையவர்களாகவும், நற்குணங்கள் உடையவர்களாகவும் காணப்பட்டாலும், இத்தகையவர்களை நாம் மந்தைக்கான தலைவர்களாக ஏற்றுக்கொள்வதற்கு, நம்பிக்கை வைப்பதற்கு முன்னதாகவும், இத்தகையவர்களிடமும், இவர்களுடைய நோக்கங்களுடனும், இலட்சியங்களுடனும், தனிப்பட்ட வாழ்க்கையுடனும் நாம் நெருங்கி பழகிப்போவதற்கு முன்னதாகவும், இத்தகையவர்களுடைய வெளித்தோற்றமான அறிகுறிகளைக்காட்டிலும், மற்ற அநேகக்காரியங்களினால் இவர்களை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். இதைக்குறித்துதான், இத்தகையவர்கள் வெளித்தோற்றத்தில் பரிசுத்தமடைந்திருந்த தோற்றம் கொண்டிருந்தாலும், அதேசமயம் இவர்கள் சுயநலமுள்ளவர்களாகவும், பேராசையுள்ளவர்களாகவும் இருப்பார்களானால், இவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையுடன் காணப்பட வேண்டுமெனக் கர்த்தர் நமக்குக் கூறுவதின் மூலம் சுட்டிக்காட்டுகின்றார். “”நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.” “”தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்” (அப்போஸ்தலர் 20:29; 2 பேதுரு 2:1,3).

ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டிருக்கும் ஓநாய்களைக் கண்டுபிடிப்பதிலும், எதிர்ப்பதிலும், அவர்களிடமிருந்து தூர இருப்பதிலும் நாம் விழிப்பாய் இருக்க வேண்டியிருப்பினும், நமது கர்த்தருடைய மற்றச்சில போதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, நமக்கெதிராய் இராதவர்கள், நம் சார்பில்தான்/பட்சத்தில்தான் இருக்கின்றார்கள் என்றும், கர்த்தருக்குச் சொந்தமானவர்களென எவர்களுடைய இருதயங்களும், குணலட்சணங்களும் சாட்சிக் கொடுகின்றதோ, அவர்கள் ஒருவேளை கர்த்தருக்கான ஊழியத்திலும் அவருடைய செய்தியைப் பிரகடனப்படுத்தும் விஷயத்திலும் நம்மோடுக் கூடப் பின்பற்றுகின்றவர்களாக இல்லாமல் இருந்தாலும், அவர்களை நாம் ஓநாய்களெனக் கண்டனம் பண்ணவோ அல்லது சகோதரர் என்று ஏற்க மறுக்கவோ கூடாது என்றுமுள்ள போதகரின் போதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் (மாற்கு 9:38-40; லூக்கா 9:49-50). வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் நாம் அனைவரிடமும் அன்புகூர வேண்டும். மேலும், கர்த்தரை அன்புகூருபவர்களும், அவருடைய ஆவியை வெளிப்படுத்துகிறவர்களுமாய் இருக்கும் அனைவருக்கும், அவர்கள் நம்மோடு சேர்ந்து காணப்பட்டாலும், காணப்படாவிட்டாலும், நாம் வாழ்த்துதல் சொல்ல வேண்டும். தெய்வீகப் பிரமாணம் மிக அகலமாகவும், அதேசமயம் மிகக் குறுகலாகவும்கூட உள்ளது. சீஷத்துவம் மற்றும் குணலட்சணத்தின் விஷயத்தில் தெய்வீகப் பிரமாணம் குறுகலாக இருக்கின்றது. மீட்கும் இரத்தத்தின் மீதான விசுவாசம், ஆண்டவருக்கு அர்ப்பணம் பண்ணுதல் மற்றும் அவருடைய ஆவியை வெளிப்படுத்துவதே சீஷத்துவத்திற்கான காரியங்களாகும். தெய்வீகப் பிரமாணம் இவர்களுக்குள் அகலமாகக் காணப்படுகின்றது. ஆயினும், உலகத்தின் விஷயங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தெய்வீகப் பிரமாணம் குறுகலாகவே இருக்கின்றது.

அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்

கள்ளப் போதகர்களிடமிருந்து, உண்மையுள்ளவர்களை நாம் அறிந்துக்கொள்வது எப்படி என்ற நம்முடைய கேள்விக்கு, “”அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று கர்த்தர் பதிலளிக்கின்றார். இதை விவரிக்கும் வண்ணமாக, பாலஸ்தீனியாவில் ஒரு முட்செடியில் திராட்சப்பழங்களைப்போன்ற பழங்களும், அத்திபழத்தின் வடிவத்திற்கு ஒத்த ஒருவகை முட்பூண்டுகளும் காணப்படுகின்றதாய் இருப்பினும், முட்செடிகளில் உண்மையான திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் உண்மையான அத்திப்பழங்களையும் எதிர்ப்பார்க்க முடியுமோ என்ற கேள்வியின் மூலம் கர்த்தர் விவரிக்கின்றார். ஆயினும், திராட்சப்பழங்கள் போன்றும், அத்திபழ வடிவைப்போன்றும் பழங்கள் இருந்தாலும், அதனை யாரும் திராட்சப்பழம் என்று நம்பி ஏமாறும் ஆபத்தில் இல்லை. அதோடுகூட, கர்த்தருடைய ஜனங்களில் எவரும் சக கிறிஸ்துவின் பின்னடியார்களுடைய ஜீவியத்தின் கனிகள் மற்றும் குணலட்சணங்கள் தொடர்பான விஷயத்தில் தெளிவில்லாதவர்களாகவும் இருக்கக்கூடாது.

கர்த்தருடைய உண்மையான ஜனங்களினுடைய ஜீவியத்தின் கனிகள், அவர்களோடு தொடர்புக்குள்வரும் அனைவருக்கும் புத்துணர்வையும், போஷாக்களிக்கின்றதாகவும் இருக்கும் என்பதே கருத்தாகும். அதேசமயம், முட்பூண்டுகளைப் போன்றிருப்பவர்கள் தப்பறைகள், பொல்லாத ஊகங்கள், தவறான உபதேசங்களெனும் பிரச்சனையை உண்டுபண்ணும் விதைகளை எப்பொழுதும் வீசிக் கொண்டிருப்பவர்களாகக் காணப்படுவார்கள். இன்னுமாக, சிலர் புத்துணர்வு அளிக்கும் கனியைக் கொடுப்பதற்குப் பதிலாக, முட்செடிகளைப் போன்று தங்களோடு தொடர்புக்குள் வருபவர்களை, காயப்படுத்துவதற்கும், தொந்தரவு பண்ணுவதற்கும், எரிச்சல் அடையச்செய்வதற்கும், மனவேதனை அடையப்பண்ணுவதற்கும், வளர்ச்சியைத் தடைபண்ணுவதற்கும் ஏதுவாக தொடர்ந்து செயல்படுகின்றவர்களாய் இருப்பவர்கள். கர்த்தருடைய ஜனங்களைத் தவறாய் வழிநடத்தக்கூடிய கள்ளப்போதகர்களுக்கும், மந்தைக்கான ஊழியத்திற்கெனத் தங்களுடைய ஜீவனையே சந்தோஷமாய் ஒப்புக்கொடுக்கக்கூடிய உடன் மேய்ப்பர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் கர்த்தருடைய ஜனங்களால் எளிதில் கண்டுகொள்ள முடியும் என்பதே கருத்தாகும். ஒரு வகுப்பார் எப்போதும் தீங்கு விளைவிப்பவர்களாகவும், பெலவீனப்படுத்துகின்றவர்களாகவும், நாசம் உண்டாக்குகின்றவர்களாகவும் இருப்பார்கள்; மற்றொரு வகுப்பார் எப்போதும் உதவி அளிப்பவர்களாகவும், கட்டி எழுப்புபவர்களாகவும், பெலப்படுத்துகின்றவர்களாகவும், சமாதானம் பண்ணுகின்றவர்களாகவும் இருப்பார்கள்.

ஓநாய்களுக்கும், மந்தைக்கும் மற்றும் கனிக்கொடுக்கிற செடிகளுக்கும், பாதகமான செடிகளுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை நமக்கு அளித்தது போதுமென்று எண்ணாமல், நமது கர்த்தர் மற்றும் ஒரு விளக்கத்தை அதாவது, இன்னும் ஆராய்வதற்கு உதவியான ஒரு விளக்கத்தைக்கொடுக்கின்றார். கெட்ட மரத்திடமிருந்து நல்ல மரத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றார். தவறான ஒரு கிறிஸ்தவனிடமிருந்து, ஓர் ஆரோக்கியமான கிறிஸ்தவனை வேறுபடுத்திக்காட்டுகின்றார். நல்ல மரம் நல்ல கனிகளைக்கொடுக்கும், கெட்ட மரம் கெட்ட கனிகளைக்கொடுக்கும், அதாவது விரும்பத்தகாத பொல்லாத கனிகளைக்கொடுக்கும் என்று விவரிக்கின்றார். இவைகளை நாம் இயற்கையில் பார்த்திருக்கின்றோம். ஆரோக்கியமான நிலையிலுள்ள ஆப்பிள் மரம், ஆரோக்கியமான ஆப்பிள் பழங்களைக்கொடுக்கும். ஆனால், நோய் தாக்கப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் வெட்டி விடப்படாமல், புழுக்களால் தாக்கப்பட்டுள்ள மரமானது, புழுக்களுள்ள நலிந்துபோன கனிகளைக்கொடுக்கின்றன.

கர்த்தர் கொடுத்துள்ள இந்த உவமை விளக்கத்தில், சரியான விதத்திலேயும், ஆரோக்கியமான விதத்திலேயும் தங்களுடைய ஓட்டத்தை ஆரம்பிக்கும் தம்முடைய சீஷர்கள், பொல்லாதவர்களாகவும், தங்களுடைய ஆவிக்குரிய பெலத்தையும், கனிகொடுக்கும் தன்மையையும், கவனமாய் இருக்கும் தன்மையையும் இழந்து போகிறவர்களாகவும் ஆகுவதற்கு வாய்ப்புண்டு என்ற உண்மையைக் குறிப்பிடுகின்றார். மண்ணில் போஷாக்கற்ற தன்மை ஏற்படும்போது மரம் நோய்வாய்ப்பட்டு அழிந்து போய்விடுகின்றது. ஆகவே, கிறிஸ்தவன் ஒருவன் அறிவில் பெருகினாலும், சரியானவகையான ஆவிக்குரிய போஷாக்கை அவன் எடுத்துக்கொள்ளவில்லையெனில், ஆவிக்குரியவற்றில் கீழ்நோக்கிப்போவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும், தேவையற்ற மரக்கிளைகளை வெட்டிவிடாமல் இருக்கும்போது கிளைமுளைகள் (sucker) வளர்ந்து, மரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தி, அது கனி கொடுக்காதபடி, அதை இறுதியில் அழித்துப் போடுவதுபோல, கிறிஸ்தவனுக்கும் குணலட்சணமும், ஆவியின் கனிகளும் வளர்ச்சியடைவதற்கு ஏதுவாக சிட்சைகள், தேவையற்றவைகளை வெட்டிவிடும் காரியம் அவசியமாகும். நம்முடைய பரமபிதா மாபெரும் தோட்டக்காரராவார். மேலும், சரியான பராமரிப்பை நமக்குக்கொடுப்பதாக அவர் வாக்களித்தும் உள்ளார். எனினும், மரங்களின் விஷயத்தில் காணப்படுவதுபோன்று, அப்படியே நம் விஷயத்தில் காணப்படுவதில்லை. காரணம், (மரங்களைக்காட்டிலும்) நம்முடைய உயர்தரமான பிறப்பினிமித்தமும், சித்தம், தனித்தன்மை ஆகியவற்றில் நமக்குத் தேவன் போன்ற சாயல் இருப்பதினிமித்தமும் நாம் வித்தியாசமாகக் கையாளப்படுகின்றோம்.

நமக்கு என்ன போஷாக்குத் தேவை என்று முடிவுபண்ணுவது ஒரு குறிப்பிட்டளவு நம்முடைய பொறுப்பில் விடப்பட்டுள்ளது. தேவன் சத்தியம் எனும் நல்ல மண்ணையும்/நிலத்தையும், புத்துணர்வு அளிக்கும் கிருபை எனும் மழை தூறலையும், விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்கள் எனும் போஷாக்கையும் கொடுக்கின்றார். ஆனால், இவைகளைப் பயன்படுத்திக் கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் வளர்வதென்பது அவருடைய ஜனங்கள் ஒவ்வொருவருக்கான பொறுப்பாகும். ஒருவேளை நாம் குறைவுள்ளவர்களாகி, போஷாக்கு இன்மையின் காரணத்தினால் கனிக்கொடுக்காதவர்களாகிப்போனால், இதற்குத் தோட்டக்காரர் பொறுப்பாளியல்ல. அவருடைய நல்ல வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் போஷாக்கைக்கொடுக்கத் தவறுவதில்லை. நமக்குப் போஷாக்கு இல்லையெனில், தவறு நம்மிடத்தில்தான் உள்ளது. இப்படியே வெட்டிவிடுதலின் விஷயத்திலும் காணப்படுகின்றது. கர்த்தர் பரீட்சைகளை, கஷ்டங்களை, சிட்சைகளை அனுப்புகின்றார். ஆனால், இவைகளை நாம் தவிர்ப்பதும்/புறக்கணித்துத் தாண்டிச் செல்வதற்கும், இவைகளைப் பயன்படுத்தத் தவறுவதற்கும், இவைகள் மூலம் நம்முடைய சுபவாத்தில் வளர்ந்துள்ள தவறான காரியங்களையும், பெலவீனங்களையும், குறைவுகளையும் சரிச் செய்துகொள்ள தவறுவதற்கும் வாய்ப்புண்டு. எவ்வளவுதான் வளர்ச்சிகள் நம்மிடத்தில் ஏற்பட்டாலும் அல்லது எவ்வளவுதான் வெட்டிவிடுதலை நாம் பெற்றுக்கொண்டாலும், உவமையில் வருகின்றதுபோல நம்முடைய சத்துவத்தை எடுத்துப்போடுகிறதும் மற்றும் அங்கீகரிக்கப்படத்தக்கதான கனியை நாம் கொடுக்காதபடிக்கு நம்மைத் தடைபண்ணிப் போடுகிறதுமான கிளைமுளைகள் போன்றதான வீடுகள், நிலங்கள் (அ) பூமிக்குரிய இலட்சியங்கள், பொருட்கள் (அ) நபர்கள் மீது நாம் நமது ஆவல்களை வைப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

ஆரோக்கியமான மரம் கெட்ட கனிகளைக்கொடுக்க முடியாது; கெட்ட மரமும் நல்ல கனிகளைக்கொடுக்க முடியாது. கர்த்தருடைய ஜனங்களில் ஒவ்வொருவனும் தேவனுடைய வார்த்தை என்னும் கண்ணாடியின் முன்நின்று தன்னைப் பரிசோதித்து, தன்னுடைய சொந்த குணலட்சணங்கள், பண்புகள் தெய்வீக நிலைப்பாட்டிற்கு ஒத்துப்போகின்றதா (அ) ஒத்துப்போகாத நிலையில் இருக்கின்றதா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியதாயினும், கனி நல்ல கனியா (அ) கெட்ட கனியா என்று தீர்மானிக்கும் இவ்விஷயத்தில் கர்த்தருடைய ஜனங்களிலுள்ள ஒவ்வொருவனும் மற்றவர்களுடைய விஷயத்திலும், தன்னுடைய சொந்த விஷயத்திலும் நியாயத்தீர்ப்பைப் பண்ணுவதற்குச் சொல்லப்பட்டுள்ளனர். அதாவது, என்னுடைய சொந்த வாழ்க்கையினுடைய பலன்கள், கனிகள், சாட்சி என்ன என்பதையும், என்னுடைய சகோதரனுடைய ஜீவியத்தினுடைய பலன்கள், கனிகள், சாட்சி என்ன என்பதையும் தீர்மானிப்பதில் நாம் நியாயத்தீர்ப்புச் செய்யலாம். இம்மாதிரியான பரீட்சைகள் தம்முடைய மந்தைக்குத் தலைவர்களாக இருப்பவர்களிடத்தில் விசேஷமாகப் பொருந்தும் என்று நமது கர்த்தர் குறிப்பிடுகின்றார். சபையை வழிநடத்துபவர்களாக இருப்பவர்கள் அனைவரும் மாதிரிகளாகக் காணப்பட வேண்டும். மேலும், இந்த நற்கனிகளே, நல்ல ஆரோக்கியமான குணலட்சணத்திற்குரிய அதாவது, கர்த்தருக்கு முழு இசைவுடன் காணப்படும் குணலட்சணத்திற்குரிய தேர்வாகப் பார்க்கப்பட வேண்டும். அனைவரும் பூரணமற்றவர்கள் என்பது உண்மைதான். மேலும், இருப்பதிலேயே சிறந்த நோக்கம் இருந்தாலுங்கூட, நாம் விரும்பிய அனைத்தையும் நம்மால் செய்ய முடியவில்லை என்பதும் [R3747 : page 94] உண்மையே. ஆனால், கர்த்தருடைய சகோதரர்களிலேயே பெலவீனனாய்க் காணப்படும் சகோதரர்கூட மற்றச் சகோதரர்கள் உணர்ந்துக்கொள்ளத்தக்கதாக சில கனிகளையாகிலும் கொடுக்கின்றவர்களாய் இருக்க வேண்டும். மேலும் இந்தக் கனிகளானது, மற்றச் சகோதரர்களால் தெய்வீக நிலைப்பாட்டின்படி அதாவது, மாம்சத்தின்படியிராமல், ஆவியின் / சித்தத்தின்படி அங்கீகரிக்கபட வேண்டும். ஆகையால், தேவனுடைய உண்மையான பிள்ளைகளனைவரும், சகோதரருக்கு முன்பும், உலகத்துக்கு முன்பும் நேர்மையையும், நோக்கத்தில் உண்மையையும், அனைத்து விஷயங்களிலும் பரலோகத்திலிருக்கும் பிதாவினுடைய சித்தத்தையே செய்ய நாடும் அர்ப்பணிக்கப்பட்ட இருதயத்தை, மனதை, சித்தத்தை வெளிப்படுத்துகின்றவர்களாய் இருக்க வேண்டும்.

இன்றுவரையிலும் பாலஸ்தீனியாவில் கனிகொடுக்கும் மரங்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கனிகொடுக்காத மரமும், மிகக்குறைவான கனிகளைக் கொடுக்கும் மரமும் விட்டு வைக்கப்படுவதில்லை. ஏனெனில், இத்தகைய மரம் வைத்து வைக்கப்பட்டிருந்தால் வருமானம் வருவதற்குப்பதிலாக நஷ்டமே ஏற்படுகின்றது. இதற்கு இசைவாகவே நமது கர்த்தருடைய வாக்குத்தத்தம் காணப்படுகின்றது. “”என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்” (யோவான் 15:2).

யூத ஜனங்களை அடையாளப்படுத்துவதற்கென நமது கர்த்தர் அத்திமரத்தைப் பயன்படுத்தினார். மேலும், அது விரும்பிய கனி /பலனைக்கொடுக்கவில்லை என்றும், அது வெட்டப்பட்டு, அழிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். யூத ஜனங்களை, முற்றிலும் அழித்துப் போட்ட அடையாளமான “”அக்கினியானது” அத்திமரத்தை அழித்துவிட்டது. யூதர்கள் நிச்சயமாக கர்த்தருடைய கரத்திலிருந்து இன்னும் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களாய் இருந்தாலும் கூட, அவ்வாசீர்வாதத்தை, “”அவர்களுடைய பிதாக்களோடு பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல” என்று கர்த்தர் கூறுகின்றார் (எரேமியா 31:32). ஆசீர்வாதமானது, புதிய உடன்படிக்கையின் வாயிலாகவே எதிர்க்காலத்தில் இஸ்ரயேலுக்கும், மற்ற ஜாதியாருக்கும் கடந்துவரும். இதுபோலவே, இந்தச் சுவிசேஷ யுகத்தின் முடிவிலுங்கூட நல்ல மரம் மற்றும் கெட்ட கனி தொடர்பான தனி நபர் பரீட்சைகள், கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் வருவது மாத்திரமல்லாமல், இன்னுமாக கிறிஸ்தவ மண்டலமும் ஒட்டுமொத்தமாகக் கனியற்றவர்களாகவும், கர்த்தருக்குத் திருப்தி அளிக்காதவர்களாகவும் நிரூபிக்கப்படுவார்கள்/ கண்டுபிடிக்கப்படுவார்கள். மேலும், கர்த்தருடைய உண்மையான பரிசுத்தவான்கள் சேர்க்கப்பட்டு, மகிமையடைந்த பிற்பாடு, மரமாகிய அமைப்பு முழுவதுமாக மகா உபத்திரவக் காலத்திற்குள் கடந்து செல்லும். இந்த மகா உபத்திரவக் காலத்தோடு, இந்த யுகம் நிறைவடைந்து, புதிய யுகம் ஆரம்பமாகும். கிறிஸ்தவ மண்டலத்தில் காணப்பட்ட ஜனங்கள் ஆயிரவருஷ யுகத்தினுடைய உடன்படிக்கையின் கீழ் நிச்சயமாய்த் தயவடைந்து, ஆசீர்வாதம் அடைந்தாலுங்கூட, இவர்களுக்கு தற்காலத்திலுள்ள ஆபிரகாமின் உடன்படிக்கையின் கீழ் முன்வைக்கப்பட்ட விசேஷமான சிலாக்கியங்களும், வாய்ப்புகளும் என்றென்றைக்குமாக மறைந்து போய்விடும்.

நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை

அடுத்ததாக, நமது கர்த்தர் பெயரளவிலான அநேக எண்ணிக்கைக்கொண்ட பின்னடியார்கள், அவருடைய ஆவியைக்கொண்டிராதவர்களாகவும், அவர் விரும்புகிற கனிகளைக்கொடாதவர்களாகவும், அவரால் அழைக்கப்பட்டு, தெரிந்துக்கொள்ளப்பட்டு, உண்மையுள்ளவர்களாய்க் காணப்படும் வகுப்பாரின் அங்கங்கள் அல்லாதவர்களாகவும் காணப்படுவார்கள் என்று கூறுகின்றார். ஆனால், வெளித்தோற்றத்தில் அழைக்கப்பட்டவர்கள் போன்றும், அவர் விரும்பும் கனிகொடுக்கிறவர்கள் போன்றும் காணப்படுவார்கள். இப்படியாக, இருப்பவர்கள் “”அநேகராய்” இருப்பார்கள் என்றும் கர்த்தர் குறிப்பிடுகின்றார். இன்னுமாக, அவர் “”அந்நாளில்” இருப்பார்கள் என்று சொல்லும்போது, நம்முடைய நாட்களை அதாவது, இந்த யுகத்தின் முடிவின்போது… சோதனை காலத்தை… தம்முடைய சம்பத்தைக் கூட்டிச் சேர்க்கவும், அவர்களைத் தம்முடைய மணவாட்டியாக, தம்முடைய அங்கங்களாக, இராஜ்யத்தில் தம்முடன் கூட இருப்பவர்களாக மகிமைப்படுத்தபடும் வருங்காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றார். “”அந்நாளில்…” அதாவது நம்முடைய நாட்களில் அநேகர், தாங்கள் கர்த்தரை அறிவார்கள் என்றும், தாங்கள் தீர்க்கத்தரிசனம் சொல்பவர்கள் (அ) போதகர்கள் என்றும், தாங்கள் பிசாசுகளைத் துரத்தி, பாவத்தையும், பல்வேறு தீமைகளையும் எதிர்த்தார்கள் என்றும், அவருடைய நாமத்தில் பல வல்லமையான கிரியைகளைச் செய்தார்கள் என்றும், கல்லூரிகள், குருமார்கள் பயிற்சி கல்லூரிகளையும், உதவி புரியும் காப்பகங்கள் முதலியவைகளை அமைத்தார்கள் என்றும் கூறுவார்கள். “”உம்முடைய நாமம்” என்று சொல்லுகையில் இவர்கள் கிறிஸ்துவின் நாமத்தை மந்திரம்போல் பயன்படுத்துவதைக் குறிக்கின்றது.

[R3748 : page 94]

இவ்விஷயங்கள் நம்முடைய நாட்களில் எவ்வளவு உண்மையாகக் காணப்படுகின்றது! ஆண்டவருடைய வார்த்தைக்கும், ஆவிக்கும் எதிரான விதத்தில் அடிக்கடி எத்தனை பேர் கர்த்தருடைய நாமத்தை வழங்கி, தங்களுடைய வியாபார நிறுவனங்களோடு, கர்த்தருடைய நாமத்தை இணைத்துக்கொள்கின்றனர். ஏன் இவர்கள் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்துகின்றனர்? மந்திர வார்த்தைகளாகப் பயன்படுத்திக்கொள்ளும் மந்திரவாதிபோல இவர்கள் செயல்படுகின்றனர். இன்னுமாக, தங்களுடைய செல்வாக்கைப் பெருக்கிக்கொள்வதற்கும், தங்களுடைய மனங்களைத் திருப்திப் படுத்திக்கொள்வதற்கும், தங்களுடைய சுய சித்தங்களைச் செய்து வருவதின் மூலம், தாங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்து வருகின்றார்கள் என்று தங்களையே நம்ப வைப்பதற்கும், கர்த்தருடைய நாமத்தை இவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். இவ்விஷயங்கள் நம்முடைய நாட்களிலுள்ள அனைத்து மத அமைப்புகளிலும் எவ்வளவுக்கு உண்மையாகக் காணப்படுகின்றது. உதாரணத்திற்கு சபைகளை எடுத்துக்கொள்ளுங்கள், இவர்களுடைய மதவெறியின் ஆவிக்கும், விசுவாசப் பிரமாணங்களுக்கும், முறைகளுக்கும், அமைப்புகளுக்கும் எதிராக தெய்வீகப் பார்வை காணப்படுகின்றது என இவர்கள் ஏறக்குறைய தெளிவாக அறிந்திருந்தபோதிலும், இவர்களுடைய அமைப்புகளுடனும்/ஸ்தாபனங்களுடனும், முறைமைகளுடனும் கிறிஸ்துவின் நாமத்தை ஏதோ ஒருவிதத்திலாகிலும் இணைத்துக்கொள்ளாததுவரையிலும் இவர்கள் திருப்திக்கொள்வதில்லை.

ஆனால், பரீட்சிக்கின்ற காலம் சமீபித்துள்ளது. இந்த அமைப்புகளுடைய கனிகுறித்து கர்த்தர் விசாரிப்பார்; அவர் ஏமாற்றப்பட முடியாதவர்; அனைவரும் தம்முடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்று காணத்தக்கதாக, கெட்ட கனிகளை அவர் வெளிப்படுத்துவார். கர்த்தருடைய வார்த்தைகள் இவர்களால் புறக்கணிக்கப்பட்டதினிமித்தம் சீர்க்குலைவு ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படுத்தப்படும். கிளைமுளைகளைத் தறித்துப்போடுவதற்கு ஏதுவான அனுபவங்களனைத்தும் அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும், கர்த்தருடைய வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டதினிமித்தம் பெருமை, ஆஸ்தி, உலகப்பிரகாரமான இலட்சியம், பகட்டுத்தன்மை முதலிய கிளைமுளைகள் விருத்தியடைந்துள்ளது வெளிப்படுத்தப்படும். பாபிலோனிலுள்ள தீர்க்கத்தரிசிகள், கள்ளத் தீர்க்கத்தரிசிகள் என்றும், இவர்களுடைய போதனைகளானது ஜனங்களைத் தவறாய் வழிநடத்தியுள்ளது என்றும், ஆசீர்வாதம் அருளுவதற்குப் பதிலாகப் பாதகத்தையே/பாதிப்பையே உண்டுபண்ணியுள்ளது என்றும், பிரகாசமடையச் செய்வதற்குப்பதிலாக குருடாக்கவே செய்துள்ளது என்றும் வெளிப்படுத்தப்படும். இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்தியுள்ள பட்சிக்கிற ஓநாய்கள் என்றும், மனுஷருடைய கனம் மற்றும் முக்கியத்துவம் மற்றும் பிரபலத்தை அடக்கியுள்ள இலட்சியங்களுக்காக பசி கொண்டவர்கள் என்றும், தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பெருக்கிக்கொள்வதற்காக மந்தையின் நலன்களை விற்றுப்போட்டவர்கள் என்றும் வெளிப்படுத்தப்படும். இவர்கள் மற்றவர்களை வஞ்சிக்கும் விஷயமும், தங்களையே வஞ்சித்துப்போட்ட விஷயமும், மதவெறியின் விஷயமும், இயேசுவின் நாமம் எனும் மந்திர வஸ்திரத்தின் கீழ் இவர்கள் விருத்திச்செய்த காரியமே ஒழிய, இவர்கள் அன்பு, சந்தோஷம், சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியை விருத்திச் செய்துகொள்ளவில்லை என்பதும் வெளிப்படுத்தப்படும். இவைகள் அனைத்தையும் அந்நாள் அறிவிக்கும்/வெளிப்படுத்தும். இவர்களால் தேவனுடைய நாமம் கனவீனப்படுத்தப்பட்டது என்பதற்கும், அவருடைய வார்த்தைகள் தவறாய்க் காட்டப்பட்டது என்பதற்கும்; இறுதியில் முழு உலகமும் சாட்சியாக விளங்குவார்கள். கள்ளத் தீர்க்கத்தரிசிகள் தங்களுடைய சொந்த பொழிவை/ஆதாயத்தை அதாவது, தங்களுடைய சொந்த சபை பிரிவின் ஆதாயத்தையே தேடினவர்களாக இருந்தார்கள் (ஏசாயா 56:11).

கர்த்தர் இந்தச் சபை பிரிவுகளை ஒருபோதும் அறியவில்லை. அதாவது, அவர் இவைகளை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, அவர் இவைகளுக்கு அதிகாரமும் அளிக்கவில்லை. இவை மனுஷரால் உண்டுபண்ணப்பட்டவைகளும், மனுஷனுக்கானவைகளுமே ஒழிய, கர்த்தருக்காகவும் கர்த்தருடைய மகிமைக்காகவும் அல்ல. கிறிஸ்தவ மார்க்கத்தினுடையதாய்க் காணப்படும் அனைத்தும் தங்களால்தான் என்று கூறி, பெருமைகொண்டு, தற்பெருமை அடித்துக்கொண்டிருக்கும் இவர்களோ, விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்டுக்கொள்ளப்பட்டதும், மீட்பருக்கென்று அர்ப்பணம் பண்ணிக்கொண்டதுமான ஆதி திருச்சபையாரின் எளிமையின் மூலமாகத் கர்த்தருடைய நோக்கம் தழைத்தோங்கும் விஷயத்தில், தங்களுடைய உதவி இல்லாமலேயே தழைத்தோங்கியிருக்கும் என்பதை உணராமல்காணப்படுகின்றனர். மணவாட்டி வகுப்பார் சேர்க்கப்பட்டு, மீதமானவர்கள் விடப்படுவதைத்தான், “”நான் உங்களை ஒருக்காலும் அறியவில்லை, ஒருக்காலும் உங்களை அங்கீகரிக்கவில்லை, ஒருக்காலும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கவில்லை” என்ற வார்த்தைகள் தெரியப்படுத்துகின்றன. மேலும், கர்த்தரிடமிருந்து அதிகாரம் பெற்றிராத இந்தச் சபை பிரிவுகள், மகா உபத்திரவக் காலத்திற்குள் கடந்து செல்வார்கள். இந்தப் போலி அமைப்புகள் மூலம் வஞ்சிக்கப்பட்டுள்ள அனைத்து ஜனக்கூட்டமும், சத்தியத்தை அறிந்துக்கொள்வதற்கும், தேவனுடைய கிருபையான திட்டத்தின் நிறைவேறுதலில் வெளிப்படும் அவருடைய குணலட்சணத்தைப்பற்றின சரியான புரிந்துக்கொள்ளுதலை அடைவதற்குமுரிய மகிமையான வாய்ப்புகளுக்குள் ஆயிரவருஷ யுகத்தில் கடந்துவருவார்கள் என்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆகவே, மாபெரும் பரிசையடைய தவறுகிறவர்கள், சிறிய பரிசை (அ) சீர்ப்படுத்தப்படுதலில் தேவதயவைப் பெற்றுக்கொள்வதற்கான மகிமையான வாய்ப்பை இன்னமும் பெற்றிருக்கின்றார்கள்.

அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்

“”பாபிலோன்” என்று அழைக்கப்படும் சபை பிரிவுகளுக்குள் இன்னமும் உற்சாகமுள்ள வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களிடத்தில் சத்திய அறிவு சென்று சேர்ந்து, அவர்களை விடுவிக்கும் என்றும் நாம் நம்புகின்றோம். இதைக் கர்த்தர், “”என் ஜனங்களே அவளை விட்டு வெளியே வா” என்று கூறுவதன் மூலம் தெரிவிக்கின்றார். அவருடைய ஜனங்களில் சிலர், பாபிலோனில் இன்னமும் காணப்படுவதை முன்வைப்பதின் மூலம், இவர்களை வெளியே வரும்படி [R3748 : page 95] அழைப்பதே, கர்த்தருடைய நாமத்தில் நாம் தற்காலத்தில் செய்ய வேண்டிய ஊழியமாகும். இந்தத் தற்கால/ஏற்றகால சத்தியமானது கர்த்தருக்கு உரியவர்கள் யார் என்றும், அவர்கள் எங்கே நிற்கின்றார்கள் என்பதையும், அவர்களுக்கான கடமை என்னவென்பதையும் காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. அக்கிரமத்தின் அமைப்புகளிலுள்ள, உற்சாகமுள்ள வேலைக்காரர்கள் தவிர மீதமானவர்கள், உண்மைக்கு எதிராகக் காணப்படுகின்ற இவர்கள், தேவனுடைய செய்தியைத் தவறாய்க் காட்டுகின்றவர்களாகிய இவர்கள், ஜனங்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளவர்களாகிய இவர்கள், இருதயத்தில் கர்த்தருக்கு உண்மையாக இராதபடியினால், பாபிலோனிலிருந்து வெளியே வரமாட்டார்கள். மேலும், இவர்கள் பாபிலோன் மீதுவரும் கண்டனத்துக்கு உள்ளாவார்கள். இவர்கள் மகா உபத்திரவக் காலத்திற்குள் பிரவேசித்து, சிறிது காலம் கர்த்தருடனான அனைத்து ஐக்கியத்தினின்றும் துண்டிக்கப்படுவார்கள். இந்த அக்கிரமத்தின் ஊழியக்காரர்கள், தெய்வீகக் குணலட்சணம் மற்றும் திட்டத்தைத் தவறாய்க் காட்டி, மனுக்குலத்தின் உலகத்தின்மேல் வருவதற்கு உதவிபுரிந்த உபத்திரவங்களுக்குள் முழுமையாய் அமுக்கப்படுவார்கள். அது கடுமையான சிட்சையாக இருக்கும். “”உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்” என்பதே இவர்களுக்கான நம்முடைய நம்பிக்கையாகும் (ஏசாயா 26:9).

கன்மலையின் மீதா அல்லது மணலின் மீதா

ஊவமையில் கன்மலையின் மீது கட்டப்பட்ட வீடானது சபையையும் மற்றும் மணலின் மீது கட்டப்பட்ட வீடானது உலகத்தையும் குறிப்பதில்லை. மாறாக, சபைக்குள் இருக்கும் இரு பிரிவினரையே குறிக்கின்றது. “”அவர் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்பவர்களே” இவ்வுமையில் அடங்குகின்றனர் (இவ்வுமையில் வரும் பாத்திரங்கள் ஆவர்). உலகம் நமது கர்த்தருடைய செய்தியைக் கேட்பதில்லை. அப்போஸ்தலர் கூறியுள்ளதுபோன்று, உலகத்தார் ஆவியக்குரிய விஷயங்களுக்குக் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருக்கின்றனர். கர்த்தருடைய வார்த்தைகளைக்கேட்டு, அதனை ஏற்றுக்கொள்கிறவர்கள் பெயரளவிலான சபையாராக இருக்கின்றனர். இப்படியாகப் பெயரளவாகக் காணப்படும் சபையார் மத்தியில் சிலர் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். மற்றவர்களோ கீழ்ப்படியாதவர்களாகக் காணப்படுகின்றனர். கீழ்ப்படிகின்றவர்கள், கன்மலை மீது கட்டப்பட்டவர்களாகவும், கீழ்ப்படியாதவர்கள் மணல் மீது கட்டப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

கன்மலையின் மீது கட்டப்பட்டவர்கள், கர்த்தருடைய செய்தியைக் கேட்பவர்களாக மாத்திரம் இராமல், அதற்குத் தங்களால் முடிந்தமட்டும் கீழ்ப்படிகின்றவர்களாகவும் இருக்கின்றனர் எனக் கர்த்தர் கூறுகின்றார். மலைப்பிரசங்கத்தின் வாயிலாக எவைகள் தேவனுடைய அங்கீகரிப்பிற்குப் பாத்திரமானவைகள் என்றும், எவைகள் தேவனுடைய அங்கீகரிப்பிற்குப் பாத்திரமற்றவைகள் என்றும் கர்த்தர் கூறின விஷயங்களே கர்த்தருடைய செய்தியாகும். இந்தத் தெய்வீகப் போதனைகளுக்கு, பரலோகத்தின் செய்திகளுக்கு ஏற்றபடிச் செய்கின்றவர்களும், செய்வதற்குத் தங்களால் முடிந்தளவுக்கு நாடுபவர்களும் நிலையாய் இருக்கும் அஸ்திபாரத்தைப் போட்டுக்கொள்கின்றனர். இந்த அஸ்திபாரம் தற்கால ஜீவியத்தின் புயல்கள், கஷ்டங்கள் மற்றும் சோதனைகளால் சேதமடைவதில்லை.

ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அதற்கு “”ஆம் கர்த்தாவே” என்று கூறியும், செயல்முறையில் ஆண்டவருடைய போதனைகளைச் செயல்படுத்தாதவர்கள், கிறிஸ்து மீது, அதாவது சத்தியம் எனும் கன்மலையின் மீது சரியாகக் கட்டப்படாதவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் நிலையற்ற அஸ்திபாரத்தின் மீது தங்களுடைய நம்பிக்கையை, தங்களுடைய விசுவாசத்தைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மீது ஜீவியத்தின் நாசமோசங்கள் வருகையில், இவர்களுடைய நம்பிக்கை வலுவிழந்துவிடுகின்றன மற்றும், இவர்களுடைய விசுவாசம் சீர்க்குலைந்து போய்விடுகின்றன. இவ்விதமாக, நாம் அவருடைய சித்ததத்தை அறிந்துக்கொள்வது அதாவது, உபதேச ரீதியாக அறிந்துக்கொள்வது மாத்திரம் போதுமானதாயிராமல், மாறாக அவருடைய போதனைகளுக்கு முழு இசைவான நிலையில் நாம் கொண்டுவரப்படுவதற்கும், இருதய பூர்வமான இசைவான நிலையில் நாம் கொண்டு வரப்படுவதற்கும், நம்மால் முடிந்தமட்டும் ஜீவியத்தின் அனைத்து விஷயங்களிலும் கீழ்ப்படியும் நிலையில் கொண்டுவரப்படுவதற்கும் ஏதுவான குணலட்சணத்தினுடைய அத்தகைய ஒரு வளர்ச்சியைக் கர்த்தர் எதிர்ப்பார்க்கின்றார் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார். கீழ்ப்படிதல் இல்லாத, கிருபையில் வளர்ச்சியில்லாத அறிவின் மீது கட்டப்பட்ட விசுவாசத்தை உடையவர்கள், இராஜ்யத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள், மணவாட்டி வகுப்பாரில் அங்கங்களாகவும் இருக்கமாட்டார்கள், தேவனுடைய நேச குமாரனோடு உடன்சுதந்திரராகவும் ஆகமாட்டார்கள்.

அந்நாளின் அக்கினி

இப்பாடத்தில், நமது கர்த்தர் இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதிலுமுள்ள அனைத்துக் கிறிஸ்தவர்கள் மீது வரும் சோதனைகள் மற்றும் பரீட்சைகளை மாத்திரம் விவரியாமல் விசேஷமாக, இந்த யுகத்தின் முடிவில் அதாவது, “”அறுவடை” காலத்தில் வரும் மாபெரும் பரீட்சையையும் விவரிக்கின்றவராக இருக்கின்றார். உவமையில் அவருடைய பின்னடியார்கள் என்று அறிக்கைப் பண்ணுபவர்களுடைய விசுவாச கட்டிடத்தின் மீது பெருமழை, பெருவெள்ளம் மற்றும் காற்று அடிக்கின்றது. மேலும், இவைகள் கர்த்தருடைய போதனைகளுக்கு இசைவாக சரியான விதத்தில் கட்டப்படாதவர்களின் விசுவாசத்தைக் கவிழ்த்து விடுகின்றது. ஆனால், சத்தியம் எனும் கன்மலை மீது அஸ்திபாரமிடப்பட்டவர்களின் விசுவாசத்தைச் சேதப்படுத்த முடியவில்லை என்று பார்க்கின்றோம். கிறிஸ்தவ மண்டலம் முழுவதின் மீதும், ஒரு வல்லமையான சத்திய பெருமழை சொரிந்துக்கொண்டு இருக்கின்றது. பயங்கரமான/பெரிய காற்று ஏற்கெனவே சீறி வீசிக்கொண்டிருக்கின்றது. பல்வேறு சபை பிரிவுகள் அதிர்ச்சியில் நடுங்கிக்கொண்டிருக்கின்றது. மனித பாரம்பரியம், விசுவாசப் பிரமாணங்கள், கூற்றுகள், “”இருண்ட யுகத்தினுடைய” மூட நம்பிக்கைகள், அறிவீனங்கள் மீதான அவர்களுடைய அஸ்திபாரங்கள் திருப்தியற்றது என்பது உணரப்பட்டு வருகின்றது. சீக்கிரத்தில் சத்தியம் எனும் புயல்கள் (காற்று), பெயர்ச்சபையின் மணலாகிய அஸ்திபாரத்தை அசைத்துவிடும். பின்னர் அழிவு தொடரும். தேவனுடைய உண்மையான ஜனங்கள் மாத்திரமே, ஏற்கெனவே ஆரம்பமாயுள்ள “”அந்நாளுக்குரிய” மாபெரும் புயலில் நிலைநிற்பார்கள்.

கர்த்தர் குறிப்பிட்டுள்ள இதே வெள்ளத்தையும், காற்றையும்தான், ஏசாயா தீர்க்கத்தரிசியின் மூலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. “”நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டு போகும். நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள். அது புரண்டு வந்த மாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்கும் செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.” (ஏசாயா 28:17-19)

இதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுலும், “”அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்” என்று கூறியுள்ளார் (1 கொரிந்தியர் 3:13). பவுல் உண்மையான விசுவாசிகள் கன்மலையின் மீது, உண்மையான அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்பதை மாத்திரம் சுட்டிக் காண்பிக்காமல், சரியான வீடும் இருக்க வேண்டியதின் அவசியத்தையும் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றவராக இருக்கின்றார். அதாவது விசுவாசமும், (வீடு) சரியான அஸ்திபாரமும் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காண்பிக்கின்றார். ஒருவகை விசுவாச வீடு மரம், புல், வைக்கோலால், எரிந்து அழிந்து போகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டுள்ளது என்றும், இவைகள் ஒவ்வொரு உபதேசத்தையும் சோதித்து, தப்பறைகளை அழித்துப்போடும் தெய்வீக நியாயத்தீர்ப்பு என்னும் அந்நாளுக்குரிய அக்கினியால் விரைவில் அழிக்கப்பட்டுவிடும் என்றும் பவுல் சித்தரித்துக் காட்டுகின்றார். இன்னும் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்கள், தெய்வீக வாக்குத்தத்தங்களினால் கட்டப்பட்டுள்ள சரியான இன்னொரு வகை விசுவாச வீட்டையும், அவை எப்படி ஒவ்வொரு பரீட்சையிலும் நிலைத்து நிற்கும் என்றும் பவுல் சித்தரித்துக் காட்டுகின்றார்.

எந்தப் பரீட்சையிலும் நாம் நிலைத்து நிற்கத்தக்கதாக நாம் கற்பாறையான அஸ்திபாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது முதலாம் படிப்பினையாகும். இரண்டவதாக, கிறிஸ்துவின் மீது விசுவாசமும், அவருக்கும், பாவ நிவாரண வேலையிலும் நேர்மையும் கொண்டு, கன்மலை மீது காணப்படுபவர்களில் இரண்டு வகுப்பார் காணப்படுவார்கள் என்பதாகும். “”சிறு மந்தையினர்” என்ற வகுப்பார், தேவ வார்த்தைக்கு உண்மையுடனிருந்து, அதை உயர்த்திப்பிடித்து, அதைப் பாதுகாத்தவர்கள் ஆவார்கள்; மற்றும் “”திரள்கூட்டத்தினர்” என்ற வகுப்பார் தெய்வீக வாக்குத்தத்தம் தொடர்பான விஷயங்களில் போதுமானளவு ஜாக்கிரதை கொண்டிராதவர்களும், போதுமானளவு கடினமாய் முயற்சிக்காதவர்களும் ஆவார்கள். மேலும், திரள்கூட்டத்தினருடைய விசுவாசக் கட்டிடமானது பட்சிக்கப்படத்தக்கதான தப்பறைகளைப் பெருமளவில் கொண்டுள்ளது. “”ஒருவன் அந்த அஸ்திபாரத்தின் மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.” “”அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” (1 கொரிந்தியர் 3:12,15; வெளிப்படுத்தல் 7:14).

[R3749 : page 95]

திருவசனத்தின்படிச் செய்கிறவர்களாக இருங்கள்

“”திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (யாக்கோபு 1:22). தெய்வீகச் சித்தம் மற்றும் திட்டம் பற்றின அறிவினால் நாம் கனப்படுத்தப்படுவது, மாபெரும் ஆசீர்வாதமும், வரமுமாக இருந்தாலும் கூட, இது மாபெரும் பொறுப்பையும் நமக்குக்கொண்டு வருகின்றது. “”எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்” (லூக்கா 12:48). பரலோகத்திலிருந்து இயேசு கிறிஸ்து மூலமாய்ச் சமாதானத்தைப் பேசுபவருடைய குரலைக் கேட்டுள்ள நமக்கு, பாவமன்னிப்புப்பற்றின செய்தியினுடைய பலத்தினால், அர்ப்பணிப்பின் வாயிலாக, கிறிஸ்துவின் சரீரத்திற்குள் அங்கத்தினர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நமக்கு, மற்றவர்களைக்காட்டிலும் அதிக பொறுப்புள்ளது. நாம் அழைக்கப்பட்டுள்ள மகிமையான காரியங்களை அடைவதற்கு நாம் இந்தக் கனத்தை மாத்திரம் கொண்டிருப்பவர்களாயிராமல், நாம் சிலாக்கியங்களைப் பயன்படுத்த வேண்டும்; மற்றும் உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு நம்முடைய கீழ்ப்படிதல் மூலமாக நாம் சிலாக்கியங்களை ஏற்றுக்கொண்டுள்ளதையும் காட்ட வேண்டும். தெய்வீக ஊழியத்திற்கு நம்முடைய சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தல், நீதிக்கு உண்மையாய்க் கீழ்ப்படிதல் மற்றும் இதே பாதையில் மற்றவர்களும் செல்வதற்கான உதவி அளிப்பதில் பிரயாசம் எடுத்தல் எனும் வகையில் உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிதல் காட்டுவதின் மூலம் நாம் சிலாக்கியங்களை ஏற்றுக்கொண்டுள்ளதையும் காட்ட வேண்டும்.”